|
முல்லைத் தீவில் விரைவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு
கொழும்பு, மார்ச், 7: இலங்கையில் முல்லைத் தீவு பகுதியில் போரின் போது தகர்க்கப்பட்ட ஒளிபரப்பு கோபுரம் சீரமைக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து விரைவில் அப்பகுதி மக்களுக்கு தொலைக்காட்சி வசதி மீண்டும் கிடைக்கும் என இலங்கை அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இறுதி கட்ட போரின் போது விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவு பகுதியில் உள்ள ஒளிபரப்பு கோபுரம் தகர்க்கப்பட்டது. இந்த கோபுரத்தை சீரமைக்கும் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த கோபுரம் சீரமைக்கப்பட்டால் வட பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும். இந்த கோபுரத்தை சீரமைக்கும் பணிக்கு ராணுவமும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது' என அந்த அறிக்கை கூறுகிறது.
_____________________________________________________________________________________________
சர்வதேச மகளிர் தினத்தில் முழுவதும் மகளிரே இயக்கும் விமானம்: மும்பை-அமெரிக்காவுக்கு 14 மணி நேர தொடர் பயணம்
சர்வதேச மகளிர் தினம் இன்று (திங்கட்கிழமை) உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாராளுமன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்படுகிறது. மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் முழுக்க முழுக்க மகளிரே இயக்கும் விமான போக்குவரத்தை இன்று முதல்முறையாக இயக்குகிறது. மும்பையில் இருந்து அமெரிக்காவில் உள்ள நிïயார்க் நகருக்கு வழியில் எங்கும் நிற்காமல் 14 மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்யும் வகையில் போயிங் 777-200 என்ற ரக விமானத்தை முழுவதும் பெண்களே இயக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்து உள்ளது. பெண்களே இயக்கும் இந்த விமானத்தில் பெண் கேப்டன்கள் ரஷ்மி மிரன்டா, சுனிதா நகருல்லா ஆகியோர் விமானத்தின் கமாண்டர்களாகவும், பெண் கேப்டன்கள் சுவாதி ரவால், நேகாகுல்கர்னி ஆகியோர் விமானத்தின் முதல் அதிகாரிகளாகவும் இருப்பார்கள். இது தவிர நாட்டின் முக்கிய பகுதிகளுக்கும் பெண்களே இயக்கும் விமானங்களும் இன்றைய தினம் இயக்கப்படுகிறது என்றும் ஏர் இந்தியா தெரிவித்து உள்ளது.
_____________________________________________________________________________________________
பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் வெற்றிச்சின்னம் ராணுவம் அமைக்கிறது
இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடைபெற்று வந்த போர், கடந்த ஆண்டு மே மாதம் முடிவடைந்தது. அப்போது நடந்த சண்டையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. பிரபாகரன் உடல், முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடல் ஏரிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறியது. இந்நிலையில், விடுதலைப்புலிகளுடனான போரில் வெற்றி பெற்றதன் அடையாளமாக, பிரபாகரன் கொல்லப்பட்ட நந்திக்கடல் ஏரி அருகே இலங்கை ராணுவம் வெற்றிச்சின்னம் அமைத்து வருகிறது. இத்தகவலை கொழும்பில் இருந்து வெளிவரும் ஓர் ஆங்கிலப்பத்திரிகை தெரிவித்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தை குறிக்கும் வகையிலும், இந்த வெற்றிச்சின்னம் அமைக்கப்பட்டு வருவதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும், இறுதிக்கட்ட போர் நடைபெற்ற புதுக்குடியிருப்பில் ஒரு வெற்றிச்சின்னம் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. அதில், போரில் பங்கேற்ற ராணுவப் படைப்பிரிவுகளின் பெயர்கள் செதுக்கப்பட்டுள்ளன. (மேலும்) 08.03.10
_____________________________________________________________________________________________
வடக்கு கிழக்கில் மட்டும் 1000பேர் போட்டி ;மக்களின் ஜனநாயக ஆர்வத்தைக் காட்டுகிறது
- ஜனாதிபதியைச் சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் கருத்து
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுவது ஜனநாயக நடைமுறையின் மீது மக்கள் வைத்துள்ள ஆர்வத்தை காட்டுவதாக உள்ளது. சமாதானம் மீண்டும் உருவாக்கப்பட்டதையடுத்தே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. தான் சென்ற இடங்களில் எல்லாம் மிகுந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் கூடிய நிலையை காண முடிந்தது என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் கூறியுள்ளார்.இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து உரையாடினார். அச்சமயமே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது அவர் மேலும் கூறியதாவது, இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தும் விடயத்தில் இலங்கை குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டுள்ளது. 70 ஆயிரத்துக்கு குறைவான இடம்பெயர்ந்தவர்களே தற்போது நிவாரணக் கிராமங்களில் உள்ள நிலையில் இந்த விடயம் சர்வதேச சமூகத்தின் அவதானத்திலிருந்து விடுபட்டுள்ளதாக குறிப்பிட்ட இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் விடயத்தில் இந்தியா தொடர்ந்து உதவுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார். (மேலும்) 08.03.10
_____________________________________________________________________________________________
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிருபமா ராவை சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்றைய தினம் சந்தித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். மீள்குடியேற்றத்தில் அரசாங்கம் காட்டும் அசிரத்தை, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
_____________________________________________________________________________________________
தற்கொலை அங்கிகள், சக்திமிக்க குண்டுகள் மீட்பு: வவுனியா கந்தசாமி நகரில் சம்பவம்
வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தசாமி நகரிலிருந்து அதி சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் தற்கொலை அங்கிகள் என்பன மீட்கப்பட்டிரு ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி நேற்று தெரிவித்தார். பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கடந்த இரு தினங்களாக முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் பயனாகவே இவை மீட்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தேடுதலின் போது நான்கரை கிலோ கிராம் நிறைகொண்ட குண்டு, 06 – கிரனேற் கைக்குண்டுகள், ஒன்றரை கிலோ கிராம் மற்றும் ஒரு கிலோவும் 200 கிராம் நிறையும் கொண்ட இருவேறு தற்கொலை அங்கிகள், 04, டெட்டனேட்டர்கள், 02 டோச்கள் உள்ளிட்ட பெருந்தொகையான வெடிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
_____________________________________________________________________________________________
சுவாமி நித்யானந்தாவின் காதல் லீலை
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தலைமையகம். 33நாடுகளில் கிளைகள். 32வயதில் இரண்டாயிரம் கோடி ரூபாய்களுக்கு அதிபதி. உலகம் முழுவதும் 1,500 கிளைகள். விவேக் ஓபராய் முதல் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா வரை விசிறிகள் என காவி சாம்ராஜ்யத்தை நிலை நாட்டிய சுவாமி நித்யானந்த பரமஹம்சர், தன்னுடைய காவி உடைக்குள் ஒளித்து வைத்திருந்த காமம், நடிகை ரஞ்சிதா ரூபத்தில் அம்பலப்பட்டுப் போகும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். கதவைத் திற காற்று வரட்டும் என்றவர் கதவைச் சாத்து காதல் வரட்டும் என்று அம்பலமாகட்டும் என எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்போது சர்வதேச மீடியாக்களின் பக்கங்களில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் நித்தியானந்தர், தான் நடத்திய ஆபாச வேட்டை சி.டி. அம்பலமாகாமல் இருக்க நடத்திய கடைசி கட்ட சேஸிங் ஒரு விறுவிறுப்பான ஆங்கிலப் படம் போன்றது. (மேலும்) 08.03.10
_____________________________________________________________________________________________
ஜெனரல் சரத் பொன்சேகா சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்:அனோமா
தமது பிள்ளைகளுடன் தொலைபேசி ஊடாக உரையாட அனுமதி தருமாறு கோரி ஜெனரல் சரத் பொன்சேகா சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக அவரது பாரியார் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தற்போது வெளிநாட்டில் தங்கியுள்ள தமது மகள்மாருடன் உரையாடுவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது.எனவே இக்கோரிக்கை நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாவிரதத்தினை ஜெனரல் சரத் பொன்சேகா தொடரவுள்ளதாக அவரது பாரியார் அனோமா பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்
_____________________________________________________________________________________________
இலங்கை விவகாரத்தில் பான்கீ மூன் மெதுவாக செயற்படுவதற்கு ஐ.நா அங்கத்துவ நாடுகளின் அழுத்தமே காரணம்
இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மெதுவாக செயற்படுவதற்கு ஐ.நா. அங்கத்துவ நாடுகளின் அழுத்தமே காரணம் என ஐக்கிய நாடுகளுக்கான பிரெஞ்சு தூதுவர் ஜெரார்ட் ஆரூட் தெரிவித்துள்ளார். ஐ.நா. வின் அரசியல் விவகார ஆலோசகர் லீன் பஸ்கோ இவ்வாரம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் விஜயம் செய்கிறார். ஆனால் அவர் இலங்கைக்கு வரவில்லை என்பதை சுட்டிக்காட்டிய இன்னர் சிற்றி பிரஸ், பான் கீ மூனின் தாமதமான செயற்பாட்டுக்கு என்ன காரணம் என நேற்றுமுன்தினம் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே ஜெரார்ட் அரூட் இவ்வாறு கூறியுள்ளார். இவ்விடயத்தில் இந்தியாவின் பெயரை ஆரூட் முதலில் குறிப்பிட்டார். அடுத்ததாக சீனாவின் பெயரை குறிப்பிட்டார் என இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் அரசாங்கத்தினால் இலங்கையின் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையை பயங்கரவாதத்தை ஒடுக்கும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாக பிரான்ஸ் கருதியதாகவும் ஜெரார்ட் ஆரூட் தெரிவித்துள்ளார்.
_____________________________________________________________________________________________
ரிஆர்ரி தமிழ்அலை வானொலியில் ஞாயிறு அரசியல் அரங்கம் நிகழ்ச்சி பற்றிய அறிவித்தல்
கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகிவரும் டான் தமிழ்ஒலி வானொலி (ரிஆர்ரி தமிழ்அலை) தற்போது புதிய அலைவரிசையில் ஒலிபரப்பாகிவருகின்றது. சன் ரிவி ஒளிபரப்பாகும் ய+ரோபேர்ட் சட்டலைற்றில் (9பாகை) ஒலிபரப்பாகும் இந்த வானொலி 11919 V, S/R: 27500 FEC: 3/4 என்ற அலைவரிசையில் டான் தமிழ் றேடியோ என்ற பெயரில் ஒலிபரப்பாகின்றது. ரிஆர்ரி தமிழ் அலை வானொலியில் ஞாயிறு தோறும் ஐரோப்பிய நேரம் இரவு 10 மணி முதல் 12 மணி வரை இடம் பெறும் அரசியல் அரங்கம் நிகழ்ச்சி வழமை போன்று இடம் பெறும். இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம் 00 94 112 62 37 86
_____________________________________________________________________________________________
ஐ.நா தலைமை செயலர் மீது இலங்கை ஜனாதிபதி மஹிந்த கடும் விமர்சனம்
- B.B.C News
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலர் பான்கீ மூன் தெரிவித்துள்ளதன் தொடர்ச்சியாக, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஐக்கிய நாடுகளின் செயலரை கடுமையாக விமர்சித்துள்ளார். இவ்வாறான குழுவொன்றின் எவ்வகையான நியமனமும் இலங்கையை ‘அவசியமானதும் பொருத்தமானதுமான நடவடிக்கையை எடுப்பதற்கு’ தள்ளும் செயல் என்று ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச் செயல்களுக்கு எந்த வகையிலேனும் பொறுப்பேற்கப்படவேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தான் எந்தக் குற்றமும் புரியவில்லை என இலங்கை அரசாங்கம் கூறிவருகின்றது. இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தாலும் அத்துடன் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளாலும் போர்க்கால குற்றங்கள் புரியப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களைப் பொறுத்தவரை, பான்கீ மூன் குறிப்பிடத்தக்களவு மென்மையான இராஜதந்திரப் போக்கையே கொண்டுள்ளார். (மேலும்) 07.03.10
_____________________________________________________________________________________________
07-03-2010 ரிபிசியின் ஞாயிற்றுக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடல்
இலங்கையின் அரசியல் நிலமைகள் தொடர்பாக நடைபெற உள்ள இந் நிகழ்ச்சியில் புளட் அமைப்பின் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம் ஜேர்மனிய ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் செ ஜெகநாதன் மற்றும் ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாட உள்ளனர் மாலை 3மணி முதல் 5 மணி வiர் நடைபெற உள்ளது நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்
________________________________________________________________________________________________
உணர்ச்சியூட்டும் பேச்சுகளால் அறுபது வருடங்கள் வீணாகின உருப்படியான கொள்கை தேவை
ஜீவகன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பற்றிச் சிலர் கூறும் ஒரு சங்கதி இச் சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகின்றது. இரண்டு உலக சாதனைகளுடன் கூட்டமைப்பு தேர்தல் களத்தில் குதித்திருக்கின்றதாம். சொந்த இனத்தவர்களையே பேரழிவுக்குள் தள்ளியது ஒரு சாதனை. தனிநாட்டுக்காகப் புலிகள் ஆரம்பித்த ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களின் பேரழிவுக்கு வழிவகுத்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதும் தொடர்ந்து செயற்பட்டதும் புலிகளின் அரசியல் முகமாகவே. எனவே புலிகளினால் ஏற்பட்ட பேரழிவுக்கு இவர்களும் பொறுப்பாளிகள். தீர்வுக்கான கொள்கை இல்லாமலே இனப் பிரச்சினை பற்றியும் தீர்வு பற்றியும் பேசுவது இரண்டாவது சாதனை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னோடிக் கட்சிகள் ஏதாவதொரு கொள்கையை முன்வைத்தே தேர்தலில் போட்டியிட்டன. தமிழரசுக் கட்சி சமஷ்டியை முன்வைத்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் போட்டியிட்ட போது புலிகளை ஏக தலைமையாகப் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதன் மூலம் அதுவும் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தது. இப்போது கூட்டமைப்பு அதன் கொள்கைத் திட்டத்தை இதுவரை வெளியிடவில்லை. தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம் என்றுதான் நேற்று வரை சொல்லிக் கொண்டிருந்தார்கள். தீர்வுக்கான கொள்கை கூட்டமைப்பிடம் இல்லை என்றும் இப் பத்தி சுட்டிக்காட்டிய பின் சம்பந்தர் புதுக்கதை பேசுகிறார். (மேலும்) 07.03.10
_______________________________________________________________________________________________
"நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையை பெற்றேன்"
-எஸ் எம் எம் பஷீர்
1966 ம் அண்டு இராணுவச் சதி மூலம் ஆட்சி கவிழ்ப்பை நடத்த திட்டமிட்ட முன்னாள் மேஜர் ஜெனரல் உடுகொடவின் கைதும் அது பற்றிய நிகழ்வுகளும் பொன்சேகாவின் அலையினை அடக்குவதாக கருதப்பட்டது. அன்றைய இராணுவச்சதி வழக்கில் பௌத்த குருவான ஞானசீஹா தேரோ முதலாவது குற்றவாளியாகவும் மேஜர் ஜெனரல் உடுகோடா நான்காவது குற்றவாளியாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இவர்கள் மீது மகாரானிக்கெதிராக முதலாம் திகதி டிசம்பர் மாதம் 1965 தொடக்கம் பதினெட்டாம் திகதி பெப்ரவரி மாதம் 1966 வரையான காலப்பகுதியில் யுத்தம் தொடுக்க சதி செய்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் அன்று ஆட்சியில் இருந்தவர் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதமரான டட்லி சேனநாயகாவின் ஆட்சியினை கவிழ்க்கவே இவர்கள் சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் மொத்தம் இருபத்தி மூன்று பேர் குற்றவாளியாக காணப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். மேஜர் ஜெனரல் உடுகோடா தனது ஐக்கிய இராச்சிய , சுவிசர்லாந்து விஜயங்களை முடித்துவிட்டு நாடு திரும்பியபோது இலங்கை விமான நிலையத்தில் வைத்தே (07.07.1966) கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்படார். (மேலும்) 07.03.10
_______________________________________________________________________________________________
தத்தமது கட்சிகளுக்குள்ளேயே வேட்பாளர்கள் மோதல்; விருப்பு வாக்குகளைப் பெறும் கடும் போட்டியில்!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான போட்டி யில் வேட்பாளர்கள் தாம் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுவதை இலக்குவைத்து தத்தமது கட்சி வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தி மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு "கபே' தேர்தல் கண்காணிப்புக் குழு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அந்த அமைப்பின் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் நேற்று உதயனுக்குத் தெரிவித்ததாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட தினத்தில் இருந்து இன்றுவரை நாடளாவிய ரீதியில் 19 தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட இறுதித் தினத்திலிருந்து தேர்தல் வன்முறைகள் ஆரம்பமாகிவிட்டன. கம்பஹா, கண்டி, நுவரெலியா, குருநாகல், களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உட்கட்சி மோதல்களும் இடம்பெற்றுள்ளன. எதிர்க்கட்சிகளைத் தாக்குவதைவிட, விருப்பு வாக்குகளைக் குறிவைத்துத்தத் தமது கட்சிகளுக்குள்ளேயே பலர் மோதல்களில் ஈடுபடுகின்றனர். இந்த மோதல்கள் இப்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன. அரசியல் கட்சிகளிடம் ஒழுக்கநெறி அறவே இல்லை. இந்த மோதல்களைக் கட்டுப்படுத்த உரிய கட்சிகள் நடவடிக்கை எதனையும் இதுவரை எடுக்கவில்லை. அவை தொடர்பான புரிந்துணர்வே இல்லா மல் அக்கட்சிகள் இருக்கின்றன. எதிர்வரும் நாள்களில் தேர்தல் வன் முறைகள் பன்மடங்குகள் அதிகரிக்கக் கூடும். இவற்றை உடனடியாகக் கட்டுப் படுத்த பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றார்.
________________________________________________________________________________________________
வடக்கு நூலகங்களுக்கு 40 லட்சம் பெறுமதியான நூல்கள்
புலிகளின் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக சீரழிந்து போன வடபகுதி நூலகங்களுக்குத் தேசிய நூலக மற்றும் ஆவணப்படுத்தும் சேவைகள் சபை 40 லட்சம் ரூபா பெறுமதியான நூல்களை வழங்கவுள்ளது. கடந்த 30 வருடங்களாக, புலிகள் நடத்திய யுத்தத்தால் வடபகுதியில் அழிவுக்குள்ளாக்கப்பட்ட சுமார் 110 நூலகங்களைச் சீரமைக்கும் பணியை, 'வடக்கின் வசந்தம்' திட்டத்தின் கீழ், தேசிய நூலக மற்றும் ஆவணப்படுத்தும் சேவைகள் சபை ஆரம்பித்துள்ளது. அதன் முதற்கட்ட நடவடிக்கைகள் அண்மையில் வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அத்துடன் நூலகத்தில் பணி புரிபவர்களுக்கான பயற்சித் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளைச் சபையின் பணிப்பாளர் எம்.கே.வீரசிங்க மேற்கொண்டு வருகின்றார்.
_____________________________________________________________________________________________
புலிகளின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு முக்கியஸ்தர்கள் ஜெர்மன் பொலிசாரால் கைது செய்யப்பட்டமை தொடர்பாக ஜெர்மனிய செய்திகளில் வெளியானவை
Germans arrest 6 suspected of rebel Tamil support
By ASSOCIATED PRESS
Published: Mar 5, 2010 9:05 PM Updated: Mar 5, 2010 9:05 PM
BERLIN: German prosecutors said Friday that they have arrested six people suspected of being members of a wing of the Tamil Tiger rebels and of forcing Tamils living in Germany to make donations to the banned group.
The three German and three Sri Lankan nationals were arrested on Wednesday following searches in the western state of North Rhine-Westphalia, federal prosecutors said in a statement. The six are accused of serving in the leadership of the Tamil Coordination Committee, or TCC. The TCC is a Germany-based wing of the Tamil Tigers, who were defeated in 2009 after 25 years of civil war in Sri Lanka. The Tigers are listed as terrorists by the European Union. Prosecutors said the committee was “tasked with siphoning finances off of Tamils living in Germany and transferring the collected money and objects to Sri Lanka.” The six were identified only as Vijikanendra V. S., 34 — the alleged ringleader — Sivanathan T., 58, and Ragulan S., 22, all Sri Lankan citizens. The German citizens were identified as Sasitharan M., 33, Koneswaran T., 39, and 42-year-old Poobalasingham T. (Read) 06.03.10
______________________________________________________________________________________________________________
மறுபடியும் மக்களிடம் ஆணை கேட்கும் பம்மாத்தமைப்பு
- தாயகக்குரல்
தமிழ் மக்களே அரசை ஆக்குவதற்கும், வீழ்த்துவதற்கும் சக்தியுள்ளவர்கள் என்று தமிழ் தலைவர்கள் பெருமை பேசிய நிலை மாறிவிட்டது. தேசிய வாதம் என்ற பெயரில் இனவாதம் பேசிப் பேசி தமிழர்கள்; தங்களுக்குள் பிரிந்துவிட்டனர். சிங்கள மக்கள் தேசியம் என்ற பெயரில் ஒன்றுபட்டுவிட்டனர். இதுதான் இன்றைய யதார்த்தம். வடக்கு கிழக்கில் புலிகளினால் ஏக பிரதிநிதிகளாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் சின்னாபின்னப்பட்டு விட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்கள் தனிக்கட்சியாகவோ அல்லது வேறு கட்சிகளிலோ போட்டியிடுகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்மாவட்டத்தில் தனித்து போட்டியிடுகிறது. இவருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பனர்களான கஜேந்திரன், பத்மினி ஆயோர் போட்டியிடுகின்றனர்.யாழ்மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற கட்சியை ஆரம்பித்து போட்டியிடுகின்றனர்.வன்னி மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கிஷோர் சிவநாதன், கனகரத்தினம் ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுகிறார். (மேலும்) 06.03.10
______________________________________________________________________________________________________________
மக்கள் 'டிவி' அலுவலகம் மீது மா.கம்யூனிஸ்ட் தாக்குதல் : பதிலுக்கு பா.ம.க., ரகளை
சென்னை : மார்க்சிஸ்ட் தலைவர் வரதராஜன் மரணம் குறித்து வெளியான செய்தியால், மக்கள் "டிவி' அலுவலகம் மீது, மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் கல் வீசி தாக்கினர். இதையடுத்து, மா.கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பா.ம.க.,வினர் அடித்து நொறுக்கினர். இச் சம்பவம், சென்னையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.ஆர்.வரதராஜன், ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். வரதராஜன் தற்கொலை செய்து கொள்ளவில்லை; கொலை செய்யப்பட்டுள்ளார் என மக்கள் "டிவி'யில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இச்செய்தி தவறானது என மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற் காக சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள மக்கள் "டிவி' அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். நேற்று காலை 11 மணிக்கு மார்க்சிஸ்ட் கட்சி தென் சென்னை மாவட்டச் செயலர் சண்முகம், வடசென்னை மாவட் டச் செயலர் பீமா ராவ், மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உட்பட 100க்கும் மேற் பட்டோர், மக்கள் "டிவி' அலுவலகம் முன் கூடினர். அப்போது திடீரென மார்க்சிஸ்ட் கட்சியினர், மக்கள் "டிவி' அலுவலகம் மீது கல் வீசி தாக்கினர். "டிவி' அலுவலக கண்ணாடிகள் நொறுக்கின. அலுவலகத் திற்கு உள்ளேயும் செங்கற்கள் விழுந்ததில், மக்கள் "டிவி' ஊழியர்கள் காயமடைந்தனர். (மேலும்) 06.03.10
______________________________________________________________________________________________________________
மீள்குடியேற்றப்பட்டோர் நலனை கவனிக்க முல்லைத்தீவில் இரு அலுவலகங்கள்
மீள்குடியேற்றப்பட்ட முல்லைத்தீவு மக்களுக்கான பணிகளை இலகுபடுத்துவதற் காக, மாங்குளத்திலும், பாண்டியன் குள த்திலும் மீள்குடியேற்ற அமைச்சின் இர ண்டு அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் வேண்டு கோளுக்கமைய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த இரு அலுவலகங்களையும் கடந்த புதன்கிழமை திறந்து வைத்தார். 2,718 குடும்பங்களைச் சேர்ந்த 6,787 பேர் துணுக்காயிலும் 2,666 குடும்பங்களைச் சேர்ந்த 6,216 பேர் பாண்டியன்குளத்திலும் மற்றும் ஒட்டுசுட்டானில் 217 குடும்பங்களும் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
______________________________________________________________________________________________________________
பொருளாதார வளர்ச்சியை சரிசமமாக பகிர்ந்தளிப்போம்! சீன மக்கள் மாமன்றம் உறுதி
உலகப்பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் மீள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், சோசலிசத்தை நோக்கிய பாதையில் பீடு நடைபோடும் மக்கள் சீனம், 2010ம் ஆண்டின் இறுதியில் தனது பொருளாதாரத்தை மேலும் உச்சிக்கு கொண்டு செல்ல உறுதியேற்றுள்ளது. சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு (சிபி பிசிசி) எனும் உயரிய மக்கள் மன்றத்தின் 11வது தேசியக் குழுவின் மாநாடு புதன் கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது. பெய்ஜிங் மாநகரில் அமைந்துள்ள மக்கள் மாமன்ற அரங்கில் துவங்கிய இந்த மாநாடு மார்ச் 13ம் தேதி நிறைவுபெறுகிறது. சீனாவில், சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அரசின் கொள்கைகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியே தீர்மானிக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி அல்லாத இதர கட்சிகளும், கட்சி சாராத மக்கள் அமைப்புகளும் சீனாவில் செயல்படுகின்றன. உயரிய மக்கள் ஜனநாயகத்தை பின்பற்றும்விதமாக, கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமின்றி, கம்யூனிஸ்ட் அல்லாத இதர அனைத்துக் கட்சிகளுடனும், கட்சிசாராத மக்கள் அமைப்புகள் மற்றும் எந்த பகுதியையும் - எந்தப்பிரிவையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும் அரசின் கொள்கைகளை செழுமைப்படுத்துவது குறித்தும், அரசின் செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் முன் வைக்கும் ஒரு திறந்த மக்கள் மன்றமாக சீன சிபிபிசிசி செயல்படுகிறது. (மேலும்) 06.03.10
______________________________________________________________________________________________________________
ரிஆர்ரி தமிழ்அலை வானொலி புதிய அலைவரிசையில்
கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகிவரும் டான் தமிழ்ஒலி வானொலி (ரிஆர்ரி தமிழ்அலை) தற்போது புதிய அலைவரிசையில் ஒலிபரப்பாகிவருகின்றது. சன் ரிவி ஒளிபரப்பாகும் ய+ரோபேர்ட் சட்டலைற்றில் (9பாகை) ஒலிபரப்பாகும் இந்த வானொலி 11919 V, S/R: 27500 FEC: 3/4 என்ற அலைவரிசையில் டான் தமிழ் நேடியோ என்ற பெயரில் ஒலிபரப்பாகின்றது. இதே அலைவரிசையில் அடுத்த வாரத்திலிருந்து டான் தமிழ்ஒளி தொலைக்காட்சியும் ஒளிபரப்பாகவிருக்கின்றது.
______________________________________________________________________________________________________________
புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!
- வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)
புலிகளைப் பொறுத்தவரை, அவர்கள் தமிழ் மக்களின் கல்வியை அழித்ததில், சிங்களப் பேரினவாதிகள் கூட செய்யாத அளவுக்கு, பெரும் நாசங்களை விளைவித்தவர்கள் என்பது இரகசியமான ஒன்றல்ல. பல பாடசாலைகளை அவர்கள் தமது இராணுவ முகாம்களாகப் பயன்படுத்தியதும், பல பாடசாலைப் பிள்ளைகளை பலவந்தமாக தமது இயக்கத்திற்காகப் பிடித்துச் சென்று, இராணுவப் பயிற்சி கொடுத்து, யுத்த முனையில் இரையாக்கியதும் அனைவரும் அறிந்த விடயங்கள். துமாத்திரமின்றி, தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், அவர்கள் ஊருக்கு ஒரு நூலகமோ அல்லது வாசிகசாலையோ வைத்திருந்ததுடன், ஒவ்வொருவரும் தமது வீடுகளிலும் தமக்கென சிறிய அளவிலேனும் ஒரு நூலகத்தைக் கொண்டிருந்த பாரம்பரியத்தையும் கொண்டிருந்தவர்கள். அப்படி அவர்கள் வைத்திருந்த நூலகத்தைக் கூட புலிகளின் நடவடிக்கைகளால் அவர்கள் இழக்க வேண்டி வந்ததுதான் வரலாறு. 1995ம் ஆண்டு அக்டோபர் 30ம் திகதி, 2 மணி நேர அவகாசத்தில் வலிகாமம் மக்களை புலிகள் அவர்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றிய போது, அவர்கள் தமது அத்தியாவசியப் பொருட்கள், சொத்துக்களை மட்டுமின்றி, தமது வீடுகளில் சிறுகச் சிறுக சேகரித்து வைத்திருந்த புத்தகச் செல்வங்களையும் இழக்க நேர்ந்தது. ஆனால் அதேநேரத்தில், புலிகள் எந்த இராணுவத்தை தமிழர்களின் எதிரி என்று வர்ணித்தார்களோ, அதே இராணுவம் கடுமையான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளைகளிலும் கூட, பல மில்லியன் ரூபா பெறுமதியான நூல்களை யாழ்.நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. (மேலும்) 05.03.10
______________________________________________________________________________________________________________ __
சிலாபம், உடப்பு இளைஞர்கள் 21 பேர் மட்டக்களப்பில் கைது
சட்ட விரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்கு எத்தணித்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சிலாபம், உடப்பு பகுதியைச் சேர்ந்த 21 இளைஞர்கள் மட் டக்களப்பில் நேற்று கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். மட்டக்களப்பு, நாவலடி பகுதியில் கடற்கரையோரமாக அவர்களை ஏற்றிச் செல்வதற்கு வள்ளம் வரும் வரை காந்திருந்த சமயமே இவர்கள் 21 பேரும் கைதாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். சந்தேக நபர்கள் பயணம் செய்ததாக கருதப்படும் வேன் ஒன்று, கடல் வழிப்பாதையை கண் டறியக் கூடிய வரை படங்கள், உணவு வகைகள், பணம், உடைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு 234 ஆவது படையணியின ரும் மட்டக்களப்பு பொலிஸாரும் இணைந்தே இவர்களை கைது செய்துள்ளனர். காத்திருந்தும் வள்ளம் வராத காரணத்தினால் நாளை புறப்படலாம் என்ற எண்ணத்தில் நாவலடி வீடொன்றினுள் இருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அனைவரும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் வாக்கு முலங்களும் பெறப்பட்டன. உடப்பு கிரா மத்து இளைஞர்கள் கைது செய்யப்பட் டுள்ளமை தொடர்பாக சிலாபம் பொலிஸ் நிலையத்துக்கும் அறிவித்தல்கள் விடுக் கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
______________________________________________________________________________________________________________ __
உரிமைக்குக் குரல் கொடுப்போம்! உறவுக்குக் கரம் கொடுப்போம்!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் தீர்வு காணவும் இன ஐக்கியம் மற்றும் இன சமத்துவம் ஆகியவற்றைப் பேணவும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளையும் வாழ்வாதார பிரச்சினைகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் முன்நிறுத்தி பொதுச்சின்னத்தில் போட்டியிடுவது எனத் தீர்மானம் எடுத்துள்ளோம். அர்த்தமற்ற வெற்றுக்கோசங்களாலும் வேண்டப்படாத எதிர்ப்பு அரசியலாலும் வெறுமனே பழிவாங்கும் உணர்வுகளாலும் தமிழ் மக்களின் நியாயமான அரசியலுரிமைப் பிரச்சினையை பேசித்தீர்ப்பதற்கான கதவுகள் யாவும் பொறுப்பற்ற தமிழ் அரசியல் தலைமைகளால் இழுத்து மூடப்பட்டுள்ள நிலையில்.. இதுவரை கால தமிழ் அரசியல் தலைமைகள் கிடைத்த சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்த மறுத்ததினால் தம்மைத் தாமே அழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாலும் இன்னும் இருப்பவர்கள் அனுபவங்களை படிப்பினைகளாக ஏற்றுக்கொள்ளாமல் சரியான வழிமுறையைத் தேட மறுத்து தொடர்ந்தும் வழிமாறி இதுவரை தோல்விகளை மட்டும் தந்திருந்த வழிமுறையில் சென்று கொண்டிருப்பதாலும் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினையை வென்றெடுப்பதற்கான பாரிய வரலாற்று கடமை என்பது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வழிமுறை மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில்.. (மேலும்) 05.03.10
______________________________________________________________________________________________________________ __
இலங்கையில் தற்பொழுது நடைமுறையிலுள்ள பாராளுமன்றத் தேர்தல் முறை
எம்.ஏ. அச்சிமுகம்மட் (கிதி) ஆசிரியர் கமு / அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை - நிந்தவூர்
1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின் கீழ் பாராளுமன்ற பொதுத் தேர்தலானது விகிதாசார பட்டியல் முறையின் அடிப்படையில் நடைபெறுகின்றது. யாப்பின் 95 வது சரத்தின் முதலாம் பிரிவு ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழு தேர்தல் மாவட்டங்களைப் பிரிக்கும் எனவும், 96 வது சரத்து இலங்கையை 20க்கு குறையாமலும், 24க்கு மேற்படாததுமான தேர்தல் மாவட்டங் களாகப் பிரித்து அம்மாவட்டங்களுக்குரிய பெயரைச் சூட்டுதல் வேண்டும் எனவும் கூறுகின்றது. 1980 களின் ஆரம்பப்பகுதியில் இருந்து இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்கள் 22 தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இணைக்கப்பட்டு யாழ் தேர்தல் மாவட்டமாக ஆக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இணைக்கப்பட்டு வன்னித்தேர்தல் மாவட்டமாக ஆக்கப்பட்டுள்ளது. 98 வது சரத்தின் முதலாம் பிரிவு பாராளுமன்றம் 225 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் எனவும், இவர்களுள் 196 உறுப்பினர்கள் 22 தேர்தல் மாவ ட்டங்களிலிருந்து மக்களால் தெரிவு செய்யப்படுவர் எனவும், இவர்களுள் 36 உறுப்பினர்கள் ஒரு மாகாணத்துக்கு நான்கு பேர் என்ற அடிப்படையில் 9 மாகாணங்களுக்கும் பிரித்தளிக்கப்படுவர். (மேலும்) 05.03.10
______________________________________________________________________________________________________________ __
பொன்சேகா மருமகன் பதுங்கல்: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் வீட்டில் பொலிசார் சோதனை
கொழும்பு, மார்ச் 4: முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் பதுங்கியிருப்பதாகக் கூறி இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் வீட்டில் பொலிசார் சோதனை நடத்தினர். இலங்கை முன்னாள் ராணுவ தளபதியும், அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவருமான பொன்சேகாவின் மருமகன் தனுனா திலகரத்னே. ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் பல லட்சம் முறைகேடு செய்ததாக தனுனா மீது அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். தமது உறவினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஹசன் திலகரத்னே வீட்டில் தனுனா பதுங்கியிருக்கலாம் என போலீஸப்ருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து கொழும்பு மாவட்டம் பில்லியான்டலா பகுதியில் உள்ள ஹசன் திலகரத்னே வீட்டில் செவ்வாய்க்கிழமை சி.ஐ.டி. போலீஸப்ர் சோதனை நடத்தினர். இத்தகவலை சி.ஐ.டி.இயக்குனர் விஜய அமரசிங்கே தெரிவித்ததாக கொழும்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சோதனை நடந்ததை ஹசன் திலகரத்னே வீட்டில் உள்ளவர்களும் உறுதி செய்ததாகவும் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மேலும்) 05.03.10
______________________________________________________________________________________________________________ __
மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் இரு அலுவலகங்கள் நேற்று திறப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் பணிகளை இலகுபடுத்தும் வகையில் மாங்குளத்திலும், மாந்தை கிழக்கு மக்களின் பணிகளுக்கென பாண்டியன்குளத்திலும் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் இரு அலுவலகங்கள் நேற்று (2010.03.03) திறந்து வைக்கப்பட்டன. மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீன் இவற்றைத் திறந்து வைத்தார். முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்ணம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இ;வ்விரு அலுவலகங்களையும் திறந்து வைத்தார். அதேவேளை, துணுக்காயில் 2718 குடும்பங்களைச் சேர்ந்த 6787 பேரும், பாண்டியங்குளத்தில் 2666 குடும்பங்களைச் சேர்ந்த 6216 பேரும், ஒட்டுச்சுட்டானில் 217 குடும்பங்களும் மீளக்குடியர்த்தப்பட்டுள்ளன. இன்னும் இரு வாரங்களில் மல்லியாவளையில் 16 கிராம சேவகர் பிரிவில் மீள்குடியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மல்லாவி மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன், வித்தியாலய ஆசிரியர்களுக்கான சைக்கிள்களை உடன் பெற்றுக் கொடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கினார்.
______________________________________________________________________________________________________________ __
ஸ்கேன் செய்ய மறுத்த பெண்கள்: விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு
லண்டன்: விமான நிலையத்தில் ஸ்கேன் செய்து கொள்ள மறுத்த முஸ்லிம் பெண்கள் இருவருக்கு பாகிஸ்தான் செல்லும் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது. பிரிட்டன், மான்செஸ்டர் விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் செல்லும் விமானம், நேற்று புறப்பட தயாராக இருந்தது. அப்போது, அந்த விமானத்தில் செல்லவிருந்த முஸ்லிம் பெண்கள் இருவரை, விமான நிலைய அதிகாரிகள் ஸ்கேன் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர். மருத்துவ மற்றும் மத ரீதியான காரணங்களைக் கூறிய, அந்தப் பெண்கள் ஸ்கேன் செய்து கொள்ள மறுத்தனர். இதனால், அவர்களை விமானத்தில் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இரு பெண்களும், தங்களது பயணத்தை ரத்து செய்தனர். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, பிரிட்டனில் உள்ள விமான நிலையங்களில் பயணிகளை முழுவதுமாக ஸ்கேன் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை பல அமைப்புகள் குறை கூறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
______________________________________________________________________________________________________________ __
ஓரு சுனாமி தடுக்கப்பட்டது
- நடேசன்
ஓக்கம வினாசகரண்ட ஓண என அமெரிக்காவில் சொல்லி விட்டு நாடு திரும்பிய இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தமிழ்த் தேசிய அணியிடம் சிறையில் உள்ள சகல விடுதலைப் புலிகளையும வெளியில் விட்டு விட்டு யாழ்ப்பாணத்தை தொழில் நுட்ப பூங்காவாக்குவதாக வாக்களித்தார். இவரது வாக்குறுதியை நம்பிய தமிழ்த் தேசிய அணியினர் சகல தமிழ் மக்களையும சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கும் படி கேட்டனர். இவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தோ அல்லது தாங்களாகவோ பெரும்பான்மை தமிழர்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்து இலங்கைத் தமிழரின் தனித்துவத்தை நிலைநாட்டி விட்டார்கள். புல விடுதலைப் புலிகளின வெளிநாட்டு ஆதரவாளர்களும் சரத்போன்சேகாவில் அனுதாபம் கொண்டவர்களாகவும் அவரது கைதை மகிந்த அராசாங்கத்தின் ஜனநாயக விரோத செயலாக காட்ட முயல்வதுடன் சரத் பொன்சேகாவை மிகவும ஜனநாயகவாதியாகவும் காட்டி வருகிறார்கள். இதேவேளையில் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச திருவாளர் சம்பந்தனிடம் நீங்கள ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்கப்போகிறீர்களா எனக் கேட்டதற்கு இராணுவத் தளபதிகள் கவர்னர்களாகவோ வெளிநாட்டு இராஜதந்திரிகளாகவோ நியமிப்பது போல்தான் ஜெனரல் ஜனாதிபதியாக வருவது என பதில் கொடுத்து தனது வக்கீல்த்தனத்தை விட வடிகட்டின முட்டாள் தனத்தை வெளிக்காட்டிக்கொண்டார். (மேலும்) 04.03.10
______________________________________________________________________________________________________________ __
தமிழ் பேசும் மக்களே! பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக வாக்களியுங்கள்!!
கனடிய தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம் வேண்டுகோள்.
இலங்கையில் 2010 ஜனவரி 26ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஏப்ரல் 08ம் திகதி பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. 1948ல் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து, பாராளுமன்ற ஜனநாயகத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் நாடுகளில் ஒன்று என்ற வகையில், இத்தேர்தல் இலங்கை மக்களுக்கு மிக முக்கியமானதாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் உருவத்தில், இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்படும் ஒரு சூழ்நிலை உருவான போதும், நாட்டு மக்களில் பெரும்பாலோர் எடுத்த, புத்திசாலித்தனமானதும், தீர்க்கதரிசனமிக்கதுமான முடிவால், அவர் தோற்கடிக்கப்பட்டு, ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டமை, நமது நாட்டு மக்கள் ஜனநாயகத்தின் மீது கொண்டிருந்த அசையாத பற்றுறுதியை எடுத்துக்காட்டியது. இருப்பினும், தமிழ் மக்களுக்குத் தலைமைதாங்கிய பிரதான அரசியல் கட்சியான பிற்போக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, படுபிற்போக்கான ஐக்கிய தேசியக்கட்சியுடனும், இனவாத ஜே.வி.பியுடனும் இணைந்து, ஏகாதிபத்தியக் கைக்கூலியும், பேரினவாதியும், போர்வெறியருமான சரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்பது என்று எடுத்த, தவறானதும், முட்டாள்தனமானதுமான முடிவால், தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் பொன்சேகாவுக்கு வாக்களித்த, தூரதிஸ்ட வசமான ஒரு நிலைமை ஏற்பட்டது. அதன் மூலம,; தமிழர்கள் நாட்டின் சுதந்திரம், இறைமை, ஜனநாயகம் என்பனவற்றுக்கு எதிரானவர்கள் என்ற, நீண்ட காலமாக ஊறிப்போன தவறான அபிப்பிராயத்தை, மீண்டும் ஒருமுறை நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டுள்ளனர். (மேலும்) 04.03.10
______________________________________________________________________________________________________________ __
பாராளுமன்றத் தேர்தல் - 08.04. 2010
தமிழர் விடுதலைக் கூட்ட்டணி தேர்தல் விஞ்ஞாபனம்
இலங்கையில் சிறுபான்மையின மக்கள் அரை நூற்றாண்டுக்கு மேலாக அனுபவித்து வரும் துன்பங்களுக்கு இதுவரை நிரந்தரத் தீர்வோ அல்லது, தற்காலிக நிவாரணமோ கிட்டவில்லை. இதற்காக காலத்திற்குக் காலம் நற்சிந்தனையுள்ள தலைவர்கள் நியாயபூர்வமாக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தொடர்ந்து சில கடும் போக்காளர்களினால் முட்டுக்கட்டை போடப்பட்டு வந்தன. இவற்றைக் கவனத்திற்கொண்டு, தமிழர் விடுதலைக்கூட்டணி அதன் அடிப்படைக் கொள்கையில் பாதிப்பு ஏற்படுவதை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக விவேகமான முடிவை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அண்மையில் யுத்தம் உட்பட நடந்தேறிய பல சம்பவங்கள் சிறுபான்மையினரின் மனிதாபிமான பிரச்சினைகள் மேலும் அதிகரித்துள்ளமையால் அவற்றைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு ஒரே விதமான சிந்தனை கொண்ட கட்சிகளினதும், மக்களினதும் பொறுப்பு என தமிழர் விடுதலைக்கூட்டணி உணர்கின்றது. பல்வேறு திசைகளில் இருந்து கடந்த காலங்களில் நாட்டை குட்டிச்சுவராக்க கங்கணம் கட்டி நிற்கின்ற சில கடும் போக்காளர்கள் உட்பட, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் திடீரென தம்மை வெளிக்காட்டிக்கொண்டு, நாட்டின் நிலமையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் கருத்துக்களை வெளியிடுவதிலும், அறிக்கைகளை விடுவதிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதை எவரும் மறுக்க முடியாது. இதற்கு சில உள்நோக்கங்கள் இருக்கின்றமையை தெளிவாக உணர முடிகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெளிப்படையான கருத்து, சகலருக்கும் மனத்திருப்தியை ஏற்படுத்தக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்கி, சிறியவன், பெரியவன் என்ற பேதமின்றி அனைவரும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே! (மேலும்) 04.03.10 பிரதியெடுக்க
______________________________________________________________________________________________________________ __
உடல் நலக்குறைவான நிலையில் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மருத்துவமனையில்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செயலாளர் நாயகம் அவர்களை விஷேட வைத்தியர்கள் தங்களது மேலான கண்காணிப்பில் தொடர்ந்தும் வைத்திருக்கின்றார்கள். தொடர்ந்தும் அவர் மருத்துவ மனையிலேயே தங்கியிருக்க வேண்டும் எனவும் ஓய்வெடுப்பதற்கான நேரங்களை அவர் ஒதுக்குவதில் அக்கறை செலுத்தாமையினால் தொடர்ந்தும் சுகயீனங்கள் ஏற்பட நேரிடும் என்றும் வைத்தியர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவனையில் இருந்து கொண்டே தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கட்சி தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் மக்கள் பணி மற்றும் எதிர்வரும் தேர்தலுக்கான பிரச்சார வேலைகள் குறித்து முடிந்த நேரங்களில் மேற்பார்வை செய்வதிலும் அக்கறை செலுத்தி வருகின்றார்
______________________________________________________________________________________________________________ __
யெர்மனியில் புலிகளின் அனைத்துலகசெயலப் பிரிவினர் கைது.
யெர்மனியில் புலிகளின் அனைத்துலக செயலகப் பிரிவினர் இன்று யெர்மனிய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யெர்மன் தமிழர் பேரவை என்கிற புதிய பெயரில் இயங்கினாலும். புலிகளின் பழைய அனைத்துலக கட்டமைப்பில் இருந்தர்கள் என்று அனைவரிற்கும் தெரிந்:த விடயம்தான். இவர்கள் மீண்டும் புலிகள் அமைப்பிற்கு பணம் தரும்படி மக்களிடம் பணம் சேகரித்து வந்தனர். அதற்கான பற்றுச் சீட்டில் யெர்மனிய பொறுப்பாளர் வாகீசனே கையெழுத்தும் போட்டுள்ளார். இந்த நிதி சேரிப்பு விடயம் மற்றும் பணம் கொடுக்காதவர்களை மிரட்டியது போன்ற செயல்களிற்காக இவர்கள் கைது செய்யப் பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கைது செய்யப் பட்டவர்களின் விபரங்கள்
வாகீசன், சிவநாதன், செந்தில், சசி, மகிழன், ராஜன் ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளதாகவும். மற்றும் இரும்பொறை றஞ்சன்.பரணி. சிவம் .ஆகியோர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிய வருகின்றது - யாழ் இணையம்
______________________________________________________________________________________________________________ __
பொன்சேகா வழக்கு விசாரணை எப்போது?
கொழும்பு :அரசுக்கு எதிராக சதிச் செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி சரத்பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோர்ட்டில் முறையான விசாரணை நடக்கும் என, இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சாமரசிங்கா தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:பதவியில் இருந்தபோதே அரசுக்கு எதிராக சரத் பொன்சேகா பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக 25 பேர் சாட்சி சொன்னதின் அடிப்படையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.அதன் பின், கோர்ட்டில் விசாரணை துவங்கும். சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை.இவ்வாறு சாமரசிங்கா தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, இலங்கையில் அடுத்த மாதம் 8ம் தேதி நடக்கவுள்ள பார்லிமென்ட் தேர்தலில் சரத்பொன்சேகா போட்டியிடும் நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என, இலங்கை எதிர்க்கட்சிகள் சார்பில் இணைய தளத்தில் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. சரத்பொன்சேகாவின் மனைவி அனோமா தலைமையில், முன்னாள் தலைமை நீதிபதி சரத் என் சில்வா இதை நேற்று துவக்கி வைத்தார். இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா, மார்க்சிஸ்ட் தலைவர் சோமவன்சா அமரசிங்கா உட்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சரத்பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என கையெழுத்திட்டுள்ளனர்.
______________________________________________________________________________________________________________ __
போலீஸ் நிலையமாக மாறியது விடுதலைப் புலிகளின் தளம்
கொழும்பு, மார்ச் 2: இலங்கையில் வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தளங்களில் ஒன்றான பூனார்யன் தளம் தற்போது போலீஸ் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த போலீஸ் நிலையத்தை இலங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மகிந்த பாலசூர்யா திங்கள்கிழமை திறந்து வைத்தார். யாழ்ப்பாண உப்பு நீர் ஏரியின் தெற்கு கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க விடுதலைப் புலிகளுக்கு பூனார்யன் தளம் மிகவும் உதவியாக இருந்தது. பூனார்யன் தளம் ஏ 32 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலை 98 கி.மீ. நீளம் கொண்டது. இது 1988-ம் ஆண்டு மூடப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டையால் இந்த நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி இந்த சாலை மூடப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி தான் மீண்டும் பயணிகள் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. ஏ 32 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 5-வது காவல் நிலையம் பூனார்யன். இது நாட்டின் 423-வது காவல் நிலையம் ஆகும் என்று ஐ.ஜி. மகிந்த பாலசூர்யா தெரிவித்தார். (மேலும்) 04.03.10
______________________________________________________________________________________________________________ __
சாமியாருடன் நடிகை சல்லாபம் : என்ன செய்யப்போகிறது தமிழ் திரையுலகம்?
சென்னை: தமிழ் நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழ் திரையுலகம் என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன். இவருக்கு தமிழகத்திலும், கர்நாடகாவிலும் ஆசிரமங்கள் உள்ளன. பெங்களூருவில் மைசூர் சாலையில் உள்ள பிடுதி பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்தியானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் உள்ளது. இதுதான் நித்தியானந்தாவின் தலைமையகம். 32 வயதே நிரம்பிய நித்தியானந்தா, கதவை திற காற்று வரும் என்ற தலைப்பில் போதனைகளை கூறி வந்தார். லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டிருக்கும் அவர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் நித்தியானந்தா, அந்த நடிகையிடம் சில்மிஷங்களில் ஈடுபடுவது போலவும், உல்லாசமாக படுக்கையை பகிர்ந்து கொள்வது போலவும், தண்ணீர் கொடுப்பது போன்றும், மாத்திரை கொடுப்பது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால் அந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. நித்தியானந்தாவின் முகத்திரையை கிழித்திருக்கும் இந்த வீடியோவில் அவருடன் உல்லாசமாக இருக்கும் நடிகை ரஞ்சிதா, பாரதிராஜாவின் படத்தில் அறிமுகமானவனர்; பாரதிராஜாவின் சின்னத்திரை தொடரிலும் நடித்தவர். (மேலும்) 04.03.10
______________________________________________________________________________________________________________ __
நித்யானந்தர் ஆசிரமம் முன் ரகளை: போலீஸ் குவிப்பு
திருவண்ணாமலை, மார்ச் 2: தனியார் டி.வி. சேனலில் சுவாமி நித்யானந்தர் தொடர்பான பாலியல் படக்காட்சிகள் ஒளிபரப்பானதை அடுத்து திருவண்ணாமலை நித்யானந்தர் ஆசிரமம் முன் இந்து மக்கள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை இரவு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் பிறந்தவரான சுவாமி நித்யானந்தர் தனது சொற்பொழிவுகளால் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர். அவருக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். திருவண்ணாமலையிலும், கர்நாடக மாநிலம் பெங்களூரிலும் அவருக்கு ஆசிரமங்கள் உள்ளன. திருவண்ணாமலை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சிவபாபு தலைமையில் அக்கட்சியினர் திடீரென ஆசிரமம் முன் வந்து நித்யானந்தருக்கு எதிராகக் குரல் எழுப்பினர். அவரது பேனரையும் சிலர் கிழிக்க முயன்றனர். இதையடுத்து சிவபாபு உள்ளிட்டவர்களை போலீஸப்ர் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
______________________________________________________________________________________________________________ __
பிரச்சினையின் தீர்வுக்காகவே மக்களின் வாக்குகள்
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக எல்லாத் தமிழ்க் கட்சிகளும் ஐக்கியப்பட வேண்டும் என்பது அடிக்கடி காதில் விழும் கோரிக்கை. விசேடமாக, தேர்தல் காலங்களில் ஏறக் குறைய எல்லாக் கட்சிகளும் இக் கோரிக்கையை முன் வைக்கின்றன. தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஐக்கியப்பட்டுச் செயற்படுவது நல்ல விடயம். ஆனால் அது பெயரளவிலான ஐக்கியமாக அல்லாமல் கொள்கை அடிப்படையிலான ஐக்கியமாக இருப்பதன் மூலமே தமிழ் மக்கள் பயன் பெற முடியும். அதுவும் நடைமுறைச் சாத்தியமான கொள்கையாக இருக்க வேண்டியது அவசியம். தமிழ்க் கட்சிகள் ஐக்கியமாகச் செயற்பட்ட அனுபவம் கடந்த காலங்களில் உண்டு. வடக்கில் நீண்ட கால அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகித்த தமிழர் விடு தலைக் கூட்டணி முதலில் அரங்குக்கு வந்தது. பின்னர், அதனுடன் வேறு சில கட்சிகளும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதயமாகியது. இவையிரண்டும் அவற்றின் பிரதான கொள்கையாகிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் மோசமாகத் தோல்வியடைந்து விட்டன. (மேலும்) 04.03.10
______________________________________________________________________________________________________________ __
நாடாளுமன்றத் தேர்தலையடுத்து ஜி.எஸ்.பி. தொடர்பாக பேச தயார் -ஐரோப்பிய ஒன்றியம்
நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து ஜி.எஸ்.பி. வர்த்தக வரிச்சலுகை தொடர்பாகவும் ஏனைய விடயங்கள் குறித்தும் பேச தயார் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பேர்னாட் சாவேஜ் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்த கருத்துக்களை இலங்கை பின்பற்றினால் இந்த வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதில் எந்தச் சிக்கலும் இருக்காது எனத் தெரிவித்த சாவேஜ் எந்த நாட்டையும் சிரமத்திற்குள்ளாக்குவது ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கமல்ல எனவும் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகை நிறுத்தம் அடுத்த ஆகஸ்ட் மாதத்தில் நடைமுறைக்கு வர இருக்கிறது என்றும் இதற்கு முன்னர் இந்தப் பிரச்சினையை சாதகமாகத் தீர்க்கலாம் எனத் தான் நம்புவதாகவம் சாவேஜ் மேலும் தெரிவித்தார்
|