|
கண்டி மாவட்டத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் வாக்கெடுப்பு
கண்டி மாவட்டத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் கோத்தபாய ஜயரெட்ன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம், இம்மாவட்டத்தில் 34 வாக்குச் சாவடிகளில் இடம்பெற்ற வாக்கு மோசடி தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இத்தகவலை அவர் தெரிவித்துள்ளார். தற்போது கண்டி மாவட்ட அடிப்படையில் கெஹெலிய ரம்புக்வெல, மகிந்தானந்த அலுத்கமகே, எஸ். பி. திஸாநாயக்க ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் இடங்களிலும், ரவூப் ஹக்கீம், லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியில் 4ஆம், 5ஆம் இடங்களிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
_____________________________________________________________________________________________
ஜனாதிபதி கட்சி முன்னிலை
- பி.பி.சி. செய்தி
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியுள்ள நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.ஆனால், வியாழக்கிழமை நடந்த தேர்தலின்போது, வடக்கே போரினால் இடம் பெயர்ந்த தமிழ் மக்களின் பாதிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என தேர்தல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அங்கு வாக்குப் பதிவு 50 சதத்துக்கும் குறைவாகவே இருந்ததாக செய்திகள் கூறுகின்றன. ஐந்தில் ஒரு பங்கு வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணி 60 சதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளது. ராஜபக்ஷவின் சொந்தப் பிரதேசமான தெற்கே, அவருக்கு இந்தத் தேர்தலில் பெருமளவு ஆதரவு கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார். கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பிறகு, ராஜபக்ஷவின் செல்வாக்கு அங்கு அதிகரித்தது. ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டவரும், தற்போது காவலில் உள்ளவருமான முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகாவின் ஐக்கிய தேசியக் கட்சி, ஐந்து சதம் வாக்குகளை மட்டும் பெற்று பின்தங்கியுள்ளது. (மேலும்) 09.04.10
_____________________________________________________________________________________________
யாழ். மாவட்டத்தில் அதிகாலை நிலைவரம் 6 ஆசனங்கள் பெற்று தமிழரசுக் கட்சி முன்னணி ! ஆளும் கட்சிக்கு 03; ஐ.தே.கட்சி ஓர் ஆசனம்
நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) முன்னணியில் உள்ளதாக இன்று அதி காலை கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. நேற்று மாலை ஆரம்பமான வாக்கு எண்ணும் பணிகள் இன்று அதிகாலை வரை தொடர்ந்தது. பிந்திய தகவலின்படி தமிழரசுக் கட்சி போனஸ் உட்பட ஐந்து ஆசனங்க ளையும் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மூன்று ஆசனங்க ளையும் ஐ.தே. கட்சி ஓர் ஆசனத்தையும் பெற்றுள்ளன என தேர்தல் அலுவலக வட் டாரங்களில் இருந்து அறியமுடிந்தது. உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று காலையே வெளியாகும் எனத் தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட் டமைப்பின் சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட மூன்று ஈ.பி.டி.பி.யினரே நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படும் வாய்ப்புகள் காணப்பட்டன என் றும் அதிகாலைத் தகவல்கள் தெரிவித்தன.
_____________________________________________________________________________________________
அமைதியான தேர்தல்: 55 வீத வாக்களிப்பு: யாழ். மாவட்டத்தில் 19 வீத வாக்களிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் 19 வீதம் மக்களே பொதுத் தேர்தலில் வாக்களி த்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.காலை ஏழு மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானதிலிருந்து வாக்களிக்கச் செல்வதற்கு மக்கள் ஆர்வம்காட்டவில்லை யென்றும் நண்பகலுக்குப் பின்னரே மிகக் குறைவானோர் வாக்களித்துள்ளதாகவும் தெரியவருகிறது. யாழ். மாவட்டத்தில் 9 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7, 21, 325 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். இவர்கள் வாக்களிக்கவென 621 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பன்னிரண்டு அரசியல் கட்சிகளும் 15 சுயேச்சைக் குழுக்களுமாக 324 வேட் பாளர்கள் களமிறங்கியிருந்தன ஏழாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வாக்களிப்பு மிக அமைதியான முறையில் நிறைவடைந்துள்ளதாக பொலிஸாரும் கண்காணிப்பாளர்களும் தெரிவித்தனர். 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 196 பேரை வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்வதற்கென மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் முதற் தடவையாக 22 மாவட்டங்களிலும் நேற்று சுமுகமான வாக்களிப்பு இடம் பெற்றது. எந்தவொரு மாவட்டத்திலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் அமைதியான தேர்தல் நடைபெற்றதாக தேர்தல் கடமைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்னவும் மற்றும் கண்காணிப்பாளர்களும் தினகரனுக்குத் தெரிவித்தனர். நேற்றுக் காலை ஏழு மணிக்கு ஆரம்பித்த வாக்களிப்பு நடவடிக்கைகள் பிற்பகல் 4 மணிக்கு நிறைவடைந்ததுடன் 50ற்கும் 55 வீதத்திற்குமிடையில் வாக்களிப்பு இடம்பெற்றதாக தேர்தல் செயலகம் தெரிவித்தது.
_____________________________________________________________________________________________
வாக்குப் பதிவு முடிந்தது
பி.பி.சி. செய்தி
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது. வாக்குப் பதிவு மந்தமாக இருந்ததாகவும், ஆங்காங்கே வன்சம்பவங்கள் நடந்திருந்ததாகவும் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்துள்ளன. கடந்த வருடம் அரச படையினர் விடுதலைப் புலிகளை தோற்கடிக்கடித்ததன் பின்பு அங்கு நடக்கின்ற முதல் நாடாளுமன்றத் தேர்தல் இது. பல இடங்களில் வாக்குப் பதிவு சுமூகமாக நடந்தது என்றாலும் வாக்களிப்பின்போது நடந்ததாகத் தெரிவிக்கப்படும் தேர்தல் முறைகேடுகள் பற்றி தங்களுக்கு முன்னூறு புகார்கள் வந்துள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் என்ற சுயாதீனக் குழு கூறுகிறது. இப்புகார்களில் 80 சச்தவீதமானவை ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராகவே தெரிவிக்கப்படடுள்ளன. கண்டி நகரருகே ஓர் இடத்தில் வாக்குச் சாவடிக்கு வந்த எதிர்க்கட்சி முகவர்களை ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் விரட்டி அடித்து, வாக்குச் சாவடிக்குள் அதிரடியாக நுழைந்து, வாக்குப் பெட்டிகளில் வாக்குகளை நிரப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (மேலும்) 08.04.10
_____________________________________________________________________________________________
வவு. வாக்காளர்கள் உரிய நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவில்லை : சிஎம்ஈவி தெரிவிப்பு
வவுனியா நலன்புரி கிராமங்களிலுள்ள வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர்களுக்கு உரிய வாக்கெடுப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படாமல் வெறொரு வாக்கெடுப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்தது. ஒட்டுசுட்டான், நெடுங்குளம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சுமார் 100 இடம்பெயர்ந்த வாக்காளர்கள் வவுனியா தமிழ் வித்தியாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் இணைப்பாளர் எம். ஹஜ்மிர் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
_____________________________________________________________________________________________
ஏக பிரதிநிதிகளிலிருந்து ஏகப்பட்ட பிரதிநிதிகள் வரை? ஐயாமார் வந்திருக்கினம் லெக்சன் கேக்க?
- பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ்
தனக்கு எதிராகப் பிரிகிற எந்த ராஜ்யமும் நிலைத்து நிற்காது
தமிழ் அரசியலின் வழமையான முகங்கள் மட்டுமல்ல. இன்னோரன்ன அனாமதேயங்களும் இன்று கொடியைத் தூக்கிக் கொண்டு தேர்தல் திருவிழாவில் காவடி தூக்கியுள்ளன பூனையில்லாத வீட்டில் எலி சன்னதம் கொண்டு ஆடும் என்றால். புலியில்லாத காட்டில் குரங்குகள் கும்மாளம் போடுவதில் என்ன ஆச்சரியம். தமிழர் பிரதேசத்தில் வாக்காளர் அட்டையின் அளவு உலக சாதனை படைக்கும் அளவுக்கு வாக்காளரை விட. வேட்பாளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது கூர்ப்பில் முதல் தோன்றிய குரங்கு பிரபஞ்சத்தின் மையமான யாழ்ப்பாணத்தில் தான் தோன்றியது என்று. மோட்டுச் சிங்களவன். வடக்கத்தையான் என்று ஊரில் தொடங்கி. சப்பட்டை. கறுவல். அடையான் என்று புலன் பெயர்ந்தது வரைக்கும். தன்னை மட்டும் புத்திசாலி என்று நினைத்த இந்த படித்த யாழ்ப்பாணிகளுக்கு ஒரு கொடியின் கீழ் நிற்க முடியவில்லை இதற்குள் இங்கே புலன் பெயர்ந்த கூட்டம் புலிக்கொடியை ஆட்டிக் கொண்டு தமிழர் தேசியக் கொடி என்று பேய்க்காட்ட முயற்சிக்கிறது இதைக் கண்ட பின்னால். அட. கோவணமும் போன பின்னால். இனி என்ன கேவலம் நடக்கப் போகிறதோ என்ற பயத்தில் இன ஒற்றுமைக் கோசம் என்று கிளம்பியிருக்கிறது புலி ஒவ்வொருவராகப் போட்டுத் தள்ளும்போது விசிலடித்த கூட்டம். முள்ளிவாய்க்காலில் கோவணம் உருவப்பட்ட பின்னாலும். தன் நிர்வாணத்தை உணர்ந்து கொள்வதாக இல்லை எந்தக் காலத்தில் ஐயா ஒற்றுமை பற்றிப் பேசினீர்கள் வாத்யார் நாலு பேரை வைச்சு ஒற்றுமை முயற்சி செய்த போது கை குலுக்கி போட்டோ எடுத்து விற்றுப் பணம் சம்பாதித்த பின்னால். கூட நின்றவர்களுக்கு குழி பறித்த போது. எங்கே போனது ஒற்றுமை வந்தவர்களை உபசரித்த. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து அமிர்தலிங்கத்தைப் போட்ட போது. எங்கே போனது ஒற்றுமை. (மேலும்) 08.04.10
_____________________________________________________________________________________________
196 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு இன்று (08) தேர்தல்
ஏ ழாவது பாராளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. 196 உறுப்பினர்களை நேரடியாகத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 7620 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பாக போட்டியிடுகின்றனர். சுமார் 30 வருடங்களின் பின்னர் முதன் முறையாக 22 மாவட்டங்களிலும் அமைதியான சூழ்நிலையில் ஒரே நேரத்தில் நடைபெறுகின்ற பொதுத் தேர்தல் இதுவாகும். இதன்படி, நாடுபூராவும் அமைக்கப்பட்டுள்ள 11,875 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை வாக்களிப்புகள் நடைபெறுகின்றன. இம்முறை தேர்தலில் 36 அரசியல் கட்சிகளும் 301 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. மிகக் கூடுதலாக திகாமடுல்ல மாவட்டத்தில் 18 அரசியல் கட்சிகளும், 48 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. ஒரு கோடி 40 இலட்சத்து 88 ஆயிரம் பேர் இன்று தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் தேர்தலை நடத்துவதற்காக சகல ஒழுங்குகளையும் தேர்தல் திணைக்களமும் பொலிஸ் திணைக்களமும் முன்னெடுத்து ள்ளன. தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் நேற்று (7) பூர்த்தி செய்யப்பட்டிருந்ததோடு தேர்தல் கடமையில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்களும் பொலிஸாரும் நேற்று (7) கடமைகளை பொறுப்பேற்றிருந்தனர். (மேலும்) 08.04.10
_____________________________________________________________________________________________
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அரசியல் (அ)சிங்கங்கள்
எஸ். எம்.எம். பஷீர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்போது போட்டியிடும் சகல முன்னாள் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் கடந்த காலங்களில் தமிழர் வாக்குகளை பெற்ற அனுபவத்தை இம்முறையும் பெறுவதற்கான சகல வழிமுறைகளையும் செய்து வந்துள்ளார்கள். தமிழர்களின் வாக்குகளை பெறுவதில் தமிழ் விளிம்பு நிலை மக்களின் போதைபழக்கத்தையும் அவர்களின் வறுமையும் கூட இஸ்லாமிய மத ரீதியான நம்பிக்கைக்கு முரணாக சுய நலத்துடன் பயன்படுதிவதில் கூட இங்கு போட்டியிடும் எல்லா முஸ்லிம் முன்னாள் எம். பீக்களும் கைதேர்ந்த்தவர்கள். தமிழர்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று எதிபார்க்கும் முஸ்லிம் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் யாரும் தமிழருக்கு வாக்களிப்பார்களா என்ற கேள்விக்கு நாம் விடையை தேர்தல் முடிவுகள் வந்த பிறகே சொல்லலாம். ஆனால் முஸ்லிம்கள் பொதுவாக பெரும்பான்மையாக தமது ஊர் பிறந்த வேட்பாளர்களுக்கே வாக்களிக்க தயாரகவிருக்கிரார்கள் என்பதுடன் ஒரே கட்சியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க தயாராகவில்லை. அவ்வாறு வாக்களிக்ககூடாது என்ற ஊர் சார்ந்த பிரச்சாரத்தையும் அவவ்வூர் வேட்பாளர்கள் இரகசியமாக செய்து தமது விருப்பு வாக்குகளை உறுதி செய்துவருகிறார்கள். (மேலும்) 08.04.10
_____________________________________________________________________________________________
ஏகபிரதிநிதித்துவக் கோட்பாடு ஜனநாயக விரோதமானது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாகப் பாராளுமன்றத்துக்கு வருவார்கள் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் கூறுகின்றார். நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இப்படியான ஒரு எதிர்பார்ப்பை வெளியிடுவதற்கு அவருக்குள்ள உரிமையை நாம் மறுதலிக்கவில்லை. ஆனால் ஏகபிரதிநிதித்துவக் கோட்பாடு சர்வாதிகாரச் சாயல் படிந்தது மாத்திர மன்றித் தமிழ் மக்களின் விமோசனத்துக்குப் பாதகமானதும் கூட என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம். கூட்டமைப்பினர் புலிகளிடமிருந்து இரவல் வாங்கியதே ஏகபிரதிநிதித்துவம் என்ற கருத்துருவம். முதலில் புலிகளை ஏகபிரதி நிதிகளாக ஏற்றுக்கொண்ட கூட்டமைப்பினர் இப்போது தங் களை அவ்வாறான பிரதிநிதிகளாக இனங்காட்ட முயற்சிக் கின்றனர். புலிகளின் பாதையிலேயே இவர்கள் இப்போதும் பயணிக்கிறார்களா என்ற கேள்வியை இது எழுப்புகின்றது. (மேலும்) 08.04.10
_____________________________________________________________________________________________
Welcome to Little Aid E-Bulletin
Issue - 01 - 29th March 2010
1 Medicine Without Borders donation to Little Aid has exceeded 1.54 Million US Dollars !!
Little Aid were pleased to work with Medicine Without Borders on our most recent project to provide useful medication to rehabilitation centers and hospitals in Sri Lanka. Their donation to Little Aid exceeded 1.54 Million US Dollars (distributors price) worth of medication. We can report that the last st delivery arrived in Colombo on 31 December 2009 and is currently being distributed to hospitals in Vavunia, Mannar, Jaffna and Nawalapitiya. Full details of this donation can be obtained from our website (www.littleaid.org.uk ) (Read) 08.04.10
_____________________________________________________________________________________________
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுப்போம். அதற்காக மக்களின் அவலங்களில் அரசியல் செய்வதை நிராகரிப்போம்.
- புளொட் இயக்கத் தலைவர் தி.சித்தாத்தன்
எமது அடிப்படை உரிமைகளுக்கான வழிமுறைகளை முன்னெடுக்கக்கூடிய நடைமுறைக்கு தேவையான அரசியல் கோட்பாடுகளை முன்னெடுப்பதுடன், இன்பத்திலும் துன்பத்திலும் மக்களுடன் இணைந்து மக்களை விட்டகலாது மண்ணைப் பாதுகாத்து செயல்பட்டு வருகின்றோம். வெறும் வாய்ச்சொல்லில் தேசியம் தேடுபவர்கள் தமது நீண்ட அரசியல் வாழ்க்கைக்காகவும் அதனூடான சுயலாபங்களுக்காகவும் நடைமுறைக்கு அப்பாலான எதிர்ப்பு அரசியல் அணுகுமுறைகளை வலிந்து கட்டிக்கொள்வதனால் தமிழர்களின் தேசிய இனப் பண்புகள் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு வருவதையே தொடர்ச்சியாக நாம் கண்டு வந்துள்ளோம் என புளொட் இயக்கத் தலைவர் தி.சித்தாத்தன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் மேலும் தொவித்துள்ளதாவது, பேரினவாதம் எம் நிலங்களை அபகரிக்கவும் எமது மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு தொடர்சியாக இடம்பெயரவும் எமது சமூகக்கட்டமைப்புகளும் இனப்பரம்பலும் சின்னாபின்னப்படவும் “கூடிய நடவடிக்கைகள் எதுவும் எமது தேசியத்தைக் காக்கும் நடவடிக்கைகளல்ல. யுத்தத்தினால் இன்று வன்னியில் ஏற்பட்டுள்ள அழிவுகளைத்தான் 1990ல் வவுனியாவிலும்“ குறிப்பாக வவுனியா நகரிலும் காணமுடிந்தது. (மேலும்) 08.04.10
_____________________________________________________________________________________________
தமிழ் பேசும் மக்கள், முற்போக்கு – ஜனநாயக சக்திகளுக்கே வாக்களிக்க வேண்டும்!
வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)
இந்தத் தேர்தலில் தமிழ் பிற்போக்கு சக்திகளின் பிரதிநிதியான தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடித்து, அதன் மூலம் புலிப் பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தை அரசியல் ரீதியாகவும் பூர்த்தி செய்து, தமிழ் மக்களுக்கு ஒரு புதிய அரசியல் பாதையைத் திறக்கக்கூடிய ஒரு அருமையான சூழல் உருவாகி இருந்தது. கடந்த காலத்தில் புலிகளுக்கு எதிராகவும், அதன் பினாமி அமைப்பான தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு எதிராகவும் போரிட்ட, ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழர் விடுதலைக்கூட்டணி என்பன தமிழ் இனத்தின் சார்பாக ஒரே அணியாக இத்தேர்தலில் போட்டியிட்டிருக்குமாக இருந்தால், பிற்போக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பை இருந்த இடம் தெரியாமல் செய்திருக்க முடியும். வவுனியா நகரசபைத் தேர்தலில் இவ்வாறு ஒன்றிணையதற்கான பாடத்தைப் படித்திருந்தும், தமிழ் ஜனநாயகக் கட்சிகள் அதிலிருந்து கற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் செயல்படத் தவறிவிட்டன. யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒரே அணியாக இணைந்து போட்டியிட்டிருக்க வேண்டிய ஈ.பி.டி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழர் விடுதலைக்கூட்டணி, சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்பன பல்வேறு அணிகளாகப் பிரிந்து போட்டியிடுவதின் மூலம், அவாகள் பிற்போக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள சந்தர்ப்பத்தை, தேர்தலின் பின்னர் அவர்களால் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். அதன் பின்னராவது அவர்கள் தமது தவறையும், நிலைமையையும் உணர்ந்து, வரப்போகும் மாகாணசபைத் தேர்தலையாவது ஒன்றிணைந்து எதிர்நோக்க தயாராவது அவசியம். (மேலும்) 07.04.10
_____________________________________________________________________________________________
பொதுத் தேர்தல் நாடெங்கும் உச்ச பாதுகாப்பு
- காலை 7 முதல் மாலை 4 மணிவரை வாக்களிப்பு
- 196 பேரை தெரிவு செய்ய 7620 பேர் களத்தில்
- மோசடி, குழப்பம் நிரூபணமானால் வாக்கெடுப்பு இரத்து
- 58,700 பொலிஸ், அதிரடிப்படையினர் கடமையில்
ஏழாவது பாராளுமன்றத் தேர்தல் (08) நடைபெறவுள்ளது. வாக்களிப்பு காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை இடம்பெற உள்ளதோடு நேரகாலத்துடன் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் சகல வாக்காளர்களையும் கேட்டுள்ளார். 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 196 உறுப்பினர்களை நேரடியாக தெரிவு செய்வதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. 29 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட உள்ளனர். கடந்த பெப்ரவரி ஒன்பதாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பெப்ரவரி 19ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 36 அரசியல் கட்சிகளும் 301 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இவைகளின் சார்பாக 7620 பேர் போட்டியிடுகின்றனர். 2008 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் தேர்தல் நடைபெறுவதால் இம்முறை ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். (மேலும்) 07.04.10
_____________________________________________________________________________________________
இலங்கை அரசியலின் எதிர்காலம்
நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஒரு சிறு முற்குறிப்பு
- கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் நிலவரம் எப்படியிருக்கிறது என்று நண்பர்கள் பலரும் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுடைய கேள்விக்குப் பின்னால் இருக்கும் ஆர்வத்தை எவரும் புரிந்து கொள்ளலாம். காரணம் விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலாக இது இருக்கிறது என்பது ஒன்று. இதை இன்னும் சற்று ஆழமாகப் பார்த்தால் அல்லது விரிவு படுத்தி நோக்கினால், ஆயுதந்தாங்கிய அரசியல் முடிவுக்கு வந்த பின்னர் நடக்கின்ற முதலாவது தேர்தலாக இது உள்ளது இன்னொன்று. ஆகையால் இந்தத் தேர்தல் குறித்து உன்னிப்பாக பலரும் நோக்குகிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயமும் இருக்கிறது. அது தமிழ்த் தேசியவாதிகள் பிரிந்து, உடைந்து, சிதறி மூன்று நான்கு அணிகளாகப் பிளவு பட்டு நின்று போட்டியிடுகின்ற சூழலில் நடக்கின்ற தேர்தலாகவும் இந்தத் தேர்தல் உள்ளது. எனவே இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தலின் முடிவுகள் எப்படி அமையப் போகின்றன? இப்போது களநிலவரம் எப்படியிருக்கிறது? யார் யார் வெற்றி பெறுவார்கள்? எந்தெந்தத் தரப்புகள் வெற்றி பெறக்கூடும்? என்ற பலவிதமான கேள்விகளும் இவைபற்றி அறியும் ஆர்வமும் பலரிடமும் காணக்கிடைக்கிறது. (மேலும்) 07.04.10
_____________________________________________________________________________________________
நாடாளுமன்றில் இன்று 53 மேலதிக வாக்குகளால் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றம்
இன்று காலை கூடிய நாடாளுமன்ற அமர்வின் போது 53 மேலதிக வாக்குகளால் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும் எதிராக 05 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 2 வாக்குகளையும் அளித்திருந்தன. ஐக்கியத் தேசியக் கட்சி சபைக்கு சமூகம் அளிக்கவில்லை.
_____________________________________________________________________________________________
யேசுநாதரின் தந்தை தச்சுத் தொழிலாளி அல்ல! புதிய புத்தகம் கூறும் அரிய தகவல்கள்
லண்டன்,ஏப்.3: யேசுநாதரைப் பற்றி இதுவரை நாம் அறிந்துள்ள சில தகவல்கள் சரியல்ல என்று ஆடம் பிராட்போர்டு என்ற பைபிள் ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார். ஜீசஸ் டிஸ்கவரி என்ற புதிய புத்தகத்தில் அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார். இதுவரை நமக்குக் கூறப்பட்டுள்ளதைப்போல யேசுநாதர் தச்சுத் தொழிலாளியின் மகன் அல்ல என்றும் நன்கு படித்த சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் வாழ்ந்த கட்டடக் கலை நிபுணரின் மகன் என்றும் அவர் தெரிவிக்கிறார். கிரேக்க மொழியிலும் ஹீப்ரு மொழியிலும் யேசுநாதரின் வாழ்க்கை பற்றி எழுதப்பட்டிருந்த பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளைப் படித்த பிறகு, மொழிபெயர்ப்பாளரின் தவறு காரணமாக யேசு குறித்து இப்படிப்பட்ட தவறான தகவல்கள் எழுதப்பட்டு ஆவணமாகிவிட்டதாக அவர் தெரிவிக்கிறார். கிரேக்க மொழியில் டெக்டான் என்று சொன்னால் தச்சுத் தொழிலாளி என்றும் அர்த்தம், கட்டடக் கலை நிபுணர் என்றும் அர்த்தம். அவர் தச்சுத் தொழிலாளி அல்ல கட்டடக் கலை நிபுணர்தான் என்பதற்கு மேலும் சில ஆதாரங்களைத் தெரிவிக்கிறார் ஆடம் பிராட்போர்டு. சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தும் செல்வாக்கும் ஜோசப்புக்கு இருந்ததால்தான் அவருடைய மகனான யேசு நாதரால் ஆலயத்தில் இருந்த மத குருமார்களைக் கேள்வி கேட்க முடிந்தது என்கிறார். (மேலும்) 06.04.10
_____________________________________________________________________________________________
உலர் உணவுப் பொருட்களை விற்றுப் பணமாக்கும் அகதிகள் : வவு. தடுப்பு முகாமில் அவலம்
வவுனியா தடுப்பு முகாம்களில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உலர் உணவு பொருட்களைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் பரிதாப நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள், பணவசதி இன்றி பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உலருணவுப் பொருட்களில் அரிசி, மா போன்றவற்றை மிகவும் குறைந்த விலைக்கு வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விற்பனை செய்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. 1 கிலோ மா கடைகளில் 75 முதல் 80 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. எனினும் வறுமையின் காரணமாக 1 கிலோ 30 முதல் 45 ரூபா வரை அவர்கள் விற்பனை செய்கின்றனர். இது தொடர்பாக விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் தெரிவிக்கையில், "எங்களிடம் பணம் இல்லை. உணவுப்பொருட்களை மட்டுமே தருகின்றனர். அவசரத் தேவைகளுக்கும் மருத்துவ வசதிகளுக்கும் எமக்குப் பணம் தேவை. அதனால்தான் இவற்றை விற்று வருகின்றோம்" என்றார்.
_____________________________________________________________________________________________
பொதுத்தேர்தலின் பின்னர், சுரேஸ், அடைக்கலநாதன் ஆகியோரை ஓரம் கட்ட சம்பந்தன் குழு முயற்சி?
- சானா சூனா
 எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனையும், ரெலோ இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதனையும் ஓரம் கட்டும் திட்டத்தில் இருப்பதாக, சம்பந்தனுடன் நெருக்கமான தொடர்புடைய வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. புலிகளால் கடந்த பொதுத்தேர்தலின் போது நியமிக்கப்பட்ட பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை, பலருடைய எதிர்ப்புகளுக்கு மத்தியில் துணிந்த ஓரம்கட்டி, தமது கட்சிக்கும் புலிகளுக்கும் இனிமேல் தொடர்புகள் எதுவும் கிடையாது என்பதை நிரூபித்து, இலங்கை - இந்திய அரசுகளின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுக் கொண்ட சம்பந்தன், தற்பொழுது முன்னாள் ஆயுதக்குழுக்கள் எவற்றுடனும் தமக்கு தொடர்பு இல்லை என்பதை நிரூபிக்க தருணம் பார்த்துக் காத்திருப்பதாகத் தெரிய வருகிறது. சம்பந்தனின் முன்னைய நெருங்கிய சகாவும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான திரு.வீ.ஆனந்தசங்கரி, முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்களான புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். (நாபா) அணி என்பனவற்றுடன் ஒரு கூட்டு அமைத்திருந்ததும், பின்னா தற்போதைய பொதுத்தேர்தலக்கு முன்னர் விடுத்த ஒரு அறிக்கையில், தாம் இனிமேல் எந்தவொரு முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கத்துடனும் தொடர்பு வைக்கப்போவது இல்லை எனவும் அறிவித்துவிட்ட ஒரு சூழலில், சம்பந்தனும் இவ்வாறான ஒரு மன நிலையில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. (மேலும்) 06.04.10
_____________________________________________________________________________________________
அமைதி வாழ்வா? அழிவுப் பாதையா? தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும். அந்தகாரத்துக்கு இட்டுச் செல்ல தமிழ்க் கூட்டமைப்பு முயற்சி
எம். மகாதேவன்
இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்ற தறுவாயில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்கள் தமிழ் மக்களை மீளவும் அதல பாதாளத்துக்குள் தள்ளி விடுமோவென அச்சம் கொள்ள வைத்துள்ளன. ‘வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறியது’ போலவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல ஆரம்பித்துள்ளது. சுமார் மூன்று தசாப்தகாலமாக வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் இந்த நாட்டில் அனுபவித்த கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை. திரும்புமிடமெல்லாம் அழிவுகளும் அவலங்களுமாக நரகலோக வேதனையை அனுபவித்து தற்போது போர் ஓய்ந்த நிலையில் வடக்கு, கிழக்குக் தமிழ் மக்கள் அமைதிக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்துள்ளார்கள். இழந்தவைகள் ஆயிரமாயிரம். இவற்றில் விலைமதிக்க முடியாத உயிர்கள் பல்லாயிரம். இத்தகையை அவல நிலையின் சூத்திரதாரிகள் தமிழ் தலைவர்களே. மிதவாதத் தமிழ் தலைமையும் தீவிரவாதத் தமிழ் தலைமையும் தாம் எங்கே செல்கிறோம், தமது இலக்கு என்ன, அதனை அடையவேண்டிய மார்க்கங்கள் யாவை, தமது பயணத்தில் உண்மையான நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்பவைபற்றியெல்லாம் தகுந்த விதத்தில் மதிப்பிடாது ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ என்பது போல எவ்வித தீர்க்கதரிசனமோ ராஜதந்திரமோ இல்லாது செயற்பட்டதன் காரணமாகவே அழிவுகள், அவலங்களைச் சந்தித்ததோடு எத்திசையில் செல்வதெனப் புரியாது நிற்கின்ற நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது. (மேலும்) 06.04.10
_____________________________________________________________________________________________
வட்டுக்கோட்டை வேண்டாம் வாழ்வதற்கு உதவுங்கள்:
- அவுஸ்திரேலியாவிலிருந்து நடேசன்
வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றி ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் பேசுபவர்களில் பலர் தமிழர் வரலாறு அறிந்தவர்களோ அல்லது இதன் பின்விளைவுகளை புரிந்தவர்களோ அல்ல. இலங்கை அரசாங்கம் என்ற பாரிய இயந்திரத்தில் ஏற்பட்ட காழ்ப்புணர்வுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எதிர்வினையாக நினைக்கிறார்கள்;. அரசியலை புரிந்து கொள்ளாமல் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கடந்த முப்பது வருடமாக விதைத்த இனவாத விதையை விழுங்கியவர்கள்;;. இவர்களைப் போன்ற இனவாதிகள் சிங்கள சமூகத்திலும் உண்டு. இன வாதத்தை இனவாதத்தால் எதிர்கொள்ள முடியாது. இந்த உண்மையை மகாத்மா காந்தியும் நெல்சன் மண்டேலாவும் நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள். மிகவும் சிறிய எண்ணிக்கையில் இருந்த ஆதிக்க எதிரிகளை வெறுக்காமல் அன்பால் அகிம்சையால் வென்று சிறந்த முன்உதாரணங்களை உருவாக்கி இருக்கிறார்கள். இதேவேளையில் பாரிய ஆதிக்க சக்தியை வென்று காட்டினார் மாட்டின் லூதர் கிங் எனும் கறுப்பு அமெரிக்கர். வெளிநாடுகளில் கடந்த பல வருடங்களாக இறுதிப் போர் நிதி, தமிழ் அகதிகள் நிதி மற்றும் மருத்துவ நிதி இடையிலே சுனாமி காலத்து நிதி இப்படி பல வகைகளில் தமிழ் மக்களிடம் சேகரித்த நிதிகள் யாவும்; விடுதலைப்புலிகள் போரில் அழிந்த மாதிரி வெளிநாடுகளில் இல்லாமல் போக சாத்தியம் இல்லை. விடுதலைப்புலிகள் ஒரு சட்டரீதியான நிறுவனம் இல்லாதபடியால் பல ஆதரவாளர்களின் பெயரில்தான் இந்த நிதி பொருளாகவோ பணமாகவோ இருக்கவேண்டும். (மேலும்) 06.04.10
_____________________________________________________________________________________________
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா) சித்தார்த்தன் தலைமையிலான தமிழ்ஈழ விடுதலை கழகம் ஆகிய இரு கட்சிகள் ஒன்று சேர்ந்த கூட்டணியை தேர்ந்தெடுப்பதே சிறந்தது.
மோகன்
அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே!
மூன்று கால சகாப்த்தத்துக்கு மேலான வேதனைகள், சோதனைகள், கோபங்கள், பேதங்கள், பொறாமைகள், காட்டிக்கொடுப்புகள், அமைதியின்மைகள் எல்லாமே இன்று ஓய்ந்து போய்க்கொண்டிருக்கின்றன.வசந்தத்தை நோக்கி எமது வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கின்றது. குண்டுகளின் இரைச்சலுக்கு பதிலாக குயில்களின் ஓசை தெளிவாக கேட்;கின்றன. இப்போதல்லெல்லாம் வீதியோர நாய்கள் சப்பாத்து ஓசை கேட்டு குலைப்பதில்லை. இராணுவ வாகனங்கள் பவனி வருவதில்லை, பங்கர் கிடங்குகள் குப்பைகள் புதைப்பதற்க்கு மட்டும் பயன்படுகின்றன, எமது நிலங்கள் மிதி வெடிகளுக்கு விடை கொடுத்து வண்ணச்செடிகளுக்கு வழி விட்டு நிற்க்கின்றன. மரணங்கள் பழையபடி இயற்க்கையின் இயல்புக்கு திரும்புகின்றன. திருவிழாக்கள், திருமண கொண்டாட்டங்கள் இழந்து போன எமது சந்தோசங்களை மீட்டுத்தர தொடங்கியிருக்கின்றன. மிக விரைவில் யாழ்தேவி புகையிரத்தின் அதிகாலை கடகட ஓசைகள் கூட எமது காதுகளில் கேட்க்க தொடங்கிவிடும். பள்ளி சென்ற மாணவர்கள் மறுபடியும் வீடு திரும்புவார்கள் என்ற நிம்மதியுடன் பெற்றவர்கள் பெருமூச்சு விடத்தொடங்கியிருக்கிறார்கள். மொத்தத்தில் இழப்புக்களின் வடுக்களை தவிர மக்கள் தங்கள் எதிர்கால கனவுகளுடன் பயணிக்க தொடங்கியிருக்கிறார்கள். (மேலும்) 06.04.10
_____________________________________________________________________________________________
மட்டக்களப்பில் கடும் போட்டி நிலவுகிறது
- பி.பி.சி. செய்தி
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இறுதிக்கட்ட தேர்தல் நடவடிக்கைகள் சுறுசுறுப்படைந்துள்ளன. வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் புதிய உத்திகளை பின்பற்றி அழுத்தமான வாக்குறுதிகளை அளித்து தமது பிரசாரங்களை மேற்கொண்டனர். பல கட்சிகளும் பெருமளவிலான வேட்பாளர்களும் போட்டியிடுவதால் வாக்காளர்கள் குழம்பிய நிலையில் உள்ளனர் என்று தமிழோசையின் செய்தியாளர் கூறுகிறார். மாகாண சபைக்கு அதிக அதிகாரம் என்பதே தமது முக்கிய கோரிக்கை என கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூறுகிறார். அதிகாரம் மிக்க மாகாண சபையை பெற்றுக் கொள்வது, அழிந்து போயுள்ள கிழக்கு மாகாணத்தை மிக வேகமாக அரசோடு சேர்ந்து அபிவிருத்தி செய்வது என்கிற நிலைப்பாட்டை வாக்காளர்களிடம் வலியுறுத்தி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வாக்கு கேட்பதாகவும் சந்திரகாந்தன் தெரிவிக்கின்றார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களையே இந்தத் தேர்தலில் பிரதான போட்டியாளர்களாக தங்கள் கட்சி கருதுகின்றது என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார். (மேலும்) 06.04.10
_____________________________________________________________________________________________
Letter to His Excellency Mahinda Rajapaksa, President of Sri Lanka
- V.Andasangaree President -Tamil United Liberation Front.
There are a lot of matters I wish to bring to your notice. I am so sorry to say that Mahinda cinthanaya had been polluted with the cinthanaya of many others to the extent of mahinda cinthanaya losing its originality, with the end of the war, people expected many changes to take place. But unfortunately for them, nothing happened to their expectation. Their way of life has not changed. They did not see the promised land of hope. But contrary to this they faced only disappointment. They claim that you promised to get them all what they lost. But they hardly got anything. They lost all their possessions and many of their dear ones. (Read) 06.04.10
_____________________________________________________________________________________________
உண்ணாவிரதம் இருந்த பௌத்த பிக்குகள் பொலிஸாரால் பலவந்தமாகக் கலைப்பு
ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி பிக்குகள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்று திங்கட்கிழமை பிற்பகல் பொலிஸார் பலவந்தமாக கலைத்தனர். இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சரத் பொன்சேகாவை உடனடியாக விடுவிக்கக் கோரி கடந்த மூன்று நாட்களாக பிக்குகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை முதல் கோட்டைப் பகுதியில் சுமார் 200 இற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பிக்குகள் அமைத்திருந்த தற்காலிக கூடாரங்களைப் பலவந்தமாக பொலிஸார் அகற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததால் ஊடகவியலார்கள் பலரும் அங்கு கூடியிருந்தனர். இந்நிலையில் பிற்பகல் வேளையில் அங்கு வந்த பொலிஸார், பிக்குகள் அமைத்திருந்த கூடாரத்தை அகற்றியதுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த பிக்குகளைப் பலவந்தமாகப் பஸ்களில் ஏற்றிச் சென்றனர். அதனால் பெரும் பதற்றம் நிலவியது, எனினும் சற்று நேரத்தில் நிலைமை வழமைக்குத் திரும்பியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
_____________________________________________________________________________________________
இடம்பெயர்ந்த மக்களுக்கு இராணுவத்தின் நேசக்கரம்
சாப்பாடு இல்லாமல் போனாலும் சரிஞ்சு கிடக்க ஒரு இடம் முக்கியம்''
- யாழ்ப்பாணத்திலிருந்து விசு கருணாநிதி
( இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்துக்கு இராணுவமும் தன் பங்கைச் செலுத்துகின்றது. வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்காக அவர்களின் சொந்தக் காணிகளில் இராணுவத்தினால் வீடுகள் நிர்மாணித்துக் கையளிக்கப்படுகின்றன. அண்மையில் ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது சில வீடுகளைக் கையளித்தது தெரிந்ததே. மொத்தம் 680 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. நிர்மாண வேலைகள் பூர்த்தியடைந்த வீடுகளைப் பற்றியதும் அவ்வீடுகளின் பயனாளிகளினது உணர்வலைகள் பற்றியதுமான தொகுப்பு.) “நாங்கள் இப்பிடி ஒரு வீட்ட இனிமேல் காலத்திலை கட்டமாட்டம். நாங்கள் வந்திருக்கிற கஷ்டத்துக்கு எங்களால இப்பிடிச் செய்ய ஏலாது. ஒரு நாளைக்கு 100, 150, 200 உழைச்சு இந்த வீட்ட கட்டமாட்டம். அரசாங்கம் கட்டித் தாறதவிட, மக்களுக்குச் செய்ய வேணுமெண்டு இவையளுக்கு ஓர் உணர்வு இருந்தது பெரிய விசயம். இத நாங்கள் சாகும் வரை மறக்கமாட்டம்.” சந்தோஷக்கண்ணீர் விழியில் முட்ட நெகிழ்ந்துபோகிறார் கிருஷ்ணமூர்த்தி. வயல் வெளியில் காவலுக்காக அமைக்கப்படும் சிறு கொட்டிலிலும் பார்க்க குறுகிய ஓர் இடத்தில் மனைவி, நான்கு பிள்ளைகளுடன் சுருண்டு கிடந்தவருக்கு இராணுவத்தினர் அமைத்துக் கொடுத்திருக்கும் வீடு நிம்மதியைத் தந்திருக்கிறது. (மேலும்) 05.04.10
_____________________________________________________________________________________________
பிரிட்டன் அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி நீக்கம்
பிரிட்டனில் விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி என பதிவு செய்யப்பட்டிருந்த அரசியல் கட்சியை அந்நாட்டு தேர்தல் ஆணையகம் தேர்தல் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளது. இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி என்ற இக்கட்சி கொண்டுள்ள தொடர்புகளை விசாரணைகளை மேற்கொண்டிவரும் தேர்தல் ஆணையகம் தேர்தல் இடாப்பிலிருந்தும் இக்கட்சியை தற்காலிகமாக நீக்கியுள்ளது. பிரிட்டனில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், பயங்கரவாத இயக்கமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள போதிலும் அங்கு நடைபெற இருக்கும் உள்ளூர் மற்றும் தேசிய தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு இக்கட்சியின் குழுத்தலைவர் 69 வயதான நடராஜா பாலசுப்பிரமணியம் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தம்மை பாலா என்று அறிமுகம் செய்து கொண்ட பாலசுப்பிரமணியம், லண்டன் குறெய்டன் கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், விடுதலைப்புலிகள் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்துவதை நியாயப்படுத்தி பேசினார். (மேலும்) 05.04.10
_____________________________________________________________________________________________
சட்டத்தின் முன் அனைவரும் சமம்; நான் கூட சிறையில் இருந்தவன்தான்
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
சட்டதிற்கு முன் அனைவரும் சமமானவர்களே. அந்த சட்டத்தில் தலையிட நான் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (3ம் திகதி) தெரிவித்தார். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 18 லட்சம் மேலதிக வாக்குகளால் என்னை வெற்றிபெறச் செய்வதற்கு பங்களிப்பு செய்த உங்களுக்கு முதற்கண் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். அன்று என்னை நீங்கள் வெற்றி பெறச் செய்திராவிட்டால் இன்று நான் 2 x 2 கூட்டிலோ அல்லது 2 x 6 குழியிலோதான் இருந்திருப்பேன். நான் 2 x 2 கூட்டில் இருந்திருக்கின்றேன். ஆனால் அங்கு தொலைபேசி வசதி இருக்கவில்லை. எனது தாயார் சுகவீனமுற்றிருந்த போதிலும் அவரது இறுதிக் கிரியைகளுக்காகவே என்னை இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். அதுவும் கைவிலங்கு போட்டே அழைத்துச் சென்றனர். அன்று ஜனநாயகம் செத்திருந்தது. அந்த நிலை இப்போது இல்லை. நாம் ஜனநாயக விழுமிய நெறிகளின்படி தேர்தல்களை நடத்துகின்றோம். ஜனாதிபதித் தேர்தலைக் கூட இரு வருடங்களுக்கு முன்னரே நடத்தினோம். நாம் இந்த நாட்டின் மனித உரிமைகளுக்காக கதைத்தவர்கள் மட்டுமல்லாமல் அதனை பாதுகாக்கவும் செயற்பட்டவர்கள். (மேலும்) 05.04.10
_____________________________________________________________________________________________
Welcome, Sinhala brother!
By Upali Gajanayake BBC Sinhala service, Jaffna
I am seeing Jaffna again only after twenty three years.
For the first time in my life, I entered the great ancient city in 1986 with the late Vijaya Kumarathunga and his political and media entourage. On that visit we entered the heart of the Jaffna dream city, viewing it through tall coconut trees and growing vegetable beds around Tamil Tiger training camps. That historical tour splashed over front pages of the local press and international media was organised by the Tamil Tigers who were in control of that Tamil dominated northern neck of land. Now, flying to Jaffna with journalists on a state sponsored tour, I am seeing a destroyed paradise through the small window of a Sri Lankan air force plane past roofless, somewhat beheaded trees and destroyed walls. (Read) 05.04.10
_____________________________________________________________________________________________
வாக்களிப்பது எப்படி? _
தேர்தலில் வாக்களிப்போர் தாம் விரும்பும் கட்சியின் சின்னத்துக்கு வாக்களிப்பது அவசியமாகிறது. கட்சியின் சின்னத்துக்கு வாக்களிக்காமல் தாம் விரும்பும் வேட்பாளர்களின் இலக்கங்களுக்கு மட்டும் வாக்களித்தால் அந்த வாக்குச் சீட்டு செல்லுபடியற்றதாகவே கருதப்படும். கட்சிக்கு வாக்களித்து விட்டு அதன் பின்னர் தாம் விரும்பும் அதே கட்சியின் வேட்பாளர்களில் ஒவருக்கு மட்டும் தனது வாக்கை அளித்தாலும் அது செல்லுபடியான வாக்காகவே கருதப்படும் விரும்பினால் மேலும் இருவ ருக்கு வாக்களிக்க முடியும்.
_____________________________________________________________________________________________
13-வது திருத்தச்சட்டமூலத்தை அடிப்படையாக வைத்து இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் - ஊடகவியலாளர் மாநாட்டில் வரதராஜப்பெருமாள் தெரிவிப்பு
13ஆவது திருத்தச்சட்டத்தை ஓர் ஆரம்பமாக வைத்து அதிகார பரவலாக்கல் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஆட்சியாளர்கள் வழங்கவேண்டும் என வடக்குக் கிழக்கு மாகாணமுன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். இந்தியாவிலிருந்து நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த வடக்குக் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள் நேற்று ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணியின் யாழ். அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். இவ் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கல்வியாளர்கள், வர்த்தகர்கள், பத்திரிகையாளர்கள், அரச ஊழியர்கள், இளைஞர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தை நோக்கி முன்னேறவேண்டும். யாரும் எதையும் சும்மா தரமாட்டார்கள். எமக்கு நன்மை செய்ய முன்வருபவர்களுடன் இணைந்து எமது சமுதாயத்தை முன்நோக்கி நகர்த்த வேண்டும். வன்முறைகளால் பலன் இல்லையயன கண்டு கொண்டோம். (மேலும்) 04.04.10
_____________________________________________________________________________________________
''வாக்களிக்க முடியாதுள்ளது'' -கவலைகள்
இலங்கையில் வன்னியிலிருந்து மீள் குடியேற்றத்திற்கு என கிழக்கு மாகாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட குடும்பங்கள் பலவற்றுக்கு இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. வடக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேற்றத்திற்காக கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்து விட்ட போதிலும் அவர்களின் வாழ்க்கை நிலை இன்னமும் வழமைக்கு திரும்பாததே இதற்கு காரணமாக உள்ளது. தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. ஆனால் பலருக்கு வாக்களிக்க முடியாதுள்ளமை வருத்தமளிக்கிறது இந்தக் குடும்பங்களைப் பொறுத்தவரை, ஒரு பகுதியினரின் வாக்குககள் வன்னியிலும் மற்றுமொரு பகுதியினரின் வாக்குகள் கிழக்கு மாகாணத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் தங்கியுள்ள இந்த மக்களில் சிலரை எமது செய்தியாளர் சந்தித்த போது, தமக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து அவர்கள் விசனம் தெரிவித்தனர்.வேட்பாளர்கள் வாக்குகளைப் பெறுவதில் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர தமது அடிப்படை தேவைகளை தீர்ப்பது பற்றி அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை என இந்த மக்கள் கூறுகின்றனர். தமக்கு இருக்கக்கூடிய வாக்குரிமையை பயன்படுத்தி பொருத்தமான தமிழ்த்தலைமை ஒன்றை தேர்ந்தெடுக்க முடியாதுள்ளமை காரணமாக கவலையடைவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். - பி.பி.சி. செய்திகள்
_____________________________________________________________________________________________
யாழ் ஆய்வறிவாளர் அணியம்
எமது வாக்காளரிற்கு உதவ எமக்கு உதவுங்கள்
எமது மக்களுள் ஒரு பிரிவினர் - ஏறத்தாழ ஒரு லட்சம் மக்கள் - பாராளுமன்ற அரசியல் முறையில் எவ்வித பங்குபற்றுதலுமின்றி வெறும் பார்வையாளர்களாக இருந்துவருவது பரகசியமானதல்ல. இவற்றுடன், இம்முறை, அளவுக்கு அதிகமான அபேட்சகர்கள் தேர்தலில் தெரிவாக ‘அங்கலாய்ப்பது’, எமது மக்களுள் இன்னுமொரு பிரிவையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இவைக்கு ‘பல’ காரணங்களாகப் பகரப்படுகின்றன. இச் சூழ்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவுசெய்யவேண்டிய தேவை ஏன் என்பதுடன், பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகும் ஒருவருக்கு தேவையான தகுதிகள் என்ன என்பதும் எமது மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது. படிப்பு, தலைமைத்துவ பண்பு, இன விடுதலை, இலட்சியப் பற்று, துணிவு, தொலைநோக்கு என்பவை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாவதற்கு தேவையான பிரதான தகுதிகள் என பிரச்சாரப்படுத்தப்படுகின்றன. ஆனால் நல்ல ஒரு பாராளுமன்ற உறுப்பினராவதற்கு இவைகளுள் சில பிரதான தகுதிகளா என்பது கேள்விக்குரியது. உதாரணமாக, பாராளுமன்ற உறுப்பினராவதற்கு படிப்பு ஒரு தகுதியாயின் எமது மக்களுள் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு தகுதிபெறுவார்கள். (மேலும்) 04.04.10
|