|
இலங்கைத் தேர்தல் – ஈ.பி.ஆர்.எல்.எவ்.(பத்மநாபா) கனடா
இலங்கையில் ஏப்ரல் 8ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எவ்.(பத்மநாபா) இனர் புளொட் அமைப்பினருடன் ஐக்கிய முன்னணி அமைத்து போட்டியிடுகின்றனர். யாழ்ப்பாணம, திருகோணமலை மாவட்டங்களில் ஈ.பி.ஆர்.எல்.எவ்.(பத்மநாபா) இன் மெழுகுதிரிச் சின்னனத்திலும் வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் புளொட்டின் நங்கூரம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைகான வாழ்வுரிமையை ஐக்கிப்பட்ட இலங்கைகுள் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தில் நிறுவுதற்கான முன்னெடுப்புகளில் இலங்கை அரசுடன் பலமான நிலையில் இருந்து பேசுதல் என்பது அவர்களின் வியூகமாக இருக்கின்றது என்று இலங்கையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் சகல இனங்களும் சக, சம உரிமையுடன் வாழ்வதை உறுதிப்படுத்தல் என்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் என்ற ஈ.பி.ஆர்.எல்.எவ்.(பத்மநாபா) அடிப்படையான கொள்கையுடன் கடந்த 30வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் முழு இலங்கை மக்களுக்குமான வாழ்வுரிமையை உறுதிப்படுத்தல் என்பதன் அடிப்படையில் சமகால, எதிர்கால அரசியல் செயற்பாடுகளை கொண்டிருக்கின்றனர். இதன் அடிப்படையில் நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதன் ஒரு அங்கமாக புலம் பெயர் நாடுகளில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ்.(பத்மநாபா) இனர் கலந்துரையாடல், விவாதங்கள், தேர்தல் நிதி திரட்டல் போன்ற விடயங்களில் தமக்கிடையேயும், புலம் பெயர் மக்களிடையேயும் ஈடுபட்டு வருகின்றனர். ஜேர்மன், பிரான்ஸ், சுவிஸ், பிரித்தானியா உட்பட்ட ஐரொப்பிய நாடுகளிலும், கனடா போன்ற அமெரிக்க நாடுகளிலும், அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளிலும் இவற்றிற்கான முன்னெடுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த வார இறுதியில் கனடாவில் நடைபெற்ற கலந்துரையாடலில் இணைந்த வடக்கு – கிழக்கு மாகாண சபையில் முன்னாள் முதல் அமைச்சர் அ. வரதராஜப்பெருமாள் அவரது சகாக்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டாரகள்; என்ற செய்திகள் அங்கிருந்து கிடைக்கின்றன. கூடவே ஈ.பி.ஆர்.எல்.எவ்.(பத்மநாபா) இன் மத்தியகுழு, சர்வதேச கிளைகளின் பொறுப்பாளர் சாந்தனும் தனது நெறிப்படுத்தலை வழங்கினார் எனவும் அறியமுடிகின்றது. இவ் கலந்துரையாடலில் ஆனந்தன், ரவி, லோங்ஸ்ரன் (யசீர்), மதி, பிரதாப், மோகன், குணபத்மன், அருள்பேட், ஜேம்ஸ், சேகரன் போன்ற உறுப்பினர்கள் நேரடியாக கலந்து கொண்டு தமது கருத்துக்களை வழங்கியிருந்தனர். இன்னும் பல உறுப்பினர்கள் கலந்துரையாடலில் கலந்து கொள்ள முடியாத சூழலில் தொலைபேசி மூலம் தமது கருத்துக்களை வழங்கியிருந்தனர்.
இலங்கையில் உள்ள தமது உறவினர்கள், ஆதரவாளர்களுடன் தொடர்பு கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் முடிவு செய்யப்பட்டது. 1990 இற்கு முற்பட்ட கால கட்டத்தில் இலங்கையின் தமிழ் பகுதியில் மக்களோடு மக்களாக நின்று அரசியல் வேலையில் ஈடுபட்ட பிரதேசங்களில் உள்ள தமது ஆதரவாளர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு வரும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.(பத்மநாபா) இனருக்கு அவர்களின் ஆதரவாளர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகின்றது என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. தேர்தலுக்கான நிதி திரட்டலும் அங்கு நடைபெற்றது. இனிவரும் நாட்களில் தொடர்சியாக இது போன்ற செயற்பாடுகளை நெருக்கமாக முன்னெடுத்தல் என்ற அணுகு முறையைப் பின்பற்றுதல் என்று இங்கு தீர்மானிக்கப்பட்டது.
தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டதை கடந்த 30 வருடகாலமாக நிலைநிறுத்துவதில் நிலவிவரும் உள்ளுர், சர்வதேச அக புற அரசியல் நிலமைக்கு ஏற்ப செயற்பட்டு வந்தவர்கள் நாமே என தோழர் வரதராஜப் பெருமாள் தமது கருத்துரையில் தெளிவாக எடுத்தியம்பினார். அவற்றில் 80 களில் இலங்கை, சர்வதேச முற்போக்கு சக்திகளுடனாக உறவுகளுடன் தனிநாட்டுக் கோரிக்கையுடனான போராட்டம். அதனைத் தொடர்ந்து நான்கு அம்சக் கோரி;க்கையுடனான திம்பு பேச்சு வார்த்தை. இலங்கை – இந்திய சமாதான ஒப்பந்தம் அதனைத் தொடர்ந்து உருவான 13 வது திருத்தச்சட்டம் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த மகாண சபை ஆட்சியும் அதன் வெற்றிகரமான செயற்பாடுகள் பின்னர் பிரேமதாச – புலிகளின் கூட்டுச்சதியினால் முயற்சிகள் சீரழிக்கப்பட்டதன் விளைவாக, பின்னர் 19 அம்சக் கோரிகையையும் அல்லது மாற்றாக ஈழப்பிரகடனம் என் ஒர் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை. சந்திரிகா அம்மையார் காலத்து அதிகாரப் பரவலாக்கத்திற்கான முன்மொழிவில் தோழர் கேதீஸ்வரனின் பங்களிப்பு இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ்.(பத்மநாபா) இன் ஆதரவு நிலைப்பாடு. நோர்வே அனுசரணையுடன் நடைபெற்ற போர் நிறுத்தம் அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்புகள். இதனை தொடர்ந்து இலங்கை அரசால் முன்னெடுக்கப்படும் சர்வ கட்சி மகாநாடும் இதில் எமது கட்சியின் அரசியல் தீர்வுக்கான முன் மொழிவு என்பன விரிவாக மீள்பரிசீலனை செய்யப்பட்டது. இவை எல்லாவற்றிலும் நாம் தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வென்றெடுக்க நாம் எடுத்துக் கொண்ட அரசியல் உரிமைப் போரட்ட செயற்பாடுகளில் நாம் தெளிவானதும் சரியானதுமான செயற்பாட்டையே கொண்டிருந்தோம், கொண்டிருக்கின்றோம் என ஈழ மக்கள் புரசிகர விடுதலை முன்னணியினர் உறுதிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து இன்று மகிந்த தலைமையிலான அரசின் அரசியல் தீர்விற்கான முயற்சிகளை நாம் எவ்வாறு தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வாக எட்டுவது. அதற்கு எவ்வாறான அணுகுமுறைகளை கையாளுவது என்றும் கலந்துரையாடப்பட்டது. கட்சியின் உறுப்பினர்கள் மிகுந்த அரசியல் முதிர்ச்சியுடன் நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை ஆராய்ததுடன் தற்போது ஏற்பட்டுள்ள ஜனநாயக சூழுலை எமக்கு சாதகமாக பாவித்து மக்கள் மத்தியில் எமது கட்சியை விரிவுபடுத்தல், பலப்படுத்துதல்; எவ்வாறு என்றும் கலந்துரையாடப்பட்டிருக்கின்றது. இனிவரும் காலங்கள் கட்சிக்கு மட்டும் அல்ல தமிழ் பேசும் மக்களுக்கும் ஏன் முழு இலங்கை மக்களுக்கும் சுபீட்சமாக அமையும் வண்ணம் எமது அரசியல் செயற்பாடுகளை முன்னோக்கிய பாய்சலில் செயற்படுத்தல் என்று உறுதி எடுப்புடன் கலந்துரையாடல் முடியுற்றது. இது ஒரு புதிய ஆரம்பம், முடிவல்ல. நாமும் எமது மக்களும் மீண்டும் எழுந்து வருகின்றோம். இறுதி வெற்றி மக்களுக்கே!
மனித குலத்திற்கே!
ஈழ மக்கள் விடுதலை முன்னணி(பத்மநாபா)
|