|
கிழக்கு மாகாண மக்களின் குறைகளைத் தீர்க்க அரசினால் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
- நடவடிக்கை எடுக்கக்கோரி மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் முதலமைச்சருக்கு கடிதம்
கிழக்கு மாகாண மக்களின் குறைகளைத் தீர்க்க ஆளும் தரப்பினர் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் அதில் 19 விடயங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது; யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது பிரதேச மக்கள் பல வழிகளிலும் துன்ப துயரங்களை எதிர்நோக்கி தலைதூக்க முடியாமல் உள்ளனர். இத்தருணத்தில் மத்திய, மாகாண உள்ளூராட்சி நிர்வாகங்கள் ஒரே கட்சியினரின் கைகளிலேயே உள்ளன. இந்த நிலையில் இப்பிரதேசத்தை மீளக் கட்டி எழுப்புவதற்கு முயற்சி எடுத்து ஆயுத வன்முறையற்ற தலைமைத்துவம் அவசியம். மனித உரிமைகளை மதிக்கும், பன்முகத் தன்மை கொண்ட இன ஐக்கியத்தை பேணுகின்ற அரசியல் அதிகாரப் பரவலாக்கல் செயற்படுத்தப்பட வேண்டும். சுயபொருளாதாரத்தினை கட்டி எழுப்பக் கூடிய அறிவு சார்ந்த கல்விச் சமூகத்தினை கட்டியெழுப்பக்கூடிய தலைமை உருவாக வேண்டும். நிர்வாக கட்டமைப்பை கட்டி எழுப்ப நிரந்தர சமாதானத்தை நோக்கிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவேண்டும். இதற்கு கிழக்கு மாகாண ஆளும் தரப்பினர் முயற்சி எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ள அவர் கீழ்குறிப்பிடப்படும் விடயங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். (மேலும்) 24.10.08
__________________________________________________________________________________________________________
Dr. Kalaignar M. Karunanithy
The Tamil People of Sri Lanka are glad that Tamil Naad has started showing interest in the Sri Lankan ethnic problem. But they are disappointed that the concerns of the Tamil People now trapped in the areas under the control of the LTTE are ignored. LTTE is using them as human shield to protect them. The People are also upset and worried that the enthusiasm displayed in Tamil Naad is showing tendencies of confrontation with the majority community the Sinhalese, with whom the Tamils had been living from time immemorial and will have to live in the future as well. Long before his assassination Mahatma Gandhi had warned that India and Ceylon can’t afford to quarrel each other, but more than that being immediate neighbours and having several things in common, Tamil Naad and Sri Lanka should maintain cordial relationship between the two. (Read) 24.10.08
__________________________________________________________________________________________________________
"இது அரைகுறை நடவடிக்கை': ஜெயலலிதா
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டிருப்பது அரைகுறை நடவடிக்கை என்று தமிழக அரசு மீது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: "இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து திரைப்படத் துறையினர் ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய இறையாண்மைக்கு எதிரான பல ஆட்சேபகரமான தேச விரோத கருத்துகளைத் தெரிவித்த திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். இது, திமுக முதல்வர் கருணாநிதியை வெகுவாகத் தாக்கியிருக்கிறது. அதனால்தான் திடீரென்று அரைகுறையாக நடவடிக்கை எடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அந்தக் கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோரைக் கைது செய்திருக்கிறார். சட்டம் அனைவருக்கும் பொது... சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். வைகோ மற்றும் கண்ணப்பன் ஆகியோர் பேசுவதற்கு முன்பே, இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்த திரைப்படத் துறையைச் சேர்ந்த சீமான், அமீர், பாரதிராஜா மற்றும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த ராம நாராயணன் போன்றோரின் மீது கருணாநிதி நடவடிக்கை எடுக்காதது ஏன்? அதே போன்று, சென்னையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்த திருமாவளவன் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? விடுதலைப் புலிகளுக்காக ஆயுதப் பொருள்களைக் கடத்திய வன்னியரசு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவர்களை ஏன் கைது செய்யவில்லை? தம்மை அரசியல் ரீதியாக எதிர்ப்பவர்களுக்கு ஒரு சட்டமும், ஆதரிப்பவர்களுக்கு வேறு சட்டமும் இருக்க முடியாது. காழ்ப்புணர்ச்சி:தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை. தேசப் பற்றின் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. (மேலும்) 24.10.08
__________________________________________________________________________________________________________
ஜெயலலிதாவும் கருணாநிதியும்!
 இலங்கை ராணுவத்தின் இனப் படுகொலைக்கு ஆளாகி இருக்கும் அப்பாவி ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்கிற பெயரில், தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளின் பேச்சும், செயல்பாடும் கடும் கண்டனத்துக்கு உரியதாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, ம.தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பேசுகின்ற பேச்சுகள், இலங்கை ராணுவத்தால் வேட்டையாடப்படும் அப்பாவித் தமிழர்கள் மீது இருக்கும் அனுதாபத்தைக் குலைப்பதாக அமைந்திருக்கின்றன என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம். ""தமிழ்நாடு தனிநாடு என்று சொல்லும் நாள் வரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடும் விரைவில் மலரும்'' என்று ம.தி.மு.க. அவைத் தலைவர் மு. கண்ணப்பன் சமீபத்தில் சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் அந்தக் கருத்தை நியாயப்படுத்துவது போல பேசி இருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டத்தில் எழுப்பிய கோஷங்கள் பிரிவினையைத் தூண்டும் விதத்திலும், தனித் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தும் விதத்திலும் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மதுரையில் ரயில் மறியல் என்ற பெயரில் அவர்கள்தான் இரண்டு ரயில் பெட்டிகளைத் தீக்கிரையாக்கியதாகவும், ஆனால் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பதால் காவல்துறையினர் அவர்களை அதில் சம்பந்தப்படுத்தாமல் காப்பாற்றுவதாகவும் மதுரை மாநகரில் பரவலாகப் பேசப்படுகிறது. (மேலும்) 24.10.08
__________________________________________________________________________________________________________
வைகோ, கண்ணப்பன் கைது
சென்னை, அக். 23: இந்திய நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சியின் அவைத் தலைவர் மு.கண்ணப்பன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். வைகோ சென்னையிலும், மு. கண்ணப்பன் பொள்ளாச்சியிலும் கைது செய்யப்பட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய வைகோ, இலங்கைப் பிரச்னைக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை ஏற்பட்டால் முதலாவது ஆளாக தாம் ஆயுதம் ஏந்தத் தயார் என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் பேசிய ம.தி.மு.க. அவைத் தலைவர் மு. கண்ணப்பன், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு அந் நாட்டு ராணுவத்துக்கு இந்திய அரசு உதவும் போக்கு தொடருமானால், தனி தமிழ்நாடு கேட்கும் சூழ்நிலையும் உருவாகும் என்று கூறினார். தனி ஈழம் மட்டுமின்றி, தனி தமிழ்நாடும் விரைவில் மலரும் என்று அவர் குறிப்பிட்டார். அதற்கு முன்பு கடந்த 19-ம் தேதி ராமேசுவரத்தில் உண்ணாவிரதமிருந்த திரைத்துறையினரும் இதேபோன்ற கருத்துகளைப் பேசினர். இதற்குக் கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தனி தமிழ்நாடு, ஆயுதம் ஏந்தத் தயார் என்றெல்லாம் சிலர் பேசத் தொடங்கிவிட்டதாகக் கூறியிருந்தார். தன்னுடைய ஆட்சியில் இதுபோல பேசியவர்களை பொடா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அ.தி.மு.க. ஆட்சியில் மதுரை திருமங்கலத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக வைகோ 11.7.2002-ல் கைது செய்யப்பட்டார். இப்போது பொடா சட்டம் இல்லை என்ற அசட்டு தைரியத்தில் பிரிவினைவாதம் பேசுகிறார்கள் என ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார். (மேலும்) 24.10.08
__________________________________________________________________________________________________________
பிரபாகரன் உருவப் பொம்மையை எரித்த காங்கிரஸார்
கடலூர்: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் கொடும்பாவியை காங்கிரஸ் கட்சியினர் எரித்தனர். இதை கண்டித்து விடுதலைச் சிறுத்தை கட்சியினர் கோஷமிட்டனர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இலங்கை பிரச்சனை தொடர்பாக மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கடலூர் நடந்தது. மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் திமுகவையும், முதல்வர் கருணாநிதியையும் மிகக் கடுமையாக தாக்கிப் பேசினர். மேலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவோரையும் கண்டித்தனர். செயற்குழு கூட்டம் முடிந்ததை அடுத்து புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உருவ பொம்மையை காங்கிரஸார் எரிக்க முயன்றனர். போலீஸார் அதை தடுத்து நிறுத்தி எரிக்க கூடாது என்று அனுமதி மறுத்தனர். அதற்கு, கட்சி அலுவலகத்துக்குள்தான் கொளுத்துவதாக கூறிய காங்கிரஸார், போலீஸாரை அங்கிருந்து வெளியேறும்படி கூறினர். பின்னர் பிரபாகரனின் கொடும்பாவியை எரித்தனர். அதை அலுவலகத்துக்கு வெளியில் கொண்டு வந்து போட்டனர். இதையறிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை தலைவர் அறிவுடைநம்பி தலைமையில் அங்கு கூடிய அக்கட்சியினர், பிரபாகரன் கொடும்பாவியை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அறிவுடைநம்பி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவு, சிறுவர் எழுச்சி துணை செயலர், தொண்டரணி துணைச் செயலர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இதற்கு அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. (மேலும்) 24.10.08
__________________________________________________________________________________________________________
தலைவர் பதவியிலிருந்து நீக்கச் சதி : கருணா : கருணா தெரிவித்த கருத்து தொடர்பாக விளக்கம் கேட்கிறது அவரின் கட்சி
கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு கட்சியிலுள்ள சிலர் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் கூறியுள்ளார். எனினும், மக்கள் மத்தியில் தனக்குக் காணப்படும் ஆதரவு காரணமாக அவர்களால் தன்னைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்க முடியாதிருப்பதாக அவர் கூறியுள்ளார். கிழக்கு மாகணாத்துக்குப் பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லையென நேற்றுமுன்தினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் கருணா கூறியிருப்பது பதற்றமான சூழ்நிலையைத் தோற்றுவித்திருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் கைலேஸ்வரராஜா கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார். எனினும், கிழக்கு மாகாணத்துக்குப் பொலிஸ் அதிகாரங்கள் அவசியமில்லையென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் அனைவரும் ஏற்கனவே இணங்கியிருப்பதாக கருணா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். “நான் கட்சித் தலைவர் என்ற வகையிலேயே கருத்து வெளியிட்டேன். கருத்து வெளியிடுவதற்கு நான் எவரின் அனுமதியையும் பெறத்தேவையில்லை. இதற்கு மக்களும் இணங்குவார்கள்” என கருணா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனினும், கட்சிக்கிடையில் தோன்றியிருக்கும் முறுகல்நிலை தெளிவுபடுத்தப்படவில்லையெனவும், கருணாவிடமிருந்து விளக்கம் கோரப்பட்டிருப்பதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் கைலேஸ்வரராஜா கூறினார். (மேலும்) 23.10.08
__________________________________________________________________________________________________________
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டத்தின் கீழ் வன்னிமக்களுக்கு அனுப்பும் பொருட்களை புலிகள் கொள்ளையடிக்கினறனர்!
- வன்னியூரான்
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட ஏற்பாட்டில் வன்னிக்கு அனுப்பப்பட்டுவரும் உணவுப்பொருட்கள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதால், அவற்றை புலிகள் கையாடக்கூடிய வாய்ப்புகள் இல்லையென ஐக்கிய நாடுகள் உணவுதிட்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அவரது இந்த அப்பாவித்தனத்தை எண்ணி அனுதாபப்படுவதைத்தவிர வேறொன்றும் செய்ய முடியாது. ஆனால் வன்னிக்கு வெளியில், இலங்கை நாட்டின் ஏனைய பாகங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எமது இரத்த உறவுகளுக்காக,உண்மையில் இங்கு என்ன நடைபெறுகிறது என்பதை தெரிவிக்க வேண்டியது நமது கடமையாகும். அப்பொழுதுதான் புலிகள் சர்வதேச சமூகத்தை எப்படி ஏமாற்றி வருகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும். பொதுவாகவே ‘சங்கக்கடை’என்று சொல்லப்படும் பல நோக்குக்கூட்டுறவு சங்கங்களில் வேலை செய்பவர்களில் பெரும்பாலோரின் யோக்கியதை பற்றி தமிழ்மக்கள் நன்கு அறிவர். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் 1970-77 ஆட்சிக்காலத்தில் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு பெரும்தட்டுப்பாடு நிலவி, அவை இந்த சங்கங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்ட நேரத்தில், தமிழ் பகுதிகளில் இந்த சங்கக்கடை மனேஜர்களாக இருந்தவர்களுக்கு தான் ஆகக்கூடிய மாப்பிள்ளை சீதனம் வழங்கப்பட்டது என்றால், சங்கக்கடை மனேஜர்களது மகிமையை புரிந்துகொள்ள முடியும். இப்பொழுது வன்னியில் இந்த ‘கனவான்கள்’பெரும் ‘க(ள்ள)னவான்களான’புலிகளுக்கு கீழே வேலைசெய்ய கிடைத்தால் என்ன நடக்கும் என்று எண்ணிப்பாருங்கள்! உலக உணவுத்திட்டம் அனுப்பும் பொருட்களை சங்கங்களிலிருந்து கொள்ளையடிப்பது புலிகளைப் பொறுத்தவரை ஒரு பெரிய விடயமேயல்ல. கிராமசேவகர்களும் புலிகளின் கையாட்கள் என்றபடியால் (வன்னியில் எல்லா அரசஊழியர்களும் புலிகள் சொன்னதை செய்யும் சுப்பன்கள்தான்), அவர்கள் அகதிகள் என பதிவு செய்து கொடுக்கும் அத்தனைபேருக்கும், சங்கக்கடை மனேஜர்கள் உணவுப்பொருட்களை வாரி வழங்குவார்கள். (மேலும்) 23.10.08
__________________________________________________________________________________________________________
பொடா' இல்லாத தைரியத்தில் பேசுகிறார்கள்: ஜெயலலிதா - புலி ஆதரவு கட்சிகளுடன் உறவு இல்லை - காங்கிரஸ்
சென்னை, அக். 22: இலங்கைத் தமிழர்களுக்காக ""ஆயுதம் ஏந்தவும் தயார்'' என்று அரசியல் தலைவர்கள், திரைப்படத் துறையினர் பேசியதற்கு முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "பொடா' இல்லாத தைரியத்தில் பிரிவினை பேசுகிறார்கள் என்றும், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் தேசத் துரோகிகள் என்றும் அவர் கூறியுள்ளார். புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: "ராமேஸ்வரத்தில் திரைத்துறையினர் போராட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். தனித் தமிழ்நாடு என்று துணிச்சலாகப் பேசியுள்ளனர். ஆயுதம் ஏந்தவும் தயார் என்ற அளவுக்கெல்லாம் இப்போது பேசுகிறார்கள். 25.1.2008-ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் அதன் தலைவர் திருமாவளவன் விடுதலைப் புலிகளை பகிரங்கமாக ஆதரித்துப் பேசியதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்திய இறையாண்மைக்கு எதிரான, தேச விரோத கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மீது கருணாநிதி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு என்ன செய்யப் போகிறது எனத் தெரியவில்லை. இப்போது தமிழகத்தில் என் தலைமையிலான ஆட்சி இருந்திருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகப் பேசியிருப்பவர்களை நிச்சயமாகக் கைது செய்திருப்பேன். எனது ஆட்சிக்காலத்தில் இதுபோன்று பேசியவர்கள் மீது "பொடா' சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களைச் சிறையில் அடைத்தேன். இப்போது அச் சட்டம் ரத்தாகிவிட்டது என்ற அசட்டு தைரியத்தில் சிலர் பகிரங்கமாகவே தேசவிரோத கருத்துகளைப் பேச ஆரம்பித்துவிட்டனர். அச் சட்டம் இல்லாவிட்டாலும், இப்போதுள்ள சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க முடியும். தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்க்கும் ஒரே தலைவர் நான்தான். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை நம்பி இலங்கைத் தமிழர்கள் இல்லை. பிரபாகரன் ஒரு அழிவு சக்தி. (மேலும்) 23.10.08
__________________________________________________________________________________________________________
யாழ் நகரில் கடையடைப்பு? : காங்கேசன் துறை கடற்சமரில் இரு விடுதலை புலி உறுப்பினர்கள் பலி -விடுதலை புலிகள்
காங்கேசன்துறை துறைமுகத்தில் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து யாழ் நகரில் கடையடைப்பு மேற்கொள்ளப்படவேண்டுமென குடாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் கட்சியொன்றே இவ்வாறான அறிவிப்பை விடுத்திருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. கப்பல் தாக்கப்பட்டிருப்பதால் அதனைக் கண்டித்து நாளை வியாழக்கிழமை யாழ் நகரப் பகுதியிலுள்ள கடைகளை மூடுமாறு ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று மாலை 5 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து யாழ் நகரப் பகுதியின் இராணுவ உயர் அதிகாரிகளுக்கும், அறிவிப்பை மேற்கொண்டவர்களுக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டதுடன், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்தியாவதிய பொருட்களை ஏற்றி சென்ற ருகுணுமற்றும் நிமாலவ கப்பல்கள் தமது வழமையான வழங்கல்பணியை முடித்தபின்னர் காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்துநின்றவேளை, கடற்புலிகளின் மகளிர் துணைத்தளபதி கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் இலக்கியா தலைமையில் சென்ற அணி தாக்குதலை நடத்தியதாக விடுதலை புலிகள் தரப்பு அறிவித்துள்ளாது.இந்த சம்பவத்தில் கடற்புலிகளின் மகளிர் துணைத்தளபதி கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் இலக்கியாவுடன் கடற்புலிகளின் கொமாண்டோ லெப்ரினென்ட் கேணல் குபேரன் வீரச்சாவடைந்துள்ளதாக அச்செய்திகள் மெலும் தெரிவித்தன. யாழ் பொது மக்களுக்கு அத்தியாவதிய பொருட்களை ஏற்றி சென்ற ருகுணு மற்றும் நிமாலவ ஆகிய கப்பல்கள் கடற்புலிகளினால் வடப்பகுதி கடற்பரப்பான காங்கேசன் துறைமுகத்தில் வைத்து இன்று காலை 5.10 மணியளவில் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ள முனைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. (மேலும்) 23.10.08
__________________________________________________________________________________________________________
உணவுக்கப்பல்கள் மீதான புலிகளின் தாக்குதல் தமிழ் மக்களின் வயிற்றிலடிக்கும் பாதகச் செயலாகும். மனித விரோத இச்செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்
- ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)
யாழ்ப்பாணத்துக்கு உணவுப்பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் கப்பல் மூலமாகவே அனுப்பப்படுகின்றது. யாழ் குடாநாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், விலையுயர்வு இருப்பதாகவும் வெறும் வாய்ப்பிரசாரம் செய்தவர்கள், மக்களின் அவலங்களை எப்போதும் வேடிக்கை பார்த்ததே வரலாறாக இருக்கின்றது. ஈ.பி.டி.பி. ஆகிய நாம் வேடிக்கை பார்க்காமல் மக்களின் துயரங்களைப் போக்கும் ஆக்கபூர்வமான முயற்சிகளை அயராது எடுத்ததன் பயனாகப் பொருட்கள் தட்டுப்பாட்டையும், அதீத விலையுயர்வையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். உணவுப் பொருட்கள், கட்டுமாணப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் என்பனவற்றைத் தாராளமாக யாழ். குடாநாட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்தோம். அதுவும் கொழும்பு விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்;காகவும் நாம் பாடுபட்டோம். உள்நாட்டிலிருந்தும், இந்தியாவிலிருந்தும், பொருட்களை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வந்து சேர்ப்பதில் நாங்கள் எடுத்த பெரும் முயற்சியை மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். மழைக்காலம் ஆரம்பித்துவிட்டதால் பொருட்களைக் கொண்டுவரும் பயணமார்க்கத்திலும், ஏற்றி இறக்கும் பணிகளிலும் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என்பதால், நீண்டகாலத் தேவையை மனதில் கொண்டு, பெருந்தொகையான பொருட்களை யாழ். குடாநாட்டுக்கு அனுப்பிவைப்பதில் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டோம். (மேலும்) 23.10.08
__________________________________________________________________________________________________________
பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி சென்ற ருகுணு மற்றும் நிமாலவ கப்பல்கள் மீது கடற்புலிகள் தற்கொலைதாக்குதல்
பொது மக்களுக்கு அத்தியாவதிய பொருட்களை ஏற்றி சென்ற ருகுனு மற்றும் நிமாலவ ஆகிய கப்பல்கள் கடற்புலிகளினால் வடப்பகுதி கடற்பரப்பான காங்கேசன் துறைமுகத்தில் வைத்து இன்று காலை 5.10 மணியளவில் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ள முனைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளின் மூன்று தற்கொலை தாக்குதல் படகுகள் இத் தாக்குதலினை மேற்கொண்டதாகவும் . வர்த்தக கப்பல்களிற்கு பாதுகாப்பு வழங்குவதற்கு சென்ற கடற்படையினரினர் புலிகளின் படகுகள் மீது இயந்திர துப்பாகி மூலம் தாக்குதல் நடத்தி இரண்டு படகுகளை வர்த்தக கப்பலின் மீது மோதும் முன் தாக்கியழித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் டி.கே.பி. தஸாநயக்க தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளை வர்த்தக கப்பலான நிமாலவவிற்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
__________________________________________________________________________________________________________
கருணாநிதியின் நிம்மதியின்மைக்கும் நித்திரையின்மைக்கும் உண்மையான காரணங்கள் இவைதான்!
- பார்த்தசாரதி
இலங்கை தமிழர்படும் இன்னல்களை நினைத்து தான் நிம்மதியும் இல்லாமல், நித்திரையும் இல்லாமல் தவிப்பதாக தமிழக முதல்வர் முத்துவேலு கருணாநிதி சமீபத்தில் கூறியிருந்தார். அவரது இந்த கூற்றை பார்க்கும்போது, இந்த தள்ளாத வயதிலும் எவ்வளவு சாதுரியமாக அவரால் நடிக்க முடிகிறது என்ற வியப்புதான் ஏற்படுகின்றது. ஆனால் இலங்கை தமிழருக்காக கருணாநிதி நிம்மதியையும் நித்திரையையும் இழப்பதானால், அதனை அவர் எப்போதோ இழந்திருக்க வேண்டும். அதுவும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஒரு பங்காளியாக இருக்கும் கருணாநிதிக்கு, நாலரை ஆண்டுகளாக வராத இலங்கை தமிழர் மீதான பாசம், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அந்த இரண்டரை ஆண்டுகளாக வராத அக்கறை, இப்பொழுது திடீரென பொத்துக்கொண்டு வந்தது ஏன் என்ற கேள்வியை தமிழக மக்கள் கேட்பதில் தவறேதும் இல்லை. ஏறத்தாள கடந்த கால் நூற்றாண்டாக புலிகள் செய்துவந்த படுகொலைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருப்பது அல்லது அவர்களுடன் ஊடல்பாணியில் சரசம் விடுவது, கருணாநிதியின் அரசியல் நாகரீகத்தில் அல்லது ராஜதந்திரத்தில் ஒன்று. எனவே அதைவிட்டுவிடுவோம். ஆனால் இலங்கை அரசாங்கத்தின் மீது இப்பொழுது திடீரென சீறிப்பாயும் கருணாநிதி, இவ்வளவு காலமும் ஏன் கண்ணை மூடிக்கொண்டிருந்தார் என கேட்கும் உரிமை நமக்குண்டு. இலங்கை இராணுவம் கிழக்கு மாகாணத்தில் சம்பூரை கைப்பற்றியபோது,வாகரையை கைப்பற்றியபோது, குடும்பிமலையை கைப்பற்றியபோது, கொக்கட்டிச்சோலையை கைப்பற்றியபோது, திருகோணமலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது, வடக்கில் மன்னாரை விடுதலை செய்தபோது, துணுக்காயை கைப்பற்றி முறிகண்டிவரை முன்னேறியபோது, நிம்மதியையும் நித்திரையையும் இழக்காத கருணாநிதி, இப்பொழுது பிரபாகரனின் கடைசி இருப்பிடமான கிளிநொச்சியும் முல்லைத்தீவும் பறிபோகும் நிலையில், விழித்துக்கொண்டு வீராவேசம் கொள்வதற்கு காரணம் என்ன? (மேலும்) 22.10.08
__________________________________________________________________________________________________________
.தமிழகத் தவைர்களே! நக்கீரன் பேட்டி மூலமாவது பிரபாகரனின் விருப்பத்தை அறிந்துகொள்ளுங்கள்!
- ஈழப்பிரியன்
நக்கீரன் சஞ்சிகை மூலம் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழகத் தலைவர்களுக்கு சொல்லியிருப்பது என்ன? புலிகள் தமது குறிக்கோளை அடைவதற்கான பயணத்தில் உறுதியாக தளராத மனோதிடத்துடன் இருக்கிறார்கள் என்பதை பிரபாகரன் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். புலிகளின் இலக்கு தமிழ்ஈழம்தான் என்பதையும் அவர் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். தமிழ்ஈழத்தை அடைவதற்கான புலிகளின் பாதை என்ன என்பது ஒன்றும் இரகசியமானதல்ல. போர்... போர்... போர்... இதன்மூலமே தமிழீழத்தை பெற்றெடுக்கமுடியும் என்று நம்புகின்றவர் பிரபாகரன்.அதற்காகவே இதுவரை இருபத்தி இரண்டாயிரத்திற்கும் அதிகமான போராளிகளை பலிகொடுத்தும் இருக்கிறார்.
|