a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           02.03.2010

உச்ச நீதிமன்று முன் ஆர்ப்பாட்டம்: குழப்பம் விளைவிக்க ஐ.தே.க., ஜே.வி.பி முயற்சி: கல்வீச்சில் 3 பொலிஸ் உட்பட ஐவர் காயம்; 12 வாகனங்கள் சேதம்

கொழும்பு, புதுக்கடை உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயன்ற ஐ. தே. க., ஜே. வி. பி. ஆதரவாளர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்ட போது அவர்கள் கற்களை வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தினர்.

சுலோகங்களை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு கற்களை எறிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நடத்திய தாக்குதல்களில் பொலிஸார் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் கல்வீச்சுக்களால் மூன்று பொலிஸாரும், இரண்டு சிவிலியன்களும் படுகாயமடைந்துள்ளதுடன் 12 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

பொலிஸாரின் எட்டு வாகனங்களும், பொதுமக்களின் நான்கு வாகனங்களையுமே ஆர்ப்பாட்டக்காரர்கள் சேதப்படு த்தியுள்ளனர் எனத் தெரிவித்த அவர், நிலைமையை கட்டுப்படுத்த கண் ணீர்ப்புகைப் பிரயோகம் செய்யப் பட்டதாகக் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேர் வாழைத் தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணை கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

இராணுவ சட்ட விதிமுறை களுக்கு அமைய இராணுவப் பொலி ஸாரால் கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகா வுக்கு ஆதரவு தெரி வித்தே நேற்று எதிர்க்கட்சி ஆதரவா ளர்கள் ஆர்ப்பாட் டத்தை நடத்தினர்.

நீதிமன்றம் என்பதை மறந்து ஆர்ப் பாட்டக்காரர்கள் அந்த இடத்தில் பெரும் அமளி துமளிகளை ஏற் படுத்தியுள்ளதுடன் கல்வீச்சுக்களை நடத்தியுள்ளனர்.

ஐ. தே. க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, டாக்டர் ஜயலத் ஜயவர்தன, அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளராக களமிறங்கிய சிறி துங்க ஜயசூரிய உட்பட ஜே. வி. பி. ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தச் சம்பவத்தை செய்தி சேகரிக்கச் சென்ற பல ஊடகவிய லாளர்கள் கல்வீச்சுக்குள்ளானார்கள்.

இந்தச் சம்பவத்தையடுத்து நீதிம ன்றத்தின் செயற்பாடுகளில் ஸ்தம் பிதநிலை காணப்பட்டதுடன் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்தச் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரி வித்தார்.

எதிர்க்கட்சியின் இந்த செயற் பாட்டால் கொழும்பு புறக்கோட்டை மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் பெரும் வாகன நெரிசல் காணப்பட்டது.

கல் வீச்சினால் காயப்பட்ட பொலிஸார் மற்றும் பொதுமக்கள் கொழும்பு தேசிய வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

Home /Page -1 /Page-2 / Page -3 / Page-4 / Page-5 / Page-6 /Page-7 /

wanni

ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கும், 1970 பொதுத் தேர்தல் முடிவுக்கும் உள்ள ஒத்த தன்மைகள்!

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தெரிவித்திருக்கு ம் செய்திதான் என்ன?