a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                           09.04.2010

தலைசிறந்த தளபதியென புகழ்ந்துவிட்டு எனது கணவனை "முட்டாள்  என்பதா? ஸ்ரெய்ட் ரைம்ஸ் பேட்டி குறித்து அனோமா கவலையுடன் ஜனாதிபதிக்குக் கடிதம்

 தனது கணவர் அரசியல் தெரியாத முட்டாள் எனவும் அவருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாதெனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிங்கப்பூர் "ஸ்ரெய்ட் ரைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கும் கருத்துகளுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தங்களின் கோழைத்தனமான முடிவுகளுக்காகத் தனது கணவர் ஒருபோதும் காலடியில் விழுந்து மன்னிப்புக் கோரமாட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

அனோமா பொன்சேகா நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள கடிதமொன்றிலேயே மேற்கண்டவாறு விசனத்தை வெளியிட்டிருக்கிறார்.நீதி விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னரேயே அவருக்கான தீர்ப்பை எழுதியிருப்பது புதுமையானதொரு விடயம் எனவும் அனோமா பொன்சேகா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது;

சிங்கப்பூரில் வெளியாகும் ஸ்ரெய்ட் ரைம்ஸ் பத்திரிகைக்கு நீங்கள் அளித்த பேட்டி விபரம் இலங்கை ஊடகங்களில் வெளியானதை என்னால் பார்க்க முடிந்தது. அந்தப் பேட்டியில் எனது அன்புக் கணவரான ஜெனரல் சரத் பொன்சேகா "அரசியல் அனுபவமில்லாத முட்டாள் எனத் தெரிவித்திருப்பதைக் கண்டு நானும் எனது குடும்பமும் கவலையும் வேதனையும் அடைந்தோம். இவ்வாறு கூறியிருப்பது பத்து மாதங்களுக்கு முன்னர் அவர் உலகின் மிகச்சிறந்த இராணுவத் தளபதி என்று புகழாரம் சூட்டியது நீங்கள் தானா என்று நான் வியப்படைகின்றேன்.

புலிப் பயங்கரவாதத்திடமிருந்து எமது மண்ணை மீட்டெடுத்ததன் பின்னர் நீங்களும் உங்கள் அரசும் நிமிடத்துக்கொரு தடவை என்ன கூறினீர்கள். எமது படைகளுக்குத் தலைமைத்துவத்தைக் கொடுத்த இராணுவத் தளபதியின் புத்திசாதுர்யமான போர்த்திட்டம் குறித்து முழு நாடுமே பெருமைகொள்வதாக அல்லவா சொன்னீர்கள். அன்று போர் வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் வெற்றிக் கேக்கை வெட்டுவதற்காக உரிமையானவர் ஜெனரல் சரத்பொன்சேகாவே என்று பகிரங்கமாகக் கூறி அவரைக்கொண்டே கேக்கை வெட்டியதையும் மறந்துவீட்டீர்களா? இன்று யுத்த வெற்றியின் சூடு தணிவதற்குள் அவை அனைத்தும் மறக்கப்பட்டவையாகிப் போயுள்ளன.

எனது கணவர் நீங்கள் சொல்வது போன்று அரசியல் தெரியாதவர் என்றால் அவ்வாறான ஒருவருக்குப் பயந்து சட்டவிரோதமாக கைது செய்து தடுத்துவைத்துப் பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தியிருப்பது எதற்காக எனக் கேட்க விரும்புகின்றேன். இதனை என்னால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது.

30 வருடங்களாக இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் அழிவுப் பாதைக்குள் இட்டுச் சென்ற யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து சுதந்திரத்தையும் இறைமையையும் பாதுகாக்க தலைமைத்துவம் கொடுத்த ஒரு இராணுவ வீரரை சர்வதேச ஊடகத்தினூடாக முட்டாள் என அபகீர்த்திக்குள்ளாக்குவதானது நாட்டின் ஜனாதிபதிக்கு உகந்த செயலா என்று எண்ணிப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனது கணவருடன் அவரது ஆதரவாளர்களையும் கைதுசெய்தது தங்களுக்கும் அரசுக்கும் எதிராக அரச விரோதச்சதி செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இன்று அந்த ஆதரவாளர்கள் சகலரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சதிக்குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனினும் எனது கணவரைத் தொடர்ந்து சிறைப்படுத்தி வைத்திருப்பதன் மூலம் ஜனாதிபதித் தேர்தல் வாக்குக் கொள்ளையைப் பகிரங்கப்படுத்தி எதிர்வரும் பொதுத்தேர்தலில் உங்கள் அரசாங்கத்தைத் தோற்கடிப்பார் என்ற அச்சம் காரணமாகவே அன்றி வேறெதுவும் இருக்கமுடியாது.

"ஸ்ரெய்ட் ரைம்ஸ்%27 பத்திரிகைப் பேட்டியின்போது அந்த பத்திரிகை கேட்ட ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டு என்ன? என்பதற்கு அதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய பதிலை உங்களால் அளிக்க முடியாது போனது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களாக இருந்து அரந்தலாவை பிக்குகளைப் படுகொலை செய்த, ஸ்ரீ மகாபோதி முன்பாக பக்தர்களைச் சுட்டுக்கொன்ற, தலதா மாளிகை போன்ற வரலாற்றுப் புகழ்மிக்க வழிபாட்டுத் தலங்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்திய கருணா அம்மான், பிள்ளையான், தயா மாஸ்ரர், ஜோர்ஜ் மாஸ்ரர் போன்றோருக்கு உயர் பதவிகளும் வசதி வாய்ப்புகளும் வழங்கி கே.பி. போன்றோருக்கு சொகுசு மாளிகையும் பெற்றுக்கொடுத்துள்ளீர்கள்.

நாட்டைக் காப்பதற்காக யுத்தம் புரிந்த தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதலுக்குள்ளாகி மரணத்தின் வாசலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய எனது கணவருக்கு மன்னிப்பு வழங்கப்போவதில்லை என்று கூறுவதையிட்டு நான் ஆச்சரியப்படவில்லை.

இன்று எனது கணவருக்கு நீங்கள் இழைக்கும் கொடுமைகள் உங்கள் மனச்சாட்சியை என்றாவது உறுத்தாமல் விடாது என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றேன். நாட்டுக்காக தியாகங்கள் பலவற்றைச் செய்த ஒரு வீரத்தளபதி இவ்வாறான கொடுமைகளுக்குள்ளாக்கப்படுவது உலகில் வேறெங்கும் இருக்கமுடியாது.  இந்தத் தமிழ் சிங்களப் புதுவருடத்தை முழு நாடும் ஒன்றுபட்டுக் கொண்டாட வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தவர் எனது கணவரே. நீங்களும் உங்கள் குடும்பமும் இம்முறை சந்தோஷமாகப் புதுவருடத்தைக் கொண்டாடுவீர்கள். நானும் எனது குடும்பமும் தனிமைப்பட்டுள்ளோம். எனது கணவர் இருட்டறைக்குள் அடைக்கப்பட்ட நிலையில் மனவேதனையுடனிருக்கிறார். இந்தத் துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்தியவர் நீங்களேதான். இந்தப் பாவத்துக்கு உங்களால் ஒருபோதும் பரிகாரம் தேடமுடியாது.

ஜனாதிபதி அவர்களே; நீங்கள் "ஸ்ரெய்ட் ரைம்ஸ்%27 பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பொன்சேகாவுக்கு முற்கூட்டியே மன்னிப்பளிக்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் நீங்கள் சுயாதீனமான நீதித்துறை இருப்பதாகக் கூறும் நாட்டில் வழக்குத் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் வழக்கின் பிரதிவாதிக்கு மன்னிப்பு வழங்கமுடியாது என்று கூறுவதன் மூலம் எனது கணவருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை நீங்களே எழுதியுள்ளீர்கள் என்பது புலனாகிறது.

அது எவ்வாறாக இருந்தபோதிலும் எனது கணவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒருபோதும் உங்கள் காலடியில் வீழ்ந்து மன்னிப்புக்கோரப் போவதில்லை என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றேன். ஏனெனில், அவர் ஒருபோதுமே தண்டிக்கப்படக்கூடிய எந்தக் குற்றத்தையும் செய்யாதவர் என்பதனாலேயே ஆகும்.

 

Home / Page-2 / Page-3 / Page-4 / Page-5

wanni

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!