a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           02.10.2009

சட்ட விரோத காணி சுவீகரிப்பைத் தடுக்க வேண்டும் : கி.மா.ச. உறுப்பினர் இரா.துரைத்தினம்  வலியுறுத்து

 - மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் சட்ட விரோத காணி சுவீகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைத்தினம் மாகாண முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீப காலமாக காணி தொடர்பான அத்துமீறல்கள் தமிழ் - முஸ்லிம், தமிழ் - சிங்கள எல்லைப் புறங்களில் இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பாக முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

"குறிப்பாக வாகரைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள எல்லைப் புறமான தோணி, தாண்டமடு, புச்சாக்கேணி போன்ற கிராமக் காணிகள், பொலன்னறுவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு சட்ட விரோதமாகக் கையாளப்படுகின்றன.

தமது கடிதத்தில், "இப்பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பணிச்சங்கேணி, சுங்காங்கேணி, காயாங்கேணி, சேத்துக்குடா ஆகிய பகுதிகளை உள்ளடக்கி 300 ஏக்கர் காணி நன்னீர் மீன் வளர்ப்புக்கு என பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிய முடிகின்றது.

கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கெவிலியாமடு பிரதேசத்தில் தமிழர்களுக்குரிய காணிகளில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு விவசாயம் செய்யப்படுகின்றது.
நாவலடிச் சந்தி தொடக்கம் பிள்ளையாரடி வரை சட்ட விரோத காணி சுவீகரிப்புகள் தொடர்கின்றன" என்பன போன்றவை உட்பட பல்வேறு விடயங்களை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

"வியாபார நோக்கத்துடன் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் காணி கோரி விண்ணப்பித்திருந்தாலும் முதலிலும் பிரதேசத்திற்கும் அடுத்ததாக மாவட்டத்திற்கும் முன்னுரிமையளிக்கப்பட வேண்டும்.

மாவட்டத்தில், மாகாணத்தில் காணி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்கு பிரதேச மற்றும் மாவட்ட ரீதியாக, காணி பயன்பாட்டுத் திட்டமிடல் குழு அமைக்கப்பட வேண்டும். அது போல், மாகாணத்திற்கும் காணி பயன்பாட்டுத் திட்டமிடல் குழு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றும் தமது கடிதத்தில் மாகாண முதலமைச்சரை துரைரத்தினம் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.

 

Frontpage / Page-2 / Page-3 / Page-4 / Page-5 / Page-6

wanni

முகாம்களால் உருவாகும் மூன்று பிரச்சினைகள்

தோற்றதுதான் சரித்திரம் வெற்றிகளெல்லாம் வெறும் சம்பவங்களே

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தப்பிப் பிழைப்பதற்கு செய்ய வேண்டிய மாற்றங்கள்!

வன்னியில் தமிழ் மக்களுக்கு புலிகள் என்ன செய்தார்கள்?: அகதியாகியுள்ளவர்களின் அவலக்கதை

வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு

உங்கள் கேள்விகளுக்கு வரதரின் விடைகள் (பகுதி 2)

யாழ்ப்பாணம் – வவுனியா நகர மக்கள், தமிழர் வாழ்வில் ஆரோக்கியமான திருப்புமுனைக்கு கால்கோள் இடவேண்டும்!

தமிழர் போராட்டம்:  தவறுகள் தந்திரோபாயத்தால் மட்டும்தானா?

மக்களின் பிழையான முடிவுகளும் ஆதரவுகளும் பிழையான தலைவர்களையே அவர்களுக்கு வழங்கும்.