|
யாழ்குடாநாட்டுக்கான குடிநீர்த் தேவைக்கு இரணைமடு குளத்திலிருந்து நீர்
இன்னும் ஐந்து ஆண்டுகளில் யாழ். மாவட்டம் நன்னீர் குடி தண்ணீருக்காக பெரும் கஷ்டத்தினை எதிர்நோக்கி - நெருக்கடிக்கு உள்ளாகவுள்ளது.
நன்னீர் குடிதண்ணீரை தேடி மக்கள் கிராம - நகர இடம்பெயர்வும், நகர - கிராம இடம்பெயர்வும் விரைவில் மாறிமாறி ஏற்படவுள்ளது.
மேற்படி அபாய அறிவிப்பினை தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் தகவல் வெளியிட்டுள்ளது.
நிலத்தடி நன்னீர் வளங்கள் மிக மோசமான அளவில் வறட்சி தன்மை அடைந்து வருகின்றது.
யாழ். மாவட்டத்தில் கோடை காலத்தில் 12,885 கன மீற்றர் தண்ணீரும் மாரி காலத்தில் 34,960 கன மீற்றர் தண்ணீருமாக பெறப்படுகின்றது.
இத்தண்ணீர் தேவையானது மொத்த தேவையில் 30 வீதம் கூட மக்களுக்கு சென்றடையவில்லை.
யாழ். மாவட்டம் வளர்ச்சி - அபிவிருத்தி அடைந்த நிலையில் 2028 ஆம் ஆண்டில் 88,500 கனமீற்றர் தண்ணீரை குடிப்பதற்கு ஒருநாளுக்கு மட்டும் தேட வேண்டும்.
அதே நேரம், 2058 இல் 177,740 கனமீற்றர் குடிதண்ணீர் மிக அவசரமாக தேவைப்படும் நிலை ஏற்படவுள்ளது.
இதனைவிட விவசாயம், கைத்தொழில் ஆகிய தேவைகளுக்கான தண்ணீர் தேவை குறித்து இங்கு ஆய்வு செய்யப்படவில்லை.
பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாக வேண்டிய பிரதேசமான ஊர்காவற்றுறை, சுன்னாகம், பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு, சாவகச்சேரி, பளை ஆசிய பிரதேசங்களின் நீர் நிலைகள் பற்றியே முதலில் ஆராயப்பட்டு வருகின்றது.
இவ் ஆய்வில் வடக்கு மாகாண தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் உதவி பொது முகாமையாளர் பொறியியலாளர் தி. பாரதிதாசன் முழுமையாக ஈடுபட்டுள்ளார்.
இன்று யாழ். மாவட்டம் பரந்த - பிரதேச ஏற்படுத்தும் நீர் நிலைகளாக மாறி வருகின்றது.
குறிப்பாக விவசாய செய்கைக்கு பயன்படுத்தப்படும் உரப்பாவனைகள், உவர் (கடல்) நீர் உட்புகுதல், மனிதன் மற்றும் மிருகங்களின் மலகழிவுகளால் நிலத்தடி நீர் மிக மோசமாக பாதிப்பை கண்டுவிட்டது.
இந்நிலையில் சுத்தமான குடிதண்ணீரை யாழ். மாநகர மக்களும் அதனை அண்டிய பிரதேச மக்களும் பெற்று சுகவாழ்வு வாழ வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை வெளிப்பாட்டின் ஊடாக உணரப்பட்ட ஒன்றே கிளிநொச்சி, இரணைமடு குள மேற்பரப்பு நீரை வழங்குவது சிறந்தது என முதலில் வடக்கு மாகாண உதவி பொதுமுகாமையாளர் பொறியியலாளர் தி. பாரதிதாசன் அவர்களால் திட்டம் முன்மொழியப்பட்டு ஆய்வுகற்கைகள் முன்வைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டது.
மேற்படி நன்னீர் குடிதண்ணீர் திட்டம் வழங்கல் தொடர்பாக ஏனைய வெளிநாட்டு நீர் வழங்கல் பொறியியலாளர்களின் ஆலோசனை பெறப்பட்டு எண்ணக்கரு பத்திரம் பல மில்லியன் அமெரிக்க டொலருக்கு மதிப்பீடு செய்யப்பட்டு முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து 2006 இல் இருந்து ஆய்வு செய்த உலக வங்கி குழுவினர் மேற்படி திட்டம் செயலுருப் பெறக்கூடிய சாத்தியம் உண்டா? இதன் மூலம் வடபகுதி மக்களின் முழுமையான குடிதண்ணீர் தேவை நிறைவு பெறுமா என்பதுடன் கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு முழுமையாக கிடைத்த பின்னர் உள்ள,
மீதமான குடிதண்ணீரை யாழ். மாவட்ட மக்களுக்கு வழங்க முடியுமா என்ற ஆய்வு பூர்த்தியானது.
இதனையடுத்து ஆசிய அபிவிருத்தி வங்கி குழுவினர் உடனடியாக சில சிபார்சுகளை வழங்கினர். அதில்;
o இரணைமடு உள்வாங்கு கட்டமைப்பு சீரமைப்பு
o இரணைமடு குளத்தின் அணைக்கட்டமைப்பு திருத்தங்கள்
o சுத்திகரிக்கப்படாத நீர் இறைக்கும் நிலைய மற்றும் நீர் இறைக்கும் குழாய் அபிவிருத்தி
o நாளொன்றுக்கு சராசரியாக 27,000 கன மீற்றரை சுத்திகரிக்கும் வேலைத்தளம்
o சுத்திகரிக்கப்பட்ட நீரை யாழ்ப்பாணத்திற்கு வழங்கும் குழாய்கள்
o நீர் இறைக்கும் நிலையங்களும் மற்றும் காரைநகர், ஊர்காவற்றுறை, புங்குடுதீவு, மண்டைதீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு என்பனவற்றுக்கான நீர் செலுத்து குழாய்கள்
o பாரிய நீர்த்தாங்கி கோபுரம் அமைத்தல் என்ற சிபார்சுகளை செய்தது.
அத்துடன்,
o யாழ். மாநகர சபைக்கான மலசல கழிவு நீரகற்றும் திட்டத்தை அமுல்படுத்தல்
o கழிவு நீர் சுத்திகரிப்பு வேலைத்தளமும் - சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை கடலுக்குள் செலுத்துதல்.
o மலக்கழிவினை உரமாக்கும் முறையைத் தழுவிய மலகூடங்களை அமைக்க ஊக்கமளித்தல், உதவுதல்.
o மாநகர - பிரதேச திண்ம கழிவுகளை முறைப்படி அகற்றல்.
o வறிய குடும்பங்களுக்கும் வீட்டு நீரிணைப்புக்கு உதவி செய்தல்
இவ்வாறான பிரச்சினைகள் வட பகுதிகளில் விரைவில் தீர்த்து வைக்க உள்ளூராட்சி சபைகள், நீர்ப்பாசன திணைக்களங்கள், தேசிய நீர் வழங்கல் சபைகள் என்பன விழிப்புடன் செயலாற்ற துணிந்து விட்டன.
இவ்வாறு செயற்படுவதன் ஊடாக வறுமை ஒழிப்பு, நீர் பெறுவதற்கான நேரம் மீதப்படுத்தப்படும். நீரினால் ஏற்படும் நோய் அபாயம் குறைந்து சுகாதாரம் மேம்பாடு அடையும்.
எனவே, இத்திட்டம் முழுமையடைந்து 2010 ஏப்ரலில் இரணைமடு குளம் ஊடான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு வெற்றியடையும் போது,
இரணைமடு குளத்தில் இருந்து மாதத்திற்கு சராசரியாக 1250 ஏக்கர் அடி (நாளொன்றுக்கு 50000 கன மீற்றர்) நீரை பெறுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும்.
மேலும் கட்டம் 1 இன் கீழ் யாழ்ப்பாணம், பளை, கொடிகாமம், சாவகச்சேரி, நாவற்குழி, கோப்பாய், ஆனைக்கோட்டை, நவாலி, சண்டிலிப்பாய், மூளாய் மற்றும் தீவு பகுதிகளுக்கு நீர் வழங்கப்படும்.
மேலதிக நீர், கண்டுபிடிக்கப்படும் ஏனைய பிரதேசங்களுக்கு வழங்கப்படும். மேலும் கட்டம் 1, நிலை 1 இன் கீழ் ஒரு நாளைக்கு சராசரியாக 27000 சீ3 நீர் வழங்கப்படும்.
இவ்வாறாக நீர் நிலைகள் பேணப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும் அதேவேளை குடிப்பதற்கு பயன்படும் நீரை அளவோடு சேமித்து பயன்படுத்துவதும்,
விவசாய தேவைப்பாட்டு நீரை முற்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தொழில் நுணுக்கு முறைகளை பயன்படுத்துவதன் ஊடாக பயன்படுத்தி அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
இதேவேளை, இன்று கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பொக்கணை நீர்த் திட்டத்திலிருந்தும் - சுன்னாகம் நீர்த் திட்டத்தில் இருந்தும் - கந்தரோடை, சங்குவேலி, கட்டையூடாக 100 வருடங்களுக்கு பின்னர் நன்னீர் குடிதண்ணீர் நவாலி கிராமத்திற்கு வழங்கப்படவுள்ளது. இது தொழில் நுட்பத்தின் ஓர் புரட்சியுமே ஆகும்.
நவாலியூர் செ. ரமேஷ் ணி.தி (பொருளாதாரம், அபிவிருத்தி) (தினகரன் விசேட நிருபர்)
-(தினகரன் -
|