a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                           09.04.2010

இலங்கையில் கண்ணி வெடிகளை அகற்ற இந்தியாவுக்கு ரூ.​ 18 கோடி செலவு

landmineகொழும்பு,​​ மார்ச் 23: இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளுக்காக இந்தியா ரூ.​ 18 கோடி செலவிட்டுள்ளது.

​ இந்த தகவலை இந்தியத் தூதரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

​ விடுதலைப்புலிகளை எதிர்த்து இலங்கை ராணுவம் மேற்கொண்ட சண்டை கடந்த ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது.​ விடுதலைப் புலிகள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

​ இந்த சண்டையின்போது வடக்கு,​​ கிழக்கு பகுதிகளில் வசித்த தமிழர்களை,​​ இலங்கை ​ அரசு சிறப்பு முகாம்களுக்கு மாற்றியது.

​ போர் முடிவுக்கு வந்ததால்,​​ முகாம்களில் வசிக்கும் தமிழர்களை அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்தும்படி இலங்கையை இந்தியா வலியுறுத்தி வருகிறது.​ முகாமில் உள்ளவர்கள் அனைவரையும் சொந்த இடங்களுக்கு உடனடியாக அனுப்பிவிடமுடியாது,​​ வடக்கு,​​ கிழக்குப் பகுதிகளில் புலிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடிகளை முழுமையாக அகற்ற வேண்டியிருப்பதால் தாமதம் ஏற்படும் என்று இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்திருந்தார்.

​ தற்போது இந்தியாவின் துணையுடன் கண்ணிவெடி அகற்றப்படுகிறது.​ முகாம்களில் உள்ளவர்களில் பெரும்பான்மையானோர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.​ ​ ​ ​ ​

​ ​ கண்ணிவெடி அகற்றும் பணியில் இந்தியாவிலிருந்து 7 குழுக்கள் ஈடுபட்டுவருகின்றன.​ இந்த குழுக்கள் பணியாற்றிவரும் ஓடுசுட்டான்,​​ கதாலியர்ஸ்,​​ அம்மன்குளம் உள்ளிட்ட பகுதிகளை இந்திய தூதர் அசோக் கே.காந்தா,​​ ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் அதுல ஜெயவர்த்தன உள்ளிட்டோர் சென்று பார்வையிட்டனர்.

​ இதுவரையில் வவுனியா,​​ மன்னார் மாவட்டங்களில் சுமார் 63 கோடி சதுர மீட்டர் பரப்பளவு பகுதியில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன.

​ இனிமேல் இந்த பகுதிகளில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்தலாம்.​ விவசாயப்பணிகளையும் மேற்கொள்ளலாம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

​ இன்னும் சில பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை.​ இதுபற்றிய ஆய்வு தொடர்ந்து நடந்துவருகிறது.​ மற்ற இடங்களில் தமிழர்களை குடியேற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

​ கண்ணிவெடி அகற்றல் பணிகளை இந்தியத் தூதர் ​ பார்வையிட்டபோது அவரிடம்,கண்ணிவெடி அகற்றும் குழுக்கள் சார்பில் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள்,​​ எந்த அளவுக்கு இந்த பணி வெற்றிகரமாக முடிந்துள்ளது,​​ இன்னும் முடிக்க வேண்டிய பணிகள்,​​ இலங்கை தரப்பில் அவர்களுக்கு இடப்பட்டுள்ள பணிகள் பற்றி விவரமாக எடுத்துக்கூறப்பட்டன.

​ கண்ணிவெடி அகற்றும் பணி உயிருக்கு ஆபத்து தரக்கூடியது என்பதால்,​​ அதையெல்லாம் மிக்க நிபுணத்துவத்துடன் கையாள்வது பற்றியும் இந்திய தூதரிடம் கண்ணிவெடி அகற்றும் குழுவினர் எடுத்துரைத்தனர்.

​ கண்ணிவெடிகள் எப்படி அகற்றப்படுகின்றன என்பதும் நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டது.

​ பரந்தன்,​​ புளியங்குளம்,​​ பாளைபெருமாள் காடு,​​ வளவைதாகுளம்,​​ வடக்கந்தல்,​​ பெரியகாடு,​​ பெரியபுளியங்குளம்,​​ பரசங்குளம்,​​ நைனாமடு,​​ உள்ளிட்ட இடங்களில் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டுவிட்டன.

​ கண்ணிவெடி அகற்றும் குழுவில் இந்தியாவிலிருந்து 173 பேரும்,​​ இலங்கையிலிருந்து 172 பேரும் இடம்பெற்றுள்ளனர்.​ இது தவிர நவீன எந்திரங்கள்,​​ கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க உதவும் கருவிகள்,​​ உடல் பாதுகாப்பு கவசம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன

Home / Page-2 / Page-3 / Page-4 / Page-5

wanni

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!