a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                           09.04.2010

சமஷ்டி தீர்வை வலியுறுத்தி தமிழ்க் கூட்டமைப்பு விஞ்ஞாபனம்

இணைந்த வடக்குகிழக்கு மாகாணத்தில் சமஷ்டி கட்டமைப்பு அடிப்படையிலான அதிகாரப்பகிர்வை உள்ளடக்கியதாக அரசியல் தீர்வுகாணப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் இது ஏற்புடையதாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது.

 யாழ்நகரில் இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் இடம்பெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராஜா வெளியிட்ட கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே அரசியல் தீர்வு தொடர்பாக கட்சியின் நிலைப்பாடு உள்ளடக்கப்பட்டிருக்கிறது.இச் செய்தியாளர் மாநாட்டில் தமிழ்க் கூட்டமைப்பின் 11 வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் மக்கள் தனித்துவமான தேசிய இனம் என்பதுடன் அவர்கள் இலங்கைத்தீவில் ஏனைய இனத்தவருடன் பாரம்பரியமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதாகவும் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இலங்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்பதையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அதிகாரப் பகிர்வுக்கான முக்கியமான அம்சமாக கொள்ளப்படுதல் வேண்டும்.

 அத்துடன்,நிலம், சட்டம், ஒழுங்கு ,கல்வி, சுகாதாரம், சமூக, பொருளாதார அபிவிருத்தி, வளங்கள், நிதி என்பனவற்றுக்கான அதிகாரங்களைக் கொண்டதாகவும் அதிகாரப்பகிர்வு அமையவேண்டுமெனவும் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வட,கிழக்கில் வேலைவாய்ப்பை உருவாக்க வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஏற்பாடு செய்தல், உயர்கல்வி வசதிக்கான ஏற்பாடுகள் வட,கிழக்கு இராணுவ சூன்யப்பகுதியாக்குதல்,இடம்பெயர்ந்த மக்களை கௌரவமான முறையில் மீளக்குடியமர்த்துதல், தடுப்பு காவலில் குற்றம் சுமத்தப்படாதிருப்பவர்களை விடுவித்தல், ஏனையோருக்கு பொதுமன்னிப்பு போன்ற வலியுறுத்தல்களும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமையை வலியுறுத்தியுள்ள விஞ்ஞாபனத்தில் உரிமைகளை பெற்றுக்கொள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இலங்கைத்தீவில் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பு,சமஷ்டி அரசியல் அமைப்புக்கான கோரிக்கை, பண்டா செல்வா ஒப்பந்தம்,டட்லிசெல்வா ஒப்பந்தம் , அரச குடியேற்றங்கள் அரசியலமைப்புகள்,தரப்படுத்தல், தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள், அதிகாரப்பகிர்வு ஒழுங்குமுறைகள், புலிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள், இராணுவ நடவடிக்கைகளினால் ஏற்பட்ட விளைவுகள், 2010 ஜனாதிபதித் தேர்தல் போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதாக தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.

 அதேசமயம், தமிழ்பேசும் மக்களின் ஒற்றுமையை பாதுகாத்துக் கொள்வதும் அதனை வெளிப்படுத்துவதுமே இன்றைய அத்தியாவசியத் தேவையென விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தியிருக்கின்றமை தமிழ் பேசும் மக்கள் கவனத்தில் எடுக்கவேண்டிய முக்கியமானதொரு விடயமாகும்.

Home / Page-2 / Page-3 / Page-4 / Page-5

wanni

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!