|
யுத்தத்தால் ஏற்படும் பேரழிவைத் தடுக்கவே பிரபாகரனுக்கு கடிதம் எழுதினேன்
வீ.ஆனந்தசங்கரி.
என் அன்புக்கினிய தமிழ் மக்களே!
எ ன்னைப் பற்றி விடுதலைப் புலிகளிடம் தவறான கருத்துக்களை விதைத்தவர்கள் அதன் மூலம் என் அரசியல் ஆளுமையை ஒரங்கட்டி தங்கள் அரசியல் சூழ்ச்சிகளை அரங்கேற்ற நினைத்தவர் கள் இப்போது எங்கே நிற்கிறார்கள் என்பதை ஒருகணம் சிந்தியுங்கள்.விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு நான் எழுதிய அர்த்தமுடைய கடிதங்களை மீளவும் ஒரு கணம் உங்கள் சிந்தனைக்காகத் தருகின்றேன்.என்னை ஓரங்கட்டி விட்டு தாம் நல்லவர்கள் போல் நடித்து ஒன்றுபட்டவர்கள் விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்றவுடன் குத்துப்பட்டு குதறிக்கொண்டு பிரிந்து போனார்கள். எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? இவர்களா உங்கள் பிரதிநிதிகள்? என் அன்புக்கினிய தமிழ் மக்களே! உங்கள் வாக்குகளை உங்கள் இதயம் நிறைந்த உதய சூரியனுக்குப் போடுங்கள். நாடாளுமன்றில் துணிவுடன் பேசுவேன். தமிழர் உரிமையைத் தாருங்கள் என முழங்குவோம். உலகம் என் குரலுக்கு நிச்சயம் செவி சாய்க்கும். இது உறுதி. இதோ நான் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு எழுதிய யதார்த்தமான கடிதங்கள்
அன்புடன் வீ.ஆனந்தசங்கரி.
_____________________________________________________________________________________________________ திரு. வே.பிரபாகரன், தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள், கிளிநொச்சி.
தீர்வுக்கு ஒரே வழி
அன்புள்ள தம்பி!
கடந்த மூன்று, நான்கு ஆண்டு காலமாக எனது கடிதங்களுக்கு நீர் பதில் அனுப்பாதமை துரதிர்ஷ்டமே. இக் கடிதத்திற்கும் உமது பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் கசப்பானாலும் இக்கடிதத்தை கவனம் செலுத்திப் படிப்பீர் என எதிர்பார்க் கின்றேன். நான் இந்த நாட்டு மக்கள் மீதும் குறிப்பாக தமிழ்பேசும் மக்கள் மீதும் மிக அக்கறைகொண்டுள்ளேன் என்பதைப் புரிந்துகொள்ளவும் நிலைமை கட்டுக்கு மீறிச் செல்வதால் மேற் கொண்டு தாமதிக்காமல் மிகவும் துன் பப்படும் நாட்டு மக்களுக்கு அமைதி யையும் சமாதானத்தையும் கொண்டு வரவேண்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இங்கே குறிப்பிடும் சில விடயங் கள் என்னால் முன்பு எழுதப்பட்ட கடிதங்களில் குறிப்பிடப்படாதவையா கும். இன்றைய பரிதாபமான நிலை யில் எமது மக்கள் வாழ்வதற்கு முழுப் பொறுப்பையும் நீரே ஏற்கவேண்டிய காலம் வந்துவிட்டது. உமக்கு விரும்பத்தகாததாயிருந்தா லும் கடந்த காலத்தை மறந்து இலங் கையின் அனைத்து மக்களினதும் சுபீட்சமான வாழ்விற்குப் பொறுப்புட னும் அவதானத்துடனும் செயற்படு மாறு கேட்டுக்கொள்கின்றேன். ஏனை யோர் சிலர் விடுதலைப் புலிகளை தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக முன்னிலைப்படுத்துவதுபோல் நான் செய்யமாட்டேன். ஏனெனில் உமது கொடூரமான செயல்கள் காரணமாக தமிழ்மக்களால் அவ்வாறு நீங்கள் கணிக்கப்படவில்லை. உலகிலேயே மிகக் கொடூரமானவர் என்ற பெயரை நீங்கள் சம்பாதித்துள்ளீர்கள். நாட்டு மக்களுக்க தினமும் பயத்தையும் பீதி யையும் ஏற்படுத்துவதன் மூலம் உங் களுடைய மதிப்பை மிக வேகமாக இழந்துவருகின்றீர்கள் என்பதை அறிய மாட்டீர்கள். உங்களுடைய பயங்கர ஆட்சியால் என்னைப் போன்ற ஒரு சிலர் தவிர சகல தமிழர்களின் குர லையும் அமைதிப்படுத்திவிட்டீர்கள். எனது காலத்திலேயே எமது இனப்பிரச் சினைக்குத் தீர்வைக் காண உதவத் தவறுவீர்களேயானால் என்றும் தீர் வைக் காணமுடியாது. தயவுசெய்து பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப் படையினலான தீர்வை ஏற்பீர்களேயா னால் அதற்குப் பெரும் வரவேற்புக் கிடைப்பது மட்டுமல்ல ஆச்சரியப்படக் கூடிய விதத்தில் எதிர்பாராதவர்களின் ஆதரவு கூட கிடைக்கும்.
கடந்த காலத்தில் நிகழ்ந்த சில கசப் பான சம்பவங்களை உமது ஞாபகத் திற்கு கொண்டுவரவும் விரும்புகிறேன். உம்மை அவமானப்படுத்தவோ அல்லது சங்கடப்படுத்தவோ அல்ல. தமிழர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக கருதும் சிலரது கண்களைத் திறக்க உதவுவ தற்கே. பெரும் பகுதியான சிங்கள மக் களின் நிலைப்பட்டுக்கு இது மாறானதா கும். நியாயமான முறையில் செயற்படும் பெரும் பகுதியான சிங்கள மக்கள் தமிழ் மக்களுடன் சமமாக வாழ்வதையே விரும்புகின்றார்கள்.
நாளுக்குநாள் மக்கள் மாறிக்கொண்டு வருகிறார்கள். சிலர் அபூர்வமான சிந்த னைகளையும் புதிய புதிய கண்டு பிடிப்புக்களையும் வெளியிடுகின்றார் கள். சரித்திரம் திரிக்கப்படுகிறது. சிலர், தமிழர்கள் போர்த்துக்கீசரால் யாழ்ப்பா ணத்தில் புகையிலை நடுகைக்காகக் கொண்டுவரப்பட்டதாக கண்டுபிடித் துள்ளார்கள், மேலும் சிலர் இந்நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமா னதெனவும் அவர்களே இந்தநாட்டில் வாழமுடியும் என்றும் கூறுகின்றார்கள். இக்கூற்று மிகக் கீழிறங்கி ஒரு விவா தத்தை நடத்த நான் விரும்பவில்லை. 600 லட்சம் தமிழ் மக்கள் வாழும் தமிழ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தை 20 மைல் நீளம் கொண்ட பாக்குத் தொடு வாயே பிரிக்கின்றது என்பதை ஒருவர் அறிந்திருந்தால் போதும். யாழ்ப்பாணத் திலிருந்து தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட் டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் இடைப் பட்ட கடலை பலர் நீந்திக் கடந்துள்ள னர். இரவு போசனத்தை முடித்துக் கொண்டு இந்தியா சென்று ஒரு எம்.ஜி. ஆர்.படத்தை பார்த்து விட்டு அதிகாலை நாடு திரும்பிவிடும் சகோதரர்கள் பற்றி எனது பள்ளித் தோழர்கள் கூறியிருக்கின் றார்கள். மேலும் 5 ஈஸ்வரன் கோயில் கள், தெவிநுவரவில் உள்ள விஷ்ணு தேவாலயம், கதிர்காமத்து முருகன் போன் றவை சரித்திர காலத்திற்கு முந்திய மிகப் பழைவாய்ந்த கோயில்களாகும். ஓர் இனத்தையோ ஒரு குழுவையோ சேர்ந்தவனைப் போல அல்லாமல் எப் பொழுதும் நான் எமது பிரச்சினைகளை தேசப்பற்றுக் கொண்ட ஒர் இலங்கைய னாகவே நோக்குகின்றேன். இதுவே தேசாபிமானமாகும். அமைதியும் பொறு மையுமே எமது பிரச்சினைகளை தீர்ப்ப தற்கு மிகவும் தேவைப்படுகின்ற இவ் வேளையில் நியாயமாகச் செயற்படும் சிங்களவர்களை கூட தூண்டிவிட்டோ அவமானத்தை ஏற்படுத்தியோ பிரச்சி னையை மேலும் சிக்கலடையச் செய்ய நான் விரும்பவில்லை.
தனிச் சிங்களச் சட்டத்தை மைல் கல்லாக வைத்துப் பார்ப்பின் எமது இனப் பிரச்சினை 50 வயதைத் தாண்டிவிட் டது. அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத் தில் உயர் வகுப்புகள் உள்ள பாடசாலை கள் அத்தனையிலும் சிங்கள பட்டதாரி கள் சிங்களம் போதிப்பதற்காக நிய மிக்கப்பட்டமையால் இத்தகைய ஒரு சட்டத்திற்கு அவசியம் ஏற்படவில்லை. அப்போது, ஒன்றில் நீர் பிறந்திருக்க வில்லை. அல்லது நீர் பால்குடியாக இருந்திருப்பீர். அக்காலத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் சிறு குழுக்கள் சமாதானமாகவும் அமைதியாகவும் ஒரு வரை ஒருவர் மிகவும் மதித்தும் நேசித் தும் வாழ்ந்தனர். தென்னிலங்கையி லுள்ள ஒரு கோயில் சம்பந்தமாக ஏற் பட்ட ஒரு சிறு சம்பவம் தவிர அதுகூட பல ஆண்டுகளுக்கு முன் அமைதி யான எமது நாட்டில் வகுப்புக் கலவரம் என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. அந்தச் சம்பவத்தில் யார், யார் சம்பந் தப்பட்டார்கள் என்பதைக் கூட நான் கூற விரும்பவில்லை.
சகல இன மக்களும் அமைதியாக வாழ்ந்த நாட்டுக்கு அழிவைக் கொண்டு வந்ததே தனிச்சிங்களச் சட்டம்தான். அதைக்கூட உரிய நடவடிக்கை எடுக் கும் முயற்சியை சில இனவாதிகள் திட் டமிட்டுக் குழப்பியதாலேயே இந்நிலை எற்பட்டது. இல்லையேல் இந்நிலை ஏற்பட்டிருக்காது அத்தகைய ஒரு சிலர் உலகின் எப்பகுதியிலும் இருக்கத்தான் செய்வார்கள். நீர் குழம்பாது இருந்தி ருப்பின் மிகப் பிரபல்யமான அகிம்சை வாதி தந்தை செல்வநாயகம் கியு சி அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி சமாதானமான முறையில் தீர்வு ஒன்றைக் கண்டிருக் கும் ஆனால், அதுவரை யாழ்ப்பாணச் சரித்திரத்தில் இடம்பெறாத ஒரு தீவிர நடவடிக்கையை நீர் எடுத்தமையா லேயே நிலைமை மோசமடைந்தது. யாழ்ப்பாணதில் முன்னைநாள் மேயரா கவும் எம்.பியாகவும் இருந்த திரு. அல் பிரட் துரையப்பாவை சுட்டுக்கொன்று துப்பாக்கி கலாசாரத்தை நீர் அறிமுகம் செய்ததாலேயே நிலைமை வன்முறைக் குத் திரும்பியது. மிகப் பிரபல்யமான தலைவர்களாகிய அமரர் ஜி.ஜீ.பொன் னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கியு சி ஆகியோரின் தலைமையில் இயங்கிய இரு கட்சிகளின் வேட்பாளர் களையும் யாழ்ப்பாணத் தொகுதியில் தோற்கடித்தமையே அவர் செய்த குற்ற மாகும். அரசியலில் மிகவும் பிரபல்ய மடைந்திருந்த அமரர் அல்பிரட் துரை யப்பா பொன்னாலை வரதராஜப் பொரு மாள் கோயிலில் தரிசனம் செய்து கொண்டிருந்தவேளையில் நீர் அவரைச் சுட்டுக்கொன்றீர். அவரை ஏன் கொன் றீர் என்று உமக்கே தெரியுமோ எனக் குத் தெரியாது.
அன்புடன்
வீ.ஆனந்தசங்கரி.
|