a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தீர்ப்பு
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்    மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்          மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்       தேனகம்             தென்றல்            அம்மான்         வாவிமகள்    தமிழ்நியூஸ்வெப்


Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr            srilankan-diaspora.org/
 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           07.05.2009

சோசலிச நாடுகளும், உலக கம்யூனிஸ்ட் இயக்கமும் புலிகளின் பாசிசத் தன்மையை நன்கு இனங் கண்டுள்ளன!

கார்த்திதாசன்

புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைக்கு, சீனா தனது ஆதரவை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கையின் யுத்த நிலவரம் சம்பந்தமாக, அமெரிக்கப் பின்னணியில் சில நாடுகள் விவாதிக்க முற்பட்டபோது, சோசலிச நாடுகளான சீனா, வியட்நாம் என்பனவும், முன்னாள் சோசலிச நாடான ரஷ்யாவும்  எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன், தமது ‘போராட்டம்  பற்றி விளக்குவதற்கு சந்தர்ப்பம் தருமாறு சீன அரசைக் கேட்டிருந்தார். அதேவேளையில் கனடாவிலுள்ள புலி ஆதரவாளர்கள் சிலர், அங்குள்ள சீன, ரஷ்ய தூதரகங்களுக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்தனர். இரண்டு தடவைகள் சீனத் தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டபோதிலும், இரண்டு டசின் ஆட்கள் அளவிலேயே அதில் பங்குபற்றினர்! புலிகளின் இந்த ஆத்திரமூட்டும் செயல்பாடு, சீனாவில் வாழ்கின்ற 130 கோடி மக்களையும், கனடாவில் வாழ்கின்ற 30 லட்சம் சீன மக்களையும் ஆத்திரமூட்டும் ஒரு செயலாக இருந்தபோதிலும், அந்த மக்கள் பெருந்தன்மையுடன் அமைதி காத்தனர். உலக நாடுகளும் மக்களுமே புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் திரண்டு நிற்கையில், அதில் சோசலிச நாடுகள் தான் முன்னணியில் நிற்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத கபோதிகளாக புலிகள் நிற்பது ஆச்சரியகரமான ஒன்றல்ல.
 
சோசலிச நாடுகளும் சரி, உலக கம்யூனிஸ்ட் இயக்கமும் சரி, ஒவ்வொரு நாடுகளிலும் நடைபெறும் அரசியல் போராட்டங்கள் பற்றி எப்பொழுதும் தெளிவானதும், சரியானதுமான ஒரு நிலைப்பாட்டையே எடுத்து வந்துள்ளன. அவ்வாறே இலங்கையில் புலிகள் நடாத்தும் யுத்தம் பற்றியும், ஒரு தெளிவான நிலைப்பாட்டையே அவைகள் கொண்டுள்ளன. புலிகள், தமிழ் மக்கள் சார்பாக அந்த யுத்தத்தை நடாத்தவில்லையென்பதையும்,  தமது சர்வாதிகார ஆட்சியொன்றை அங்கு நிறுவவே போரிடுகின்றனர் என்பதையும் அந்த நாடுகள் மிகத் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளன. அதுமட்டுமல்ல, தமிழ் மக்கள் மத்தியிலிருந்த மாற்று இயக்க போராளிகளையும், அரசியல் தலைவர்களையும், பொதுமக்களையும் புலிகள் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்து பயங்கரவாதம் புரிந்துள்ளனர் என்பதும், சீனா போன்ற நாடுகளுக்கு தெரியாத விடயமல்ல. புலிகளும் சரி, புலிகளுக்கு முன்னர் இருந்த பிற்போக்குத் தமிழ்த் தலைமைகளும் சரி, ஏகாதிபத்தியத்துடனும், பிற்போக்கு ஐ.தே.கவுடனும் எப்பொழுதும் கூட்டுச் சேர்ந்தே செயல்பட்டு வந்துள்ளனர் என்பதும் அந்நாடுகளுக்குத் தெரியும்.
 
அத்துடன் சீன எதிர்ப்பு என்பது, இலங்தைத்தமிழ் தலைமைகளின் இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று என்பதும் மறைக்க முடியாத ஒரு உண்மையாகும். 1962ல் சீன - இந்திய எல்லையில் யுத்தம் ஒன்று ஆரம்பமான போது, தமிழரசுக்கட்சி சீனாவுக்கு எதிரான மோசமான பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டது. அது ‘சீனர்கள் பாம்பு தின்னிகள்’ என்று கேவலமான பிரச்சாரம் வரை சென்றது. (இப்பொழுதும் புலம்பெயர் நாடுகளில் சீன மக்களுடன் வெள்ளையின மக்களும் ஏனையோரும் மதிப்புடன் பழகுகையில், இலங்தைத்தமிழர்கள் மட்டும் சீனர்களை ‘சப்பட்டைகள்’ எனக் கேலியாகவே அழைத்து வருகின்றனர். இவ்வாறே சிங்களவர்களை மோட்டுச் சிங்களவன் என்றும், முஸ்லீம்களை தொப்பி பிரட்டி என்றும், இந்திய வம்சாவளித்தமிழர்களை வடக்கத்தையான் என்றும், தலித் சமுகத்தினரை அவர்களின் சாதியின் பெயராலும் மேற்குடி இலங்தைத்தமிழர்கள் கேலி செய்வது தெரிந்ததே.) அந்த நேரத்தில் தமிழரசுக்கட்சி தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் மகன் சந்திரகாசன், கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த முயன்று, கொழும்பு துறைமுகத் தொழிலாளர்களால் அடித்து விரட்டப்பட்டார். 1960களில் யாழ் குடாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமைக்கு எதிராகப் போராடியபோது, தமிழ்த் தலைமைகள் அதற்கெதிராகச் செயல்பட்டன. ஆனால் சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு அந்தப் போராட்டத்துக்கு ஆதரவான செய்திகளை ஒலிபரப்பியது. அதைக்கண்டு பொறுக்காத ஐ.தே.க அரசில் அன்று அமைச்சராக இருந்த தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த மு.திருச்செல்வம், தமிழர்கள் மத்தியில் சாதி ஒடுக்குமுறை இருப்பதை சீனா உலகிற்கு அம்பலப்படுத்தி, தமிழர்களை ‘அவமானப்படுத்தி’ விட்டதாகக் கூக்குரல் போட்டார்.
 
1971ல் ஜே.வி.பியின் முதலாவது ஆயுதக்கிளர்ச்சி நடாந்தபோது, அந்தக் கிளர்ச்சியுடன் சோசலிச நாடுகளான சீனாவையும், வட கொரியாவையும் சம்பந்தப்படுத்தி ஐ.தே.க பிரச்சாரம் மேற்கொண்டது. அப்போது நடைமுறையில் இருந்த மூதவையில் (செனட் சபை) ஐ.தே.க செனட்டர் சோமரத்ன, இ.தொ.கா செனட்டர் ஜேசுதாசன் ஆகியோர் அந்தக் கிளர்ச்சியுடன் சீனாவை சம்பந்தப்படுத்தி உரையாற்றிய போது, அதில் தமிழரசுக்கட்சி செனட்டர் திருச்செல்வமும் கலந்து கொண்டார். தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் போது, சங்கானையில் நிச்சாமம் கிராம மக்கள் அதில் முன்னணியில் நின்ற போது, அந்தத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அ.அமிர்தலிங்கம், ‘சீனசார்பு கம்யூனிஸ்ட்டுகள் சங்கானையில் ஒரு ஷாங்காயை உருவாக்க முயற்சிக்கிறார்கள்’ என பகிரங்கமாகவே பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டி, சீன எதிர்ப்பு வாந்தி எடுத்து, அந்தப் போராட்டத்தில் தேவையில்லாமல் சீனாவை சம்பந்தப்படுத்த முயன்றார். இப்படிப் பல விடயங்கள் தமிழரசுக்கட்சியின் சீன எதிர்ப்பு, சோசலிச எதிர்ப்புக்கு உதாரணங்களாக உள்ளன. தமிழரசுக்கட்சியின் பிரச்சார ஊதுகுழலாக செல்வநாயகத்தால் நடாத்தப்பட்ட,  ‘சுதந்திரன்’ பத்திரிகையின் இதழ்களை எடுத்துப் பார்த்தால், தமிழரசுக்கட்சி தொடர்ச்சியாக நடாத்தி வந்த சீன எதிர்ப்பு, சோசலிச எதிர்ப்பை ஒருவர் கண்டுகொள்ள முடியும்.
 
மிக அண்மையில் கூட ஏகாதிபத்திய ஆதரவுடன், பிற்போக்குவாதியும் பிரிவினைவாதியுமான தலாய்லாமா, திபெத்திலும், உலகின் பலபாகங்களிலும் சீன அரசுக்கு எதிராகக் கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்ட போது, புலம்பெயர் நாடுகளிலுள்ள புலிகளின் அனைத்து ஊடகங்களும் அதற்கு ஆதரவாகவே செய்திகளை வெளியிட்டன. அதுமட்டுமல்ல கனடாவின் ரொறன்ரோ நகரிலும், சென்னையிலும் புலிகள் நடாத்திய ஊர்வலங்களில் புலிகளின் ஆதரவாளர்களும், தலாய்லாமாவின் ஆதரவாளர்களும் வெளிப்படையாகவே கைகோர்த்துச் சென்றனர். புலிகளுடன் வேறு எந்த நாட்டுப் பிரஜையும் கைகோர்த்துச் சென்றது கிடையாது என்ற சூழ்நிலையில், பிரபாகரன் - தலாய்லாமா உறவை சீனா எப்படி விளங்கிக் கொள்ளும் என்பதைப் புரிந்துணரும் ஆற்றல் புலிகளுக்குக் கிடையாது என்பதே உண்மையாகும்.
 
சீனா மட்டுமல்ல, உலகின் ஏனைய சோசலிச நாடுகளான வியட்நாம், கியூபா, வடகொரியா என்பனவும் புலிகள் ஒரு விடுதலை இயக்கமல்ல அது ஒரு பாசிச இயக்கம் என்பதை நன்கு புரிந்தே உள்ளன. வெனிசுவேலா, நேபாளம், லாவோஸ் போன்ற புதிய ஜனநாயக ஆட்சிகள் நடைபெறும் நாடுகளும் புலிகளை ஆதரிக்கத் தயாராக இல்லை. இந்தியாவில் மூன்று மாநிலங்களில் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் புலிகளுக்கு எதிராகவே உள்ளது. சுருங்கக் கூறின் உலகின் ஐந்து கண்டங்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்ட் கட்சிகளில், எந்தவொரு கட்சியும் புலிகளுக்கு ஆதரவாக இல்லை என்பதே யதார்த்த நிலவரமாகும். உலக கம்யூனிஸ்ட் இயக்கம் புலிகளை ஒரு பிற்போக்குவாத, பாசிச, பயங்கரவாத இயக்கமாகவே பார்க்கின்றது. அதன் காரணமாகவே இலங்கையில் மகிந்த ராஜபக்ச தலைமையில் உள்ள, ஓரளவு ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஜனநாயக அரசாங்கத்தை சோசலிச நாடுகளும், உலக கம்யூனிஸ்ட் இயக்கமும் ஆதரித்து நிற்கின்றன.

 

China backs Sri Lankan fight against LTTE

BEIJING: China on Tuesday came out in support of the Sri Lankan government’s efforts to wipe out the Liberation Tigers of Tamil Eelam and apprehend its leader V. Prabakaran. It also backed the decision of the Nepal's Prime Minister Pushpa Kamal Dahal, Prachanda, to induct Maoist forces in the country’s army.

“Both Nepal and Sri Lanka are friendly to China. We support the efforts of their governments to safeguard national integrity while ensuring security and political stability,” Jiang Yu, spokeswoman for the Chinese foreign ministry said at a press briefing. She was responding to a question about the end of the 24 hour deadline for surrender given to Prabhakaran by the Sri Lankan government.

The statement comes at a time when relationship between China and Nepal has become stronger than ever before. China recently promised to enhance its annual assistance to Nepal by 50 per cent to 150 million yuan ($23 million). It is also considering investing in hydropower projects in the Himalayan kingdom bordering India.

Beijing is also pushing the international community to enhance financial support to help Somalia sort out its political problems and tackle the menace of pirates, who have been harassing foreign ships sailing past the country/ China is among the countries who have sent war ships to counter the challenge posed by the pirates.

"We expect positive outcome from the international donors’ conference on Somalia so as to provide substantive support for the Somali political process," Jiang said while referring to an international donor’s conference in Brussels on Wednesday and Thursday which would gather representatives from the United Nations, the African Union and the European Union.

Courtesy:

http://timesofindia.indiatimes.com/World/South-Asia/China-backs-Sri-Lankan-fight-against-LTTE/articleshow/4430507.cms

Page-1/ Page-2/ Page-3/ page-4/ page-5

flee-40

பொறுப்புள்ள புதிய தமிழ் அரசியல் தலைமை?

BBC Tamil
rupavahini

ரூபவாகினி செய்திகள்

_DSC8589

புலிக்கொடி ஈழத்தமிழர்களின் கொடியா?

சோசலிச நாடுகளும், உலக கம்யூனிஸ்ட் இயக்கமும் புலிகளின் பாசிசத் தன்மையை நன்கு இனங் கண்டுள்ளன!

புதுமாத்தளனில் உடைந்தது மண் அணை மாத்திரமல்ல

இந்தியா மீண்டும் தவறிழைக்கிறதா?

வன்னியில் இருந்து யுத்த அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்த எமது உறவுகளுக்கு உதவிடுவீர்!