a_Pen

முதற்பக்கம்

கட்டுரைகள்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம்             பெண்ணியம்        புதியபாதை                      அலை                       பூர்வீகம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/  srilankans.org.au              www.lankamuslim.org   Communist party srilanka

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           29.01.2010

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல்

நாட்டின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர் தலுக்கு இன்னும் ஒன்பது நாட்கள் மாத்திரமே இருக்கின்றன. ஜனநாயக முறையில் தங்கள் தலைவரைத் தெரிவு செய்வத ற்கு மக்கள் தயாராகிவிட்டனர்.

சகல பகுதிகளிலும் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. முக்கிய வேட்பாளர்கள் சூறாவளிப் பிரசாரத்தில் இறங்கியிருக்கின்றனர்.

என்றாலும், பணத்தை முதன்மைப்படுத்தி மக்கள் சக்தியைக் கொச்சைப் படுத்தும் செயல்களில் பொன்சேகா தலைமையிலான எதிரணியினர் செயற்பட்டு வருவது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

ஜனநாயக விழுமியங்களுக்குள் தங்களது கொள்கைகளை முன்வைத்து மக்கள் ஆதரவைப் பெற்று செயற்படுவதே தார்மீகம். நிறைவேற்ற முடி யாத வாக்குறுதிகளை முன்வைப்பதும், நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் தலைவர்கள் மீது சேறுபூசும் பிரசாரங்களை முன்வைப்பதும் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இத்தகைய முயற்சிகளில் தோற்றுப் போன எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மற்றொரு முயற்சியிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

தங்களது பிரசார நடவடிக்கைகளுக்காக கோடிக் கணக்கில் பணம் கொடுத்து முக்கியஸ்தர்களைப் பிடிக்கும் படுமோசமான செயற்பாடுகளில் இறங்கியிருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.

இந்நாட்டில் பயங்கரவாதம் முற்றாக முறியடிக்கப்பட்டு ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஜனநாயகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைக்கும் கைங்கரியத்தில் எதிரணியினர் இறங்கி இரு ப்பது நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் முஹமட் முஸம்மில் என்பவரை பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கக் கூறி 300 இலட்சம் (30 மில்லியன்) ரூபா வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு சபையர் ஹோட்டலில் 205வது அறையில் இந்தப் பணப் பரிமாற்றம் இடம்பெற்றிருக்கி றது. ஜனாதிபதித் தேர்தல் சுயேச்சை வேட்பாளர் மயோன் முஸ்தபாவும், அரச தரப்பிலிருந்து பொன்சேகா தரப்புக்குத் தாவிய துஆ கட்சி யின் தலைவர் ஹாபீஸ் நkர் அஹமட்டும் இந்த பரிமாற்றத்தில் ஈடு பட்டுள்ளனர். பத்தறமுல்லையில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் முஹ மட் முஸம்மில் வீடியோ ஆதாரங்களுடன் இதனை வெளிப்படுத்தினார்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தங்கள் பக்கம் இழுப்பதற்கு 300 இலட்சம் ரூபா வழங்கப்படுகிறதென்றால்!? நினைத்துக் கூடப்பார்க்க முடியவில்லை.

இதனை ஒரு சாதாரண விடயமாக எடைபோட்டுவிடமுடியாது. வெளி நாட்டுச் சக்திகளும், தேசத்தை அழிக்க முயல்பவர்களும் இதன் பின் னணியில் இருக்கிறார்களென்பது பெரும் தொகைப் பணப்பரிமாற்றத் தின் மூலம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

நாட்டு மக்கள் இது குறித்து மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இலட்சக் கணக்கான ரூபா ய்கள் வழங்கப்படும்போது வெளிநாட்டு தூதரக அதிகாரியொருவரும் இருந்ததாக முஸம்மில் கூறுகிறார். இதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்ப டும் தூதரகம் இதனை மறுத்துள்ளது.

என்றாலும், நாட்டை அழிக்க முய லும் வெளிநாட்டு சக்திகள் எதிரணியினரின் வடிவத்தில் கால் ஊன்ற முற்படுகிறார்கள் என்பதற்கு நல்லதொரு ஆதாரம் கிடைத்திருக்கிறது.

மக்களின் ஜனநாயகக் குரல்களை நசித்து பணத்தின் மூலம் சகலதையும் நிறைவேற்ற முடியுமென அன்னத்தைச் சின்னமாகக் கொண்டவர்கள் நினைப்பது இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்புடை யதல்ல. ஜனநாயகப் படுகொலைக்கு ஒப்பானதாகவே இதனைக் கொள்ளலாம்.

ஆட்சிக்கு வந்தால் ஊழல் மோசடிகளை ஒழித்து விடுவோமென தேர்தல் வாக்குறுதி வழங்கிவரும் சரத் பொன்சேகாவும், ரணில் விக்கிரமசிங்க வும் பணத்தைக் கற்றை கற்றையாகக் கொடுத்து மக்கள் சக்திகளை வாங்க முற்படுவதை எந்தப் பட்டியலில் போடுவது? இது மிகப் பெரிய லஞ்ச ஊழல் என்பதை மறுக்க முடியாது.

பெரும் ஊழலில் ஈடுபடுவோர், நாட்டில் ஊழலை முற்றாக ஒழிப்போ மெனக் கூறுவதும், சவால் விடுவதும் வெறும் தேர்தல் கோஷங்கள் என்பது இந்தச் சம்பவம் மூலம் நிரூபணமாகியிருக்கிறது.

ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்ற குறிக்கோளைத் தவிர, வேறெ துவும் தெரியாத எதிரணியினர் ஜனநாயகத்தையும், மக்களையும் விலை பேசும் மிகக் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்களென்பது வேதனைக்குரியது.

பணம்தான் ஆட்சியைத் தீர்மானிக்கும் கருவியாகப் போகிறதென்றால் மக்கள் சக்தியின் மதிப்பு என்ன...? இதற்கு...,

எதிர்வரும் 26ம் திகதி, நன்கு சிந்தித்துப் பதிலளிக்க வேண்டியவர்கள் மக்களே.

ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு, வெளிநாட்டுச் சக்திகளின் கைப்பொம்மைகளாக செயற்படத் துடிப்பவர்களை மக்கள் இனங் கண்டுகொள்ள வேண்டும்.

- தினகரன் தலையங்கம்-
 

Home / Page-1 / Page-2 / Page-3 / Page-4

wanni

இன்னொரு தடவை ஆயுதம் போராட்டம்னு எவனாச்சும் சொன்னா தும்புக்கட்டையால  (துடைப்பம்) அடிச்சு சாத்திப்புடுவேன். போரை எதிர்கொண்ட எளிய மக்களின் மனநிலை இதுதான்.

‘புதிய பாதை’ ஆசிரியர் சுந்தரம் நினைவாக..

யாழ்ப்பாணத்து மக்களின் காதில் பூச்சுற்றிய முன்னாள் பிரதம நீதியரசர்!

புலிப் பாசிசம் தோற்கடிக்கப் பட்டமையே, 2009ம் ஆண்டின் மாபெரும் வரலாற்று நிகழ்வாகும்!

சரத் பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம், சம்பந்தன்  கோஷ்டி அடையப்போகும் கேவலமான முடிவு!

ஐதேகவுக்கு சேவகம்செய்ய துடிக்கும் கூட்டமைப்ப