a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தீர்ப்பு
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்    மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்          மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்       தேனகம்             தென்றல்            அம்மான்         வாவிமகள்    தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்          யாழ்தேவி         எரிமலை

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr            srilankan-diaspora.org/              
media.athirady.org/

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           01.06.2009

அரசியல் தேவைகளை நிறைவேற்றக் கூடியவராக பிரபாகரன் திகழவில்லை

அமைச்சர் கருணா அம்மானுடன் ஓர் உரையாடல்

நேர்கண்டவர்:- கே. அசோக்குமார்

புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டாரா? உயிருடன் இருக்கிறாரா? தப்பிச் சென்றுவிட்டாரா? கொல்லப்பட்டுவிட்டதாக காண்பிக்கப்படும் சடலம் யாருடையது? இவை எல்லோரது மனதிலும் எழும் கேள்விகள்.

உண்மையிலேயே பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார். காண்பிக்கப்படுவது அவருடைய சடலம் தான் இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 100 வீதம் உண்மை என்கிறார் கருணா அம்மான்.

புலிகள் இயக்கத்தில் கேர்ணல் கருணா என்ற பதவி நிலையுடன் சுமார் 22 வருடங்கள் புலிகளின் தலைவருடன் இருந்தவர் என்ற வகையில் அமைச்சர் கருணா அம்மான் இப்படி உறுதியாக கூறுகிறார்.

புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி அரசுடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினராக மட்டக்களப்பு மாவட்ட சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக, அமைச்சராக பதவிகளை இவர் வகித்து வருகிறார்.

புலிகளின் தலைவர் உட்பட சிரேஷ்ட தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? இந்தக் குழப்பங்களுக்கு விடை என்ன? என்பது பற்றி பேசுவதற்காக அமைச்சர் முரளிதரனின் (கருணா) அலுவலகத்திற்குச் சென்றோம்.

பிரபாகரனின் மறைவையடுத்து உள்ளூர் வெளியூர் அச்சு மற்றும், இலத்திரனியல் ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு கருணா அம்மானின் அலுவலகத்தை மொய்த்துக்கொண்டிருந்தன. இந்த ‘பிஸி’யான வேளைகளிலும் தினகரன் வாரமஞ்சரிக்காக மனம் விட்டுப் பேசினார்.

* சுமார் 22 வருடங்கள் அவருடன் நெருங்கிப் பழகியவர் என்ற வகையில் உங்கள் பார்வையில் பிரபாகரன்?

தனிப்பட்ட விதத்தில் ஆரம்பகாலம் பிரபாகரன் நல்லவர். காலப்போக்கில் நாளாக நாளாக அவர் மாறினார். அவருக்குள் ஈகோ இருந்தது. தன்னைவிட்டால் ஒரு தலைவன் இல்லை என்ற இறுமாப்பும் தோன்றியது. எவருடைய ஆலோசனையையும் கேட்க விரும்பாதவராக மாறினார். தான் எடுத்த முடிவுக்கு எவர் கட்டுப்படவில்லையோ அவர்களை துரோகியாக கண்டார். இந்த வகையில்தான் நானும் அவர் கண்ணுக்கு துரோகியாக தென்பட்டேன். தமிழ்த் தலைவர்கள் கொல்லப்பட்டதற்கும் இதுவே காரணமாக அமைந்தது.படித்தவர்களின் ஆலோசனைகளையும் கேட்க மறுத்துவிட்டார். அப்படி அவர் கேட்டிருந்தால், அந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தியிருந்தால் வந்த வாய்ப்புகளையும் தவறவிடாமல் இருந்திருந்தால் விடுதலைப் புலிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். அவரும் இருந்திருப்பார். தமிழ் மக்களுக்கும் உரிமை கிடைத்திருக்கும்.

* தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்ற போராட்டத்தில் எந்த இடத்தில் இது பயங்கரவாத வடிவத்தை எடுத்தது?

1965 இல் டட்லி- செல்வா ஒப்பந்தம், 1957 இல் பண்டா- செல்வா ஒப்பந்தம் செய்யப்பட்டது. இரண்டிலும் தந்தை செல்வநாயகம் ஏமாற்றப்பட்டார். அதன் பின்னர் தந்தை செல்வாதான் முதல் முதலாக தனித் தமிழ் ஈழம் என்ற விடயத்தை கொண்டுவந்தார். அதுவரை எவரும் இதுபற்றி சிந்திக்கவில்லை.

* அதாவது நீங்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்தை குறிப்பிடுகிaர்கள்?

ஆமாம்! இதனை யாரும் அன்று பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அன்று பிரபாகரன் தனித்தமிbழம் கேட்கவில்லை. இது ஒரு அரசியல் தலைவர்களால் கொண்டுவரப்பட்டது என்பதால் எவரும் பெரிதாக கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இது ஆயுதப் போராட்டமாக உருப்பெறாதிருப்பின் அன்று தனித்தமிbழத்திற்காக கொடுக்கப்பட்ட குரலுக்கு பெறுமதி இருந்திருக்கும்.

* இளைஞர்களை தனித்தமிbழத்திற்கான ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளியவர்களே தமிழ்த் தலைவர்கள் தானே!

உண்மையில் தமிழ்த் தலைவர்கள் தான் ஆயுதப் போராட்டத்திற்கு இளைஞர்களை திருப்பினர். 1970களில் (ரி.என்.ரி) புதிய தமிழ் புலிகள் என்ற அமைப்பு பிரபாகரன் உள்ளிட்ட இளைஞர்கள் சிலரால் உருவாக்கப்பட்டது. தொடர்ந்தும் தமிழ் தலைவர்கள் சிலராலும், சில சிங்கள பேரினவாத தலைவர்களாலும் கைக்கொள்ளப்பட்ட துவேஷ இனவாத போக்குகளால் கொஞ்சம் கொஞ்சமாக இனப்பிரச்சினை இனவாதமாக பரவத் தொடங்கியது. அல்பிரட் துரையப்பா, படுகொலை செய்யப்பட்டதிலிருந்துதான் வன்முறை என்பது ஆரம்பமானது. அதன் பின்னர் பிரபாகரன் தலைமையில் தமிbழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பமானது. அத்துடன் ‘83 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர்தான் புலிகள் இயக்கம் மிகப்பலம் வாய்ந்ததாக வளர்ந்தது. முதலில் இந்தியா உதவி செய்யவில்லை. இந்தியாவில் ஆங்காங்கே மறைந்திருந்தவாறுதான் வேலை செய்துகொண்டிருந்தார்கள்’. 83 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் இந்தியா வெளிப்படையாக உதவ முன்வந்தது. இந்த சந்தர்ப்பத்தில் தான் படித்த இளைஞர்கள் இயக்கத்தில் சேர ஆரம்பித்தனர். நானும் இயக்கத்தில் சேர்ந்து இந்தியா சென்று பயிற்சிகள் பெற்றேன்.

இந்த போராட்டத்தில் முதிர்ச்சியான தலைவர் ஒருவர் இருக்கவில்லை என்றுதான் நான் கூறுவேன். இருந்திருந்தால் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைந்து ஒன்று சேர்ந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தால் ஒரு பலமான வெற்றி கிடைத்திருக்கும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் பிரபாகரனிடத்தில் இருக்கவில்லை.

பிரபாகரன் வளர்ந்ததற்கு காரணம் என்னவென்றால் ஏனைய இயக்கத் தலைவர்கள் எல்லோரும் அரசியலைமையப் படுத்தி இயக்கத்தை நகர்த்தினார்கள். இராணுவப் பலத்துக்கு இரண்டாவது இடத்தையே வழங்கினார்கள். ஆனால் பிரபாகரன் இராணுவப் பலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அரசியலுக்கு சிறிய இடத்தையே கொடுத்தார். அதனால் தான் இயக்கம் நிலைத்து நிற்கக்கூடியதாக இருந்தது. ஆயுத ரீதியாக இயக்கம் விழுந்தது. பின்னர் அரசியலையும் இணைத்துக்கொண்டு இயக்கத்தை முன்னெடுத்தார்.

இந்த காலகட்டத்தில் பிரபாகரனை எதிர்த்து கருத்து சொல்பவர்களையும் துரோகி என்றுதான் பார்த்தார். அவர்கள் படித்தவர்கள், புத்திஜீவிகள் என்று பார்க்கவில்லை. இந்த வரிசையில் தான் நீலன் திருச்செல்வம் போன்றோர் கொல்லப்பட்டனர். அத்துடன் நிறைய தமிழ்த் தலைவர்களும் கொல்லப்பட்டார்கள்.

* புலிகள் அமைப்பை அரசாங்கம் தோல்வியடையச் செய்வதற்கு நீங்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி இப்போதாவது பேச விரும்புகிaர்களா?

விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி நான் வந்ததே பெரிய பங்களிப்பு தான். ஏனெனில் நான் வெளியேறியதுடன் என்னுடன் சேர்ந்து சுமார் 6000 க்கும் மேற்பட்ட போராளிகள் வெளியேறினார்கள்.

* புலிகள் இயக்கத்தை விட்டு நீங்கள் வெளியேறிய சம்பவத்தை ‘என்னால் தான் வெளியேறினார். எங்களால்தான் வெளியேறினார்’ என எவரும் உரிமை கொண்டாட முடியாதே?

இல்லை, இல்லை எவரும் உரிமை கொண்டாட முடியாது. நானே வெளியேறினேன். அதற்கு வேறு எவரும் காரணம் இல்லை. யுத்தத்தின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதை உணர்ந்தேன். அதனை அவரிடமும் கூறினேன். என்னால் தொடர்ந்தும் யுத்தம் செய்ய முடியாது. சமஷ்டி முறையை பரிசீலனை செய்வோம் என்றும் எடுத்துரைத்தேன். ஆனால் பிரபாகரன் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக யுத்தம் செய்ய வேண்டும் என்று நிலைப்பாட்டிலேயே இருந்தார். அதன் பின்னர் தான் நான் வெளியேறினேன். அதற்கு முன்னரும் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தன. அவற்றை நாம் பொருட்படுத்தவில்லை. நாம் வெளியேறியது புலிகளுக்கு பலத்த பலவீனமாக அமைந்தது. வெளியேறியது மட்டுமல்ல.

அவர்களது உண்மை நிலைமையை உலகுக்கு எடுத்துக் காட்டியாயிற்று. இதனால் அரசியல் ரீதியாக பல தோல்விகளை அவர்கள் சந்திக்க நேரிட்டது. அவர்கள் மக்களின் ஆதரவையும் இழக்கநேரிட்டது. இறுதி காலகட்டத்தில் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியது, மக்கள் தப்பிச் செல்லும்போது துப்பாக்கிகளை அவர்கள் மீது திரும்பியது, இவையெல்லாம் பிரபாகரனுக்கு எதிரான எதிர்ப்புகளைகொண்டு வந்தன.அதுமட்டுமல்ல, நாங்கள் பிரிந்தவுடனேயே படையெடுத்து வந்து மட்டக்களப்பில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்களை சுட்டுக்கொன்றுவிட்டார். இவர்கள் முழுவதும் அப்பாவி தமிழ் மக்கள். கருணாவின் ஆதரவாளர்கள் என்றுதான் சுடப்பட்டார்கள்.

* புலிகளின் தலைவர், பிரபாகரனின் அல்லது புலிகளின் முடிவு ஒரு அரசியல் ரீதியான வெற்றிடத்தை ஏற்படுத்தி இருப்பதாக நீங்கள் கருதினால், அந்த வெற்றிடத்தை யார் எப்படி எவரால் அல்லது என்ன விதத்தில் நிரப்பலாம் என்பதைக் கூறமுடியுமா?

வெற்றிடம் ஒன்று இல்லை. ஆனால் மக்கள் மத்தியில் ஏமாற்றம் ஒன்று இருக்கிறது. என்னவென்றால் பிரபாகரன் இறந்தவுடன் என்ன நடக்கப்போகிறது. அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரபாகரன் ஒருபோதும் மக்களின் அரசியல் நிரப்பக்கூடிய நிலையில் இருக்கவில்லை.

ஆனால் மக்களுக்கு இன்னுமொரு ஏக்கம் ஒன்று இருக்கிறது. இதுவரை காலமும் ஒரு ஆயுதப் போராட்டம் இருந்தது. அரசாங்கம் அதில் கவனம் செலுத்தியது. வேறு எதிலும் கவனம் செலுத்தவில்லை. இப்போது இந்த ஆயுதப் போராட்டம் முடிந்தபடியால் இனி தமிழ் மக்களை அரசாங்கம் நெருக்கத் தொடங்குமோ என்ற ஒரு அச்சமும் இருக்கிறது.

ஆனால் அவ்வாறு ஒன்றும் நடக்காது. நாங்கள் அரசாங்கத்துடன் இருக்கிறோம். அவ்வாறு நடப்பதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கப்போவதும் இல்லை. ஆகவே இது தொடர்பாக நாம் தெளிவாக பேசுவோம். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவ்வாறான எண்ணமும் சிந்தனையும் கிடையாது. தமிழ் மக்களுக்கும் சமமான உரிமை வழங்கப்படவேண்டும் என்ற விடயத்தில் தெளிவாக இருக்கிறார்.

எனவே இந்த ஏக்கங்களை விட்டு புதுப்புது அரசியல் தலைமைகளை அறிமுகப்படுத்துவது சரியான தீர்வாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். உதாரணத்திற்கு 10 க்கும் மேற்பட்ட அரசியல்கட்சிகள், தமிழ்கட்சிகள் உள்ளன. இவை புலிகளுக்கு எதிராக இருந்தாலும் 10 கட்சிகளும் ஒற்றுமையாக இல்லை. ஒற்றுமையை கொண்டுவந்து அவர்கள் ஒன்றாக செயற்பட வேண்டும். ஒற்றுமையாக இருக்க முடியாமல் போனதால்தான் நான் ஸ்ரீல. சு. க வில் சேர்ந்தேன்.

பெரிய அரசியல் கட்சியில் சேர்ந்து ஒரு தேசிய அரசியல் அந்தஸ்து உள்ள மக்களாக எமது மக்களை மாற்றவேண்டும் என்பது தான் எனது நோக்கமாக இருக்கிறது.

* சில இந்திய, ஐரோப்பிய ஊடகங்கள் பிரபாகரன் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் அவர் கொல்லப்படவில்லை. என கூறுகின்றன. ஏன் அவர்கள் இவ்வாறு கூறவேண்டும். உண்மையில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டாரா?

பிரபாகரன் இறந்துவிட்ட செய்தி கேட்டதும் ஒருவரும் நம்பவில்லை. சிலர் அவர் இறந்துவிடவில்லை என்று கூறினார்கள். ஆனால் பிரபாகரன் உண்மையிலேயே இறந்துவிட்டார். நான் அவருடன் 22 வருடங்கள் இருந்திருக்கிறேன். நேரடியாகச் சென்று பார்த்தேன். அவரே தான். எதுவித சந்தேகமும் இல்லை. அது அவரது சடலம் தான். ஆனால் சனங்கள் சந்தேகப்பட்டதற்கு காரணம் என்னவென்றால், மக்கள் மத்தியில் பிரபாகரன் பற்றிய பெரிய இமேஜ் ஒன்று இருந்தது. மக்களுக்கு மட்டுமல்ல. வெளி உலகுக்கும் இவ்வாறான ஒரு இமேஜ் உருவாகியிருந்தது.

பிரபாகரன் ஒருபோதும் பிடிபடமாட்டார். சாகமாட்டார், வெடித்துச் சிதறிவிடுவார். பிடிபடுவதற்கு அனுமதிக்கமாட்டார். கடைசிவரை போரிட்டு மடிவார் என்றெல்லாம் ஒரு இமேஜ் இருந்தது. ஆனால் கடைசியில் பிரபாகரன் கோழைத்தனமாக இறந்திருப்பது இவ்வளவுகாலமும் போராட்டத்தை வழி நடத்திய தலைவன் தானா? என்ற கேள்வியை மக்களுக்கு எழுப்பி விட்டிருக்கிறது. இது ஒரு காரணம்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என புலி ஆதரவாளர்களும், புலி பினாமிகளும்தான் இப்படிக் கூறுவதாக, நான் நினைக்கிறேன். நிதி சேகரிக்கும் முயற்சியாக இருக்கலாம். வெளிநாடுகளில் இவ்வாறான வதந்திகளின் ஊடாக நிதி சேகரித்துக்கொண்டு செயற்படுவதும் இவர்களது நோக்கமாகவும் இருக்கலாம்.

புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்கள் இந்த விடயத்தில் தெளிவாக இருக்கவேண்டும். இவர்களது ஏமாற்று வித்தைகளுக்கு ஆளாகிவிடக்கூடாது. சில இந்திய அரசியல்வாதிகளும் இலங்கையில் பிரபாகரன் கொல்லப்பட்டது கிராபிக்ஸ் வேலைகள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் பொய்யானவை.

* புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினரின் கதி? உயிருடன் இருக்கிறார்களா?

அவர்களைப் பற்றி எந்த தகவல்களும் இல்லை. அவர்களும் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. அப்படி இருந்திருந்தால் உயிர் தப்புவதற்கும் வாய்ப்பில்லை.

* புலிகள் இராணுவ ரீதியாக பலமடைந்தது போல அரசியல் ரீதியாக பலமடைந்திருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்? குறிப்பாக இராணுவ ரீதியாக என்று கூறுகையில் நீர்மூழ்கி, விமானம், கடற்படை என பல விதத்தில் பலமடைந்திருந்தனர். இதே அளவு மக்களின் பொருளாதார வளத்தையும் மேம்படுத்தும் விதத்தில் அவர்கள் செயற்படவில்லை. இதனைப்பற்றி உங்கள் கருத்து?

நிச்சயமாக இராணுவ ரீதியாக பலமடைந்ததுபோல அரசியல் ரீதியாகவும் பலமடைந்திருந்தால் பாரிய வெற்றியை பெற்றிருக்கலாம். குறிப்பாக கடந்த காலங்களில் பெற்ற இராணுவ வெற்றியை பயன்படுத்தியிருந்தால், அரசியல் வெற்றியாக மாற்றியிருந்தால் பல உரிமைகள் மக்களுக்கு கிடைத்திருக்கும். அதைத்தான் நான் 2003 ஆம் ஆண்டு செய்ய முற்பட்டேன்.

எப்படியோ ஜயசிக்குறு சண்டை முடிந்திருந்தது. அந்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றி இதில் வரக்கூடியதை பயன்படுத்துவோம் என்று நானும், அன்டன் பாலசிங்கமும் முயற்சி செய்து கொண்டிருந்தோம். ஆனால் அது முடியாமல் போனது.

* இந்தியா அளிக்கக்கூடிய பங்களிப்பு என்னவாக இருக்கும்? குறிப்பாக மக்களை மீளக்குடியமர்த்தல், வடக்கை மீளக்கட்டியெழுப்புதல் போன்றவற்றுக்கு உதவுதல் போன்ற நடவடிக்கைக்கு இந்தியாவின் பங்களிப்பு என்னவாக இருக்கும்?

இந்தியா நிச்சயமாக உதவும். இப்போதைக்கு கோடிக்கணக்கான ரூபாக்களையும் வழங்கியிருக்கிறது. அகதி முகாமிலுள்ளவர்களுக்காக பல உதவிகளை வழங்கியிருக்கிறது. இந்தியாவின் உதவி இல்லாமல் வடக்கு கிழக்கை கட்டியெழுப்ப முடியாது. இந்தியாவின் உதவி தொடர்ந்தும் தேவை. இந்தியத் தலைவர்களை நேரில் சென்று சந்திக்கும் எண்ணமும் எனக்கு இருக்கிறது. விரைவில் அங்கு சென்று முக்கிய தலைவர்களை சந்திக்கவுள்ளேன்.

இந்தியா உடனடியாக மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகள் வழங்க வேண்டும். இடம்பெயர்ந்துவரும் மக்களை தங்கவைத்துள்ள முகாம்களை பராமரிக்கும் சக்தி அரசாங்கத்துக்கு இருக்கிறது. அழிந்த பிரதேசங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பாரிய நிதி தேவை இதுவே பாரிய பிரச்சினை. இந்தியா உட்பட சர்வதேச சமூகம் இதற்கு உதவவேண்டும்.

* தமிழ் மக்களுக்கிருந்த இனப்பிரச்சினை படிப்படியாக பயங்கரவாத பிரச்சினையாக உருவெடுத்து இப்போது பயங்கரவாத பிரச்சினை முடிவடைந்துள்ளது. ஆனால் தமிழர் பிரச்சினை அப்படியே இருக்கிறது. அதற்கு தீர்வு கிடைக்குமா? அரசாங்கம் தீர்வை முன்வைக்குமா?

இனப் பிரச்சினைக்கான தீர்வை அரசு முன்வைக்கும். ஜனாதிபதி உறுதியாக இருக்கிறார். அந்த விடயத்தில் ஜனாதிபதி அதிகாரங்கள் வழங்குவது பற்றியும் திட்டங்களை வைத்துள்ளார். கூடுதலாக 13 ஆவது திருத்தச் சட்டத்தினூடான மாகாண சபை முறையிலான தீர்வுகூடுதல் அதிகாரங்களுடன் முன்வைக்கப்படும்.

 மீள்குடியேற்றம் என்கின்றபோது திட்டமிட்ட குடியேற்றங்களும் நடைபெற்றால்?

திட்டமிட்ட குடியேற்றங்கள் வராதவாறு நாம் அவதானித்துக்கொண்டிருக்கவேண்டும். இந்த அச்சம் மக்கள் மத்தியிலும் இருக்கிறது. தமிழ்மக்களின் மனதை புண்படுத்தாத வகையில் அரசு செயற்படவேண்டும். அரசில் அங்கம் வகிப்பவன் என்ற முறையில் அரசின் அவதானத்திற்கு கொண்டுவந்துகொண்டுதான் இருக்கிறேன். உரிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் நான் அவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

* வட மாகாண ஸ்ரீல. சு. க அமைப்பாளராக நீங்கள் நியமிக்கப்பட்டால்?

நான் தேசிய அரசியலில் நம்பிக்கைகொண்டவன். என்னை எங்கு விட்டாலும் வேலை செய்வேன். அடுத்த அரசியல் கட்சிக்காரர்களை விட வடமாகாண மக்களை நான் நன்கு அறிந்தவன். வன்னியில் ஸ்ரீல. சு. க செயற்பாட்டை முன்னெடுக்கும் எண்ணமும் எணக்கிருக்கிறது. வன்னி மக்கள் மீளக்குடியமர்த்தல், வன்னியை மீளக் கட்டியெழுப்புதல் நடவடிக்கைகளை செய்யும் நோக்கமும் எனக்கிருக்கிறது.

* வட மாகாண மீள்குடியேற்றம், அபிவிருத்தி, உட்கட்டமைப்பு என்பவற்றை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஒரு தமிழர்கூட இல்லையே?

உண்மைதான். இதில் ஒரு தமிழர்கூட இல்லாததை கண்டு பார்த்தவுடன் நானும் அதிர்ச்சியடைந்தேன். மறுநாளே இது தொடர்பாக நான் உடனே ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரிடம் தெரிவித்தேன். தவறை உணர்ந்துகொண்ட அவர் உடனடியாக சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி வீ. ஜெக ராஜசிங்கத்தையும், நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரதாப் ராமானுஜத்தையும் குழுவில் சேர்த்துள்ளார். நான் கதைத்தபடியினால் இந்த மாற்றம் உடனடியாக செய்யப்பட்டது. இனிமேலும் இப்படியான விடயங்கள் செய்யும்போது தமிழ் மக்கள் பக்கம் பற்றியும் பார்க்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். உடனடியாக அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.

* புலிகள் இயக்கத்திலிருந்து நீங்கள் பிரிந்தவுடன் தமிழ் மக்களுக்கு உங்கள் மீது வெறுப்பு வந்திருந்தது. அந்த வெறுப்பு இன்னமும் சிலர் மத்தியில் இருக்கிறது. இதனை எப்படி மாற்றப்போகிaர்கள்?

கிழக்கு மாகாணத்தில் இல்லை என்று தான் நினைக்கிறேன். புலிகளை யார் எதிர்த்தாலும் துரோகி என்று சொல்வதுதான் பிரபாகரனின் வழக்கம். தன்னுடைய பிழையை மறைப்பதற்காக எனக்கும் அவ்வாறுதான் துரோகி என்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இன்று உலகம் விளங்கிக்கொண்டிருக்கிறது. நான் சொன்ன கருத்துக்களை அன்று பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று எவ்வாறு மாற்றங்கள் நடந்திருக்கும் எவ்வளவு நன்மைகள் கிடைத்திருக்கும்? ஆனால் பிரபாகரன் அவற்றை ஏற்கவில்லை. அதே நேரத்தில் இன்று கோழைத்தனமாக இறந்திருக்கிறார். இன்று எல்லோருக்கும் புரிந்திருக்கும். ஏன் நான் அப்படிக் கூறினேன் என்று.

இப்போது தேசிய அரசியல் இணைந்து மக்களுக்காக செயற்படத் தொடங்கியிருக்கிறோம். என்மீது இருந்த கோபம் தானாகவே இல்லாமல் போகும்.

* களமுனையில் இறுதிக் கட்டத்தில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகிறதே?

அதில் உண்மையில்லை. இறுதி நேரத்தில் கடற்புலிகளின் தலைவர் சூசை பேட்டி கொடுத்திருந்தார். 25,000 பொதுமக்கள் இறந்துவிட்டார்கள். அவர்களை காப்பாற்றுங்கள் என்று கூறியிருந்தார். உண்மையில் அவர்கள் தவறிழைத்துவிட்டார்கள். சர்வதேசம் தம்மை இறுதி நேரத்திலாவது வந்து காப்பாற்றும் என்று எண்ணினார்கள். அதற்கான முயற்சிகளையும் செய்தார்கள்.

சர்வதேசத்தினூடாக அரசை தொடர்புகொள்ள முயற்சித்தார்கள். சரியான நேரத்தில் அரசுக்கு கிடைக்கவில்லை. அவர்கள் நேரடியாக அரசை தொடர்புகொண்டிருந்தால் ஒரு வேளை புலித்தலைமை உட்பட சிரேஷ்ட தலைவர்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியிருப்பார். புலிகளை சரணடையுமாறு அரசு ஆரம்பம் முதலே அறிவித்திருந்ததுதானே. புலிகள் தாமதமாகவே இந்த தீர்மானத்தை எடுத்திருக்கின்றனர். கிளிநொச்சி விழுந்ததுடனேயே இந்த மாற்றத்தை புலிகள் செய்திருக்கவேண்டும்.

-தினகரன்
 

Page-2 / Page-3 / Page-4

flee-40

 பொறுப்புள்ள புதிய தமிழ் அரசியல் தலைமை?

BBC Tamil
rupavahini

ரூபவாகினி செய்திகள்

வடக்கின் வசந்தத்திற்கு வழியென்ன?

ஊருக்கே சோறுபோட்ட கரங்கள் ஒரு பார்சலுக்குக் கையேந்தி நிற்கின்றன!

இடம்பெயர்ந்த வன்னி நோயாளர்கள் போசாக்கின்மையால் உயிரிழப்பு - மருத்துவர்கள்

மேய்ச்சல் வெளி

புலிக்கொடி ஈழத்தமிழர்களின் கொடியா?

சிறுவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?