a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தீர்ப்பு
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்    மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்          மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்       தேனகம்             தென்றல்            அம்மான்         வாவிமகள்    தமிழ்நியூஸ்வெப்


Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr            srilankan-diaspora.org/
 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           07.05.2009

இந்தியா மீண்டும் தவறிழைக்கிறதா?

- பார்த்தசாரதி

india talksஇலங்கை அரசாங்கமும், புலிகளும் உடனடிப் போர்நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென, இந்தியா சற்றுத் தீவிரமாக வலியுறுத்தியுள்ளது. இதற்காக, தனது வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனையும், பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனையும் விசேட விமானமொன்றில் கொழும்புக்கு அனுப்பி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமே தனது வலியுறுத்தலைச் செய்துள்ளது. இந்தியாவின் வலியுறுத்தலுக்கு இலங்கை அரசின் பிரதிபலிப்பு அல்லது பதில் என்னவென்பது இதுவரை தெரியவரவில்லை என்றபோதிலும், இலங்கை அரசுக்கு இந்தியாவின் வேண்டுகோள் உவப்பானதாக இருக்கப் போவதில்லை என்பது மட்டும் தெளிவானதாகும்.
 
இந்தியாவின் இந்த திடீர் தீவிரத்துக்கு என்ன காரணம் என்ற கேள்வி, இப்பொழுது அரசியல் வட்டாரங்களில் ஆராயப்பட்டு வருகிறது. ஏனெனில், இந்தியா வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கி வந்துள்ளது என்பது, அனைவரும் அறிந்த விடயமாகும். இந்தியாவின் உதவி வெறுமனே பொருளாதார ரீதியானது மட்டுமல்ல. இந்தியாவின் உதவி ஆயுத விநியோகம், இராணுவப் பயற்சி, தகவல் பரிமாற்றம், கடல் கண்காணிப்பு, தொழில்நுட்ப உதவி, இராஜதந்திர ஆதரவு என சகல பரிமாணங்களையும் கொண்டது. அதனால் தான் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் சிலர், ‘இந்தியாவின் உதவியின்றி புலிகளுக்கு எதிரான போரில் இலங்கையால் வெற்றி பெற்றிருக்க முடியாது’ என அடிக்கடி வெளிப்படையாகக் கூறிவருகின்றனர். இதுதவிர, இந்திய இராணுவம் நேரடியாகவே வன்னிக் களமுனைகளில் நின்று செயல்படுவதாக, சில தமிழகக் கட்சிகள் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியும் வருகின்றனர். ஆனால் இதில் எந்த உண்மையும் இருப்பதாகத் தெரியவில்லை.
 
புதுக்குடியிருப்பு பகுதிக்குள் இலங்கை இராணுவம் பிரவேசித்த நாளிலிருந்தே, போர் உக்கிரத் தன்மையை அடைந்தது. அதன் காரணமாக பொதுமக்களின் உயிரிழப்புக்களும், காயமடைதலும் அதிக எண்ணிக்கையை எட்டியது. இதற்கு முக்கிய காரணம், தமது தோல்வியை ஏற்க மறுத்த புலிகள், அங்கிருந்து பாதுகாப்புத் தேடி வெளியேற முயன்ற பொதுமக்களை பலவந்தமாக தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை தமக்கு பாதுகாப்பு கேடயமாக வைத்துக் கொண்டு, அவர்கள் மத்தியிலிருந்தே கனரக ஆயுதங்கள் மூலம் இராணுவத்தின் மீது தாக்குதல் நடாத்தி வந்தனர். (26-04-2009, இன்று புலிகள் ஒரு தலைப்பட்ச போர்நிறுத்தத்தை அறிவித்த பின்னரும் இராணுவத்தின் மீதான இந்த தாக்குதல் தொடர்கின்றது.) சர்வதேச சமூகம் பல தடவைகள் கோரியும், புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கையை நிறுத்தாததுடன், பொதுமக்களையும் விடுவிக்க மறுத்து வருகின்றனர்.
 
இந்தக் காலகட்டத்தில், தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும், வன்னியில் போரை நிறுத்தும்படி கோரி பெரும் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டங்களால் சில கட்டங்களில் தமிழகமே ஸ்தம்பித்தது. இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் ஒரு சிறு பகுதியினர், புலிகளைக் காப்பாற்றும் எண்ணத்துடன் அதில் ஈடுபட்டனராயினும், பெரும்பான்மையானோர் போரில் சிக்குண்ட மக்கள் பால் கொண்ட அனுதாபத்தினால் அதில் ஈடுபட்டவர்களே. தமிழகப் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த நேரத்திலெல்லாம், இந்திய மத்திய அரசு இலங்கை அரசிடம் கறாராக போரை நிறுத்தும்படி கோரியது கிடையாது. பொதுமக்களைப் பாதுகாக்கும்படி மட்டும் ஒரே பல்லவியையே திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருந்தது. மத்திய அரசின் தமிழகப் பங்காளியான மு.கருணாநிதியின் தி.மு.க அரசும் மத்திய அரசின் வழித் தடத்திலேயே சென்று கொண்டிருந்தது.
 
இப்பொழுதோ, தமிழகத்தில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக கொந்தளித்து எழுந்த தீச்சுவாலைகள் அடங்கி, வெறும் புகை மட்டும் வந்து கொண்டிருக்கிறது. வன்னிப் போர்க் கள நிலைமையும் பெருமளவு மாறிவிட்டது. புலிகளின் பொய்ப்பிரச்சாரங்களையும், புலிகள் போட்ட மண் அணைகளையும் உடைத்துக் கொண்டும், புலிகள் விதைத்துள்ள மிதிவெடிகளுக்கும், துப்பாக்கிச் சூடுகளுக்கும் அஞ்சாதும் 90 வீதமான பொதுமக்கள் தப்பி ஓடி, இராணுவத்திடம் தஞசமடைந்து, அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துவிட்டனர். புலிகள் மீதமுள்ள சில ஆயிரம் அப்பாவி மக்களை பணயக் கைதிகளாக வைத்துக்கொண்டு, மிகச் சிறிய ஒரு நிலப்பரப்புக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அதுவும் விரைவில் முடிவுக்கு வந்துவிடும். இந்த நிலைமையில் இந்தியா திடீரென்று கச்சை கட்டிக்கொண்டு போர் நிறுத்தத்தை வலியுறுத்துவது எதற்காக?
 
இந்தியாவில் தற்பொழுது பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் நடைபெற்று வருவதால், தமிழகத்தில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி மக்களின் வாக்குகளைக் கவருவதற்காகவே, இந்திய அரசு இந்தத் திடீர் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகப் பலரும் கருதுகின்றனர். அதாவது, இது உண்மையான கரிசனை அல்ல, தேர்தல் நாடகம் என்று கூறுகின்றனர். அதில் ஓரளவு உண்மையில்லாலும் இல்லை. ஏனெனில், தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை சம்பந்தமாக, கடந்த காலத்தில் பிரதான கட்சிகள் இரண்டும் எதிரும் புதிருமான நிலைப்பாட்டையே எடுத்து வந்துள்ளன. கருணாநிதியின் தி.மு.க இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை மட்டுமின்றி, புலிகளையும் ஆதரித்து வந்துள்ளது. அதேவேளையில் ஜெயலலிதாவின் அ.தி.மு.க இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை வரையறைக்குட்பட்டு ஆதரித்ததுடன், புலிகளை கடுமையாக எதிர்த்தும் வந்துள்ளது. எனவே இலங்கைத் தமிழர் விடயத்தில் ஜெயலலிதாவை விட, கருணாநிதியே அதிக அக்கறையானவர் என்ற பிம்பம் தமிழக மக்களிடையே உருவாகி இருந்தது.
 
ஆனால் அண்மைக்காலமாக புலிகளை நேரடியாக ஆதரிக்கும் (புலிகளினால் பணப்பட்டுவாடா செய்யப்படுபவர்கள் என்றும் சொல்லலாம்) வை.கோபாலசாமி, ராமதாஸ், பழ.நெடுமாறன், திருமாவளவன் போன்றோரின் சேர்க்கை உருவான பின், காங்கிரஸ் ஆட்சியுடன் இணைந்து நிற்கும் கருணாநிதியின் நிலை இலங்கைத் தமிழர் விடயத்தில் பின்தள்ளப்பட்டுவிட்டது. இந்த நிலைமையில் தேர்தல் வந்துவிட்டதால் புதிய அணிசேர்க்கை ஒன்றும் உருவாகிவிட்டது. வை.கோ, ராமதாஸ், போன்ற  புலிகளை தீவிரமாக ஆதரிப்போர் ஜெயலலிதா அணியில் இணைந்துள்ளனர். அதே நேரத்தில் இலங்கை அரசுக்கு உதவும், மத்தியில் ஆட்சி நடாத்தும் காங்கிரஸ் அணியில் கருணாநிதி இருக்கிறார். இதன் காரணமாக கருணாநிதியை விட, ஜெயலலிதாவின் நிலை தற்போது மேலோங்கி நிற்கிறது. போதாதிற்கு ஜெயலலிதா, கருணாநிதியை கடுமையாகச் சாடுவதுடன், ‘இலங்கைத் தமிழர்களுக்கு ‘தமிழ் ஈழம்’ வழங்கப்படவேண்டும்’ என்றும் அறிக்கை விடுத்துள்ளார். இவையெல்லாம் தமிழக வாக்காளர்களைக் கவரும் ஜெயலலிதாவின் ‘தேர்தல் ஸ்டன்ட்’ என்றாலும், கருணாநிதியை நிலைகுலைய வைத்துவிட்டது.
 
இதன் பிரதிபலனாகத்தான், கருணாநிதி திடீரென இலங்கையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி முழுக் கடையடைப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார். தமிழகத்தில் கருணாநிதியுடனான கூட்டணியின் தேவையை உணர்ந்த காங்கிரஸார், அக்கடையடைப்பில் பங்கு பற்றி பூரண ஒத்துழைப்புக் கொடுத்தனர். அதன் தொடர்ச்சியாகவே, டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தன்முக்கிய அமைச்சரவை சகாக்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடாத்தி, தனது வெளிவிவகாரச் செயலாளரையும், பாதுகாப்பு ஆலோசகரையும் கொழும்புக்கு அனுப்பி வைத்தார். ஆக எல்லாமாக, இந்த நாடகத்தின் பின்னணி தேர்தல் தான் என்பது பலரின் முடிவு. ஆனால் இந்த நாடகத்தின் இன்னொரு முக்கியமான பகுதியும் இருக்கிறது என விடயமறிந்த இந்திய - இலங்கை ஆயவாளர்கள் கூறுகின்றனர். அந்த முக்கியத்துவத்தின் காரணமாகவே இந்திய பிரதமர் அடுத்தடுத்து தனது அதிகாரிகளுடன் இரண்டு நாட்கள் கூட்டம் நடாத்தியதாகத் தெரிய வருகிறது. அந்த உண்மையான உள்ளுடனை மறைக்கும் போர்வையாகவே, போர்நிறுத்தம் என்னும் விடயம் பகிரங்கப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த விடயம் தான் என்ன?
 
சில தினங்களுக்கு முன்னர் சீனத் தலைநகர் பீஜிங்கில், தனது வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அந்நாட்டு அரசின் பேச்சாளர், ‘பிரபாகரனையும் அவரது பயங்கரவாத புலிகள் இயக்கத்தையும் அழித்தொழிக்கும் இலங்கை அரசின் முயற்சிக்கு சீன அரசு பூரண ஆதரவளிக்கும்’ என கருத்துத் தெரிவித்திருந்தார். அத்துடன் மேலும் அவர், ‘இலங்கையும் நேபாளமும் சீனாவின் நெருங்கிய நட்பு நாடுகள். அந்நாடுகளின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் சீனா உதவியளிக்கும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். சீன அரசின் இந்தக் கூற்றுகள் இயல்பாகவே இந்தியாவை கவலையும், எச்சரிக்கையும் அடைய வைத்துவிட்டன. ஏனெனில் ஏற்கெனவே இந்தியாவில் மாவோயிஸ்ட் கிளர்ச்சிகளை பெருமளவில் எதிர்நோக்கி நிற்கும் சூழ்நிலையில், நேபாளத்தில் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சி மக்கள் ஆதரவுடன் ஏற்பட்டிருப்பதையிட்டு, அரண்டு போய் சீரணிக்க முடியாமல் இருக்கும் இந்தியா, புலிகளை ஒழித்துக்கட்டிய பின்னர், இலங்கையும் தன்னைவிட்டு எட்டிப்போய் விடுமோ என்ற கவலையில் மூழ்கியுள்ளது.
 
இலங்கையில் புலிகள் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டு விட்டால், யுத்தம் - இனப்பிரச்சினைத் தீர்வு என்ற இரண்டு விடயங்களிலும், இதுவரை இலங்கை அரசு மீது இந்தியாவுக்கு இருந்த பிடியில் தளர்வு ஏற்பட்டுவிடுமோ என இந்தியா அஞ்சுகிறது. ‘புலிப் பிரச்சினை இல்லாத இலங்கை’ இந்தியாவுடனான தேவைகளைக் குறைத்துக்கொண்டு, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்துக் கொள்ளுமோ என்ற கவலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இறுதி நேர சந்தர்ப்பத்தை பயன்படுத்தியாவது (சர்வதேச சமூகமும் அதில் கரிசனையாக இருப்பதால்) வன்னியில் போரை நிறுத்துவதன் மூலம், ஒரு சிறிய அளவிலேனும் இலங்கையில் புலிப் பிரச்சினையை நிலைத்து வைத்திருக்கப்பண்ணி, இந்தியாவின் தேவையை இலங்கைக்கு உணர வைப்பதற்கே இந்தியாவிற்கு தற்போதைய போர்நிறுத்தம் வலியுறுத்தப்படுகிறது என விடயமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இந்தியா அவ்வாறு சிந்திக்குமாக இருந்தால், அது இலங்கைக்கு, சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் உருவாகக்கூடிய உறவைவிட, கூடுதலாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய விடயமாகும். ஏனெனில், ஏற்கெனவே இந்தியா ஒருமுறை இவ்வாறான (புலிகளை முற்றுமுழுதாக அழிக்கும்) தவறை இழைத்ததின் மூலம், தனது தேசத் தலைவரை இழந்ததுடன், இலங்கை விவகாரத்திலிருந்து பல ஆண்டுகள் ஒதுங்கி நிற்கும் நிலையும் ஏற்பட்டதை மறந்துவிட முடியாது.
 
1987ல் இந்திய - இலங்கை உடன்படிக்கை ஏற்பட்டு, புலிகள் அதை ஏற்க மறுத்து, இந்திய அமைதிப்படையுடன் யுத்தம் புரிந்த காலத்தில், ஒரு கட்டத்தில் பிரபாகரனும் அவரது 200 வரையிலான முக்கிய உறுப்பினர்களும் முல்லைத்தீவு – நித்திகைக்குளம் காட்டுப்பகுதியில் தப்பிக்க முடியாதவாறு, இந்திய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தனர். அப்பொழுது புலிகளை கைதுசெய்யக்கூடிய அல்லது ஒழித்துக்கட்டக்கூடிய ஒரு வாய்ப்பு உருவாகி இருந்தது. சுற்றி வளைக்கப்பட்ட புலிகளை என்ன செய்வது என்பது பற்றி ஆலோசிப்பதற்காக, இலங்கையிலிருந்த இந்திய அமைதிப்படைத் தளபதி ஜெனரல் கல்கத், டில்லியிலுள்ள அரச உயர் மட்டத்துடன் தொடர்பு கொண்டார். அப்பொழுது புலிகளைத் தப்பிச் செல்ல விடும்படி அவருக்கு ஆலோசனை கூறப்பட்டது! அதன்படி புலிகள் தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்!!
 
இந்திய அரச தலைமையின் இந்த முடிவுக்குக் காரணம், அப்போதைய (இந்திய விரோதியும் அமெரிக்க விசுவாசியுமான) ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கம், இந்திய உதவியுடன் புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டிய பின்னர், தம்மை ஓரங்கட்டிவிடுவார் என இந்தியா கருதியதுதான். ஆனால் இந்தியா கருதியதற்கு மாறாக, ஜே.ஆரை விட புலிகள் தான் அதிக ஆபத்தானவர்கள் என்பதை, பிரபாகரன் பின்னர் இந்தியர்களுக்கு நிரூபித்துக் காட்டிவிட்டார். இந்திய இராணுவத்தால் தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்ட பிரபாகரன், பின்னர் பிரேமதாச ஜனாதிபதியானதும், அவருடன் கூட்டுச் சேர்ந்து, இந்திய அமைதிப்படையை இலங்கையிலிருந்து வெளியேற்றியதுடன், இந்தியாவின் தலைவர் ராஜீவ் காந்தியின் உயிருக்கும் உலை வைத்தார். அதுமட்டுமின்றி, இலங்கை இனப்பிரச்சினையிலிருந்து இந்தியா ஓரங்கட்டப்பட்டு, மேற்கத்தைய சக்திகளின் கையாளாக நோர்வே இலங்கையில் நுளைக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆன பின்னரே, புலிகளுடன் ரணில் விக்கிரமசிங்க செய்த போர்நிறுத்த ஒப்பந்தம் தூக்கி வீசப்பட்டு, நோர்வே சமாதான அனுசரணையாளர் பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, மேற்குலக சக்திகளின் உள்ளார்ந்த திட்டங்கள் முறியடிக்கப்பட்டன. (ஆனாலும் அவர்களது நடவடிக்கைகள் வேறு வடிவங்களில் இன்றும் தொடர்கின்றன) அதன் பின்னரே இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் வகிபாகம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது.
 
இந்த வரலாற்று உண்மைகளையும், அனுபவங்களையும் இந்திய அரசு ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. தமிழகத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவோ, சீன செல்வாக்கை முறியடிப்பதற்கோ, வன்னியில் போர்நிறுத்தம் வேண்டும் என்ற தவறை இந்தியா செய்யக்கூடாது. இந்தியா அவ்வாறு செய்யுமாக இருந்தால், அது புலிகளுக்கு மீண்டும் புத்துயிரளித்து, ‘பாம்புக்கு பால் வார்த்த கதை’யாகவே முடியும். பிரபாகரனின் தணியாத இரத்த தாகத்துக்கு ராஜபக்சாக்கள் மட்டுமின்றி, காந்திகள், சிங்குகள், முகர்ஜிகள், மேனன்கள், நாராயணன்கள் போன்றோரும் நிறையத் தேவைப்படுகின்றனர் என்பதை மிகப்பெரிய இந்திய நாட்டின் தலைமை உணர்வது தான் இப்போதைய அவசர தேவையாகும்.
 
‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ என்ற மிக அருமையான முதுமொழியை உலகிற்கு கொடையாக வழங்கிய இந்தியாவுக்கு, அந்த மாட்டையே தெய்வமாக வழிபடும் உயர்ந்த மனிதாபிமானமும், பண்பாடும் கொண்ட பாரத தேசத்திற்கு, இதற்கு மேல் நாம் வலிறுயுத்திக் கூறுவதற்கு எதுவும் இல்லை.

 

Page-1/ Page-2/ Page-3/ page-4/ page-5

flee-40

பொறுப்புள்ள புதிய தமிழ் அரசியல் தலைமை?

BBC Tamil
rupavahini

ரூபவாகினி செய்திகள்

_DSC8589

புலிக்கொடி ஈழத்தமிழர்களின் கொடியா?

சோசலிச நாடுகளும், உலக கம்யூனிஸ்ட் இயக்கமும் புலிகளின் பாசிசத் தன்மையை நன்கு இனங் கண்டுள்ளன!

புதுமாத்தளனில் உடைந்தது மண் அணை மாத்திரமல்ல

இந்தியா மீண்டும் தவறிழைக்கிறதா?

வன்னியில் இருந்து யுத்த அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்த எமது உறவுகளுக்கு உதவிடுவீர்!