a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி             உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்      எங்கள்தேசம்         சலசலப்பு         நோயல்நடேசன்     விடிவெள்ளி         எங்கள்பூமி              ரீவடை இணையம்        பார்வை             தமிழ்யுகே
 

Asientribune
Lines-Magahzine
Srilankaguardian
The lka academic
Tamil Week            sldf
Uthr                
        

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                          05.10.2010

வவுனியா நிவாரண கிராமத்தில் கருணாவுக்கு  வரவேற்பு: எஞ்சியுள்ளவர்கள் விரைவில் மீள்குடியேற்றம்

karuna-1அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டதன் பின்னர் முதல்முறையாக வவுனியா நிவாரணக் கிராமத்திற்கு நேற்று விஜயம் செய்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா அம்மானை) மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள எஞ்சியுள்ள மக்களையும் வெகு விரைவில் மீளக்குடியமர்த்துவதுடன் வெளிநாடுகளின் உதவியுடன் சொந்த வீடுகளை அமைத்துக் கொடுக்கவும் தான் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கருணா அம்மான் தெரிவித்தார். மனிக்பாம் நிவாரணக் கிராமத்திற்கு நேற்று வருகை தந்திருந்த இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உதவித்தூதுவரையும் பிரதி அமைச்சர் கருணா அம்மான் சந்தித்துப் பேச்சு நடத்தினார். மீள்குடியேற்றப்பட்ட மற்றும் மீள்குடியேறவுள்ள மக்களின் விபரங்கள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாகவும் பிரதியமைச்சர் கருணா அம்மான் நேற்றுத் தெரிவித்தார். நிவாரணக் கிராமத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்ட பிரதி அமைச்சர் கருணா அம்மான் மக்கள் தங்கியுள்ள விடுதிகளுக்குள்ளும் சென்று பார்வையிட்டார்.  (மேலும்)  01.05.10- Photo. Dailymirror

____________________________________________________________________________________________

இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி நிர்வாகிகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க யோசனை

ranil-2கொழும்பு, ஏப். 30: இலங்கையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யுஎன்பி), தனது கட்சிக்கான நிர்வாகிகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க உள்ளார். இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, கட்சியில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் விக்கிரமசிங்க உள்ளார்.  ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் நிலை அமைப்புக்கான நிர்வாகிகள் அக் கட்சியின் ஊழியர்களில் இருந்து நியமிக்கப்படுகின்றனர். இந்த முறையை மாற்றி, தேர்தல் மூலம் கட்சி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.  விக்கிரமசிங்கவை கட்சியின் மூத்த உறுப்பினரும், மறைந்த இலங்கை அதிபர் பிரேமதாசவின் மகனுமான சாஜித் பிரேமதாச சந்தித்து இந்த யோசள்ள்யைத் தெரிவித்தார்.  இனிவரும் காலங்களில் இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச் செய்வதற்கான சில யோசனைத் திட்டங்களை விக்கிரமசிங்கவிடம் விளக்கிக் கூறியதாக சாஜித் பிரேமதாச தெரிவித்தார். (மேலும்)  01.05.10

____________________________________________________________________________________________

மே தினம்

maydayதங்கள் உதிரத்தை வேர்வையாகச் சிந்தி உழைத்து மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள், 8 மணிநேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே மே தினமாகும்! எல்லோரும் நினைப்பதுபோல மே தினம் என்பது முதன் முதலில் பொதுவுடமை புரட்சி நடந்த ரஷ்யாவிலோ அல்லது அதன் பிறகு பொதுவுடமை நாடான சீனாவிலோ உருவாகவில்லை. மாறாக, பொதுவுடமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டிவரும் அமெரிக்காவில்தான் முதன் முதலில் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டது. இன்றிலிருந்து 125 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் அந்த உரிமை கோரிக்கை போராட்ட வடிவத்தைப் பெற்றது. ஒவ்வொரு நாளும் 10மணிநேரம், 12மணிநேரம், 14மணிநேரம் என்று உழைப்பாளர்களும், பணியாளர்களும் வரையறையற்று வேலை வாங்கப்பட்டு வந்த அந்த நாளில் 8மணிநேரம் மட்டுமே பணியாற்றுவோம் என்றும், வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கவேண்டும் என்றும் கோரி தொழிலாளர்கள் முதன்முதலாக 1880-ம் ஆண்டு குரல் கொடுத்தனர். (மேலும்)  01.05.10

____________________________________________________________________________________________

ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்ற உழைக்கும் மக்களின் பங்களிப்பு அவசியம்- மே தினச் செய்தியில் ஜனாதிபதி

rajapaksha-1சர்வதேச தொழிலாளர் தினமான இன்று உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களோடு பெருமையோடு இணைந்து கொள்ளும் எமது நாட்டு உழைக்கும் மக்களுக்கு நான் இவ்வாழ்த்துச் செய்தியை விடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எமது நாட்டுக்கும் அதன் உழைக்கும் மக்களுக்கும் மிகப் பெரும் சவாலாக இருந்து வந்த பயங்கரவாதத்தை நாம் தற்போது வெற்றி கொண்டுள்ளோம். இச்சவாலை வெற்றிகொள்வதில் எமது நாட்டின் உழைக்கும் மக்கள் பாரியதொரு பக்கபலமாக இருந்தார்கள் என்பதை பெருமையோடு குறிப்பிட வேண்டும். ஜனாதிபதி தனது வாழ்த்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது :-பயங்கரவாதத்தினால் தடை செய்யப்பட்டிருந்த சகல அபிவிருத்தி மார்க்கங்களும் இன்று எமது நாட்டு மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உழைக்கும் மக்கள் இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினத்தை நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான சூழ்நிலை குறித்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர். (மேலும்)  01.05.10

____________________________________________________________________________________________

தமிழகம் வர பிரபாகரன் தாயார் விருப்பம்: முதல்வருக்கு கடிதம்

'தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை பெற, மலேசியாவில் இருந்து திருச்சி வருவதற்கு, இந்திய தூதரகத்தின் மூலமாக ஏற்பாடு செய்து தருமாறு' விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி, முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி, சிகிச்சைக்காக சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் இறங்க அனுமதிக்கவில்லை. அப்படியே மலேசியாவுக்கு திருப்பி அனுப்பினர். சட்டசபையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த முதல்வர் கருணாநிதி, 'பார்வதி தமிழகத்தில் சிகிச்சை பெற விரும்பினால், அதை தமிழக அரசிற்கு தெரிவிக்கலாம். அவரது கோரிக்கை மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டு, சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார். மருத்துவ சிகிச்சை பெற உதவும்படி, முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து, மலேசியாவில் இருந்து பார்வதி கடிதம் எழுதியுள்ளார். (மேலும்)  01.05.10

____________________________________________________________________________________________

புலிகளின் சர்வதேச வலையமைப்பை முறியடிக்க அடுத்தகட்ட நடவடிக்கை: ஆணையிறவில் பாதுகாப்புச் செயலாளர் தகவல்

Gothapayaபுலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலங்கை தொடர்பாகவும் தமிழ் மக்கள் தொடர்பாகவும், தவறான தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை ராஜதந்திர மட்டத்தில் முறியடிக்கப்பட வேண்டும்.நாடு கடந்த தமிbழ அரசு ஒன்றை அமைப்பதற்காக முயற்சி மற்றும் உலகத் தமிழர் பேரவை, புலம் பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு என்பவற்றின் ஊடாகத்தான் பிரபாகரனின் நிலைப்பாட்டை முன்னெடுக்க ஒரு சிறிய குழு முயற்சித்து வருகிறது. புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தவும் இந்த வலையமைப்பை முறியடித்து இல்லாதொழிப்பதற்கும் எமது வெளிநாட்டமைச்சுக்கு பாரிய பொறுப்பிருக்கிறது. எனவே, வெளிநாட்டமைச்சின் ஊடாகவும், இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும். மலேஷிய நாட்டுடன் நாம் புலனாய்வுத்துறையுடனும், இராஜதந்திர உறவின் ஊடாகவும் புலம்பெயர்ந்த மக்களுக்கு தெளிவுபடுத்தியதன் காரணமாகத்தான் அந்த நாட்டிலிருந்து சில பயங்கரவாதிகளை கைது செய்ய முடிந்தது என்றும் தெரிவித்தார். இராஜதந்திர மட்டத்தில் தமிழ் மக்களுக்கு பொய்ப்பிரசாரம் தொடர்பாக முறியடித்து வரும் பட்சத்தில்தான் புலம்பெயர்ந்தவர்கள் இன்று இலங்கையில் முதலீடு செய்யவும் முன்வந்துள்ளனர். இது எமக்கு நல்ல உதாரணமாகக் கொள்ள முடிகிறது. (மேலும்)  01.05.10

____________________________________________________________________________________________

முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட சைக்கிள், மோட்டார் சைக்கிள்கள் உரியவரிடம் கையளிப்பு : ஆளுநர் 

 புதுக்குடியிருப்பு அம்பலவன் பொக்கனை, முள்ளிவாய்க்கால் பகுதிகளில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சுமார் 17 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு லட்சம் சைக்கிள்கள் என்பன உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதல்களின் போது பொதுமக்கள், புதுக்குடியிருப்பு அம்பலவன் பொக்கனை, முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள்கள் சைக்கிள்களே உரியவர்களிடம் படிப்படியாக கையளிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். எனவே மேற்படி போர் அனர்த்தங்களின்போது சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கைவிட்டுச் சென்றவர்கள், பொலிஸ் அறிக்கையின் போட்டோ பிரதி இரண்டு, அடையாள அட்டை 2 பிரதி, வாகனங்களின் உரிமைச் சான்றிதழ் இரு பிரதி மற்றும் ஆவணங்களுடன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரனிடம் தொடர்பு கொண்டு எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளலாம் என வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.முதற்கட்டமாக 5000 மோட்டார் சைக்கிள்களும் 7 ஆயிரம் சைக்கிள்களும் இவ்வாறு வழங்கப்படவுள்ளன. 

____________________________________________________________________________________________

இலங்கையில் யாழ்ப்பாணம் உள்பட 200 கிளைகள், நடப்பு ஆண்டில் திறக்கப்படும். இந்தியன் வங்கி தலைவர் அறிவிப்பு

``இலங்கையில் யாழ்ப்பாணம் உள்பட 200 கிளைகள் நடப்பு ஆண்டில் திறக்கப்படும்`` என்று, இந்தியன் வங்கி தலைவர் டி.எம்.பாசின் கூறினார். தமிழகத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் புதிய தலைவராக டி.எம்.பாசின் சில நாட்களுக்கு முன் பதவி ஏற்றார். நேற்று அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தியன் வங்கி, தென் இந்தியாவில் மிக சிறந்த வங்கியாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியை வட இந்தியாவிலும், மேற்கு இந்தியாவிலும் சிறந்த வங்கியாக கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் விரைவில் இந்தியன் வங்கி கிளை தொடங்கப்படும். நடப்பு ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 200 கிளைகளை திறக்க இருக்கிறோம். இன்னும் 2 ஆண்டுகளில் வட இந்தியா மற்றும் மேற்கு இந்தியாவில் 400 கிளைகளை தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம்.

____________________________________________________________________________________________

பத்திரிகை அறிக்கை

மகேஸ்வரி நிதியத்தை முடக்கும் முயற்சிகளை முறியடிப்போம் !

மகேஸ்வரி நிதியமானது, இலங்கை பாராளுமன்றத்தினால் அங்கீகாரமளிக்கப்பட்டு, அங்கவீனமுறற்ற ஆட்களுக்கான தேசிய சபையினாலும் சட்டபூர்வ நிறுவனமாக அங்கீகாரம் பெற்ற, அபிவிருத்தி முயற்சிகளுக்கு உதவி செய்யும் உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமாகும். இது, ஏழை எழிய மக்கள் சிறிது சிறிதாக சேமித்த பணத்தையும், ஓய்வூதியர்கள் தமது இறுதிகாலத்திற்கென ஒதுக்கிவைத்த தொகையையும், எம்மிடம் சேமிப்பில் இடுங்கள் என ஏமாற்றிப்பெற்று, முழுத்தொகையையும் ஏப்பமிடும் எண்ணத்துடன் தொடங்கப்பட்ட ஒரு தனியார் மோசடி நிதி நிறுவனம் அல்ல. மகேஸ்வரி நிதியம் நேர்மையான ஒரு தொண்டு நிறுவனம் என்பதை அது செய்யும் பொது தொண்டுகள் நிரூபித்து வருகின்றன். இந்நிலையில், மகேஸ்வரி நிதியத்தை முடக்கும் முயற்சியொன்றை ‘உதயன்’, ‘சுடரொளி’ பத்திரிகை நிறுவன இயக்குனரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான திரு சரவணபவான் அவர்கள் தொடங்கியுள்ளதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். கேள்விக்குரிய நடத்தையுள்ள, சப்றா நிதி நிறுவனத்தின் இந்த முன்னாள் முகாமையாளரின் சேறடிக்கும் இம் முயற்சிகளாலும், இவரின் ஆதாரமற்ற அவதூறுகளாலும் எமது நிறுவனத்திற்கு ஏற்பட்ட மானநட்டத்திற்கு நாம் முறைப்படி நீதிமன்றில் முறையிட உள்ளோம். (மேலும்)  30.04.10

____________________________________________________________________________________________

 சேவை செய்வதே இராணுவத்தின் தற்போதைய நடவடிக்கை - 51-வது படையணித் தளபதி தெரிவிப்பு

army in jaffnaயாழ்.குடாநாட்டில் பொதுமக்களுக்கான சேவையை வழங்குவதற்காகவே இராணு வம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கின்றது. தவிர படை நடவடிக்கைகளுக்காக இல்லை என யாழ்.51-வது படையணித் தள பதி பிரிகேடியர் சரத் விஜயசிங்க தெரிவித்தார். யாழ்.51-வது படையணித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக சில குழுக்கள் சிறுவர்களைக் கடத்த முயற்சிப்பது, கடத்திச் சென்று கப்பம் கோருவது, கப்பம் கேட்டுக் கொலை செய்வது- முயற்சிப்பது என்ற செய்திகள் பத்திரிகைகள் ஊடாக அறிய முடிகின்றது. இது தொடர்பில் தற்போது சில குழுக்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் மேற்படி இனந் தெரியாத குழுக்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எனத் தம்மைத் தெரிவித்துப் பொது மக்களை மிரட்டுவதுதான். இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சிறுவர்களை ஏன் கடத்த வேண்டும். கப்பம் கோர வேண்டும். இதனைப் பொதுமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். (மேலும்)  30.04.10

____________________________________________________________________________________________

மேலவையில் தமிழர் பிரதிநிதித்துவம்” : இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உறுதி

- பி.பி.சி. செய்தி

manmohansinghஇலங்கை நாடாளுமன்றத்திற்கு மேலவையை உருவாக்கி அதில் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்போவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உறுதியளித்திருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூடான் தலைநகர் திம்புவில் நடைபெறும் சார்க் நாடுகளின் உச்சிமாநாட்டை ஒட்டி அங்கு சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவும் இன்று சந்தி்த்துப் பேசினார்கள். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின்போது, 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்துவதில் தனது அரசு தீவிரமாக இருப்பதாகவும், தமிழர்களுக்கு நாடாளுமன்ற மேலவையில் மேலும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என்றும் மன்மோகன் சிங்கிடம் ராஜபக்ஷ அவர்கள் எடுத்துரைத்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களிடமும் தமிழர்களின் தலைமையிடமும் தனது அரசு நேசக்கரம் நீட்டும் என்று ராஜபக்ஷ அவர்கள் கூறியதாகவும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தியா வருவதாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். (மேலும்)  30.04.10

____________________________________________________________________________________________

பார்வதியை திருப்பி அனுப்பியதில் எந்த சட்ட விரோதமும் இல்லை.

- சென்னை உயர் நீதிமன்றம்

paarvthi1தமிழக அரசு கேட்டுக் கொண்டபடி, பார்வதிக்கு எதிராக 2003ம் ஆண்டு எச்சரிக்கை சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது. அவர் இலங்கை பாஸ்போர்ட் வைத்துள்ளார். இந்த எச்சரிக்கை சுற்றறிக்கை, வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் அனைத்துக்கும் அனுப்பப்பட்டது. கோலாலம் பூரில் உள்ள இந்திய தூதரகம், பார்வதிக்கு விசா வழங்கியிருக்கக் கூடாது.  வெளிநாட்டவர் யாரையும் இந்தியாவுக்குள் நுழைய, மத்திய அரசு தடை விதிக்கலாம். இத்தகைய தடை விதித்ததற்கான காரணத்தை விளக்க தேவையில்லை. இதில், பார்வதியின் அடிப்படை உரிமை எதுவும் மீறப்படவில்லை. அவர் வெளிநாட்டவர் என்பதால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை அனுபவிக்க முடியாது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, மத்திய அரசு பிறப்பித்த எச்சரிக்கை சுற்றறிக் கையின்படி, இந்தியாவுக்குள் நுழைய பார்வதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத் தில் அவருக்கு அனுமதி மறுத்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை. பார்வதி வெளிநாட்டவர் என்பதால், அவருக்கு அனுமதி மறுத்த குடியேற்ற அதிகாரிகளின் செயலுக்கு குறை காண முடியாது. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. (மேலும்)  30.04.10

____________________________________________________________________________________________

ஐக்கிய தேசியக் கட்சியின் இன்னொரு முகம்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைதூக்கிய தேசியப்பட்டியல் பிரச்சினை முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. தலைமைக்கு எதிரான கண்டனக் கணைகள் குறையவில்லை. தேசியப் பட்டியல் நியமனம் மறுக்கப்பட்ட சிரேஷ்ட தலைவர் ருக்மன் சேனநாயக தலைமைக்கு எதிரான போர்க் கொடியைத் தூக்க தொடங்கிவிட்டார். தலைமைப் பதவிக்கு சஜித் பிரேமதாசவே பொருத்தமானவர் என்று அண்மையில் அவர் கூறிய செய்தி பத்திரிகையில் வெளியாகியிருந்தது. மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையே தேசியப் பட்டியல் தொடர் பாகத் தோன்றிய முரண்பாடு இன்னும் தீரவில்லை. பேச்சுவார்த்தை மூலம் சமரச நிலையைத் தோற்றுவிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் மேற்கொண்ட முயற்சிகள் இதுவரையில் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. மனோ கணேசன் ஐக்கிய தேசியக் கட்சியின் நேச அணியாகத் தனது அரசியலை ஆரம்பித்தவர். ஏற்றத்திலும் இறக்கத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் தன்னை நெருக்கமாக இனங்காட்டியவர். சுருக்கமாகக் கூறுவதா னால் ஐக்கிய தேசியக் கட்சிக்காரராகவே மக்கள் அவரைப் பார்த்தார்கள். (மேலும்)  30.04.10

____________________________________________________________________________________________

10 ஆயிரம் முன்னாள் புலிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதில் முன்னுரிமை

- சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதும் முக்கிய பணி என்கிறார் அமைச்சர் டியூ

வடக்கு, கிழக்கு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 10 ஆயிரம் பேருக்குப் புனர் வாழ்வளித்து அவர்களை சமூகத்தில் உள்வாங்கவேண்டும். சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதுடன், சிறைக்குச் செல்வோரின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும். இதற்குப் பொலிஸ், நீதித்துறையினர் ஒத்துழைப்பு அவசியம். இன்று சிறுவர், முதியோர், பெண்கள் எனப் பல பிரிவினரும் சிறையில் உள்ளனர். இவர்களைக் குறைக்க வேண்டும். நான் நீர்கொழும்பு சிறையில் மூன்று மாதம் இருந்தேன். எமக்கு வெளியில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. விஜேகுமாரதுங்கவும், சந்திரிகாவும் காலை ஆறு மணிக்கே வந்துவிடுவார்கள். எனக்காக சரத் முத்தெட்டுவேகம பாராளுமன்றத்தில் ஒரு மாதம் போராடினார். அதன் பின்னர் தான் வீட்டிலிருந்து எமக்கு உணவு வந்தது. ஆகவே, சிறைச்சாலைகளில் அரசியல் அழுத்தம், பழிவாங்கல்களுக்கு இடமளிக்கமாட்டேன். சமூகத் தேவைகளின் அடிப்படையில்தான் சிறை வைக்கின்றோம். அவர்களை சிறந்த பிரஜைகளாக்கி மீண்டும் வீடுகளுக்கு அனுப்பவேண்டும். குற்றச் செயல்கள் உருவாக வறுமையும் காரணம்.  (மேலும்)  30.04.10

____________________________________________________________________________________________

யுத்தகாலத்தில் 960 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக கணக்கெடுப்பு

யுத்த காலத்தின்போது, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 960 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளார்கள் என கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இவர்களில் 100 பெண்பிள்ளைகள் முதற்கட்டமாக மாதவ ஆச்சிரமத்தில் இணைத்துக்கொள்ளப்படவிருப்பதாக  வடமாகாண பொதுநிர்வாக பிரதிப் பிரதம செயலாளர் தி.இரசநாயகம் குறிப்பிட்டார்.

____________________________________________________________________________________________

பலாலி விமான நிலையம், கே. கே. எஸ் துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா உதவி

- பிரதமரிடம் இந்திய தூதர் உறுதி

பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் என்பவற்றை அபிவிருத்தி செய்ய உதவி ஒத்துழைப்புக்களை நல்குவதற்கு இந்தியா முன் வந்துள்ளது. பிரதமர் டி. எம். ஜயரட்னவுடன் இந்தியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த் நேற்று நல்லெண்ண சந்திப்பொன்றை நடத்தினார். இச்சந்திப்பி போதே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இதற்கான இணக்கத்தையும் விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். பிரதமர் ஜயரட்ன பிரதமரான பின்னர் அவரைச் சந்தித்த முதலாவது இராஜதந்திரி இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராவார். இந்த நல்லெண்ண சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட கால நல்லுறவை மேலும் மேம்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாட ப்பட்டுள்ளது. அத்தோடு, ஏற்றுமதி இறக்குமதி செயற்பாடுகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. “வட பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக் குடியமர்த்துவதில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் துரித நடவடிக்கைகளை இந்திய உயர்ஸ்தானிகர் மெச்சியதுடன் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். வட பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு நல்குவதுடன் குறிப்பாக பலாலி விமான நிலையத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்ய ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2550 ஆண்டு புத்த ஜயந்தியையொட்டி பெளத்த மாநாடொன்றை இந்தியாவில் நடத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இச்சந்திப்பின் போது பிரதமரின் செயலாளர் எஸ். அமரசேகரவும் கலந்து கொண்டார்.

____________________________________________________________________________________________

சர்வதேச மேடைகளில் சார்க் நாடுகள் ஒருமித்து குரலெழுப்ப வேண்டும்

16வது சார்க் உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரை

  • வெளியில் இருந்து கிடைக்கும் தீர்வுகளை தவிர்க்கும் தைரியம் வேண்டும்
  • எமது அமைப்பின் பலத்தை குறைத்து மதிப்பிட்டு வருகிறோம்

rajapakshaசர்வதேச மற்றும் பல் தரப்பு அமைப்புகளுடன் செயற்படும் போது எமது வலயத்தின் பொதுவான நன்மை கருதி ஒரே குரலில் பேச வேண்டும். வெளியில் பெறப்படும் தீர்வுகள் எமக்கு ஏற்றவைதானா என்பதை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். எமது வலயத்துக்குள் நாமே மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் பற்றி கண்டறிய வேண்டும். சர்வதேச மேடைகளில் குறிப்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன் எமது வலயத்தின் பொதுப் பிரச்சினைகள் பற்றி ஒருமித்த குரலில் பேசும் செயற்பாட்டை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பூட்டானில் நேற்று ஆரம்பமான 16வது சார்க் உச்சி மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சார்க் நாடுகளுக்கிடையே வலய தொடர்களின் தசாப்தம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பத்தாண்டு காலத்தில் எமது நாடுகள் மற்றும் மக்களிடையிலான தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அதேவேளை பயங்கரவாதத்துக்கு எதிராக சார்க் கோவையின் விதிமுறைகள் முழுமையாக செயற்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் கண்டறியப்பட வேண்டும். (மேலும்)  29.04.10

____________________________________________________________________________________________

இனி ஒரு விதி செய்வோம்

- எம். மகாதேவன்

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

TNA-Press-600(1)யாழ்ப்பாணத்தில் தேர்தல் வாக்களிப்பு மிகக் குறைந்தளவில் இடம்பெற்றுள்ளது. இங்கு 20 சதவீதத்திற்கும் குறைவானவர்களே வாக்களிப்பில் கலந்துகொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. வாக்களித்தோர் தொகை குறைவாக இருக்கலாம். ஆனால் வடபகுதித் தேர்தல் முடிவுகள் தந்திருக்கின்ற செய்தி, தமிழ் அரசியல் அரங்கைப் பொறுத்தவரை ~இனி ஒரு விதி செய்வோம்| என்ற கூற்றை இடித்துரைப்பதாகவே இருக்கின்றது. இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றத் தேர்தலுக்காக நடாத்தப்பட்ட பொதுத் தேர்தல் முழு நாட்டைப் பொறுத்தவரையிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.மூன்று தசாப்த காலமாக நாட்டில் புரையோடிப் போயிருந்த ஜனநாயக விரோத அசாதாரண நிலைமைகள் மறைந்துபோன நிலையில் நாட்டுமக்கள் அச்சம், அவலம் என்பவை நீங்கிய சூழ்நிலையில் இத்தடவை வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தார்கள். கடந்த காலங்களில் வடக்கு- கிழக்கில் இடம்பெற்ற தேர்தல்களில் ஆயுதக் குழுக்களின் அழுத்தங்கள் மலிந்திருந்தன. இதனால் இப்பிரதேச வாக்காளர்கள் சுதந்திரமாக தேர்தல்களில் பங்குபற்றுவதோ முடியாத காரியமாக இருந்துவந்தது. மக்கள் இவ்வாறு அழுத்தங்களுக்கும், கெடுபிடிகளுக்கும் உள்ளான சூழ்நிலையில் குளறுபடியான பின்னணியில் வாக்குப்பலம் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றே இருந்தன. (மேலும்)  29.04.10

____________________________________________________________________________________________

TNA HIGHLIGHTS

Sinhalese influx into North Lanka

Dear Members of the TNA,

I was livid to read what P.K. Balachandra had reported of your concerns about the “Sinhalese influx into North Lanka ”. Let’s get this crystal clear to all you shadows of the late Velupillai Prabhakaran, NORTH LANKA IS NOT A NO-MAN’S LAND FOR US SINHALESE. It is our land as much as yours. What is indeed your problem TNA? What is it in your genes that you feel that you have the right to seek territorial purity for Tamils in the North and yet you think that you men with three finger stripes of ash across the foreheads have the Hindu Trinity rights to invade the South and claim 41 percent of the population of the capital Colombo and own 75 percent of the prime real estate of its suburb Wellawatte, and yet, keep out the Sinhalese from the North who have every God given right to own and occupy real estate there, especially in Jaffna and live and work there and to be happy ever after like you Tamils living happily ever after in the South and the Hills. (Read) 29.04.10

____________________________________________________________________________________________

வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுக்கப் பொதுமக்கள் முன்வர வேண்டும்! - மாவை சேனாதிராஜா எம்.பி. அழைப்பு

வடக்கில் இடம்பெறும் கடத்தல்கள், கப்பம் பெறுதல், கற்பழிப்பு, கொலைகள் போன்ற இரத்தத்தை உறைய வைக்கும் பீதியும், அச் சமும் நிறைந்த செயல்கள் தொடர்வதைத் தடுப்பதற்குப் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். இதற்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு, போர் முடிபுக்கு வந்து விட்டது என்று அரசு அறிவித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஆள்கடத்தல்கள், கற்பழித்தல், கோடிக் கணக்கில் கப்பம் பெறுவது, அதற்காகவே கொலைகள் நடைபெறுவது குறிப்பாக வட பகுதியில் தொடர்கின்றமை யால் மக்கள், இளம் சமூகம், மாணவர்கள் மிகுந்த அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர். அப்படிச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று அரசு தரப்பில் வெளியிடப் படும் செய்திகள் கடத்தல்கள், கப்பம் பெறுதல் அவைகளுக்காகவே கொலைகள் தொடர்வ தை மூடி மறைக்கவும் அச் சம்பவங்கள் தொடர்வதற்குமே வழிவகுப்பதாகும். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் திருச்செல்வம் கபிலநாத் 14.03.2010 இல் கப்பம் பெறுவதற்குக் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம்.வவுனியாவில் இளைஞன் கிருஷ்ண கோபாலன் 28.03.2010 இல் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம். வன்னியிலிருந்து மானிப்பாய் வந்த இளம் பெண் 18.04.2010 இல் கடத்திக் கற் பழிக்கப்பட்ட சம்பவம். (மேலும்)  29.04.10

____________________________________________________________________________________________

மன்னாரில் அதிகரித்துவரும் சமூக சீர்கேடுகள்

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியின் 2ஆம் கட்டை பகுதியில் இளைஞர் படையணிக்காக கட்டப்பட்ட கட்டட வளாகத்தினுள் சமூக சீர்கேடுகளும் குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். கடற்படையினர் இந்தக் கட்டடத்தில் காவலரண்களை கடந்த 2 வருடங்களுக்கு மேலாக அமைத்திருந்ததுடன் சுமார் கடந்த வருட இறுதிப் பகுதியில் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர். அதன்பின்னரே இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

____________________________________________________________________________________________

யாழ். கோட்டைப்பகுதி பொதுமக்களின் பாவனைக்கு

யாழ். கோட்டைப்பகுதிக்குள் பொதுமக்கள் சென்று பார்வையிடுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை.  மக்கள் அங்கு சுதந்திரமாக சென்று வரலாம் என 51ஆவது படையணியின் கட்டளைஅதிகாரி பிரிகேடியர் சரத் விஜயசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூகையில்,யாழ். கோட்டைப்பகுதி பொதுமக்களின் பாவனைக்காக இராணு வத்தால் திறந்துவிடப்பட்டிருக் கின்றது. அங்கு செல்வதற்கு பொது மக்களுக்கு எவ்வித தடையுமில்லை. காலை முதல் மாலை வரை யாரும் சென்று பார்வையிடலாம். மக்கள் தமது பொழுதை இன்பமாகக் கழிப்பதகு இப்போது கோட்டைப்பகுதியை நாடி வருகின்றார்கள். மக்களின் இயல்பு நிலையைக் கருத்;தில் கொண்டு நாம் இதனைச் செய்திருக்கின்றோம். உயர் பாதுகாப்பு வலயங்கள் தவிர்ந்த எந்தப் பகுதிக்கும் பொது மக்கள் இப்ளேபாது சென்று வரமுடியும். அதற்கு எந்தவிதமான கட்டுப்பாடு களும் இல்லை. யாழ். கரையோரப் பகுதிகளில் சில இடங்கள் மிதிவெடி அபாயம் உள்ளமையால் அவை பொது மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதிக்கப் படவில்லை. மிதி வெடிகள் அகற்றப் பட்டதும் மக்கள் பாவனைக்கு அவை அனுமதிக்கப்படும் - என்றார்.

____________________________________________________________________________________________

நல்லூரில் ஆடம்பர ஹோட்டல் நிர்மாணம்: யாழ்.மாநகர மேயர் ஆதரவாக கருத்து

nallurபுராதன ஆலயமான நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சமீபமாக 80 அறைகள் கொண்ட நட்சத்திர ஹோட்டலை நிர்மாணிப்பதற்கான திட்டமானது உள்ளூர் தமிழ்ப் பிரமுகர்கள் மற்றும் எதிரணி அரசியல் கட்சிகளின் கடுமையான ஆட்சேபனையையடுத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இக் ஹோட்டலை கொழும்பிலுள்ள அரச ஆதரவுடனான நிதி நிறுவனமொன்று யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு திட்டமிட்டிருந்தது. 4 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. முதலாவதாக நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சமீபமாக இந்தக் ஹோட்டலை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டிருக்கும் விடயம் கடும் ஆட்சேபனைக்குரியதாக உள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள பெரும்பான்மையான இந்து தமிழர்கள் இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர். இரண்டாவதாக இந்தக் ஹோட்டல் அமைக்கப்படவுள்ள காணி பற்றிய ஆட்சேபனை காணப்படுகிறது. இது பண்டையகால தமிழ் மன்னரான சங்கிலியனின் கோட்டை அமைந்திருந்த இடமாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் அடிப்படை வசதிகள்,பொருளாதாரத் தேவைகள் இன்னரும் பூர்த்தி செய்யப்படாதிருக்கும் நிலையில், 40 கோடி ரூபா செலவில் ஹோட்டல் அமைப்பதற்கான தேவையொன்று முக்கியமானதாக இருக்கவில்லையென்ற ஆட்சேபனை மூன்றாவதாகக் காணப்படுகிறது. மேலும், பாரிய செலவினத்தில் இந்தக் ஹோட்டல் அமைக்கப்படுவதால் யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அது உதவியாக அமையாது என்ற அபிப்பிராயம் நான்காவது ஆட்சேபனையாகவுள்ளது.  (மேலும்)  28.04.10

____________________________________________________________________________________________

மாதத்திற்குள் செனட் சபையை அமைக்க அரசு தீவிரமாக யோசனை ஜனாதிபதி நாடு திரும்பியதும் அமைச்சரவை விரிவுபடுத்தப்படும்

அடுத்த 6 மாத காலப்பகுதிக்குள் இரண்டாவது சபையாக செனட் சபையை அமைப்பது குறித்து அரச தரப்பில் தீவிரமாக ஆராயப்படுகிறது.இச்சபையை அமைப்பதற்காக தற்போதைய அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதற்கும் பொருத்தமான சட்ட மூலங்களை உள்வாங்குவதற்கும் ஆலோசிக்கப்படுகிறது. உத்தேச செனட் சபையின் கட்டமைப்புத் தொடர்பாக விரைவில் தீர்மானிக்கப்படவுள்ளது. இச்சபையில் மாகாண மட்டத்திலிருந்து எம்.பி.க்களை பிரதிநிதிகளாக்குவதற்கும் ஆலோசிக்கப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மாகாண மட்டத்தில் எவ்வாறு பிரதிநிதிகளைத் தெரிவு செய்வது என்பது தொடர்பாக இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்திற்கான பிரமாணத்தை நவம்பரில் மேற்கொள்வார். அதற்கு முன்னராக செனட் சபையை அமுல்படுத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில் தேவையான மாற்றங்கள், திருத்தங்கள் அடுத்த 6 மாதங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படவுள்ளது. இது இவ்வாறிருக்க இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான்,பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் ஜனாதிபதி ராஜபக்ஷ நாடு திரும்பியவுடன் அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

____________________________________________________________________________________________

யாழ்ப்பாணத்தில் பங்குச்சந்தை கிளை

இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஆசியாவில் முக்கியத்துவம் வாய்ந்த முதலீட்டுமையமாக இலங்கையை மாற்றுவதற்கு அரசாங்கம் கடின முயற்சி எடுத்து வருவதாக இலங்கை பங்குகள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் உதயஸ்ரீ காரியவசம் தெரிவித்தார். பங்குச் சந்தையின் யாழ்.கிளைக்காரியாலயம் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் மீண்டும் திறந்து வைக்கப்பட்டபோது இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,யாழ்.கிளையை மீளவும் இயக்குவது தொடர்பில் கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பேசியிருந்தோம்.அவர் பெரும் மகிழ்ச்சியடைந்தார்.நான் யாழ்.மாவட்டத்திற்கு இரண்டாம் தடவையாக தற்போது வந்திருக்கின்றேன்.2009 ஆம் ஆண்டு வந்திருந்த போது பல்கலைக்கழக சமூகம்,வர்த்தக சமூகம் ஆகியவற்றிற்கு கொடுத்த வாக்குறுதி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு கடமையாற்றவுள்ளவர்கள் யாழ்.மாவட்ட மக்களிடம் பங்குச் சந்தை தொடர்பான தெளிவை ஏற்படுத்த வேண்டும்.கடந்த 30 வருடங்களை நாம் வீணாக்கி விட்டோம்.இனிமேலும் அவ்வாறானதொரு நிலை உருவாகிவிடக்கூடாது. (மேலும்)  28.04.10

____________________________________________________________________________________________

புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட காணிகளில் பயிர்ச்செய்கை

புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பற்றப்பட்ட 600 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளில் பயிர்ச்செய்கை மற்றும் கால்நடை வளர்ப்பு என்பன மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாண ஆளுனர் மேஜர்ஜெனரல் சந்திரசிரி தெரிவித்துள்ளார். வவுனியாவுக்கு வடக்காக இராணுவம் கைப்பற்றிய காணிளே இவ்வாறு பயன்படுத்தப்படவுள்ளன. இவை பயிர்சசெயகைக்கு சிறந்த தயார் நிலையில் உள்ள காணிகள் என்றும் அவர் கூறினார். இவ்வாறான இன்னும் பல காணிகள் உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்

____________________________________________________________________________________________

ஜி 15 நாடுகளின் தலைவர் பதவியில் மஹிந்த ராஜபக்ச?

ஜி 15 நாடுகளின் தலைமைப் பதவியை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச ஏற்றுக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த பதவி ஈரான் நாட்டு ஜனாதிபதி முகமத் அகமது நிஜாத் வசம் உள்ளது. இந்த நிலையில், வரும் மே மாதம் 17 ஆம் தேதி தெஹ்ரானில் நடைபெறவுள்ள ஜி 15 நாடுகளின் மாநாட்டின் போது அவருக்கு இந்த பதவி வழங்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. 1989 ஆம் ஆண்டு ஜி 15 நாடுகள் குழு உருவாக்கப்பட்டது. தற்போது இதில் 17 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அல்ஜீரியா, அர்ஜென்டீனா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், ஜமைக்கா, கென்யா, மலேசியா, மெக்சிகோ, நைஜீரியா, சினேகல், இலங்கை, வெனிசுலா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்த மாநாடு நடத்தப்படுகிறது.தற்போது இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, "சார்க்" நாடுகளின் தலைவர் பதவியையும் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

____________________________________________________________________________________________

ஐ.தே.மு - ஜ.ம.மு சந்தித்துப் பேச்சு - இறுதித் தீர்வுகள் எட்டப்படவில்லை. 

ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் தேசிய பட்டியல் நியமனம் வழங்கப்படுவது தொடர்பில் அக்கட்சிக்கும் ஐக்கிய தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் இடையில் இன்று மாலை நடைபெற்ற விசேட சந்திப்பு இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் முடிவடைந்துள்ளது. தேசியப்பட்டியல் நியமனம் விவகாரத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தவறான முடிவினை எடுத்துள்ளதாகக் கூறி ஜனநாயக மக்கள் முன்னணி தனித்து இயங்கப் போவதாக அறிவித்தது. இந்நிலையில் இந்தப் பிரச்சினைக்கு முடிவுகள் எட்டப்படுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசியுள்ளனர். (மேலும்)  28.04.10

____________________________________________________________________________________________

வடக்கு, கிழக்கில் பொருளாதார நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கு வங்கிகள் ஆர்வம்

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கு உரிமங்களையுடைய பல வங்கிகள் ஆர்வம் காட்டுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மக்கள் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி, செலான் வங்கி உள்ளிட்ட வங்கிகள் அக்கரைப்பற்று, வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி, கிளிநொச்சி, அச்சுவேலி, மானிப்பாய், மல்லாவி, மாங்குளம், மன்னார், பரந்தன், துனுக்காய் ஆகிய பகுதிகளில் தமது வங்கிக் கிளைகளை இன்னும் சில மாதங்களில் திறப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளன. இந்த வங்கிகள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமது கிளைகளைத் திறப்பதற்கான அனுமதி மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ளது.

____________________________________________________________________________________________

உலக்கை தேய்ந்த கதையாக ஐக்கிய தேசியக் கட்சி

ranilஐக்கிய தேசியக் கட்சியில் பாரிய மாற்றங்கள் ஏற்படப் போவதாகவும் கட்சி முழுமையாகப் புனரமைக் கப்படும் என்றும் காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளருமான கயந்த கருணா திலக கூறுகின்றார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் சொல்கின்றார். இடம்பெறப்போகும் மாற்றங்களுள் தலைமை மாற்றமும் அடங்கலாம் என்று சில ஊடகங்கள் எதிர்வு கூறுகின்றன. இலங்கை அரசியல் வரலாற்றில் இன்றைய ஐக்கிய தேசியக் கட்சித் தலைமை தோல்வியைப் பொறுத்த வரையில் சாதனை படைத்திருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்ஹ தலைமைப் பொறுப்பை ஏற்ற பின் ஒரு தேர்தலைத் தவிர மற்றைய எல்லாத் தேர்தல்களிலும் கட்சி தோல்வியையே சந்தித்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபை தேர்தல், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் என எல்லாத் தேர்தல்களிலும் ரணிலின் தலை மைக்கு அடுத்தடுத்துத் தோல்வியே ஏற்பட்டிருக்கின்றது. வெற்றியீட்டிய ஒரேயொரு தேர்தலில் கூட ஐக்கிய தேசி யக் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடனேயே ஆட்சி அமைத்தது. (மேலும்)  28.04.10

____________________________________________________________________________________________

இலங்கையைச் சேர்ந்த 75 பேர் தத்தளித்த படகில் இருந்து தரையிறக்கப்பட்டனர்

கோலாலம்பூர், ஏப். 26:  மலேசிய அரசு தங்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இரண்டு நாள்கள் படகில் இருந்து இறங்க மறுத்த  இலங்கையைச் சேர்ந்த 75 பேர் மலேசிய போலீஸப்ரால் தரையிறக்கப்பட்டனர். இலங்கையைச் சேர்ந்த மீன் பிடிப் படகு ஒன்று 75 பேரை ஏற்றிக் கொண்டு ஆஸ்திரேலியாவுக்குச் சென்றது. அப்போது படகில் ஓட்டை ஏற்பட்டதால் மலேசிய கடல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வழக்கமான ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்த மலேசிய காவல் துறையினர் அந்தப் படகை தடுத்து நிறுத்தினர். முதலில் அவர்கள் அனைவரும் படகில் இருந்து இறங்க மறுத்தனர். தங்களுக்கு அடைக்கலம் கொடுக்க மலேசிய அரசு ஒப்புக் கொண்டால்தான் படகை விட்டு இறங்குவோம் என கோரிக்கை வைத்தனர். இரண்டு நாள்கள் படகிலேயே இருந்தனர். பின்னர் போலீஸப்ர் படகுக்குள் ஞாயிற்றுக்கிழமை நுழைந்து அவர்களைக் கரைக்கு அழைத்து வந்தனர்.  (மேலும்)  28.04.10

____________________________________________________________________________________________

மேதினக் கருத்தரங்கு

இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் (எல்ஸ்மெயர் – மக்கோவன்)

காலம்: மே 01,2010 சனிக்கிழமை பிற்பகல் 2-30 - 6-00 வரை

தாயகத்தில் தொழிற்சங்க துறையில் நீண்ட காலம் உழைத்தவர்களும், தொழிலாளர் நலனில் அக்கறையுள்ளவர்களும் உரையாற்றுவர்.

அனைவரையும் தவறாது கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

கனடிய தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம்

demovizhippu@hotmail.com

____________________________________________________________________________________________

ஜேர்மன் அரச சார்பற்ற அமைப்பு டில்லியில் நடாத்திய இலங்கைக்கு எதிராக மாநாடு தோல்வியில் முடிந்தது.

 கடந்த 22 ஆம் திகதி வியாழக்கிழமை புதுடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மண்டபத்தில் இலங்கையில் யுத்தக் குற்றங்கள் என்ற பெயரில் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இந்த மாநாட்டை புதுடில்லியில் மேற்படி நேரு பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்களின் அமைப்பைச் சேர்ந்தோரே ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்பட்டபோதிலும் உண்மையில் அதனை ஜேர்மனியிலுள்ள புலிகள் இயக்கப் பிரதிநிதிகளும் மற்றும் ஜேர்மனியில் இயங்கும் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான அரசு சார்பற்ற நிறுவனமும் குறித்த புதுடில்லி தமிழ் மாணவர்கள் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். அத்துடன் இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனியில் சர்வதேச மனித உரிமைகள் சார்பகம் என்ற பெயரில் இயங்கும் போலியான சர்வதேச மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். எவ்வாறாயினும் இந்த மாநாட்டில் பங்குபற்றுவற்காக மேற்படி போலி மனித உரிமைகள் அமைப்பின் தலைவர்கள் ஜேர்மனியில் இந்திய தூதரகத்துக்கு விண்ணப்பித்திருந்த விசா பத்திரத்தை தூதரக அதிகாரிகள் நிராகரித்து விசா அனுமதியை வழங்க மறுத்துவிட்டனர். குறித்த மனித உரிமைகள் அமைப்பு உண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் அனுமதி பெறாத போலியான மனித உரிமை அமைப்பாக ஜேர்மனியில் புலிகள் இயக்க ஆதரவாளர்களால் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, ஜேர்மனியிலுள்ள இந்திய தூதரகம் மேற்படி மனித உரிமைகள் போலி அமைப்பின் விசா விண்ணப்பத்தை அந்த காரணத்தின் அடிப்படையில் நிராகரித்திருக்கக்கூடும். (மேலும்)  27.04.10

____________________________________________________________________________________________

புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பை முடக்க புலம்பெயர் தமிழர்கள் தடையாக உள்ளனர்

- பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய

Gothapayaவிடுதலை புலிகளின் சர்வதேச கட்டமைப்பை முடக்கும் நடவடிக்கைகளுக்கான ஒரேயொரு தடையாகப் புலம்பெயர்ந்த தமிழர்களே உள்ளனர் எனப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வு சஞ்சிகைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் தனது புலனாய்வுத் திறனை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தமது பேட்டியின் போது தெரிவித்துள்ளவை வருமாறு: விடுதலைப் புலிகள் இலங்கைக்கு வெளியே சிறந்த வலையமைப்பை உருவாக்கியுள்ளனர். ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அவர்கள் சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளனர். நிதி திரட்டும் வழிவகைகளையும் உருவாக்கியுள்ளனர். பல நாடுகளில் வலுவான இலங்கைப் புலம் பெயர் சமூகம் உள்ளது. இவர்களுக்குள் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளனர். நிதி திரட்டுவதற்கான திறமை அவர்களுக்கு உள்ளது. சிறந்த கப்பல் ஆயுதக் கொள்வனவுப் பிரசாரத் திறனுமுள்ளது. விடுதலைப் புலிகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் நியாயமான வர்த்தகங்களில் முதலீடு செய்துள்ளனர். இலங்கைக்கு வெளியே பல விடுதலைப் புலிகள் இன்னும் செயற்படுகின்றனர். (மேலும்)  27.04.10

____________________________________________________________________________________________

நெதர்லாந்தில் விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள் கைது

நெதர்லாந்து நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து நடத்தப்பட்ட கவனமான மற்றும் விரிவான புலனாய்வுகளை அடுத்து, அந்நாட்டின் தேசிய குற்றப் புலனாய்வு சேவைகள் அமைப்பினர் சந்தேகத்துக்குரிய ஏழு பேரைக் கைது செய்துள்ளனர். இது தவிர 16 வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.இதன் போது கணினிகள், காகித ஆவணங்கள், தொலைபேசிகள், புகைப்படங்கள், டிவிடிக்கள் ஆகியவை சோதனைக்கு உள்ளாயின. மேலும் இந்த நடவடிக்கையின் போது 40,000 யூரோக்கள் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தது. நெதர்லாந்து நாட்டின் தேசிய குற்றப் புலானாய்வு போலீசாரால் நடத்தப்பட்ட விசாரணைகளில் விடுதலைப் புலிகளுக்காக நிதிகள் சேகரிக்கப்பட்டமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 2002 ஆம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்படி, அப்படியான அமைப்புகளுக்கு நிதி மற்றும் பொருளாதார ஆதரவு வழங்குவது சட்டப்படி பொருளாதாரக் குற்றமாக கருதப்படும். மேலும் இந்த விசாரணைகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் ஆராயப்படுகின்றது. (மேலும்)  27.04.10

____________________________________________________________________________________________

Tamil Tijgers opgepakt in Nederland

(Novum) - De nationale recherche heeft maandag zeven Tamil Tijgers opgepakt in Nederland. Ze worden verdacht van deelname aan een criminele en terroristische organisatie en van fondsenwerving van de organisatie die in Sri Lanka vecht voor een eigen staat. Onder de verdachten zijn de leiders van vijf Tamil-organisaties in Nederland. Een 45-jarige man uit Den Haag wordt gezien als dé leider van de Tamil Tijgers in Nederland. De zes andere verdachten werden opgepakt in Schagen (2), Breda, Zeist, Raalte en Ammerzoden. Volgens het OM zijn de verdachten niet zelf betrokken geweest bij gewelddadigheden, maar zamelden ze geld in in Nederland en andere westerse landen. Ze organiseerden onder meer collectes, inzamelingsacties en illegale loterijen en verkochten dvd's en kalenders. De politie doorzocht maandag zestien woningen en bedrijven. Daarbij werden computers, administratie, telefoons, dvd's, documenten, foto's en ruim veertigduizend euro aan contant geld in beslag genomen. Voor de aanhoudingen en doorzoekingen waren vanaf 05.00 uur 'meer dan tweehonderd rechercheurs op de been. (Read) 27.04.10

____________________________________________________________________________________________

பிரபாகரனின் தாயாரை இந்தியா , கனடா நிராகரித்தால் இலங்கை வருவார்?

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரை இந்தியாவும் ,கனடாவும் நிராகரிக்கும் பட்சத்தில் மீண்டும் அவர் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார். இவ்வாறு தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் செயலாளர் கே.சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார். தற்போது மலேஷியாவில் தங்கியிருக்கும் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாளின் விஸா எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி முடிவுக்கு வருகின்றது என்றும் சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டார். இரு நாடுகளும் பார்வதி அம்மாளின் விஸாவை நிராகரிக்கும் சூழ்நிலையில் தான் மலேஷியா சென்று,அவரை கொழும்புக்கு அழைத்து வந்து,அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும் கே.சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையதளத்திடம் கூறினார்.

____________________________________________________________________________________________

கடத்தல்கள் இடம்பெற்றால் அறியத்தரவும்: யாழ். கட்டளைத் தளபதி

யாழ் மாவட்டத்தில் கடத்தல் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. கடத்தல் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. எனினும் கடத்தல் சம்பவங்ள் இடம்பெற்றால் அவ் விடயம் தொடர்பில் எமக்கு அறியத்தரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துறுசிங்க தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடம் பெறும் கடத்தல் சம்பங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ். குடா நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் 4 கடத்தல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ். குடா நாட்டின் சங்கானை, மூளாய், அராலி, ஓட்டுமடம் ஆகிய பகுதிகளிலே இந்த கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

____________________________________________________________________________________________

ஆறாயிரம் பொலிஸாருக்கு தமிழ் மொழிப் பயிற்சி

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் சேவையாற்றும் ஆறாயிரம் பொலிஸாருக்கு தமிழ் மொழி பயிற்சிகளை வழங்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார். இவ்வாறான பயிற்சி வழங்குவதன் மூலம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் மக்களுக்குத் தேவையான சிறந்த சேவைகளை பொலிஸாரால் வழங்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார். நீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது பொலிஸ் அகடமி பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவினால் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொலிஸ் மா அதிபர் மேலும் உரையாற்றுகையில், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சேவையாற்றும் பொலிஸாருக்கு இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது. மூன்று மாதங்களுக்கு 300 பேர் என்ற அடிப்படையில் ஐந்து வருடத்திற்கு ஆறாயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்படும். பொலிஸாரின் தொழில் ரீதியான ஆளுமைகளை மேம்படுத்துவதே பிரதான நோக்கமாகும். இந்த பொலிஸ் அகடமியை இதற்கு உச்ச அளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். காளணி பல்கலைக்கழகத்துடன் இந்த பொலிஸ் அகடமியை இணைத்து செயற் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

____________________________________________________________________________________________

போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் 5000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு

கொழும்பு: போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்கா சார்பில், இலங்கையில் புதிய தொழில்கள் துவங்கப்படவுள்ளன. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய தொழில்களை துவங்க, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த பிரபலமான தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து, இந்த பகுதிகளில் தோட்டக்கலை, ஆடை தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் துவங்கப்படவுள்ளன. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வவுனியா அருகே ஓமந்தையில் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் துவங்கப்படவுள்ளது. நீண்ட கால போரால் பாதிக்கப்பட்டு, போதிய வருவாய் இல்லாமல் அவதிப்பட்டு வரும் குடும்பங்களுக்கு, இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

____________________________________________________________________________________________

விடுதலைப்புலிகளைத் தோற்கடித்தது எப்படி  விளக்குகிறார் - பாதுகாப்புச் செயலர் 

gothapaya-1கிழக்கு மாகாணத்தை நாம் சுத்திகரித்தபோது தமிழீழ விடுதலைப்புலிகள் தாம் தோற்கடிக்கப்படவில்லை எனவும் தாம் தந்திரோபாய பின்வாங்கலை மேற்கொண்டதாகவும் கூறினர். கிழக்கு மாகாணத்தைத் தக்கவைப்பதற்கு இலங்கை ஆயுதப் படைகளிடம் போதிய துருப்புக்கள் இருக்கமாட்டாது என புலிகள் நம்பினர். முந்தைய காலத்தைப் போல தாம் வடக்கில் போர்முனையொன்றைத் திறந்தால் இலங்கைப் படையினர் வடக்கிற்கு நகர்த்தப்பட வேண்டிருக்கும் எனவும் அதன் மூலம் தாம் மீண்டும் கிழக்கை கைப்பற்றிவிடலாம் எனவும் புலிகள் நம்பினர். எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர்கூட கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் காத்திரமானதாக இருக்கமாட்டாது என பகிரங்கமாகக் கூறினர். நாம் உண்மையில் பரந்தளவிலான போர்முனையிலும் பல் போர்முனையிலும் போரிடுவதற்குத் தயராக இருந்தோம் என்பதை புலிகள் குறைவாகவே அறிந்திருந்தனர். படையினரின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஒரே இரவில் சாத்தியமாகாது என்பதை அறிந்திருந்தோம். அதனால் கடற்படை, விமானப் படையினரையும் தரை யுத்த நடவடிக்கைளில் ஈடுபடுத்தினோம். அதற்கேற்ப நாம் அவர்களுக்கு பயிற்சியளித்தோம். ஆகவே நிலத்தை தக்கவைப்பதற்கான எமது பலம் திடீரென அதிகரித்தது.யுத்தத்தின் கடைசி மாதத்தின் இரு வாரங்களில் நாம் சிவில் பாதுகாப்புப் படைக்கு 5000 பேரை சேர்த்தோம். ஒவ்வொரு மாதமும் 5000 படையினரை இணைத்ததன் மூலம் இராணுவத்தின் எண்ணிக்கை மூன்று வருடங்களில் ஒரு லட்சத்திலிருந்து 3 லட்சமாக அதிகரித்தது. (மேலும்)  26.04.10

____________________________________________________________________________________________

கொலையும் விலையும் !

- எஸ்.எம்.எம்.பஷீர்

“சுட்டதென்னவோ அவர்களைத்தான் விழுந்ததென்னவோ நாங்கள்தான்” - ஏ. கந்தசாமி

அண்மையில் பாராளுமன்றத்துக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் யாழ்ப்பான மாவட்டத்தில் போட்டியிட்டு வென்று பாராளுமன்றம் செல்லும் முதல் தமிழ் பெண்மணி விஜயகலா மகேஸ்வரன் தனது கொல்லப்பட்ட கணவனின் அரசியல் வழியில் கட்சியில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றிருக்கிறார். அதேபோல் கம்பஹா மாவட்டத்தில் சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளை தனது கணவனின் வழியில் வழியில் போட்டியிட்டு வெற்றி ஈட்டியுள்ளார். ஆனால் இலங்கை வரலாற்றில் வேறு சில தமிழ் பெண்மணிகளும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்கள். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவிருந்த தங்கேஸ்வரி , பத்திமினி சிதம்பரநாதன் தவிர தனது வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் எம். பீ ஆகவிருந்த கே .டி புலேந்திரன் புலிகளால் கொல்லப்பட்டபின் (19.10.1983)அவரது மனைவி திருமதி புலேந்திரன் தனது கணவனது இடத்துக்கு அன்றைய ஐக்கிய தேசிய கட்சியில் அரசில் எம் .பீ நியமிக்கப்பட்டார். அவர் துணை கல்வி அமைச்சராகவும் பதவி வகித்தார். குலேந்திரன் வீட்டில் குடும்பத்தாருடன் தொலைக்கட்சி பார்த்துக்கொண்டிருந்த போது புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் . இவரது மனைவியின் சகோதரர் (மைத்துனர்) புலிகளை அதிகம் கண்டிப்பதை தவிர்த்துக்கொண்டார் (ஒருவேளை பயமாகவிருக்கலாம்) ஆனால் பின்னர் அவர் தீவிர சிங்கள எதிர்ப்புக்கருத்துக்களை கொண்டவராகவே எனக்கு அறிமுகமானார். (மேலும்)  26.04.10

____________________________________________________________________________________________

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: தமிழர் பிரச்சினையை தீர்க்க ஒரு வாய்ப்பு!

rajapaksha-6போருக்குப் பின் உள்ள அமைதி முயற்சியின் இன்றைய நிலைப்பாடு மிக முக்கியமானது. இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவம் என்பது போதுமானதாகவும்,சட்டபூர்வமானதாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் எல்.டி.டி.ஈ. இருக்கும் வரை வேறு யாரும் முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே தமிழர்களின் பிரதிநிதிகளாக உருவான ஒவ்வொரு தலைவரையும் தீர்த்துக் கட்டினார்கள். அதே மாதிரிதான் இந்தியாவில் "மீண்டும் ஆட்சிக்கு வருவார்' என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜீவ்காந்தியை "பெல்ட் பாம்' மூலம் கொன்றார்கள். கடந்த காலங்களில் அரசியல் தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைகள் ஏற்பட்ட போது எல்லாம் எல்.டி.டி.ஈ.யின் அச்சுறுத்தல் இருந்தது. அது இந்திய-இலங்கை பேச்சுவார்த்தையாக இருக்கட்டும். அதையொட்டி வந்த 13வது அரசியல் சட்டத் திருத்தம் ஆகட்டும். இதன் பிறகு வந்த சந்திரிகா முதல் மற்றும் இரண்டாம் பேக்கேஜ்களாக இருக்கட்டும்- எல்லாவற்றையுமே இலங்கைத் தமிழர்கள் ஏற்றார்கள். ஆனால் எல்.டி.டி.ஈ அவற்றை எதிர்த்த பிறகு, வேறு வழியின்றி அச்சுறுத்தலின் காரணமாக இலங்கைத் தமிழர்களும் அந்த அரசியல் தீர்வு ப்ரப்போஸல்களை எதிர்த்தார்கள். நார்வே பேச்சுவார்த்தையும் அப்படித்தான் ஆனது. முதலில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு, அது அமலில் இருக்கின்ற நேரத்தில் அதை எல்.டி.டி.ஈ. மீறியது(மேலும்)  26.04.10

____________________________________________________________________________________________

16வது சார்க் உச்சி மாநாடு புதனன்று பூட்டானில் ஆரம்பம்: ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான குழு இன்று பயணம்

saarc16 வது சார்க் உச்சி மாநாடு நாளை மறுதினம் பூட்டான் தலைநகரான திம்புவில் ஆரம்பமாகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை தூதுக்குழு இன்று பூட்டான் புறப்பட்டுச் செல்கிறது. சார்க் அமைப்பின் வெள்ளி விழா ஆண்டு இதுவாகும். அமைப்பின் முதலாவது உச்சிமாநாடு பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் 1985 டிசம்பரில் நடைபெற்றது. 16 வது உச்சி மாநாடு நாளை மறுநாள் பூட்டானில் ஆரம்பமாகிறது. பூட்டான் உச்சிமாநாட்டை பொறுப்பேற்று நடத்துவது இது முதல் முறையாகும். சார்க் அமைப்பின் தலைமைப் பதவியை தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வகித்து வருகின்றார்.16 வது உச்சி மாநாட்டை தலைமை வகித்து நடத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு புறம்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது. (மேலும்)  26.04.10

____________________________________________________________________________________________

புதுக்குடியிருப்பில் விரைவில் மீள்குடியேற்றம்: உடையார்கட்டில் நிலக்கண்ணிவெடி முழுமையாக அகற்றல்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் விரைவில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். விஸ்வமடு உடை யார் கட்டு பிரதேசத்தினூடாக புதுக் குடியிருப்புக்கான மீள்குடியேற்றத்தை ஆரம்பிக்க தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார். உடையார்கட்டு பிரதேசம் நிலக்கண்ணி வெடிகள் முழுவதும் அகற்றப்பட்டு மீள் குடியேற்றத் துக்கு தயார் படுத்தப்பட்ட நிலையிலுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மாவ ட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் முன்னெடுத்து வருவதாகவும் இன் னும் இரண்டு மூன்று வாரங் களுக்குள் புதுக்குடியிருப்புக்கான மீள்குடியேற்றப் பணிகளை ஆரம் பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் திருமதி இமெல்டா கூறினார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலக் கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கண்ணி வெடிகள் அகற்றப்படும் ஒழுங்கி ற்கேற்ப மீள்குடியேற்றத்தை முன் னெடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். மாவட்டத்தின் நகர பிரதேச சபைக்குள் மாத்திரம் இது வரையில் 1500 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீளக் குடியே றியுள்ளார்கள். இதேவேளை முள்ளியவளை, கள்ளப்பாடு, வண்ணான்குளம் ஆகிய பகுதிகளிலும் தற்போது மீள் குடியேற்றம் நடத்தப்பட்டு வருவ தாக மாவட்ட அராசங்க அதிபர் குறிப்பிட்டார்.

____________________________________________________________________________________________

மனோ கணேசனுக்கு

- சாமான்யன்

Mano Ganeshan 2கண்டியில் நீங்கள் நடத்தியது அக்கினிப் பரீட்சை. நீங்களும் உங்கள் தம்பியும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் போட்ட வியூகம் தோல்வி அடைந்துவிட்டது. அதனால் உங்கள் பாராளுமன்றப் பிரவேசம் தடைப்பட்டுவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் உங்களுக்கு இடம் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்ததில் நியாயம் உண்டு. அந்தளவுக்கு நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பின்னிப் பிணைந்து செயற்பட்டீர்கள். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் போல நடந்து கொண்டீர்கள். இது தான் நீங்கள் செய்த மிகப் பெரிய தவறு. ஐக்கிய தேசியக் கட்சியின் குணாம்சத்தைச் சரியாக விளங்கிக்கொள்ள உங்களால் முடியவில்லை. இப்போது உங்களுக்குத் தேசியப் பட்டியல் நியமனம் கிடைக்கவில்லை என்பதற்காக ரணிலையும் கட்சியையும் கடுமையாக விமர்சிக்கின்aர்கள். தேசியப் பட்டியல் நியமனம் கிடைத்திருந்தால் ரணிலின் புகழ் பாடியிருப்பீர்கள். ரணில் உங்களுக்கு நியமனம் வழங்காதது ஒரு வகையில் நல்லது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அதனால் தான் உங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரின் முகமூடிக்குப் பின்னாலுள்ள நிஜமுகத்தைப் பார்க்க முடிந்தது.  (மேலும்)  25.04.10

____________________________________________________________________________________________

முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு ஓட்டுநர், நடத்துநர் பயிற்சி

கொழும்பு, ஏப்.24: முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு பஸ் ஓட்டுநர், நடத்துநர் பயிற்சியை இலங்கை அரசு வழங்கவுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இலங்கை ராணுவத்துக்கு எதிராக ஏராளமானோர் பணிபுரிந்து வந்தனர். கடந்த ஆண்டு மே மாதம் நடந்த விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு வெற்றி பெற்றது. இந்த நிலையில் இலங்கை அரசிடம் சரணடைந்த புலிகள், மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. போரால் இடம்பெயர்ந்த பொதுமக்களை மீண்டும் அவர்களது இடத்திலேயே மறுகுடியேற்றம் செய்யும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் முன்னாள் விடுதலைப்புலிகள் 100 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஓட்டுநர், நடத்துநர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிரி கூறியதாவது: மறுவாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 100 முன்னாள் விடுதலைப் புலிகளை தேர்வு செய்து அவர்களுக்கு ஓட்டுநர், நடத்துநர் பயிற்சிகளை வழங்கவுள்ளோம். பயிற்சி பெற்ற பின்னர் இலங்கையின் வடக்குப் பகுதியிலுள்ள அரசு பஸ் போக்குவரத்துக் கழகத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.  (மேலும்)  25.04.10

____________________________________________________________________________________________

யாழ். குடாவில் மீண்டும் தலைதூக்கும் ஆட்கடத்தல், கப்பம் கோருதல்: உளவுத்துறையென வருவோரைக் கண்டு ஏமாந்து விடவேண்டாம் - ஈ.பி.டி.பி

உளவுத்துறை என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு வருபவர்களை கண்டு பொதுமக்கள் ஏமாந்து விடக் கூடாது. உண்மையில் வருபவர் உளவுத்துறையைச் சேர்ந்தவரா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் அக்கம் பக்கத்தினரின் உதவியை பெற வேண்டும் அல்லது தொலைபேசி மூலம் என்னுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குடாநாட்டு மக்களிடம் வேண்டுகோள்விடுத்தார். கொழும்பிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். யாழ். குடாநாட்டில் கடத்தல், கொலை, கற்பழிப்பு என கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்துள்ளமை தொடர்பாக அமைச்சரிடம் கேட்டபோதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,யாழ். குடாநாட்டில் தற்போது மீண்டும் தலை தூக்கியிருக்கும் ஆட்கடத்தல், கப்பம் கோருதல், கொலை, பாலியல் வல்லுறவு போன்ற சம்பவங்களை வளரவிடாமல் தடுக்கும் நோக்கில் பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கோரிக்கையை ஏற்று மக்கள் நடந்து கொண்டதன் மூலம் அண்மையில் நவாலி பகுதியில் நடந்திருந்த ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க முடிந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். குடாநாட்டு மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.  (மேலும்)  25.04.10

____________________________________________________________________________________________

மலேசியாவுக்கு தப்பி வந்த விடுதலைப்புலி தலைவர்கள் பலரை கைது செய்து நாடு கடத்தினோம். மலேசிய மந்திரி  தகவல்.

Hishammuddin_Husseinபிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு, மலேசியாவுக்கு அகதிகளாக அடைக்கலம் தேடி வந்த விடுதலைப்புலி தலைவர்கள் பலரை கைது செய்து நாடு கடத்தினோம் என்ற திடுக்கிடும் தகவலை மலேசிய உள்துறை மந்திரி ஹிஷாமுதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ``இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டையில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அந்த நாடு அறிவித்தது. அந்த போருக்குப் பிறகு 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கும் கடந்த மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் ஏராளமான பேர் அகதிகளாக அடைக்கலம் தேடி வந்தனர். அவர்களை கைது செய்து, நாடு கடத்தி விட்டோம்'' என்று தெரிவித்துள்ளார்.ஆனால் யார்-யார் அடைக்கலம் தேடி வந்தனர் என்ற விவரங்களை அவர் வெளியிட வில்லை. ``இந்த வாரம் கோலாலம்பூரில் சர்வதேச அளவிலான பாதுகாப்புத்துறை கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சிக்கு, இலங்கை அதிபரின் சகோதரரும், இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை செயலாளருமான கோதபய ராஜபக்சே வந்திருந்தார். அவரிடம், மலேசியாவுக்கு அடைக்கலம் தேடி அகதிகளாக வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை கைது செய்து நாடு கடத்திய தகவலை தெரிவித்தோம். (மேலும்)  24.04.10

____________________________________________________________________________________________

யுத்த பின் (Post-War) புதிய அரசும் மக்கள் எதிர்பார்ப்புகளும் -ஒரு சிறு அலசல்

எஸ்.எம்.எம்.பஷீர் 

"குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்". ( திருக்குறள் )

MPs-1இன்று இலங்கையில் அமைச்சர்கள் துணை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியுடன் ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிட்டு அக்கூட்டணியை வெற்றியீட்ட தாங்களும் அதிகம் பாடுபட்டதாக கூறும் சுதந்திரக் கட்சியினரரும் அதன் பங்காளிக்கட்சிகளும் சிலர் அமைச்சர் நியமனங்கள் தேசிய பட்டியல் எம் பீ நியமனங்கள் தொடர்பில் தமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக அல்லது தாம் புறக்கனிக்கப்பாட்டிருப்பதாக குறை கூறும் செய்திகளும் வந்த வன்னமுள்ளன. என்றாலும் இதில் விமல் வீரவன்ச வழக்கம்போல் மிகவும் வெளிப்படையாக தமது கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினரான முசம்மிலுக்கு எம்.பீ பதவி வழங்கப்படவில்லை என்று தமது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார். அவரது எதிர்ப்பில் முன்னாள் சமாதானச் செயலாளர்  ராஜீவ் விஜயசிங்கவுக்கு எம் பீ பதவி வழங்கப்பட்டதை ஒரு பகிடியாக கூறி விலைக்கு வாங்கப்படாத அரசியல் ரீதியாக அதிகம் தீவிரமாக பங்காற்றிய முசம்மிலுக்கு எம்.பீ பதவி வழங்கப்படாதது முறையற்றது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.  (மேலும்)  24.04.10_

முன்னைய பதிவுகள்

wanni

காக்கும் ஷேக்கும் (KAK AND SHEIKH )

புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரே ஸ்ரீலங்கா அரசு வகுத்திருக்கும் சாம, தான, பேத, தண்ட வியூகம்

தமிழ் மக்களுக்குப் பாரிய இன்னல்கள் ஏற்பட்டதற்கு வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி நிறைவேற்றிய தனிநாட்டுத் தீர்மானமே அடிப்படைக் காரணம்.

இலங்கை புலனாய்வுத்துறை எமது மக்களில் சிலர் எண்ணுவதைப்போல் முட்டாள்தனமானது அல்ல. குமரன் பத்மநாதன்

பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்