a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           02.03.2010

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்    தோழர் உ.ரா.வரதராசன் மறைவு

- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் உ.ரா. வரதராசன் மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 65.

அவரது உடல் பிப்ரவரி 23 செவ்வாயன்று காலை 11 மணியளவில் கட்சி யின் மாநிலக்குழு அலுவலகத்தில் கட்சித் தோழர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. மாலை 3 மணியள வில் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்று கட்சியின் மாநிலக்குழு தெரிவித்துள்ளது.

கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உன்னதமான தலைவர்களில் ஒருவரும், மிகச் சிறந்த போராளியும், சிஐடியு தலைவருமான உ.ரா.வரதராசன் அவர்கள் மரணமடைந்து விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த துயரத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த 11-ம் தேதி அன்று சிறு குறிப்பை வீட்டில் வைத்துவிட்டு அவர் காணாமல் போய்விட்ட செய்தி குடும்பத்தினர், கட்சித் தலைவர்கள் மற்றும் ஊழியர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவரை தீவிர மாக தேடும் பணியில் கட்சியும், காவல்துறையினரும், குடும்பத்தினரும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 13.2.2010 அன்று போரூர் ஏரியில் இருந்து மீட்கப்பட்ட உடலினை குடும்பத்தினரும், கட்சித் தலைவர்களும் ஞாயிறன்று (21.2.2010) பார்வையிட்டதோடு திங்களன்று கைரேகை சோதனை நடத்தியதில் அது தோழர் உ.ரா. வரதராசனின் உடல்தான் என காவல் துறை மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இன்று இறுதி நிகழ்ச்சி

மறைந்த தோழர். உ.ரா. வரதராசன் அவர்களின் உடல் கட்சித் தோழர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக செவ்வாயன்று (23.2.2010) காலை 11 மணியளவில் கட்சி யின் மாநிலக்குழு அலுவலகத்தில் (பி.ராம மூர்த்தி நினை வகம், 27 வைத்தியராமன் தெரு, தி. நகர், சென்னை - 17) வைக்கப்படும். அதன் பின்னர் இறுதி நிகழ்ச்சி மாலை 3 மணியளவில் நடைபெறும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

செங்கொடி தாழ்த்தி அஞ்சலி

தோழர். உ.ரா. வரதராசன் அவர்கள் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும், சிஐடியு அகில இந்திய செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயல்பட்டவர். சென்னை நகரத்திலும், அகில இந்திய அளவிலும் பல தொழிற்சங்கப் போராட்டங்களில் தலைமையேற்று செயல்பட்டவர். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர். அவருடைய மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், இடதுசாரி இயக்கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.

அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சி கொடியை மூன்று தினங்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு துக்கம் கடைப்பிடிக்குமாறு கட்சி அணிகளை தமிழ் நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

பன்முகத்திறன் படைத்த தோழர் உ.ரா.வரதராசன்

தோழர் உ.ரா. வரதராசன் 9.7.1945 அன்று, அன்றைய வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள உள்ளியநல்லூர் என்ற கிராமத்தில் ஒரு மத்திய தர வர்க்க குடும்பத்தில் முதல் பிள்ளையாகப் பிறந்தார். அவரது தந்தை ரயில்வே நிலைய அதிகாரியாகப் பணியாற்றியவர்.

சென்னை விவேகானந்தா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரிக் காலத்திலேயே அவருக்கு இலக்கியம் மீதும், அரசியல் மீதும் ஈடுபாடு ஏற் பட்டது. சர்வோதயா இயக்கத்திலும் பின்னர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தலைமையிலான தமிழரசு கழகத்திலும் இணைந்து பணியாற்றினார். அவர் நடத்தி வந்த “செங்கோல்” பத்திரிகைக்கு உறுதுணையாக இருந்தார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தமிழரசு கழகத்தில் இருந்து வெளியேறினார்.

தோழர் உ.ரா. வரதராசன் சிறந்த சொற்பொழிவாளர், எழுத்தாளர், மொழிப் பெயர்ப்பாளர், “பார்வதிபுரம்” என்ற நாவலை எழுதி சர்வோதயா இயக்கத்தின் பரிசினைப் பெற்றவர். “அருவி” என்ற இலக்கிய சிற்றிதழையும் மாணவப் பருவத்திலேயே நடத்தியுள்ளார். இதில் தமிழகத்தின் ஏராளமான எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர்.

1967ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கிப் பணியில் சேர்ந்த அவர் 17 ஆண்டுகள் வங்கிப் பணியில் இருந்தார். அப்போது, ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கத்தின் அகில இந்திய செயலாளராக பணியாற்றியுள்ளார். வங்கி ஊழியர் சம்மேளனத்தை உருவாக்குவதில் ஈடுபட்ட முன்னணித் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். அதுபோல் கூட்டுறவு ஊழியர்களை அணி திரட்டுவதிலும் பெரும் பங்காற்றினார்.

ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது, ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கம் அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது.

அந்த போராட்டக் களத்தில் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்ட அவர், 1969ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
1984ஆம் ஆண்டு, வங்கிப் பணியைத் துறந்து, கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றத் துவங்கினார். கட்சியின் சென்னை மாவட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்தார்.

1989ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சென்னையில் உள்ள ‘பி அண்ட் சி’ ஆலை, பெஸ்ட் அண்ட் கிராம்ட்டன், ஓட்டிஸ் லிப்ட் கம்பெனி, மெட்டல் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு தொழிலாளர் போராட் டங்களை தலைமை ஏற்று நடத்தியவர்.

சிஐடியு மாநிலச் செயலாளர்களில் ஒருவராக செயல்பட்டு வந்த அவர், தொழிற்சங்கப் பணிக்காக தில்லி சென்றார். சிஐடியுவின் அகில இந்திய செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர், தில்லி தொழிற் சங்கப் பணிக்காக சென்ற பிறகு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
அகில இந்திய வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) வாரியத் தின் உறுப்பினர்களில் ஒருவராக பணியாற்றியுள்ளார்.

வெண்மணி கொடுமை, இலங்கைப் பிரச்சனை, தமிழக தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு சிறு நூல்களை எழுதியுள்ளளார். தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழி களில் சிறந்த புலமை பெற்றவர்.

தீக்கதிர் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பல்வேறு நாளேடுகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார்.

இவருடைய மனைவி சரஸ்வதி ஓய்வுபெற்ற ரிசர்வ் வங்கி ஊழியர். இவர் திருமணம், கலப்புத் திருமணம். மறுமணம் என சீர்திருத்த சிறப்புகள் கொண்டது. இவருக்கு பிரசாந்த் என்ற வளர்ப்பு மகனும், அமுதன் என்ற மகனும் உள்ளனர்.

-----------------------------------------------------------------------------------------------------------
 
 
மத்தியதர மக்களிடமும் பாட்டாளி வர்க்கத்தினரிடமும் உ.ரா.வரதராஜ‌ன் பெற்றிருந்த பேரும் புகழும் பெரும் கீர்த்தியும் மறையவில்லை, என்றைக்கும் மறையாது!
 
- கருணாந‌ி‌தி புகழார‌ம்
 
மத்தியதர மக்களிடமும் பாட்டாளி வர்க்கத்தினரிடமும் உ.ரா.வரதராஜ‌ன் பெற்றிருந்த பேரும் புகழும் பெரும் கீர்த்தியும் மறையவில்லை, என்றைக்கும் மறையாது எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணாந‌ி‌தி புகழார‌ம் சூ‌ட்டியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், அருமைத்தோழர் உ.ரா. வரதராஜன் நம் மத்தியிலே அவரது தொண்டுள்ளத்தையும், கொள்கை உறுதியையும், மக்கள் பணியையும், அன்பான நட்பு, அரசியல் நாகரிகம் ஆகியவற்றையும் நினைவு அலைகளாக மிதக்க விட்டுவிட்டு பிரிந்துவிட்டார், ஆம் மறைந்து விட்டார்.

தமிழகத்திலே கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவர்களில் ஒருவராக, குறிப்பாக தொழிற்சங்கத் தலைவராகத் தொண்டாற்றியவர். அதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் இருந்தவாறு கட்சிப்பணிகளை ஆற்றிக்கொண்டிருந்தபோது அந்தக் கட்சியின் முதுபெரும் தலைவர் சுர்ஜித்தை உடல் நலம் விசாரிக்க அவர் இல்லம் செல்லும் போதெல்லாம், அங்கு என்னை வரவேற்கத் தயாராக காத்திருப்பவர், உடன் இருந்து என்னை வழியனுப்பும் வரை, இந்திய நாட்டு அரசியல் நிலவரங்களையும் அவரது கட்சிப் பணிகளையும் விவரமாக விவரித்து விவாதிப்பவர்.

அவர் 1990ஆம் ஆண்டில் தமிழகச் சட்டப்பேரவையில் வில்லிவாக்கம் தொகுதியினுடைய உறுப்பினராக வீற்றிருந்தபோது, பேச எழுந்திருப்பாரேயானால், அவரிடமிருந்து ஆரோக்கியமான கருத்துகள், ஆலோசனைகள் வெளிவரும் என்று நான் ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன். என் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றம் இல்லாமல் அரசின் சார்பில் நடைபெற வேண்டிய செயல்களைக் கவனமூட்ட என்றைக்குமே அவர் தவறியதில்லை.

ஒருமுறை கழக அரசைப் பற்றிக் கூறும்போது குறிப்பாக என்னைச் சுட்டிக்காட்டி, எனக்குப் பொதுவுடைமை கொள்கையின்பால் உள்ள பற்று, பாசத்தை விளக்கியதோடு நில்லாமல் அப்படி விளக்கியதற்கே காரணமாக சென்னை மாநகரில் மே தினச்சின்னம் ஒன்றை அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மே தின விழாவைக் கொண்டாடுவதற்கு அறிவிப்பு செய்த தி.மு.க. அரசைப் பாராட்டிவிட்டு, அதன் தொடர்பாகத்தான் அந்த வேண்டுகோளையும் அவையின் முன் வைத்தார்.

நான் பதில் அளித்தபோது, அவரது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று சொன்ன நேரத்தில் அவர் முகம் மலர்ந்த காட்சி இன்னமும் என் நினைவிலே இருக்கிறது. அவருடைய கருத்தையேற்று, அப்போதே மாற்றம் பெற்றதுதான் நேப்பியர் பூங்கா என்றிருந்த இன்றைய மே தினப் பூங்கா. அந்தப் பூங்காவில் மே தினச் சின்னமும், மே தின முழக்கமும் அமைக்கப் பெற்று ஆண்டு தோறும் நம்முடைய கழகத்தினர் மற்றும் தொழிலாளர்கள் அந்தப் பூங்காவிற்குச் சென்றுதான் மே தின வாழ்த்துக்களை முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மே தின பூங்கா திறப்பு விழா அந்த ஆண்டு மே 1ஆம் தேதியன்று நடைபெற்றது. அப்போது நடைபெற்ற தி.மு.க. பாட்டாளிகளின் பேரணியில் அவரும் கலந்து கொண்டு எழுச்சி மிகுந்த உரை ஒன்றினை ஆற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டது, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இதுபோன்ற மே தின நினைவுச்சின்னம் ஒன்றை அமைக்க வேண்டுமென்று நான் விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இப்போது தி.மு.க ஆட்சியில்தான் நிறைவேறியிருக்கிறது. அதற்காக முதலமைச்சருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்பதாகும். இப்படியெல்லாம் ஆக்கபூர்வமான கருத்துக்களைச் சொல்கிற ஆற்றலாளர் அவர். அவர் இன்று மறைந்துவிட்டார், அவர் மறைவையொட்டிய கேள்விக்குறி இன்னமும் மறையவில்லை, அவர் மத்திய தர மக்களிடமும் பாட்டாளி வர்க்கத்தினரிடமும் பெற்றிருந்த பேரும் புகழும் பெரும் கீர்த்தியும் மறையவில்லை, என்றைக்கும் மறையாது! எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணாந‌ி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

 

Home /Page -1 /Page-2 / Page -3 / Page-4 / Page-5 / Page-6 /Page-7 /

wanni

ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கும், 1970 பொதுத் தேர்தல் முடிவுக்கும் உள்ள ஒத்த தன்மைகள்!

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தெரிவித்திருக்கு ம் செய்திதான் என்ன?