a_Pen

முதற்பக்கம்

கட்டுரைகள்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம்             பெண்ணியம்        புதியபாதை                      அலை                       பூர்வீகம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/  srilankans.org.au              www.lankamuslim.org   Communist party srilanka

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           29.01.2010

தன்னந்தனியே ஓங்கி ஒலித்த ஒருபெண்ணின் குரல்

-சி.சரத்சந்திரன்

LalithambikaAntharjanamஇந்த ஆண்டு லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் நூற்றாண்டு விழா வர உள்ளது. அவர் மலையாள இலக்கியத்தில் ஒளிவீசித் திகழ்ந்த ஒரே பெண் ஆவார். மார்க்சிய மேதை இ.எம். எஸ். நம்பூதிரிபாட்டின் துணைவியாரான அவர் 1909ம் ஆண்டில் பிறந்தார். இருவருமே கேரளத்திலுள்ள நம்பூதிரி வகுப்பைச் சேர்ந்தவர்கள். இருவருக்குமே அவர்கள் பிறந்த வகுப்பில் ஒரு மாபெரும் சமூக மாற்றத்தை உருவாக்கிட வேண்டியதோர் பொறுப்பும் கடமையும் இருந்தன. மேலும் அவர்கள் இருவருக்கும் கேரள மாநிலம் முழுவதிலுமே ஒரு சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டிய பொறுப்பும் இருந்தது.

இலக்கிய மறுமலர்ச்சி

20ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் கேரளத்தின் விடுதலைப் போராட்டமானது நாட்டின் ஏனைய பகுதிகளைவிட மிகவும் வீறுகொண்டு விளங்கியது எனலாம். அந்தப் போராட்டமானது அரசியல், சமூக மாற்றம் மற்றும் இலக்கிய மறுமலர்ச்சி ஆகிய அம்சங் களை உள்ளடக்கியதாக விளங்கியது. இஎம் எஸ், கே.பி.கேசவமேனன், ஸ்வாதேசாபி மானி, ராமகிருஷ்ணபிள்ளை போன்றோர் எழுத்தாளர்களாகவும் பத்திரிகையாளர்களாக வும் தலைசிறந்த அறிவு ஜீவிகளாகவும் மின்னி மிளிர்ந்தனர்.

நம்பூதிரிகள் கேரள சமூகத்தில் மிகவும் உயர்ந்த மட்டத்தில் பரம்பரை பரம்பரையாகக் கோலோச்சி வந்தனர். ஆனால் காலப்போக்கில் அந்த வகுப்பினர் தரங்கெட்டவர்களாகச் சீரழிந்து போய்விட்டனர். நம்பூதிரி ஆண்கள் பலதார மணங்களில் ஈடுபடுதல், மோசமான வாழ்க்கை நெறிகளில் திளைப்பது போன்ற உல்லாசங்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். அதே சமயத்தில் நம்பூதிரி பெண்கள் அவரவர்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டியதோர் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களுக்கு வெளியுலகத் தொடர்புகளே இல்லாமற் போயிற்று.

இத்தகைய மனிதத்தன்மையற்ற இரட்டை நிலைமைக்கெதிராக பல நம்பூதிரி இளைஞர்களே போர்க்கொடி தூக்கினார்கள். இஎம்எஸ் நம்பூதிரிபாட், வி.டி.பத்ரிபாட், எம்.ஆர்.பத்ரிபாட் போன்ற இளந்தலைமுறையினர் தங்கள் சமூகத்தில் புரையோடிப்போய் விட்ட பிற்போக்கான பழக்கவழக்கங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். அவர்கள் தங் கள் சமூகத்தில் நிலவி வரும் தீயொழுக்கங்கள், பாலியல் ரீதியான கேடுகெட்ட நடை முறைகள் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். மேலும் அவர்கள் தங்கள் சமூ கத்தினுடைய அதி உன்னதமான நன்னெறிகளுக்கு மீண்டும் புத்துயிரளித்திடவும், தங்கள் வகுப்பைச் சேர்ந்த மாதர்களின் மாண்புகளைப் போற்றிப் பாதுகாத்திடவும் முன்வந்தனர்.

அந்தர்ஜனத்தினுடைய எழுத்தோவியங்களானவை அத்தகைய இளந்தலை முறையி னர்களுடைய ஆவேசம் மிக்க போராட்டங்களுக்கு உறுதுணையாக விளங்கி உத்வேக மூட்டின. ஆனால் ஒரு பெண் என்ற முறையில் அவர் தனியொரு நபராகக் களத்தில் நின்று நீண்டகாலம் கடுமையாக போராட வேண்டியதாயிற்று.

அந்தர்ஜனம் என்ற சொல்லுக்கு ‘உள்ளுக்குள்ளே’ என்ற பொருளுண்டு. அவருக்கு முறையான கல்விப்பயிற்சி கிடைக்கவில்லை. அவரால் சமஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏதோ கொஞ்சம் கற்றுத் தெளிந்திட முடிந்தது. ஆனாலுங்கூட தனக் கேற்பட்ட தடைகளையெல்லாம் தாண்டி நின்று, பல்வேறு சிறுகதைகளையும் கவிதைத் தொகுப்புகளையும் குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளையும் ஒரு நாவலையும் எழுதிக்குவித்தார். அவரது சிறுகதைகள் என்பது தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.

நம்பூதிரி பெண்கள் அவர்களது வீடுகளுக்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டுள்ள வெங்கொடுமைகளைப் பற்றியெல்லாம், அவர் தன்னுடைய எழுத்துக்களில் உணர்ச்சிப் பூர்வமாகச் சித்தரித்திருந்தார். அவரது படைப்புகள், தங்கள் வகுப்புப் பெண்கள் தனிமைச் சிறைகளில் வாடுவதுபற்றி விலாவாரியாகப் படம்பிடித்து காட்டின. அவர் தனது எழுத்துக் களின் மூலமாக, பெண்களையெல்லாம் வெறும் விற்பனைப் பொருட்களாகச் சிறு மைப்படுத்தி வரும் கேடுகெட்ட சமூகப் பழக்க வழக்கங்களையெல்லாம் தோலுரித் திருந்தார். அவரது எழுத்துக்கள் பெண்கள் யாவருமே ரத்தமும், சதையும், உணர்வும் கொண்ட மனிதப்பிறவிகளே என்ற பேருண்மையை உலகுக்கு எடுத்துரைத்தன. அவரு டைய கதைகள் யாவும் நம்பூதிரி இனப் பெண்களைக் கிளர்ந்தெழச்செய்தன.

அந்தர்ஜனம் தாய்மையின் சிறப்பு, குழந்தை வளர்ப்பு ஆகியவற்றைப் பற்றியெல்லாம் போற்றிப்புகழ்ந்து நிறைய எழுதியுள்ளார். அவரது கதைகளில் சில, பாலியல் கொடு மைக்கு ஆளாகும் பெண்களை பற்றியெல்லாம் உணர்ச்சிகரமாகச் சித்தரித்திருந்தன.

அவரது எழுத்துக்கள் யாவும் மிகவும் கூர்மையாக விளங்கின. “உலகிலுள்ள பெண்கள் யாவருமே ஒரே மொழியில்தான் பேசிவருகிறார்கள். அதுவே அமைதி என்ற மொழி யாகும்” என்று அவர் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.

தகழி சிவசங்கரம்பிள்ளை, பஷீர், கேசவ தேவ், பொன்குன்றம் வர்க்கி ஆகிய இலக்கிய ஜாம்பவான்கள் கேரள மண்ணில் மிக அற்புதமான பேரிலக்கியங்களைப் படைத்தனர். அந்தர்ஜனம், அவர்களது அணியிலே தன்னையும் இணைத்துக்கொண்டு, அவர்களைப் போலவே சமுதாயத்தில் புரையோடிப்போயிருந்த லஞ்ச லாவண்யங்கள், சுரண்டல் போன்ற அநீதிகளுக்கெதிராகக் குரல் கொடுத்தார். அவருடைய குரலானது கேரள மண் ணில் தனியொரு பெண்ணின் குரலாக ஓங்கி ஒலித்தது. அந்தக் குரலானது சமூகத் தீமை களுக்கு எதிராகத் தொடர்ந்து ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் என்பது உறுதி.

நன்றி “இந்து” 3-1-2010

தமிழில் : கே.அறம்

Home / Page-1 / Page-2 / Page-3 / Page-4

wanni

இன்னொரு தடவை ஆயுதம் போராட்டம்னு எவனாச்சும் சொன்னா தும்புக்கட்டையால  (துடைப்பம்) அடிச்சு சாத்திப்புடுவேன். போரை எதிர்கொண்ட எளிய மக்களின் மனநிலை இதுதான்.

‘புதிய பாதை’ ஆசிரியர் சுந்தரம் நினைவாக..

யாழ்ப்பாணத்து மக்களின் காதில் பூச்சுற்றிய முன்னாள் பிரதம நீதியரசர்!

புலிப் பாசிசம் தோற்கடிக்கப் பட்டமையே, 2009ம் ஆண்டின் மாபெரும் வரலாற்று நிகழ்வாகும்!

சரத் பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம், சம்பந்தன்  கோஷ்டி அடையப்போகும் கேவலமான முடிவு!

ஐதேகவுக்கு சேவகம்செய்ய துடிக்கும் கூட்டமைப்ப