a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி             உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்      எங்கள்தேசம்         சலசலப்பு         நோயல்நடேசன்     விடிவெள்ளி         எங்கள்பூமி              ரீவடை இணையம்        பார்வை             தமிழ்யுகே
 

Asientribune
Lines-Magahzine
Srilankaguardian
The lka academic
Tamil Week            sldf
Uthr                
        

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                          05.10.2010

கிளிநொச்சி மாவட்டத்தில் 5000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளவர்களில் 5,000 குடும்பங்களுக்கு இவ்வருட இறுதிக்குள் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் உலக வங்கி, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயம், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. உலக வங்கியின் நிதியுதவியுடன் 3640 வீடுகளும் செஞ்சிலுவைச் சங்கத்தினால் 100 வீடுகளும் புதிதாக நிர்மாணிக் கப்படுவதுடன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயத்தினால் 1600 வீடுகள் புனரமைக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேற்படி வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வருட இறுதிக்குள் நிர்மாணப்பணிகள் நிறைவுபெறுமெனவும் அவர் தெரிவித்தார்.  (மேலும்)  14.05.10

____________________________________________________________________________________________ 

தனது தேர்தல் தோல்வியினால் ஏமாற்றமடைந்திருக்கும் வாக்காளர்களுக்கு திருப்தியளிக்கக்கூடிய நியாயபூர்வமான காரணங்களை கண்டுபிடிக்க அங்கலாய்க்கும் ஓர் வேட்பாளரின் உள்ளக் குமுறல் அல்ல இது

- வீ. ஆனந்தசங்கரி   

a.sangaryதனது தேர்தல் தோல்வியினால் ஏமாற்றமடைந்திருக்கும் வாக்காளர்களுக்கு திருப்தியளிக்கக்கூடிய நியாயபூர்வமான காரணங்களை கண்டுபிடிக்க அங்கலாய்க்கும் ஓர் வேட்பாளரின் உள்ளக் குமுறல் அல்ல, தனது நாட்டுக்கும் அதில் வாழும் மக்களுக்கும் அரை நூற்றாண்டுக்கு மேல் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு மனிதனின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதே இது. குறிப்பாக தமிழ் தேசிய கூட்;டமைப்பு வேட்பாளர்களும் சில அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் ஆகியவற்றை சேர்ந்த வேட்பாளர்களும் செய்த பொய்யானதும், குரோதமானதுமான பிரச்சாரத்தினால் வாக்காளர்களின் உள்ளங்களில் ஏற்படுத்தப்பட்ட தவறான அபிப்பிராயங்களை நீக்கும் விபரக் குறிப்பாகவே இது வெளிவருகிறது. சில ஆசனங்களை எடுப்பதற்காக அல்லது வேறு கட்சியிலும் பார்க்க கூடுதலான ஆசனங்கள் எடுக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை சுயநலத்துடனும், புத்திசாதுரியமற்ற முறையிலும் செயற்படாது, புத்திசாலித்தனமாகவும் கவனமாகவும் செயற்பட்டிருந்தால் இன்று நிலைமை முற்று முழுதும் வேறாக அமைந்திருக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முழு அக்கறையும் என்னை தோற்கடிப்பதிலேயே இருக்க முழுப்பிரச்சாரத்தோடு வெட்கப்படக்கூடிய வகையில் பணத்தையும், மதுவையும் தாராளமாக வழங்கி தாம் நினைத்ததை திருப்தியாக சாதித்தனர். எனது 50 வருட அரசியல் வாழ்வில் நான் எதிர்கொண்ட 15 இற்கு மேற்பட்டஉள்ளுர் பாராளுமன்ற தேர்தல்கள் எதிலும் பணமோ, பானமோ தலைகாட்டவில்லை. (மேலும்)  13.05.10

____________________________________________________________________________________________

புலிகளின் மற்றொரு வடிவமே நோர்வேயில் இயங்கும் ஜீ.ரீ.எப். - சிங்கப்பூர் விரிவுரையாளர் எச்சரிக்கை

GTF-!ோர்வேயில் இயங்கி வரும் ஜீ.ரீ.எப். அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் மாற்று வடிவமேயாகும் எனச் சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழக சர்வதேச விவகார மற்றும் பயங்கரவாத, விரிவுரையாளர் றொகான் குணரட்ண எச்சரிக்கை விடுத்துள்ளார். நெடியவன் தலைமையில் இயங்கி வரும் க்ளோபல் தமிழ் போரம் என்ற அமைப்பு மிகவும் ஆபத்தானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடு கடந்த தமிழீழ ராஜ்ஜியத்தை உருவாக்க முனைப்புக் காட்டி வரும் உருத்திர குமாரனை விடவும் நெடியவன் ஆபத்தானவர் என அவர் கூறியுள்ளார். உருத்திரகுமாரன் இலங்கை அரசாங்கத் துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள் ளக் கூடிய அரசியல் சாணக்கியத்தைக் கொண்டவர்.எனவே நெடியவனின் ஜீ.ரீ.எப். அமைப்பின் நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ ராஜ்ஜிய உருவாக்கத் திற்கு ஆதரவாக வாக்களித்த 90 வீதமான வர்கள் இலங்கைப் பிரஜைகள் அல்ல எனவும் அவர்கள் ஒருபோதும் இலங்கைக்குத் திரும்ப மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஜீ.ரீ.எப். அமைப்புப் போன்றே பி.ரீ.எப். அமைப்பும் மிகவும் ஆபத்தானது என அவர் தெரிவித்துள்ளார்.  (மேலும்)  13.05.10

____________________________________________________________________________________________

ஐதேக தலைவராக சஜித் பிரேமதாச?

 ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைவராக மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச நியமிக்கப்படக் கூடும் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனை மேலும் உறுதிப்படுத்துவதற்கான நிகழ்வொன்றை இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இன்றைய ஊடகவியலார் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.கட்சியின் அடுத்த தலைவராக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களைக் குறிப்பிட முடியுமா என ஊடகவியளார் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "பெரும்பாலும் சஜித் பிரேமதாசவின் பெயரை மட்டுமே இப்போதைக்கு சொல்லக் கூடியதாக உள்ளது" என்றார்.

____________________________________________________________________________________________

அதிகாரங்களை கொண்ட அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்த இலங்கையை கோருகிறது இந்தியா

Nirupama_Rao பல்வேறுபட்ட சக்திகளையும் உள்ளடக்கியதாக மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கக்கூடிய செயற்பாட்டுத் திறன் வாய்ந்த நடவடிக்கைகளை உறுதிப்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழைப்பு விடுத்திருக்கிறது. இலங்கையின் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்தல் தொடர்பாக இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் உரையாற்றுகையில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ் இதனைக் கூறியுள்ளார். "அரசியல் இணக்கப்பாடு என்பது நிச்சயமாக கழித்து கூட்டிப்பார்க்கையில் பூச்சியமாகும் விளையாட்டு அல்ல. அதேசமயம் மற்றொன்றுக்கு நட்டம் ஏற்படும் விதத்தில் அதனை மேற்கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. அவ்வாறு வரவும் கூடாதுஎன்றும் நிருபமாராவ் கூறியுள்ளார். இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமானது மாகாணங்களுக்கு கணிசமான அளவு அதிகாரங்களை வழங்கும் விதத்தில்வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும் திருமதி ராவ் குறிப்பிட்டிருக்கிறார்."திருத்தமானது பரந்தளவில் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது. மாகாண நிர்வாகம் செயற்படுகையில் அத்திருத்தமானது முழு அளவில் ஆதாரத்தனமாக தோற்றம் பெறுகிறது. இந்த மாகாணங்களை மேலும் வலுப்படுத்தி சக்தி மிக்கவையாக்க வேண்டிய தேவையுள்ளது. (மேலும்)  13.05.10

____________________________________________________________________________________________

ஒட்டுசுட்டானில் இன்று மீள்குடியேற்றம் 

 வவுனியா நகர சபைக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பகுதியில் தற்போது மீள் குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் தெரிவித்தார். 150 குடும்பங்களைச் சேர்ந்த 486 குடும்பங்கள் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதேவேளை, இவர்கள் அனைவரும் முதலில் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் 3 நாட்கள் தங்க வைக்கப்படுவர். பின்னர், வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டதும் அவர்களது சொந்த இடங்களில், மீள் குடியேற்றப்படுவர் என அவர் மேலும் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட, ஒட்டுசுட்டான் அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட 4 இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் இவர்களுக்கான மேலதிக வசதிகளை அரசு சார்பற்ற நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, மரக்காரம்பளை ஆகிய இடங்களைச் சேர்ந்த 11,999 குடும்பங்களின் 33,636 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்

____________________________________________________________________________________________

பார்வதி அம்மாளுக்கு கொழும்பில் சிகிச்சை-சிவாஜிலிங்கம்

parvathiகொழும்பு: பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. அவருக்கு கொழும்பு நகரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இலங்கை முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பக்கவாத நோயால் அவதிப்பட்டு வரும் அவர் மலேசியாவில் இருந்து சென்னைக்கு சிகிச்சைக்கு வந்தபோது மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார். இந் நிலையில் மலேசியாவில் இருந்து இலங்கை திரும்பினார். அவர் வல்வெட்டித் துறையில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஆயுர்வேத விடுதியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருப்பதாக முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து சிவாஜிலிங்கம் கூறுகையில், பார்வதி அம்மாளுக்கு கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பக்கவாத நோய் உள்ளது. அவரை பராமரிக்கும் முழு பொறுப்பையும் அவரது குடும்பத்தினர் என்னிடம் ஒப்படைத்துள்ளனர். பார்வதி அம்மாள் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. நடமாடும் சக்தியை இழந்து விட்டார். படுத்த படுக்கையாக கிடக்கும் அவரால் பேசவும் முடியவில்லை. அவரை இந்தியாவுக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுப்பது பற்றி நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை. அவரது மகள் என்ன சொல்கிறாரோ அதன்படிதான் செயல்படுகிறோம்.இந்தியாவில் சிகிச்சை பெற்றுக் கொள்ள விசா கொடுக்கப்பட்டுள்ளதை பார்வதி அம்மாள் நிராகரித்து விட்டார் என்ற தகவல்களில் உண்மையில்லை.அவரை இந்தியா கொண்டு சென்று சிகிச்சை கொடுக்கும் நடவடிக்கைகளில் சில தடங்கல்கள்தான் ஏற்பட்டுள்ளன என்றார்.

____________________________________________________________________________________________

இலங்கையின் தற்போதைய அரசியல் நிகழ்வுகள்

12.05.2010 தாயகக்குரல் 

இலங்கையில் தற்போதைய அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை அரசு ஆரம்பித்துவிட்டது. அரசியலமைப்பில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் குறித்து நகல்வடிவம் ஒன்றைத் தயாரிக்கும் பொறுப்பை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் இன்னும் இரு வாரங்களில் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அவை யூலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அரசியல் கட்சிகள், தனிப்பட்டவர்கள் தேர்தல்கள் தொடர்பான தமது ஆலோசனைகளை இம்மாத இறுதிக்குள் வழங்கும்படி கேட்டுள்ளது. கிராம அதிகாரிகளின் பிரிவுகளை மீள்வரையறை செய்வதற்கும், பிரதேச செயலாளர் பிரிவுகளை வரையறை செய்வதற்கும், தேர்தல்முறை தொடர்பான புதிய திட்டத்தை முன்வைப்பதற்கும் அதேவேளை உள்ளுராட்சி சபைகளின் எல்லைகளை வரையறை செய்வதற்குமான முயற்சிகளை மேற்கொள்ளும் பொருட்டு மக்கள் அபிப்பிராயத்தை அரசு கோரியிருக்கிறது.  (மேலும்)  13.05.10

____________________________________________________________________________________________

லிபியாவில் விமானம் வெடித்து சிதறி 103 பேர் பலி! எட்டு வயது சிறுவன் மட்டும் தப்பினான்

libiyaடிரிபோலி : தென் ஆப்ரிக்காவிலிருந்து லிபியா நாட்டுக்கு சென்ற விமானம் தரையிறங்கும் போது வெடித்து சிதறியதில் 103 பேர் பலியாயினர். எட்டு வயது சிறுவன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரிலிருந்து அபிரிகுயா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ-330 ரக விமானம், 93 பயணிகள் மற்றும் 11 ஊழியர்களுடன் லிபியாவின் டிரிபோலி நகருக்குச் சென்றது. டிரிபோலியில் இந்த விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதை அருகே வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 61 பேர் பலியாயினர். இதுதவிர ஆப்ரிக்கா, லிபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 42 பேர் இறந்தனர். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான் என, டிரிபோலி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். லிபியாவை சேர்ந்த அபிரிகுயா ஏர்லைன்ஸ் நிறுவனம் பாரிசில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்திடம் கடந்த 2007ம் ஆண்டு ஐந்து விமானங்களை குத்தகைக்கு எடுத்திருந்தது. அதில் ஒன்று தான் நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வரை 96 சடலங்கள் மீட்கப்பட்டன. விமானத்தின் கருப்பு பெட்டி தேடப்பட்டு வருகிறது. கருப்பு பெட்டி கிடைத்தால் விபத்துக்கான காரணம் தெரியவரும். விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்ததாகவும், சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறியுள்ளனர்.

____________________________________________________________________________________________

அமிதாப்பச்சன் இலங்கை வருவதில்லையென முடிவு

amithabநாம் தமிழர் இயக்கத்தினரின் தொடர் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டத்தையடுத்து, கொழும்பில் நடைபெறும் சர்வதேச இந்தியப் படவிழாவில் (ஐப்பா) பங்கேற்பதில்லை என நடிகர் அமிதாப் அறிவித்துள்ளார். மேலும் ஐப்பா அமைப்பின் தூதர் பொறுப்பிலிருந்தும் அவர் விலகிக் கொண்டுள்ளார் என்று நாம் தமிழர் அமைப்பின் தலைவரும் இயக்குநருமான சீமான் இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் கூறியுள்ளதாவது:- இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசு, கொழும்பில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் முக்கியப் பங்காற்றுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் இனப்படுகொலையை மறைப்பதற்காக நடத்தப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமிதாப் கலந்து கொள்வதற்கு கண்டனம் தெரிவித்து, நாம் தமிழர் தொண்டர்கள் மும்பையில் உள்ள அமிதாப்பின் வீட்டுக்கு முன் சில வாரங்களாக முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அத்துடன் அமிதாப்பைச் சந்தித்த அவர்கள், 10கோடித் தமிழர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்று கோரிக்கை மனுவையும் அளித்தனர். (மேலும்)  13.05.10

____________________________________________________________________________________________

70 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் கூட்டணி ஆட்சி: புதிய பிரதமர் கேமரூன்

david-cameronபிரிட்டிஷ் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு எண். 10, டெற்னிங் தெருவில் உள்ள அதிகாரபூர்வ இல்லத்தில் பொதுமக்களின் வாழ்த்துகளை ஏற்கிறார் டேவிட் கேமரூன். லண்டன், மே 12: பிரிட்டிஷ் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேவிட் கேமரூன் பதவி ஏற்றுக் கொண்டார். துணைப் பிரதமராக லிபரல் டெமாக்ரடிக் கட்சித் தலைவர் நிக் கிளெக் இருப்பார். பிரிட்டனில்  70 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை முன்னாள் பிரதமர் கார்டன் பிரெற்ன், அரண்மனைக்குச் சென்று ராணியிடம் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார். இதையடுத்து ஆட்சியமைக்க வருமாறு இரண்டாம் எலிசபெத் ராணி, கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கேமரூனுக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். கட்சிக்கு ஆதரவு தரும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியில் மேலும் 4 உறுப்பினர்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கன்சர்வேடிவ் கட்சியின் மூத்த தலைவர் வில்லியம் ஹாக், வெளியுறவு அமைச்சராகவும், ஜார்ஜ் ஆஸ்பர்ன் நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். பாதுகாப்பு அமைச்சர் பதவி லியாம் ஃபாக்ஸிற்கு வழங்கப்பட்டது. சுகாதார அமைச்சராக ஆண்ட்ரூ லான்ஸ்லே நியமிக்கப்பட்டுள்ளார். 200 ஆண்டுகளில் மிக இளம் வயதில் பிரிட்டிஷ் பிரதமராகப் பொறுப்பேற்கும் இரண்டாமவர் என்ற பெருமையும் கேமரூனைச் சாரும். இதற்கு முன்பு லார்ட் லிவர்பூல் தனது 42-வது வயதில் பிரிட்டிஷ் பிரதமரானார். (மேலும்)  13.05.10

____________________________________________________________________________________________

Man pleads guilty in landmark terrorism financing case

thambithuraiThe federal prosecutor has recommended two years in prison for a man who pleaded guilty Tuesday to collecting money for the Tamil Tigers – Canada’s first court case involving fundraising for a banned terrorist group. Prapaharan Thambithurai, 46, pleaded guilty to raising money for the Liberation Tigers of Tamil Eelam. In Vancouver, he collected $600 and pledges worth $1,800; altogether, he admitted raising between $2,000 and $3,000 from late 2007 to March 2008 in Canada. Federal prosecutor Martha Devlin said Tuesday in a submission on sentencing in B.C. Supreme Court that Mr. Thambithurai admitted to police after he was arrested that a portion of the money he raised for Tamil humanitarian aid would go to the Liberation Tigers of Tamil Eela (LLET), a terrorist group banned in Canada. “The thing is, I know, like a 100 per cent is not going to go to the people I’m giving [to]. It’s going to go somewhere, to LTTE administration or for some reason,” he said during a portion of a police interview that Ms. Devlin read out in court. “Put it this way, my friend,” he said during the police interview. “I’m sending my $100 to go back home, okay . . . like 50 per cent may get, may go to Tigers, 50 per cent may go to my people.”  (Read) 13.05.10

____________________________________________________________________________________________

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு எதிராக இரண்டாம் கட்ட நடவடிக்கை

 நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்காக விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எடுக்கும் முயற்சிக்கு எதிராக நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு கொண்டு வந்துள்ள போதிலும் சர்வதேச ரீதியில் அவ்வமைப்பின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று இராணுவ பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். அதற்கு எதிராக அரசாங்கத்தினால் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பு, தற்போது சர்வதேச ரீதியில் வியாபித்துவரும் புலிகளின் இரண்டாம் கட்ட பயங்கரவாத நடவடிக்கையினைத் தடுக்கவும் அனைத்து தரப்பினராலும் வழங்கப்பட வேண்டும் என்றும் இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்

____________________________________________________________________________________________

யாழ்.மாநகரசபை மாதாந்த கூட்டம் இன்று நடைபெறவில்லை - மேயர் யோகேஸ்வரி

இன்று நடைபெறவிருந்த யாழ். மாநகரசபையின் 8ஆவது மாதாந்த கூட்டம்  இடம்பெறவில்லை என யாழ்.மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசா சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார். யாழ். மாநகரசபையின் பிரதி மேஜர் இளங்கோ (ரீகன்) கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதன்  காரணமாகவே மேற்படி கூட்டம் நடைபெறவில்லை எனவும் அவர் கூறினார். இவரது கைது தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும் எனவும் யோகேஸ்வரி பற்குணராசா குறிப்பிட்டார். சாவகச்சேரி நீதிவானுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் யாழ் மாநகரசபையின் பிரதி மேயர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை,  இவர் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து  யாழ். மாநகரசபையின் ஊழியர்கள் நேற்று மேற்கொண்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டையடுத்து கைவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

____________________________________________________________________________________________

பார்வதியிடம் இருந்து பதில் வரவில்லை: முதல்வர்

karunanithi6சென்னை :'தமிழகத்தில் சிகிச்சை பெற விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்க இயலாது என்ற கடிதம், பார்வதியிடம் இருந்து வரவில்லை' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சட்டசபையில் பூஜ்ய நேரத்தில், காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது:பிரபாகரனின் தாயார் பார்வதி, தமிழகத்தில் சிகிச்சை பெறுவதற்கு, முதல்வர் சிறப்பு அனுமதி பெற்றுத் தந்திருக்கிறார். ஆனால், அரசு விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்று, தமிழகம் வர அவர் விரும்பவில்லை; அவர் இலங்கை சென்றுவிட்டார் என பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து அரசுக்கு தகவல் வந்துள்ளதா?அவர் தமிழகம் வரும்போது, அதை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் பெற திட்டமிட்டிருந்தனர். அவரோடு வேறு சிலரும் தமிழகம் வர திட்டமிட்டிருந்தனர். அது நடக்காததால், இலங்கைக்கு சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் பேசினார். இதற்கு முதல்வர் கருணாநிதி அளித்த பதிலுரை:அதிகாரப்பூர்வமாகவோ, தனிப்பட்ட முறையிலோ பார்வதியிடம் இருந்து எவ்விதமான பதிலும் அரசுக்கு வரவில்லை. 'உங்களது நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள இயலாது' என்ற கருத்து அமைந்த கடிதம், அவர்களால் அனுப்பப்படவில்லை.  (மேலும்)  12.05.10

____________________________________________________________________________________________

பிரச்சினைகளை வளர்ப்பதற்கே மேற்குலக நாடுகள் முயற்சித்தன - பாதுகாப்புச் செயலர் தெரிவிப்பு

Gotabhaya_Rajapaksaஇலங்கையில் பிரச்சினைகளை வளர்ப்பதற்கே மேற்குலக நாடுகள் முதன்மை கொடுத்தன. இந் நாடுகள் பிரபாகரனையும் முக்கிய சில தளபதிகளையும் காப்பாற்ற முயற்சி எடுத்தன. ஆனால் அவை வெற்றியளிக்கவில்லை. இதனாலேயே அவை இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றன எனப் பாதுகாப்புச் செயலளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இப் போரை வெற்றி கொள்வதற்குப் படை துறை, அரசியல், சமூக மற்றும் சர்வதேச ரீதியில் நாம் எதிர்கொண்ட பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழும் வழிகாட்டலின் கீழும் மேற்கொண்டோம் என கோத்தபாய ராஜபக்ச பிஸ்னஸ் ருடேயின் மே மாத இதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, விடுதலைப்புலிகளுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுவதற்காக அவர்களுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு பேச்சு வார்த்தைகளை நடத்தியது. ஆனால் விடுதலைப்புலிகள் இப் பேச்சு வார்த்தையில் இதயசுத்தியுடன் கலந்து கொள்ளாததால், அவர்கள் இராணுவ ரீதி யில் தோற்கடிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இறுதி முடிபு எடுத்தார்.   (மேலும்)  12.05.10

____________________________________________________________________________________________

யாழ். மாநகரசபை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடருமா?

யாழ். மாநகரசபை பிரதி மேயரும் ஈ.பி.டி.பி.யின் முக்கியஸ்தருமான ரீகன் என்று அழைக்கப்படும்  துரைராசா இளங்கோ  கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ். மாநகர சபை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று நண்பகல் கைவிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தமிழ்மிரர் இணையதளம் யாழ் மேயர் யோகேஸ்வரி சற்குணராசவுடன் சற்று முன் தொடர்பு கொண்டது. யாழ்பாண மாநகர சபை ஊழியர்கள் இன்று முதல்  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட ஆரம்பித்தனர். இதன் காரணமாக மாநகர சபை ஊடாக பொது மக்கள் பூர்த்தி செய்ய வேண்டியிருந்த அத்தியவசிய நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டது. இப்பணிப்பகிஷ்கரிப்பு  காரணமாக யாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்றார் யாழ் மேயர் யோகேஸ்வரி சற்குணராசா. மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இப்பணிப்பகிஷ்கரிப்பை கேள்விப்பட்ட அமைச்சர் டக்லஸ் தேவானந்த யாழ்பாண மாநகரசபைக்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்ட அவர் ,உடனடியாக பேராட்டத்தை கைவிடுமாறும் இது தொடர்பாக நாம் சட்ட ரீதியான முறையில் நடவடிக்கை எடுப்போம் என்று ஊழியர்களிடம் கூறியதிற்கினங்க அவர்கள் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டனர். (மேலும்)  12.05.10

____________________________________________________________________________________________

ஐ.தே.க.தலைமைத்துவ பதவியிலிருந்து விலக ரணில் விக்கிரமசிங்ஹ இணக்கம்

ranil-1ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு தனது தலைமைத்துவம் தொடர்பில் திருப்தியின்மை காணப்பட்டால்,  தலைமைத்துவ பதவியிலிருந்து விலகுவதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்தார். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்ததாக டெயிலிமிரர் இணையதளத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து தோல்வியடைந்து வருவதையிட்டு, அந்தக் கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்ஹ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருவதுடன், கட்சித் தலைமைத்துவத்திற்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி இடம்பெற்றிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 117 ஆசங்களைப் பெற்றிருக்கும் அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 46 ஆசங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டிருந்தது.

____________________________________________________________________________________________

இழப்புகளும் துன்பங்களும் முடிந்துபோனவை ஆகட்டும்

அரசாங்கத்துடன் உத்தியோகப் பற்றற்ற முறையில் கருத்துப் பரிமாறல் இடம்பெறுவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் ஆங்கில வார இறுதிப் பத்திரிகையொன்றுக்குக் கூறியிருக்கின்றார். அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறிய செய்தி யும் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. இரண்டுமே இனிப்பான தகவல்கள். இப் பேச்சுவார்த்தை பயனுறு வகையில் இடம்பெற வேண்டும் என்பது தமிழ் பேசும் மக்கள் மாத்திரமன்றி நாட்டு மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகக் கடந்த காலங்களில் பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றி ருக்கின்றன. அவை தோல்வியிலேயே முடிந்தன. இத் தோல்விகள் தமிழ் அரசுவழிச் சமூகத்தில் தீவிரவாதம் தலைதூக்குவதற்குக் காரணமாக இருந்தன என்பதைத் தமிழ்த் தலைவர்கள் அடிக்கடி கூறுவது வழக்கம். தேர்தல் மேடைகளில் இதை அவர்கள் வலியுறுத்தத் தவறுவதில்லை. சிங்களத் தலைவர்கள் ஒருபோதும் அரசியல் தீர்வுக்குச் சம்மதிக்க மாட்டார்கள் எனக் கூறுவதற்காகவே தோல்வியடைந்த பேச்சுவார்த்தைகளை நினைவூட்டினார்கள். (மேலும்)  12.05.10

____________________________________________________________________________________________

மீள்குடியேற்றத்தை விரைவில் செய்ய வேண்டும்- இந்தியா

- பி.பி.சி செய்திகள்

Nirupama_Raoஇலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மீதமுள்ள தமிழர்களையும் தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திருப்பியனுப்ப இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் அமைதி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது என்ற தலைப்பில், அப்ஸர்வர் ரிசர்ச் ஃபவுண்டேசன் சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கைத் துவக்கி வைத்துப் பேசும்போது, இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் இந்தக் கருத்தை வெளியிட்டார். அதே நேரத்தில், இலங்கை மக்கள் எவ்வாறு ஒன்றுபட்டு வாழ்வது என்பதை அவர்களே பேசி முடிவு செய்துகொள்ள வேண்டும் என்பதை சர்வதேச சமூகம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நிருபமா ராவ் வலியுறுத்தினார். மேலும், இலங்கையின் கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா அளித்துவரும் உதவிகள் குறித்து சுட்டிக்காட்டிய அவர், 500 கோடி ரூபாய் உதவித் திட்டத்தை முதலில் இந்தியா அறிவித்த பிறகு, 416 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கியிருப்பதாகவும், மேலும் 382 மில்லியன் டாலர்கள் கடன் அடுத்து வழங்கப்பட இரு்பபதாகவும் தெரிவித்தார். அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம், இந்தியாவைப் போன்ற ஆட்சி முறையை இலங்கையில் அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று தெரிவி்ததார்.  (மேலும்)  12.05.10

____________________________________________________________________________________________

கொழும்பில் சில பழசுகள்!, வெளியில் சில பழுதுகள்!!

பயணக்கட்டுரை (காலி முதல் கச்சதீவு)  - பாகம் ஒன்று

- நெடுந்தீவான் -

delft-3அயலவள் தன்னை உணர்வோடு பொருத்திப் பார்ப்பதை மயிர்க்கூச்செறியும் என் உடல் உணர்த்தியது. இதற்கு ஓரிரு வாரம் முந்திய சம்பவம்! ஒரு கருந்திரையாக என் கண்முன்! அதுவும் ஒரு பயணம்! அருகில் இருந்து பயணித்தவரிடம் "நீங்கள் இலங்கையரா?" என்று கேட்டேன். "இல்லை தமிழர்! அப்போ இந்தியத் தமிழரா? அதுவும் இல்லை!" என்றார். புத்தம் புதிதாக கசங்காத சிறீலங்கா கடவுச்சீட்டு சட்டைப் பையிலிருந்தது. இந்த முட்டாள் பிரசை, முதன் முதல் நாவற்குழி தாண்டியதே வெளிநாடு வருவதற்காக என்ற தகவலும் அவரிடமே அறிய முடிந்தது.  இந்த நினைவின் வேதனையிலிருந்து மீண்டுகொண்டு சாளரத்தின் பக்கம் திரும்பினேன். ஐரோப்பிய மேகப் பரப்பை இருள் கவ்வியிருந்தது. விமானத்தினுள்ளே வெளிச்சத்தின் ஒளிர்வு சற்று கூட்டப்பட்டது. மங்கிய நிலவொளி போன்ற அந்த இதமான பொழுதில், இருக்கைகளின் இடைப்பாதையில் இரண்டு இரண்டாக அழகு மயில்கள்! முக ஈரலிப்பு, உணவுப்பொட்டலங்கள், குடிவகையெனப் பரிமாறிய அந்தப் பண்பும் முகத்தின் மலர்வும் இலங்கைத் தேசத்தின் சமூகப் பண்பைப் பதியம் போட்டன.  மீண்டும் ஒளிக்குறைப்பு சாதாரணம், போதை என எல்லோரும் தூக்கத்தோடு சங்கமித்த அமைதி! தூங்கிவிழித்த போது சாளரம் வெளுத்திருந்தது. தென்றற் காற்றுச் சீண்டி விளையாடும் இலவம் பஞ்சுக்கடலில் மிதப்பது போன்ற உணர்வு மேலீட்டில் விமான இருக்கை மறந்து போனது. கிராமத்து மக்களின் உள்ளம் போல மாசற்ற அந்த வெண் முகில்களில் பட்ட சூரியக் கதிர்கள் வெண்மைக்கு மேலும் மெருகூட்டிக் கண்களை வெட்கப்படுத்தின. (மேலும்)  12.05.10

____________________________________________________________________________________________

பிரதி ஊடக அமைச்சர் நியமிக்கப்படமாட்டார்

அமைச்சுக்கென இம்முறை பிரதி அமைச்சரை நியமிக்காமல் விடுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அமைச்சின் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வார் எனவும் அதனால் அந்த அமைச்சுக்கு பிரதியமைச்சரை இம்முறை நியமிக்காமல் விடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.புதிய அமைச்சரவையில் ஊடகத்துறை பிரதியமைச்சராக மேர்வின் சில்வா நியமிக்கப்பட்ட போதிலும் கடந்த 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பின் போது அவர் தனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்துகொண்டதுடன் அவருக்கு நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பதவியே வழங்கப்பட்டது.

____________________________________________________________________________________________

களனி விஹாரையில் கடத்தப்பட்ட குழந்தை மாரவிலயில் மீட்பு: பின்னணியை கண்டறிய பொலிஸ் தீவிர விசாரணை

kalaniகளனி விஹாரையில் ஞாயிறன்று வயதான பெண்மணியால் கடத்தப்பட்ட 2 1/2 வயது குழந்தை மாரவில பகுதியில் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மிக பொறு ப்பாக செயற்பட்டதன் காரணமாகவும் பொலிஸாரின் தீவிர முயற்சியின் பயனாகவும் 48 மணி நேரத்துள் குழந்தையை மீட்க முடிந்தது என பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்று தெரிவித்தார். 2 1/2 வயது செனுரி லிமன்சா மாபலகம என்ற குழந்தையும் அவரது பெற்றோரும் நேற்று பொலிஸ் தலைமையகத்துக்கு வரவழைக்கப்பட்டதுடன் ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டனர். குழந்தையை கடத்திச் சென்ற பெண் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மாரவில, மற்றும் கல்கிஸை பகுதி தொலைபேசி இலக்கங்கள் தொடர்பாகவும் கடத்தியதன் நோக்கம் தொடர்பாகவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார். (மேலும்)  12.05.10

____________________________________________________________________________________________

ஈ.பி.டி.பி. மீது களங்கம் ஏற்படுத்தும் தீய சக்திகளின் முயற்சிகள் கப்பம் கோருவோர் அச்சுறுத்துவோர் தொடர்பில் அவதானமாக இருக்கவும்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில தீய சக்திகள் திட்டமிட்ட வகையில் தொலைபேசியூடாக பொதுமக்களிடம் கப்பம் கோரியும் பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்தும் வருவதாக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எமது மக்களுக்கான நேர்வழியைக் காட்டி எமது மக்களை கடந்தகால துன்ப துயரங்களில் இருந்து மீட்டெடுக்கும் எமது கட்சியின் மக்கள் நலன்சார்ந்த பணிகளைப் பொறுத்துக் கொள்ளாத எமது மக்களைத் தொடர்ந்தும் துன்ப துயரங்களில் ஆழ்த்தி அதன்மூலம் தங்களது குறுகிய சுயலாப அரசியலை மேற்கொள்ள விரும்பும் சில தீயசக்திகள் குழப்பிய குட்டைக்குள் மீன்பிடிக்கும் நோக்கில் எமது கட்சியின் மீது பல்வேறு வழிகளிலும் சேறு பூசும் குறுகிய எண்ணத்துடனும் அதேநேரம் ஒரு கல்லில் இரு மாங்காய் என்ற ரீதியில் பணம் பறித்துக் கொள்ளும் நோக்கத்துடனும் திட்டமிட்டு செயற்பட்டு வருவதை இவ்வாறான செயற்பாடுகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. . (மேலும்)  11.05.10

____________________________________________________________________________________________

தமிழ்ச்செல்வன் குடும்பம் இந்தியா செல்ல அனுமதி : பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் கோரிக்கை

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இந்தியாவில் அரசியல் புகலிடம் கோரவிருப்பதாக பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகளின்போது கைதுசெய்யப்பட்ட தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் தற்போது இராணுவத்தினரின் பாதுகாப்பில் தங்க வைக்கட்டிருக்கின்றனர். தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினரை இராணுவத்தினர் நன்றாகப் பராமரித்து வருவதாகவும் பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் குறிப்பிட்டார். தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இந்தியாவுக்குச் செல்வதற்கான அனுமதி கோருவதாகவும், அவர்களது கோரிக்கை கவனத்திற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் போராளிகள் அல்லர் என்பதுடன், அவர்கள் பொதுமக்கள் எனவும் பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சுட்டிக்காட்டினார். அவர்களின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு தான் கொண்டுசெல்லவிருப்பதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்

____________________________________________________________________________________________

இலங்கைத் தமிழர்கள் அவுஸ்திரேலியா செல்ல பெருந்தொகை பணம் கிடைத்தது எவ்வாறு? விசாரணைக்கு இன்டர்போலின் உதவியை நாடும் றோ

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குப் புகலிடம் கோரி செல்லும் தமிழர்களிடம் பெருமளவில் பணம் புழங்குவது குறித்து விசாரிக்க இன்டர்போல் உதவியை றோ, ஐ.பி. ஆகியவை நாடவுள்ளன. கொல்லம் ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த 37 இலங்கைத் தமிழர்களை வெள்ளி நள்ளிரவு பொலிஸார் கைது செய்து கொல்லம் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட 37 பேரில் முல்லைத்தீவைச்  சேர்ந்த தரகர் டென்னீசன் என்பவரைக் கேரள காவல்துறையினர் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் முல்லைத்தீவுமற்றும் இலங்கையின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களை இவரும் (டென்னீசன்) மற்றும் சிவா என்பவரும் படகுகள் மூலம் அழைத்து வந்து கேரளா வழியாகக் கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடல் மார்க்கமாக அனுப்பி வைப்பதும், அதற்காக ஒரு நபருக்கு ரூ.2 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை கட்டணம் வசூலித்து வருவதும் தெரிய வந்துள்ளது. இதைத் தொழிலாகவே செய்து வருகிறார்களாம் டென்னீசனும் சிவாவும். (மேலும்)  11.05.10

____________________________________________________________________________________________

ததேகூ உறுப்பினர் இருவர் அரசுடன் இணைவு? : தனக்குத் தெரியாது என்கிறார் சுரேஷ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அரசுடன் இணைய உள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணையவுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரமேசந்திரனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் வீரகேசரி இணையத்தளத்திற்கு இவ்வாறு தெரிவித்தார். 

____________________________________________________________________________________________

மன்னாரில் மாணவர் கடத்தல் முயற்சி முறியடிப்பு

 மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவரை இன்று காலை 7.30 மணியளவில் மன்னார் பஸ்தரிப்பு நிலையப் பகுதியில் இனம் தெரியாத சிலர் கடத்த முயற்சி செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மன்னாரில் பதற்ற நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது: மன்னார் எழுத்தூர், செல்வநகர் பகுதியைச் சேர்ந்த மாணவர் த. கவிதரன் (வயது 10) அங்கிருந்து, பாடசாலைக்குப் பஸ்ஸில் செல்வது வழமை. இன்றும் அவர் மன்னார் பசார் பகுதியில், பஸ்ஸிலிருந்து இறங்கி பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இதன்போது பசார் பகுதியில் சற்றுத் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற வாகனத்தின் கதவு திறக்கப்பட்ட நிலையில், மாணவரை பலவந்தமாக வாகனத்தில் ஏற்ற சிலர் முற்பட்டனர். எனினும் மாணவர் கூச்சலிட்டதையடுத்து, சற்றுத் தொலைவில் நின்ற வீதிப் போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸார் ஓடி வந்துள்ளனர். (மேலும்)  11.05.10

____________________________________________________________________________________________

பதவி விலகுவேன்"-பிரவுன்

பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் இன்னும் சில மாதங்களில் தொழிற்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலக எண்ணியிருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், தான் ஒரு ஸ்திரமான அரசை அமைக்கத் தேவையான காலத்துக்கு அதிகமாக தனது பதவியில் இருக்க விரும்பவில்லை என்றும் கூறிய பிரவுன், தொழிற்கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டி ஒன்றை நடத்தும் வழிமுறையை தொடங்குமாறு தொழிற்கட்சியை கோரப்போவதாகவும் அவர் கூறினார். மேலும் தனது தொழிற்கட்சி, ஏற்கனவே கன்சர்வேடிவ் கட்சியினருடன் பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கும், லிபரல் ஜனநாயகக் கட்சியுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்போவதாகவும் கார்டன் பிரவுன் அறிவித்துள்ளார்

____________________________________________________________________________________________

கிழக்கு மாகாண சபையில் நிதி மோசடி நடக்கவில்லை - முதலமைச்சர் பிள்ளையான் அறிவிப்பு

நிதி மோசடி குறித்த குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என தமிழ்மக்கள் விடு தலைப்புலிகள் அறிவித்துள்ளது. கிழக்கு மாகாண சபையில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக கடந்த வாரம் வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் தெரி விக்கப்பட்டிருந்தது. எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண் மைக்கு புறம்பானவை என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். எந்தவிதமான ஆதாரமும் இன்றி குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஆசாத் மெளலானா தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கிழக்குமா காண ஆளுநர் காரியாலயம் விளக்கமளிக் கவேண்டும் என தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப் பிட்டுள்ளார். 2008ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில் கிழக்கு மாகாணசபையில் பல்வேறு நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப் பதாகத் தெரிவித்து பணம் பெற்றுக் கொள்ளல், தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தல் மற்றும் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றுக்கான கொடுப்பனவு போன்ற நடவடிக்கைகளில் மோசடி இடம் பெற்றுள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது.

____________________________________________________________________________________________

பார்வதி அம்மாள் இலங்கை திரும்பினார்- சிவாஜிலிங்கம்

 விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாள் மலேசியாவிலிருந்து இன்று மாலை இலங்கை வந்தடைந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் வீரகேசரி இணையதளத்திற்கு தெரிவித்தார். பார்வதி அம்மாள் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இந்தியா அவருக்கான அனுமதியை வழங்கவில்லை. இந் நிலையில் மலேசியா ஒரு மாதம் தங்குமிடம் வீசாவை வழங்கி சிகிச்சை பெற அனுமதியளித்திருந்தது. எனினும் பார்வதி அம்மாள் இன்று மாலை யாரும் எதிர்பாராத வகையில் கொழும்பு சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமது இணையதளத்துக்கு மேலும் தெரிவித்தார்.

____________________________________________________________________________________________

500 முன்னாள் புலி உறுப்பினர்கள் இவ்வாரம் பெற்றோரிடம் ஒப்படைப்பு

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 500 பேர் இவ்வாரம் தமது பெற்றோர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். இம்மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வெற்றிவாரம் கொண்டாடப்படவுள்ள அதேசமயம் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஐநூறு பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள ஐநூறு பேரில் சிறுவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சாதாரண பொது மக்களும் அடங்குவர் என்றும் குறிப்பிட்டார். நாளாந்தம் சமூக நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் தேவையான சகல பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்ப ட்டுள்ளதுடன் போதிய வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.உளவியல் ரீதியில், விசேட பயிற்சிகளும், ஆளுமை, தலைமைத்துவம், குழுச் செயற்பாடு, விளையாட்டு ஆகிய துறையில் போதிய பயிற்சிகள் வழங்கப்பட்டு சமூக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பொருத்தமானவர்கள் என அடையாளங் காணப்பட்டவர்களே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

____________________________________________________________________________________________

கண்ணிவெடி அகற்றும் போது பிரெஞ்சு அதிகாரி மரணம்

வவுனியாவுக்கு அப்பாலுள்ள இரணை இலுப்பை குளத்தில் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் பணியின் போது பிரான்ஸ் நாட்டு அதிகாரியொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.  கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கண்ணவெடி வெடித்ததன் காரணமாகவே உயிரிழப்பு நேர்ந்துள்ளது என்று எப். எஸ். டி. நிறுவனத்தின் வவுனியா மாவட்ட முகாமையாளர் எஸ். தியாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், எப். எஸ். டி. நிறுவனம் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களில் ஒன்றாகும். இது சுவிஸ் நாட்டு அமைப்பாகும். இந்நிறுவனத்தில் தொழில் நுட்ப உத்யோகத்தராகப் பணியாற்றி வந்த பிரான்ஸ் நாட்டவரே உயிரிழந்துள்ளார்.ரணை இலுப்பைக்குளத்தில் நேற்று காலை கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென கண்ணி வெடியொன்று வெடித்ததால் இந் நபர் உயிரிழந்திருக்கிறார்.

____________________________________________________________________________________________

இத்தாலிக்கு அரசியல் புகலிடம் கோரிச் சென்ற  இலங்கைத் தமிழர்கள் ஒன்பது பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரின் உயர் அதிகாரி ஒருவரே தங்களை இத்தாலிக்கு அனுப்பியதாக கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரும் தெரிவித்தனர். அமைச்சர் ஒருவரின் உதவியாளர் தங்களை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பிவைத்தாகவும்  அந்த ஒன்பது பேரும் மேலும் குறிப்பிட்டனர். எனினும் இதனை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க மறுத்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டவர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதாகவும் பிரசாத் சமரசிங்க குறிப்பிட்டார். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் இத்தாலிக்கு சட்டவிரோதமான முறையில் சென்றிருக்கலாம் எனவும் அவர் மேலும் கூறினார்.

____________________________________________________________________________________________

அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகின் மீது படுத்து தீ மூட்டி உயிர் நீத்த வயோதிபர்! ஏழாலையில் சனியிரவு அதிர்ச்சியூட்டும் சம்பவம்

இப்படியும் ஒருவர் தனக்குத்தானே செய்து கொள்வாரா? என  ஆச்சரியத்தை யும் உணர்வையும் தரும் விதத்தில் முதி யவர் ஒருவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த விறகு அடுக்கின்மேல் படுத்துத் தனக்குத் தானே தீ மூட்டித் மரணித்துள்ளார் என்று கூறப்படுகின்றது. இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு ஏழாலையில்   நிகழ்ந்ததாகத் தெரியவருகிறது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது: ஏழலை சைவ சன்மார்க்க வித்தியாசா லைக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் ஒன் றில் வசித்து வந்த முதியவரான உமாபதி (வயது68) என்பவரே இவ்வாறு தனத்குத்தானே தீ மூட்டி மரணித்துள்ளார். வீட்டாருக்கு நித்திரைகொள்ளச் செல்வதாகக் கூறிய முதியவர் வீட்டில் உள்ளவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேரத்தில் அங்கு அடுக்கி வைத்திருந்த விறகின் மீது படுத்துத் தனக்குத்தானே தீ மூட்டியுள்ளார் என்று சொல்லப்படுகின்றது. வீட்டில் உள்ளவர்கள் காலையில் இவரைக் காணவில்லையே எனத் தேடியபோதே விறகு அடுக்கப்பட்டிருந்த இடத்தில் எரிந்த நிலையில் அவரின் சடலம் காணப்பட்டதாகவும் வீட்டார் சுன்னாகம் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்து,மல்லாகம் நீதிவானின் பணிப்புக்கு அமைய முதியவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கெண்டு வருகின்றனர்.

____________________________________________________________________________________________

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் ஜனாதிபதிக்கு முழுமையாக ஒத்துழைப்போம் ஏமாற்றமாட்டோம், நேர்மையுடன் இருப்போம்; சம்பந்தன்

கடும்போக்கு சக்திகளின் கருத்துகளை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. எமது விஞ்ஞாபனத்தில் கடும்போக்கான நிலைப்பாடுகள் இருக்கவேண்டுமென அவர்கள் விரும்பியிருந்தனர். ஆனால், நாங்கள் அவற்றை நீக்கிவிட்டோம். தேர்தலில் அவர்கள் யாவரும் தோற்றுவிட்டனர்.

sambanthan_rநேர்மையாகவும் நம்பிக்கையாகவும் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் ஆயத்தமாக இருப்பதாகவும் அரசாங்கம் தங்களை நம்பவேண்டுமென விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். "நாங்கள் மிதவாத தமிழ் அரசியல் கட்சியினராகும். வட, கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 18 தமிழ் எம்.பி.க்களில் 14 பேர் எமது கட்சியிலிருந்து வந்துள்ளனர். கடும்போக்கு சக்திகளின் கருத்துகளை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. எமது விஞ்ஞாபனத்தில் கடும்போக்கான நிலைப்பாடுகள் இருக்கவேண்டுமென அவர்கள் விரும்பியிருந்தனர். ஆனால், நாங்கள் அவற்றை நீக்கிவிட்டோம். தேர்தலில் அவர்கள் யாவரும் தோற்றுவிட்டனர். நம்பிக்கையில்லாத ஆட்களுக்கு நாங்கள் நியமனப் பத்திரங்களை வழங்கியிருக்கவில்லை. அவர்கள் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு போட்டியிட்டனர். அவர்கள் ஒவ்வொருவருமே தேர்தலில் தோற்றுவிட்டனர். ஆகவே, நாங்கள் மிகவும் நேர்மையுடனும் வெளிப்படையாகவும் செயற்பட்டிருந்தோம். கடந்த காலத்தில் கூட செல்வநாயகத்தின் தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த் தரப்பானது 100% நேர்மையாக இருந்ததாக சம்பந்தன் நினைவுகூர்ந்திருக்கிறார். 1970 தேர்தல் விஞ்ஞாபனத்தில் பெடரல் கட்சியானது பிரிவினைவாதத்தை எந்த வேட்பாளராவது அல்லது கட்சியாவது வரித்துக்கொண்டால் அவர்களுக்கு எதிராக வாக்களிக்குமாறு தமிழ் மக்களுக்கு பெடரல் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அவற்றை எமது விஞ்ஞாபனத்தில் நாம் எழுத்தில் குறிப்பிட்டிருந்தோம். அதுவே எமது நேர்மைத் தன்மையாகும்.  (மேலும்)  10.05.10

____________________________________________________________________________________________

தாயாரிடமிருந்த கைக்குழந்தையை துவக்கு முனையில் கடத்த முயற்சி வெள்ளவத்தை உருத்திரம்மாவத்தையில் அதிர்ச்சி சம்பவம்

இந்தச் சம்பவம் பற்றி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் சுமார் 40 நிமிடத்திற்குப் பின்னரே அவர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்.

கொழும்பு வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு காரொன்றினுள்ளிருந்த பெண்ணின் குழந்தையைத் துப்பாக்கி முனையில் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி, அந்தப் பெண்ணின் துணிச்சலால் கைகூடவில்லை. சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் இடம்பெற்ற இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பற்றி தெரியவருவதாவது;அப்பகுதியிலுள்ள தனியார் ரியூசன் வகுப்புக்குச் சென்ற மகளை கூட்டிச்செல்வதற்காக தாயொருவர் தனது கைக்குழந்தையுடன் காரில் வந்துள்ளார்.வகுப்பு முடிவடைந்து மகள் வருவதை எதிர்பார்த்து இந்தப் பெண் காரில் பின் ஆசனத்தில் தனது கைக்குழந்தையுடனிருந்த போது, அந்த வீதியில் ஆட்டோவொன்றிலிருந்து இதனை அவதானித்துக் கொண்டிருந்த இருவர், திடீரென காரை நெருங்கிச் சென்று துப்பாக்கியை நீட்டி காருக்குள்ளிருந்த பெண்ணிடமிருந்த குழந்தையைப் பறிக்க முற்பட்டுள்ளனர். (மேலும்)  10.05.10

____________________________________________________________________________________________

பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை : மத்திய அரசு அனுமதி 

paarvthi2பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சையளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்துத் தமிழக அரசு தரப்பில், முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்குக் கடிதம் அனுமதி கோரியிருந்தார். இதையடுத்து தமிழக அரசுக்குப் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய அரசு. அக்கடிதத்தில், "பார்வதி அம்மாள் மீதான தடை நீக்கப்படும். அவர் இந்தியா வருவதற்கு 6 மாத கால விசா வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளது. மேற்கண்ட இந்தத் தகவல் இன்று சட்டமன்றத்தில் 110 தீர்மானத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது. பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். இது குறித்து தமிழக அரசு வக்கீல் ராஜா கலிபுல்லா, பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளிடம் இருந்து அரசுக்கு இதுவரை எந்தக் கோரிக்கையும் வரவில்லை. அவர் மனு கொடுத்தால் அதை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கேட்கப்படும். அதன் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுமதிக்க தயார் என்று தெரிவித்திருந்தார். (மேலும்)  10.05.10

____________________________________________________________________________________________

ராகுல்காந்தி வருகையால் அதிரடி சோதனை: கேரள ஓட்டலில் தங்கி இருந்த 38 இலங்கை தமிழர்கள் கைது

விடுதலைப்புலிகளுடன் தொடர்பா? உளவு பிரிவு உயர் அதிகாரிகள் விசாரணை

rahul-gandhiராகுல் காந்தி வருகையை தொடர்ந்து நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், கேரள ஓட்டலில் தங்கி இருந்த இலங்கை தமிழர்கள் 38 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்த மத்தியஉளவு பிரிவு உயர் அதிகாரிகள் கேரளா விரைந்துள்ளனர். கேரள கடல் பகுதி வழியாக விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் ஊடுருவ முயற்சிப்பதாக, மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் சமீபத்தில் ரகசிய தகவல் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலை பார்வையிடுவதற்காக இன்று (திங்கட்கிழமை) கேரள மாநிலம் வர இருக்கிறார். அதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக கேரள போலீசார் மாநிலம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினார்கள்.கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொல்லம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் (லாட்ஜ்) நடந்த சோதனையில், அங்கு இலங்கை தமிழர்கள் 38 பேர் தங்கி இருந்தது தெரிய வந்தது. அவர்களில் 5 பேர் பெண்கள், 5 பேர் குழந்தைகள். போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில், இலங்கையில் திரிகோண மலை, கிளிநொச்சி பகுதியை சேர்ந்த அவர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு அகதிகள் முகாமில் தங்கி இருந்தது தெரிய வந்தது. (மேலும்)  10.05.10

____________________________________________________________________________________________

தமிழர்களின் போராட்டம் திரும்பவும் ஏற்படாமல் தடுப்பதற்கு நல்லிணக்க முயற்சிகள் தேவைப்படுகின்றது

sinhal tamil unityஇலங்கையின் மோதல் முடிவுக்கு வந்து 12 மாதங்களாகிவிட்டன. தமிழர்களின் போராட்டம் திரும்பவும் ஏற்படாமல் தடுப்பதற்கு நல்லிணக்க முயற்சிகள் தேவைப்படுகின்றது என்ற கவலைகள் ஆய்வாளர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகிறது. அவுஸ்திரேலியாவை பொறுத்தவரை இது நடுநிலையாக இருக்க வேண்டிய பிரச்சினை அல்ல. அவுஸ்திரேலிய கரைக்கு படகுகளில் வந்தவர்களில் 20 சதவீதமானவர்கள் இலங்கையர்களாகும். அவர்களில் அநேகமானவர்கள் தமிழர்களாகும். ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதிகளவு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுள்ளார். இந்நிலையில், "ராஜபக்ஷ தேசத் தலைவராக விளங்குவதற்கு உண்மையான சந்தர்ப்பம் காணப்படுகிறது என்று இராஜதந்திரி ஒருவர் "தவீக்கன்ட் அவுஸ்திரேலியன் பத்திரிகைக்கு கூறியுள்ளார். இதுவரை அர்த்த புஷ்டியுடனான நல்லிணக்கம் தொடர்பாக சிறிதளவு வெளிப்பாடே காட்டப்பட்டிருக்கிறது. தமிழ்ப் பிராந்தியங்களுக்கு அதிகளவு சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தோனேசியா போன்று வழங்கப்பட வேண்டுமென்ற கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. . (மேலும்) 10.05.10

____________________________________________________________________________________________

ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்றவர்கள்: பழுதடைந்த படகில், நடுக்கடலில் தத்தளித்த இலங்கை தமிழர்கள் 5 பேர் பலி

ஆஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் கேட்டுச் சென்ற இலங்கை தமிழர்கள் 5 பேர், படகு பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்து பலியானார்கள். இலங்கையில் போர் ஓய்ந்த பிறகு, ஏராளமான தமிழர்கள் அகதிகளாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகிறார்கள். அப்படி செல்கிறவர்கள் மோசமான படகுகளில் நீண்ட தூரம் பயணிப்பதாலும், சமீப காலமாக ஆஸ்திரேலியாவில் அகதிகளை அனுமதிக்க மறுப்பதாலும் ஆபத்தில் சிக்கி வருகிறார்கள். இதேபோல் 64 இலங்கை தமிழர்கள் பயணம் செய்த படகு ஒன்று, ஆஸ்திரேலியா நாட்டின் எல்லையில் இந்தியப் பெருங்கடலில் பழுதடைந்தது. இதனால் நடுக்கடலில் சிக்கித் தவித்த பயணிகளை நேற்று முன்தினம் ரஷிய கப்பல் ஒன்று மீட்டது. அதில் இருந்த 59 பயணிகள் மட்டுமே பத்திரமாக கப்பலில் ஏற்றப்பட்டனர். 5 பயணிகளை காணவில்லை. அவர்கள் அணிந்திருந்த உயிர் காப்பு கவசங்கள், டிïப் போன்றவை அந்த பகுதியில் மிதந்து கொண்டிருந்தன. (மேலும்)  10.05.10

____________________________________________________________________________________________

அன்னையர் தினம்: இந்தியா மகிழ்ச்சிகரமான இடம் இல்லை - ஆய்வு

(மே.9)  உலகம் முழுவதும் அன்னையர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், சேவ் தி சில்ட்ரன் என்ற சிறார் உரிமைக் கழகம் நடத்திய ஆய்வில் இந்தியா தாய்மார்களுக்கு மகிழ்ச்சிகரமான நாடாக இல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வருவாயினரை அதிகம் கொண்ட நாடுகள் மத்தியில், தாய்மார்களுக்கான சுகாதாரம் மற்றும் நலன்கள் இந்தியாவில் மிகவும் மோசமாக உள்ளதாம். மொத்தம் உள்ள 77 நாடுகளில் 73வது இடம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. சேவ் தி சில்ட்ரன் என்ற சிறார் உரிமைக் கழகம் நடத்திய ஆய்வு முடிவில்தான் இவ்வாறு கூறியுள்ளனர். இதை விட அதிர்ச்சிகரமாக மிகவும் வறுமையில் உழலும் காங்கோ, கென்யாவை விட இந்தியாவில் நிலைமை மோசமாக இருப்பதாகவும் அது கூறியுள்ளதுதான் பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது. தாய்மார்களுக்கான சிறந்த நாடாக் கியூபா தேர்வு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல், அர்ஜென்டினா, பார்படோ ஸ், தென் கொரியா, சைப்ரஸ், உருகுவே, கஜகஸ்தான், பஹாமஸ், மங்கோலியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சீனாவுக்கு 18வது இடமும், இலங்கைக்கு 40வது இடமும், பாகிஸ்தானுக்கு 75வது இடமும் கிடைத்துள்ளன. (டிஎன்எஸ்)

____________________________________________________________________________________________

பிரிட்டனில் யாருக்கு ஆட்சி: பெரும் இழுபறி நீடிப்பு

லண்டன்:பிரிட்டனில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.பிரிட்டனில் கடந்த 6ம் தேதி, 649 இடங்களுக்கான பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி, 306 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் தொழிலாளர் கட்சி, 251 இடங்களிலும், ஜனநாயக விடுதலை கட்சி, 52 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் இரண்டாம் உலக போருக்கு பின் பிரிட்டனில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. பிரதமர் கார்டன் பிரவுனும், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேவிட் கேமரூனும், ஜனநாயக விடுதலை கட்சித் தலைவர் நிக்லெக்குடன் கூட்டணி ஆட்சி நடத்துவது குறித்து பேசியுள்ளனர்.அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள கன்சர்வேடிவ் கட்சியும், ஜனநாயக விடுதலை கட்சியும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு தீவிர முயற்சி நடக்கிறது. முதல் சுற்று பேச்சில் சில விஷயங்கள் ஒத்து வராததால் இரண்டாவது சுற்று பேச்சு இன்று நடக்கிறது.முதல் சுற்று பேச்சுவார்த்தையில், கல்வி, சுற்றுச்சூழல்,பொருளாதார விஷயங்களில் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக்கொள்ளப்பட்டது. இன்னும் சில விஷயங்களில் உடன்பாடு ஏற்படாததால் இன்று நடக்கும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என தெரிகிறது.

____________________________________________________________________________________________

யுத்த வெற்றிக் கொண்டாட்டம் மே 20ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியினைக் கொண்டாடும் முகமாக எதிர்வரும் மே 20ஆம் திகதி காலிமுகத்திடலிலும் நாடாளுமன்ற மைதானத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு அருகிலும் இடம்பெற இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை மே 12ஆம் திகதி முதல் மே 18ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

____________________________________________________________________________________________

கட்சி நிதியில் மோசடி செய்ததாக ரணில் மீது குற்றச்சாட்டு

ranil-1ொழும்பு, மே 9- ஐக்கிய தேசியக் கட்சிக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட நிதியை அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே மோசடி செய்ததாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலின்போது, ரணில் கட்சிக்கு ஆசிய நாடு ஒன்று 300 மில்லியன் ரூபாய் வழங்கியதாகவும், மேலும் பல மில்லியன் ரூபாய்களை ஏனைய நாடுகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வழங்கியதாகவும், அவற்றில் பெரும்பாலான தொகையை ரணில் விக்கிரமசிங்கே முறைகேடு செய்துவிட்டதாகவும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் அந்த நிதி வேட்பாளர்களுக்கு உரிய முறையில் சென்றடையாத காரணத்தால் ஆளுங்கட்சியினரின் பிரசாரத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்றும் கட்சித் தலைவர்கள் கூறியிருப்பதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 300 மில்லியன் ரூபாய் அளவுக்கு யாரும் நன்கொடை வழங்கவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொருளாளர் மலிக் சமரவிக்கிரம கூறியுள்ளதாகவும் இணையதளச் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

____________________________________________________________________________________________

பிரிட்டன் இளவரசர் ஹாரியை கடத்துவோம்: அல்-காய்தா எச்சரிக்கை

லண்டன், மே 9: பிரிட்டன் இளவரசர் ஹாரி, ஆப்கானிஸ்தானில் போர் ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டால் அவரை நிச்சயம் கடத்துவோம் என அல்-காய்தா மிரட்டல் விடுத்துள்ளது. அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு, அரேபிய இணையதளம் ஒன்றில் அடுக்கடுக்காக எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில் பிரிட்டன் இளவரசர் ஹாரியை கடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.  போர் ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபடவுள்ள இளவரசர் ஹாரியை நாங்கள் கடத்திவிட்டால் அது எங்களுக்கு அதிசயமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்றும் அல்-காய்தா குறிப்பிட்டுள்ளதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது.

____________________________________________________________________________________________

30 வருடங்களின் பின் கிளிநொச்சி நீதிமன்றம் நாளை திறப்பு

 சுமார் 30 வருட காலத்தின் பின், கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் நாளை 10ஆம் திகதி திங்கட்கிழமை முதல் செயல்படவுள்ளதாக அரச இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. நீதிமன்றம் முன்னர் இயங்கிய கட்டடம் சேதமடைந்துள்ளதால், அதற்கு அருகிலுள்ள தனியார் கட்டடம் ஒன்றிலேயே நீதிமன்றம் இயங்கவுள்ளது. குடியியல் மேன்முறையீட்டு மேல்நீதிமன்ற நீதிபதி ஜே. விஸ்வநாதன் நீதிமன்ற கட்டிடத்தை வைபவ ரீதியாக காலை 9.00 மணிக்குத் திறந்து வைப்பார். கிளிநொச்சி நீதிமன்றுக்கு சாவகச்சேரி, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் கடமையாற்றிய அலுவலர்கள் கடந்த முதலாம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

____________________________________________________________________________________________

படித்த இளைஞர், யுவதிகள் வெளிநாடுகளை நாடுவதால் எமது நாட்டுக்கு பாரிய பாதிப்பு: சிந்திக்க வேண்டிய காலம் வந்து விட்டதாகக் கூறுகிறார் ஜனாதிபதி

rajapakshaநம் நாட்டில் படித்த இளைஞர், யுவதிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதால் நாட்டுக்கும் சமூகத்திற்கும் பாரிய நஷ்டம் ஏற்படுகின்றது. இந் நிலைமையை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வதே நல்லது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டி - அஸ்கிரிய பலிப்பானந்த சந்தானந்த பெளத்த வித்தியாலயத்தில் ஏழு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆறு மாடி கட்டடத்திற்கு அடிக்கல் நடும் விழா கடந்த 08 ம் திகதி நடைபெற்றது. அந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ஆதி காலம் தொட்டு விகாரைகளை மையதாகக் கொண்டு இயங்கி வந்த கல்வி முறை தற்போது திசை மாறியுள்ளதால் கல்வித்துறையில் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. ஏகாதிபதிகள் அவர்களின் தேவைகளை முன்னெடுப்பதற்காக மட்டுமே பாடசாலை களை பயன்படுத்தினார்கள். இதனால் இந் நாட்டின் பெளத்த கல்வி முறை பின்னடைவு கண்டது. இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட நான்கு ஆண்டுகளில் மாணவர்கள் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். இங்கு நூறு வீத பெறுபேறுகளை மாணவர்கள் பெற்றுள்ளதாக அதிபர் தெரிவித்தார். (மேலும்) 10.05.1

விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீசபாரத்தினம் மற்றும் போராளிகளின் 24வது ஆண்டினை நினைவுகூர்ந்து கனடாவில் இடம்பெற்ற நினைவஞ்சலி கூட்டம்!

-ராஜ்மோகன்

விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ரெலோ இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினம் உட்பட படுகொலை செய்யப்பட்ட உறுப்பினர்களை நினைவுகூர்ந்து கடந்த சனிக்கிழமை கனடா ரொறன்ரோ நகரில் அஞ்சலி கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த இயக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவராக கனடாவில் கடந்த 15 ஆண்டுகளிற்கு மேலாக செயல்பட்டுவரும் சிவா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 1986ம் ஆண்டு விடுதலை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கம் மீதான சகோதர படுகொலையால் அந்த இயக்கத்தின் தலைவர் உட்பட 100க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டதை முன்னிட்டு கனடா ரொறன்ரோ எக்கிலின்ரன் வீதியில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் அஞ்சலி கூட்டம் கடந்த சனிக்கிழமை(08.05.2010) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ரெலோ உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி அஞ்சலி கூட்டத்தில், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட, கனடாவின் றோஜ்றிவர் தொகுதியின் 42ம் இலக்கத்தின் கவுண்சிலராக போட்டியிடும் நமு பொன்னம்பலம், இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள், ஊடகவிலாளாகளான மனோ ரஞ்சன், ராஜா யோகராஜா என பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர். (மேலும்) 10.05.10

____________________________________________________________________________________________

மன்னார் நகரப்பகுதிகளில் விசேட பாதுகாப்பு

மன்னார் பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து மன்னார் நகரப்பகுதிகளில் இரவு நேரங்களில் பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் காரணம் எதுவும் இன்றி நடமாடுபவர்களை கைது செய்யுமாறு பொலிசாருக்கு அறிவிக்கப்ட்டுள்ளது. இந்நிலையில் மன்னார் பகுதிகளில் நேற்று இரவு 11.30 மணியளவில் எவ்வித காரணமும் இன்றி நடமாடிய 02 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

____________________________________________________________________________________________

வவுனியா வடக்கில் இன்று 500 குடும்பங்கள் மீள் குடியமர்வு: படையினர் நிலைகொண்டிருந்த இடங்களில் மக்களை மீளக் குடியமர்த்த படையினர் ஒத்துழைப்பு

வவுனியா வடக்கில் இன்று திங்கட்கிழமை 500 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படவிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். இதேவேளை வவுனியா மாவட்டத்தில் படையினர் நிலைகொண்டிருந்த அரச கட்டடங்கள், தனியார் காணிகள் என்பவற்றில் பொது மக்களை மீளக்குடியமர்த்த படையினர் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அரச அதிபர் மேலும் கூறினார். அந்த வகையில் முதற் கட்டமாக பேயாடிகூழான்குளம் முகாம் அமைந்த பகுதியில் 65 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்களுள் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் தலா ஒருவர் இன்று திங்கட்கிழமை தமது சொந்த இடத்தை பார்வையிடுவதற்காக முகாம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் செல்லப்படவிருப்பதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டார். (மேலும்) 10.05.10

____________________________________________________________________________________________

SMS அச்சமூட்டிய குறுந்தகவல்: சூத்திரதாரிகளை கண்டுபிடிக்குமாறு தொ.தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவு

அநாமதேய குறுந்தகவல்கள் மூலம் பொதுமக்களை வீண் பீதிக்கு உட்படுத்தியவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தொலைத் தொடர்பு நிறுவனங்களைக் கோரியுள்ளது. இது தொடர்பில் நேற்றுத் தகவல் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ்பெல்பிட்ட குறுந்தகவல்கள் மூலம் புரளியைக் கிளப்பியவர்களைக் கண்டுபிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது தொடர்பில் தொலைத் தொடர்பு நிறுவனச் செயற்பாட்டாளர்களுக்கு விசேட பணிப்புரைகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு உறுதிப்படுத்தப்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார். இதேவேளை மேற்படி புரளிகளைக் கிளப்பியவர்கள் சம்பந்தமாகத் தகவல்களைத் தெரிவிக்க முன்வருவோர் பொலிஸ் நிலையங்களில் தமது தகவல்களைத் தெரிவிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

____________________________________________________________________________________________

திவாலாகும் கிரேக்கம்!

greeceபொருளாதார நெருக்கடிப் புயல் இப்போது ஐரோப்பாவை மையம் கொண்டிருக்கிறது. முதலில் பலியாகியிருப்பது கிரேக்கம். கடந்த 2002-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட நாணயமாற்றம்தான் கிரேக்கப் பொருளாதார வீழ்ச்சியின் தொடக்கம். அப்போது புழக்கத்திலிருந்த ட்ராக்மா நாணயத்தைக் கைவிட்டுவிட்டு, ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளின் யூரோ நாணயத்தில் ஐக்கியமானது கிரேக்கம். இதையொட்டி அதிரடியாகப் பல பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவையெல்லாம்தான் தற்போது கிரேக்கத்தை நெருக்கடியில் தள்ளியிருக்கின்றன. இதுபோக, கடந்த சில ஆண்டுகளாகவே தகுதிக்கு மீறிய செலவுகளைச் செய்தது கிரேக்க அரசு. 2004-ல் ஒலிம்பிக் போட்டிகளை ஆடம்பரமாக நடத்தி கையைச் சுட்டுக் கொண்டது. இது கடுமையான பற்றாக்குறை பட்ஜெட்டுக்கு வழிவகுத்தது. உள்நாட்டு நிதிநெருக்கடியையே சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த கிரேக்கத்துக்கு சர்வதேச பொருளாதார நெருக்கடி அடுத்த பாதிப்பாக அமைந்தது. உலக அளவில் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு எந்த அளவிலும் தயாராகாததால், மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகப் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, நாட்டில் வரி ஏய்ப்பு உச்சத்துக்குச் சென்றது. விளைவு, ஒட்டுமொத்த உற்பத்தியில் 13.6 சதவீதம் பற்றாக்குறை. (மேலும்) 09.05.10

____________________________________________________________________________________________

ஜிஎஸ்பி வழங்க நிபந்தனைகள் எதுவும் இல்லை : ஐரோப்பிய ஒன்றியம்

europeanflagஇலங்கைக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்க நிபந் தனைகள் அடங்கிய பட்டியல் ஒன்றை அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கவில்லை என்று இலங்கைக்கும் மாலை தீவுக்குமான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு தெரிவித்துள்ளது. இந்த முக்கியமான வரிச்சலுகைகளை தொடர்ந்தும் அனுபவிப்பது பற்றிய பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக அரசாங்க தூதுக்குழு ஒன்று இந்த மாத பிற்பகுதியில் பிரஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்திற்குச் செல்லவிருக்கிறது. இம்மாதம் 20ஆம் 21ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் இப்பேச்சுவார்த்தைகளில், வரிச்சலுகைகளைப் பெறுவதற்கு இலங்கைக்கு இருக்க வேண்டிய தகைமை குறித்து ஆணைக்குழு 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட இறுதி அறிக்கையில் முக்கியமாக குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் பற்றி ஆராயப்படும் என்று கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையே தொடர்ந்து நடைபெற்றுவரும் கலந்துரையாடலின் ஓர் அம்சமாகவே இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தைகள் அமையும் என்றும் இவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. (மேலும்) 09.05.10

____________________________________________________________________________________________

கொம்பனித்தெரு வீடுகள் உடைப்புக்கு யார் பொறுப்பு ? கொழும்பு மாநகர சபை மறுப்பு

slaveislandகொம்பனித்தெரு பிரதேசத்தில் சட்ட விரோத வீடுகள் அகற்றப்பட்டமைக்கு கொழும்பு மாநகர சபை பொறுப்பு இல்லை என தமிழ்மிரர் இணையதளத்துக்கு பிரதான நகர நிர்வாகியாக விளங்கும் ஒமர் காமில் சற்று முன்னர் தெரிவித்தார். வீடுகள் உடைக்கப்படும் வரை கொழும்பு மாநகர சபைக்கு எதுவும் தெரியாது என்றும் ஒமர் காமில் தமிழ்மிரர்  இணையதளத்திடம் குறிப்பிட்டார். இந்த வீட்டுக்குடியிருப்பாளர்களுக்கு முன்னறிவித்தல் கொடுத்தீர்களா என்று தமிழ்மிரர் இணையதளம் வினவியது. ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் வீடுகள் உடைக்கப்படும் என்று அறிவித்தல் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. எனினும்அண்மைக்காலத்தில் கொழும்பு மாநகர சபை எந்த வித அறிவித்தலையும் கொடுக்கவில்லை என்றும் கொழும்பு  நகரின் பிரதானியாக விளங்கும் ஒமர் காமில் மேலும் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார். (மேலும்) 09.05.10

____________________________________________________________________________________________

இலங்கைத் தமிழர் கேரளாவில் விசாரணை

உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 36 இலங்கைத் தமிழர்களை இந்தியாவில் கேரள மாநில போலீசார் தடுத்து வைத்திருக்கிறார்கள். ஐந்து பெண்கள், ஐந்து குழந்தைகள் உள்பட 36 இலங்கைத் தமிழர்களும் தமிழ்நாட்டில் சென்னை நகரில் இருந்து பல்வேறு வழிகளில் கேரள மாநிலம் கொல்லம் நகருக்கு வந்திருக்கிறார்கள். ஹோட்டலில் தங்கியிருந்த இவர்களை தமிழக போலீசார் கொடுத்த தகவலின்பேரில் பிடித்துள்ள கொல்லம் போலீசார், என்ன காரணத்துக்காக அவர்கள் அங்கு வந்தார்கள் என விசாரித்து வருகிறார்கள். இதுதொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய கொல்லம் நகர போலீஸ் கண்காணிப்பாளர் ஹர்ஷிதா அடலூரி, இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணை மட்டுமே நடத்தப்படுவதாகவும், அவர்களுக்கு எதிராக சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளோ, ஆவணங்களோ இல்லை என்றும் தெரிவித்தார். அதே நேரத்தில், அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைப்பதாகக் கூறி, அவர்களிடமிருந்து 2 லட்சம் மூதல் 5 லடசம் ரூபாய் வரை பணம் வசூலித்த சிவா, டெனிஸ் ஆகிய இரண்டு ஏஜென்டுகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் போலீஸ் கண்காணிப்பாளர் ஹர்ஷிதா அடலூரி தெரிவித்தார்.

____________________________________________________________________________________________

செம்மொழி மாநாடு தமிழ் காக்கப் பயன்படுமா?

வீ.கரிகாலன்

1967ல் தமிழை ஓர் அரசியல் அணிதிரட்டலுக்கான உபாயமாக கொண்ட திராவிட இயக்கத்தார் தமிழகத்தில் ஆட்சிப்பொறுப் பேற்ற பிறகுதான் ஆங்கில வழிக் கல்வி நிறுவனங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும், புற்றீசல்கள் போலப் புறப்பட்டு “இடறி விழுந்தால் ஒரு இங்கிலீஷ் பள்ளியில்” விழும் நிலை தமிழகத்தில் உருவானது. எந்த மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவராக இருப்பினும் முதல் வகுப்புத் தொடங்கி மேல்நிலை வகுப்பு வரை தாய்மொழி முதல் பாட மாகவும், இரண்டாம் பாடமாக ஆங்கிலமோ அல்லது வேறொரு விருப்ப மொழியோ அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால் தமிழ்வழிக்கல்வி என்பது நெடுங்கால கோரிக்கையாக நீள்கிறது. உயர்கல்வியில் குறிப்பாக மருத்துவம், பொறியியல் கல்வியைத் தமிழ் வழியில் கொண்டு வருவது பற்றி அரசு சிந்திக்கக்கூட மறுக்கிறது. அறிவியல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்வழிப்படிப்பு வருவது தமிழ் வளர்ச்சிக்கு அடிப்படையான தேவையாகும். தமிழ் வழிக்கல்வி வந்தால்தான் தமிழில் அறிவியல் தொழில்நுட்பச் சிந்தனை வளரும். புதிய சொற்கள் பிறக்கும். தமிழ் செழிக்கும். (மேலும்) 09.05.10

____________________________________________________________________________________________

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் குழுக்கள் வேரோடு களையப்படும் - யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியிடம் பாதுகாப்புச் செயலர் உறுதி

Defence-Secretaryகடந்த 30 வருடங்களின் பின்னர் இந்த நாட்டில் ஜனநாயகக் காற்றை சுவாசிக்கும் போது குடாநாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலை ந்துள்ளது. எதுவித பயமோ அச்சுறுத்தலோ இன்றி வெளிப்படையாகக் கூறக் கூடிய நிலை இந்த மண்ணில் உருவாகியுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த 30 ஆண்டுகளில் 13 ஆண்டுகள் நீதிச் சேவையில் உள்ள நான், இன்றைய தினந்தான் சட்டத்தரணிகள் பயமின்றி முக்கியமாக கற்றறிந்த நீதிபதிக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் தமது ஆதங்கத்தை வெளிப் படுத்துகின்றனர். பொலிஸார் ஏன் விரைவாக நடவடிக்கை எடுக்கவில்லை என பொலிஸ் உத்தியோகத்தரிடம் சுதந்திரமாக வலியுறுத்தக் கூடியதாக உள்ளதை நான் இன்று கண்டுள்ளேன். இதனை நான் ஆழமான அர்த்தத்துடன்தான் கூறுகின்றேன். இந்த ஜனநாயக நிலையை உருவாக்கியவர் நிச்சயமாக அண்மைக்கால சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் முற்றுபுள்ளி வைப்பார் என்பது உண்மை. சுதந்திர ஜனநாயகக் காற் றைச் சுவாசிக்கக் கூடிய இந்த குடாநாட்டு மண்ணில் மக்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள். பிள்ளைகள் காணாமல்போதல்-கடத் தப்படுகின்றனர். (மேலும்) 08.05.10

____________________________________________________________________________________________

சீனாவில் இயங்கும் சிசி டிவி தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தி சேவை இலங்கையிலும் விஸ்தரிப்பு

 CCTVசீனாவில் இயங்கும் சிசி டிவி நிறுவனம் இலங்கையிலும் தனது செய்தி சேவையினை விஸ்தரித்துள்ளது. பிரதமர் டிஎம் ஜெயரட்ண இன்று மாலை 7.20 மணியளவில் இதனை உத்தியோக பூர்வமாக பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் ஹெச் விருந்தகத்தில் ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த, மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய, இலங்கை ஊடகத் துறையை பொறுத்த வரையில் சர்வதேச அளவிற்கு எமது கலாசாரத்தையும், நடைமுறைகளையும் கொண்டு செல்வதற்கான சிறந்த சந்தர்ப்பம் இப்போது கிட்டியுள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் இருந்த பயங்கரவாத நிலைமை தற்போது இல்லை. இந்நிலையில் சீனா-இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவு நீண்டகால பழமைவாய்ந்தது என தெரிவித்தார். இப் புதிய ஊடக அறிமுகத்தின் ஊடாக அதனை மேலும் வலுப்படுத்தலாம் என நம்புகின்றோம் என மேலும் தெரிவித்தார். 

____________________________________________________________________________________________

நாடு கடந்த தமிழீழ அரசை முறியடிக்க அரசு மும்முரம் வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதர்கள் ஊடாக நடவடிக்கை

நாடு கடந்த தமிழீழ அரசொன்றை அமைப்பதற்குப் புலிகள் வெளிநாடுகளில் மேற்கொண்டு வரும் முயற்சிகளை முறியடிப்பதில் அரசு மும் முரமாக ஈடுபட்டிருக்கிறது என்றும் இதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு இலங்கை அரசு ஆலோசனை வழங்கியிருக்கிறது என்றும் வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று நாடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே இவ்வாறு அவர் கூறினார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராகச் செயற்படுகின்றன என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் எதுவித உண்மையுமில்லை. எமக்கு முழுமையான உதவியை வழங்கப்போவதாக அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். அவசரகால ஒழுங்கு விதிகள் சில நீக்கப்பட்டிருப்பதால் மேற்குலக நாடுகள் பல எமக்குத் தொடர்ச்சியாக வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளன. பூட்டானில் இடம்பெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற எமது ஜனாதிபதி அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினார். இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கும், தெற்காசியாவின் பொருளாதார அபிவிருத்திக்கும் உதவப்போவதாக இந்தியப் பிரதமர் எமது ஜனாதிபதியிடம் கூறினார்.  (மேலும்)  08.05.10

____________________________________________________________________________________________

புதிய அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் அரசியல் லிப். டெம். கட்சிக்கு கெமரன் அழைப்பு

britain concertiveபிரிட்டனில் கடந்த 40 வருட வரலாற்றில் முதல் தடவையாக, பொதுத்தேர்தலில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை பெறாத நிலையில், புதிய அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. எதிர்க்கட்சியான கான்சர்வேட்டிவ் கட்சி ஆகக்கூடுதலான இடங்களை பெற்றிருக்கிறது. அரசாங்கத்தை அமைப்பதில் அவசரமான ஒரு உடன்படிக்கை தேவை என்று கூறுகின்ற அந்தக் கட்சியின் தலைவரான டேவிட் கெமரன், லிபரல் டெமொகிரட்டிக் கட்சியுடன் அதிகாரங்களை பகிர்ந்துகொள்வதற்காக ஒரு பெரிய, வெளிப்படையான அழைப்பொன்றை விடுத்திருக்கிறார். அரசாங்கத்தை அமைப்பதற்கான முதல் உரிமை அதிக இடங்களைப் பெற்ற கான்சர்வேட்டிவ் கட்சிக்குத்தான் உள்ளது என்று லிபரல் டெமொகிரட்டிக் கட்சி முன்னதாக கூறியிருந்தது. இந்த இரண்டு கட்சிகளும் ஒரு உடன்பாட்டுக்கு வர முடியாமல் போனால், தான் லிபரல் டெமொகிரட் கட்சியுடன் பேச தயாராக இருப்பதாக தொழிற்கட்சியின் தலைவரான பிரதமர் கோர்டன் பிரவுண் தெரிவித்துள்ளார்.  (மேலும்)  08.05.10

____________________________________________________________________________________________

பிரதி ஊடக அமைச்சர் பதவியிலிருந்து மர்வின் சில்வா இன்று மாலை ராஜினாமா

Mervyn-Silvaபிரதி ஊடகத்துறை அமைச்சர் மர்வின் சில்வா தனது பதவியை இன்று மாலை ராஜினாமா செய்யவுள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் சற்று நேரத்துக்கு முன் தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு தெரிவித்தன. கெஹலிய ரம்புக்வெல்ல, புதிய ஊடகத்துறை அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் நேற்று முன்தினம் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிலையில் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பதவியும் மர்வின் சில்வாவுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த பிரதி அமைச்சர் மர்வின் சில்வா, ஊடகத்துறை மற்றும்  நெடுஞ்சாலைகளுக்கான பிரதி அமைச்சுப் பொறுப்புக்கள் இரண்டையும் தானே வகிக்கப் போவதாக அறிவித்திருந்தார். இருப்பினும் இன்று மாலை அவர் பிரதி ஊடகத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கான பணிப்புரையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வழங்கிய நிலையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தன. இதேவேளை, ஊடகத்துறைக்கு பிரதி  அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பில்லை  என்றும் அந்த தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. 

____________________________________________________________________________________________

கிளிநொச்சியில் மாவட்ட நீதிமன்றம் 10ம் திகதி முதல் ஆரம்பம்

சுமார் 30 வருடத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் எதிர்வரும் 10ம் திகதி திங்கட்கிழமை முதல் செயல்படவுள்ளது. முன்னர் நீதிமன்றம் இயங்கிய கட்டடம் சேதமடைந்துள்ளதினால் அதற்கு சமீபத்தில் உள்ள தனியார் கட்டடம் ஒன்றிலேயே நீதிமன்றம் இயங்கவுள்ளது. குடியியல் மேன்முறையீட்டு மேல்நீதிமன்ற நீதிபதி ஜே. விஸ்வநாதன் நீதிமன்ற கட்டிடத்தினை வைபவ ரீதியாக காலை 9 மணிக்கு திறந்து வைப்பார். கிளிநொச்சி நீதிமன்றுக்கு சாவகச்சேரி, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் கடமையாற்றிய அலுவலர்கள் கடந்த முதலாம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

____________________________________________________________________________________________

கடத்திச் செல்லப்பட்ட யாழ் மாணவி விடுதலை

நேற்று கடத்திச் செல்லப்பட்ட யாழ் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 11 வயதான மாணவி நகுலேஸ்வரன் தேவிகா இன்று அதிகாலை அவரின் வீட்டிற்கு அருகில் விட்டுச்செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இம்மாணவி பாடசாலை செல்லும் போது மூன்று பேர் முச்சக்கர வண்டியில் வந்து கடத்திச் சென்றதாகவும், பிற்பாடு இன்று காலை தன்னை வீட்டருகில் கொண்டு வந்து விட்டதாகவும் அச்சிறுமி தெரிவிக்கின்றார். கடத்திச் சென்றவர்கள் தன்னுடைய கண்ணை கட்டியிருந்ததால் அவர்களை தன்னால் அடையாள காட்ட முடியாதுள்ளதாகவும் அம்மாணவி குறிப்பிட்டுள்ளார். தற்போது, இந்த மாணவி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது சம்பந்தமாக யாழ் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரையில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.

____________________________________________________________________________________________

இலங்கை மீது எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை -  ஐரோப்பிய யூனியன்

ஜீ. எஸ். பி. வரிச் சலுகைக்காக இலங்கை மீது ஐரோப்பிய யூனியன் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லையென ஐரோப்பிய யூனியன் வதிவிடப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.இலங்கையின் நீதித்துறையை ஐரோப்பிய யூனியன் மதித்துச் செயற்படுகிறது. ஆகையால் இப்போது நடந்துகொண்டிருக் கும் வழக்குகள் தொடர்பில் கருத்துக் கூறும் நிலையில் ஐரோப்பிய யூனியன் இல்லையெனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை உயர் மட்டக் குழு இந்த மாத இறுதியில் பிரசல்ஸ் வரவுள்ளதெனவும் அவர் கூறினார்.

____________________________________________________________________________________________

கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் நிதி மோசடி

கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் பல்வேறு நிதி மோசடிகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவந்துள்ளது. கணக்காய்வாளர் நாயகத்தின் 2008ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையிலிருந்தே மேற்படி நிதிமோசடி தொடர்பில் தெரியவந்திருக்கிறது. மாகாணசபையின் கணக்காய்வு குழுவுக்கு மேற்படி கணக்காய்வு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

____________________________________________________________________________________________

ஏழைகள் மீது பன்னாட்டு கம்பெனிகள் யுத்தம்

-பெ.சண்முகம் - பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

மரபணு மாற்று விதைகளை எப்படியாவது இந்திய விவசாயிகளின் தலையில் கட்டி விடுவது என மத்திய அரசு முடிவெடுத்துவிட்டது. மூன்றாம் உலக நாடுகளை எல்லாத் துறைகளிலும் நாசமாக்கி வரும் “உலக மயம்” விவசாயத்தை அடியோடு சீரழித்து, உணவுக்காக பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களைச் சார்ந்து நிற்கின்ற அவலநிலையை ஏற்படுத்திட கண்டுபிடிக்கப்பட்டது தான் பி.டி விதைகள் என்கிற மரபணு மாற்று விதைகள். இப்போது மரபணு மாற்று தொழில்நுட்பத்தில் ஏகபோகமாக விளங்கிவரும் அமெரிக்காவின் மான்சாண்டோ கம்பெனியின் கட்டளைகளுக்கு அடிபணிந்து இந்திய விவசாயிகளையும் - விவசாயத்தையும் படுகுழியில் தள்ள அரசு தயாராகிவிட்டது. இந்த நல்ல(?) நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது தான் ‘உயிரி தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணைய மசோதா’ என்று நாம கரணம் சூட்டப்பட்டுள்ள வாய்ப்பூட்டுச் சட்டம். நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இதை சட்டமாக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. இம்மசோதா விற்கெதிராக அகில இந்திய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகளும், வேளாண் விஞ்ஞானிகள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என பலதரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது வரவேற்கத்தக்க நல்ல அம்சம். நியாயமும் கூட!   (மேலும்)  08.05.10

____________________________________________________________________________________________

கோட்சே முதல் கசாப் வரை...

kassabதேசப்பிதா மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேக்கு, 1949ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1949 நவம்பர் 15ம் தேதி அவர் தூக்கிலிடப்பட்டார். இதன்பின் இரு குழந்தைகளை கடத்திக் கொன்ற, குல்ஜீத்சிங் என்ற ரங்கா மற்றும் ஜஸ்பீர்சிங் என்ற பில்லாவுக்கு 1982ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நான்கு ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணைக்குப் பின், இவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டது. ரங்கா, பில்லாவால் கொல்லப்பட்ட குழந்தைகளின் பெயரில் தற்போது வீரதீர செயல்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்பின் ஜோஷி - அப்யங்கர் கொலை வழக்கில், புனேயில் உள்ள புகழ்பெற்ற அபினவ் கலா மகாவித்யாலயாவில் படித்த நான்கு மாணவர்கள் குற்றவாளிகள் என, கண்டறியப்பட்டது. இவர்கள், 1976 - 1977ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 10 பேரை கொலை செய்திருப்பது தெரிந்தது. ராஜேந்திர ஜாக்கல், திலீப் தியானோபா சுதார், சாந்தாராம் கன்கோஜி ஜக்தப் மற்றும் முனாவர் ஹாருண் ஷா என்ற அந்த நான்கு பேருக்கும் 1983 நவம்பர் 27ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் இந்திரா கொலை வழக்கில், கேகர் சிங் மற்றும் சத்வந்த்சிங் என்ற இருவருக்கு 1989 ஜனவரி 6ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 1995 ஆகஸ்ட் 27ல், பல படுகொலைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ சங்கர், சேலம் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டான். இதன்பின் 14 வயது சிறுமி ஹீதல் பரேக்கை கற்பழித்துக் கொன்ற வழக்கில், தனஞ்செய் சட்டர்ஜி என்பவன், 2004 ஆகஸ்ட் 14ல் தூக்கிலிடப்பட்டான். இந்த வரிசையில் கசாப்பும் சேர உள்ளான்.  (மேலும்)  07.05.10