|
ரூ. 3 கோடி .முஸம்மிலுக்கு வழங்கிய விவகாரம்:
பொன்சேகாவின் ஊழலை மறைக்கும் முயற்சி அம்பலம்; இன்றும் பல திடுக்கிடும் தகவல்கள்
சரத் பொன்சேகாவின் ஆயுத ஊழல் மோசடிகளை மூடிமறைக்கவும், அவருக்கு ஆதரவு வழங்குவதற் குமாக மூன்று கோடி ரூபாவை இலஞ்சமாக வழங்கியுள்ள விடயம் பொய்யானது என எவரேனும் தெரி வித்தால் அவை அனைத்தும் ஒலி/ ஒளி நாடாக்களுடன் நிரூபிக்க முடி யும் என தேசிய சுதந்திர முன்னணி யின் பேச்சாளர் நேற்று தெரிவித் தார்.
தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மிலுக்கு மூன்று கோடி ரூபாவை வழங்கிய விடயம் பற்றி மேலும் புதிய தகவல்கள் இன்றைய செய்தியாளர் மாநாட்டிலும் தெரிவி க்கப்படும் என்றும் அந்தப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
சரத் பொன்சேகாவின் ஆயுத ஊழல்கள் தொடர்பாக ஜே. என். பி. தலைவர் விமல் வீரவங்ச முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என தெரிவிக்க வேண்டும் என்றும் அதேவேளை ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கூறி மொஹமட் முஸம்மிலு க்கு கட்டுக்கட்டாக பணத்தை வழங்கியுள்ளனர்.
இந்தப் பணக் கொடுக்கல் வாங்கல்கள், நடந்த சம்பாஷணைகள் அடங்கிய ஒலி/ஒளி நாடாக்களையும் ஜே. என். பி. தலைவர் விமல் வீரவங்ச ஊடகங்களுக்கு காண்பித்தார்.
அரசாங்க தரப்பு எம்.பிக்க மூன்று கோடி ரூபா பணத்திற்கு விலை பேசும் தேசத்துரோக செயல்களை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத் தும் நோக்குடன் ஜே. என். பி. தலைவர் விமல் வீரவங்சவின் அறி வுறுத்தலின் படி மொஹமட் முஸ ம்மில் நடவடிக்கையை மேற்கொண் டிருந்தார்.
இதன்படி வெள்ளவத்தை சபயார் ஹோட்டலில் அறையொன்றில் முதலாவதாக 10 இலட்சம் ரூபா முற்பணமாக வழங்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவுக்கு முஸம்மிலின் ஆதரவை பெற்றுக்கொள்வத ற்கான இடைத் தரகராக மயோன் முஸ்தபா எம். பியே இருந்துள்ள மையும் அம்பலமாகியுள்ளது.
300 இலட்சம் ரூபா பேரம் பேசப்பட்டு முடிவானதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்கிரம ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஆயத்தமொன்றையும் மயோன் முஸ்தபா ஏற்பாடு செய்திருக்கிறார்.
இதில் சரத் பொன்சேகாவுடன் பேசு மாறும் ரணில் மற்றும் ரவி கருணா நாயக்க ஆகியோர் முஸம்மிலிடம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
வெள்ளவத்தை சபயார் ஹோட்டல் அறையில் முற்பணமாக வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபா வுடன் தொடர்புடைய ஒலிநாடா வும் ஜே. என். பி.யினர் வசமுள் ளது. இந்த ஒலி நாடாவில் மயோன் முஸ்தபா மற்றும் நோர்வே தூதரக அதிகாரி ஒருவரும் இருந்ததாகவும் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.
|