|
புதியதொரு - பழைய தலைவன் வேண்டும் !
(16.09.2000 அன்று இறையடி சேர்ந்த எமதெழுச்சி நாயகனின் ஒன்பதாமாண்டு நிறைவினை நினைக்கையில்)
சவூதியிலிருந்து ஏயெம்.ஹஸன் அலி
பெரியதொரு உருண்டை – அது உலகளவு மட்டிருக்கும் என் தொண்டைக்குள் இன்னும் ஒன்பது வருடங்களாக ஒருக்கணித்துப் படுத்திருப்பதால் இன்னும் உயிர் வாழ்கிறேன் -000- ஓ வென்று கதறியழுதிடவும் முடியா மொத்தமாய் மௌனித்திடவும் முடியா மெல்லென ஒரு முனகல் சதா…. அத் தொண்டைக் குழிக்குள்ளிருந்து குற்றுயிர் வேதனை அன்று முதல்…இன்று வரை… எத்தனை காலம் தான் இன்னும் கரைந்தோடி புரையோடிப் போயிடினும் கரைகின்ற என் விழிகளுக்கு காலம் தான் பதில் சொல்லும் -000- வீரமே விளைந்து நின்று விடியல் காட்டிய விருட்ஷம் கயவர் மூட்டிய கனத் தீயில் காணாப் பிணமாய் ஆனதால் கண்கள் கண்ணீரைச் சொரியுதம்மா -000-
என் தொண்டைக் குழியுருண்டை மெல்லென நகர்கிற போது என்னையும் மீறித்தான் விழிகள் உடைப்பெடுத்த மடையாய்.. ஓவென்றழுகிறேன் அந்த அற்றுப்போன ஜீவனுக்காய். -000- உங்கள் வீட்டுச் சோதரமும் எங்கள் வீட்டுச் சோதரமும் ஒருங்கிணைய கனவு கண்டார் உலங்கு வானூர்தியில் உயரத்தில் வைத்தே….அன்று….?? உலகே அழுததே.. குமரிப் பெண்களும் வெட்கம் பாரா விம்மிப்புடைத்துக் கதறியழுதனரே நீவீர் மட்டும் என்ன செய்தீர்… அது ஊரறிந்த உண்மையன்றோ. -000- யாருக்குத் தான் தெரியாது - இது விஷப் பாம்பின் வேலையென்று? இது தான் முதற் தடவை - அதனால் கின்னஸ் சாதனையும் கூட இரு கறுப்புப் பெட்டிகளும் இருந்த….???? இடம் தெரியா இருட்டடிப்பானதால் -000-
சில நேரங்களில் மட்டும் - அந்த அதே…. பெரிய உருண்டை கொஞ்சமாய் கீழிறங்கும் இன்றுபோல்….கொஞ்சம் சுவாசிக்க. அந்த நேரம் பார்த்து அந்த இடை வெளியை நிரப்பும் புதி (பெரி) யதொரு உருண்டை “எப்போ கிட்டும் அந்தத் தலைமை போல” என்ற பழைய லேபலுடன். -000- மீண்டும் திக்கு முக்காடுகிறேன் துயர உருண்டையை விலக்கி ஒருக்கணித்துப் படுத்தாவது ஒரு சில கணங்கள் உயிர் வாழ்ந்திட புதியதொரு பழைய - தலைமையை காணும் வரை. -000-
சவூதியிலிருந்து ஏயெம்.ஹஸன் அலி
|