|
புலனாய்வுச் செயற்பாடுகள் விஸ்தரிப்பு; நாடுகடந்த தமிழீழ அரசு உடையும் - அமைச்சர் றோகித தெரிவிப்பு
“நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆரம்பித்துள்ள புதிய அச்சுறுத்தலை நாம் நன் றாக அறிவோம். அந்த கட்டமைப்பை நாங்கள் நிச்சயம் உடைப போம்” என்று வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் சமூகமே அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு களுக்கு உயிர் கொடுத்து சர்வதேச சமூகத்தை முனைப்பாக் குவதில் செயற்பட்டு வருகிறது.புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கைக்கு பெரும் அச் சுறுத்தலாக இருந்து வருவது எமக்கு நன்றாகவே தெரியும்.
நாடு கடந்த தமிழீழ அரசு என்ற கட்டமைப்பை உருவாக்கி தற்போது இலங்கை அரசுக்கு புதிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி யுள்ளார்கள். இந்த கட்டமைப்புக்களை நாம் நிச்சயம் உடைப்போம் அதற்கு உள் நாட்டிலும் வெளிநாட்டி லும் புலனாய்வு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம்.
இந்த கட்டமைப்புக்களை முற் றாக அழித்தொழிப்பதற்கு 10 வருடங்களும் ஆகலாம். கடந்த மே மாதம் போர் முடிபடைந்த பின்னரும் நாம் எமது இலக்குகளை மாற்றி அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறோம் என்றார்.இலங்கை அரசை ஐ.நா. விளக்கம் கோரியிருப்பது தொடர்பாக கருத்துக் கூறுகையில்
சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்த தென்று ஐக்கிய நாடுகள் சபை விளக்கம் கோரியிருப்பது தமக்கு வியப்பை அளிக்கிறது. மிகப்பாரதூரமான ஒரு விடயத்தை ஊடகவியலாளர் ஒருவரி டம் தான் அறிந்து கொண்டதாக அரசியல் வாதி ஒருவர் கூறினார் என்று தெரிவித்து அதனை ஆதாரமாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை எம்மிடம் விளக்கம் கோருகின்றது என்றால் இதை விட பொறுப்பற்ற செயல் வேறு ஒன்றுமே இருக்க முடியாது.
உண்மையிலேயே ஐ.நாவின் இந்த செயல் எமக்கு வியப்பை அளித்துள்ளது.போர் முடிந்து இரண்டு நாட் களுக்குப்பின்னர் தான் கேள் விப்பட்ட சம்பவத்தை போர் முடிபடைந்து 8 மாதங்களின் பின் னர் பொன்சேகா வெளியிட்டிருக்கிறார் என்றால், இதில் எவ்வளவு தூரம் உண்மையுள்ளது என்பதை முதலில் உணர வேண்டும் என்றார்.
|