a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           02.03.2010

சீனரின் நண்பரான இந்திய மருத்துவர் ஷாந்தாராம் கோட்னிஸ் (1910 - 1942)

கடந்த 1938-45ம் ஆண்டுகளில் சீனாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது சீன மக்களுக்கு உதவும் வகையில் இளம் மருத்துவர் ஷாந்தாராம் கோட்னிஸ் (Shantaram Kotnis) பிறந்த ஊரான இந்தியாவை விட்டு சீனாவுக்கு வந்து அவருடைய சிறந்த மருத்துவ சிகிச்சை நுட்பத்தின் மூலம் சீன மக்களுக்கு உதவி வழங்கினார். மிகப் பல சீனர்கள் அவரை நன்றாக அறிந்து கொண்டுள்ளனர். அவருடைய அணுகுமுறை பண்பு நலன் சிகிச்சையளிப்புத் திறன் ஆகியவை சீன மக்களின் உள்ளத்தில் ஆழப்பதிந்து விட்டன. அவரின் உடன்பிறப்புகள் சீனாவிலான அவரது போராட்ட வாழ்க்கைக் கதைகள் பற்றி எப்படி மதிப்பிடுவதை தெரிந்து கொள்வோமா?

மும்பை நகரின் தெற்கில் அமைந்த சாதாரண ஒரு மாடி வீட்டில் மருத்துவர் ஷாந்தாராம் கோட்னிஸின் மூன்றாவது தங்கை மனோரமா கோட்னிஸ், ஐந்தாவது தங்கை வத்சலா கோட்னிஸ் இருவரும் வாழ்கின்றனர். அவர்கள் இப்போது மூதாட்டிகள். அப்போது அவர்களது சகோதரர் ஷந்தாராம் கோட்னிஸ் இந்தியாவை விட்டு சீனாவுக்கு சென்ற போது அவர்கள் குழந்தையாக இருந்தனர். அண்ணன் சீன மக்களின் பத்து முக்கிய சர்வதேச நண்பர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை கேட்டறிந்த போது அவர்கள் உள்ளம் குளிர்ந்து மகிழ்ச்சியடைகின்றனர். 80 வயதுக்கு மேற்பட்ட மனோரமா கூறியதாவது.

சீன மக்கள் என் அண்ணன் மருத்துவர் ஷந்தாராம் கோட்னிஸ் அவர்களை பத்து முக்கிய சர்வதேச நண்பர்களில் ஒருவராக தேந்தெடுத்தமை எங்களுக்கு பெருமையாகும். அவர் ஊரை விட்டுப் புறப்பட்ட போது எனக்கு 16 வயது தான். சீனாவில் நடைபெற்ற ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் சீன மக்களுக்கு அண்ணன் உதவி செய்தார். குடும்பத்தினர் அவரின் பாதுகாப்பு பற்றி கவலைப்பட்டனர் என்று அவர் கூறினார்.

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் வெடித்த பின் சீனாவுக்கான இந்திய மருத்துவக் குழுவுடன் ஷந்தாராம் கோட்னிஸ்  அவர்கள் சீனாவுக்கு வந்தார். அவரும் அவரது குழுவினரும் சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் ஹைகோ, யிச்சான், சிச்சுவான் மாநிலத்தின் ச்சுன்ச்சிங் முதலிய இடங்களில் பணிப் புரிந்தனர். ஆபத்தை பொருட்படுத்தாமல் காயமடைந்த போர் வீரர்களுக்கு ஷந்தாராம் கோட்னிஸ்  சிகிச்சையளித்தார். பின்னர் அளவுக்கு மீறி களைத்து நோய்வாய்பட்டு மரணமடைந்தார். பிரிந்த அவருடைய உயிர் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன போராட்டத் தளத்தில் என்றுமே நிலைத்து நின்றுவிட்டது. தங்கைமார்களின் நினைவில் வீரர் ஷந்தாராம் கோட்னிஸ் மிதமான அன்பான சகோதரராவார். ஐந்தாவது தங்கை வத்சலா கூறியதாவது.  

அண்ணன் சீனாவுக்கு சென்ற போது எனக்கு 9 வயது. தங்கைமார் மீது அவர் அன்பு காட்டினார். அவர் அடிக்கடி எனக்கு எழுதக் கற்றுக்கொடுத்தார். அவருடன் இருந்த போது மகிழ்ச்சியும் இன்பமுமாக உணர்ந்தேன் என்றார் அவர்.

அவரது தங்கைமார்கள் வர்ணித்தது போல் ஷந்தாராம் கோட்னிஸ்  மிதமான பண்பு நலனுள்ளவர். நியாயமான பொறுப்பு அவருக்கு உண்டு. ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் அவர் சீன மக்களுடன் ஆழமாக பழகினார். அவர் பணிபுரிந்த சீனாவுக்கான இந்திய மருத்துவக் குழுவின் உறுப்பினர்களும் சீன மக்களின் நம்பமான நண்பர்களாவர். மருத்துவக் குழுவில் மூத்த மருத்துவர் B.K.Basu நாட்டுக்குத் திரும்பிய பின் சீனா பற்றி பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வெளியிட்டார். மருத்துவக் குழுவின் தலைவர் திரு M.Atal அவர்களும் நாட்டுக்குத் திரும்பிய பின் பல்வேறு இடங்களில் இந்திய மக்களுக்கு சீன மக்களின் விடுதலை லட்சியம் பற்றி பரப்புரை செய்தார். சீனாவை மேலும் கூடுதலாக அறிந்து கொள்ளும் வகையில் அவர் இந்திய மக்கள் குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு உதவி செய்தார். மருத்துவர் M.Atalவின் பேரன் Navin Atal குழந்தை காலத்திலிருந்தே தாத்தாவின் பாதிப்பில் வளர்ந்தார். இது அவருக்கு பெருமை. அவர் கூறியதாவது.

குழ்தைக்காலத்தில் இருந்த போது நான் மருத்துவர் ஷந்தாராம் கோட்னிஸ் வாழ்க்கைப் பின்னணியை நன்றாக அறிந்து கொண்டேன். மருத்துவக் குழு அதன் கடமையை முடித்த பின் அவர் தனியாக சீனாவில் தங்கியிருந்ததோடு சீனப் பெண்ணை திருமணம் செய்தார். அவர் குழந்தை பெற்றார். அவரது முழு வாழ்க்கையும் அவரது உயிரும் சீனாவின் விடுதலை லட்சியத்துக்காக அர்பணிக்கப்பட்டன. இரு நாட்டு நட்புக்கு அவர் மாபெரும் பங்கு ஆற்றினார் என்று மருத்துவர் நவீன் அட்டல் தெரிவித்தார்.

இந்தியாவில் சீனாவுக்கான இந்திய மருத்துவக் குழு மற்றும் மருத்துவர் ஷந்தாராம் Kotnisஇன் பெயர்கள் புகழ் பெற்றவை. இந்திய நோய் கட்டுப்பாட்டுக் கழகத்தின் ஆய்வு முனைவர் Ravi Dharon மருத்துவர் ஷந்தாராம் கோட்னிஸ் இன் மகத்தான வாழ்க்கையை மிகவும் பாராட்டுகிறார். இந்தியாவிலான மருத்துவர் ஷந்தாராம் Kotnisஇன் செல்வாக்கு பற்றி குறிப்பிட்ட போது அவர் கூறியதாவது.

அவர் இந்தியாவில் உயர்வாக மதிப்பிடுகிறார். அவருடைய கதையை அனைத்து இந்தியர்களும் அறிந்து கொண்டுள்ளனர். இரு நாட்டுறவுக்கு அவர் சிறந்த பங்காற்றினார். தற்போதைய இளைஞர்கள் அவருடைய வாழ்க்கை வரலாற்றை அவ்வளவு அறிந்து கொண்டிருக்கவில்லை என்பது வருத்தம் தான். ஆகவே பத்து சர்வதேச நண்பர்கள் தேர்வு செய்யும் நடவடிக்கை மருத்துவர் ஷந்தாராம் கோட்னிஸ் இன் சர்வதேச எழுச்சியை மேலும் அதிகமானவர்கள் அறிந்து கொள்ள துணை புரியும் என்று அவர் கூறினார்.

தற்போது இந்தியாவின் பெங்களூருவில் வெளிநாட்டுச் செய்தியேட்டில் பணிபுரிகின்ற திரு பஃரூக் கூறியதாவது: எமது செய்தி ஊடகங்கள் சீன-இந்திய உறவில் மிகவும் கவனம் செலுத்துகின்றன. ஆனால் சில நுண்ணுணர்வுடைய கூற்றுகள் அடிக்கடி தோன்றுவது வருத்தமான விடயமாகும். இந்த நிலைமையில் மருத்துவர் ஷந்தாராம் கோட்னிஸ் இன் மகத்தான எழுச்சியை வெளிக்கொணரப் பாடுபடுவது மிகவும் முக்கியமாக காணப்படுகின்றது என்று அவர் கூறினார்.

மருத்துவர் ஷாந்தாராம் கோட்னிஸ் மற்றும் சீனாவுக்கான இந்திய மருத்துவ குழுவின் எழுச்சியை தொடர்ந்து வெளிக்கொணரும் வகையில் சீனாவும் இந்தியாவும் 2008ம் ஆண்டில் கூட்டு மருத்துவக் குழு என்ற ஒன்றுக்கு ஒன்று உதவும் நடவடிக்கையை மேற்கொண்டன. திறமைமிக்க இளம் மருத்துவர்கள் இடம் பெறும் கூட்டு மருத்துவ அணிகள் ஒன்று மற்ற தரப்புக்கு அனுப்பப்பட்டன. வறிய பிரதேசங்களுக்கு இந்த குழுக்கள் சென்று அங்கு வாழும் மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தன. இந்திய மருத்துவர் எஸ் அனுராதா குழுவுடன் சீனாவின் ஹொபெய் மாநிலத்தின் தாங் மாவட்டத்துக்கு சென்று இலவச சிகிச்சையில் பங்கு எடுத்தார். இந்த அனுபவத்தை மீளாய்வு செய்யும் போது அவர் கூறியதாவது.

நான் இந்திய மருத்துவக் குழுவுடன் சேர்ந்து பெய்சிங், சிச்சுவான், தான் மாவட்டம் முதலிய இடங்களுக்குச் சென்றேன். மருத்துவர் ஷாந்தாராம் கோட்னிஸ் அப்போது தங்கியிருந்த இடத்தை பார்வையிட்டேன். அங்குள்ள மக்களை சென்று பார்த்தேன். அவர்கள் மிகவும் உற்சாகத்துடன் எங்களை உபசரித்தனர். சீனப் பயணம் எங்கள் மனதில் அருமையாக பதிந்துவிட்டது என்று அவர் கூறினார்.

சீன மக்களுக்கு சிகிச்சை சேவையளித்த போது சீனா பற்றி அனுராதா ஆழமாக அறிந்து கொண்டார். அவரும் சீன மருத்துவர்கள் மற்றும் சீன மக்களுடன் ஆழ்ந்த நட்பை உருவாக்கினார். மருத்துவர் என்ற முறையில் அவர் மருத்துவர் ஷந்தாராம் கோட்னிஸ் இன் அனுபவங்களை பின்பற்றி சீன-இந்திய நட்புக்கு பங்கு ஆற்றும் விருப்பத்தை தெரிவித்தார்.

 

Home /Page -1 /Page-2 / Page -3 / Page-4 / Page-5 / Page-6 /Page-7 /

wanni

ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கும், 1970 பொதுத் தேர்தல் முடிவுக்கும் உள்ள ஒத்த தன்மைகள்!

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தெரிவித்திருக்கு ம் செய்திதான் என்ன?