a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           02.10.2009

அறிவியல்  தொழில் நுட்பத் துறையிலான வளர்ச்சி

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில், சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப நிலை பெருமளவில் உயர்ந்துள்ளது. மக்களின் உடை, உணவு, உறைவிடம், போக்குவரத்து, முதலிய துறைகளுடன் அறிவியல் தொழில் நுட்பம் இணைந்துள்ளது.
 
கடந்த நூற்றாண்டின் 40, 50ம் ஆண்டுகளில், பின்டைந்த வேளாண் உற்பத்தி வழிமுறையாலும், இயற்கைச் சீற்ற பாதிப்பினாலும், சீனாவில், முக்கிய வேளாண் உற்பத்திப் பொருட்கள் கடும் பற்றாக்குறையாக இருந்தன. உணவுப் பிரச்சினை சீனா எதிர்நோக்கிய முக்கிய பிரச்சினையாக மாறியது.
 
அப்போது, தானிய விளைச்சலை உயர்த்தும் வகையில், உயர் விளைச்சல் தரும் நெல்லை வளர்க்க சீனாவின் நெல் நிபுணரான Yuan Longping முடிவு செய்தார். எனவே, உலக சிக்கல் என்று கருதப்படும் கலப்பு நெல் ஆய்வில் அவர் கவனம் செலுத்தத் துவங்கினார்.
 
கலப்பு மேம்பாட்டை இந்த நெல் கொள்வதால் எனக்கு நம்பிக்கை இருந்தது. தானிய பயிர்களின் விளைச்சல் அதிகரிப்புக்கு அறிவியல் முன்னேற்றம் துணைபுரியலாம் என்று அவர் கூறினார்.
 
1964ம் ஆண்டு முதல், 1973ம் ஆண்டு வரையான 9 ஆண்டுகளில், ஆயிரத்துக்கு அதிகமான பரிசோதனைகளை Yuan Longping மேற்கொண்டார். கலப்பு நெல்லின் விளைச்சல் சாதாரண நெல்லை விட 20 விழுக்காடாக அதிகரிப்பதை பரிசோதனை எடுத்துக்காட்டியது. கலப்பு நெல் வளர்ப்பு தொழில் நுட்பம் பெருமளவு பயன்படுத்தப்பட்டதுடன், சீன நெல் வளர்ப்பு அளவும் புதிய கட்டத்தில் காலடியெடுத்துவைத்தது. உலகில் நெல் கலப்பு மேம்பாட்டை வெற்றிகரமாக பயன்படுத்திய அறிவியலாளராக Yuan Longping மாற்றியுள்ளார்.

இதற்கு பின், புதிய ரக, உயர் விளைச்சல் தரும் உயர் ரக நெல்லை அவர் ஆய்வு செய்யத் துவங்கினார். பல அறிவியல் பரிசோதனைகளின் மூலம், மேம்பட்ட கலப்பு நெல்லின் ஒரு மூ பரப்பின் விளைச்சல் படிப்படியாக உயர்ந்து, 800 கிலோகிராமை எட்டியது.
 
கலப்பு நெல் ஆய்வு மாபெரும் சாதனைகளைப் பெற்றதால், சீனாவின் மொத்த நெல் விளைச்சல் சுமார் 60 கோடி டன்னுக்கு உயர்ந்தது. அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்தைக் கொண்டதோடு, உலக தானிய உற்பத்தியில் அற்புதத்தை சீனா உருவாக்கியது. முழு உலகின் 7 விழுக்காட்டு விளை நிலங்களை கொண்டு உலகின் 22 விழுக்காட்டு மக்களுக்கு தேவையான தானிய அள சீனா நிறைவேற்றியுள்ளது. தவிர, சீனாவின் கலப்பு நெல் தொழில் நுட்பம் இந்தியா, வியட்நாம் ஆகிய 20க்கு அதிகமான நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் பரவியது.
சீனாவில், Yuan Longping போல் பல அறிவியலாளர்கள் உள்ளனர்.
 
அவர்களது அறிவியல் தொழில் நுட்பங்கள் உற்பத்தி ஆற்றலை மாற்றி, நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவு உதவியுள்ளன. கடந்த 60 ஆண்டுகளில், அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு சீனா பெரும் முக்கியத்துவம் அளிப்பதை இவை உணர்த்துகின்றன.
 
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட துவக்கம் முதல், அறிவியல் தொழில் நுட்ப பணியின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சித் திட்டத்தை சீனா சிறப்பாக இயற்றியது.
 
1978ம் ஆண்டு, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியை சீனா செயல்படுத்தியது முதல், சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் தொழில் நுட்பமே முதல் உற்பத்தி ஆற்றலாகும் என்ற உத்தியை சீனா நிர்ணயித்து,
 
 அறிவியல் தொழில் நுட்ப திட்டப்பணிகளை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் திறமைசாலி பயிற்சிக்கும் துணைபுரிந்த அமைப்பு முறையை உருவாக்க பாடுபட்டு வருகின்றது. கடந்த சில ஆண்டுகளில், தேசிய திட்டம் மற்றும் மக்களின் வாழ்க்கையில் அறிவியல் தொழில் நுட்பம் முக்கிய பங்காற்றி வருகின்றது என்று சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் ஆய்வுப் பிரிவின் தலைவர் Xu heping தெரிவித்தார். அவர் கூறியதாவது:
சீனாவின் ஒட்டுமொத்த அறிவியல் தொழில் நுட்ப ஆற்றலுக்கும் சர்வதேச முன்னேறிய நிலைக்குமிடையிலான இடைவெளி தொடர்ந்து குறைந்து வருகின்றது. சில துறைகள் சர்வதேச முன்னணியில் நுழைந்து, உலக அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் செல்வாக்கு கொள்கின்றன. சமூகப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும், தேசிய பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் அறிவியல் தொழில் நுட்பம் பெரிதும் உதவுகின்றது என்று அவர் கூறினார்.
 
தற்போது, அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றங்களின் அமோக அறுவடை காலத்தில் சீனா நுழைந்துள்ளது. ஆண்டுதோறும் புதிதாக ஆய்வு செய்த அறிவியல் தொழில் நுட்ப பலன்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது. இவை பெரும்பாலும் எரியாற்றல், வேளாண், உயிரினச்சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளை கேர்ந்தவை.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில், கணிசமான அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் நடைபெற்ற பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இது மிக சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டது. திடல்கள் மற்றும் அரங்குகளின் கட்டுமானம், தகவல் தொலைத்தொடர்பு, அறிவார்ந்த போக்குவரத்து, உணவுச் சுகாதாரம், வானிலை முன் அறிவிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பல்வேறு துறைகளில் புதிய அறிவியல் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. பல புதிய அறிவியல் தொழில் நுட்பங்களை உட்புருத்திய பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா, ஒலிம்பிக் எழுச்சிக்கும் நவீன அறிவியல் தொழில் நுட்பங்களுக்குமிடையிலான பிழையற்ற ஒருங்கிணைப்பு என்று உலகம் அழைத்தது. விளையாட்டு பணிகளுக்கு பொறுப்பான துருக்கியின் முன்னாள் அமைச்சர் Mehmet Ali Sahin கூறியதாவது:
பல ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாகளில் நான் கலந்துகொண்டேன். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா சிறப்பானது, திறமையானது. அத்துடன், புதிய உயர் தொழில் நுட்பங்களை வெற்றிகரமாக பயன்படுத்தியது என்று அவர் கருத்துத் தெரிவித்தார்.
 
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மக்களின் வாழ்க்கைக்கு மேலதிக வசதிகளை அறிவியல் தொழில் நுட்பம் வழங்கும். நெல் நிபுணர் Yuan Longping போல் சீனாவின் பல அறிவியலாளர்கள் மேலும் உயர் அறிவியல் தொழில் நுட்ப நிலையை கண்டறிந்து வருகின்றனர்.
 
3வது கட்ட கலப்பு நெல்லின் முன் மாதிரி விளைநிலத்தின் விளைச்சல் ஒரு மூ பரப்புக்கு 900 கிலோகிராமாகும். இதில் நான் நம்பிக்கை கொள்கின்றேன். திட்டப்படி, 2010ம் ஆண்டு, இந்த நோக்கம் நனவாக்கப்படும் என்று Yuan Longping கூறினார்.

 

Frontpage / Page-2 / Page-3 / Page-4 / Page-5 / Page-6

wanni

முகாம்களால் உருவாகும் மூன்று பிரச்சினைகள்

தோற்றதுதான் சரித்திரம் வெற்றிகளெல்லாம் வெறும் சம்பவங்களே

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தப்பிப் பிழைப்பதற்கு செய்ய வேண்டிய மாற்றங்கள்!

வன்னியில் தமிழ் மக்களுக்கு புலிகள் என்ன செய்தார்கள்?: அகதியாகியுள்ளவர்களின் அவலக்கதை

வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு

உங்கள் கேள்விகளுக்கு வரதரின் விடைகள் (பகுதி 2)

யாழ்ப்பாணம் – வவுனியா நகர மக்கள், தமிழர் வாழ்வில் ஆரோக்கியமான திருப்புமுனைக்கு கால்கோள் இடவேண்டும்!

தமிழர் போராட்டம்:  தவறுகள் தந்திரோபாயத்தால் மட்டும்தானா?

மக்களின் பிழையான முடிவுகளும் ஆதரவுகளும் பிழையான தலைவர்களையே அவர்களுக்கு வழங்கும்.