|
தனிவழி போகும் தன் திட்டத்தை கைவிட்டது தமிழ்க் காங்கிரஸ் ஆனால் வேட்பாளர் தெரிவில் கூட்டமைப்புடன் முரண்பாடு
தனி வழி போகும் தனது திட்டத்தை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கைவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து இந்தப் பொதுத் தேர்தலையும் சந்திப்பதற்கு அக்கட்சி முடிவு செய்தமையை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நிலவிய குழப்பம் ஓரளவு முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தமிழ்க்காங்கிரஸ் கட்சி தனது சார்பில் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்கள் குறித்து முன்னுக்குப் பின் முரணான விதத்தில் பெயர்களை மாற்றியதால் கூட்டமைப் புக்கும் அக்கட்சிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை செயலாளராகக்கொண்ட அகில இலங் கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி, அண்மைக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைமையோடு முண்டிக்கொண்டிருந்தமையை அடுத்து, எதிர்வரும் தேர்தலில் அக் கட்சி கூட்டமைப்பை விட்டுத் தனி வழி போகக்கூடும் எனப் பரவலாகப் பேச்சடிபட்டது தெரிந்ததே.
இவ்விவகாரம் தொடர்பாக அக்கட்சிக் கும் கூட்டமைப்புக்கும் இடையில் இடம் பெற்ற பல சுற்றுப் பேச்சுகள் ஆரம்பத்தில் இழுபறியாக நீடித்தபோதிலும் நேற்று முன் தினம் இரவு கடைசியாகப் பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலைமை ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதையடுத்து, கடந்த பொதுத் தேர்தல் போல இம்முறையும் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ ஆகியவை நான்கும் ஒன்றிணைந்து ஒரே கூட்ட மைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பாக போட்டியிடுவது என முடிவாயிற்று.
தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் தலைவர் அ.விநாயகமூர்த்தி, அதன் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம் பலம் ஆகியோருக்கு யாழ்ப்பாணத் தேர்தல் மாவட் டத்தில் போட்டியிடுவதற்கு இடமளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. எனினும் நேற்று இரவு நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கீபிரதான தலைவர்களுக்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் ய்\யலர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் நேற்று முறுகல் நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அ.விநாயகமூர்த்தி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய இருவருக்கும் பதிலாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர்களான பத்மினி சிதம்பரநாதன், கஜேந் திரன் ஆகியோரை நியமிக்கவேண் டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
இந்நிலையிலேயே இந்த முரண்பாடு எழுந்தது என்று பிந்திய தகவல்கள் தெரி வித்தன.
-Uthayan_
|