a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           02.03.2010

தவறான பாதையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

பாராளுமன்றத் தேர்தலுக்காகக் கூட்டணி அமைப்பதில் எதிரணிக் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன. இக்கட்சிகளுக்கிடையே கொள்கை உடன்பாடு எதுவும் இல்லை. கலாசார, பொருளாதார, சர்வதேச விடயங்களிலும் சமூக நோக்கிலும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் இந்த உத்தேச கூட்டணியில் பிரதான கட்சிகளாக உள்ளன. 

பொதுவான வேலைத் திட்டம் பற்றிய அக்கறை இவர்களுக்கு இல்லை. பொதுவான சின்னம் பற்றியே பேச்சுவார்த்தை நடத்துகின்றார்கள். பாராளுமன்ற ஆசனங்களைத் தவிர வேறெந்த நோக்கமும் இல்லாத கூட்டணி என்று இதைக் கூறலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தக் கூட்டணியுடன் தன்னை இனங்காட்டுவது இக் கூட்டமைப்பின் உண்மையான நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்புகின்றது. 

தமிழ் மக்களின் ஆறு தசாப்தகாலத் தலைமையின் தொடர்ச்சியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகியது. எனவே பிரதான நோக்கத்தைப் பொறுத்த வரையில் ஆரம்பகாலத் தமிழ்த் தலைமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே எவ்வித வேறுபாடும் இல்லை.

தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை காண்பதே அந்த நோக்கம். ஆனால் முன்னைய தலைமைகளைப் போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அந்த நோக்கத்துக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படவில்லை. ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கூட்டமைப்பு மேற்கொண்ட சகல தீர்மானங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. 

பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழான மாகாண சபையை ஏற்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் கூறுகின்றார்கள். மாகாணசபை பாதகமானதென்றால், தமிழ் மக்கள் அனைவரும் மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது எதற்காக என்பது பற்றிய விளக்கம் எதையும் இதுவரை இவர்கள் அளிக்கவில்லை. 

அதை விடுவோம். பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வையே கூட்டமைப்பினர் எதிர்பார்க்கின்றார்களென்றால் அதற்குச் சாதகமான முறையிலேயே அவர்களின் அணுகுமுறை அமைய வேண்டும்.
பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வு அரசியலமைப்பு மாற்றத்துடன் சம்பந்தப்பட்டது. அரசிய லமைப்பில் மாற்றம் செய்வதன் மூலமே பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வை நடைமுறைப்படுத்த முடியும். அதற்குப் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை.  

பாராளுமன்றத் தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறக்கூடிய நிலையிலுள்ள அரசியல் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்க கூடுதலான அரசியல் தீர்வு சாத்தியமாகும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான இந்த அணுகுமுறையைப் பின்பற்றவில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்றிலிரண்டு பெரும் பான்மையைப் பெறக் கூடிய நிலையில் இருக்கின்றது. எதிரணிக் கூட்டணிக்குச் சாதாரண பெரும்பான்மையே சாத்தியமில்லை. ஆனால் எதிரணிக் கூட்டணியுடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை இனங்காட்டுகின்றது.  

இனப்பிரச்சினையின் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைக்கும் போது அதை வென்றெடுப்பதற்குச் சாத்தியமான வழி முறையையும் தேர்ந்தெடுக்க வேண்டும். கோரிக்கையை முன்வைப்பதும் அதை வென்றெடுப்பதற்குச் சாத்தியமற்ற நிலைப்பாட்டை மேற்கொள்வதும் இதுவரையிலான தமிழ்த் தலைமையின் பாரம்பரியமாக உள்ளது. இது மேலும் தொடர்வதை அனுமதிக்கக் கூடாது. ஒன்றில் தலைமை தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது மக்கள் தலைமையை மாற்ற வேண்டும்.

- தினகரன் ஆசிரியர் தலையங்கம்

Home /Page -1 /Page-2 / Page -3 / Page-4 / Page-5 / Page-6 /Page-7 /

wanni

ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கும், 1970 பொதுத் தேர்தல் முடிவுக்கும் உள்ள ஒத்த தன்மைகள்!

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தெரிவித்திருக்கு ம் செய்திதான் என்ன?