a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                           09.04.2010

உழைக்கும் பெண்கள் தினம் நூற்றாண்டு

-மாலதி சிட்டிபாபு, செயலாளர், சிஐடியு, தமிழ்நாடு

உலகம் முழுவதுமுள்ள பெண் தொழிலாளர்கள் தங்களது ஜனநாயக உரிமைகளுக்காக குரலெழுப்பும் நாள் “சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம்”.

சர்வதேச உழைக்கும் பெண்கள் நூற்றாண்டு தின விழா என்பது உலகம் முழுவதும் உள்ள பெண் தொழிலாளர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம். நமது சமுதாயத்தில் சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஆணுக்கு நிகராக பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று பல தொடர் போராட்டங்களை நடத்தியதன் விளைவாக கிடைத்த வெற்றிகளின் எதிரொலியே நூற்றாண்டு தின கொண்டாட்டங்கள்.

நடைபெற்ற அனைத்து எதிர்ப்பியக்கங்களிலும், போராட்டங்களிலும், சமூக புரட்சி இயக்கங்களிலும், அது அடிமை சமுதாய மானாலும், நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பானாலும் அல்லது தற்போதைய முதலாளித்துவ அமைப்பானாலும் ஆண்களுடன் பெண்களும் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டுள்ளனர் என்பது வரலாறு.

1857 மார்ச் 8 - பெண் தொழிலாளர் போராட்ட வரலாற்றில் முக்கியமான நாள். இந்த போராட்டம்தான் வருடந்தோறும் மார்ச் 8 அன்று சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் அனுசரிக்க உந்துதலாக இருந்தது. நியூ யார்க் நகரில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள், சுகாதாரமான பணிச்சூழல், 10 மணிநேர வேலை, சம உரிமை உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து 1857 மார்ச் 8 அன்று மறியலில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ் மிகக்கடுமையாக தாக்கி போராட்டத்தை ஒடுக்கியது.

ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சி பெண்கள் தங்களது உரிமைக்கான போராட்டங்களை பின்வாங்கவில்லை. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தொடர்ந்து பல போராட்டங்களில் ஈடுப்பட்டனர். 1857க்குப் பிறகு 51 வருடம் கழித்து 1908 மார்ச் 8 அன்று 30 ஆயிரம் பெண் தொழிலாளர்கள் ஓட்டுரிமை, 8 மணி நேர வேலை, குழந்தை உழைப்பை நிறுத்துவது போன்ற கோரிக்கைகளை முன் வைத்து பேரணியாக நியூயார்க் நகர் தெருக்களில் திரண்டனர். கடுமையான போலீஸ் தடியடிக்கு ஆளானார்கள்.

இந்த போராட்டங்களின் தொடர்ச்சிதான் 1909ல் நியூயார்க் நகரில் நடைபெற்ற 20 ஆயிரம் பெண் தொழிலாளர்கள் பங்குபெற்று கடுங் குளிரையும் தாங்கி 13 வாரங்களுக்கு மேல் நீடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம். நீடித்த தொழிற்சங்க போராட்டங்களுக்கு பெண்கள் தகுதியற்றவர்கள் என்கின்ற கருத்தினை முறியடித்த வீரமிக்க போராட்டம்.

இங்கிலாந்து, ரஷ்யா என உலகம் முழுவதும் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவிலும் 1908ல் பம்பாய் ஜவுளி தொழிலாளர்கள் பால் கங்காதர் திலகரின் கைதினை கண்டித்து நடத்திய போராட்டத்தில் பெருவாரியான பெண்கள் கலந்து கொண்டார்கள்.

இதுபோன்ற எண்ணற்ற போராட்டங்களின் தொடர் விளைவாகத்தான் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினமும், அதன் நூற்றாண்டு தின கொண்டாட்டங்களும்.

எண்ணற்ற பெண்களின் ஒப்பில்லா தியாகத்தினால்தான், இன்றும் நிலவுகின்ற ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களுக்கு உரிமைகளை கொடுக்க மனமில்லாமல் இருப்பவர்களிடமிருந்து, உரிமைகள் பெறப் பட்டுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.

உலகின் பெரும்பான்மை பெண்களின் துயரங்களுக்கு காரணமானவை இரண்டு; ஒன்று-உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் நவீன தாராள முதலாளித்துவம். மற்றொன்று, சமூகத்தில் ஆழமாக வேரூன்றி விட்ட ஆணாதிக்க சமூக அமைப்பு. ஒன்றோடொன்று இணைந்து இவ்விரண்டும் ஒழிக்கப்படவேண்டும்.

இந்தியாவில் தாராளமயக் கொள்கைகளும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களும் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பளிக்கும் என்பது போன்று தோற்றம் உருவாக்கப்பட்டது. கண்ணியமான வேலைகளில் பெண்களின் எண்ணிக்கை என்பது உயரவில்லை. உற்பத்தி குறைவான துறையிலும் சொற்ப சம்பளம் கிடைக்கும் பணியிலும்தான் பெண்கள் அமர்த்தப்படுகிறார்கள்.

நகர்ப்புறங்களில் ஐ.டி. செக்டாரில் அதிக வேலை வாய்ப்பு இருப்பதுபோல் ஒரு தோற் றம் இருக்கிறது. ஆனால் இதற்கு மாறாக வீட்டுவேலை செய்யும் பணியாளர்களாகத்தான் அதிக பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது கசப்பான உண்மை. ஐ.டி. செக்டரில் 0.3விழுக்காடும், நிதி துறைகளில் 1.4 விழுக்காடும் தான் பெண்கள் பணி புரிகிறார்கள். தில்லி போன்ற நகரங்களில் கூட முறையான ஊதியம் பெறும் பெண் தொழிலாளர்களுக்கும் கூட ஊதியத்துடன் கூடிய விடு முறையோ, ஓய்வு-ஊதியமோ, பி.எஃப். கூட இல்லை.

ஆண்களை விட பெண்களின் ஊதியம் 30 விழுக்காடு குறைவு. வறுமைக்கோடு என்று நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்திற்கும் குறைவாக 85 விழுக்காடு பெண்கள் சம்பளம் பெறுகிறார்கள். ஐசிடிஎஸ், தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் இவற்றில் பணியாற்றும் பெண்கள், சமூக சேவகிகள் என்ற பெயரால் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஏற்றுமதி வளாகங்களிலும் சட்டங்கள் அமலாக்கப்படவில்லை.

தனியார் ஊடகங்களும், அறிவாளிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களும் அரசு மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கலுக்கு மாற்று இல்லை என்ற கருத்தை பரப்புகிறார்கள். அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இந்த சத்தங்கள் ஓரளவுக்கு அடங்கிப் போய் விட்டன. முதலாளித்துவம் வறுமை, பசி, வேலையின்மை, கல்வியறிவின்மை மற்றும் நோய் போன்ற அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியவில்லை.

முதலாளித்துவம் வெளிப்படையாக பெண்களின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவத்திற்காக பேசினாலும், சமகாலத்தில் பெண் தொழிலாளர்களின் உழைப்பை மிக மலிவாக கருதும் நிலையிலேதான் முதலாளித்துவம் உள்ளது. முதலாளிகளால் ஏற்படுத்தப்படும் பொருளாதார சுரண்டல், குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்கள் மீதான அடக்குமுறை, உழைக்கும் பெண்களை நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளது. எங்கெல்லாம் பெண் தொழிலாளிகள் இதை உணர்கிறார்களோ அங்கெல்லாம் வலுவான குரலை எழுப்புகிறார்கள்.

சமூக தளத்தில் இந்தியா, சுகாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் 114வது இடத்தில் உள்ளது. மனித மேம்பாட்டில் 177 நாடுகளில் இந்தியா 134 வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் மகப்பேறு மற்றும் மகப்பேறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் 1,25,000 பெண்கள் இறக்கிறார்கள். பேறுகால இறப்பு விகிதம், ஓரு லட்சம் பிரசவங்களில் 300ஐ யும் தாண்டுகிறது என்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. 80 விழுக்காடு கர்ப்பிணி பெண்கள் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் மூன்றில் இரண்டு பிரசவங்கள் வீட்டில் நடக்கின்றன. 43விழுக்காடு தான் மருத்துவ பயிற்சி பெற்றவர்களால் கண்காணிக்கப்படுகிறது. 50 விழுக்காடு கிராமங்களில் சுகாதார வசதிகள் இல்லை. ஆரோக்கியத்திற்காக அரசுகளால் செலவிடப்படும் பணம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.9 விழுக்காடுதான்.

30 நிமிடத்திற்கொரு பாலியல் பலாத்காரம் நடக்கிறது. 1971ம் ஆண்டை ஒப்பிட்டுப்பார்த் தால் பெண்களுக்கெதிரான வன்முறைகள் 700 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மணிக்கும் 18 பெண்கள் கடத்தல், பாலியல் வன்முறை, வரதட்சணைக் கொடுமைகள், பாலியல் சீண்டல் போன்ற ஏதாவதொரு கொடுமைக்கு பலியாகிறார்கள். 40 விழுக்காடு திரு மணமான பெண்கள் குடும்ப வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஊடகங்களில் வன்முறையும், பெண்களை பாலியல் கருவிகளாக சித்தரிக்கப்படும் விதங்கள், பெண்களுக்கெதிரான கொடுமைகள் அதி கரிக்க காரணமாக உள்ளன. இவைகளை தடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.

சமூக அந்தஸ்திற்காகவும், நீதிக்காகவும் போராடவேண்டும் என்ற உணர்வு வளர்ந்துள்ளதையே உழைக்கும் பெண்களின் நூறாண்டு கால போராட்டங்கள் எடுத்துக்காட்டுகிறது. ஆனாலும் பெண் தொழிலாளர்களில் பெரும் பகுதியினர், தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பதை உணரவில்லை. சமூக சுதந்திரத்திற்கான போராட்டத்தில் அவர்கள் இணைய வேண்டியுள்ளது. இவ்வருடம் முழுவதும் நடைபெறும் நூற்றாண்டு தின கொண்டாட்டங்கள், சமூக அந்தஸ்திற்காக போராட்டங் களை நடத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை அவர்களிடத்தில் ஏற்படுத்தும்.

உலகம் முழுவதும் உள்ள பெண்ணியத்தை மட்டும் சார்ந்த பல்வேறு அமைப்புகள், சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஆண்களுக்கெதிரான வெறுப்பை மட்டும் போதிக்கின்றன. இந்த போதனை முதலாளித்துவ சுரண்டலுக்கெதிராக ஆணும் பெண்ணும் இணைந்து நடத்த வேண்டிய பொதுவான இயக்கத்திற்கு தடங்கலாக உள்ளது. பெண்ணியம் பேசும் பல்வேறு அமைப்புகள் சோஷலிசத்திற்கு எதிராகவும் உண்மையில் சுரண்டும் முதலாளித்துவ அமைப்பிற்கு ஆதரவாகவும் செயல்படுகின்றன. பெண்ணியம் என்ற பெயரால் ஆண், பெண் தொழிலாளர்களின் ஒற்றுமைக்கெதிராக பல நேரங்களில் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.

தொழிலாளி வர்க்கத்தின் ஒட்டுமொத்த விடுதலையை நோக்கமாக கொண்ட சிஐடியு, அனைத்துப்பகுதி தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து இந்த விடுதலை போராட்டத்தில் ஈடுபடுத்தும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற செயலாற்றுகிறது. தொழிலாளி வர்க்கத்தின் பெரும்பகுதியாக உள்ள பெண்களை தொழிற்சங்க இயக்கத்தின் பால் ஈர்க்கா மல் இது சாத்தியமில்லை என்பதும் சிஐடியு உணர்ந்துள்ளது. பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கான போராட்டம் என்பது வர்க் கரீதியான தொடர்ச்சியான போராட்டம். பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்காவிடில் தொழிலாளி வர்க்கம் முழு சுதந்திரத்தை அடைய முடியாது (லெனின்) என்பதிலும் சிஐ டியு மிக தெளிவாக உள்ளது. பெண் தொழி லாளர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை பெற்றுத்தர சிஐடியு முனைப்போடு பணியாற்றுகிறது. அதன் பொருட்டுதான் 1979ல் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டது.

அகில இந்திய அளவிலும், தமிழ்நாட்டிலும் பெண் தொழிலாளர் பிரச்சனைகளை முன்வைத்து ஏராளமான இயக்கங்களை/போராட்டங்களை உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு, பெண் தொழிலாளர்களை திரட்டி நடத்தியுள்ளது. பல கோரிக்கைகளில் தீர்வும் காணப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்புடன் கூடிய நிரந்தர பணிகள் கனவாகிவரும் சூழ்நிலையில் கடுமையாகவும் கொடுமையாகவும் பாதிப்புக்கு உள்ளாவது பெண் தொழிலாளர்கள்தான். அரசின் முழு ஒத்துழைப்போடுதான் தொழி லாளர் நலச் சட்டங்களை மீறுகின்றன பன்னாட்டு / உள்நாட்டு பகாசுர நிறுவனங்கள். கேம்ப் கூலி, காண்டிராக்ட், கேஷங்வல், தினக்கூலி போன்ற கொத்தடிமை முறைகள் சுதந்திரமாக அமலாக்கப்படுகின்றன. சமூக பாதுகாப்புடன் கூடிய நிரந்தர பணிகளை உருவாக்க தேவையான நிர்ப்பந்தத்தை தொடுக்க வேண்டிய தமிழ்நாடு அரசு இன்று பன்னாட்டு/உள்நாட்டு பகாசுர நிறுவனங்களுக்கு தங்களது கொள்ளை லாப வேட் கைக்கு உதவக்கூடிய வகையில் மேற்கூறிய கொத்தடிமை முறையான வேலைகளுக்கு ‘ஆள் பிடித்து கொடுக்கும்’ புனிதமான பணி யில் ஈடுபட்டுள்ளது. இதிலும் அதிகமாக சுரண்டலுக்குள்ளாவது பெண்கள்தான். பெண் தொழிலாளர்களுக்கு எதிரான அனைத்து வகையான சுரண்டல்களையும் எதிர்த்து சுரண்டலுக்குள்ளாகும் பெண்களை திரட்டி தொடர்ச்சியான இயக்கங்களை நடத்தி வருகிறது உழைக்கும் பெண்கள் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்புக்குழு.

ஒருங்கிணைப்புக்குழுவின் 30 ஆண்டு கால செயல்பாட்டின் விளைவாய் சிஐடியு உறுப்பினர் எண்ணிக்கையில் இன்று பெண்கள் 25 விழுக்காடுக்கும் மேல்! நடைபெறும் போராட்டங்களில் பெண் தொழிலாளர் களின் பங்கேற்பும் கணிசமாக உயர்ந்துள்ளது. மார்ச் 5ல் நடைபெற்ற அனைத்து சங்க மறியலில் தமிழ்நாட்டில் பங்கேற்றவர்களில் 30 விழுக்காடுக்கும் மேல் பெண்கள்.

சர்வதேச உழைக்கும் பெண்கள் தின நூற்றாண்டை இந்த ஆண்டு முழுவதும் கொண் டாடுவது என்று சிஐடியு முடிவெடுத்துள்ளது. இதனை பயன்படுத்தி கணிசமான பெண் தொழிலாளர்களை தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபடுத்தும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது என்று கருதி, அதன் முதற் கட்டமாக அனைத்துப்பகுதி பெண் உழைப் பாளிகளையும், துண்டுபிரசுரங்கள் வினியோகிப்பதன் மூலமாக சந்திப்பது என்றும் சம கூலி, 8 மணிநேர வேலை, சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய கோரிக்கை களை வடிவமைத்து ஆண்டு முழுவதும் இயக்கங்களில் ஈடுபடுவது என்றும் உழைக் கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு முடி வெடுத்துள்ளது. இந்த இயக்கத்தில் சிஐடியு-வும் தனது முழுமையான பங்களிப்பை செலுத்தும்.

ஆணும் பெண்ணும் இணைந்து முதலாளித்துவ சுரண்டலுக்கெதிராக, ஆண்-பெண் சமூக சமத்துவத்திற்காக வலுவான இயக்கங்களை நடத்தவேண்டும் என்கின்ற ‘சர்வதேச உழைக்கும் பெண்கள் தின’த்தின் உணர்வு பாதுகாத்து பலப்படுத்தப்பட வேண் டும். சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தின் புரட்சிகர தன்மையை பாதுகாக்க வேண்டிய அவசர அவசிய கடமை நம்முன் உள்ளது.

சிஐடியு, தனது அமைப்புச்சட்டத்தில் கூறியுள்ளப்படி, “உற்பத்திசாதனங்கள், பங்கீடு மற்றும் பரிவர்த்தனை முறைகள் அனைத்தும் சமூகமயமாக்கப்பட்டு சோஷலிச சமுதாய அமைப்பு உருவாக்கப்பட்டப் பின்புதான் உழைப்பாளிகள் மீதான சுரண்டல் முடிவுக்கு வரும்” என்று நம்புகிறது.

எனவே, சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தின் புரட்சிகர தன்மையை பாதுகாக்க வேண்டிய அவசர அவசிய பொறுப்பை உணர்ந்து, ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டியது அனைத்துப் பகுதி உழைப்பாளர்களின் கடமை.

 

Home / Page-2 / Page-3 / Page-4 / Page-5

wanni

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!