a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           02.03.2010

வெற்றி தோல்விகள் எப்படிச் சமன் செய்யப்பட வேண்டும்?

-கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

1960 களில் பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அந்தப் பின்னடைவு அப்போது ஒட்டுமொத்தமான அரபுலகத்தையே பாதித்தது. அந்தப் பின்னடைவு குறித்து பலஸ்தீனியர்கள் முதல் அநேக அரபுக்கள் எழுதினார்கள். ஆராய்ந்தார்கள். விமர்சித்தார்கள். விளைவு பலஸ்தீனப் போராட்டம் உலகெங்கும் அறிமுகமானது. இஸ்ரேலின் சியோனிஸம் அம்பலமாகியது. அதேவேளை இதுவரையில் பலஸ்தீனப் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. அது இன்னும் வெற்றியடையவும் இல்லை. பலஸ்தீனியர்களின் கண்ணீரும் அவலமும் தீர்ந்து விடவும் இல்லை.

இதற்கான காரணங்கள் பலவுண்டு. அதில் முக்கியமானது அவர்களுடைய உணர்;ச்சிகரமான அரசியல் வழிமுறைகளும் அதீதமான அரசியல் நிலைப்பாடுகளும் ஒன்று. கமாஸ் இதற்கு நல்ல உதாரணம். இன்னொன்று அரபுலகத்தின் பலவீனமான அரசியல், அடுத்தது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்தின் தலையீடுகள்.

ஏறக்குறைய இதே நிலைமைதான் ஈழத்தமிழர்களின் போரட்டத்திற்கும் உண்டு. தொடர்ச்சியான போராட்டத்தினாலும், புலம் பெயர் தமிழர்கள், தமிழகத்தமிழர்கள், மலேசியத் தமிழர்கள் எனச் சகலருடைய ஆதரவாலும் சில தரப்பினரின் விமர்சனங்கள், ஆய்வுகளாலும் ஈழத்தமிழரின் அரசியற் பிரச்சினை ஓரளவுக்கு இன்று சர்வதேச அரங்கில் அறியப்பட்டிருக்கிறது. ஆனால், என்னதானிருந்தாலும் இந்தப் போராட்டம் இன்னும் வெற்றிபெறவில்லை. மட்டுமல்ல, அது இப்போது வரவர தொடர்  தோல்விகளையே சந்தித்து வருகின்றது. இதற்கு என்ன காரணம்?

அரசியலை வெறுமனே உணர்ச்சி சார்ந்த விசயமாக அணுகுவதன் காரணமாக விருப்பு – வெறுப்புகளின் அடிப்படையில் பிரச்சினைகளைப் பார்க்கின்ற போக்கே தமிழ் அரசியலில் பிரதானமாகக் காணப்படுகிறது. அரசியல் என்பது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாலானது. அதுவொரு யதார்த்த விசயம். தேவைகள் சார்ந்தது. மக்களின் நடைமுறை வாழ்வோடும் அதன் நலன்களோடும் சம்மந்தப்பட்டது. கடந்த காலம் என்பதை விடவும் நிகழ்காலம் அதற்கு முக்கியமானது. அதையும் விட எதிர்காலம் பிரதானமானது. எதிர்காலத்திற்குரிய எதுவும் விஞ்ஞான பூர்வமானதாக இருக்க வேணும். விஞ்ஞான பூர்வமானது எனும்போதே அது அறிவு மயப்பட்டதாக இருக்க வேணும். அறிவு முற்றிலும் உணர்ச்சிக்கு அப்பாலானது. உணர்ச்சியில் எப்போதும் அறிவு புறக்கணிக்கப்படுகிறது. அல்லது அறிவு பின்தங்கி விடுகிறது.

தமிழ் மக்களின் அரசியல் அணுகுமுறை என்பது எப்போதும் உணர்ச்சியில் மையங்கொண்டது. அது தமிழகத்தின் திராவிட இயக்கத்தின் வழிவந்த காரணத்தினாலும் பொதுவாகவே தமிழ் மனம் என்பது கடந்த காலப் பெருமைகள், மகிழ்ச்சிகள், பகைமைகள் என்பவற்றில் சுழன்று கொண்டிருப்பதாலும் இந்த உணர்;ச்சி மயமான அரசியல் மக்களிடம் செல்வாக்குப் பெற்றது. இப்போதும் இதுதான் நிலைமை.

இனத்தனித்துவம், இனப்பெருமை, இனமகிமை போன்றவற்றை அதீதமாகக் கொண்டாடும் சமூகங்களில் தமிழ்ச் சமூகமும் ஒன்று. குலப் பெருமை பார்க்கும் ஆட்கள் தமிழர்கள் என்பது இதற்கொரு காரணமாக இருக்கலாம். ஆனால், நவீனவாழ்வில் இந்தமாதிரி  விசங்கள் எல்லாம் ஒரு சமூகத்தின் வாழ்வுக்கும் அதன் எதிர்காலத்துக்கும் பாதகமானவை. பலஸ்தீன அரபுக்களிடமும் இந்தப் பழம் பெருமை சார்ந்த விசயங்கள் அளவுக்கதிகம் உண்டு என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

தமிழர்களிடம் இருக்கின்ற இந்தப் பொதுக்குணம் அவர்கள் எங்கே எத்தகைய நவீன வசதிகள், கல்வி வாய்ப்புகளுடன் வாழ்ந்தாலும் இலகுவில் விட்டுப் போவதில்லை. விதிவிலக்காக சிலர் இருந்ததாலும் அவர்களை இலகுவில் இந்த இனவிவகாரங்களைச் சொல்லி சீண்டிவிட்டால் போதும் உடனே அத்தனை நரம்புகளும் சிலிர்க்க பொங்கியெழுந்து விடுவார்கள். இதுதான் அநேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த உணர்ச்சி அரசியலில் உணர்ச்சிக்கு வெளியே அறிவு பூர்வமாகச் சிந்திக்கும் ஆட்கள் உடனடியாக எதிர்க்கணியத்துக்குள் தள்ளப்பட்டுவிடுவார்கள். அவர்களின் மீது வசைபாடுதல்கள், புறக்கணிப்புகள், எதிர்ப்புகள் என்றவகையான எதிர் நடவடிக்கைகள் தாராளமாக நடப்பதற்கும் இதுவே காரணம்.

இதனால்தான் விமர்சனமற்ற அரசியல் முறைமை தமிழ்ச் சூழலில் கொண்டாடப்படுகிறது. விமர்சனம் என்பது பரிமாணங்களையுடையது. பரிணாமத்தையுடையது. அது அறிவு சார்ந்தது. விஞ்ஞானபூர்வமானது. அறிவை நிராகரிக்கிற அரசியலில், உணர்ச்சி அரசியலில் விருப்பு வெறுப்புகள், அணிகள், குழுக்களுக்கே முன்னுரிமை இருக்கும். அதன் தெரிவுகள் எப்போதும் உணர்ச்சி நிலை நின்றே தீர்மானிக்கப்படுவதால், பல சந்தர்ப்பங்களிலும் அது யதார்த்தத்தை விட்டு விலகியே நிற்கிறது. இந்தத் தடவை ஜனாதிபதித் தேர்தலின் போதும் இதுதான் நடந்திருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலையொட்டி எழுந்த கருத்து மண்டலத்தை ஒருதடவை திரும்பிப் பார்த்தால் இந்த உண்மை சுலபமாகத் தெரியும். மட்டுமல்ல, திரு. சம்மந்தன் தெரிவித்துவரும் கருத்துகளை அவதானிப்போருக்கும் இது விளங்கும். இலகுவில் சனங்களின் உணர்ச்சிகளைச் சீண்டிவிடும் குரலும் மொழியும் தொனியும் அவருடையது. அவருடைய அரசியல் உபாயமே சங்களை உணர்ச்சி மயப்படுத்துவதாகும். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான 27.01.2010 இரவு பி.பி.ஸி தமிழோசைக்கு வழங்கிய நேர்காணலின்போது ‘எந்த நிலையிலும் நாம் (தமிழர்கள் ) அடிபணிந்து விட மாட்டோம்’ என்று சொன்னார். போர்க்களமொன்றில் ஒரு தளபதி சொல்லும் வார்த்தைகளுக்கு ஒப்பானவை அவை. அந்த வார்த்தைகளைக் கேட்கும்போது சிலருக்குச் சிலிர்ப்பு ஏற்படலாம். அத்துடன், விட்டுக் கொடுக்கவில்லை, தோற்றாலும் இறுமாப்புக் குறைந்து விடவில்லை அவர் என்றே தோன்றும். இதுதான் உணர்ச்சி சார்ந்த விசயம் என்பது.

ஆனால் அந்த வார்த்தைகளை அவர் சொன்னபோது அவருடைய கணிதம் தோற்றுப்போயிருந்ததை எல்லோரும் அறிந்திருந்தார்கள். எதையும் செய்வதற்குக் கடினமான ஒரு அரசியல் யதார்த்தம் உருவாகிருந்ததையும் அவர்கள் புரிந்திருந்தார்கள். பி.பி.ஸி செய்தியாளரின் கேள்வியும் இந்தத் தோல்வியைப்பற்றியதாகவே இருந்தது. இதன் அர்த்தம் சிறிலங்கா அரசிடம் தமிழர்கள் அடிபணிந்து விடவேணும் என்பதல்ல. அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ நிகராக நிற்க வேண்டுமானால், அதற்கான பொறிமுறை – வழிமுறைகளை வகுத்துக் கொண்டால் போதும். எப்போதும் எவருக்கும் தோல்விகள் நிரந்தரமாக இருப்பதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. பின்னடைவுகளும் அவ்வாறானவையே. பொதுவாக எந்த விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளிலும் முழுமை உடனடியாக வந்துவிடுவதில்லை.

தவிர, ஒவ்வொரு கண்டு பிடிப்புக்கான முயற்சியின்போதும் ஏராளம் பிரச்சினைகளும் பின்னடைவுகளும் வந்துதான் தீர்கின்றன. அந்தப் பின்னடைவுளை ஆராய்ந்து சீர்செய்யவில்லை என்றால், எத்தகைய முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பே இல்லை. இந்த விசயம் சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த உண்மையே. ஆனால், இந்த உண்;மையை ஏனோ தமிழர்கள்; நெருங்குவதில்லை.

தமிழர்களின் தொடர் பிரச்சினைக்கும் நெருக்கடிக்கும் காரணம் அவர்கள் இந்த எளிய பல உண்மைகளுக்கு அப்பால் எப்போதும் நிற்பதே. இந்தத் தடவை ஜனாதிபதித் தேர்தலின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த விசயமும் அணுகுமுறையும் இந்த அடிப்படையைக் கொண்டதே. குறிப்பாக உணர்ச்சி சார்ந்த முடிவு. அதனால்தான் போரை நடத்தியவரா போரை நடத்தப் பணிக்கப்பட்டவரா என்ற கேள்விகளே பிரதான வேட்பாளர்கள் இருவரைப்பற்றியும் எழுந்திருந்தன. யார் அதிகாரத்துக்கு வருவார், யாரை அதிகாரத்துக்கு கொண்டு வருவதன் மூலம் என்னவெல்லாம் வாய்ப்பாகச் சாதித்துக் கொள்ளலாம் என்ற கணிப்புகளைச் செய்வதில் பொதுவான தமிழர்கள் தவறிவிட்டனர். அதாவது அறிவுபூர்வமாகச் சிந்திப்பதிலும் சரியாகக் கணிப்பதிலும் இவர்கள் தவறிழைத்து விட்டனர். இந்தத் தவறு தவறாக இருந்தாலும் இப்போதும் திருத்தக்; கூடியதும் திருத்தி வெல்லக்கூடியதுமே.
‘தமிழர்கள் கணக்கில் கெட்டிக்காரர்கள். ஆனால் தங்கள் எதிர்காலத்தைக் கணிப்பதிலும் அரசியலை மதிப்பிடுவிலும் எப்போதும் பிழை விடுவார்கள்’ என்று அரசியல் ஆய்வாளரான நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வதை இங்கே குறிப்பிட வேணும். தங்களின் தனிப்பட்ட தேவைகள், நலன்களில் எப்போதும் புத்திசாதுரியமாக நடந்து கொள்ளும் தமிழர்கள் பொதுத் தெரிவகளில் ஏன் தோற்கிறார்கள் என்பதுவும் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விசயமாகும்.

இப்போது தமிழர்களால் கையாளக் கடினமான நிலையில் மீண்டும் மகிந்த ராஜபக்ஸ அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறார். ஏராளம் பிரச்சினைகளோடு நிற்கிறார்கள் தமிழர்கள். உணர்ச்சி மயமான நிலைமைகளுக்கு அப்பால் யதார்த்தத்தில் ஏராளம் உணர்ச்சி மயப்பட்ட விசயங்கள் யதார்த்தத்தில் தீர்வுக்காகக் காத்திருக்கின்றன. குறிப்பாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு, அரசியற்கைதிகள் விடுதலை, பாதிப்புற்றோருக்கான மீள்வாழ்வு, போராளிகளின் விடுதலை, விவரமில்லாத போராளிகளைப்பற்றிய தகவலறிதல் எனப் பல பிரச்சினைகள்.

போர் முடிந்த பின்னரான சூழலை தமிழர்கள் வேறாகவும் சிங்களவர்கள் வேறாகவும் அனுபவிக்கவும் உணரவும் முடியாது என்பதை இலங்கைத் தீவின் சகல அரசியலாளரும் புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக தமிழ்த்; தலைமைகளும் ஜனாதிபதியும் அவருடைய சக பாடிகளும் இதைத் தெரிந்து கொள்ள வேணும். குறிப்பாக தமிழ் அரசியலின் உணர்ச்சிக்கு நிகராகவே சிங்கள அரசியலும் உணர்ச்சியின் மையத்தில்தான் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த ஏட்டிக்குப் போட்டியான நிலைமையும் மாற்றப்பட வேணும். ஆக, புதியதோர் அரசியல் முன்னெடுப்பு பொதுவாகவே இப்பொழுது தேவை. அதற்கு முதலில் எல்லோரும் தயாராக வேண்டும். அதற்காக நிறையப் பயிலவும் வேண்டும். பகைமையைக் கடப்பதற்கும் பயிற்சி வேண்டும்தான். இல்லையென்றால், எப்படி யப்பானும் அமெரிக்காவும் அணுக்குண்டு வீச்சுக்குப்பின்னும் நட்புடனிருக்கின்றன?


 

Home /Page -1 /Page-2 / Page -3 / Page-4 / Page-5 / Page-6 /Page-7 /

wanni

ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கும், 1970 பொதுத் தேர்தல் முடிவுக்கும் உள்ள ஒத்த தன்மைகள்!

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தெரிவித்திருக்கு ம் செய்திதான் என்ன?