a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி             உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்      எங்கள்தேசம்         சலசலப்பு         நோயல்நடேசன்     விடிவெள்ளி         எங்கள்பூமி              ரீவடை இணையம்        பார்வை             தமிழ்யுகே
 

Asientribune
Lines-Magahzine
Srilankaguardian
The lka academic
Tamil Week            sldf
Uthr                
        

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                          05.10.2010

-தமிழ் மக்களின் அரங்கம்: வரவேற்க வேண்டிய நல்லமுயற்சி.

- கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

Tamilparties-3ஈழத்தமிழர்களின் எதிர்காலம் குறித்து என்ன நினைக்கிறீங்கள்?’ என்ற கேள்விக்கு பொருத்தமான, தெளிவான பதிலை இன்றைய நிலையில் யாரும் தெரிவிப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. அப்படியான குழப்பகரமான நிலையில் ஈழத்தமிழரின் அரசியல் எதிர்காலமும் நிகழ்கால அரசியல் நடவடிக்கைகளும் இருக்கின்றன.நிகழ்கால நடவடிக்கைகளும் முயற்சிகளுமே எதிர்காலத்தை உருவாக்குகின்றன. அதேவேளை அது நிகழ்காலத்தையும் பாதுகாக்கிறது. இதுதான் பொதுவான விதி. ஆனால், இந்த விதி ஈழத்தமிழரின் அரசியல் தலைவிதியிலும் வாழ்க்கையிலும் வேறுவிதமாகவே விளையாடிக்கொண்டிருக்கிறது. அது நிகழ்காலத்தையும் பாழடித்து, எதிர்காலத்தையும் பழுதாக்கிக்கொண்டிருக்கிறது. பொதுவாக சிதைந்து போன நிகழ்காலத்தின் முன்னே இருக்கும் எதிர்காலத்துக்கான கேள்விக்குறியின் மீது குந்திக்கொண்டும் படுத்துறங்கிக் கொண்டுமே ஒவ்வொரு தமிழரும் வாழ்க்கையை ஓட்டவேண்டியிருக்கிறது. முப்பதாண்டு காலத்துக்கும் அதிகமாகப் போராட்டத்தில் ஈடுபட்ட, முதன்மைப்போராட்டக்காரரான ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார். நான் மூன்று விதமான சவால்களை இந்த முப்பதாண்டுகால வாழ்க்கையிலும் எதிர்நோக்கியிருக்கிறேன். ஓன்று, நடந்து கொண்டிருந்த போராட்டத்தை வெற்றிபெற வைக்கவேண்டும் என்பதற்கான சவால். அதற்காக இரவு பகலாக பல்வேறு நெருக்கடிகள், அபாயங்களின் மத்தியில் உழைக்க வேண்டியிருந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி நிலைமைகளும் நிகழ்ச்சிகளும் அமையவில்லை. (மேலும்) 24.08.10

__________________________________________________________________________________________________

மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக  படை அதிகாரிகள் தமிழ்க்கட்சிப் பிரதிநிதிகள் சந்திப்பு

மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாகக் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இராணுவ உயரதிகாரிகளுக்கும் தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு , கல்லடியிலுள்ள 233 ஆவது இராணுவத் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இராணுவ இணைப்பதிகாரி மொனியஸ் பெரேரா தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஈ.பி.டி.பி., ரெலோ, புளொட், ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா), ரி.எம்.வி.பி. ஆகிய கட்சிகளின்பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது தடுக்க கட்சிகள் முழுமையான ஒத்துழைப்பு நல்கவேண்டுமென அங்கு முடிவு செய்யப்பட்டது. ஈ.பி.டி.பி. சார்பில் சிவாமாமா, ரெலோ சார்பில் பிரசன்னா, புளொட் சார்பில் சூட்டி, ஈரோஸ் சார்பில் உதயணன், ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா) சார்பில் மோகன் மற்றும் ஸ்ரீ, ரி.எம்.வி.பி. சார்பில் கைலேஸ்வரராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், இவ்வாறான அசாதாரண சூழல் நீடித்தால் சோதனை செய்ய வேண்டிய சூழல் உருவாகும். இதனால், மக்களுக்கு சிரமம் ஏற்படும் எனப் படைத்தலைமையக அதிகாரி குறிப்பிட்டதுடன், இவ்வாறான நாசகார வேலையைச் செய்வோரை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்த அபகரிப்பு முயற்சி கொள்ளையர்களின் நடவடிக்கையாகுமென்றும் இவ்வாறானவர்களைத் தண்டிப்பது அவசியமென்றும் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்

__________________________________________________________________________________________________

கனடா புலிகளிற்குள் மோதல்! மக்களவை உறுப்பினர்கள் புலிகளின் தமிழ் காங்கிரஸ் நேரு குணா மீது தாக்குதல்!

கனடாவில் புலிகளிற்குள் மோதல் வலுவடைந்துள்ளதுடன் கைகலப்பிற்கும் சென்றுள்ளது. புலிகளின் அழிவிற்கு பின்னர் புலிகளிற்குள் ஆரம்பித்த காட்டி கொடுப்பு, சொத்துபிரிப்பு என்று; தொடர்ந்த உள்மோதல் தற்போது கைகலப்பாக மாற்றம் கண்டுள்ளது. புலிகளின் ஆஸ்தான அரசில் ஆய்வாளராக செயல்பட்டுவந்த நேரு குணா என்பவர் மீது மக்களவை உறுப்பினர்கள் என்று போலி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட சிலர் தாக்குதல் மேற்கொண்டதில் நேரு குணாவின் கை முறிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஆண்மையில் தாய்லாந்தில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு பிரட்டிஸ் கொலம்பியா மாநிலத்தை வந்தடைந்த அகதிகளிற்கு உதவும் நடவடிக்கையில் தமிழ் காங்கிரஸ் என்ற புலிகளின் உப அமைப்பாக செயற்பட்டுவரும் பிறிதொரு அமைப்பினர் உதவி வருவதுடன், அந்த மக்களிற்கு என்று கூறி நிதி சேகரிக்கவும் நடவடிக்கை எடுத்துவருகின்ற நிலையிலேயே தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் அகதிகளாக வந்த மக்களிற்கு உதவக்கூடாது என்று கூறி, மக்களவை உறுப்பினர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதன்போதே நேரு குணா என்பவர் காயமடைந்துள்ளார்.

__________________________________________________________________________________________________

கடும் மழையினால் வன்னிப்பகுதியில் மீள்குடியேறிய மக்கள் பாதிப்பு

  கடந்த இரு தினங்களாக பெய்துவரும் கடும்மழை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் உட்பட வன்னிப்பெரு நிலப்பரப்பில் மீள்குடியேறிய மக்கள் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளனர். கூரை விரிப்புக்களின் கீழும் தகர கொட்டகைகளிலும் வாழும் மீளக்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் மழை வெள்ளம் காரணமாகப் பெரும் அவல நிலைக்காளாகியுள்ளனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் போடப்பட்ட மண் அணைகள் பொதுமக்களது காணிகளில் இருந்தும் வீதிகளிலிருந்தும் அகற்றப்படாததால் மக்கள் வாழ்விடங்களில் இருந்து வெள்ளம் வெளியேற முடியாத நிலை காணப்பட்டது. இதேவேளை வன்னி வீதிகள் சரிவரத் திருத்தம் செய்யப்படாமையால் பல இடங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனையிறவுக்கும் உமையாள்புரத்திற்கும் இடையில் ஏ9 வீதியில் கன்டர் ரக லொறி ஒன்றும் குடை சாய்ந்து பாரிய விபத்துக்குள்ளாகியது.மழை காரணமாக ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் எழுதிய மாணவர்களும் பெரிதும் பாதிப்படைந்தனர். மாங்குளம், முல்லைத்தீவு வீதி மற்றும் கிளிநொச்சி உருத்திரபுரம் வீதி, முறிகண்டி பூநகரி, ஜெயபுரம் வீதி ஆகியன கிரவல் மண் வீதியாக காணப்படுவதால் போக்குவரத்து இடையூறு அதிகரித்துள்ளதுடன் இவ்வீதிகள் யாவும் தார் வீதிகளாக மாற்றப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வன்னியில் மழை காரணமாக நலன்புரி முகாம்கள் மற்றும் இடைத்தங்கல் முகாம்கள் மற்றும் இடைத்தங்கல் நிலையங்களில் உள்ளவர்கள் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை வன்னிப் பகுதியில் வீடமைப்புத் திட்டங்களும் மழை காரணமாகப் பாதிப்படைந்துள்ளன.

__________________________________________________________________________________________________

விடுதலைப்புலிகளுடன் தொடர்பில்லை:மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., திட்டவட்ட மறுப்பு

கே.பியின் பத்திரிகை பேட்டிக்கு மறுப்பு

சென்னை:"விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையில் போர் நிறுத்தம் கொண்டு வருவதற்குரிய ஆலோசனையை என்னிடம் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுச் செயலர் நடேசன் தெரிவிக்கவில்லை. விடுதலைப்புலிகளுடன் எனக்கு எந்த தொடர்பும் இருந்ததில்லை' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., மகேந்திரன் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள, விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர் பத்மநாபன் அளித்த பேட்டி ஒன்றில், இலங்கையில் போர் நிறுத்தம் வராமல் தடுத்தது வைகோ தான் என குற்றம் சாட்டியிருந்தார். அவர் மேலும் கூறுகையில், "கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன் இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே உச்சக்கட்ட போர் தீவிரம் அடைந்திருந்தது. இலங்கை ராணுவத்திற்கு இந்திய ராணுவம் மறைமுகமாக உதவி செய்கிறது என்ற குற்றச்சாட்டை, தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க., கூட்டணி கட்சித் தலைவர்கள் எழுப்பினர். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும் என மத்திய அமைச்சர் சிதம்பரம் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த விடுதலைப்புலிகளும் விரும்பினர். இந்த முடிவை, விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுச் செயலர் நடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., மகேந்திரனிடம் தெரிவித்தார். அதை அவர், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவிடம் பகிர்ந்து கொண்டார். (மேலும்) 23.08.10

__________________________________________________________________________________________________

கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களுக்கு அனுபவிக்கும் கொடுமைகள்

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்- 16.08.2010

யோகேஸ்வரியின் வழக்குக்கு என்ன நடந்தது என்று கேட்டபோது புலிகள் அந்தப் பெண்ணின் தாய் தகப்பனைப் பார்க்கக் போவதாகத் தந்திரமாகச் சொல்லிக் யோகேஸ்வரியைக் கூட்டிக் கொண்டு போய் யோகேஸ்வரியின் பிறப்பிடமான முள்ளியாவளைக்குப் போகும் வழியில் யோகேஸ்வரியை முடித்து விட்டார்கள' என்று சொல்லப்பட்டது.

பழம் பெருமை பேசும் நாங்கள் எப்படி ஒரு ஏழை வேலைக்காரியை நடத்தினோம் என்பதற்கு யோகேஸ்வரி என்ற ஏழைப்பெண்ணுக்கு நடந்த கதியை இன்னொரு தரம் ஞாபகப் படுத்திச் சொன்னாற்தான் புரியும். 03.10.2005ல் யாழ் நீதிபதியின் முன்னிலையில் யாழ் பல்கலைக்கழக் விரிவுரையாளர்' பொங்கு தமிழ் ரி.கணேசலிங்கம் என்பவா'; 13 வயதான அவரின் வீட்டு வேலைக்காhயை 40 தடவைகள் பாலியல் வன்முறை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை செய்யப்பட்டார் அன்று அந்த அபலைப் பெண்ணுக்கு நீதி கோட்டு யாழ் நகரிலுpருந்து பெண்கள்  அமைப்பைச் சேர்ந்தவர்களும் முற்போக்கு உணர்வு கொண்ட மாணவர்களும் வழக்கு நடந்த  நிலையத்துக்க முன் போராட்டம் செய்தார்கள். அப்போது யாழ் நீதிபதியாகவிரந்த திருமதி ஸ்ரீநிதி அவர்கள் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் ரி. கணேசலிங்கத்திற்குப் பிணை கொடுக்க முடியாது என்று சொன்னார். குற்றவாளியாக் குற்றம் சாட்டப்பட்ட விரிவுளையாளர் யாழ் பல்கலை;கழகப் பதவியைத் தொடரமுடியவில்லை. அப்போது லண்டனுக்கு வந்த தகவல்களின்படி யாழ் பல்கலைக் கழகத்தில் பெண்களுடன் ' பாலியலச் சேட்டை; விடும் பல விரிவுரையாளர்களின் பெயர்ப் பட்டியல்களை வெளியிடுவதாகச் சொன்னார்கள்.  புல்கலைக்கழக விரிவுரையாளால் கொடுமைக்குள்ளானவர் என்று சொல்லப்பட்ட யோகேஸ்வரி யாழ் பெண்கள் பாதுகாப்புக் காப்பகத்தில் யாழ் மனித உரிமை அமைப்பின் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டார். (மேலும்) 23.08.10

__________________________________________________________________________________________________

குழந்தைப் பருவம் தொலைந்து போக இடமளிப்பதா?

school-children-sri-lankaதரம்-5 வகுப்பு மாணவருக்கான புலமைப்பரிசில் பரீட்சை நேற்று முடிவடைந்து விட்டது. அம்மாணவர்கள் நீண்ட கால மனச் சுமையை நேற்று இறக்கி வைத்துவிட்டு இப்போதுதான் சாவகாசமாக அமர்ந்துள்ளனர். ஆனாலும் அந்தப் பிஞ்சுச் சிறார்களுக்கு மனப்பதற்றம் முழுமையாகத் தணிவதற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் உள்ளன. இப்போது அவர்களைப் பீடித்துள்ள கவலை பரீட்சைப் பெறுபேறு பற்றியது... இப்பரீட்சையில் சித்தியடைந்து விடுவோமா அல்லது தவறி விடுவோமா என்ற ஏக்கம் இன்னும் ஓரிரு மாதங்களுக்கு இவர்களை வாட்டி வதைக்கப் போகின்றது. அதன் பிறகு பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானதும் இம்மாணவர்கள் எதிர்நோக்கப்போகும் பிரச்சினைகள் பாரதூரமானவையாகும். சித்தி பெறுவோருக்குப் பிரச்சினைகள் இருக்கப்போவதில்லை. அவர்கள் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைவது ஒருபுறமிருக்க அவர்களது பெற்றோர் அடைகின்ற ஆனந்தக்களிப்புதான் இங்கு முக்கியமானது. அம்மாணவனின் வகுப்புக்கும் கற்பித்த ஆசிரியருக்கும் இனிப்புப் பண்டங்கள் அனுப்பப்படும். அவனுக்குக் கற்பித்த ஆசிரியருக்கு நன்றிப் பரிசுகள் கையளிக்கப்படும். இவையெல்லாம் போதாதென்று உறவினர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து அளிக்கின்ற புதுவித கலாசாரமும் உருவாகி வருகிறது. (மேலும்) 23.08.10

__________________________________________________________________________________________________

மன்னார் மாவட்டம்: மீள்குடியேற்றத்துக்கு இன்னும் 145 குடும்பங்களே எஞ்சியுள்ளன

அமைச்சர் பசில் ராஜபக்ஷ

pasil rajapakshaமன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோரில் மேலும் 145 குடும்பங் களே மீள்குடியேற்றத்துக்காக எஞ்சியுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்டக் குழு கூட்டத்தின் போதே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் இதுவரை 12,180 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளன. மேலும் 145 குடும்பங்களே மீள் குடியேற்றப்படவுள்ளன. மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 30ம் திகதியிலிருந்து மீள் குடியேற்றம் நடைபெற்று வருகின்றது. அன்றிலிருந்து இன்றுவரை மீள் குடியேற்றம் நடைபெற்றதுடன் தற்போது மேலும் 145 குடும்பங்களே எஞ்சியுள்ளன. கடந்த ஒரு வருட குறுகிய காலகட்டத்தில் 12,180 குடும்பங்களைச் சேர்ந்த 46,774 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதுடன் 145 குடும்பங்களைச் சேர்ந்த 543 பேரே மீளக்குடியமர்த்துவதற்காக எஞ்சியுள்ளனர் எனவும் மாவட்டக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்) 23.08.10

__________________________________________________________________________________________________

திருப்பமின்றித் தொடர்கின்றது நேபாள அரசியல் நெருக்கடி

சங்கர சேயோன்

கடந்த மூன்று மாதங்களாக நேபாளத்தில் பிரதமர் இல்லை. ஜனாதிபதி ராம் பரன் யாதவ் பிரதமரின் கடமைகளையும் புரிந்து வருகின்றார். புதிய அரசியலமைப்பை வரைவது தொடர்பாகத் தோன்றிய நெருக்கடியே இந்த நிலைமைக்குக் காரணம். நீண்ட காலமாக ஆயுதப் போராட்டத்தை நடத்தி வந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) ஜனநாயக அரசியலுக்கு வருவதற்குச் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. நேபாளத்தின் ஜனநாயக அரசியல் கட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் மாவோயிஸ்டுகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்தனர். மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதம் ஏந்திய போராளிகளில் ஒரு பிரிவினர் நேபாள இராணுவத்தில் இணைவதும் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று இரண்டு வருடங்களுக்குள் தற்போதைய இடைக்கால அரசியலமைப்புக்குப் பதிலாகப் புதிய அரசியலமைப்பொன்றை வரைவதும் உடன்பாட்டின் பிரதான அம்சங்கள். முடியாட்சியிலிருந்து விடுபட்ட நேபாளத்தில் இந்த உடன்பாடு ஆக்கபூர்வமான திருப்புமுனை என்று அந்த நேரத்தில் கருதப்பட்டது. (மேலும்) 23.08.10

__________________________________________________________________________________________________

பிரபாகரனை காப்பாற்றும் திட்டம் நெடியவன் பணந்தர மறுத்ததால் தோல்வியடைந்தது

- கே.பி டெய்லி மி்ரருக்காக வழங்கிய செவ்வி பாகம் 3

kp-5போரின் இறுதி மாதங்களின் போது வெளிநாட்டு தமிழர்களிடமிருந்து பேரளவு விசேட நிதி சேகரிப்பு நடைபெற்றது. ஆனால் இதில் ஒரு சதம் கூட யுத்தத்தில் பயன்படுத்தப்படவில்லை. இது நெடியவன் மற்றும் அவரது ஆட்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு மேலாக எல்.ரீ.ரீ.ஈ நிதிப்படுத்தப்படும் அல்லது நேரடியாக நடத்தப்படும் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் பல உண்டு. இதெல்லாம் பெருமளவு பணம் சம்பந்தப்பட்டவை. தமிழர் புனர்வாழ்வு நிறுவனத்தின் ( சார்பில் சேர்க்கப்பட்ட ஒரு  தொகைப் பணமும் உண்டு. நெடியவனும் அவரது  ஆட்களும் இந்தப் பணம் தொழில் என்பவற்றின்  மீதான தமது கட்டுப்பாட்டை  தொடர்வதற்கும் இனிவரும் காலங்களில் மேலும் நிதி சேகரிப்பதற்கும் ஆயுதப்போராட்டம் முடியவில்லை, தமிழ் ஈழம் சந்திவரை வந்துவிட்டது என்ற நாடகங்களை ஆடவேண்டிய தேவை உள்ளது. இதற்காக பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற பச்சைப் பொய்யை தொடர்ந்து கூறத்தான் வேண்டும். ஏனெனில் பிரபாகரன் இன்றி வெற்றிகரமான ஒரு ஆயுதப்போராட்டம் எமது வாழ்நாளில் ஒருபோதும் இருக்கப்போவதில்லை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் இது நெடுகத் தொடரமுடியாது. உண்மை ஒரு நேரம் எல்லோருக்கும் தெரியவரும். அப்போது நெடியவனின் கூத்துக்கள் அம்பலமாகும். (மேலும்) 21.08.10

__________________________________________________________________________________________________

புலிகளுக்கு சப்பைக்கட்டு கட்டிய  சம்பந்த(னுக்கு)ம் முஸ்லிம்களுக்கும் என்ன   சம்பந்தம்?

- எஸ்.எம்.எம்.பஷீர்

rauf samp 1[1]நெஞ்சில் உரமும் நேர்மைத்திறனுமற்ற இந்த கூட்டணி  பிருகிருதிகள் பற்றி நூற்றுக்கணக்கான சம்பவங்களில் சாம்பிலுக்கு தனிப்பட்ட அனுபவத்தினூடான சம்பவமொன்றையும் இங்கு  சுட்டிக்காட்டுவது பொருத்தமாகவிருக்கும். சில வருடங்களுக்கு முன்பு இலண்டனிலே ஒரு சந்திப்பொன்றில் கலந்துகொன்ட தமிழ் கூட்டமைப்பின் பிரதிநிதியான சுரேஷ் பிரேமசந்திரனுடனான  கலந்துரையாடலின் போது அக்கால கட்டத்தில் கொழும்பில் டக்ளஸ் தேவானந்தா மீது  தற்கொலை தாக்குதல் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது சம்பந்தமாக கூட்டமைப்பு சக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலேனும் ஏன் ஒரு அனுதாபமோ கண்டனமோ தெரிவிக்கவில்லை என்று நான் கேட்டபோது சுரேஸ் பிரேமசந்திரன் தமது கட்சித்த்லைவர் (சம்பந்தன்) வெளிநாடொன்றில்  இருப்பதாகவும் அவர் திரும்பியதும் அது பற்றி தீர்மானிப்பதாகவும் குறிப்பிட்டார். அவ்வளவுதான் "நேர்மையும் உண்மையும்" கொண்ட  சம்பந்தனோ அவரின் சகபாடிகளோ இன்று வரை அதுபற்றி வாயே திறக்கவில்லை. ஏனெனில் எப்பொதுமே புலிகள் செய்தால் அதற்கு காரனம் காண்பதில் சமர்த்தர்கள் இவர்கள். இப்போதான் சற்று மெதுவாக வாயை திறந்து பிள்ளயை நொந்து கொள்வதுபோல் புலிகளை அன்புடன் கண்டிக்கிறார்கள். ஆனால் எங்கள் முதுகு மீது இனிச் சவாரி செய்யமுடியாது, ஆனால் ஹக்கீம் வகையறாக்கள் உங்களுக்கு அந்த வாய்ப்பை தரலாம். இப்பொதெல்லாம் எதிர் கூட்டணிக்கு எதிர்ப்பதை தவிர வேறு சமாச்சாரமே இல்லை  (மேலும்) 22.08.10

__________________________________________________________________________________________________

கூட்டமைப்பின் எதிர்ப்பு அரசியல் எவ்வளவு காலம் சென்றாலும் பலன் தரப்போவதில்லை

தமிழ் மக்களின் உரிமையைப் பெற வேண்டுமானால் அரசாங்கத்தை எதிர்த்தே தீர வேண்டுமா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அரசாங்கத்துடன் இணக்கமான நிலையில் செயற்பட்டு உரிமைகளைப் பெறுவதா அல்லது எதிர்நிலை எடுத்துச் செயற்படுவதா என்பது பற்றிய தீர்மானம் சமகால யதார்த்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியது.

தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கத்தின் தலையில் போட்டு அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்து எதிர்ப்பு அரசியல் செய்வதன் மூலம் இலகுவாக அம்மக்களின் வாக்குகளைப் பெற முடியும். இது வெகுஜன விருப்புவாத (பொப்யூலிஸ்ட்) அரசியல். இதன் மூலம் மக்களை உணர்ச்சிவசப்படுத்தலாம். ஆனால் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சாத்தியமில்லை. அறுபது வருடங்களாக இதே பாணியிலான அரசியலையே நம் தலைவர்கள் செய்து வருகின்றார்கள். இதுவரை மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை. இந்த அரசியலை இன்னும் நூறு வருடங்கள் செய்தாலும் மக்களுக்கு எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் தலைவர்கள் தங்கள் பாராளுமன்ற ஆசனங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள். காலத்துக்குக் காலம் சிலரைப் பாராளுமன்றத்துக்கு அனுப்புவது தான் தமிழ் மக்களின் அரசியலாகிவிடக்கூடாது. மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே அரசியலின் குறிக்கோள். அதற்கேற்ற விதத்தில் தலைவர்கள் மாற வேண்டும். மாறாவிட்டால் தலைவர்களை மாற்ற வேண்டும். (மேலும்) 21.08.10

__________________________________________________________________________________________________

தலைவர்கள் மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும்

இனப் பிரச்சினையின் தீர்வுக்கு மிக அண்மை வரை நாம் சென்றிருக் கின்றோம். பண்டா - செல்வா ஒப்பந்தம், ஐக்கிய முன்னணி அரசா ங்கத்தின் முதலாவது குடியரசு அரசியலமைப்பு, பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் என்பனவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம். முதலாவது குடியரசு அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் பண்டா - செல்வா ஒப்பந்தத்தின் முக்கிய மான சரத்துகளை அதில் உள்ளடக்கலாம் என்று அன்றைய அரசாங் கம் விடுத்த அழைப்பைத் தமிழரசுக் கட்சி நிராகரித்துவிட்டது. தீர்வுக்கு அண்மையில் சென்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தலை வர்களின் தூர நோக்கற்ற முடிவுகளால் இழந்திருக்கின்றோம். இந்த உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூறாமல் சிங்களத் தலைவர்களே தீர்வுக்குத் தடை என்று சொல்லிக்கொண்டிருப்பது மக்களை ஏமாற் றும் செயல். இப்போதும் தலைவர்கள் மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூறுவதாக இல்லை. இன்றைய நிலையில் இறுதி அரசியல் தீர்வை உடனடியாகப் பெறுவது சாத்தியமில்லை. உடனடியாக எந்தத் தீர்வு சாத்தியமோ அதை ஏற்றுக்கொண்டு இறுதித் தீர்வுக்கான முயற்சியை முன்னெடு ப்பது தான் சரியான அணுகுமுறை. இதுதான் தயார்த்தம் என்ற உண் மையை எடுத்துக் கூறாமல் வடக்கும் கிழக்கும் இணைந்த இறுதித் தீர்வைத் தவிர வேறெதையும் ஏற்கப் போவதில்லை என்று கூறுவது மக்களுக்கு உண்மையை மறைத்து அவர்களைத் தவறாக வழிநடத் தும் செயல். உடனடியாக இறுதித் தீர்வைப் பெறுவதற்கான சாத்தியம் இருக்கின்றதென அவர்களை நம்ப வைக்கும் செயல். இதனால் தலைவர்கள் நன்மையடையலாம். மக்களுக்கு ஒரு நன்மையும் இல்லை. (மேலும்) 21.08.10

__________________________________________________________________________________________________

இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கிறார்கள்

அருண்குமார்

இந்தியாவின் மக்கள் தொகையான 1.1 பில்லியனில் 55 சதவீதம் பேர்- அதாவது 645 மில்லியன் மக்கள் வறுமையிலேயே வாழ்வதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட குறியீட்டைப் பயன்படுத்தியபோது, ஏறத்தாழ உலகின் ஏழை மக்களில் மூன்றில் ஒருவர் இந்தியாவில் வசிப்பதாக அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. வறுமை மட்டங்களை மிகவும் துல்லியமாகவும் முழுமையாகாவும் மதிப்பிடுவதற்காக பரந்த அளவிலான பன்முக அளவீடு வறுமைக் குறியீட்டை (எம்.பி.ஐ.) ஆக்ஸ்போர்டு வறுமை- மனிதவள மேம்பாட்டு முன்முயற்சி திட்டம், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் (யு.என்.டி.பி) ஆகியவை உருவாக்கியுள்ளன. யு.என்.டி.பி.யின் ஆண்டு மனிதவள மேம்பாட்டு அறிக்கையை தயாரிக்க கடந்த 1997 முதல் பயன்படுத்தும் மனிதவள வறுமை குறியீட்டுக்கு பதிலாக புதிய குறியீடு பயன்படுத்தப்படுகிறது. எம்.பி.ஐ. மதிப்பீடு செய்யப்படும்போது வருவாய், சொத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அல்லது `இழப்புகள்' கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகின்றன.  (மேலும்) 21.08.10

__________________________________________________________________________________________________

13வது அரசமைப்புத் திருத்தம் தீர்வு அல்ல - டக்ளஸ்

Jaffna Meetingஅரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுலாக்கம் செய்கின்றமை தொடர்பாக விளக்கம் அளிக்கும் உயர்மட்ட மாநாடு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இத்திருத்தச் சட்டம் குறித்து பொதுமக்களில் பல்வேறு தரப்பினருக்கும் விளக்கம் அளிக்கும் மாநாடுகள் மாகாணங்கள் தோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அரசமைப்புக் கற்கை நிறுவனமும் மாகாண சபை அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான தேசிய அமைப்பும் சேர்ந்து இம்மாநாடுகளை நடத்தி வருகின்றன. இந்த வகையில் வட மாகாணத்துக்கான மாநாடு யாழ்.திருமறைக் கலாமன்ற திருத்தூது மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் .வீ.ஆனந்தசங்கரி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணியின் செயலாளர் நாயகம் தி.சிறிதரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம்.முஸ்தபா ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண, பேராசிரியர்களான ஏ.எம்.நவரட்ண பண்டார, ரஞ்சித் அமரசிங்க, அசோக எஸ் குணவர்த்தன ஆகியோரும் பேராளர்களாகப் பங்குபற்றினர். (மேலும்) 21.08.10

__________________________________________________________________________________________________

எக்னாமிஸ்ட்' சஞ்சிகை பறிமுதல்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ‘எக்னாமிஸ்ட்’சஞ்சிகை சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்த சஞ்சிகையின் இறக்குமதியாளரும் பிரசுரிப்பாளருமான விஜித யாப்பா தெரிவித்துள்ளார். பொதுவாக இவ்வாறு நடைபெற்றால் பறிமுதல் செய்யப்பட்ட சஞ்சிகைகள் தகவல்துறைக்கு அனுப்பப்பட்டு அவை வெளியிடப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியமர்த்துவது தொடர்பாக வந்த செய்தியால் தான் இது இருக்கலாம் என தான் கருதுவதாகவும், ஆனால் இது குறித்து அதிகாரிகள் எதுவும் கூறவில்லை என்றும் அவர் கூறினார்.  கடந்த வாரம் இதே போன்று ‘இண்டர்நேஷன்ல் ஹெரால்ட் ட்ரீபியூன்’ பிரதிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவை நான்கு நாட்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். - B.B.C News

__________________________________________________________________________________________________

வடக்கை முழுமையாக மையப்படுத்தி யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரக அலுவலகம் உத்தியோகபூர்வமாக எழுத்துமூல ஆவணம் பரிமாற்றம்

 யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இந்தியாவின் இராஜதந்திரப் பிரதிநிதி அலுவலகங்களை அமைப்பது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக எழுத்துமூல ஆவணங்கள் பரிமாறப்பட்டுள்ளன. இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் சி.ஆர்.ஜயசிங்கவும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தாவும் இந்த ஆவணங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளனர். கடந்த ஜூனில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இந்தியப் பிரதமருடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களில் யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இராஜதந்திரப் பிரதிநிதிகள் அலுவலகத்தைத் திறப்பதென இரு தலைவர்களும் இணங்கியிருந்தனர். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும்வலுப்படுத்துவதற்காக இராஜதந்திரப்பிரதிநிதிகள் அலுவலகங்களைத் திறப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. அதேசமயம், புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் இயங்கும் சென்னை, மும்பையிலுள்ள துணைத் தூதரகங்களுடன் மேலதிகமாகத் துணைத்தூதரகங்களை அமைப்பதற்கான இலங்கையின் ஆர்வத்தையும் இந்தியப் பிரதமர் வரவேற்றிருந்தார். இந்தப் புரிந்துணர்வை உத்தியோகபூர்வமான ஏற்பாடாக உருவாக்குவதற்காக நேற்று இருநாடுகளும் எழுத்துமூல ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டுள்ளன.இதன்பிரகாரம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள இராஜதந்திரப் பிரதிநிதிகள் அலுவலகமானது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய 5 மாவட்டங்களுக்குச் சேவையை வழங்கும். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைக்கப்படும் இராஜதந்திரப் பிரதிநிதிகள் அலுவலகம் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மொனராகல மாவட்டங்களுக்கான சேவையை வழங்கும். (மொனராகல மாவட்டமானது கண்டியிலுள்ள இந்திய உதவித் தூதரகத்தின் கீழ் மாற்றப்படும்.) பரஸ்பர இணக்கத்துடன் இந்த இராஜதந்திரப் பிரதிநிதிகள் அலுவலக மாவட்டமானது விரிவுபடுத்தப்படும்.

__________________________________________________________________________________________________

இந்தியாவில் தங்கியிருக்கும் ஸ்ரீலங்காத் தமிழ் ஏதிலிகளில் பெரும்பான்மையோர் சொந்த நாடு திரும்ப விருப்பம் இன்றி இருக்கின்றனர்.

(அக்கம்: ஆர்.கே. இராதாகிருஷ்ணன்)

tamil refugeesமறுவாழ்வுத்துறை இயக்குனர் திரு.எம் முத்தையா கலைவாணனின் கூற்றுப்படி,இந்தியாவில் கடந்த ஒரு தசாப்தம் அல்லது அதற்கும் மேலாக தங்கியிருக்கும் ஸ்ரீலங்காத் தமிழ் ஏதிலியரில் பெரும்பான்மையோர் திரும்பவும் தங்கள் சொந்த நாட்டிற்குச் செல்ல விருப்பம் இன்றி இருக்கிறார்கள். புதன்கிழமை இங்கு நடைபெற்ற இந்தியாவில் இன்றுள்ள ஏதிலியர் நிலை என்கிற தேசிய ஆய்வரங்கின் இடைநேரத்தில் அவர் இந்து பத்திரிகையுடன் பேசும்போது இதனைக் குறிப்பிட்டார்..அவர் மேலும் கூறுகையில், அகதிகளில் பலர் இங்குள்ள சமூகத்தினருடன் கலந்து அவர்களில் ஒரு பகுதியாகிவிட்டார்கள், இன்னும் சிலர் உள்நாட்டிலேயே திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள்,கட்டிடத் தொழிலாளியாகவும் தச்சுப்பணி செய்பவர்களாகவும் அவர்கள் இங்கேயே தொழில்களைத் தேடிக் கொண்டு விட்டார்கள். மாநில வாக்காளர்களுக்கு உரிய நியாயவிலை அரிசி,மற்றும் பொருட்கள்; உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் அரசு இவர்களுக்கும் வழங்குகிறது. இலவச தொலைக்காட்சி உபகரணங்கள் கூட இவர்களுக்கு வழங்கப்படுகிறது, (20,039 தொலைக்காட்சி உபகரணங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது) 12 வயதுக்கு மேற்பட்ட 52,373 பேர் வரையிலான ஏதிலிகளுக்கு தங்கள் பொதுநல பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக தனிப்பட்ட ஆள் அடையாள அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன. (மேலும்) 21.08.10

__________________________________________________________________________________________________

தியாகிகளும் துரோகிகளும்

-கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்  

யார் துரோகிகள்? யார் தியாகிகள்? என்று யாருக்கும் தெரியவில்லை. இறுதியாகத் தமிழர்கள் இப்போது துரோகிப் பட்டியலில் பிரபா கணேசனைச்சேர்த்திருக்கிறார்கள். அதேபோலத் தியாகிப் பட்டியலில் ஜே.வி.பிசேர்க்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தோடு இணைந்ததற்காக பிரபா கணேசன் தூற்றப்படுகிறார். தமிழ்மக்களுக்காக குரல் கொடுப்பதைப் போல நாடகமாடும் ஜே.வி.பி பாராட்டப்படுகிறது.அதற்கு இப்போது யாழ்ப்பாணத்தில் வரவேற்பும் அளிக்கப்படுகிறது. இந்தப்பாராட்டுக்கான அடிப்படையே அது அரசாங்கத்தை இப்போது எதிர்க்கிறது என்பதுதான். ஆனால், வடக்குக் கிழக்கை சட்டபூர்வமாகப் பிரித்தது ஜே.வி.பியே என்பதைபலரும் மறந்து வருகிறார்கள். இந்தப் பிரிப்புத்தான் நிர்வாக நடைமுறைகளையும்பிரித்து நடைமுறை ரீதியான நிரந்தரப் பிரிவாக்கியிருக்கிறது.  இது எவ்வளவு ஆபத்தானது என்று இவர்கள் சிந்திப்பதாகவேயில்லை. முன்னாள் துரோகிகள் பின்னாளில் தியாகிகள். முன்னாள் தியாகிகள் பின்னாளில் துரோகிகள். இப்படியே கழிந்து கொண்டிருக்கிறது தமிழர்களின் அரசியல் வரலாறு என்று சொல்லிச் சிரித்தார் ஒரு நண்பர். இவர் கடந்த முப்பதாண்டுகளாக தமிழர்களின் அரசியற் போராட்டங்களில் ஈடுபட்டவர். அதனால் தமிழர்களின் அரசியற் போக்குப் பற்றிய கொழுத்த அனுபவம் இவருக்குண்டு. ஆனால், துரோகி தியாகிஎன்ற பிரிப்புகளில் நம்பிக்கையற்றவர். தியாகிகளாலும் எதையும் செய்ய முடியவில்லை. (மேலும்) 21.08.10

_______________________________________________________________________________________________________

காணி உறுதியை சட்டபூர்வமாக்க அரசு முடிவு

யுத்த காலத்தின் போது வடக்கு, கிழக்கில் உள்ள தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களின் காணி உறுதியை சட்ட பூர்வமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு முன் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்க காணி சீர்திருத்த ஆணைக் குழு (LRC) நடவடிக்கை எடுக்கும். தமது சொந்த இடங்களில் முறையான காணி பகிர்வுடன் குடியேறுவதற்கு அந்த குடும்பங்களுக்கு இதனால் வாய்ப்பு ஏற்படும். மன்னார் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 50 குடும்பங்களுக்கு இவ்வாறான சொந்தக் காணியில் குடியேறும் வகையில்ஏற்கனவே உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார். அத்துடன் காணி உறுதிகளை வழங்குவதற்காக ஆணைக் குழு நடத்திய ஆய்வின் மூலம் 25 ஆயிரம் இடம்பெயர்ந்த குடும்பங்கள் இனங் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இது போன்ற நிலை பற்றி அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். (மேலும்) 21.08.10

_______________________________________________________________________________________________________

கிளிநொச்சி மாவட்டம்

இடம்பெயர்ந்தோர் காணிகளை வெளியார் கைப்பற்றும் நிலைமை கிடையாது - அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை வெளியார் அடாத்தாகக் கைப்பற்றும் நிலைமை எதுவும் கிடையாதென மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். காணி உரிமையுள்ள மக்கள் உண்மை யான உறுதிகளுடன் வருவார்களேயானால் அவர்கள் தமது சொந்தக் காணிகளில் குடியமர அனுமதிக்கப்படுவார்களென்றும் அதற்கு எந்தத் தடையும் இல்லையென்றும் அரசாங்க அதிபர் கூறினார். தமது சொந்தக் காணியை எவராவது அடாத்தாகக் கைப்பற்றியிருந்தால், பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தின் ஊடாக அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சிக்குத் தென் பகுதியிலிருந்து செல்லும் சிலர் மக்களின் காணிகளை அடாத்தாகக் கைப்பற்றிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவதை நிராகரித்த அரச அதிபர் திருமதி கேதீஸ்வரன், அவ்வாறான தகவல்களோ முறைப்பாடுகளோ தமக்குக் கிடைக்கவில்லையென்றும் குறிப்பிட்டார். (மேலும்) 21.08.10

_______________________________________________________________________________________________________

கனடாவுக்கு கப்பலில் வந்த தமிழர்களை திருப்பி அனுப்பும்படி, பெரும்பான்மையான கனடியர்கள் கருத்துக் கணிப்பில் தெரிவிப்பு!

தாய்லாந்திலிருந்து புலி முகவர்களால் கனடாவுக்கு கடத்தி வரப்பட்ட 492 இலங்கைத் தமிழர்களை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டு, கனடிய மக்கள் மத்தியில் ஆகஸ்ட் 02 முதல் 04 வரை QMI என்ற நிறுவனம் நடாத்திய கருத்துக் கணிப்பில், 60 வீதமான மக்கள,; அவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டுமென கருத்துத் தெரிவித்துள்ளனர். அவர்களைத் திருப்பி அனுப்பி வைப்பதில், தேவையானால் கனடிய கடற்படையை உபயோகிக்க வேண்டுமெனவும் அவர்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர். இந்த அபிப்பிராய வாக்கெடுப்பில் பங்குபற்றி, கப்பலில் வந்தவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் எனக் கருத்துக் கூறியவர்களில், கனடாவின் பணக்கார மாகாணம் என வர்ணிக்கப்படும,; எண்ணெய் வளமிக்க அல்பேர்ட்டா மாநிலத்தின் மக்களில் 74 வீதத்தினர் அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு அடுத்ததாக, கனடாவிலிருந்து பிரிந்து வாழ வேண்டும் என வலியுறுத்தி வரும் பிரெஞ்சு மொழி பேசும் குவிபெக் மாகாண மக்களில் 64 வீதமானோரும் அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 17 வீதமான கனடியர்கள் மட்டுமே, கப்பலில் வந்தவர்களை கனடா அரசியல் கைதிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என கருத்துக் கூறியுள்ளனர். 20 வீதமானோர் தங்களுக்கு பதில ஏதும் கூறத் தோன்றவில்லை எனக் கூறியுள்ளனர். 4 வீதமானோர் பதில எதுவும் தெரிவிக்கவில்லை.

நன்றி: 24 H Daily - Canada

_______________________________________________________________________________________________________

Canadians want migrants deported, poll finds

More than half of Canadians believe a ship carrying 492 Tamil migrants that landed on B.C. shores last week should have been sent back to Sri Lanka, according to a survey released Thursday by Angus Reid Public Opinion.

The study, which sampled more than 1,000 Canadians, found 63 per cent of respondents felt the ship should have been turned back before it reached Canada. Angus Reid Public Opinion Vice President Mario Canseco told ctvbc.ca the findings revealed many people are mad about the decision to let the ship enter Canadian waters in the first place. "People don't have a hard time believing the migrants are fleeing something -- but for all of these people to show up at the same causes anger," Canseco said. A main source of irritation appears to be the idea the migrants aren't entering Canada through regulated immigration channels. Another 83 per cent of respondents felt the migrants are jumping the immigration queue and should be forced to apply like other foreigners who want to come to the country.  (Read) 21.08.10

_______________________________________________________________________________________________________

தமிழை ஆங்கிலத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.

கடந்த இருபதாண்டுகளில் தமிழின் பேச்சுவழக்கு படிப்படியாகச் சிதைக்கப்பட்டு வருகிறது. பேச்சின் வழியாகவே ஒவ்வொரு குழந்தையும் மொழியை உள்வாங்கிக் கொள்கிறது. பேச்சின் மூலமே  ஒரு மொழியை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள முடியும். இன்றைக்குப் பிறந்து வளரும் ஒரு குழந்தை நம் மொழியை எப்படி உள்வாங்கிக் கொள்ளும் என்று நினைத்துப் பார்த்தால் ஆழ்பள்ளத்தில் விழுகிறார்போல் கிடுகிடுவென நடுங்குகிறது நெஞ்சம். நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் உள்ள குடும்பங்களில் அம்மா-அப்பாவின் பேச்சுகளைக் கேட்கும் நேரத்தைவிட, ஒரு குழந்தை, தொலைக்காட்சித் தொகுப்பாளர்களின் குரலைக் கேட்கிறது. ஒளி - ஒலி ஊடகத் தொகுப்பாளர்களுக்கு நல்ல தமிழ் தெரியக்கூடாது என்பதுதான் முதல் தகுதியாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது.  தமிழை அவ்வளவு வேகமாக உச்சரிக்கவே முடியாது. ஆங்கிலத்தை உச்சரிக்கும் லாவகத்துடன், தமிழை விழுங்கி உச்சரித்து தமிழே நாவின் அடியில் அமுங்கிப் போகிறது.  ஊடகங்களில் லட்சக்கணக்கான மக்களை இன்னும் தங்கள் பிடியில் வைத்திருப்பவை செய்தித்தாள்கள். வெகுஜன ஊடகங்களில் அன்றாடச் செய்திகளுக்காக மக்கள் இன்னும் தினசரிகளையே சார்ந்திருக்கிறார்கள். கிராமத்து அரசமரத்து தேநீர்க் கடை தொடங்கி, அலுவலகங்கள்வரை செய்தித்தாளின் இருப்பு மிக முக்கியமானது. (மேலும்) 20.08.10

_______________________________________________________________________________________________________

கியூபா பயணத் தடையை தளர்த்த அமெரிக்கா தயாராகிறது

cubaஅமெரிக்க - கியூப மக்களிடையே நெருக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா அனுமதிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகளை ஒபாமா நிர்வாகம் வெளிப்படுத்தி வருகிறது. இதுபற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. 2003ம் ஆண்டில் 28 ஆண்டு கால சிறைத்தண்டனை பெற்ற 75 கைதிகளில் 52 பேரை விடுதலை செய்ய கியூபா சம்மதித்த பின்னர் இந்நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடத் தொடங்கியது. ஐம்பது ஆண்டுகளாக அமெரிக்கா நடத்தி வரும் பொருளாதாரத் தடைகளில் இளக்கம் ஏற்படும் அறிகுறிகள் இல்லை. கியூப மக்களோடு நெருக்கத்தை ஏற்படுத்தும் வழிகள் பற்றி ஆலோசித்து வருகிறோம். அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் என்று அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கம்யூனிஸ் கியூபா சென்று வரும் வாய்ப்புகளை விரிவாக்க ஒபாமா நிர்வாகம் முயன்று வரும் வேளையில் பொருளாதாரத் தடையை அமெரிக்கா குறைக்காது என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ கூறுகிறது.  (மேலும்) 20.08.10

_______________________________________________________________________________________________________

புதிய கலையகத்தில் டான் தமிழ்ஒளி

DAN New Officeடான் தமிழ்ஒளி தொலைக்காட்சி இன்று (19.08.2010) காலை கொழும்பில் புதிய கலையகத்தில் இயங்கத் தொடங்கியிருக்கின்றது. பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ள அலுவலக கட்டிடத் தொகுதியில் பாரிய கலையகத்தில் இந்த புதிய கலையகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. இன்று இடம்பெற்ற திறப்புவிழா வைபவத்தில் சிங்கள திரையுலகின் சுப்பர் ஸ்ரார் சணத் குணதிலக நாடாவை வெட்டி கலையகத்தை திறந்துவைத்தார். வைபவத்தில் ஜனாதிபதியின் ஆலோசகர் பந்துல ஏக்கநாயக்கா, மகாராஜா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் திரு. செல்வராஜா மற்றும் ஊடகத்துறையின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். படத்தில் பந்துல ஏக்கநாயக்கா குத்துவிளக்கு ஏற்றிவைப்பதையும் அருகில் டான் நிறுவன தலைவர் குகநாதன், சணத் குணதிலக்க, டான் தலைமை அதிகாரி சல்தான் ஆகியோர் நிற்பதையும் காண்கின்றீர்கள்.

_______________________________________________________________________________________________________

விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம்

கிழக்கில் இம்முறை அமோக நெல் அறுவடை கிடைத்துள்ளது. அங்கு நெல் அறுவடை தற்போது முடிவுறும் கட்டத்துக்கு வந்துள்ளது. தாங்கள் எதிர்பார்த்ததைப் பார்க்கிலும் கூடுதலான விளைச்சல் கிடைத்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். யுத்தம் ஓய்ந்த பின்னர் கிழக்கின் அனைத்து வயல் பிரதேசங்களிலும் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடக் கூடிய சூழல் தற்போது உருவாகியிருக்கிறது. இதுவே முதன்மைக் காரணம் ஆகும். மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் வயல் பிரதேசங்கள் அன்றைய காலப் பகுதியில் புலிகளின் நடமாட்டமுள்ள இடங்களாகவே இருந்தன. விவசாயிகள் நிம்மதியாக நெற்செய்கை மேற்கொள்வதற்கு அக்காலப் பகுதியில் புலிகள் இடமளிக்கவில்லையென்பது வெளிப்படையாகத் தெரிந்த விடயம்...... தமிழ், முஸ்லிம், சிங்கள விவசாயிகள் அனைவருமே இப்பிரச்சினையை எதிர்கொண்டனர். புலிகள் தங்களது பிரதேசங்களில் விவசாயிகளின் காணிகள் பலவற்றை பலவந்தமாகச் சுவீகரித்து தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு விவசாயம் செய்வதற்காகக் கையளித்தனர். வயல் சொந்தக்காரர்கள் நியாயம் கேட்பதற்கு புலிகள் இடமளிக்கவில்லை. (மேலும்) 20.08.10

______________________________________________________________________________________________________

லண்டனிலிருந்து புலிக்கொடியுடன் பயணித்து வரும் சிவந்தனின் கோரிக்கைகளை ஐ.நா.சபையினர் ஏற்றுக்கொள்வார்களா?

sivanthanுதலில் புலியாதரவாளரான சிவந்தனின் நடைபயணத்தின் இலக்குகளை நாம் சற்று கொஞ்சம் புரிந்துகொள்ளல்வேண்டும். நடைபயணம், ஊர்வலம், உண்ணாவிரதம். தீக்குளிப்பு, அமைதிப்பேரணி, சாவிலும் எழுவோம், அலைகடல் போல் எழுவோம், குதித்து எழுவோம், ஓயமாட்டோம் என பல்வேறு வகையான போராட்டங்களை போர் முடிவடைவதற்கு முன்னரான கடைசி 3மாதங்களில் தலைவரையும் தலைவரின் போராட்டத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்காக புலம்பெயர் புலியாதரவாளர்கள் மேற்குலக நாடுகள் முழுவதும் நின்று போடாத கூத்துக்களும் ஆடாத ஆட்டங்களும் இல்லை. 30வருடகால போராட்டதில் முவாயிரம் மேற்பட்ட தடவைகள் எதாவது ஒரு பெயரில் ஊர்வலமாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா.சபைக்கு முன்னால் புலிக்கொடியுடனும், தவைரின் படத்துடனும் போய்நின்று எங்கள் தலைவர் பிரபாகரன், வீவோண்ட் தமிழீழம் என கத்தி பல கோரிக்கைகளை ஐ.நா. சபையினரிடம்  முன்வைத்தார்கள். இவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஐ.நா.சபையினர் இந்த 30வருட காலத்தில் என்றுமே ஏற்றுகொள்ளவுமில்லை ஆகக்குறைந்தது உங்கள் கோரிக்கைகளை நாங்கள் பரிசீலனைக்காவது எடுத்துக்கொள்கின்றோம் என்றாவது எப்பொழுதுமே கூறியதில்லை.  (மேலும்)  20.08.10
__________________________________________________________________________________________________

தென்னாசியாவில் மிகச் சிறந்த நாடு இலங்கை

- நியூஸ்வீக்

உலக நாடுகளில் நாட்டு மக்களுக்கு சுகாதாரம் மற்றும் சிறந்த வாழ்க்கை வசதிகளை வழங்குவதில் உலகின் 66 ஆவது இடம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் தென்னாசியாவில் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைவிடவும் முதன்மையான இடம் இலங்கைக்குக் கிடைத்துள்ளது. நியூஸ்வீக் (Newsweek) சஞ்சிகை அண்மையில் மேற்கொண்டுள்ள, THE WORLD'S BEST COUNTRIES என்ற கருத்துக் கணிப்பொன்றிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் 100 நாடுகளை பட்டியலிட்டுள்ள நியூஸ்வீக் சஞ்சிகை இந்தியாவுக்கு 78 ஆவது இடத்தையும், பங்களாதேசுக்கு 88 ஆவது இடத்தையும் பாகிஸ்தானுக்கு 89 ஆவது இடத்தையும் வழங்கியுள்ளது. உலகின் மிகச் சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பின்லாந்தும் சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்;களைப் பெற்றுள்ளன. இப்பட்டியலில் அமெரிக்கா 11ஆவது இடத்திலும் ஜேர்மனி 12ஆவது இடத்திலும் பிரித்தானியா 14ஆவது இடத்திலும் சீனா 59ஆவது இடத்திலும் உள்ளது. இந்த 100 சிறந்த நாடுகளுக்கான பட்டியல் கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத்தரம், பொருளாதார முன்னேற்றம், அரசியல் சூழ்நிலை என்ற வகையீட்டின் கீழ் பட்டியல் படுத்தப்பட்டிருந்தன. (மேலும்) 20.08.10
_____________________________________________________________________________________________________

போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நட்ட ஈடுகளை வழங்கவேண்டும். வடக்கு கிழக்கு என்று இல்லை நாட்டின் எப்பகுதியாக இருப்பினும் நட்ட ஈடு வழங்கப்படவேண்டும்.

 : முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ

நாட்டில் அப்போது நிலவிய பொருளாதார பின்னடைவு அன்றைய அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு செல்வதற்கான முக்கிய காரணமாகும். உடன்படிக்கையில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டாலும் அதற்கு செல்லவேண்டியேற்பட்டது. கருணா அம்மான் எனப்படுபவர் புலிகளிடம் இருந்து பிரிந்தமைக்கு ஐக்கிய தேசிய கட்சியே காரணம் என்று அந்தக் கட்சியின் சில எம்.பி. க்கள் கூறிவருகின்றனர். ஆனால் அவ்விடயம் தொடர்பில் வித்தியாசமான பார்வையே என்னிடம் உள்ளது. அதாவது கருணா அம்மான் ஏன் புலிகளிடமிருந்து பிரிந்து வந்தார் என்ற உண்மையான காரணம் அவருக்கே தெரியும். போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நட்ட ஈடுகளை வழங்கவேண்டும். வடக்கு கிழக்கு என்று இல்லை நாட்டின் எப்பகுதியாக இருப்பினும் நட்ட ஈடு வழங்கப்படவேண்டும். அதியுயர் பாதுகாப்பு விடயங்கள் என்று வரும்போது அதில் ஆராய்வதற்கு பல விடயங்கள் உள்ளன. அதாவது சில அம்சங்கள் குறித்து ஆராய முடியும். பலாலி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்ற முடியாது. அவை அங்கு கட்டாயம் தேவை.  (மேலும்) 19.08.10
____________________________________________________________________________________

பின் தொடரும் அரசியல் சூனியம்

 நடேசன்

அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர்களில் சிலர்  எதிர்வரும் சனிக்கிழமை நடக்க இருக்கும் பொதுத்தேர்தலில் கீறின்( சூழல் பாதுகாப்பில் அக்கறையுள்ள கட்சி) கட்சிக்கு தங்கள் வாக்குகளைப் போடவேண்டும் என தமிழர்கள் மத்தியில் பிரசாரம் செய்கிறார்கள் மேலும் ஈழத்தமிழர் வம்சாவளியை சேர்நத் இலங்கைப் பெண் ஒருவரும் அதிக தமிழர்கள் வாழும் நியு சுவுத் வேல்ஸ் மானிலத்தில். இந்த தேர்தலில் மேற்சபையான செனட்டுக்கு நிற்கிறார். இந்த கிறீன் கட்சிக்காக ஈடுபடும் தமிழர்கள் ஒரு வருடத்தின் முன் விடுதலைப்புலிகளை அவுஸ்திரேலியா அங்கீகரிக்க வேண்டும் எனத் தெருத்தெருவாக கோசம் இட்டவர்கள். இவர்களின் கோசத்தை ஆளும் தொழில்கட்சியோ அல்லது மூன்று வருடத்துக்கு முன்பு இருந்த லிபரல் கட்சியோ கணக்கெடுக்கவில்;லை இதே வேளையில் கிறீன்கட்சி அத்தைக்கு மீசை முளைத்தது மாதிரி ஆட்;சிக்கு வந்தால் அவர்கள் கூட பயங்கரவாத இயக்கத்தையும் அங்கீகரிக்க மாட்டார்கள். இது ஒருபுறம் இருக்க தமிழ்த்தேசியவாதம் போல் சிங்கள தேசிய வாதிகள் அவுஸ்திரேலியாவில் அதிக அளவில் உள்ளார்கள். அவர்கள் இப்பொழுது  சிங்கள மக்களை கிறீன் கட்சிக்கு போடவேண்டாமென்று  ஈமெயில் பிரசாரம் செய்கிறார்கள். இதைப்பார்ததுவிட்டு தமிழர்கள் இயற்கையை பற்றி கவலைப்படுகிறார்கள் சிங்களவர்கள் இயற்கையின் அழிவை விரும்புகிறவர்கள் என  கருதிவிடாதீர்கள். (மேலும்) 18.08.10
_______________________________________________________________________________________

வடக்கு மக்களுக்கு நீடித்து நிலைக்கும் நிம்மதி

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற் றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்றுமுன்தினம் பாதுகாப்புச் செயலாளர் அளித்த சாட்சியம் பல விட யங்களைத் தெளிவுபடுத்துவதாக அமைந்திருந்தது. வட மாகாணம் இராணுவ நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப் படுகின்றது என்றும் அங்கு இராணுவக் குடியிருப்புகள் அமைக்கப்படுகின்றன என்றும் சிங்களக் குடியேற்றம் இடம் பெறுகின்றது என்றும் எதிரணியினர் குற்றச்சாட்டு களை முன்வைக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடிக்கடி இவ்வாறு குற்றஞ்சாட்டுகின்றது. சில பத்திரிகை களிலும் இவ்வகையான கட்டுரைகள் வெளியாகின்றன. அரசாங்கத்திடமிருந்து உத்தியோகபூர்வமாகவும் ஆணித்தர மாகவும் மறுப்பு வெளிவராத நிலையில், குற்றச்சாட்டுக ளில் உண்மை இருப்பதாக மக்கள் கருதத் தொடங்குவர். இக்குற்றச்சாட்டுகளில் ஏதாவது உண்மை இருப்பின் அது ஜனநாயக பெறுமானங்களுக்கு முரணானது. நாட்டின் ஒரு பகுதியில் மாத்திரம் இராணுவ நிர்வாகம் நடைபெறுவதும் ஏதேனுமொரு பிரதேசத்தின் சனத்தொகை விகிதாசாரத்தில் மாற்றம் ஏற்படும் வகையில் குடியேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் பாரபட்சமான செயற்பாடுகள். எதிரணியினரின் குற்றச்சாட்டுகளில் சிறிதளவேனும் உண்மை இல்லை என்பதைப் பாதுகாப்புச் செயலாளர் தனது சாட் சியத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். வட மாகாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணும் பொறுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இராணுவத்தினர் தங்குவதற்கான ‘பராக்’குகள் அமைக்கப்படுகின்றனவேயொழிய இராணுவக் குடியிருப்புகள் அங்கு அமைக்கப் படவில்லை என்றும் பொது மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல முடியும் என்றும் பாதுகாப்புச் செயலா ளர் தனது சாட்சியத்தில் கூறியுள்ளார். தனியார் காணிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டையும் அவர் மறுத்திருக்கின்றார்.  (மேலும்) 18.08.10
__________________________________________________________________________________________

புகலிடம் கோருவோர் விவகாரம்; கடுமையான சட்டத்தை அமுல்படுத்தப்போவதாக கனடிய பிரதமர் சூசகமாக அறிவிப்பு

சன் சீ கப்பலில் வந்தோரை தொடர்ந்து தடுத்துவைக்க நீதிமன்றம் உத்தரவு

எம்.வி.சன் சீ கப்பலில் கடந்த வாரம் வன்கூவரை வந்தடைந்த 492 தமிழர்கள் மீது முதலாவதுகட்ட விசாரணையை ஆரம்பிப்பதற்காக அவர்களைத் தொடர்ந்தும் தடுத்து வைக்குமாறு கனடியன் நீதிமன்றம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்தக் குடியேற்றவாசிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சோதனை செய்து விசாரணை நடத்தவேண்டுமென கனடியப் பிரதமர் ஸ்டீபன் கார்பர் கூறியுள்ளார். பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள் இந்த விடயத்தில் கணிசமான அளவு காணப்படுவதாகவும் நிதியீட்டுவதற்கான ஆட்கடத்தல் விடயங்களும் அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எமது எல்லைகளின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பாளிகளாகும். அதேசமயம், ஆட்களை வரவேற்பதற்கும் வரவேற்காமல் இருப்பதற்குமான பொறுப்பு எம்மைச் சார்ந்தது என்று அவர் நிருபரிடம் கூறியதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. நாங்கள் அடைக்கலம் கொடுக்கும் நாட்டை கொண்டவர்கள். ஆனால், அதேநேரம் சாதாரணமான முறையில் அல்லாமல் ஆட்கள் இங்கு வருவது தொடர்பாக மக்கள் கவலையடைந்துள்ளனர் என்ற நான் நினைக்கிறேன். இந்த விடயம் கணிசமான அளவுக்கு பாதுகாப்புத் தொடர்பான கவலைகளுக்கு இட்டுச்செல்கின்றது என்ற பிரதமர் கார்பர் கூறியுள்ளார்.  (மேலும்) 18.08.10
__________________________________________________________________________________________________

ராஜிவை விட ராகுல் அதிபுத்திசாலி : குஷ்வந்த் சிங் எழுப்புகிறார் சர்ச்சை

புதுடில்லி : "ராஜிவ் உண்மையில் ஒரு தலைவர் அல்ல; அவரிடம் சில திட்டங்கள் இருந்தன. அவை சாதாரணமானவை தான். ராகுல், தன் தந்தையை விட அதிபுத்திசாலியாக உள்ளார்' என்று, பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங்(95) கூறியுள்ளார். இந்தியாவின் பிரபல மூத்த எழுத்தாளரான குஷ்வந்த் சிங், "அப்சொல்யூட் குஷ்வந்த்: தி லோ டவுன் ஆப் லைப், டெத் அண்டு மோஸ்ட் திங்ஸ் இன் பிட்வீன்' என்ற புத்தகம் எழுதியுள்ளார். அதில் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள், நிகழ்ச்சிகள் குறித்த தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர் எழுதியிருப்பதாவது: ராகுலுக்கு என்று ஒரு தொலைநோக்கு இருக்கிறது. மாயாவதி மற்றும் சிவசேனாவின் மண்ணிலேயே அவர்களை ராகுல் எதிர்கொண்டிருக்கிறார். அமேதியில் தாழ்த்தப்பட்டோரின் வீடுகளில் தங்கி, அவர் உணவு உண்டது சர்ச்சையைக் கிளப்பியது. எனினும், நாட்டின் வெட்கக்கேடான நிலையை அவர் வெளிப்படுத்தினார். இந்த 21ம் நூற்றாண்டிலும் நம் நாட்டில் தீண்டத்தகாதோர் உள்ளனர். அவர்கள் இன்னும் துன்பத்தில் உழல்கின்றனர். சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று, அதை எதிர்ப்பது போல், மும்பைக்குச் சென்று, "மும்பை இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தம்' என்று சிவசேனாவை எதிர்த்துப் பேசினார் . ராஜிவைப் பொருத்தவரை, அவரால் கையாள முடியாத பதவியில் அவர் திணிக்கப்பட்டார். அவரிடம் சில நல்ல யோசனைகள் இருந்தன. ஆனால் அவை ஒன்றும் அசாதாரணமானதல்ல. உண்மையில் அவர் தலைவரே அல்ல. (மேலும்)  18.08.10

விடுதலைப் புலிகளின் "பிரின்சஸ் கிரிஸ்ரினா' கடற்படையினரின் பயன்பாட்டில்!

விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப் பட்டு மலேசியாவில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பிரிசன்சஸ் கிரிஸ்னா என்ற கப்பல் தற்போது தென்பகுதியில் கடல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. புலிகளின் இந்தக் கப்பல் சில மாதங் களுக்கு முன்னர் மலேசியாவில் கைப்பற்றப் பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருந் தது. இலங்கையின் தென் பிராந்தியக் கடற் படை தலைமையகத்தினால் திருத்தியமைக் கப்பட்டுள்ள இந்தக் கப்பல் தற்போது காலி துறைமுகத்தில் தரித்துள்ளது. இது தென்பகுதி கடலில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத் தப்பட்டு வருவதாக தென் பிராந்திய கடற்படை கட்டளை அதிகாரி கொமாண்டர் ஆர்.டி.பெரேரா தெரிவித்தார்.மூவாயிரம் தொன் எடையுள்ள பொருட்கள் எடுத்துச் செல்லக் கூடிய இந்தக் கப்பலை எதிர்காலத்தில் வேறு தேவைகளுக்கும் பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இலங்கை கடற்படை கூறியுள்ளது.
________________________________________________________________________________________________

தமிழ்த் தலைமைகளுடனான ஒப்பந்தங்களை எதிர்த்ததாலேயே தீர்வு சாத்தியமாகாமல் போனது

- நல்லிணக்க ஆணைக்குழுவில் முன்னாள் எம்.பி. மங்கள முனசிங்க

சிங்களம் மட்டும் சட்டம் அமுலுக்கு வந்ததன் பின்னர், அப்போதையப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தந்தை எஸ். ஜே. வி. செல்வநாயகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்படிக்கையொன்றைச் செய்தார். ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே. ஆர். ஜயவர்தன கண்டிக்குப் பாத யாத்திரை சென்றார். பின்னர் டட்லி சேனநாயக்கா ஆட்சிக்கு வந்ததும் தந்தை செல்வநாயகத்துடன் உடன்படிக்கை செய்தார். அதனை நடைமுறைப்படுத்தவிடாமல் மற்றைய தரப்பினர் எதிர்த்தார்கள். இவ்வாறான எதிர்ப்பு அரசியல்தான் நாட்டின் பிரச்சினையைப் பூதாகரமாக்கியது. இதனால், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்வைத்த நல்ல தீர்வும் சாத்தியமாகவில்லை” என்று குறிப்பிட்ட அவர், 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை தோல்வியடை ந்தமை தொடர்பான தமது கருத்தையும் தெரிவித்தார். “ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றும், அவற்றில் இணக்கம் காணப்பட்ட ஒரு சிறிய விடயம்கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை. புலிகளின் உளவுப் பிரிவினர் சகல இடங்களுக்கும் செல்ல முடிந்தது. அதனால் பின்னர் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ள முடிந்தது. போர் நிறுத்த உடன்படிக்கை மீறப்படுவதைத் தடுத்து நிறுத்த எந்த வழிவகையும் இருக்கவில்லை. (மேலும்) 18.08.10
____________________________________________________________________________________________________

புலிகள் இயக்க பொலிஸார் இருவரை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்ப உத்தரவு

முன்னாள் விடுதலை புலி இயக்க பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை வெலிகந்த புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்புமாறு கொழும்பு மேலதிக நீதவான் தம்மிக்க லங்கா திலக உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர்களான் கந்தசாமி குணபாலன் , மாரிமுத்து திருச்செல்வம் ஆகிய இருவரையும் தமக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பயங்கரவாத புலனாய்வு பிரிவு உதவி பொலிஸ் பரிசோதகர் விஜயரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைது செய்தனர். இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட போது, விடுதலை புலிகளின்யின் பொலிஸ் பிரிவில் இணைவதற்கு முன் புலிகளின் செயற்பாடுகளில் பயிற்சி பெற்றிருந்தது தெரிய வந்தது. இவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இவர்களை விடுதலை செய்யும் படி அல்லது புனர்வாழ்வுக்காக அனுப்பும் படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து இவர்கள் இருவரையும் வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டார்.

___________________________________________________________________________________________

இலங்கை செல்கிறார் இந்தியப் பிரதிநிதி

இலங்கையில் போரினால் பாதிக்பப்பட்ட தமிழ் மக்களுக்காக மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றம் மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் சிறப்புப் பிரதிநிதி அடுத்த மாதத் துவக்கத்தில் இலங்கை செல்லவிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். புதன்கிழமை மாலை சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களைச் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்திய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இந்தத் தகவலைத் தெரிவித்தார். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான மீள்குடியேற்றம் மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட இந்தியா விரும்புகிறது என்றும் அதுபற்றி தமிழக முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகள் திருப்தியளிக்கிறதா என்று கேட்டபோது, அதுபற்றி இலங்கை அரசுடன் பேசி வருவதாக அவர் தெரிவித்தார் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மட்டுமே போதுமானது இல்லை என்றும் அங்கு மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

____________________________________________________________________________________________________

இடம்பெயர்ந்த மக்களை கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றும் திட்டம் கைவிடப்பட்டது

செட்டிகுளம் வலயம் 4 நலன்புரி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1,600 குடும்பங்களைச் சேர்ந்த 5,000 பேரை இன்று புதன்கிழமை பலவந்தமான முறையில் செட்டிகுளம் கதிர்காமர் நிலையத்திற்கு மாற்றும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. செட்டிகுளம் வலயம் 4 நலன்புரி நிலையத்திலுள்ள மக்களை கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றி பின் ஒரு மாத காலத்திற்குள் அம்மக்களை அவர்களுடைய சொந்த இடங்களுக்கு மீள்குடியேற்றுவதாக இராணுவம் தெரிவித்தது. எனினும், அந்த நலன்புரி நிலையத்திலுள்ள மக்களுக்கு வேறு நலன்புரி நிலையங்களுக்குச் செல்ல விருப்பமில்லை. தங்களை தற்போதுள்ள நலன்புரி நிலையத்திலே வைத்திருந்து பின்னர் தம்மை மீள்குடியேற்றுமாறும் தங்களை இடமாற்றும் சமயத்தில் தங்களின் பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகள், வேலை வாய்ப்புக்கள் இல்லாது போய்விடும் என்றும் அம்மக்கள் தெரிவித்தனர். இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அம்மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.விநோ நோகராதலிங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அவர் இவ்விடயம் தொடர்பாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்  மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் மக்களின் இடமாற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
________________________________________________________________________________________________

உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தாமதிக்கப்படும் சாத்தியம் ஜே.ஆர்.இன் யாப்பை மாற்றியமைப்பது கடினம் என்கிறது அரசு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் கடந்த வாரம் இடம்பெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் மூலம் இரு குழுக்களும் தொடர்ந்து இயங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மாற்றமென்பது புதியதொரு அரசியல் யாப்பை உருவாக்குவது என்று அர்த்தப்படமாட்டாது. அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவருவது கூட அரசியலமைப்பு மாற்றம் தான். தற்போதுள்ள ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசியலமைப்பில் காணப்படும் சில உள்ளடக்கங்கள் புதியதொரு அரசியலமைப்பை தயாரிப்பதற்கு இடமளிக்கவில்லை.இந்த அரசியலமைப்புக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசுகளும் அந்த யாப்புக்கு கட்டுண்டு போயுள்ளன.இந்த கட்டுப்பாட்டை உடைத்துக்கொண்டு எவராலும்வர முடியாதுள்ளது. தற்போதைய நிலையில் அரசியலமைப்பில் திருத்தங்களைத்தான் கொண்டுவர முடியும்.அதனை ஒட்டுமொத்தமாக மேற்கொள்வதைவிட தனித்தனியாக கையாள்வதன் மூலம் பலமுள்ளதாக அமைத்துக்கொள்ளமுடியும். சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக் கொண்டதன் பின்னரே அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு எதிரணியுடன் பேசத் தயாரானோம்.  (மேலும்) 18.08.10
___________________________________________________________________________________________________

கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றுவதற்கான திட்டத்தை நிறுத்துமாறு இடம்பெயர்ந்தோர் கோரிக்கை

செட்டிக்குளம் வலயம் நான்கு நலன்புரி நிலையத்தில் வசிக்கும்சுமார் 1600 குடும்பங்களை சேர்ந்த 5000 பேர் வரை நாளை புதன்கிழமை செட்டிக்குளம் கதிர்காமம் நலன்புரி நிலையத்திற்கு மாற்றவுள்ளதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் அம்மக்கள் கோரியுள்ளனர். இவ்விடயத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்தின் கவனத்திற்கும் அவர்கள் கொண்டுவந்துள்ளனர். தாங்கள் அனைவரையும் கதிர்காமம் நலன்புரி நிலையத்திற்கு மாற்றி ஒரு மாதத்தினுள் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்துவதாக இராணுவம் தெரிவித்ததாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.எனினும் தங்களுக்கு இவ்விடயத்தில் எவ்வித உடன்பாடும் இல்லை என்றும் தங்களை இந்த முகாமில் வைத்து   பின் மீள் குடியேற்றுமாறு அம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதனால் தங்களின் வேலை வாய்ப்புக்கள் இல்லாமல் போவதுடன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் பாதிப்படையும் என அம்மக்கள் தெரிவித்தனர்.இவ்விடயத்தை அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மற்றும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்  தெரிவித்தார்.
___________________________________________________________________________________

இலங்கைக்கு வெடிமருந்து கடத்த முயன்ற வழக்கு: விடுதலைப்புலிகள் உள்பட 5 பேருக்கு ஒரு ஆண்டு ஜெயில்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வெடிமருந்து கடத்த முயன்ற வழக்கில், விடுதலைப்புலிகள் உள்பட 5 பேருக்கு தலா ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், மேலும் ஒருவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், சென்னை விமானநிலையத்தில் சந்தேகத்தின் பேரில் 3 பேரை தனிப்பிரிவு (கிஞ் பிராஞ்ச்) போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் இலங்கையை சேர்ந்த செயின்ட் ஜான் (வயது 40) மற்றும் ஜெயக்குமார்(35), சென்னை ஒட்டேரியை சேர்ந்த ரவிக்குமார் என்பதும், தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வெடிபொருட்கள் மற்றும் மருந்துகளை அவர்கள் கடத்துவதும் தெரியவந்தது. ஓட்டேரியை சேர்ந்த ரவிக்குமார், இலங்கையை சேர்ந்தவர்களுக்கு செல்போன் சிம்கார்டு வாங்க தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையை கொடுத்து உதவியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள இந்திய மற்றும் இலங்கை பணத்தை போலீசார் கைப்பற்றினர். . (மேலும்)  18.08.10
_________________________________________________________________________________________

கப்பலில் கடத்தி வரப்பட்டவர்கள் தமிழ் காங்கிரசின் உதவியுடன், கனடியர்களின் காதில் பூச்சுற்ற ஆரம்பித்துள்ளனர்!

கனடா கந்தசாமி

கடந்த வருடம் மே மாதம் 18ம் திகதியுடன் பாசிசப் பயங்கரவாதப் புலிகள், இலங்கை அரசாங்கப் படைகளால் முற்றுமுழுதாக அழித்தொழிக்கப்பட்ட பின்னர் தான,; அங்குள்ள தமிழர்கள் நிம்மதியாக வாழ ஆரம்பித்திருக்கின்றனர். அவர்களது வாழ்க்கை இன்னமும் முற்றுமுழுதான வழமை நிலைக்குத் திரும்பாவிட்டாலும், படிப்படியாக அவர்கள் இலங்கையின் ஏனைய மக்கள் அனுபவிக்கும் உரிமைகளையும், வசதிகளையும் அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த பளிங்கு போன்ற தெளிவான உண்மையை, யுத்தம் முடிவடைந்த பின்னர் அங்கு ஆயிரக்கணக்கில் சென்று வரும் புலம்பெயர் தமிழர்கள் நேரடியாகக் கண்டு வந்து சொல்கிறார்கள். இந்தக் கோடை காலத்தில் புலம்பெயர் தமிழர்கள் தமது தாயத்துக்கு செல்வதற்கு ஆயிரக்கணக்கில் அணிவகுத்து வருவதால், கனடாவிலும், ஏனைய புலம்பெயர் நாடுகளிலும் விமானச் சீட்டுகள் பெறமுடியாமல் பலர் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகின்றதென்றால் நிலைமையை நாம் புரிந்து கொள்ளலாம். சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பமாகிய நல்லூர் கந்தசாமி மற்றும் தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய கொடியேற்ற நிகழ்வுகளில், பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் பங்கேற்றிருப்பதாக, யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகைகளே வர்ணனை செய்து எழுதியிருக்கின்றன. கொழும்பிலிருந்து யாழ்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ, திரிகோணமலைக்கோ 24 மணி நேரமும் எவ்வித இடையூறுமின்றி எவரும் பயணம் செய்யும் நிலைமை இன்று நிலவுகின்றது. (மேலும்) 18.08.10
_____________________________________________________________________________________________________________

தனியாருக்குரிய காணிகளில் இராணுவ முகாம்கள் இல்லை வடக்கில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டும் பொறுப்பு பொலிஸாரிடம்

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ

பாதுகாப்பு நிலைகளைப் படிப்படியாக வேறிடங்களுக்கு மாற்றி வருகிறோம். ஆனால், தனியார் காணிகளில் எந்தவித இராணுவ முகாமும் அமைக்கப்படவில்லை. பொது மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியும். அரச காணிகளிலேயே பாதுகாப்பை ஸ்தாபித்திருக்கிறோம். இராணுவத்தினருக்குக் குடியிருப்புகள் அமைக்கப்படவில்லை. அங்கு கடமையாற்றும் படையினர் தங்குவதற்குப் பாசறைகளே அமைக்கப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்புக்காக அம்பாந்தோட்டை உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களிலும் இராணுவ முகாம்கள் உள்ளன. அதுபோல் வடக்கிலும் அமைத்திருக்க வேண்டிய பாதுகாப்புக் கட்டாயம் இருக்கிறது. ஆனால், பொது மக்கள் வாழும் பகுதிகளி லிருந்து படைகளை அப்புறப்படுத்துவோம். ஆனால் அது இராணுவத்தை வாபஸ் பெறுவதாக கருத முடியாது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் பலாலி உள்ளிட்ட பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்கள் உள்ளன. இங்கு தனியார் கட்டடங்கள் பாதுகாப்புக்குத் தேவை எனின் அவற்றிற்கு உரிய நட்டஈட்டைக் கொடுத்து கொள்வனவு செய்வோம். அதேநேரம் புலிகள் இயக்கத்தின் தலைமையகங்களையும் பதுங்குக் குழிகளையும் எவரும் உரிமைகோர மாட்டார்கள் என நினைக்கிறேன், என்று தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ஷ, தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதும் விடுவிக்கப்பட்டுச் சொந்த இடங்களில் அவர்களின் பெற்றோருடன் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிட்டார். (மேலும்) 18.08.10

_________________________________________________________________________________________

மலையக இலக்கியத்தின் செல்நெறியும் தற்காலத்தில் அதன் முக்கியத்துவமும்

- லெனின் மதிவானம்

இலங்கை அரசியல் வரலாற்றில் உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த புரட்சிகரமான அரசியலை முன்னெடுத்ததில் தோழர் சண்முகதாசனுக்கு முக்கிய இடமுண்டு. அவர் வலதுசாரி சந்தர்ப்பவாதத்திற்கும், நவீன திரிபு வாதத்திற்கு எதிராகவும் தீவிரமாக போராடி அதில் வெற்றியும் கண்டார். ரசியா, சீன அரசியலிருந்து தான் பெற்றிருந்த அறிவை மாறிவருகின்ற இலங்கைச் சூழலுக்கேற்றவகையில் பொருத்தி பார்க்கத் தவறி விட்டமை அவரது முக்கிய பலவீனங்களில் ஒன்றாகும். அதிகமாக தத்துவத்தில் புதையுண்டு போன தன்மையே அவரிடம் அதிகமாக காணப்பட்டது. இதன் பின்னணியில் கட்சியில் கூட்டு முடிவுக்கு பதிலாக தனிநபர் தீர்மாணங்கே மேற்கொள்ளப்பட்டன. விமர்சனம், சுயவிமர்சனம் என்ற விடயம் முற்றாகவே புறக்கணிக்கப்பட்டன. தமது கருத்துகளுக்கு எதிரான கருத்துக்களை கூறிய யாவரையும் எதியாக பார்த்ததுடன் அவர்களை கட்சியிலிருந்து விலக்குவதற்கான முயறசி;கள் மேற்கொள்ளப்படலாயின. இந்தப் பின்னணியில் கட்சி பல பிவுகளாக பிரிந்தன. இவ்வாறு பிரிந்து நேர்மையுடன் செயற்பட்டவர்கள் இன்று சிதைந்து சின்னாப் பின்னமாகி சண்முகதாசன் விட்ட அதே தவறினை செய்து வருகின்றனர். எனவே புதியதோர் சூழலில் மக்கள் நலன் சார்ந்த அமைப்பொன்றினைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இதற்கான பணியினையும் இலக்கியத்தின் மூலமாக செய்ய வேண்டியுள்ளது.  இவை தவிர மலையக இலக்கியம் குறித்து முற்போக்குடன் கூடிய ஆய்வுகளை வெளிக்கொணர்வதில் பேராசிரியர்கள் க. அருணாசலம், அம்பலவாணர் சிவராசா, தில்லைநாதன், கலாநிதி துனைமனோகரன் முதலானோரின் முயற்சிகளும் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கன. (மேலும்)  18.08.10
________________________________________________________________________________________

மதவாச்சி - தலைமன்னார் ரயில் பாதை நிர்மாணம்: இலங்கை - இந்திய அரசுகள் நேற்று ஒப்பந்தம் கைச்சாத்து

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 230 மில்லியன் அமெரிக்கன் டொலர் செலவில் வடக்கில் மதவாச்சிக்கும் தலைமன்னாருக்குமிடையில் அமைக்கப்ப டவுள்ள ரயில் பாதை நிர்மாணம் தொடர்பான ஒப்பந்தக் கைச்சாத்து நேற்று கொழும்பில் இடம்பெற்றது அமைச்சர் குமார வெல்கம, இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த் ஆகியோர் முன்னிலையில் போக்குவரத்து அமைச்சில் வைத்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்திய அரசின் சார்பில் இர்கோன் நிறுவன பொது முகாமையாளர் குப்தாவும் இலங்கை அரசின் சார்பில் ரயில்வே பொது முகாமையாளர் பி. பி. விஜேசேகரவும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். அத்துடன் காங்கேசன்துறை - தாண்டிக்குளம் வரையிலான ரயில் பாதை, மடு, தலைமன்னார், பளை ஊடான ரயில் பதைகளை விரைவில் புனரமைப்பது தொடர்பிலும் இரு அரசாங்கங்களினதும் முக்கியஸ்தர்களுக்கிடையில் நேற்று விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேற்படி சகல ரயில் பாதைகளையும் எதிர் வரும் 2 வருட காலத்திற்குள் நிறைவு செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப் பட்டன.  (மேலும்)  18.08.10
_________________________________________________________________________________________

த.தே.கூ. எம்பிக்கள் மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேந்திரன், எஸ்.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்னம் மற்றும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.ஜெயராஜா ஆகியோரை எதிர்வரும் 7ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மட்டக்களப்பில் கடந்த புதன்கிழமை கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரம் இந்த  உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனநாயகக் குடியரசு அரசுக்கு எதிராக, வேலைவாய்ப்பு வழங்கக்கோரி பதாதைகளை ஏந்தியவாறு பொலிஸ் அனுமதி பெறாமல் வீதியில் ஊர்வலம் சென்றதாகவும் ஊர்வலத்தைக் கலைப்பதற்கு நீதிமன்ற உத்தரவைப் பெற நேரம் போதவில்லை என்றும் காத்தான்குடி பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களை கைது செய்தால் மக்கள் மத்தியில் பிரச்சினை ஏற்படும் என்ற காரணத்தினால் அவர்களை கைது செய்யவில்லை என்று அந்த அறிக்கையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்ட ஊர்வலமானது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன் செல்வராசா, எஸ்.யோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்னம், வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ஆகியோரால்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  அறிய முடிந்துள்ளதாகவும் இது தொடர்பாக விளக்கமளிக்க மேற்குறிப்பிட்டவர்கள எதிர்வரும் 7ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை பிறப்புக்குமாறும் பொலிஸார் அந்த அறிக்கையில் நீதிமன்றத்தை கோரியிருந்தனர். அதனை ஏற்றுக்கொண்ட மட்டக்களப்பு நீதவான் வி.இராமகமலன் இந்த அழைப்பாணையைப் பிறப்பித்துள்ளார்.
_____________________________________________________________________________________

இரு நாட்டு மீனவர்கள் இணக்கமாக தொழில் செய்ய இந்திய-இலங்கை அரசுகள் நடவடிக்கை தேவை

ராமேஸ்வரம்:  "மீன்வளத்தை அழிக்கும் மீன்பிடிப்பை கைவிட்டு, இருநாட்டு மீனவர்களும் இணக்கமாக கடலில் மீன்பிடித்தொழில் செய்ய இந்திய-இலங்கை அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இலங்கை மீனவ சங்க பிரதிநிதிகள் கூறினர்.  தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் நடந்தது. தொடர்கதையாகி வரும் தாக்குதல் சம்பவத்திற்கு, தமிழக மீனவர்களின் மீன்பிடிப்பு முறைகளும் ஒரு காரணம். இருநாட்டு மீனவர்களும் இணக்கமாக மீன்பிடித்தொழில் செய்யும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த, தமிழக மீனவர்களை சந்திக்க இலங்கை யாழ்பாணம் வடமராச்சி வடக்கு பகுதி மீனவர் சங்க தலைவர் சூரியகுமார் தலைமையில் சங்க நிர்வாகிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் 20 பேர் நேற்று ராமேஸ்வரம் வந்தனர்.  பாம்பன் வடக்கு துறைமுகம் மற்றும் ராமேஸ்வரம் துறைமுகத்தை பார்வையிட்டு, கரையில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளை பார்த்து "ஒரே இடத்தில் இத்தனை படகுகளா?' என அதிர்ச்சியடைந்தனர். பின் மீனவர்களையும் , மீனவ சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தனர்.  இலங்கை மீனவ பிரதிநிதி குழு தலைவர் சூரியகுமார் கூறியதாவது:  பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மட்டும் மீன்பிடித்தொழிலை நம்பி, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழக மீனவர்கள் தொடர்ந்து மீன்வளத்தை அழிக்கக்கூடிய வலையை பயன்படுத்தி, இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடித்து வருகின்றனர். இதனால் மீன்வளம் அழிவதோடு, எதிர்காலத்தில் ராமேஸ்வரம் கடல் பகுதிபோல் இலங்கை கடல் பகுதியும் மீன்வளம் அற்றதாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. மீன்வளத்தை அழிக்கும் மீன்பிடிவலைகளை தவிர்ப்பதோடு இலங்கை கரை பகுதியில், மீன்பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும். இந்திய-இலங்கை அரசுகள் பாக்ஜலசந்தி கடலில் மீன்வளத்தை காப்பதோடு, இருநாட்டு மீனவர்களும் நட்புறவுடன் மீன்பிடித் தொழில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். இலங்கை மீன்வளத்துறை அதிகாரி லால் டி சில்வா கூறியதாவது:  தமிழக மீனவர்கள் மீன்வளத்தை அழிக்கும் தடை செய்யப்பட்ட வலைகளை தவிர்த்து, மீன்பிடி முறைகளை மாற்றி மீன்பிடித்தால், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரலாம். தமிழக மீனவர்களுடன் நேரிடியாக பேச்சுவார்த்தை நடத்துவது நல்ல முயற்சி. பேச்சுவார்த்தையின் எடுக்கப்படும் முடிவு குறித்து, இலங்கை மீன்துறை உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தரப்படும். இருநாட்டு அரசுகளும் இதையே விரும்புகின்றன, என்றார்.
__________________________________________________________________________________________________

அரசாங்கம் அடைந்துள்ளதாகக் கூறப்படுவனவற்றைச் சாதகமாக ஏற்றுக்கொள்ளாதவர்களாக நாட்டில் காணப்படுபவர்கள்  வடக்கில் உள்ள தமிழ்த் தேர்தல் தொகுதியினர் மாத்திரமேயாகும்.

கடந்த வாரம் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது போரின் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் நாட்டு நிலைமை மெதுவாகவே சீரடைந்து வருவதாகக் கருதினாலும் தென்பகுதி மக்கள் நிலைமை உறுதியான முறையில் மேம்பட்டுவருவதாக நம்புவதாக நான் குறிப்பிட்ட போது, கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் மூலம் மேற்குறிப்பிட்ட வகையிலான கருத்தே நிலவுகின்றது என்பதனை அறிய முடிந்தது. எமது வீடுகளை இரவு நேரங்களில் தேடும் நடவடிக்கைகளோ அல்லது முக்கிய பிரமுகர்கள் செல்வதற்காக வீதிகளை சடுதியாக மூடும் நடவடிக்கைகளோ இப்போது இல்லை. காணாமல் போனோர் பற்றிய அறிக்கைகளும் வெள்ளை வான்களின் மூலம் ஆட்கள் கடத்தப்பட்டமையும் கூடக் கடந்த கால நடவடிக்கைகளாகி விட்டன. ஒழுங்கு முறையிலான அரசியல் வாழ்க்கையும் அதனுடன் இணைந்த அதற்கான ஆதரவும் காணப்படுகின்றன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அவருடைய அலுவலகத்தில் மாலை நேரத்தில் சந்திக்க நான் சென்றிருந்தேன். ஆச்சரியப்படத்தக்க வகையில் யாழ். வாழ் மக்கள் நேரம் கடந்த நேரத்திலும் பெருமளவில் தமது பிரச்சினை ஏதோ ஒன்றினைத் தீர்த்துக்கொள்ளவோ அல்லது தொழில் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்கான சிபாரிசுக் கடிதமொன்றினைப் பெற்றுக்கொள்ளவோ காத்திருந்தனர். நான் கண்டவற்றை யாழ். சிவில் சமூகத்தினரிடம் கூறியபோது அவர்கள் அவற்றை மனதில் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. அவர்களது அபிப்பிராயத்தின்படி நிலைவரம் அவர்களுக்கு மீண்டும் மோசமாகி வருவதாகவே தென்பட்டது. (மேலும்)  17.08.10
_______________________________________________________________________________________

பொன்சேகா விவகாரத்தில் மகா சங்கத்தை தலையிடுமாறு அனோமா வேண்டுகோள் மல்வத்த மகாநாயக்கரைச் சந்தித்தார்

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு இராணுவ நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு அநீதியானதெனத் தெரிவித்து இந்த விடயத்தில் மல்வத்தை பீடாதிபதியைத் தலையிடுமாறு சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை அனோமா பொன்சேகாவும் பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ஜுன ரணதுங்க, டிரான் அலஸ், ஜே.வி.பி. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திமுது அபேகோன் , கண்டி மாநகரசபை உறுப்பினர் அநுரகுமார கோனவில ஆகியோரும் அனோமா பொன்சேகாவின் சகோதரரும் நேற்று முன்தினம் ஞாயிறு மாலையில் மல்வத்தை பீடாதிபதி திப்பொட்டுவாவே சித்தார்த்த சுமங்கல தேரரைச் சந்தித்தனர். 30 வருட கால கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டைப் பாதுகாத்த இராணுவத் தளபதியான தனது கணவருக்கு இந்த அரசாங்கம் செலுத்தும் நன்றிக்கடன் பதவி, பட்டம் பறிப்பும் தேசத்துரோகியென நாமகரணம் சூட்டுவதும் தானா? (மேலும்) 17.08.10
_________________________________________________________________________________________________

கனடாவில் தஞ்சமடைய என்ன காரணம்? : இலங்கை அகதிகள் கடிதம்

  பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையை வந்தடைந்திருக்கும் தமிழர்கள் தாங்கள் இலங்கையில் நடக்கும் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்றவற்றில் இருந்து தப்புவதற்காகவே இங்கு தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறும் கடிதங்களை வெளியிட்டுள்ளனர். வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு நெஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு கிடைத்துள்ள கடிதங்களில் தாங்கள் கனடாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தங்களைப் பற்றிய பொய்யான பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். "நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் என்பதை கனேடிய அரசும் அதன் மக்களும் நம்பும்படி கேட்டுக் கொள்கிறோம்" என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "நாங்கள் தீவிரவாதிகள் அல்லர் எனக் கூறுகிறோம். மேலும் கனேடிய சட்டத்துக்கு அமைய கீழ்ப்படிவாக வாழ்வோம் என்றும் உறுதி கூறுகின்றோம்." (மேலும்) 17.08.10
___________________________________________________________________________________________

இலங்கை அகதிகள் குறித்து கனேடிய அரசுமீது லிபரல் கட்சி குற்றச்சாட்டு

கனடா வந்த சேர்ந்த இலங்கை அகதிகள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் உரிய முறையில் செயற்படவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனேடிய லிபரல் கட்சியின் தலைவர் மைக்கேல் இனகடீப் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சன் சீ கப்பல் தாய்லாந்தில் இருந்து புறப்பட்டு கனடாவை வந்து சேர மூன்று மாதங்கள் பிடித்தன. இந்த நாட்களில் கப்பல் கனடாவை நோக்கியே வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் கனடா ஏன் இந்த விடயத்தைத் தீவிரமாக ஆலோசனைக்கு எடுக்கவில்லை என மைக்கல் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது அகதிகள் கனடாவுக்கு வந்து சேர்ந்துள்ள நிலையில், அவர்களைத் தனித்தனியே விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அத்துடன் விசாரணைகளின் போது இலங்கையின் உதவிகளும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என மைக்கேல் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளால் பயிற்றப்பட்ட சுமார் எண்ணாயிரம் போராளிகள் கனடாவில் இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. (மேலும்) 17.08.10
_____________________________________________________________________________________________

பெற்றோரின் பராமரிப்பற்ற 1200 சிறுவர்கள் வடமாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில்

பெற்றோரில் இருவரையும் இழந்த அல்லது தாயையோ தந்தையையோ இழந்த மற்றும் பெற்றோரின் பராமரிப்பு அற்ற 1200 சிறுவர்கள் வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலிருந்தும் அடையாளங் காணப்பட்ட இந்த சிறார்களை வடமாகாணத்தின் அங்கீகாரம் பெற்ற பாதுகாப்பான நான்கு சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள் ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நான்கு சிறுவர் இல்லங்களில் செம்டெம்பர் முதல்வாரம் தொடக்கம் இந்த 1200 சிறார்களும் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாந்தை வடக்கு, மற்றும் வவுனியா வடக்கு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலமே 1200 சிறுவர்களும் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 12 வயதுக்குட்பட்ட 1200 சிறுவர்களே இந்த கணக்கெடுப்பின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களை அரசாங்க த்தின் செலவில் பராமரிக்கும் பொருட்டு தேவையான நிதியை வடமாகாண சபையின் ஊடாக ஒதுக்கத் தீர்மானிததள்ள தாக ஆளுநர் தெரிவித்தார்.
____________________________________________________________________________________________

புலிகளின் ‘பிரின்சஸ் கிரிஸ்ரினா’ கப்பல் கண்காணிப்புப் பணிகளுக்கு பயன்பாடு

மலேசியாவில் வைத்து கைப்பற்றப்பட்ட புலிகளின் ‘பிரின்சஸ் கிரிஸ்ரினா’ கப்பல் திருத்தப்பட்டு தென்பகுதி கடல் கண்காணிப்புப் பணிகளுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளதாக கடற்படை தலைமையகம் கூறியது. புலிகளுக்குச் சொந்தமான மேற்படி கப்பல் கடந்த வருடம் மலேசியாவில் வைத்து பிடிபட்டது. இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட இந்தக் கப்பல் தற்பொழுது காலி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. தென் பிராந்திய கடற்படை தலைமையகத்தினால் திருத்தப்பட்டுள்ள இந்தக் கப்பல் தற்பொழுது கண்காணிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக தென் பிராந்திய கடற்படை கட்டளையிடும் தளபதி கொமடோர் ஆர். டி. பெரேரா தெரிவித்தார். மேற்படி கப்பலை துறைமுக பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கடந்தவாரம் பார்வையிட்டார். மேற்படி கப்பலில் 3 ஆயிரம் தொன் பொருட்கள் எடுத்துச் செல்ல முடியும் எனவும் எதிர் காலத்தில் இதனை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் பெரேரா கூறினார்.
_________________________________________________________________________________________________

கனடா: 'அகதிகளிடம்' விசாரணை ஆரம்பம்

பி.பி.சி

கனடாவில் அகதித் தஞ்சம் கோரி கடந்த வெள்ளிகிழமை அங்கு சென்ற 490 தமிழ் அகதிகள், திங்கட்கிழமை முதல் அந்நாட்டின் குடிவரவுத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்படுவார்கள் என கனடாவின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. எம் வி சன் சீ எனும் கப்பல் மூலம் இவர்கள் கனடாவை சென்றடைந்திருந்னர். இந்தப் பயணத்தின் போது ஒருவர் இறக்க நேரிட்டது எனவும், அவர் கடலிலேயே அடக்கம் செய்யப்பட்டார் எனவும் கனடாவின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கப்பலில் இருந்த 490 பேரும் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். "கப்பலில் இருந்த ஒவ்வொருவரும் குடிவரவு தொடர்பான நீதிபதி முன்னர் நிறுத்தபடுவதற்கான வாய்ப்பு கிட்டும் என்றும் அதன் பிறகு அந்த நீதிபதி, அந்த தனி நபர் வெளியில் செல்லும் வகையில் விடுதலை செய்யப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்த முடிவை எடுப்பார் என்று" கனடாவின் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரான ஸ்டீவன் கீரீன் பிபிசியிடம் தெரிவித்தார். இந்தக் கப்பலில் இருக்கும் சிறார்கள் எப்படி கையாளப்படுவார்கள் என்கிற கேள்வியும் பல்தரப்பில் எழுந்துள்ளது. (மேலும்)  17.08.10
__________________________________________________________________________________________

அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முயன்ற ஐவர் மாரவிலவில் கைது

சட்டவிரோதமான முறை அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முற்பட்ட ஐந்து பேரை கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரவில கடற்படை புலனாய்வு பிரிவினர் கைது செய்த பின்னர் நாட்டில் இடம்பெற்று வந்த பாரிய மனித கடத்தல்  நடவடிக்கை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் அதுல சேனரத்ன தெரிவித்தார். கடற்படையினர் தீடீர் சோதனை மேற்கொண்ட போது மனித கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரும் மற்றும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் அவுஸ்ரேலியாவுக்கு பலநாள் மீன்பிடிக்கும் இயந்திரத்தின் மூலம் செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
______________________________________________________________________________________________

கீற்று இணைய இதழில் ‘எஸ்.பொ.’ சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக அவதூறு:  மகாநாட்டு அமைப்பாளர்  இந்திய ரூபாவில் பத்துக்கோடி நட்டஈடு கோருகிறார்

இலங்கையில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டுக்கு எதிராக தமிழ்நாடு கீற்று இணைய இதழில் அவதூறான முறையில் செய்தி வெளியிட்டிருப்பதுடன் அதனை உலகெங்கும் பரவச்செய்து மகாநாட்டையும் மகாநாட்டுப்ணியாளர்களையும் அவமானப்படுத்தியுள்ள ‘எஸ்.பொ.’ என அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை என்பவருக்கு எதிராக இம்மகாநாட்டின் அமைப்பாளர் நட்டஈடுகோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளார். இம்மகாநாடு இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடனும் அரச அதிபர் திரு. மகிந்த ராஜபக்ஷவிடம் லஞ்சம் பெற்றும் நடத்தப்படவிருப்பதாக உண்மைக்குப்புறம்பான  முறையில் முற்றிலும் தவறான செய்தியை விஷமத்தனமாக எஸ்.பொன்னுத்துரை பரப்பியுள்ளார். தமிழ் இலக்கிய உலகிற்கும் தமிழ் ஊடகங்களுக்கும் உலகமெல்லாம் பரந்துவாழும் தமிழர்களுக்கும் இந்த சர்வதேச மகாநாட்டின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதற்காகவும் எவ்வாறு இம்மகாநாடு பல வருடங்களாக திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டது என்பதை விளக்குவதற்காகவும் அதன் பிரதம அமைப்பாளர் என்ற முறையில் மகாநாட்டின் அமைப்பாளரும் எழுத்தாளருமான திரு.லெ.முருகபூபதி அவுஸ்திரேலியாவிலிருந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். (மேலும்)  17.08.10
________________________________________________________________________________________

பொன்சேகா மீது மேல் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு

இராணுவத்திலிருந்து தப்பியோடிய படையினரை தமது பாதுகாப்பில் வைத்திருந்ததாகவும் அவர்களை அரசாங்கத்திற்கு எதிராக கலகம் செய்யத் தூண்டியதாகவும் இராணுவ வீரர்களை தமது கடமைகளிலிருந்து விலகச் செய்வதற்கு முயற்சித்தாகவும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் அவரின் அந்தரங்க உதவியாளர் மேஜர் சேனக ஹரிப்பிரியவும் மேல் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் சிரேஷ்ட சட்டத்தரணி இன்று தெரிவித்தார். கொழும்பு நீதவான் நீதிமன்றில் இது தொடர்பான  வழக்கு விசாரிக்கப்பட்டபோது இவ்விடயத்தில் தண்டனை சட்டக்கோவையின் 125 ஆவது பிரிவின்கீழ் இவர்கள் இருவர் மீதும் சட்டமா அதிபர் குற்றம் சுமத்தியிருப்பதாக அரச சட்டத்தரணி தமித் தொட்டவத்த கூறினார். இக்குற்றப்பத்திர இலக்க விபரம் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கவில்லை எனவும் அது கிடைத்தவுடன் நீதவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார். இந்நிலையில் இவ்வழக்கை ஓகஸ்ட் 30ஆம் திகதிக்கு கொழும்பு பிரதம நீதிவான் ரஷ்மிகா சிங்கப்புலி  ஒத்திவைத்தார்.
___________________________________________________________________________________________________

கீற்று இணைய இதழுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ?

இந்த மகாநாட்டை திட்டமிட்டு குழப்பும் நோக்கத்துடன் சிலர் இப்பொழுது முனைந்திருப்பது கவலைக்குரியது. எம்முடன் கடந்த காலங்களில் அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் விழாக்களில் இணைந்து பயனடைந்த சிலரும் தற்போது மிகவும் இழிவான முறையில் வானொலிகளில் பேசத்தொடங்கியுள்ளனர். படைப்பாளிகள் வெட்கித்தலைகுனியச்செய்யும் இந்த ஈனச்செயலின் சூத்திரதாரியாக தமிழ்நாட்டிலிருந்து எஸ்.பொ. இயங்குகிறார். அவரது இற்றுப்போன கயிற்றில் தொங்குவதற்கு சிலர் முனைந்துள்ளனர்.  இதுநாள் வரையில் மதில் மேல் பூனைகளாக இருந்த சிலர் இப்போது,  தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் கீற்று இணைய இதழில் எஸ்.பொன்னுத்துரை என்பவர் மிகவும் அவதூறாகவும் எமது பணிகளை கேவலப்படுத்தும்விதமாகவும் எழுதியுள்ளதையடுத்து (குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள்) இதுவரை ஆழ்ந்த நித்திரையிலிருந்து எழுந்து சோம்பல் முறித்து பிதற்றத்தொடங்கியுள்ளனர். இலங்கை அதிபரையும் எம்மையும் தொடர்புபடுத்தி நாம் லஞ்சம் வாங்கித்தான் இம்மகாநாட்டை நடத்தமுன்வந்திருப்பதாக பொன்னுத்துரை அவதூறு செய்துள்ளார். எனவே அவருக்கும் குறிப்பிட்ட கீற்று இணைய இதழுக்கும் எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். (மேலும்) 17.08.10
_________________________________________________________________________________________

Smugglers may have made more than $20-million from Tamil ship

The human smugglers behind the MV Sun Sea may have pocketed more than $20-million for ferrying a shipload of Sri Lankan migrants to the British Columbia coast last week. The passengers each paid $40,000 to $50,000 for the three-month journey from Thailand, Public Safety Minister Vic Toews told the National Post in an interview this weekend. He said his officials had advised him the Tamil Tigers rebel organization was behind the operation, which he said was driven by profit motives. While he said he did not know whether children or families got discounts, he said that considering a ship like the Sun Sea costs about $1-million, the profit margin was significant. “There’s a tremendous amount of money to be made,” the minister said. The smugglers had refitted the 59-metre cargo ship to maximize their profits, he said.  “All I can say is that the debriefing that I received was that it is clear that this is the product of the efforts of an organized criminal enterprise. “In fact, the Sun Sea itself was modified in order to make this trip and maximize the number of persons and the resulting profits.  (Read) 17.08.10

____________________________________________________________________________________________

வடக்கின் பொருளாதார மீளுகைக்கு உட்கட்டுமான அபிவிருத்தி வேண்டும்: கலாநிதி முத்துகிருஷ்னா சர்வானந்தன்.

வடக்கில் நிலைமைகள் சிரடைந்துள்ள நிலையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டு தங்களுடைய தொழிற்சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளன. ஆனால், இன்னும் அவை ஆரம்பிக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் உடனடியாக வடக்கின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர்- யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். வடக்கின் யாழ்ப்பாணம் நோக்கி உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கு இடங்கள் குறைவு அதனை ஏற்படுத்திக்கொடுக்கும் போது பலர் வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். இதுதவிர வங்கிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் வருகை வடக்கை நோக்கி அதிகரித்துள்ளன. இந்த நிறுவனங்களின் ஓரளவுக்கு ஆங்கிலமும், கணனி அறிவும் தெரிந்தவர்கள் வேலை வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்தத்துறையும் எதிர்காலத்தில் அதிகமானோரை உள்வாங்கும் என்று நம்பலாம். அதுபோல, எதிர்காலத்தில் கைத்தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் பட்சத்திலும் அதிகளவானோர் வேலை வாய்ப்பினைப் பெறுவர்கள். ஆனாலும் அதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும். அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களையும், புலம்பெயர் சமூகத்தையும் வடக்கு அபிவிருத்தியில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ள தருணம் இது. ஆனாலும், புலம்பெயர் சமூகத்தின் மீது சில பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்கின்றன. ஆதனை விரைவில் அரசாங்கம் நீக்கினால் புலம்பெயர் சமூகத்தின் முதலீடுகள் அதிகரிக்கும்.  (மேலும்)  16.08.10
__________________________________________________________________________________________________________

எமது தாயகம் இனிமேல் வெளிநாடுகளின் "குப்பைகளை கொட்டும்' இடமாக இருக்காது : ஜனாதிபதி

பயங்கரவாதத்திலிருந்து நாடு சுதந்திரம் அடைந்துள்ளது. இதனை சிறந்த முறையில் எதிரொலிக்கச் செய்ய வேண்டுமாயின் சுதந்திரமான பொருளாதார அபிவிருத்தியினை ஏற்படுத்த வேண்டும். அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகி கடல் நீர் உள்வாங்கும் இந்த ஓடையானது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் எதிரொலியாகும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் பின்னர் நாடு பாரிய பொருளாதார அபிவிருத்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இத்துறைமுகத்தை அமைக்கும் பணியை நாம் ஆரம்பித்த போது பலர் விமர்சித்தனர், சேறு பூசினர், நீதிமன்றம் சென்று வழக்குத் தாக்கல் செய்யவும் தயாரானார்கள். இது போன்ற பல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து அவற்றை முறியடித்து இன்று வெற்றி கண்டுள்ளோம். எனவே அன்று எதிர்த்தவர்களை இன்றைய வெற்றி தொடர்பிலும் திரும்பிப் பார்க்குமாறு அழைப்பு விடுக்கின்றேன். இன்று எமது வெற்றியைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாதவர்கள் ஏழ்மைத் தன்மையை பயன்படுத்தி அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இவ்வாறு அரசியல் நடத்துபவர்கள் ஒரு போதும் ஏழ்மைத்தன்மையை இல்லாதொழிக்க முன்வர மாட்டார்கள். சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். அதுவே மனித இனத்தின் வெற்றியாகும். நாம் அதனையே செய்துள்ளோம். (மேலும்) 16.08.10
_______________________________________________________________________________________

வடக்கு கிழக்கில் 89 ஆயிரம் விதவைகளுக்கு சுயதொழில் வாய்ப்பு

வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் விதவைகளாக்கப்பட்டுள்ள 89 ஆயிரம் விதவைகளுக்கு சுயதொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது என மகளிர் விவகார சிறுவர் பராமரிப்பு பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “யுத்தத்தின் போது விதவைகளாக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சுயதொழிலை மேற்கொள்ளும் வகையில் பல திட்டங்களை அமைச்சு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வடமாகாணத்தில் 40 ஆயிரம் பேரும் கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் பேரும் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். இவர்களது நலன் கருதி சுயதொழில் முயற்சிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். இதன் முதற்கட்டமாக இந்தியாவின் உதவியுடன் 800 விதவைகளுக்கான சுயதொழில் முயற்;சிக்கான உதவிகள் வழங்கப்படவுள்ளன எனத் தெரிவித்தார்.
_________________________________________________________________________________________

தமிழ் மக்களுக்குப் பாரிய இன்னல்கள் ஏற்பட்டதற்கு வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி நிறைவேற்றிய தனிநாட்டுத் தீர்மானமே அடிப்படைக் காரணம்.

- ஜீவகன்

இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழ்க் கட்சிகளின் அரங்கம் விடுத்த அழைப்பு தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்த அறிக்கை சாராம்சத்தில் அந்த அழைப்பை நிராகரிப்பதாகவே உள்ளது. அரங்கத்தின் அழைப்பை நிராகரிப்பது தமிழ் மக்கள் சார்பில் பேசும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகக் கூடி நடைமுறைச் சாத்தியமான தீர்வுத் திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டிய தேவையை நிராகரிப்பதற்குச் சமன். இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில் சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்க் காங்கிரஸ் முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை தோல்வியடைந்துவிட்டன என்பதை ஒத்துக் கொண்டாக வேண்டும். இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத் தருவதாக அறுபது வருடங்களுக்கு மேலாக இக் கட்சிகள் தமிழ் மக்களுக்கு வாக்குறுதி அளித்த போதிலும் இம் மியளவும் கூட முன்னேற்றம் ஏற்பட வில்லை. இனப் பிரச்சினை இருந்ததிலும் பார்க்கச் சிக்கலான நிலையை அடை ந்ததும் தமிழ் மக்கள் தாங்க முடியாத அளவுக்கு இழப்புகளுக்கும் அழிவுக ளுக்கும் உள்ளாகியதும் தான் இக் கட்சிகளின் வழிகாட்டலில் கண்ட பலன். (மேலும்) 16.08.10
________________________________________________________________________________________________

இந்திய விடுதலை 64 : வரலாற்று ஏடுகளிலிருந்து

சமூக சீர்திருத்தங்களுக்காக...

சாதிய - வகுப்புவாத பழக்கவழக்கங்களை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற வங்காள இந்துக்களின் வேட்கையும், அதனை சாதிப்பதற்காகத் துவக்கப்பட்ட இயக்கமும் ஐரோப்பாவின் மறுமலர்ச்சி இயக்கத்துக்கு இணையான இந்திய நிகழ்வுகளாகும். இந்த இயக்கத்துக்குத் தலைமையேற்று நடத்தியவர்களில் புகழ்பெற்றவரான ராஜா ராம் மோகன்ராய் ஒரு சமூக சீர்திருத்தக்காரர் மட்டுமல்ல; முதலாளித்துவ தேசிய சித்தாந்தத்தின் மிகச்சிறந்த பிரதி நிதியுமாவார். எனினும் இந்தியா மற்றும் உலகத்தின் அரசியல் உருமாற்றத்தை விட வேறு ஒன்றுக்கு ராம் மோகன்ராய் மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். சாதி அடிப்படையில் அமைந்த இந்துக்களின் பழக்க வழக்கங்களும் அதனால் மக்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்கள் தொடர்பான பிரச்சனைகளுமே உடனடியான முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற உறுதியான கருத்துக் கொண்டவராக ராம்மோகன் இருந்து வந்தார். இதன் பொருள் இந்திய நாட்டின் விடுதலை குறைவான முக்கியத்துவம் கொண்ட ஒன்று என்பதல்ல. ஆனால் அதனை எதிர்கொள்வதற்கு, இந்திய சமுதாயத்தை அதன் சாதி அடிப்படையிலான பழக்கவழக்கங்கள் என்ற விலங்குகளிலிருந்து விடுவிக்க வேண்டியது இன்றியமையாதது என்று அவர் கருதினார். இந்தக் குறிக்கோளை அடைவதற்காக எடுக்கப்பட வேண்டிய தேசிய முயற்சிகளில் பிரிட்டிஷாரின் உதவியையும் ஒத்துழைப்பையும் அவர் எதிர்நோக்கினார். (மேலும்) 16.08.10
______________________________________________________________________________________________

ஜிஎஸ்பி+ வரிச்சலுகை விலக்கம்

பி.பி.சி

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளித்து வந்த ஜி எஸ் பி+ எனப்படும் ஏற்றுமதி வரிச்சலுகை 15.8.10 அன்றுடன் விலக்கிக் கொள்ளப்படுவது அங்கு பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுர்கள் கூறுகிறார்கள். இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பிலான முன்னேற்றங்கள் தேவைகள் என ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்பந்தங்களுக்கு இலங்கை அடிபணியாது என்று அரசு கூறியது. நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்த எழுத்துபூர்வமான உத்திரவாதத்தை அரசு அளிக்காத நிலையல். வரிச்சலுகையை ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் திரும்பப் பெறப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவால் இலங்கைக்கு சுமார் 400 முதல் 500 மில்லியன் டாலர்கள் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என பொருளாதார ஆய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ணன் சர்வானந்தன் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.  (மேலும்) 16.08.10
________________________________________________________________________________________________________

பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்

அவர், தான் தப்பிச்செல்ல எண்ணவில்லை. தான் இறுதிவரை சண்டையிட்டு தேவையானால் உயிரிழக்கவும் தயார் எனவும் சார்ள்ஸ் கூறினார். தனது குடும்பத்தைப் பற்றிதான் அவர் கவலையடைந்தார். சார்ள்ஸுடன் பேசியபின் நான் மிகவும் கவலையடைந்தேன். ஒரு திட்டம் குறித்து சிந்தித்தேன். கப்பல் ஒன்றைப் பெற்று அதை இலங்கைக் கடற்படைக்கு எட்டாத விதத்தில் சர்வதேச கடற்பரப்பில் தயாராக வைத்திருக்க விரும்பினேன். ஹெலிகொப்டர் ஒன்றை வாங்க விரும்பினேன். எல்.ரி.ரி.ஈ.யின் வான் படைப் பிரிவிலுள்ள பயற்சிபெற்ற விமானிகள் அதை வன்னிக்குக் கொண்டு சென்று அக்குடும்பத்தை கப்பலுக்கு கொண்டுவரவேண்டுமென விரும்பினேன். அதன்பின் மூன்று நாடுகளில் ஒன்றில் அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் திட்டம் என்னிடமிருந்தது.  திட்டத்தை வகுத்தபின் சார்ள்ஸுடன் தொடர்புகொண்டு அதைத் தெரிவித்தேன். அவரின் தந்தை அதை ஏற்றுக்கொள்வாரா என்று கேட்டேன். தான் பிரபாகரனை சம்மதிக்கச் செய்வதற்கு முயற்சிப்பதாகக் கூறினார். ஆனால் பிரபாகரன் அதற்கு சம்மதிக்காவிட்டால் நான் அவரின் தாயையும் தனது தம்பி தங்கையையும் காப்பாற்ற வேண்டும் என அவர் கூறினார். பிரபாகரனை அறிந்திருந்ததால் அவர் ஒருபோதும் மற்றவர்களை விட்டுவிட்டு தான் குடும்பத்துடன் தப்பிச் செல்ல முயற்சிக்க  மாட்டார் என நான் உணர்ந்தேன். ஆனால், இந்த ஹெலிகொப்டர் மூலம் அவரையும் வேறு சிலரையும் காடொன்றின்  பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முடியும் எனவும் பின்னர் மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகியோரை வெளியேற்ற முடியும் எனவும் நான் எண்ணினேனன். (மேலும்)  15.08.10
___________________________________________________________________________________________________

உரிய காரணம் தெரிவித்தால் அகதி அந்தஸ்து : கனேடிய அமைச்சர்

 எம்வி சன் சீ கப்பலில் வந்த இலங்கை அகதிகள் உரிய காரணங்களைக் கொண்டிருந்தால்அகதி அந்தஸ்து வழங்கப்படும். ஏனையோர் நாடு கடத்தப்படுவர் என கனேடிய பொதுமக்கள நலன் துறை, பாதுகாப்பு அமைச்சர் விக் டோவிக் தெரிவித்துள்ளார். சன் சீ கப்பல் மூலம் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சென்றடைந்துள்ள அகதிகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இன்னும் ஒரு வார காலத்தில் இந்தப்பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சன் சீ கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியளவில் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்படைத்தளத்திற்கு வழிநடத்திச் செல்லப்பட்டது. இந்நிலையில் அதில் பயணித்த 490 பேரின் சுகாதார நலன் குறித்த விடயங்கள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக கனேடியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணைகளின் பின்னர் உரிய காரணங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படும். ஏனையோர் நாடு கடத்தப்படுவர் என பொதுமக்கள நலன் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் கப்பலில் சென்றவர்களில் சிறு தொகையினரே நோய்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் அவர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு விரைவில் அங்கிருந்து முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 
_______________________________________________________________________________________________________________

புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரே ஸ்ரீலங்கா அரசு வகுத்திருக்கும் சாம, தான, பேத, தண்ட வியூகம்

ஆக்கம்: கேணல். ஹரிஹரன்

புலம்பெயர் தமிழர்கள் ஈழப்பிரச்சினைக்கு ஆதரவு வழங்கும் விடயத்தில் இருதுண்டுகளாக பிளவுபட்டு நிற்கிறார்கள், அடிப்படையில் அவர்கள் இரு வேறுபட்ட தளங்களில் நின்று செயற்படுகிறார்கள். ஒன்று உணர்ச்சிப் பெருக்கில் செயற்படும் தளம்,பல வருடங்களாக தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் தங்கள் சொந்த பந்தங்களை இழந்த சோகங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இன்னமும் இன்னலின்பிடியில் சிக்கித் தவிக்கும் தமது உறவுகளுக்கு நேரடியாகச் சென்று உதவ முடியாத இயலாமை அவர்களை இப்போது கடும் கோபத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஸ்ரீலங்காவில் நடப்பவைகளால் உணர்ச்சி வயப்பட்டு தத்தளிக்கும் பெரும்பான்மையோர் அநேகமாக இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான். கே.பியின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா வகுக்கும் வியூகத்தில் இநதப் பகுதியினர் விழுந்து விடலாம், அரசியல் முன்னேற்பாடுகளையும் தொடஙகி அரசு ஒரே கணையில் இரு இலக்கை வீழத்தலாம். மறு பாதியினர் ஆழமான கொள்கைப் பற்றாளர்கள், தமிழின் தனித்துவத்தை பேணிப் பாதுகாப்பதும் தமிழீழத்தை உருவாக்குவதுதான் அதற்கான ஒரே வழி என்றும் விசுவசிப்பவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கு முன்னரே இவர்கள்தான் தமிழீழத்தின் ஆரம்ப கர்த்தாக்கள். இந்தப் பாதியினர் கடந்த கால அனுபவங்கள் காரணமாக பெரும்பான்மை சிங்களவர்களின் அரசியல் அபிலாசைகளில் ஆழமான சந்தேகம் கொண்டுள்ளார்கள். அதுதான் பிரிவினைவாதம் என்கிற ஊற்றின் தொடக்கம். (மேலும்)  15.08.10
___________________________________________________________________________________________

த.தே.கூட்டமைப்பு பதிலளிக்காமை குறித்து தமிழ்க்கட்சிகளின் அரங்கம் கவலை

தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தில் இணைந்து கலந்துரையாட வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு  பதிலளிக்காமைக் குறித்து தமிழ்க்கட்சிகளின் அரங்கம் கவலை வெளியிட்டுள்ளது. தமிழ்க்கட்சிகளின் அரங்கம் ஐந்தாவது தடவையாக இன்று மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன் தலைமையில் கூடியது. இக்கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே  மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கடந்த கூட்டத்தில்  எடுக்கப்பட்ட ஒருமித்த தீர்மானத்திற்கு அமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அக்கட்சி உத்தியோகபூர்வமான முறையில் பதிலளிக்காமை குறித்து இவ்வரங்கம் தனது கவலையை வெளிப்படுத்துவதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான கதவுகள் இன்னும் திறந்தே இருக்கின்றது என்பதை தெரிவிக்கின்றது. இன்றைய தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய உடனடித் தேவைகள் குறித்து அதிக கவனம் செலுத்தி ஆராயப்பட்டதுடன் அவற்றை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. (மேலும்) 15.08.10
_____________________________________________________________________________________________________
திருமலை நகரசபைத் தலைவர் பதவியிலிருந்து கௌரி முகுந்தன் இடைநிறுத்தம்

திருமலை நகரசபைத் தலைவர் சண்முகராஜா கௌரிமுகுந்தன் அப்பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். கௌரி முகுந்தனுக்கு கிழக்கு மாகாண  முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை நகரசபைத் தலைவரின் பொறுப்புகளை உபதலைவர் கா.செல்வராசாவிடம் 3 மாத காலத்திற்கு கையளிக்குமாறு  நகரசபைத் தலைவர் கௌரி முகுந்தனை முதலமைச்சர் சந்திரகாந்தன் பணித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு திருமலை நகரசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கௌரிமுகுந்தன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இதனால், அவரை கட்சியலிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக த.தே.கூ. அண்மையில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
______________________________________________________________________________________

Tigers 2.0

A young Calgary man believes he has family aboard the MV Sun Sea. He also believes strongly in the cause of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), a.k.a. the Tamil Tigers. He is, in a person, the predicament Canada faces if the Tigers, as some suspect, are employing human-smuggling ships as part of broader efforts to use this country as a base to rebuild their organization -- the one behind a decades-long civil war in Sri Lanka. This country, say some LTTE-watchers, has all the moral support, infrastructure and political accommodation the Tigers need to make Canada their new headquarters. "I don't look at the Tigers as an organization that someone made, I look at the Tigers as my fellow people and citizens," said the man. The man, who asked not to be named, said through an interpreter that he believes his father was one of the passengers on the ship that sailed, uninvited, into B.C. waters on Thursday, to deliver to Canadian shores 490 passengers, all suspected to be Tamils. "Everything [the Tamil Tigers] had done was to help us, to help Tamils."  (Read) 15.08.10
__________________________________________________________________________________________________________________ _
பிற்போக்கு நிலையில் இருந்து மீண்டும் முற்போக்கு நிலைக்கு தமிழ் தேசியம் வருமானால் நாங்கள் ஆதரவு தருவோம்

இ. தம்பையா

தமிழ் கட்சிகள் தங்களுடைய கடந்தகால தவறுகளை வெளிப்படையாக விமர்சனம் செய்து கொண்டு, அதேநேரத்தில் ஏனைய கட்சிகளுடனும் அவை சிறிய அல்லது பெரிய கட்சியாக இருக்கலாம், முதலில் அரசியலில் அபிப்பிராயத்தை உருவாக்குவதே பெரிய விடயம். ஆகவே, சிறிய கட்சிகளுக்கு கூட பெரிய சாதனை இருக்கிறது. அவற்றை கவனத்தில் கொண்டு ஜனநாயக ரீதியாக செயற்படுகின்றபோது ஜனநாயக நாடுகளில், ஜனநாயக சூழலில் பல அமைப்புகள் வரும். அதையும் கருத்திற்கொண்டு பன்மைத்துவத்துடன் எவ்வாறு நாங்கள் தென்பகுதி சிங்கள மக்கள் மத்தியிலுள்ள கட்சிகளுடன் செயற்பட வேண்டுமென விரும்புகின்றோமோ அதே பன்மைத்துவம் தமிழ்க் கட்சிகள் மத்தியிலும் இருக்க வேண்டும். தமிழ் கட்சிகளும் இருக்கும் என்பதை ஏற்றுக்கொண்டு செயற்பட்டால், நாங்கள் எங்களை ஜனநாயகமயப்படுத்திக் கொண்டு ஜனநாயக உரிமைகளுக்காக போராட முடியும். தமிழ் கட்சிகள் அனைத்தும் பொது உடன்பாட்டிற்கு வர வேண்டுமென்பதை வலியுறுத்துகிறோம். முற்போக்காக சொல்லும் இன்னொரு விடயம், கடந்த காலத்தில் தமிழ் தேசியம் மிகவும் பிற்போக்கான இடத்தில்தான் இருந்திருக்கிறது. அது முற்போக்கான நிலையில் செயற்பட்டால், அதனுடன் கைகோர்த்து செயற்பட நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழ் தேசியவாதம் பழமைவாதத்தில் இருந்துதான் கட்டமைக்கப்பட்டது. தமிழ் தேசியம் அதனது முற்போக்கான கூறுகளை தேடியெடுத்து அதாவது, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏனைய தேசிய இனங்களுடன் ஐக்கியம், குறுகிய இனவாதத்தை தவிர்தல், தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற சாதி, பெண் ஒடுக்குமுறைக்கு எதிராக செயற்படுதல் போன்ற விடயங்களில் தமிழ் தேசிய முற்போக்கான கூறுகளை கொண்டிருக்க வேண்டும் என நாம் பார்க்கிறோம். (மேலும்)  15.08.10
_______________________________________________________________________________________

பொன்சேகாவுக்கு எதிரான தீர்ப்பு: ஜனாதிபதியினால் அங்கீகாரம்

முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகா வுக்கு எதிராக முதலாவது இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கீகரித்துள்ளார். இராணுவ சேவையிலிருந்துகொண்டு அரசியலில் ஈடுபட்டாரென்ற குற்றச்சாட்டு தொடர்பில் முதலாவது இராணுவ நீதி மன்றம் விசாரணை செய்தது. இதில் சரத் பொன்சேகா குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் அவரின் இராணுவ தர நிலை ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் வாபஸ்பெறப்பட வேண்டுமென்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில் பொன்சேகா வுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை ஜனாதிபதி நேற்று அங்கீகரித்ததாக இராணுவப் பேச்சாளர் கேர்ணல் துமிந்த கமகே தெரிவித்தார். இதன்படி சரத் பொன்சேகா இராணுவ சேவையில் இருந்த போது வழங்கப்பட்ட தரநிலை மற்றும் கெளரவ விருதுகள் அனைத்தையும் இழந்தவராகின்றார். சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற் றச்சாட்டுகளை விசாரணை செய்யவென இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் பரிந்துரைக்கமைவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2010 மார்ச் மாதம் 11ஆம் திகதி முதலா வது இராணுவ நீதிமன்றத்தை நியமித்தார். அதன் முதலாவது அமர்வு மார்ச் 16ஆம் திகதி ஆரம்பமானது. சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபட் டமை தொடர்பான இராணுவ நீதிமன்ற விசாரணையின் போது அமைச்சர் ஜொன்ஸ்ரன் பெர்னாண்டோ, காமினி அபேரட்ன, லக்ஷ்மன் செனவிரட்ன, மேஜர் ஜெனரல் ஏ.டபிள்யூ.கே.சீ.டி. சில்வா ஆகியோர் சாட்சியமளித்தனர்
_______________________________________________________________________________________

அமைச்சர் பதவியிலும் பார்க்க நக்சலைட் உறவுக்கு முன்னுரிமை

இந்தியாவின் ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி அண்மையில் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகினார். வலதுசாரி பாரதிய ஜனதா கட்சியும் இடதுசாரி மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மமதா பானர்ஜியைக் கடுமையாகத் தாக்கிப் பேசியதுடன் பிரதமர் மன்மோகன் சிங் மமதாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தன. மேற்கு வங்காளத்திலுள்ள லால்கார் நகரில் ஓகஸ்ட் 9ந் திகதி நடைபெற்ற கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையே கண்டனத்துக்கு உள்ளாகியது. மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்திலேயே லால்கார் அமைந்துள்ளது. லால்கார் கூட்டம் அரசியல் சார்பற்றது என்று மமதா கூறுகின்ற போதிலும் அது அரசியல் நோக்கத்துடன் நடத்தப்பட்ட கூட்டம் என்பதில் சந்தேகமில்லை. மமதாவின் திரினாமுல் காங்கிரஸ் கட்சியும் மாவோயிஸ்டுகளும் கூட்டாக அக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. இந்திய அரசாங்கம் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்திருக்கும் நிலையில் மத்திய கபினற் அமைச்சர் மாவோயிஸ்டுகளுடன் கூட்டாகப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்வதைச் சாதாரண விடயமாகக் கருத முடியாது.   (மேலும்) 15.08.10
_____________________________________________________________________________________________

புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவரும் 10,000 பேரையும் விடுவிக்க வேண்டும்

    - நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் ஆனந்தசங்கரி சாட்சியம்
    * பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு
    * வடக்கில் முழு சிவில் நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்

தடுத்து வைக்கப் பட்டுப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப் பினர்கள் பத்தாயிரம் பேரையும் விடுவித்து அவர்களை சமூகமயப்படுத்த வேண்டுமென்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். முன்னாள் ஜே. வி. பி. உறுப்பினர்களைப் புனர்வாழ்வளித்து விடுவித்ததைப்போல், புலி உறுப்பினர்களையும், விடுவிக்க வேண்டுமென்று குறிப்பிட்ட அவர், குழுவொன்றை அமைத்து அவர் களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துகொண்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றார். அத்துடன் வடக்கில் மக்களின் சுதந்திரமான இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்து வதற்காக அங்கு சிவில் நிர் வாகத்தை முழுமையாக ஏற் படுத்த வேண்டுமென்றும் அவர் வலி யுறுத்தினார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் பகிரங்க அமர்வில் ஆனந்தசங்கரி நேற்று சாட்சியமளித்தார். குழுவின் தலைவர் - முன்னாள் சட்ட மா அதிபர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் நடைபெற்ற விசாரணையில் சுமார் 45 நிமிடம் சாட்சியமளித்த கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, குழுவின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.  (மேலும்) 14.08.10
___________________________________________________________________________________

டக்ளஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது

1986 ஆம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் சென்னை நீதிமன்றமொன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஸ அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, அவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சென்றிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் சில வழக்கறிஞர்கள், கொலைக் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பி்ல் டக்ளஸ் தேவானந்தா ‘அறிவிக்கப்பட்ட குற்றவாளி’ என்றும் அவரை போலிசார் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தனர். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசையும் தமிழக அரசையும் கேட்டிருந்தது. இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் எதிர்மனு ஒன்று தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசாரணையின் போது நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜராக தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதாக மனுவை தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் வஜிரவேலு தமிழோசையிடம் தெரிவித்தார். 1987 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட ராஜீவ்-ஜே.ஆர் ஒப்பந்தத்தின் படி, தமிழ் ஆயுதக்குழுவினருக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னர் தமிழோசையிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கத

___________________________________________________________________________________

ஆம்..இல்லை, என நறுக்கென்று இரண்டு வார்த்தை போதும்.”

சோபாசக்தி, தீபச்செல்வன் உரையாடல் குறித்த எதிர்வினை.

கற்சுறா..அசுரா

ஞானசம்பந்தர் ஞானப்பால் குடித்து ஐந்து வயதில் பதிகம் பாடியதாக எமக்கு புராணம் சொன்னது. புராணங்கள் எல்லாமே புரட்டுகள்தான் என்று மனம் புறந்தள்ளியது. “ஆனால்கிட்டத்தட்ட ஆறுவயதில் ஏன் யுத்தம் நடக்கிறது? எங்கள் மண்ணில் என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரிந்து விட்டது.எங்களுக்கு என்ன நடக்கிறது? நாங்கள் யார்? என்று புரிந்து கொண்டேன். ஆமிக்குப் பயந்து வாழும் வாழ்க்கை எனக்கு அந்த வயதிலேயே தெரிந்தது.” என புலிப்பால் குடித்து ஆறுவயதில் தமிழ்த் தேசியப் புராணம் பாடிய தீபச்செல்வனுக்கும் திருஞான சம்பந்தருக்கும் மிஞ்சி..மிஞ்சிப்போனால் ஒரு வயதுதான் வித்தியாசம். இந்த தீபச்செல்வனது அதிசயம் எம் கண்முன்னாலேயே நடக்கிறது. எனவே ஐந்து வயதில் சம்பந்தர் பதிகம் பாடியிருப்பார் என்பதை நாம்  இப்போது ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. தீபச்செல்வன் புலிஆதரவாளராக இருப்பதும் புலி இராட்சியத்தின் அவசியம் குறித்துப் பேசுவதும் நமக்கு ஒரு பொருட்டல்ல. இப்படியான மனம்படைத்தவர்களுடன் உரையாடுவதும் ஒரு தவறான விடயமும் அல்ல.  (மேலும்) 14.08.10

___________________________________________________________________________________________________________________________________________

சரக்குக் கப்பலில் 500 இலங்கை தமிழ் அகதிகள. கனடா, அமெரிக்க கடற்படை விசாரணை

mvsun seaவான்கூவர், ஆக.13: வெளிநாட்டில் தஞ்சம் கோரி சரக்குக் கப்பலில் சென்ற 500 இலங்கைத் தமிழர்கள் கனடா, அமெரிக்க கடற்படையிடம் சிக்கியுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ர்இவர்களில் சிலர் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இவர்கள் அனைவரும் தீவிர விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். வான்கூவர் கடற்பகுதியில் எம்வி சன் சீ என்ற சரக்குக் கப்பல் நிர்ணயிக்கப்பட்ட திசையிலிருந்து விலகிச் சென்றது. இப்பிராந்தியத்தில் பலமுறை இங்கும் அங்கும் சென்று திரும்பியதால் கப்பலுக்கு சிக்னல் அனுப்பியதில் இதில் அகதிகள் இருப்பதாக கப்பல் மாலுமி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கடற்படையினர் அக்கப்பலுக்குச் சென்று அங்கிருந்தவர்களை மீட்டு கரைக்குக் கொண்டுவந்ததாக கனடா அமைச்சர் விட் டோவ்ஸ் தெரிவித்தார்.ர்தாய்லாந்து நாட்டு கொடியுடன் சென்ற இந்த கப்பலில் 490 பேர் இருந்ததாக கப்பல் மாலுமி தெரிவித்தார். ஆனால் அவர்கள் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை. கப்பலில் இருந்தவர்களில் சிலர் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும், இவர்களில் சிலர் தடை செய்யப்பட்ட இயக்கத்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக டோவ்ஸ் கூறினார். கனடா நாட்டு சட்டப்படி ஆள் கடத்தல் கிரிமினல் குற்றமாகக் கருதப்படும். இதில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டோவ்ஸ் குறிப்பிட்டார். (மேலும்) 14.08.10

___________________________________________________________________________________________________________________________________________

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவச் செயல்பாடு; "விக்கிலீக்ஸ்' புதிய தகவல்களை வெளியிட ஆயத்தம்: பென்டகன் அதிகாரிகள் கவலை

லண்டன்/வாஷிங்டன், ஆக.13: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடு தொடர்பான புதிய தகவல்களை வெளியிட "விக்கிலீக்ஸ்' நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது.   லண்டனைச் சேர்ந்த விக்கிலீக்ஸ் நிறுவனம் கடந்த மாதம் அமெரிக்க ராணுவ செயல்பாடு குறித்த அதிர்ச்சிகரமான செய்திகளை தனது இணையதளத்தில் வெளியிட்டது. சுமார் 70 ஆயிரம் தகவல்களை தனது இணையதளத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்டது. இது அமெரிக்காவுக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மேலும் 15 ஆயிரம் ஆவணங்கள் கொண்ட தகவலை வெளியிடப் போவதாக விக்கிலீக்ஸ் செய்தித் தொடர்பாளர் ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார். ஆப்கன் போர் தொடர்பாக எஞ்சியுள்ள ஆவணங்களை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். ஆனால் இந்த ஆவணங்கள் வெளியானால் அது அமெரிக்க ராணுவம் பற்றி மிக மோசமான அபிப்ராயத்தை ஏற்படுத்தும். ஏற்கெனவே வெளியான ஆவணங்களால் நிலைமை மிக மோசமாக உள்ளது என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜெஃப் மோரெல் குறிப்பிட்டார். (மேலும்) 14.08.10

___________________________________________________________________________________________________________________________________________

இலங்கை நிலைவரம் சீனா வரவேற்பு

இலங்கையின் சமாதானம்,ஸ்திரத்தன்மை தொடர்பான தற்போதைய நிலைவரத்தை சீனா வரவேற்றுள்ளது. இலங்கையானது தனது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவும் உள்சார் கட்டமைப்பை வலுப்படுத்தவும் மேலும் உதவிகளை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது. பெய்ஜிங்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடனான சந்திப்பின்போது சீன உதவிப் பிரதமர் லி கெக்கியாங் இந்த உறுதிமொழியை அளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருக்கிறது. கடந்த 53 வருடங்களாக இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர உறவுகள்,புரிந்துணர்வுகள் என்பவற்றை சீன உதவிப் பிரதமர் லி கெக்கியாங் இச்சந்திப்பின்போது நினைவுகூர்ந்துள்ளார். தாய்வான்,திபெத் தொடர்பாக சீனாவின் ஒரே சீனக்கொள்கையை இலங்கை உறுதியாக ஆதரித்து வருவதை அவர் பாராட்டியுள்ளார். அக்டோபரில் ஷங்காயில் இடம்பெறும் எக்ஸ்போ2010 இறுதி வைபவத்தில் கலந்துகொள்ள வருகைதருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சீன உதவிப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் வருகையை சீனா எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் பீரிஸுக்குக் கூறப்பட்டுள்ளது.  இலங்கையின் அண்மைய வரலாற்றில் அதிகளவுக்கு சவாலான காலகட்டத்தில் சீனா வழங்கிய ஆதரவுக்காக அமைச்சர் பீரிஸ் நன்றி தெரிவித்துள்ளார். உள்ளூர் மட்டத்திலும் சர்வதேச அரங்கிலும் சீனா வழங்கிய ஆதரவுக்கு பீரிஸ் நன்றி செலுத்தியுள்ளார். இலங்கையின் அபிவிருத்திக்கும் உள்சார் கட்டமைப்பை விஸ்தரிப்பதற்கும் சீனா வழங்கிவரும் அளப்பரிய பங்களிப்பையும் அவர் பாராட்டியுள்ளார். கொழும்பு கட்டுநாயக்கா நெடுஞ்சாலை,அம்பாந்தோட்டைத் துறைமுக மற்றும் களஞ்சியப்படுத்தல் திட்டம்,கொழும்பு மாத்தறை நெடுஞ்சாலை,நுரைச்சோலை அனல்மின்னுலை,மாத்தறை கதிர்காமப் புகையிரதப்பாதை,கொழும்பில் கவின்கலை நிலையம் போன்றவற்றுக்கு சீனா வழங்கிவரும் பங்களிப்பையும் அமைச்சர் பாராட்டியுள்ளார்.

___________________________________________________________________________________________________________________________________________

பொன்சேகா எதிராக இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு

Sarath_Fonsekaஇலங்கையின் முன்னாள் இராணுவத் தலைவர் ஜெனரல் சரத் ஃபொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் நடந்த முதல் வழக்கில் அவர் மீதான குறச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதியாக இருந்தபோதே அரசியலில் ஈடுபட்டார் என்று அவர் மீது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தண்டனையாக, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றதன் பின்னர், சரத் பொன்சேகாவின் பதக்கங்களைப் பறித்து அவரது பெயருக்கு முன்னால் உள்ள ஜெனரல் என்ற இராணுவ அந்தஸ்து படிநிலையும் பறிக்கப்படவுள்ளதாக உயர்மட்ட இராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.  விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் இராணுவத்தினர் பெற்ற வெற்றியில் முக்கியப் பங்காற்றியவர் சரத் ஃபொன்சேகா. ஆனால் அந்த வெற்றிக்குப் பின்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இவருக்கு தகராறு ஏற்பட்டது. பின்னர் ராஜபக்ஷவை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு சரத் ஃபொன்சேகா தோல்வியடைந்தார். தற்போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் சரத் ஃபொன்சேகாவுக்கு எதிராக வேறு குற்றச்சாட்டுகளுடன் இராணுவ நீதிமன்றத்தில் வேறொரு வழக்கும் சிவில் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகளும் நிலுவையில் இருந்துவருகின்றன. சரத் ஃபொன்சேகாவுக்கு சார்பாக வழக்குரைஞர்கள் வாதிட முன்பதாகவே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

___________________________________________________________________________________________________________________________________________

எங்களது அரசியல் பயணத்திலிருந்து இடைநடுவில் தான்தோன்றித்தனமாக விலகி வேறு பயணம் செல்ல முயல்பவருக்காக நான் நின்று காத்திருக்கப்போவதில்லை.

- கொழும்பு வாக்காளர்களிடம் மன்னிப்பு கோருகிறார் மனோ கணேசன்

"எங்களுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் எங்கள் தலைவருக்கு அளிக்கப்படும் வாக்கு" என பகிரங்கமாக கூறி மக்களிடம் வாக்குகளை வாங்கி பதவிகளை பெற்ற ஒருவர், இன்று கட்சித் தலைவரான எனதும், நமது கட்சியினதும் முடிவுகளுக்கு மாறாக தன்னிச்சையாக செயற்பட்டுள்ளமை தொடர்பில் வாக்குகளை வாங்கித்தந்த கட்சித் தலைவர் என்ற முறையில் வாக்களித்த கொழும்பு மாவட்ட மக்களிடம்  நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரசுடன் சுயவிருப்பத்தின் அடிப்படையில் இணைந்துகொண்டது தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது: "ஆளுகின்ற அரசுடன் இணைந்துகொள்வது என்பது இலங்கை அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்திருக்கின்றது. பல்வேறு சிறுபான்மை கட்சிகளை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியிருக்கின்றார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினர்களும் தங்களது கட்சி கட்டுப்பாட்டை மீறி ஆளுந்தரப்பிற்கு தாவியுள்ளார்கள்.  (மேலும்) 14.08.10

___________________________________________________________________________________________________________________________________________

கே.பி நடத்தப்படும் முறை ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை

- வி. ஆனந்தசங்கரி

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளும் இடம்பெயர்ந்த மக்களும் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் தலைவர் குமரன் பத்மநாதனுக்கு (கே.பி.)  அரசாங்கம் காட்டும் மன்னிப்பும் கே.பியை நடத்தும் முறையும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி கூறியுள்ளார். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமித்தபோதே வி.ஆனந்தசங்கரி இவ்வாறு கூறினார். 10,500 இளைஞர்கள் இன்னும் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஆனந்தசங்கரி, எமது பிள்ளைகளான அவர்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பது குற்றச்செயல் எனவும் விமர்சித்தார்.
  கே.பி. யிலும் அவரின் ஆதரவாளர்களிலும் அரசாங்கம் தங்கியிருப்பது குறித்தும் ஆனந்தசங்கரி  எச்சரித்தார். இலங்கையின் அபிவிருத்திக்காக அவர் முதலீடு செய்யப்போவதாகக் கூறப்படும் பணம் சட்டவிரோதமான, பாவக் காரியமான முறையில் திரட்டப்பட்டதாகும். அப்பணத்தை அபிவிருத்திக்குப் பயன்படுத்தவதன் மூலம் மேற்படி பாவத்தில் இந்நாடு பங்கு வகிக்க வேண்டுமென நான் எண்ண வில்லை என அவர் கூறினார். யாழ். மாவட்டத்திலுள்ள மக்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள மக்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வி. ஆனந்தசங்கரி கூறினார்.

___________________________________________________________________________________________________________________________________________

சீனா ஆதரிக்கவில்லை

இந்தியாவில் இயங்கும் மாவோயிஸ்ட் குழுக்களை சீனா ஆதரிக்கிறது என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தெரிவித்தார். அவையில் கேள்வி நேரத்தின்போது விளக்கமளித்த அவர், மாவோயிஸ்ட் குழுக்களுக்கு சீனா உதவுகிறது என்பதற்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை. மேலும் தேசவிரோத சக்திகள் மற்றும் அந்நிய சக்திக ளிடமிருந்து மாவோயிஸ்டுகளுக்கு நிதி உதவி கிடைப்பது குறித்து ஆதாரமான தகவல்கள் எதுவும் இல்லை என்று அவர் கூறினார். எனினும் அரசு விழிப்பாக கவனித்து வருகிறது என்றார். வங்கிகளை கொள்ளையடிப்பது, மியான்மர் எல்லையில் கள்ளக்கடத்தல் செய்வது போன்றவற்றின் மூலம் மாவோயிஸ்டுகள் பணம் சம்பாதிக்கின்றனர் என்று ப.சிதம்பரம் கூறினார். மாவோயிஸ்டுகளுக்கு மிகப்பெரிய அளவுக்கு பணவசதி இருப்பதாக இண்டர்போல் உளவு அமைப்பு மற்றும் கேபி எம்ஜி தணிக்கை போன்றவை தெரிவிக்கிறது. தடை செய்யப்பட்ட அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து பணம் திரட்டுவதை அந்நிய நிதி (கட்டுப்பாடு) சட்டம் 1976ன் மூலம் கண்காணித்து கட்டுப்படுத்த முடியும் என்று ப.சிதம்பரம் கூறினார். இந்தச் சட்டத்தை மீறியது தொடர்பாக 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

___________________________________________________________________________________________________________________________________________

490 பேர் கொண்ட 'சன் ஸீ' கப்பலில் கனேடிய கடற்படையினர் ஏறினர்

490 இலங்கை அகதிகளுடன் கனடாவை நோக்கிச் சென்ற 'எம்.வி. சன் ஸீ' எனும் கப்பலில் கனேடிய கடற்படையினர் ஏறியுள்ளனர்.கனேடிய கடற்படைக் கப்பலான எச்.எம்.சி.எஸ். வின்னிபெக், எம்.வி. சன் ஸீ கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தியதாகவும் இறுதியில் கப்பலில் அகதிகள் இருப்பதாக சன் ஸீ கப்பல் பிரகடணப்படுத்தியதாகவும் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு விவகார அமைச்சர் விக் டோவ்ஸ் வியாழனன்று அறிவித்தார்."ஆட்கடத்தல்காரர்கள், பயங்கரவாதிகள் உட்பட அகதி அந்தஸ்து கோரும் 490 பேரைக் கொண்ட கப்பல் எமது நீர்ப்பரப்பை அடைந்துள்ளது. இது குறித்து கனேடிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும்" என அவர் கூறியுள்ளார்.இக்கப்பல் வான்கூவர் தீவுக்கருவில் மெதுவாக பயணம் செய்துகொண்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது

___________________________________________________________________________________________________________________________________________

போர்நிறுத்த உடன்பாடு அந்த நேரத்தில் தேவையான விடயமாக இருந்தது

வெவ்வேறு நோக்கங்களுக்காக காலத்தை இழுத்தடிக்க புலிகளும் ரணிலும் விரும்பியிருந்தனர்; நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் குணதிலக

anton balasingamபேச்சுவார்த்தை நடவடிக்கைகளை நாங்கள் ஆராயும்போது முக்கியமான விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்கு விடுதலைப்புலிகளின் தரப்பு ஒருபோதும் இடமளித்திருக்கவில்லை. வட,கிழக்கில் பொதுமக்களை நடைமுறை ரீதியாகப் பாதித்துக் கொண்டிருந்த விடயங்கள் பற்றி கலந்தாராய்வதற்கு எமக்கு இடமளிக்கப்பட்டிருந்தது என்று குணதிலக தெரிவித்துள்ளார். பின்னர் விடுதலைப்புலிகளின் பேச்சாளர் பாலசிங்கம் சம்பந்தப்பட்ட விடயமொன்றை அவர் குறிப்பிட்டிருக்கிறார். முக்கியமான விடயங்கள் குறித்து பாலசிங்கத்துடன் பேச்சுகளை மேற்கொள்ள நாங்கள் முயன்றபோது நீங்கள் என்னை மிகவும் நெருக்கடியான நிலைக்குக் கொண்டு செல்கிறீர்கள் என்று பாலசிங்கம் கூறியதாகவும் நான் இதனை ஆராய்ந்தால் நீங்கள் இதனைச் செய்கின்றீர்கள்... (கழுத்தை வெட்டுவதற்கான சமிக்ஞை) அவர் (பாலசிங்கம்) தனது கழுத்து வெட்டப்படாமல் இருப்பதைத் தவிர்த்துக்கொள்ள முயற்சித்தார் என்றும் குணதிலக குறிப்பிட்டுள்ளார். யுத்த நிறுத்த உடன்படிக்கையைப் பயன்படுத்தி கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ள புலிகள் விரும்பியதாகத் தென்பட்டதாக குணதிலக கூறினார். அதாவது செப்டெம்பர் 11 இற்குப் பின்னர் அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத தன்மை காணப்பட்டது. அதிலிருந்தும் அவர்கள் காலத்தைக் கடத்த விரும்பினார்கள். அதேசமயம், அச்சமயம் பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் சமாதானத்தின் மூலம் புலிகளைப் பலவீனமடையச் செய்வதற்கு கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்டதாக பேர்னாட் குணதிலக தெரிவித்தார். (மேலும்) 13.08.10

___________________________________________________________________________________________________________________________________________

தமிழ் இளைஞர்களிடம் ஓர் அன்பு வேண்டுகோள்

- யாழ் இளைஞர்களின் தற்போதைய நிலை பற்றி வலம்புரி பத்திரிகையின் தலையங்கம்

சந்தியில் நிற்பதும், மது அருந்துவதும், கையடக்கத் தொலைபேசியும்தான் எங்கள் சீவியம் என்றால் இந்த மண்ணில் நிகழ்ந்த தியாகங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும். தென்பகுதி இளைஞர்களை ஒருகணம் பாருங்கள். யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத்தை ஈட்டுவதில் அவர்கள் காட்டும் அக்கறை, எத்தனை வடிவங்களில் அவர்கள் நம் மண்ணுக்கு வந்து எங்கள் நிதித் தேட்டத்தை அள்ளிச் செல்கின்றனர்.

அன்புசால் இளைஞர்களுக்கு! அவசரமாக இக் கடிதத்தை எழுத வேண்டிய கட்டாயம். தமிழினம் படும் துயர்பற்றி எழுதுவதாக நீங்கள் நினைக்கலாம். அதுபற்றி எல்லாம் எழுத விருப்பவில்லை. எழுதாக் குறைக்கு அழுதால் தீருமா என்ன? எல்லாம் நடந்து முடியட்டும். நீதி, தர்மம், அறம் இருக்குமாயின்-இறைபரம்பொருள் உள்ளதாயின், இந்த மண்ணில் என்றோ ஒருநாள் தமிழ் மக்கள் உரிமை பெற்று பிரவாகம் அடைவர். அப்போது இதனைத் தடுப்பதற்கு யாராலும் முடியாமல் போகும். அவ்வாறில்லை தமிழ் மக்களாகிய நாம் துன்பத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டும் எனில், அது நம் தலைவிதி என்று நினைத்து விட வேண்டியதுதான். இவ்வாறு இருப்பது புத்திசாலித்தனமா? என்று நீங்கள் கேட்டால் மிகப் பெரும் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ளேயே காட்டிக் கொடுப்போர் இருந்தனர். அதுபோல தற்போதைய தமிழ் அரசியலுக்குள்ளும் எத்தனையோ விதமானவர்கள்.  (மேலும்) 13.08.10

___________________________________________________________________________________________________________________________________________

சிறுவர்களை படைக்கு சேர்ப்பதை தவிர்க்க போர் நிறுத்த ஒப்பந்தத்தில் எதுவும் இல்லை: நல்லிணக்க ஆணைக்குழு அமர்வில் கலாநிதி ஷிரந்தி விஜேமான சாட்சியம்

இன்று நடைபெறும் ஆணைக்குழு விசாரணையில் எஸ்.எல். குணசேகரவும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியும் சாட்சியமளிக்கின்றனர்

சிறுவர்களைக் காப்பதற்கு போர் நிறுத்த உடன்படிக்கை காலப்பகுதியே சிறந்த சந்தர்ப்பமாக இருந்ததென்றும் ஆனால், அந்த வாய்ப்பு கைநழுவிப் போய்விட்டதாகவும் கலாநிதி (திருமதி) ஷிரந்தி விஜேமான தெரிவித்தார். புலிகள் இயக்கம் 2009 மே 19 ஆம் திகதிவரை சிறுவர்களைப் படைக்குச் சேர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்தத Ąகவும் அதற்குப் பின்னர் சிறுவர்கள் சேர்க்கப்படவில்லையென்றும் அவர் கூறினார். கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க மும் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் முன்னிலையில் நேற்று (12) சாட்சியமளிக்கையில் கலாநிதி விஜேமான தெரிவித்தார். சிறுவர்களைப் படைக்குச் சேர்ப்பதைத் தவிர்ப்பதற்கு போர் நிறுத்த உடன்படிக்கையில் எந்த வழிமுறையும் இருக்கவில்லையென்று குறிப்பிட்ட அவர், ஆக்காலப் பகுதியில் சிறுவர் நலனைக் கவனிப்பதற்கான அரச பொறிமுறை வடக்கு, கிழக்குப் பகுதிகளில் செயற்பட்டபோதிலும், அதனை வினைத்திறன்மிக்கதாக நடைமுறைப்படுத்தக்கூடிய சூழல் இருக்கவில்லையென்று கூறினார். (மேலும்) 13.08.10

___________________________________________________________________________________________________________________________________________

சக்வித்தி விவகாரம் கிளப்பும் மனச்சாட்சிப் பிரச்சினை

sakthivitsakvithiranasingheசக்வித்தி என்ற பெயரில் நிதிக்கம்பனியொன்றை ஆரம்பித்து அதில் தன்னை நம்பி பணத்தை முதலீடு செய்த 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்து இருவருடங்களுக்கு முன்னர் நாட்டை விட்டுத் தப்பியோடிய ரணசிங்க என்ற ஆங்கில ரியூசன் ஆசிரியர் கடந்தவாரம் தனது மனைவி சகிதம் தலைநகர் கொழும்புக்கு வெளியே நவகமுவ என்ற இடத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கிறார். சக்வித்தி என்ற சிங்களச் சொல்லின் அர்த்தம் மன்னாதி மன்னன் என்பதாகும். இந்த மன்னாதி மன்னன் தாடியை வளர்த்து தனது தோற்றத்தையும் மாற்றி தமிழ்ப் பெயரொன்றையும் வைத்துக்கொண்டு இந்தியாவில் இருந்து 6 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பி மனைவியுடனும் இரு பிள்ளைகளுடனும் வத்தளையில் வாடகை வீடொன்றில் வசித்துவந்த வேளையிலேயே பொலிஸாரிடம் அகப்பட்டிருக்கிறார். இவரைக் கைது செய்வதற்கு இலங்கைப் பொலிஸார் சர்வதேச பொலிஸ் அமைப்பான "இன்டர் போலின் உதவியையும் நாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிகளில் வைப்பிலிடப்படும் பணத்துக்குத் தரப்படுகின்றதையும் விட பலமடங்கு கூடுதலான வீதத்தில் வட்டியைத் தருவதாக உறுதியளித்தே சக்வித்தி ரணசிங்க பெரும் எண்ணிகையான மக்களைத் தனது நிதிக்கம்பனியில் முதலீடு செய்வதற்கு ஊக்குவித்தார். (மேலும்) 13.08.10

___________________________________________________________________________________________________________________________________________

மேற்குக்கு அச்சுறுத்தலாக மாறி வரும் ஆசிய பிராந்திய வர்த்தக எழுச்சி

- கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

இந்தியாவுக்குப் போட்டியாகவும் அதேவேளை தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவும் சீனாவும் பல உதவித்திட்டங்களின் மூலமாக இலங்கையில் முயற்சிக்கிறது. யப்பான் செய்ததைப் போல அது இப்போது ‘இறால் போட்டு இலங்கையிலுள்ள சுறாக்களைப் பிடிக்க’ முயற்சிக்கிறது. தனது சந்தைக்கான தந்திரோபாயங்களையும் அரசியல் நலன்களையும் பெறுவதற்காக (பிராந்தியத்தின் வழியான கடல்வழி ஆதிக்கத்துக்காக) அது புதிய தந்திரோபாயங்களைக் கையாள்கிறது. ஆபிரிக்கா வரை விரியும் சீனாவின் பொருளாதாரக் கை தடைப்படாமல் இருப்பதற்கு இலங்கையில் ஒரு சுமுக நிலை அதற்கு அவசியம். தனக்கிசைவான சூழல் அதற்குத் தேவை. ஆகவே மேற்கின் ஆதிக்கம் அல்லது பிடிமானம் என்பது இந்த நாற்பது ஆண்டுகளில் இலங்கையில் மெல்ல மெல்லத் தளர்வடைந்தே விட்டது. அரசியல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும். இதற்கு உதாரணமாக, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதே தெருக்களில் நிறைந்திருந்தன ஐரோப்பாவின் வாகனங்கள். இப்போது இந்திய, யப்பானிய, சீன வாகனங்களே அதிகமாக ஓடுகின்றன. அதேமாதிரி, சீன, யப்பானிய, இந்திய அதிகாரிகளும் தொழில்நுட்பவியலாளர்களும் இராசதந்திரிகளுமே இப்போது இலங்கையில் அதிகம் நடமாடுகிறார்கள். இது மேற்குக்கு ஒரு சவாலான காரியமே. விரிவாக்கமடைந்து வரும் ஆசியச் செல்வாக்கு மண்டலத்தை மேற்கு அதிகம் விரும்பவில்லை. ஆனால், அதனால் அதை விரும்பியமாதிரித் தடுக்கவும் முடியவில்லை. வளர்ச்சியடைந்து வரும் தொழில் நுட்ப அறிவின் விரிவாக்கமும் வல்லரசுப் போட்டிகளும் பிராந்திய நாடுகளின் எழுச்சியும் இந்தப் புதிய நிலைமைகளை உருவாக்கியிருக்கின்றன. . (மேலும்) 13.08.10

___________________________________________________________________________________________________________________________________________

அகதிகள் கப்பல் கனடா எல்லையில்

பி.பி.சி

இலங்கை அகதிகள் 500 பேரை ஏற்றி கொண்டு வருவதாக சந்தேகிக்கப்படும் ஒரு சரக்கு கப்பல் தமது நாட்டின் பசிபிக் கடற்பகுதியை நெருங்கி வருவதாக கனடா நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தக் கப்பலை தாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அது தமது எல்லையை நெருங்கும் போது தடுக்கப்படும் எனவும் கனடாவின் அதிகாரிகள் கூறுகிறார்கள். அந்தக் கப்பல் சட்டவிரோதமாக ஆட்களை கொண்டு வருவதில் தொடர்பு பட்டிருக்கலாம் என தாங்கள் கருதுவதாகவும் அப்படியானவர்களுக்கு கனடா ஒரு இலக்காகி வருகிறது என்கிற கவலையும் தமக்கு அதிகரித்து வருகின்றது எனவும் அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எம் வி சன் சீ எனும் பெயர் கொண்ட அந்தக் கப்பல் தாய்லாந்திலிருந்து கனடா நோக்கி பசிபிக் கடலில் பயணத்தை மெதுவாக தொடங்க ஆரம்பித்திலிருதே அதை தாங்கள் கண்காணித்து வருவதாகவும் கனடிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இக்கப்பல் கனடாவின் விக்டோரியா துறைமுகத்தை வியாழக்கிழமை இரவோ அல்லது வெள்ளிக்கிழமை அதிகாலையோ வந்தடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. (மேலும்) 13.08.10

___________________________________________________________________________________________________________________________________________

கள்ளக் காதலா?...

அண்மைக்காலத்தில் மனதைப் பதற வைக்கும் கோரக் கொலைகள் பற்றிய செய்திகள் நிறைய வெளிவருகின்றன. அவற்றிலெல்லாம் ‘கள்ளக்காதல்’ காரணமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அந்தக் கொலைக் குற்றத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கிற முயற்சிகூட முடக்கப்படுகிறதோ என்று ஐயம் ஏற்படுகிறது. இதில் முதன்மையாக பலியாவது பெண்களே. ஆண்-பெண் இருபாலரிலும் குற்றவாளிகள் இருக்கக்கூடும். ஆயினும், பெண்கள் பால் காட்டப்படுகிற பாகுபாடு மிக உக்கிரமாகத் தெரிகிறது. கொலை செய்யப்பட்டவள் பெண்ணானால், அவள் வேறொரு ஆணோடு தொடர்பு கொண்டிருந்ததால் அவர் கணவர் ஆத்திரமடைந்து அவளை கொலை செய்துவிட்டதாக செய்தி போடப்படும். இந்த செய்தியிலேயே கொலை செய்த கணவனைவிட கொலை செய்யப்பட்ட பெண்ணே தப்பு செய்தவள் என்ற கருத்து வலுவாக ஊன்றப்பட்டுவிடுகிறது. கொலை செய்யப்பட்டவர் ஆணாக இருந்தால், கணவனை கொலை செய்துவிட்டார் என்று செய்தி போடப்படும். இங்கே பெண் குரூரமானவராகக் காட்டப்படுகிறார். தகாத உறவுகள் என்பது இருபாலர் சம்பந்தப்பட்டது. இதில் இருபாலருக்குமே சமபங்கு உண்டு. ஆனால், பெரும்பாலும் பெண்ணே குற்றவாளிபோல் சித்தரிக்கப்படுவது ஏன்? நடைமுறையில் ‘வேலி தாண்டுகிற’ ஆண்கள்தான் அதிகம் என்பது நாம் காண்கிற உண்மை. ஆயினும், குற்ற வழக்குப் பதிவுகளில் இந்த உண்மை ஏன் பிரதிபலிப்பதில்லை? (மேலும்) 13.08.10

___________________________________________________________________________________________________________________________________________

அமெரிக்க காங்கிரஸ் விசாரணையை இலங்கை ஏற்காது

இலங்கை மீது கூறப்படுகின்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய அமெரிக்கா காங்கிரஸ் எடுக்கும் முயற்சிகளை இலங்கை எடுக்கும் முயற்சிகளை இலங்கை ஏற்கப்போவதில்லை என்றும், இந்த விசாரணைக்கு எந்த ஒத்துழைப்பையும் வழங்க போவதில்லை என்றும் அமைச்சரவையின் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா இன்று அறிவித்தார். "இன மோதலுக்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகள் மனிதாபிமான நடவடிக்கை, போர் நிறுத்த உடன்பாடு என்பவற்றை ஆராய்வதற்கு என இலங்கை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு ஆணைக்குழு என்னும் சுதந்திரமான ஆணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த நிலையில் வேறு எந்த விசாரணையையும் தேவை இல்லை" எனவும் அவர் கூறினார். அநுர பிரியதர்சன யாப்பா மேலும் கூறுகையில், பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் பல நாடுகள் தோல்வி கண்டன, தோல்வி கண்டும் வருகின்றன. ஆனால் இலங்கை வெற்றி கண்டது. இந்த வெற்றியை தோற்கடிப்பதில் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் விடாப்பிடியாக உள்ளன என்றார். தகவல்கள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரிய ரத்ன இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளியிட்ட அறிக்கையொன்றில்."இலங்கையில் அண்மைக்கால மோதலின் போது இடம்பெற்ற நிகழ்வுகளை விசாரணை செய்ய இலங்கை அரசாங்கத்தாலும் சர்வதேச அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அந்த நடவடிக்கைகளை மதீப்பீடு செய்தல் பற்றி காங்கிரஸுக்கு வழங்கப்பட்ட அறிக்கை இலங்கைக்கு கிடைத்துள்ளது. இது ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தூதுவர் ரெப் என்பவரால் தயாரிக்கப்பட்டு அமெரிக்க காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது. (மேலும்) 13.08.10

___________________________________________________________________________________________________________________________________________

புலம்பெயர் தமிழர் நாடு திரும்ப சிறந்த பொறிமுறை அவசியம்: நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முன்னாள் இராஜதந்திரி பரிந்துரை

வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி துரிதமாக இயல்புவாழ்க் கையைத் தோற்றுவிக்க வேண்டுமென்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (11) சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்விடங்களில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களைக் கட்டம் கட்டமாகக் குறைப்பதுடன், தனியார் கட்டடங்களிலிருந்து இராணுவம் விலக்கிக்கொள்ளப்பட்டு மீள ஒப்படைக்க வேண்டுமென்றும் ஆணைக்குழு முன் நேற்றுக் காலை சாட்சியமளித்த இலங்கையின் முன்னாள் இராஜதந்திரியும், முன்னாள் சமாதான செயலகத்தின் பணிப்பாளருமான பர்னாட் குணதிலக பரிந்துரைத்தார். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவிருந் தால், வடபகுதி மக்களின் புனர்வாழ்வுப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு அவர்களின் ஜீவனோபாய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். விவசாயம், மீன்பிடி, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளை மேம்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட பர்னாட் குணதிலக, வடக்கில் ஆயுதப் படைகளின் பிரசன்னம் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுவது குறித்தும் மாற்று நடவடிக்கை எடுப்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றார். (மேலும்) 12.08.10

___________________________________________________________________________________________________________________________________________

இலங்கை புலனாய்வுத்துறை எமது மக்களில் சிலர் எண்ணுவதைப்போல் முட்டாள்தனமானது அல்ல. குமரன் பத்மநாதன்

7ஆம் திகதி சனிக்கிழமை டெய்லிமிரர் பத்திரிகையில் வெளியான இப்பிரத்தியேக செவ்வியின் தமிழ் வடிவம்

Kp-1இலங்கை புலனாய்வுத்துறை எமது மக்களில் சிலர் எண்ணுவதைப்போல் முட்டாள்தனமானது அல்ல. அதேவேளை ஏனைய நாடுகளின் புலனாய்வுத் துறையுடனும் அதிக பரிமாற்றங்கள் மேற்;கொள்ளப்படுகின்றன. உண்மை சற்று வித்தியாசமானது. புலனாய்வு ஆட்களால் பல்வேறு வட்டாரங்களிலிருந்து தகவல்கள் பெறப்படும் அதேவேளை, அவர்களுக்கு காஸ்ட்ரோவின் ஆட்களாலும் அதிக தகவல்கள் கிடைத்துள்ளன.  எனக்கு சொல்வதற்கு சற்று தயக்கமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இராணுவம் விசுவமடுவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது காஸ்ட்ரோவும் அவரின் பிரிவினரும் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். எனவே புலிகளின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் குறித்து இலங்கை அதிகாரிகளிடம் இப்போது அதிக தகவல்கள் உள்ளன. அவர்களிடம் கணினிகள், தகவல் திரட்டுகள் உள்ளன. புலிகளுக்குப் பணம் கொடுத்தவர்களின் பட்டியல்கள், திகதிகள், தொகைகள் என்பன உள்ளன. அவர்களிடம் வரி பற்றுச்சீட்டுகளின் பிரதிகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் யார் நிதி சேகரிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். புலிகளினால் முதலீடு செய்யப்பட்ட வர்த்தகங்கள், சொத்துக்களை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். சுமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வன்னிக்குச் சென்ற அனைவரின் விசிட்டிங் கார்ட்டுகள்கூட அவர்களிடம் உள்ளன. ஆனால், தகவல் கொடுப்பவன் என மக்கள் என்னை தூற்றிக்கொண்டிருந்தால் நான் என்ன செய்ய முடியும்? (மேலும்) 12.08.10

___________________________________________________________________________________________________________________________________________

சிறுபான்மையின அரசியலில் புதிய சிந்தனை தேவை

ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறி அரசாங்க பாராளுமன்றக் குழுவில் இணைந்திரு க்கும் பிரபா கணேசன் தனது இந்த முடிவுக்கான காரணத்தை விளக்கி வெளியிட்ட அறிக்கையில் சொல் லப்பட்டுள்ள விடயங்கள் நிதானமான சிந்தனைக்கு உரியவை. பாராளுமன்ற உறுப்பினர் கூறிய காரணங்களுள் பின்வரும் இரண்டு முக்கியமானவை. எதிர்ப்பு அரசியல் மூலம் சிறுபான்மையினரின் உரிமை களை வென்றெடுப்பது சாத்தியமில்லை. ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதன் மூலம் தமிழ் மக் களுக்குக் கிடைக்கப்போவது எதுவுமில்லை. தமிழ் மக்களின் அரசியலில் மிகக் கூடுதலான காலம் எதிர்ப்பு அரசியலிலேயே கழிந்துவிட்டது. இனப்பிரச் சினை கூர்மையடைந்த அண்மைக் காலத்திலும் அவ் வாறே. இடையில் இரண்டு வருடங்களைத் தவிர, கட ந்த பதினாறு வருட காலத்தில் எதிர்ப்பு அரசியலிலேயே தமிழ்த் தலைவர்கள் ஈடுபட்டார்கள். இதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதையும் அவர்கள் பெற்றுக் கொடுக்கவில்லை. மக்களுக்கு நேர்ந்த அனர்த்தங்களைத் தவிர்க்கவும் அவர்களால் முடியவில்லை. இக் காலப் பகுதியில் இணக்க அரசியலில் இத் தலைவர்கள் ஈடுபட்டிருப்பார்களேயானால் பல உரிமைகளைத் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடிந்திருக்கும். அதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்தன. எதிர்ப்பு அரசியல் காரணமாக அவ ற்றைத் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்துவிட்டார்கள். (மேலும்) 12.08.10

___________________________________________________________________________________________________________________________________________

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை விற்க முயலும் இலங்கை!

வவுனியா: வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது கைப்பற்றப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களில் ஒரு பகுதியை தாம் பயன்படுத்தி வருவதாகவும் பெரும்பான்மை ஆயுதங்களை விற்க முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை இலங்கை பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கு கிழக்கில் புலிகளால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ஆயுதங்களை இராணுவம் கைப்பற்றியுள்ளதாகவும், நேற்று மாலை கிளிநொச்சி இரணைமடுவிலும் முள்ளியவளையிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 60 மி.மீ மோட்டார் குண்டுகள் உட்பட பெருமளவிலான ஆயுதங்களை படையினர் கைப்பற்றியுள்ளனர் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட புலிகளின் ஏராளமான ஆயுதங்களில் சிலவற்றை இப்போது ராணுவம் பயன்படுத்தி வருகிறது. ஏனையவற்றை விற்பனை செய்வது குறித்து பாதுகாப்பு அமைச்சு தீர்மானிக்கும் என இராணுவ ஊடகப்பிரிவைச் சேர்ந்த கேணல் துமிந்த கமகே தெரிவித்துள்ளார். பயன்படுத்தப்படக்கூடிய நிலையிலுள்ள ஆயுதங்கள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கேணல் கமகே தெரிவித்துள்ளார். 'கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் 3 வகையானவை இருந்தன. பயன்படுத்தப்படக்கூடியவை, சிறு சேதங்கள் கொண்டவை மற்றும் காலாவதியானவை. இவற்றில் பெருமளவு ஆயுதங்கள் நல்ல நிலையிலேயே உள்ளன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை நாம் மத்திய ஆயுதக் களஞ்சியத்திற்கு அனுப்புவோம். அவர்கள் எவற்றை வைத்துக்கொள்ள வேண்டும், எவற்றை விற்க வேண்டும், அழிக்க வேண்டும்" என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள் என கேணல் கமமே கூறியுள்ளார்.

___________________________________________________________________________________________________________________________________________

அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை

obama வாஷிங்டன், ஆக.10: அமெரிக்காவில் சமீபகாலமாக அன்னிய முதலீடு கணிசமாக குறைந்து வருவதாக அதிபர் ஒபாமா கவலை தெரிவித்துள்ளார். அயல்பணி ஒப்படைக்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படாது என்ற அறிவிப்பால் உள்நாட்டு நிறுவனங்களும் தங்களுக்கு சாதகமான வெளிநாடுகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டன என்று அவர் குறிப்பிட்டார். எனினும் இதைப்பற்றியெல்லாம் அமெரிக்க அரசு கவலைப்படாது என்ற ஒபாமா, தொழில்நிறுவனங்களுக்கு தொடர்ந்து வரிச்சலுகை அளித்து அரசின் பணத்தை விரயம் செய்ய விரும்பவில்லை என்றார். டெக்சாஸ் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை கட்சிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று ஒபாமா மேலும் பேசியது:  தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிப்பதைவிட புதிய கண்டுபிடிப்புகள், சுற்றுச் சூழலை பாதிக்காத சுத்தமான எரிசக்தி, கல்வி ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன் மூலம் நீண்ட கால அடிப்படையிலான பலன்கள் கிடைக்கும்.  இதற்கான திட்டம் விரைவில் வகுக்கப்படும். இந்தத் திட்டம் நிச்சயம் அமெரிக்க மக்கள் அனைவரும் பயன்பெறும் விதத்தில் அமையும். அமெரிக்காவிலும் வேலையில்லாத் திண்டாட்டம் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.  இப் பிரச்னையை எதிர்கொள்வதென்பது அரசுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. எனினும் இப்பிரச்னைக்கு தீர்வுகாண அரசு உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது. (மேலும்) 12.08.10

___________________________________________________________________________________________________________________________________________

180 இலங்கைத் தமிழர்களுக்காக சிறைச்சாலையை தயார்படுத்துகிறது கனடா

'எம்.வி. சன் ஸீ' எனும் கப்பலில் வந்துகொண்டிருப்பதாகக் கருதப்படும் இலங்கைத் தமிழ் குடியேற்றவாசிகளை தடுத்து வைப்பதற்காக கனேடிய அரசாங்கம் சிறைச்சாலைகளை தயார்படுத்தி வருகிறது. இக்கப்பல் இன்னும் சில தினங்களில் கனடாவின் மேற்குப் பிராந்திய மாநிலமான பிரிட்டிஷ் கொலம்பியாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கப்பலில் வரும் மேற்படி நபர்கள் மாப்பிள் ரிட்ஜ் எனும் மாவட்டத்திலுள்ள இரு சிறைச்சாலைகளில் தங்கவைக்கப்படலாம் என தனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அதிகாரி ஜோன் லீபர்ன் கூறியுள்ளார். எதிர்வரும் நாட்களில் சுமார் 500 தமிழ் குடியேற்றவாசிகள் அல்லது அகதிகளை கையாள்வதற்கு தயார் நிலையில் இருக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இக்கப்பலில் சுமார் 100 ஆண்களும் 80 பெண்களும் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இக்கப்பல் சரியாக எப்போது கனடாவை வந்தடையும் எனத் தெரியாதுள்ளது என லீபர்ன் கூறியுள்ளார். (மேலும்) 12.08.10

___________________________________________________________________________________________________________________________________________

இலங்கையிலிருந்து ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத குடிவரவு தொடர்பாக  கனடா இலங்கை பேச்சுவார்த்தை

இலங்கையிலிருந்து ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத குடிவரவு தொடர்பான பரஸ்பர கவலைகள் குறித்து கொழும்பும் கனடாவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒட்டாவாவிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் கனடிய பிரஜாவுரிமைகள், குடிவரவு பல்கலாசார துறைக்கான அமைச்சர் யாசன் கென்னேயை சந்தித்து இப்பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நாட்டுக்கு வெளியே உள்ள விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுடன் ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத குடிவரவு என்பன தொடர்புபட்டதாக இருப்பதாக ஆராயப்பட்டுள்ளது. இதேவேளை, கனடாவின் எல்லை சேவை முகவரமைப்பு மற்றும் கனடிய புலனாய்வுத் துறை அதிகாரிகளுடன் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விரிவான முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் சக்திகளின் நடவடிக்கைகள் குறித்து கனடிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி அமைப்புகள் ஊடாக அவை குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் உட்பட நாடு கடந்த குற்றச்செயல்களை மேற்கொள்வதன் மூலம் சர்வதேச மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்கள் குறித்தும் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளுடன் கப்பல் வருவது தொடர்பாக இலங்கையும் கனடாவும் விழிப்புடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 200 பேருடன் எம்.பி. சன்சீ (கடல் சூரியன்) கப்பலானது கனடாவின் கிழக்குக் கரையை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

___________________________________________________________________________________________________________________________________________

குற்றப்புலனாய்வு பிரிவினர் எனக்கூறி தமிழர்களிடம் கொள்ளையிட்டவர்கள் கைது

ரயிலில் பயணம் செய்யும் தமிழ் மக்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் எனக்கூறிக் கொண்டு பணம் நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுவந்த நால்வர் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் போலி அடையாள அட்டைகளைக் காண்பித்து, ரயிலில் பயணம் செய்யும் தமிழர்களை தெரிவு செய்து அவர்களிடம் பணம் நகைகளை கொள்ளையிட்டு வந்துள்ளனர். பல விசேட பொhலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். வேயாங்கொடை மற்றும் கட்டானை ஆகிய இடங்களில் வைத்து இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொல்காவெல, மீரிகம, வெயாங்கொடை, ராகம மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் இச்சந்தேக நபர்கள் இக்கொள்ளைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

___________________________________________________________________________________________________________________________________________

மேர்வினின் அலுவலகம் மூடப்பட்டது

முன்னாள் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா பயன்படுத்திய அலுவலகம் மூடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படமாட்டர் என பொலிஸார் டெயிலிமிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தானர். பொலிஸ் வட்டரங்களின் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஸவால் மேர்வின் சில்வாவை நேற்று பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் தர்மபால மாவத்தையில் உள்ள அலுவகத்திற்குள் எந்தவொரு அதிகாரியும் அனுமதிக்கப்படமாட்டார். முன்னாள் பிரதியமைச்சரின் அலுவலகத்திற்குள் யாரையும் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடியிடம் இது தொடர்பில் வினவிய போது, முன்னாள் பிரதியமைச்சரின் அலுவகத்திற்கு முன்னால் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியும். ஆனால் அந்த அலுவலகத்திற்கு யாரையும் அனுமதிக்க கூடாது என்பது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.

___________________________________________________________________________________________________________________________________________

கனடாவை நெருங்கும் தமிழ் அகதிக் கப்பல்

இலங்கையில் இருந்து அகதிகளைச் சுமந்து கொண்டு தஞ்சம் கோருவதற்காக கனடாவின் மேற்குக் கரைப் பரப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் கப்பல் ஒன்றை கனடிய அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தாய்லாந்து கொடி ஏந்திய இந்தக் கப்பலில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் உள்ளனர் என்று தாங்கள் நம்புவதற்கு இடமிருக்கிறது என கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விக் டொயெவ்ஸ் கூறியுள்ளார். "இந்தக் கப்பலுக்குள் யார் இருக்கிறார்கள், அவர்கள் எதற்காக இங்கே வருகிறார்கள் என்ற கவலை எங்களுக்கு நிச்சயம் உள்ளது" என்று திங்களன்று டொரொண்டோவில் கருத்து வெளியிட்ட அமைச்சர் தெரிவித்தார். "கடல் வழியாக ஆட்கள் கனடாவுக்குள் கடத்திக் கொண்டுவரப்படுவது என்பது தமது தேசியப் பாதுகாப்புக்கு பெரிய பிரச்சினையாக அமைந்துள்ளது" என்று அவர் விளக்கினார். "வட அமெரிக்காவுக்குள் சுலபமாக நுழைவதற்கான வழியாக கனடாவை யாரும் பார்க்கக்கூடாது. எங்களது குடிவரவுத் துறையை குறுக்கு வழியில் பயன்படுத்தப் பார்க்கும் யாரையும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்"என்றார் அவர். அமெரிக்க கரையோரக் காவல் படையினரும் இந்தக் கப்பலை கண்காணித்து வருகின்றனர். கப்பலில் வருகின்றவர்களைத் தடுத்துவைப்பதற்காக வான்கூவர் நகருக்கு வெளியே இரண்டு சிறைச்சாலைகள் தயாராகி வருவதாக மேப்ல் ரிட்ஜ் மாவட்ட நிர்வாகம் சார்பாகப் பேசவல்ல ஜான் லீபர்ன் தெரிவித்துள்ளார். ஆண்கள் பெரும்பான்மையாக கிட்டத்தட்ட ஐநூறு தமிழ் அகதிகள் கப்பலில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக இச்சிறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. - B.B.C News

___________________________________________________________________________________________________________________________________________

நோர்வேயில் மேற்கொள்ளப்பட்ட வங்கி நஷ்டங்கள் யாவும் புலிகளின் தலையில்.

நோர்வே நாட்டில் நிறுவனங்களில் பெயரலால் வங்கிகளில் கடன்களை பெற்றவர்கள் மற்றும் நிறுவனங்கள் நஷ்டமடைந்து விட்டது என கைகளை உயர்த்தியவர்கள் யாவரும் அதற்கான பொறுப்புக்களை புலிகளின் தலையில் சுமத்துவது தெரியருகின்றது. நோர்வே நாட்டின் தேசியப் பத்திரிகையான டக்பிளாடட் (Dagbladet) மேற்படி புகைப்படத்துடன் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் நோர்வேயில் இயங்கிவந்த துப்பரவு செய்யும் நிறுவனம் ஒன்று 64 மில்லியன் குறோனர்களை வங்கியில் மேலதிக கடனாக பெற்றுவிட்டு நிறுவனம் நஷ்டமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து நிறுவனத்தின் கணக்கு வழக்குளை பரிசீலனை செய்த அதிகாரிகள் இவ் நிறுவனம் 183 நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளதுடன் அது நஷ்டமடைவதற்கான எவ்வித காரணங்களும் இல்லை எனவும் அதிக லாபங்களே காணப்படுவதாகவும் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதையடுத்து நிறுவனத்தின் இயக்குனரை நோர்வே புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்ததாகவும் அவ்விசாரணைகளின் போது , தனது குடும்பத்தில் பத்துபேர் புலிகளியக்கத்தில் இருந்தாகவும் அவர்களுக்கு நிறுவனத்தால் வந்த பணங்கள் யாவற்றையும் அனுப்பிவந்தாகவும் அவர் தெரிவித்துள்ளதாக அப்பத்திரிகை தெரிவிக்கின்றது. (மேலும்) 11.08.10

___________________________________________________________________________________________________________________________________________

இந்திய அரசு வடக்கில் முதற்கட்டமாகக் கட்டிக்கொடுக்கும் 1,000 வீடுகளுக்கான மதிப்பீட்டு அறிக்கை நேற்றுக் கையளிப்பு

வடக்கில் மீளக் குடியமர்த்தப்படும் மக்களுக்கு இந்திய அரசின் உதவியின் முதற்கட்டமாகக் கட்டிக் கொடுக்கப்படவுள்ள ஆயிரம் மாதிரி வீட மைப்புத் திட்டத்திற்கான முழுமையான மதிப்பீட்டு அறிக்கை நேற்று இந்திய அரசிடம் கையளிக்கப்பட்டது. வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி இத்தகவலைத் தெரிவித்தார். வட மாகாண அபிவிருத்தி மற்றும் மீள் குடியேற்றத்துக்கான செயலணி இந்த அறிக்கையை இந்திய அரசிடம் கையளித்தது என்றும் அவர் கூறினார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலக பிரிவுகளில் இந்த வீடுகள் கட்டிக்கொடுக் கப்படவுள்ளன. யாழ்ப்பாணத்தில் இரண்டு பிரதேச பிரிவுகளில் 150 வீடுகளும் வவுனியா வடக்கில் மூன்று பிரதேச பிரிவுகளில் 175வீடுகளும், மன்னாரில் மடு மற்றும் மாந்தை பிரதேச பிரிவுகளில் 175 வீடுகளும், கிளிநொச்சியில் மூன்று பிரதேச பிரிவுகளில் 250வீடுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பிரதேச பிரிவு களில் 250வீடுகளும்  முதற்கட்டமாக இந்தியாவினால் கட்டிக்கொடுக்கப்பட வுள்ளது. மாதிரி வீடமைப்புத் திட்டத்திற்கான இடங்கள் மற்றும் வீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டிய மக்கள் யார் யார் என்பது பற்றிய சகல விவரங்களும் திரட் டப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித் தார். இந்தியா இலங்கையில் உள்ள வட பகுதி மக்களுக்கு 51000 வீடுகளை கட்டிக் கொடுக்கவுள்ளது. இதில் முதற் கட்டமாக 1000 வீடுகளை கட்டிக் கொடுக்கவுள்ளதால் அதற்கான மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

___________________________________________________________________________________________________________________________________________

ஸ்ரீலங்கா தமிழர்கள் புகலிடம் கோருவது: தேவையா  தேவையற்றதா

-வண.ஜோண் பார் அவர்கள்.

johnயாழ்ப்பாணத்தலுள்ள டயேசஸ் கிறீன் நினைவு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் வசதிப்படும்போது வந்து சிலமணி நேரம் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்கிறார். அங்கு நான் அன்னம்மா என்கிற மூன்று பிள்ளைகளின் இளம் தாயார் ஒருவரைச் சந்தித்தேன். சமீபத்திய யுத்தத்தின்போது அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டு விட்டது, அவரது கணவர் முதுகெலும்பில் குண்டடிபட்டு எதற்கும் இயலாதவராகவுள்ளார். தமிழர்களாகிய அன்னம்மாவின் குடும்பம் 1995 ல் நடந்த மோதல்கள் காரணமாக யாழ்ப்பாணத்தை விட்டு தப்பியோடிவந்து தமிழர் பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்ட வன்னியில் தங்கள் வாழ்நிலையை மீளமைத்துக் கொண்டவர்கள் இன்று இவர்களின் எதிர்காலம் இடர்சூழ்ந்த இன்னல் நிலையிலே உள்ளது. அன்னம்மா என்னிடம் கூறியது “இங்கே இருப்பதில் நான் சலிப்படைந்து விட்டேன்,” “உணவுக்காக, குடிநீருக்காக, குளிப்பதற்காக என்று எல்லாவற்றிற்கும் வரிசையில் காத்துக்கிடந்து நான் சோர்ந்து போய்விட்டேன்.நாங்கள் செய்வது எல்லாமே காத்துக்கிடப்பது மட்டுமே”.ஆயிரக்கணக்கான மற்றவர்களின் நிலையும் இதுதான்,மனச்சோர்வும் நம்பிக்கையின்மையுமே இங்குள்ளவர்களிடம் காணப்படுகிறது; இந்தக் குடும்பங்கள் இங்கு காத்திருப்பது தங்கள் சொந்த நிலங்கள் மீள்குடியேற்றத்திற்காக தங்களுக்கு மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, ஆனால் பெரும்பாலான பகுதிகள் நிலக் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு குடியேற வசதியற்றதாகவே காணப்படுகின்றன. (மேலும்) 11.08.10

___________________________________________________________________________________________________________________________________________

பிரயாணத்திற்கு இடையூறு விளைவிக்கும் வீதியில் நிறுத்தப்படும் வாகனங்கள்! - கட்டுப்படுத்த யார் முன்வருவர்?

யாழ்ப்பாணத்திற்குள் வீதிகளில் மூலைமுடக்கெல்லாம் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற் பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பிரயாணத்திற்கு இடையூறான விதத்தில் வீதிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதும் கட்டடங்களுக் கான பொருள்கள் கொட்டப்படுவ தும் வழமையாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் தற்போது வீதிகளில் வாகனங்கள் நிறுத்தி ஆக்கி ரமிக்கும் சம்பவங்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்து வீதிகள் பெரும்பாலும் அகலம் குறைந்த வீதிகளாகவே காணப்படுகின்றது. அவற்றில் முறையற்ற விதத்தில் பாரிய வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. சில இடங்களில் பல நாள்களாக வாகனங்கள் நிறுத்தப்படுவதினால் பிரயாணம் செய்யும் பொதுமக்கள் பெரிதும் இன்னல்களை எதிர்நோக் குகின்றனர். சில வேளை எதிர் எதிரேவரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலையும் காணப்படுகிறது. தற்போது யாழ்ப்பாணத்தில் கட்டிட வேலைகள் பெருமளவில் இடம் பெற்று வருகின்றன. கட்டிட வேலைக் காக பயன்படுத்தப்படும் மண் மற்றும் கற்களை வீதியின் குறுக்கே போட்டு வேலைகள் செய்கின்றனர்.சிறிய வீதிகளில் மட்டுமல்ல; பெரியவீதிகளிலும் இவ்வாறான சம்வங்கள் நடைபெறுகின்றன. வீதிகளின் அரைவாசிக்கு கொட்டப்படும் கற்கள் பரவுண்டு வீதி முழுவதையும் ஆக்கிரமிப்பதனால் விபத்துக்களும் நேர்கின்றன. இவற்றை கண்காணித்து கட்டுப் படுத்துவதற்கு எவரும் முன்வரவில் லை எனப் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

___________________________________________________________________________________________________________________________________________

இலங்கைத் தமிழர் பிரச்னை: அனைத்துக் கட்சிக் குழுவை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

புதுதில்லி, ஆக. 10: முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து அறிய இலங்கைக்கு அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவை மத்திய அரசு அனுப்ப வேண்டும் என்று மக்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.லிங்கம் (தென்காசி தொகுதி) செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தார்.  இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விவகாரம் பற்றிய பிரச்னையை கேள்வி நேரம் முடிந்த பிறகு எழுப்பினார் லிங்கம்.  2009ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளை ஒழித்துவிட்டதாக அறிவித்து போரை நிறுத்திக்கொண்டது இலங்கை. விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான அந்த போரில்  இலங்கை ராணுவம் பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்தி அப்பாவிகளையும் கொன்று குவித்து போரில் நிலபுலம், வீடு இழந்த அப்பாவி தமிழ் மக்களை சொந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி முள்வேலி முகாம்களில் அடைத்தது. இவ்வாறு அடைக்கப்பட்ட அகதிகளை சொந்த இடங்களுக்கு மீண்டும் அனுப்பி வருவதாக இலங்கை தெரிவித்துவந்த போதிலும் இன்னும் ஆயிரக்கணக்கானோர் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத முகாம்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர். (மேலும்) 11.08.10

___________________________________________________________________________________________________________________________________________

ஈழத் தமிழர்களை ஆஸி.க்கு அனுப்பி வந்த விடுதலைப் புலி போராளி கைது

siva- Tigerகொல்லம்: ஈழத் தமிழர்களை, இந்தியா வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி ஒருவர் கொல்லத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கை தமிழர்களை படகு மூலம் அனுப்பி வைக்க இருந்த போது அவர்கள் அங்குள்ள தனியார் விடுதியில் பிடிபட்டனர். இவ்வழக்கில் சிவக்குமார் என்ற சிவாவை கொல்லம் போலீசார் தேடி வந்தனர். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை ஆட்களை அனுப்பி வைத்த வழக்கிலும் இவரை தேடி வந்தனர்.  இந்நிலையில் நேற்று கொல்லத்தில் இவர் தங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து மாவட்ட காவல்துறை, உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது முக்கிய பகுதி ஓன்றில் சிவக்குமார் பிடிப்பட்டார். பிடிபட்ட அவரிடம் கொல்லம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் 1980 முதல் விடுதலை புலிகள் இயக்கத்தில் பணியாற்றியதும் பின்னர் தமிழ்நாட்டுக்கு அகதியாக வந்ததும், தமிழக அகதிகள் முகாமில் தங்கியிருந்த இவர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதும், இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தொடர்ந்து இவர் தமிழகத்தில் இருந்து கேரளாவில் பதுங்கியிருந்து இலங்கை தமிழர்களிடம் பணம் வசூல் செய்து அகதிகளை ஆஸ்திரேலியா நாட்டுக்கு படகுகள் மூலம் அனுப்பி வைப்பதும் தெரிய வந்தது.  (மேலும்) 11.08.10

___________________________________________________________________________________________________________________________________________

முந்திரிகை விவசாயிகளின் பிரதான தேவை

யாழ்ப்பாண மாவட்டத்தில் முந்திரிகைச் செய்கை மீண்டும் களைகட்டத் தொடங்குவதாக யாழ்ப் பாண மாவட்ட விவசாய (விஸ்தரிப்பு) பிரதிப் பணிப்பாளர் கூறுகின்றார். அவருடைய கூற்றின் படி, இப்போது 56 ஹெக்ரயர் நிலப்பரப்பில் முந்திரிகை செய்கை பண்ணப்படுகின்றது. யாழ்ப்பாணத்துக்கும் தென் பகுதிக்கும் இடையிலான போக்குவரத்துக்கு ஏ 9 பாதை திறந்து விடப்பட்டதன் பின்னரே இந்த வளர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. நாட்டின் ஏனைய சில மாவட்டங்களிலும் முந்திரிகை செய்கை பண்ணப்படுகின்ற போதிலும் யாழ்ப்பாண மாவட்டமே பெயர் பெற்று விளங்கியது. இரண்டு காரணங்களை இதற்குக் கூறலாம். யாழ்ப்பாணத்தில் வர்த்தக ரீதியாகப் பெருமளவில் முந்திரிகை செய்கை பண்ணப்பட்டது ஒரு காரணம். யாழ்ப்பாண முந்திரிகை தரத்தில் சிறந்ததாக இருந்தது இன்னொரு காரணம். யாழ்ப்பாண விவசாயிகளின் பாரம்பரிய பணப்பயிர் வகைகளுக்குச் சம அளவில் முந்திரிகையும் மாவட்டப் பொருளாதாரத்தில் முக்கிய பாத்திரம் வகித்தது. யாழ்ப் பாணத்திலிருந்து தினமும் பெருந்தொகையான முந்திரிகைப் பெட்டிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டன. (மேலும்) 11.08.10

___________________________________________________________________________________________________________________________________________

அரசியல் விபசாரம்

1977 இல் தனது சேவல் சின்னத்தில் போட்டியிட்ட இ.தொ.கா.வின் தொண்டமான் ஐ.தே.க. அரசில் சேர்ந்தார். இது கட்சி மாறிய செயல் அல்ல. ஏனெனில், அவர் தனது சேவலுடனேயே அரசில் இணைந்தார். தொடர்ந்து அவரின் இ.தொ.கா. 1989 இல் ஐ.தே.க. சின்னத்தில் போட்டியிட்டு வென்ற பின் ஐ.தே.க.வே அரசமைத்ததால் ஐ.தே.க. கூட்டை விட்டு விலகவில்லை. ஆனால், 1994 இல் ஐ.தே.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின் அப்போது ஆட்சியமைத்த சந்திரிகாவின் பொது மக்கள் ஐக்கிய முன்னணி அரசில் சேர்ந்து விட்டனர். மக்களுக்கு அரசில் இருந்தால்தான் சேவைசெய்யலாம் என்று விளக்கம் கூறினர். ஆனால்,மக்கள் தமக்கு வாக்களிக்க முன்பு ஐ.தே.க.வின் சின்னத்துக்கே வாக்களித்தனர். அதன் பிறகே, விருப்பு வாக்கை பயன்படுத்தினர் என்பதை சௌகரியமாக மறந்து விட்டனர். தமக்கு வாக்களித்த ஐ.தே.க. அபிமானிகளதும் முதுகில் குத்திவிட்டனர். இப்போது திகாம்பரத்தையும், பிரபா கணேஷனையும் விசக்கிருமிகள் என்று வர்ணிக்கும் யோகராஜன் அப்போது இ.தொ.கா.வில் தான் இருந்தார். இன்றுவரை இ.தொ.கா. இதனையே செய்து வருகின்றது. தாம் போட்டியிட்டு வெற்றிபெற்ற கட்சி ஆட்சியமைக்க முடியாது போய்விட்டால் ஆட்சியமைக்கும் கட்சியுடன் இணைந்து அமைச்சுப் பொறுப்பை பெற்று விடுவார்கள். இவர்கள் உண்மையில் மக்கள் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தால், மக்களின் விருப்புக்கும் ஆணைக்கும் கட்டுப்படுபவர்களாக இருந்தால், தமது கட்சியின் சொந்தச் சின்னத்தில் அல்லது சுயேச்சைக் குழுவாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் கட்சியில் சேர்ந்துவிடலாம். (மேலும்) 11.08.10

___________________________________________________________________________________________________________________________________________

குடாநாட்டில் இன்னும் 45 நாள்களில் கண்ணிவெடிகள் முழுவதும் அகற்றப்படும்!   

யாழ்.குடாநாட்டில் இன்னும் 45 நாட்களுக்குள் அனைத்து நிலக் கண்ணி வெடிகளும் அகற்றப்பட்டு விடும் என்று யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்க தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்  யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் மிகவூம் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணத்தின் அநேக இடங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விட்டன. தனங்கிளப்புப் பகுதியிலும் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு விட்டன. இன்னும் 699 குடும்பங்களே யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும்.அவர்களை மீள்குடியேற்றுவதற்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் யாழ்ப்பாணத்தில் ரயில் பாதையோடு இணைந்ததாகப் புதைக்கப்பட்டிருக்கும் நிலக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டு வருகின்றன.அவை முழுமையாக அகற்றப்பட்ட பின்னர் ரயில் பாதையைத் திருத்தும் வேலைகளை ஆரம்பிக்க முடியூம். இராணுவத்தினர் ஏனைய மனிதாபிமான அமைப்புகளுடன் இணைந்து நிலக்கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள் என்றார்.

___________________________________________________________________________________________________________________________________________

மனோ கணேசனை தேசியப் பட்டியல் எம்.பி.யாக ஐ.தே.க. நியமித்தால் அரசியலை துறக்கத் தயார் சவால் விடுக்கிறார் பிரபா கணேசன்

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனை தேசியப் பட்டியல் எம்.பி.யாக ஐ.தே.க. நியமிக்க முன்வந்தால் தான் அரசியலை விட்டு வெளியேறுவதாக பிரபா கணேசன் எம்.பி. சவால் விடுத்துள்ளார். மனோ கணேசனின் சகோதரரும் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் கடந்த வாரம் எதிரணியிலிருந்து அரச தரப்புக்கு மாறியிருந்தார். தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியால் (மனோ கணேசனுக்கு தேசியப்பட்டியலில் எம்.பி. பதவி) இதனைச் செய்ய முடியாதென்பதை  தாம் அறிவாரென்று இணையத்தளச் செய்திச்சேவையொன்றுக்கு பிரபா கணேசன் நேற்று கூறியுள்ளார். ஐ.தே.கட்சி ஐந்தில் நான்கு பேருடன் சிறு சிறு துண்டுகளாகி தலைமைத்துவத்திற்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவால் எதனையும் செய்ய முடியாத நிலைமையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சிரேஷ்ட ஐ.தே.க. உறுப்பினர் உட்பட ஐந்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னுடன் ஏற்கனவே கலந்துரையாடியிருப்பதாகவும் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளத் தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பது தொடர்பான தனது தீர்மானத்தில் மாற்றமில்லையெனவும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களித்தோருக்கு தான் சேவை செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்திலிருந்து அவர்களுக்கு தன்னால் சேவையாற்ற முடியும் என்பது குறித்து தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் எதிரணிக்கு திரும்பிச் செல்லப்போவதாகத் தெரிவிக்கப்படும் வதந்திகளில் உண்மை கிடையாதெனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

___________________________________________________________________________________________________________________________________________

மெர்வின் சில்வா 'பதவி நீக்கம்'

இலங்கையின் நெடுஞ்சாலைத்துறை துணை அமைச்சர் மெர்வின் சில்வா அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது கட்சித் தலைவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் மெர்வின் சில்வாவை உடனடியாகப் பதவி நீக்குவதாக அறிவித்ததாக லங்காபுவத் என்ற இலங்கை அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் மெர்வின் சில்வா நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகத் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.  சர்ச்சைக்குரிய பல நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், பலமுறை எச்சரித்த பிறகும் அவர் இப்படிச் செயல்பட்டதால் அவர் நீக்கப்படுவதாகவும் ஜனாதிபதி கூறியதாக லங்காபுவத் செய்தி வெளியிட்டுள்ளது.  அரசு ஊழியர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்தது தொடர்பில் மெர்வின் சில்வாவுக்கு எதிராக பலத்த கண்டனங்கள் எழுந்திருந்தன.  (மேலும்) 10.08.10

___________________________________________________________________________________________________________________________________________

இந்தியத் தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் யாழ். குடாநாட்டுக்கு விஜயம்

இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த  பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் நேற்று  யாழ். குடாநாட்டுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு நேற்றுக் காலை சென்ற இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகளான கே.முரளிகரன், ஏ.சுனில் ஆச்சயா ஆகிய  இருவரும் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும்  நேரில்ச் சென்று நிலைமைகளை அவதானித்தனர். அத்துடன்,  பொதுமக்கள் சிலருடனும் இவர்கள் உரையாடினர். இதன் பின்னர் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார்,  பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரையும்   நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள், மக்களின் மீள்குடியமர்வு, அபிவிருத்தித் திட்டங்கள் என்பன தொடர்பாகத் தமது திருப்தியை இக்கலந்துரையாடலின்போது இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

___________________________________________________________________________________________________________________________________________

அச்சுவேலியில் கைத்தொழில் பேட்டையில் நாற்பது பாரிய தொழிற்சாலைகள்

யாழ்ப்பாணம் அச்சவேலியில் 40 தொழிற்சாலைகளை உள்ளடக்கிய பாரிய கைத்தொழில் பேட்டையொன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இக் கைத்தொழிற் பேட்டைக்கான உட்கட்டமைப்பு வசதிகளுக் கென 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளன. இந்நிதிக்கான அங்கீகாரத்தை தேசிய திட்டமிடல் திணைக்களம் வழங்கியுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் இக் கைத்தொழில் பேட்டைக் கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வுள்ளதுடன், இதில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான இணக்கத்தினையும் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். யாழ். அச்சுவேலி பகுதியில் ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென 65 ஏக்கர் காணி பெறப்பட்டுள்ளதுடன் இதில் 25 ஏக்கர் காணியில் ஆடைத் தொழிற்சாலைகளும் 40 ஏக்கர் கணியில் கைத்தொழில் பேட்டையும் அமைக்கப்படவுள்ளன. (மேலும்) 10.08.10

___________________________________________________________________________________________________________________________________________

கிளிநொச்சி மாணவர்களுக்கு 120,000 அப்பியாசக் கொப்பிகள்:  இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் நாமல் எம்.பி. தலைமையில் விநியோகம்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 82 பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ/ மாணவியருக் கென ஒரு இலட்சத்து இருபதினாயிரம் (1,20,000) அப்பியாசக் கொப்பிகளைப் பகிர்ந்தளிக்கும் வேலைத் திட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும், அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பியுமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சியில் இவ்வேலைத் திட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ/ மாணவியரின் கல்விக்கு உதவும் வகையில் அப்பியாசக் கொப்பிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்தை இளைஞர்க ளுக்கான நாளை அமைப்பு செயற்படுத்தியுள்ளது. இவ்வேலைத் திட்டத்தின் நிமித்தம் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரான நாமல் ராஜபக்ஷ எம்.பி, ஒவ்வொரு பாடசாலை க்கும் நேரில் சென்று அப்பியாசக் கொப்பிகளை பகிர்ந்தளித்து வருகின்றார். ஒவ்வொரு பாடசாலையிலும் நாமல் ராஜபக்ஷ எம்.பிக்கு மாணவ/ மாணவியர் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் மகத்தான பெருவரவேற்பு நேற்று அளிக்கப்பட்டது. (மேலும்) 10.08.10

___________________________________________________________________________________________________________________________________________

புலிகளின் ஆயுதங்களை இராணுவம் பயன்படுத்துகிறது

வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது கைப்பற்றப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் சிலவற்றை தாம் பயன்படுத்தி வருவதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட ஏனைய ஆயுதங்களில் சிலவற்றை விற்பனை செய்வதா அல்லது இராணுவத்தினரிடம் கையளிப்பதா என்பது குறித்து பாதுகாப்பு அமைச்சு தீர்மானிக்கும் என இராணுவ ஊடகப்பிரிவைச் சேர்ந்த கேணல் துமிந்த கமகே தெரிவித்துள்ளார். யன்படுத்தப்படக்கூடிய நிலையிலுள்ள ஆயுதங்கள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கேணல் கமகே தெரிவித்துள்ளார். 'கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் 3 வகையானவை இருந்தன. பயன்படுத்தப்படக்கூடியவை, சிறு சேதங்கள் கொண்டவை மற்றும் காலாவதியானவை ஆகியனவே கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை நாம் மத்திய ஆயுதக் களஞ்சியத்திற்கு அனுப்புவோம். அவர்கள் எவற்றை வைத்துககொள்ள வேண்டும், எவற்றை அழித்துவிட வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள'; என கேணல் கமமே கூறியுள்ளார். வடக்கு கிழக்கில் புலிகளால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ஆயுதங்களை இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதேவேளை, நேற்று மாலை கிளிநொச்சி இரணைமடுவிலும் முள்ளியவளையிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 60 மி.மீ மோட்டார் குண்டுகள் உட்பட பெருந்தொகை ஆயுதங்களை படையினர் கைப்பற்றியுள்ளனர்.

___________________________________________________________________________________________________________________________________________

சட்டவிரோத முதலீடுகளால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் கொழும்பு பங்குச்சந்தை, ஊ.சே.நி. விடயங்களை சுட்டிக்காட்டி ஐ.தே.க. எச்சரிக்கை

10சதவீத வரையறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் மூலம் சிறியளவிலான முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்து வெளியேறக்கூடியதாக இருந்தது. தமது பங்குகளை அவர்கள் விற்பதன் மூலம் அவர்கள் வெளியேறக்கூடிய நிலையேற்பட்டது. ஏனெனில் கம்பனியொன்றின் பங்குகளை விற்பனை செய்யும்போது பங்குவிலை 10 சதவீதத்தால் அதிகரித்தால் அல்லது 10 சதவீதத்தால் குறைந்தால் அந்தக் கம்பனி நிறுத்தப்பட வேண்டிய நிலைமையேற்படுகிறது.கொழும்பு பங்குப் பரிவர்த்தனை இன்று கசினோவாகத் திரும்பியுள்ளது என்று டாக்டர் ஹர்சா டி சில்வா கூறியுள்ளார். இந்நிலைமை நாட்டை முழுமையான பொருளாதாரப் பின்னடைவிற்கு இட்டுச்செல்லும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். வோல்ஸ்றீறின் பின்னடைவால் அமெரிக்காவில் முழுமையான பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டதை நினைவு கூர்ந்து இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்ததாக மற்றொரு விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய வங்கியின் கட்டுப்பாட்டிலுள்ள ஊழியர் சேமலாபநிதியமானது பல வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது மத்திய வங்கியினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள முதலீடு தொடர்பான வழிகாட்டல்களை மீறியதாகக் காணப்படுகிறது. செலான் வங்கி உட்பட பல தனியார் வங்கிகளில் ஊழியர் சேமலாப நிதியம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. (மேலும்) 10.08.10

___________________________________________________________________________________________________________________________________________

குடாநாட்டில் இன்னும் 45 நாள்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விடும் - யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி உறுதி

யாழ்.குடாநாட்டில் இன்னும் 45 நாள்களுக்குள் அனைத்து நிலக் கண்ணி வெடிகளும் அகற்றப்பட்டு விடும் என்று யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்க தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு, யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் மிகவும் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணத்தின் அநேக இடங் களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விட்டன. தனங்கிளப்புப் பகுதியிலும் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு விட்டன. இன்னும் 699 குடும்பங்களே யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும்.அவர்களை மீள்குடியேற்றுவதற்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் யாழ்ப்பாணத்தில் ரயில் பாதையோடு இணைந்த தாகப் புதைக்கப்பட்டிருக்கும் நிலக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டு வருகின்றன.அவை முழுமையாக அகற்றப்பட்ட பின்னர் ரயில் பாதையைத் திருத்தும் வேலைகளை ஆரம்பிக்க முடியும். இராணுவத்தினர் ஏனைய மனிதாபிமான அமைப்புகளுடன் இணை ந்து நிலக்கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள் என்றார்.

___________________________________________________________________________________________________________________________________________

முன்னாள் போராளிகள்  தேர்வில் பங்கேற்ப்பு

- பி.பி.சி

இலங்கையில் நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்ற 395 பேர் தோன்றுகின்றார்கள். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம், பூந்தோட்டம் ஆகிய இடங்களில் உள்ள சரணடைந்தவர்களுக்கான புனர்வாழ்வு மையங்களில் உள்ள மாணவ மாணவியருக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடர்வதற்கான போட்டி மிகுந்ததாகவும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இந்தப் பரீட்சை கருதப்படுகின்றது. நாடெங்கிலும் 2லட்சத்து 69 ஆயிரம் மாணவர்கள் இந்தப் பரீட்சை எழுதுவதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமாகாணத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பித்திருக்கின்றார்கள். (மேலும்) 10.08.10

___________________________________________________________________________________________________________________________________________

சமுர்த்தி அதிகாரிகள் நெருக்கடி பசிலின் தலையீட்டால் சுமுகநிலை

சமுர்த்தி அதிகாரியொருவரை கடந்த வாரம் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா மரத்தில் கட்டிவைத்ததையடுத்து நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சமுர்த்தி அதிகாரிகள் ஆரம்பித்ததால் ஏற்பட்ட நெருக்கடியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலையிட்டு தீர்த்து வைத்துள்ளார். பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளதாகவும் இந்த மாதிரியான நடவடிக்கைகளில் அவர் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்ததாகவும் தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு பசில் ராஜபக்ஷ சமுர்த்தி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  அதேசமயம், அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக சமுர்த்திக்குப் பொறுப்பான அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாக சமுர்த்தி அதிகாரிகள் சங்கத் தலைவர் ஜகத் குணவர்தன "சண்டேரைம்ஸ பத்திரிகைக்குக் கூறியுள்ளார். டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்கத் தவறியதால் மரத்துடன் கட்டப்பட்ட சமுர்த்தி அதிகாரிக்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது அனுதாபத்தைத் தெரிவித்ததாகவும் இச்சம்பவத்தைக் கண்டித்ததாகவும் சமுர்த்தி அதிகாரிகள் சங்கச் செயலாளர் ஜகத் குணவர்தன கூறியுள்ளார். பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிடின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லையென சமுர்த்தி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

___________________________________________________________________________________________________________________________________________

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மரங்களின் கீழ் 15 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி

students-tவடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் மரங்களின் கீழ் பாடசாலைக் கல்வியைப் பெற்று வருகின்றார்கள். இவர்களின் பாடசாலைகள் ஒன்றில் கடந்த கால யுத்தத்தால் அழிந்து விட்டன அல்லது அகதி முகாம்களாகவோ, இடைத் தங்கல் முகாம்களாவோ, தடுப்பு முகாம்களாகவோ மாறி இருக்கின்றன. பெரும்பாலும் வவுனியா, ஓமந்தை, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளின் மாணவர்களுக்கே இக்கதி ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு இம்மாணவர்களின் பாடசாலைக் கல்விக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்குப் பதிலாக பாதுகாப்புச் செலவினங்களுக்கென பல மில்லியன் ரூபாயை செலவு செய்து வருகின்றது. உதாரணமாக ஓமந்தை மகாவித்தியாலயம் இடைத் தங்கல் முகாமாக கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அகதி முகாம்களில் இருந்து சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற்றப்படவென அழைத்து வரப்படும் பொதுமக்கள் இங்கு தற்காலிகமாக தங்க வைக்கப்படுகின்றனர். (மேலும்) 08.08.10

___________________________________________________________________________________________________________________________________________

யாழ்ப்பாண மக்கள் கனிந்த உள்ளம் படைத்தவர்கள்

யாழ்ப்பாண மக்கள் மிகவும் கனிந்த உள்ளம் படைத்தவர்கள் மஹிந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் ரி.ரி. குணசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகரிற்கு அருகாமையில் தமது வாகனம் விபத்துக்கு உள்ளான போது அங்கிருந்த மக்கள் காட்டிய கரிசனை ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். நகரத்தை அண்டிய மக்கள் மிகவும் கருணை உள்ளத்துடன் வாகன விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வாகன விபத்தில் காயமடைந்திருந்த நிலையில் தமது பணப்பை மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக மீள அளித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ்ப்பாண வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண வைத்தியசாலையில் ஒரு நுளம்பு வலை கூட இருக்கவில்லை எனவும், தரை மிகவும் சமச்சீரற்ற நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் நோயாளிகள் சிரமங்களை எதிர்நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டிடுயுள்ளார். பூரண குணமடைந்த உடன், யாழ்ப்பாண மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தாம் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு செல்ல உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

___________________________________________________________________________________________________________________________________________

ஹிரோஷிமா- நாகசாகி  பின்னணியில் நடந்தது என்ன?

 முனைவர் டியார்ஜி - பேராசிரியர் கே.ராஜூ

hiroshima_1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 தேதிகளில் ஜப்பானிய நகரங்கள் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் போடப்பட்டன. உடனடியாகவே லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் கதிர்வீச்சி னால் பாதிக்கப்பட்டனர். அந்த இரு நகரங்களும் அவற்றின் சுற்றுப்புறங்களும் அடியோடு நாசமாகின. அணுகுண்டு வீச்சைப்பற்றியும் மனிதகுலம் அதுவரை சந்தித்திராத மோசமான விளைவுகள் குறித்தும் ஏராளமான கட்டுரைகள் வந்துவிட்டன. ஆனால் நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போவது முற்றிலும் வேறானது. அணுகுண்டை மக்கள் மீது வீசுவதா, வேண்டாமா என்பது பற்றி அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகளுக்கு இடையே குண்டுவீச்சுக்கு முன் நடந்த விவாதங்கள் பற்றியும் இறுதி முடிவு எடுக்கப்பட்ட விதம் குறித்தும் சில சுவாரசியமான விவரங்களைத் தற்போது பார்க்கலாம். அணுகுண்டை மக்கள் மீது போடக்கூடாது என்ற விஞ்ஞானிகளில் லியோ ஸிலார்ட் (Leந் Szilநூrd), ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Albert Einstein) (ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். இந்த இருவரும் அணுகுண்டின் ரகசியத்தைக் கண்டுபிடித்ததில் பிரதான பங்கினை வகித்தவர்கள். அதனால் அவர்களால் அது விளைவிக்கக்கூடிய மிகப்பெரிய நாசத்தையும் முன்கூட்டியே நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. (மேலும்) 08.08.10

___________________________________________________________________________________________________________________________________________

கனடா நோக்கி பயணிக்கும் எம்வி சண் சீ MV Sun Sea  கப்பலில் உள்ள தமிழ் புலிப்போராளிகள்

சக்வித்தி ரணசிங்கவுக்கு எதிராக 2,900 முறைப்பாடுகள்; விசாரணைகள் தீவிரம்

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சக்வித்தி ரணசிங்க தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மீதான 2,900 முறைப்பாடுள் குறித்து விசாரணை செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சக்வித்தி ரணசிங்கவும் மனைவியும் நவகமுவ பிரதேசத்தில் உள்ள அவர்களது முன்னோரின் வீட்டுக்கு சென்ற போதே மிரிஹான பொலிஸ் குழுவினர் சிவில் பாதுகாப்பு குழுவினரின் உதவியுடன் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் கைது செய்தனர்.  இவ்வாறு அவர் கைது செய்யப்படும் போது எவராலும் அடையாளம் காண முடியாதளவில் நீண்ட தாடியுடன் மாறு வேடம் பூண்டிருந்தார். சக்வித்தி ரணசிங்கவின் திடீர் தலைமறைவு காரணமாக அவரிடம் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் பணத்தை இழந்துள்ளதாக  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்து சுமார் இரண்டு வருடங்களாகின்றன. இவர் ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து தனது மனைவியுடன் நாடு திரும்பி ரஞ்சன் என பெயரை மாற்றிக் கொண்டு சிறிய வியாபாரம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ளார். நாடு திரும்பிய பின் தனது மனைவியுடன் வத்தளை பகுதியில் வாடகை வீடொன்றில் அமைதியான முறையில் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (மேலும்) 08.08.10

___________________________________________________________________________________________________________________________________________

2005 ஆம் ஆண்டு நாடு முழுவதிலும் சுமார் 42 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் நியமனம் வழங்கப்பட்டதன் பின்னர் இதுவரை எந்தவித அரச நியமனங்களும் யாழ் பட்டதாரிகளுக்கு வழங்கப்படவில்லை.

jaffna graduate30 வருடகால யுத்தத்தில் குப்பி விளக்கில் படித்து ஷெல் வீச்சு, குண்டுத் தாக்குதல், பொருளாதார நெருக்கடிகளுக்கிடையே பரீட்சை எழுதி பட்டம் பெற்ற எமக்கு தகவல் தொழில் நுட்ப அறிவையோ, ஆங்கில அறிவையோ மேம்படுத்திக் கொள்ளக்கூடிய வசதிகள் இருக்கவில்லை. எனினும் தற்போது நியமனம் வழங்கப்பட்டால் தொழில் வழக்குநர்கள் எதிர்பார்க்கும் திறமைகளைக் குறுகிய காலத்தில் எம்மால் அடைய முடியும். அதற்கான உத்தரவாதத்தையும் நாம் வழங்குவோம். 30 வயதைக் கடந்த பின்னும் வேலையில்லாத காரணத்தால் திருமணம் என்பதும் எம் வாழ்வில் எட்டாக்கனியாகவே இருக்கிறது. திருமணம் முடித்தவர்கள் சிலர் கணவனும் மனைவியுமே வேலையற்ற பட்டதாரிகளாக உள்ளனர். பட்டதாரிகளான பெண்கள் பலருக்கும் வேலையில்லாத காரணத்தால் அவர்களது திருமணம் தாமதமடைவதுடன் அவர்களுக்கான சீதனமும் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில் நிரந்தரமான அரச தொழிலையோ அல்லது தனியார் தொழிலையோ எமது கல்வியுடன் தொடர்புடைய ஒரு தொழிலை நாம் எதிர்பார்த்தோம். எனினும் எமது தற்போதைய நிலையில் எந்த தொழிலையும் ஏற்கத் தயாராகவே உள்ளோம். படிக்கும் காலத்தில் பெற்றோருக்குப் பாரமாக இருந்தோம். தற்போது பட்டம் பெற்ற பின்னரும் சமூகத்துக்கும் பாரமாக உள்ளோம். (மேலும்) 08.08.10

___________________________________________________________________________________________________________________________________________

இலங்கையில் 30,000 பாலியல் தொழிலாளர்கள்

இலங்கையில் நாடு முழுவதும் சுமார் 30,000 - 40,000 பாலியல் தொழிலாளர்கள் செயற்படுவதாக சுகாதாரக் கல்விப் பணியகம் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளது. இத்துறையிலுள்ள தனிநபர்களும் நிலையங்களும் இரகசியமாக இயங்குவதால் இவ்விடயத்தில் துல்லியமான கணக்கெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் உள்ளுர் பாலியல் தொழிற்துறையில் மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகள் மூலம் இவ்விபரம் வெளியாகியுள்ளது என இப்பணியகத்தின் ஊடக இணைப்பாளர் டாக்டர் சாந்த ஹெட்டி ஆரச்சி கூறினார். தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும் எயிட்ஸ்கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளின்படி பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 30000 முதல் 40000 வரை இருக்கலாம் என அவர் கூறினார். சில வருடங்களுக்கு முன்புபோல் அல்லாமல் மசாஜ் நிலையங்கள் என்பன போன்ற பெயரில் பல விபசார நிலையங்கள் செயற்படுவதாக டாக்டர் ஹெட்டி ஆரச்சி தெரிவித்தார். அத்துடன் வான்கள் மற்றும் அது போன்ற வாகனங்கள் மூலம் இயங்குகின்ற நடமாடும் நிலையங்களிலும் இப்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

___________________________________________________________________________________________________________________________________________

இலங்கை மாணவர் கல்வி நிதியம் - அவுஸ்திரேலியா செய்திமடல் (News Letter)

போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மெல்பன் இளம் கலைஞரின் ஆதரவு

அவுஸ்திரேலியாவில் கடந்த 22 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் இலங்கை மாணவர்கல்வி நிதியம் சமீபத்தில் வவுனியா தடுப்பு முகாம் காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழ் போராளிச்சிறார்களின் கல்வி சார்ந்த நலன்களையும் கவனிக்க சில பணிகளை முன்னெடுத்துள்ளது.  முதற்கட்டமாக இம்முகாம்களின் பொறுப்பதிகாரி பிரிகேடியர் சுணந்த ரணசிங்க அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பிரதிநிதி டொக்டர் நொயல் நடேசன், வவுனியாவில் நீண்டகாலமாக இயங்கும் தொண்டுநிறுவனமான நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின்(Voluntary Organization For Vulnerable Community Development- VOVCOD)  நிறுவனர் திரு.த.கணேஸ் அவர்களுடைய நேரடி கண்காணிப்பில் மேற்படி மாணவர்களுக்கு உதவும் திட்டத்தை கல்வி நிதியம் ஊடாக ஆரம்பித்துவைத்தார்.  இத்திட்டம் சம்பந்தமான முதலாவது ஆலோசனைக்கூட்டம் மெல்பனில் 03-07-2010 ஆம் திகதி Preston;, Spectrum Immigration Services (SIS) மண்டபத்திலும் 17-07-2010 ஆம் திகதி Vermont South Community House இலும்; நடைபெற்றது. இக்கூட்டங்களில் பல அன்பர்கள் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கினர். (மேலும்) 08.08.10

___________________________________________________________________________________________________________________________________________

கறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்பு ஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும்  

  - எஸ்.எம்.எம்.பஷீர்  

யாழ்ப்பாண வைத்தியசாலையில் பணியாற்றிய மன நல வைத்தியரான கலாநிதி.தயா சோமசுந்தரம் புலிகள் அதிகமாக விடலைப் பருவத்தினரை தமது இயக்கத்தில் சேர்த்ததை குறிப்பிட்டு  1 வயதில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து 15 வயதில் நான்கு வருடங்களாக புலிகளிலிருந்து "போராடிய"  ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட  இளைஞர் பற்றி ஒரு பிரபல ஆங்கில பத்திரிகையாளருக்கு (The Independent) குறிப்பிட்டதை சாதாரண உதாரண சம்பவமாக கொள்ளமுடியாது. "தனது நண்பர்கள் பலரை இழந்த ஒரு தாக்குதலின் பின்பு அவனுக்கு பெண்களும் குழந்தைகளும் கொலை செய்யப்பட்ட வீடியோ ஒன்றினை காண்பிக்கப்பட்டு அக்கொலைகளை அவனது எதிரிகள் செய்ததாக சொல்லப்பட்டது" அவ் விடலைப் பருவத்தினன் ஒரு சிங்கள கிராமத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டான். அவன் எவ்வாறு மக்களை கொன்றான் , எவ்வாறு ஒரு சிறு குழந்தையை அதன் கால்களை பிடித்து அக்குழந்தையின் தலையை சுவரின் மீது வீசி அடித்துக் கொன்றான், அப்போது அந்தக் குழந்தையின் தாய் கதறி அழுததை பார்த்து எவ்வாறு சந்தோசப்பட்டான். அதன் பின்னர் அவனது தோழர்கள்  அவனை கட்டுப்படுத்துவதை கடினமாக கண்டார்கள். அவன் திருமண விழாக்களில் கோவில் உற்சவங்களில் மக்கள் சந்தோஷமாக இருப்பதை காணும்போது அவன் ஆத்திரமும் அவமதிப்பும் கொண்டான்." என்றும் தனது வைத்திய அனுபவத்தை குறிபிட்டிருந்தார்.  (மேலும்) 08.08.10

முன்னைய பதிவுகள்

wanni

காக்கும் ஷேக்கும் (KAK AND SHEIKH )

புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரே ஸ்ரீலங்கா அரசு வகுத்திருக்கும் சாம, தான, பேத, தண்ட வியூகம்

தமிழ் மக்களுக்குப் பாரிய இன்னல்கள் ஏற்பட்டதற்கு வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி நிறைவேற்றிய தனிநாட்டுத் தீர்மானமே அடிப்படைக் காரணம்.

இலங்கை புலனாய்வுத்துறை எமது மக்களில் சிலர் எண்ணுவதைப்போல் முட்டாள்தனமானது அல்ல. குமரன் பத்மநாதன்

பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்