|
சொந்த பந்தத்தைப் பார்க்காது கொள்கை அடிப்படையில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பது அவசியம் சம்பந்தன் வேண்டுகோள்; தமிழ் காங்கிரஸை மீண்டும் இணையுமாறு அழைப்பு
பிரிந்துபோயுள்ள அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தங்கள் முடிவை மீள் பரிசீலனை செய்து திரும்பி வந்து எம்முடன் சேர வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும் தலைவரான இரா.சம்பந்தன் அழைப்பை விடுத்துள்ளார். வவுனியா, சாஸ்திரி கூழாங்குளத்தில் சித்திவிநாயகர் மைதானத்தில் நேற்று முன்தினம் திங்கள் மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சம்பந்தன் பகிரங்க அழைப்பை விடுத்தார். வவுனியா நகரசபையின் உப தலைவர் ரதன் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். சம்பந்தன் கூறியதாவது;
பிரிந்துபோயுள்ள இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தனது தவறை உணர்ந்து திரும்பி வந்து எம்முடன் இணையவேண்டுமென்று அழைக்கின்றேன். தமிழ்க் காங்கிரஸின் தலைவர் எங்களுடனேயே இருக்கிறார். அவர் அனுபவம் வாய்ந்தவர். தமிழ் மக்களை இக்கால கட்டத்தில் பிரிக்காதீர்கள் என்று தமிழ்க் காங்கிரஸை வேண்டுகின்றேன். தமிழ் மக்களை இக்கட்டத்தில் பிரித்து பலவீனப்படுத்துவது மன்னிக்க முடியாத செயலாகும்.ஒற்றுமையாக நின்று நிலையான , நிரந்தரமான, நியாயமான நடைமுறைப்படுத்தக்கூடியதான ஒரு அரசியல் தீர்வைப் பெற வேண்டிய கட்டத்தில் நாம் நிற்கின்றோம். ஆகவே பிரிந்து நிற்காமல் எம்முடன் சேர்ந்து உழைக்க முன்வாருங்கள் என்று தமிழ்க் காங்கிரஸை அழைக்கின்றேன். அவர்கள் தொடர்ந்து பிரிந்து செயற்பட்டாலும் தமிழ் மக்கள் அவர்களுக்கு துணை போகக் கூடாது என்று வேண்டுகின்றேன் என்று சம்பந்தன் கூறினார்.
சம்பந்தன் மேலும் கூறியதாவது;
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் கொள்கையின் அடிப்படையிலே வாக்களிக்க வேண்டும். சொந்தம், பந்தம் என்று பார்க்கக்கூடாது. எதிர்கால சந்ததி நிம்மதியாக பாரம்பரிய பூமியில் கௌரவமாக வாழும் நிலை ஏற்படுவதை முடிவு செய்யப்போகும் தேர்தல் இதுவாகும். எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் முழுமையாக வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்து பாராளுமன்றம் செல்ல வேண்டுமென்பதை எதிர்வரும் பொதுத் தேர்தலில் முழுமையாக வாக்களித்து உறுதிப்படுத்த வேண்டும். எமது மக்களின் துயரங்களை இன்னல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தமிழ்த தேசியக் கூட்டமைப்பிடம் ஒரு செயற்திட்டம் அஞிtடிணிண ணீடூச்ண ஒரு வரைபுத் திட்டம் (கீOஅஈ Mஅக) இருக்கின்றது. இது அரசுக்கு நன்றாகத் தெரியும். அதன்காரணமாகத்தான் எதிர்வரும் தேர்தல் மூலம் மற்றவர்களை உருவாக்க அரசு முயற்சிக்கிறது. அதற்குத் தமிழ் மக்கள் இடமளிக்கக்கூடாது. அரசின் முயற்சியை தமிழ் மக்கள் முறியடிக்க வேண்டும். இந்தப்புனிதமான கடமையிலிருந்து தமிழ் மக்கள் தவறக்கூடாது.
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் தான் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் "வீடு%27 சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள். இப்பலமிக்க அணியை தமிழ்மக்கள் தெரிவு செய்ய வேண்டும். இலங்கை அரசுடன் பலமான நிலையிலிருந்து நாம் பேசுவோம். தமிழ் மக்களின் தாயகத்தின் எல்லைகளைக் குறைப்பதற்கான முயற்சிகளை எடுத்துவரும் இலங்கை அரசாங்கம் தற்போது அரசியல் பலத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனை மக்கள் நன்றாகப் புரிந்துகொண்டு இச்சூழ்ச்சிகளுக்குப் பலியாகக் கூடாது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி மாத்திரமே வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்துத் தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றது. வேறு எந்த ஒரு தமிழ்க் கட்சியும் இவ்வாறு வடக்கு, கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடவில்லையென்றும் சம்பந்தன் சொன்னார்.
|