a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி             உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்      எங்கள்தேசம்         சலசலப்பு         நோயல்நடேசன்     விடிவெள்ளி         எங்கள்பூமி              ரீவடை இணையம்        பார்வை             தமிழ்யுகே
 

Asientribune
Lines-Magahzine
Srilankaguardian
The lka academic
Tamil Week            sldf
Uthr                
        

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                          05.10.2010

ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஈரானில் மகத்தான வரவேற்பு

iran-1- ஜீ-15 உச்சி மாநாட்டில் இன்று தலைமையேற்று உரை

ஜீ-15 நாடுகளின் 14வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஈரான் தலைநகர் தெஹ்ரானைச் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மெஹேராபான் விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. ஜீ-15 நாடுகளின் உச்சி மாநாடு இன்று ஆரம்பமாவதுடன் அதன் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையேற்றுக் கொள்கிறார். ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத்திடமிருந்து ஜனாதிபதி மேற்படி தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதுடன் மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. ஜீ-15 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முற்பகல் 11.20 அளவில் தெஹ்ரானின் மேஹேராபான் விசேட பிரமுகர்களுக்கான விமான நிலையத்தைச் சென்றடைந்தார். அங்கு ஈரானிய அரசின் சார்பில் அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் மெஹாடி காஸான் ஷெரி தலைமையிலான குழுவினர் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பளித்தனர். (மேலும்)  17.05.10

____________________________________________________________________________________________

த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் செட்டிகுளம் முகாமுக்கு விஜயம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான 14 உறுப்பினர்கள் செட்டிகுளம் நிவாரண கிராமங்களுக்கும் வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளனர். இந்த விஜயம் தொடர்பில் அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறினார்.  எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் தங்கியிருந்து  செட்டிகுளம் நிவாரண கிராமங்களுக்கும் வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளனர் எனவும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செட்டிக்குளம் நிவாரண கிராமங்களுக்கும் வன்னியில் மக்கள் மீள் குடியேற்றப்பட்ட இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.

____________________________________________________________________________________________

யாழ்ப்பாணத்திலிருந்து பொலிஸ்சேவைக்கு தெரிவானோர் வடக்கில் கடமையாற்றுவர்

யாழ்.மாவட்டத்திலிருந்து பொலிஸ் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 355 தமிழ் இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதும் அவர்களுக்கு களுத்துறை பொலிஸ் பயிற்சிக்கல்லூரியில் ஆறு மாதகால பயிற்சியளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியைப் பெற்ற பின்னர் அவர்கள் தமிழ் பிரதேச பொலிஸ் நிலையங்களில் பணியாற்றுவார்கள்.இவ்வாறு யாழ். உதவிப்பொலிஸ் அத்தியட்சர் நிஹால் மெண்டிஸ் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய நடமாடும் சேவை நேற்று சனிக்கிழமை வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர் 1975 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முப்பது வருடங்களின் பின்னர் தற்போதுதான் தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்படுகின்றனர். அரசின் திட்டத்தின்படி மூவாயிரம் தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்படவுள்ளனர். எதிர்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் பொலிஸ் அத்திட்சர்களே கடமையாற்றுவார்கள்.களுத்துறையில் உள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பொலிஸ் சேவையில் சேர்ந்துள்ள சிங்கள இளைஞர்களுக்கு வழங்கப்படும் அனைத்து பயிற்சிகளும் தமிழ் இளைஞர்களுக்கும் வழங்கப்படும்.தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உங்களின் பகுதிகளில் சேவையாற்றப்போவதை நினைத்து மகிழ்ச்சியடைகின்றேன். இங்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு விரைவில் நியமனக்கடிதம் வழங்கப்படும் என்றார்.பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நல்லுறவையும் ஐக்கியத்தையும் வளர்க்கும் நோக்கமாக இடம்பெற்ற இந்த நடமாடும் சேவையில் போக்குவரத்து விதிமுறைகள்,மது,போதைவஸ்து என்பவற்றை தடுப்பது சம்பந்தமான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.வறிய மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

____________________________________________________________________________________________

தமிழினம் பலம் குன்றுவதற்கு கூட்டமைப்பின் நிலைப்பாடே வழிவகுத்தது

- ஜீவகன

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு பிரதான பொறுப்புகள் உள் ளன. ஒன்று நீண்டகாலப் பொறுப்பு. மற்றது குறுகியகாலப் பொறுப்பு. இனப் பிரச்சினைக்கு முழுமையான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது பிரதானமானது. இது உடனடியாக நிறைவேற்ற முடியாத பொறுப்பு. நீண்டகால வேலைத் திட்டத்துடன் செயற்படுவதன் மூலமே இந்தப் பொறுப்பை நிறைவேற்ற முடியும். அண்மைக் காலம் வரை தமிழ் மக்கள் ஈடுசெய்ய முடியாத இழப்புகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள். சொத்துகளை இழந்திருக்கின்றார்கள். உற்றார் உறவினரை இழந்திருக்கின்றார்கள். இந்த இழப்புகளுக்குக் காரணமாக இருந்த சூழ்நிலை இப்போது இல்லாத போதிலும் இன்றும் துன்பங்கள் இல்லாமிலில்லை. காலங்காலமாக வாழ்ந்த சொந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேறி வாழும் அவலநிலை இப்போதும் இருக்கின்றது. பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக நாளாந்த வாழ்க்கையில் முகங்கொடுக்கும் கஷ்டங்கள் இப்போதும் இருக்கின்றன. தமிழ் மக்கள் இப்போது அனுபவிக்கும் கஷ்டங்கள் தொடராதிருக்கும் வகையிலும் முன்னர் முகங்கொடுத்த இழப்புகள் மீண்டும் ஏற்படாதிருப் பதை உறுதிப்படுத்தும் வகையிலும் செயற்பட வேண்டியது அம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளு மன்ற உறுப்பினர்களின் பொறுப்பு. இது இப்பாராளுமன்ற உறுப்பினர்களின் குறுகிய காலப்பொறுப்பு. (மேலும்)  14.05.10

____________________________________________________________________________________________

புலிகளின் ஆதரவாளர்களுக்கு உதவ வேண்டாம்' - ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கை வேண்டுகோள்

Ravinathaகொழும்பு, மே 15: விடுதலைப் புலிகளின் இயக்கம் மீண்டும் வலுப்பெற எந்த வகையிலும் உதவ வேண்டாம் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.  பெல்ஜியம், லக்சம்பர்க், ஐரோப்பிய யூனியனுக்கு இலங்கையின் தூதராகச் செயல்படும் ரவிநாத ஆரியசின்ஹ இந்த வேண்டுகோளை இலங்கை அரசின் சார்பில் விடுத்திருக்கிறார்.  பயங்கரவாதச் சூழல், ஐரோப்பிய யூனியனில்அதிகரித்துவரும் பயங்கரவாதப் போக்கு என்ற பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் தூதர்களாகப் பதவி வகிப்போர் பங்கேற்றனர். பிரவ்ஸல்ஸ் நகரில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பேசுகையில் ஆரியசின்ஹ இந்த வேண்டுகோளை விடுத்தார்.  "தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கடந்த ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்ற பிறகு ஒரு துப்பாக்கி குண்டு கூட இலங்கையில் சுடப்படவில்லை. ஏதோ ஒரு அனுதாபத்தில் நீங்கள் செய்யும் உதவிகளால் அந்த அமைதி மீண்டும் குலைவதற்கு நீங்கள் காரணமாக இருக்காதீர்கள்.  விடுதலைப் புலிகள் இயக்கத்தை ""நாடு கடந்த அரசாக'' நிர்வகிக்க அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் முயல்கின்றனர். அவர்களுக்கு எந்த விதத்திலும் யாரும் உதவிகளைச் செய்யக்கூடாது. (மேலும்)  14.05.10

____________________________________________________________________________________________

தாய்லாந்தில் ராணுவம், போராட்டக்காரர்கள் மோதல் 23 பேர் பலி: போர்க்களமானது தலைநகர் பாங்காக்

thailandபாங்காக் : தாய்லாந்தில் ராணுவத்துக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 23 பேர் கொல்லப்பட்டனர்; 140 பேர் காயமடைந்தனர். தலைநகர் பாங்காக், போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. தாய்லாந்தில் பிரதமராக உள்ள அபிஜித் வெஜ்ஜாஜிவியா, தேர்தலில் முறைகேடு செய்து, ராணுவத்தின் உதவியுடன் வெற்றி பெற்றதாக, அரசுக்கு எதிரான குழு ஒன்று, கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறது. பிரதமர் அபிஜித் பதவி விலக வலியுறுத்தி, சிவப்பு சட்டை அணிந்த ஏராளமான போராட்டக்காரர்கள், தலைநகர் பாங்காக்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்களை இவர்கள் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகின்றனர். இவர்களை தடுக்கும் முயற்சியில் ராணுவம் முழுவீச்சில் களம் இறக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை மேலும் முன்னேற விடாமல், 3 ச.கி.மீ., பரப்பளவு பகுதிகள், ராணுவத்தினரால் சீல் வைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவில் இருந்து, இங்கு பெரிய அளவில் கலவரம் வெடித்தது. ராணுவ வீரர்களை குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இவர்களை தடுக்கும் வகையில் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பெரும் கலவரம் காரணமாக 23 பேர் கொல்லப்பட்டனர்; 140 பேர் காயமடைந்தனர். (மேலும்)  14.05.10

____________________________________________________________________________________________

ஐக்கிய தேசியக் கட்சியினுள் கொதிநிலை;ரணிலின் தலைமைக்கு எதிர்ப்பு உக்கிரம்

ranilஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள் முரண்பாடுகள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகின்றன. கட்சியின் தலைவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகளும் கருத்து முரண்பாடு களும் கொதிநிலையை அடைந்துள்ளதாக சிறிகொத்த வட்டாரங்கள் தெரிவித்தன. கட்சியின் தலைமைப் பொறுப்பு உட்பட பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டுமென சிரேஷ்ட உறுப்பினர்கள் மறுசீரமைப்பு யோசனைகளை முன்வைத்துள்ள நிலையில் கட்சித் தலைமைப்பீடம் மீது நிதி மோசடி குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலின்போது வெளிநாட்டில் இருந்து வந்த 300 கோடி ரூபா பணத்தில் 200 கோடிக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லையென உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர். 100 கோடி ரூபா மாத்திரமே பிரசாரப் பணிகளுக்காக செலவிடப்பட்டதாகவும் மிகுதி 200 கோடி மாயமாகிவிட்டதாகத் தெரிவித்துள்ள கட்சி உறுப்பினர்கள் இது தொடர்பில் தலைமைப்பீடத்திடம் விசாரணை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் கட்சியின் உட்பூசல்கள் காரணமாக, நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி சிதைந்து சின்னாபின்னமாகும் நிலை ஏற்பட்டு ள்ளதாக அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் ‘வாரமஞ்சரி’யிடம் கவலை தெரிவித்தார்.  (மேலும்)  14.05.10

____________________________________________________________________________________________

தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் தமிழ் மக்களை ரணில் விக்ரமசிங்ஹ ஏமாற்றிவிட்டார் - மனோ கணேசன்

தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியையும் தமிழ் மக்களையும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ திட்டமிட்டு ஏமாற்றிவிட்டார் என்பது நிருபணமாகியுள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கடந்த மே 10ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ மனோ கணேசனுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடித்திலேயே  ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இக்கடிதத்தில், ஜனநாயக மக்கள் முன்னணி ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களோடு தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பாக எந்தவெரு தனிப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடத்  தயார் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக  அடுத்த வாரமளவில் அறிவிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடளுமன்ற உறுப்பினரான பிரபா கணேசன் நாடளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

____________________________________________________________________________________________

Anatomy of a terror finance investigation

How a $600 donation brought down a rebel bagman

Canadian court sentences LTTE fund raiser to 6-month in jail

thambithurai-1At 9:22 p.m. on March 14, 2008, members of the RCMP's counter-terrorism squad in British Columbia pulled over a gray Mazda 3 and arrested the driver for financing terrorism. It was a first for Canada.For more than a decade, Sri Lanka's Tamil Tigers rebels had fundraised in Toronto, Montreal and Vancouver to finance their liberation struggle, but this was the first time anyone had been criminally charged over it. That case ended on Friday in B.C. Supreme Court in Vancouver when Prapaharan Thambithurai, a 46-year-old Sri Lankan-born Canadian from Maple, Ont., was sentenced to six months to be served at an Ontario prison.Justice Robert Powers said refugees from war-torn countries should be able to resettle in Canada free from the pressures of the homeland. But Thambithurai's wife, Uthaya, insisted her husband had "nothing to do with any terrorist activities."While Thambithurai's guilty plea means there will be no trial, court documents and interviews show the case revolved around a single $600 donation. But such donations all added up: federal officials estimate that Tamil rebel bagmen raised $10- to $12-million a year in Canada in much the same way. A home satellite installer from the suburban belt north of Toronto, Thambithurai flew to Vancouver on Air Canada on March 11, 2008, documents show. He rented a compact car from Avis and spent the night at the Quality Inn Airport Hotel. (Read) 15.05.10

____________________________________________________________________________________________

கனடாவில் புலிகளுக்கு நிதி சேகரித்த நபருக்கு 6 மாதகால சிறைத்தண்டனை

கனடாவில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த நபருக்கு 6 சிறைத்தண்டனை வழங்கி அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   குறித்த நபருக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று கனேடிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இலங்கைச் சேர்ந்த 46 வயதுடைய பிரபாகரன் தம்பித்துரை என்பவர் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக கனடாவில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.  இந்நிலையிலேயே குறித்த நபருக்கு எதிராக கனடாவின் பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

____________________________________________________________________________________________

நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவும் முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டாம் ஐரோப்பிய அரசாங்கங்களை வலியுறுத்துகிறது கொழும்பு

tamileelam3பயங்கரவாதப் போராட்டம் தொடர்பான இலங்கையின் கதையானது இந்த மாநாட்டிற்கு இருகாரணங்களின் அடிப்படையில் அறிவுறுத்தல் வழங்குவதாக அமையும். களத்தில் புலிகளுடன் மோதலில் வெற்றிகண்டமை நன்கு அறியப்பட்ட விடயமாகும். அதேசமயம் புலிகள் பயங்கரவாத அமைப்பு மட்டுமல்ல என்ற உண்மை குறித்து நாம் சிறிதளவு கவனத்தைச் செலுத்த வேண்டும். ஏனெனில் வினைத்திறனுடனான கட்டமைப்பை உலகளாவிய ரீதியில் அவர்கள் கொண்டுள்ளனர். அவர்களின் அமைப்பு பலவகையானதாகும். சொத்துகள் பரவிக்கிடக்கின்றன. பல முன்னணி அமைப்புகளூடாக அவர்கள் இயங்குகின்றனர். அவர்களின் தலைவர்கள் இல்லாமல் போயிருக்கலாம். மத்திய கட்டுப்பாட்டுப் பிரிவு குழம்பிப் போயிருக்கக் கூடும். ஆனால், அவர்களிடம் இப்போதும் அதிகளவு பணம், நிபுணத்துவம், தொடர்புகள் இருக்கின்றதென்ற உண்மை தொடர்பான பார்வையை நாம் இழந்துவிடக்கூடாது. குறிப்பாக உலகில் உங்களின் பகுதியில் அவர்கள் இவற்றைக் கொண்டிருப்பது தொடர்பான பார்வையை இழந்துவிடாதிருப்பது அவசியமாகும் என்றும் ஆரிய சிங்க கூறியுள்ளார். மதரஸா போன்ற விதத்திலான "தமிழ்ச்சோலை  பாடசாலைகள் அதிகரித்துள்ளன. பயங்கரவாதம், தியாகம் என்பவற்றை மேன்மைப்படுத்துபவையாக அப்பாடசாலைகள் உள்ளன. நோர்வேயில் இலங்கைத் தூதரகத்தைத் தாக்குவதற்காக அப்பாடசாலை மாணவர்கள் மீது அண்மையில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. (மேலும்)  14.05.10

____________________________________________________________________________________________

பார்வதி அம்மாள் சிகிச்சை பிரச்சினை: அரசியலுக்காக திட்டமிட்டு ஏமாற்றுகிறார்கள் கருணாநிதி பேட்டி

karunanithi6இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் - அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அமைதியான நல்வாழ்வு வாழ வேண்டும் - அவர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது தான் இங்குள்ள மத்திய, மாநில அரசுகளின் பெரு விருப்பமாகும். இலங்கை ஒரு அன்னிய நாடு என்கிற போது தான், அவர்களின் உள்நாட்டுப் பிரச்சினை களில் நாம் தலையிடும்போது முள்ளில் விழுந்த துணியை, கிழியாமல் எடுப்பது போல் எடுக்க வேண்டியிருக்கின்றது. அந்த அளவிற்கு மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, இங்குள்ள ஒருசில அரசியல் வாதிகள் அரசியல் ரீதியான உள்நோக்கங்களோடு, ஏதோ அவர்கள் தான் இலங்கைத் தமிழர்களுக்காகப்பாடுபடு பவர்களைப் போல நடிக்கிறார்களே தவிர, வேறொன்றும் இல்லை. உதாரணமாக பார்வதி அம்மாள் பிரச்சினையையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலை. இருந்தாலும் ஒருசிலர் தங்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக அந்த அம்மையாரின் உடல் நிலையை வைத்து தாங்கள் தான் அவர்மீது அக்கறையும், பாசமும், பற்றும் உள்ளவர்கள் என்பதைப்போல திட்டமிட்டு எல்லோ ரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். (மேலும்)  14.05.10

____________________________________________________________________________________________

இங்கிலாந்து அமைச்சரவையில் முஸ்லீம் பெண் அமைச்சர்

sayeeda-warsiலண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் கன்சர்வேடிவ் கட்சி, 3வது இடதைதைப் பிடித்த லிபரல் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான டேவிட் கேமரூன் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இதையடுத்து புதிய அமைச்சரவையை அவர் அறிவித்துள்ளார். அமைச்சரவையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடம் தரப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவரான பரோனஸ் சயீதா வர்சி (39) அந் நாட்டு அமைச்சராகிறார். இவரது தந்தை பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர். வழக்கறிஞரான சயீதா வர்சி, கன்சர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். கேமரூன் அமைச்சரவையில் இவர் இலாகா இல்லாத கேபினட் அமைச்சராக இருப்பார். இங்கிலாந்தில் முஸ்லிம் பெண் ஒருவர் அமைச்சரானது இதுவே முதல் முறையாகும். அந்நாட்டில் 72 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி அரசு பதவியேற்பதும் இதுவே முதல் முறை

____________________________________________________________________________________________

யாழ்ப்பாண மாநகர சபை மேயரிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவு

நீதித்துறைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் மாநகர சபையினால் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட விளம் பரங்கள் தொடர்பாக யாழ்.மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவிடம் வாக்கு மூலம் பெற்று எதிர்வரும் 17 ஆம் திகதி நீதி மன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்.மாவட்ட நீதிவான் ஆனந்தராஜா யாழ்.பொலிஸாருக்கு உத்தரவிட்டார். யாழ்.மாநகர சபையின் பிரதி மேயர் றீகன் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பத்திரிகைகளில் யாழ்.மாநகர சபையினால் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டது. அது குறித்து அதிருப்தி வெளியிட்ட நீதிமன்றம், மாற்று விளம்பரம் ஒன்றைப் பிரசுரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதிலும் திருப்தியடையாத நிலையில் மேயரின் வாக்கு மூலத்தைப் பெற்று எதிர்வரும் 17 ஆம் திகதி நீதிமன்றில் சமர்பிக்குமாறு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

____________________________________________________________________________________________

கிளிநொச்சி மின்னுற்பத்தி நிலையத்துக்கு ஜப்பான் உதவியுடன் புத்துயிர் தர முடிவு

கொழும்பு,மே 14: இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, ராணுவத்துடனான சண்டையில் கிளிநொச்சி மின்னுற்பத்தி நிலையம் கடுமையாக சேதம் அடைந்தது. இதனால் வடக்கிலும் கிழக்கிலும் மின்சார சப்ளை நின்றுபோனது. 1983-ம் ஆண்டு சேதம் அடைந்த இந்த நிலையத்துக்குப் புத்துயிர் அளிக்க ஜப்பான் முன்வந்திருக்கிறது. ஜப்பானிய அரசு இதற்காக 300 கோடி ரூபாய் அளிக்கவிருக்கிறது. ஓராண்டுக்குள் இந்த திட்டம் நிறைவேற்றி முடிக்கப்படும். மே 2011-க்குள் இந்த மின்னுற்பத்தி நிலையத்தைப் புதுப்பித்து மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அமைச்சரவை இந்த திட்டத்துக்கான ஒப்புதலை அளித்துவிட்டதாக, அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களைச் சந்தித்த தகவல், பத்திரிகைத் தொடர்பு அமைச்சர் கேஹளீய ரம்பூக்வெல தெரிவித்தார். இந்த மின்னுற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் தேசிய மின் தொகுப்புக்கு அளிக்கப்படும். இந்த நிலையத்தில் 132 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இலங்கைக்கு இப்போது பல நாடுகள் உதவினாலும் அதிகபட்ச உதவி ஜப்பானிடமிருந்துதான் கிடைக்கிறது. கடந்த ஆண்டு இலங்கைக்குக் கிடைத்த வெளிநாட்டு உதவிகளில் 65% ஜப்பானிடமிருந்து கிடைத்தவையாகும். கிளிநொச்சி மின்னுற்பத்தி திட்டத்துக்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமைதான் நிதி உதவிகளைச் செய்கிறது. இதன் கணிசமான பகுதி மானியமாகவும் இதர பகுதி மிகக் குறைந்த வட்டியுள்ள கடனாகவும் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

____________________________________________________________________________________________

டைம்ஸ் சதுக்க வெடிகுண்டு சதி: மேலும் 3 பாகிஸ்தானியர்கள் கைது

நியூயார்க், மே 14: நியூயார்க் டைம்ஸ் சதுக்க வெடிகுண்டு சதி தொடர்பாக மேலும் மூன்று பாகிஸ்தானியர்களை அமெரிக்க புலனாய்வு போலீஸப்ர் (எப்பிஐ) கைது செய்துள்ளனர். பாஸ்டனின் புறநகர்ப் பகுதியில் 2 பேரும் மெய்ன் பகுதியில் ஒருவரும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் டைம்ஸ் சதுக்க வெடிகுண்டு சதி வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ஃபைசல் ஷாஜத்துக்கு நிதி உதவி அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. இம்மூவரின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. மே 1-ம் தேதி நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வெடிகுண்டு நிரப்பிய காரை வெடிக்கச் செய்து பெரும் சேதம் விளைவிக்க முயன்றார் ஷாஜத். இந்த சதி உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, வெடிகுண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக இந்த சதிச் செயலில் முக்கியக் குற்றவாளியான ஷாஜத் மே 3-ம் தேதி துபைக்கு தப்பிச் செல்ல முயன்ற போது அமெரிக்க புலனாய்வு போலீஸப்ர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் புறநகர்ப் பகுதிகளில் ஆசியர்கள் அதிலும் குறிப்பாக பாகிஸ்தானியர்கள் அதிகம் வசிக்கும் பாஸ்டன் மற்றும் நியூஜெர்ஸியின் புறநகர்ப் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். (மேலும்)  14.05.10

____________________________________________________________________________________________

வெளிநாட்டவர் மீது பிரிட்டனின் புதிய அரசு கடும் நிலைப்பாடு எடுக்கும் சாத்தியம்

ukபிரிட்டனின் புதிய கூட்டணி அரசாங்கத்தின் பிரதான கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியானது குடியேற்றவாசிகளின் தொகையை வருடாந்தம் குறைப்பதென்ற தனது குடிவரவுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் போது ஐரோப்பா தவிர்ந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்த தொழில்துறை நிபுணர்களும் மாணவர்களும் நெருக்கடியை எதிர்நோக்கும் நிலை ஏற்படும். கன்சர்வேட்டிவ், லிபரல் ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வின் அடிப்படையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் கொள்கைகளே புதிய கூட்டணி அரசாங்கத்தால் உள்வாங்கப்படும்.பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்ட குடிவரவுக் கொள்கையை கடைப்பிடிப்பதுவும் பிரிட்டனில் 10 வருடங்களாக வாழும் சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதும் லிபரல் ஜனநாயக கட்சியின் குடிவரவுக் கொள்கையாகும். ஆனால், புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக கடைசியாக இந்த இரு கட்சிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் லிபரல் ஜனநாயக கட்சியின்குடிவரவுத்துறை தொடர்பான கொள்கை கைவிடப்பட்டிருக்கிறது. 1990 களில் இருந்த நிலைமைக்கு குடிவரவுக் கொள்கையை கொண்டுவருவதே கன்சர் வேட்டிவ் கட்சியின் கொள்கையாகும்.பிரிட்டனில் பணியாற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தை சாராத பொருளாதார குடியேற்ற வாசிகளின் தொகையை வருடாந்தம் மட்டுப்படுத்தும் முறைமையை நாம் அறிமுகப்படுத்துவோம். (மேலும்)  14.05.10

____________________________________________________________________________________________

சாவகச்சேரி நீதிவானுக்கு பாதுகாப்பு வழங்க பிரதம நீதியரசர் உடனடி நடவடிக்கை

யாழ்.சாவகச்சேரி நீதிவான் கே.ஜே.பிரபாகரனுக்கு பாதுகாப்பு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா உறுதியளித்துள்ளார். இதனை அடுத்து வட மாகாண சட்டத்தரணிகள் மேற்கொண்டுவந்த பணிப் பகிஷ்கரிப்பு இன்றுடன் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமையுடன் தமது பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்தது. யாழ். சாவகச்சேரி வர்த்தகர் மகனின் படுகொலை தொடர்பில் மேற்படி நீதிவான் வழக்கு விசாரணைகளை நடத்தியிருந்தார். இந்நிலையிலேயே, குறித்த நீதிவானுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.  இதனை அடுத்து யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களின் சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் நீதிவானுக்கு அச்சுறுத்தல் விடுத்ததான சந்தேகத்தின் பேரில் யாழ். மாநகரசபை பிரதி மேயர் இளங்கோ (றீகன்) மற்றும் ஈ.பி.டி.பி.யின் தென்மராச்சி இணைப்பாளர் சாள்ஸ் என்றழைக்கப்படும் அலக்ஸாண்டர் சூசைமுத்து ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

____________________________________________________________________________________________

நாடு கடந்த அரசுக்கான உதவியை தவிர்க்குமாறு இலங்கை கோரிக்கை

விடுதலைப் புலிகள் அமைப்பு ஆதரவாளர்களினால் ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான அரசியல் மற்றும் ஏனைய உதவிகளை வழங்க வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. மேலைத்தேய நாடுகளில் தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பெல்ஜியம் மற்றும் லக்சம்பேர்க்குக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார்.

____________________________________________________________________________________________

சுமுக நிலை நோக்கி முன்னேறுவோம்

பொலிஸ் சேவையிலும் பாதுகாப்புப் படைகளிலும் கணிசமான தமிழர்கள் பணியாற்றிய ஒரு காலம் இருந்தது. இன்றைய இளம் சந்ததியினருக்கு இது தெரியாது. தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்ற பிரசாரத்தை இவர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். தமிழ்க் குழுக்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னரே பொலிஸ் சேவையிலும் பாதுகாப்புப் படை களிலும் தமிழரின் எண்ணிக்கை வீழ்ச்சியடையத் தொடங்கியது. ஆயுதப் போராட்ட காலத்தில் இடம் பெற்ற ஊடுருவல்கள் காரணமாகப் பொலிஸ் சேவையிலும் பாதுகாப்புப் படைகளிலும் தமிழர்களைச் சேர்த்துக்கொள்வது குறைந்தது. தமிழர்கள் இச்சேவைகளில் சேர்வதும் குறைந்தது. பொலிஸ் சேவையிலும் பாதுகாப்புப் படைகளிலுமுள்ள தமிழர்கள் பலரைத் தமிழ் ஆயுதக் குழுக்கள் கொலை செய்த பின்னணியில் இச்சேவைகளில் சேர்வதற்குத் தமிழர்கள் முன் வரவில்லை. பாதுகாப்புப் படைகளிலும் பார்க்கப் பொலிஸ் சேவை பொதுமக்களுடன் நேரடியான தொடர்பு கொண்டுள் ளது. பொதுமக்களின் மொழியில் அவர்களுக்குச் சேவையாற்ற வேண்டிய கடப்பாடு பொலிஸ் சேவைக்கு உண்டு. (மேலும்)  14.05.10

____________________________________________________________________________________________

இலங்கையுடன் "சீபா வுக்கு இந்தியா இப்போது முயற்சி

இலங்கையில் தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைந்து ராஜபக்ஷவின் அரசாங்கம் இரண்டாவது பதவிக் காலத்தை பொறுப்பேற்றிருக்கும் நிலையில், கொழும்புடன் பரந்துபட்ட பொருளாதார பங்குடமை உடன்படிக்கைக்கு (சீபா) உயிர்ப்பளிக்க புதுடில்லி முயற்சிக்கிறது. இரு நாடுகளும் ஏற்கனவே சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளதுடன், சீபா தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு 2008 இல் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவிருந்தது. பின்னர் அது மறுக்கப்பட்டுவிட்டது. இப்போது இலங்கையில் தேர்தல்கள் முடிவடைந்துவிட்டன. இந்தியா சீபாவுக்கு புத்துயிர்ப்பளிக்க விரும்புகிறது என்று "எக்கனோமிக் ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. அண்மையில் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது இலங்கையின் தலைமைத்துவத்துடன் இந்த விடயம் குறித்து இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. (மேலும்)  14.05.10

____________________________________________________________________________________________

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் இயல்பு நிலை ஸ்தம்பிதம்

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நேற்று (14) இரவு முதல் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையின் காரணமாகவும் பலத்த காற்றின் காரணமாகவும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேல் மாகாணத்திலும் தென் மாகாணத்திலும் கூடுதலான பாதிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இடி, மின்னல் காரணமாகவும் பலத்த காற்றின் காரணமாகவும் வீடுகளும் இதர கட்டடங்களும் சேதமாகியுள்ளன. அதில் ஒருவர் உயிரிழந்து பலர் காயமுற்றுள்ளனர். வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததனாலும் வெள்ளப் பெருக்கினாலும் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்தன.கொழும்பு நகரின் பல வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அன்றாட அலுவல்கள் ஸ்தம்பிதமடைந்தன. வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு பல மணிநேரம் போக்குவரத்துகள் முடங்கின. பொதுமக்கள் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளானதோடு, அரச, தனியார் அலுவலகப் பணியாளர்கள் கடமைகளுக்குச் செல்ல முடியாமல் அவதியுற்றதைக் காண முடிந்தது. சனப்புழக்கம் கூடுதலாக உள்ள கேந்திர முக்கியத்துவமான வியாபார வீதிகளில் வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், பொருள் சேதமும் ஏற்பட்டிருந்ததையும் காண முடிந்தது. சில பாடசாலைகள் மூடப்பட்டது டன்,  இயங்கிய பாடசாலைகளில் மாணவர்கள் வரவு குறைவாகக் காணப்பட்டது. நேற்றுப் பிற்பகல் வரை கொழும்பு நகரில் இந்த ஸ்த ம்பித நிலை நீடித்தது

____________________________________________________________________________________________

விடுதலைப்புலிகள் மீதான தடை இந்தியாவில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பு 

  தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடித்துள்ளதாக அந்நாட்டின் பி.ரி.ஐ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க பல முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக புலனாய்வு துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்ட விரோதமன நடவடிக்கைகளை தடுப்பதற்கான 1967 ஆம் சட்டத்திற்கு அமைய 1992 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா மேற்கொண்டது

____________________________________________________________________________________________

மகேஸ்வரி வேலாயுதம் - ஓராண்டு நினைவுக் குறிப்பு

-    தேவன். (கனடா)

மனித வாழ்க்கையானது வாழும் போதே முக்கியத்துவம் பெறுகிறது. முரணத்தின்பின் அதன் முக்கியத்துவம் இழந்துவிடுகிறது  --    ஜே.ஜே. கிருஷ்ணமூர்த்தி.

கடந்த மூன்று தசாப்பத்திற்கு மேலான தமிழ், சமூகத்தின் துன்பியல் வரலாற்றில் இன்றைய துன்பியலுக்கும் துயரத்துக்கும்’ காரணமாக இருந்தவர்களான தமிழ் ஈழம்  கோசம் போட்டவர்களும் தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று கூறினவர்களும் ஒரு வேளை சொற்றுக்கும் அகதி வாழ்வுக்கும் சாப விமோசனம் தூபம் போட்டவர்கள் இன்ற நிம்மதியாக கல்லறைகறில் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக சாப விமோசனத்திற்கு ஒரு வழிப்பாதை காட்டியவர்களின் ஏகபோக வாரிசுகளாக புலிகள் தங்களை பிரகடனப்படுத்தி கடந்த முப்பது வருடமாக தமிழ் சமூகத்தின் அரசியல் உரிமைகளை பேசுவதற்கான குத்தகையை எடுத்திருந்தார்கள். இதன் விளைவாக தமிழ் சமூகத்திற்காக குரல் கொடுத்து போராடிய அனைத்து விடுதலை இயக்கங்களும், மிதவாத இடதுசாரி தலைமைகளும் புலிகளால் துரோகிகளாக அறிவிக்கப்பட்டு சிறுபான்மை சமூக அரசியல் தளத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டு துவம்சப்படுத் அழித்து நரபலி வேட்டை ஆடினார்கள். இந்த நரபலி வேட்டையை முடிவுக்கு கொண்டுவரும் அரம்ப ஆண்டாக 2002 ஐயெ குறிப்பிடவேண்டும் ஏனெனில் 9-11 சம்பவத்திற்கு பிறகு புலிகள் மீது சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதை குறிப்பிடாலம். (மேலும்)  14.05.10

____________________________________________________________________________________________

ஸ்ரீ டெலோ இயக்க உறுப்பினரான சயேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

 மன்னார், தலைமன்னார் பிரதான வீதியின் இரண்டாம் கட்டை சந்தியில் கடந்த புதன் கிழமை மாலை எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஸ்ரீ டெலோ இயக்க உறுப்பினரான சயேந்திரன் இன்று மாலை 5.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். தலைமன்னார் பிரதான வீதியில் கடந்த புதன்கிழமை 2ஆம் கட்டை வீதியில் எரிக்கப்பட்ட வீதியில் காணப்பட்ட நபர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

____________________________________________________________________________________________

ஜெனரலும் ஜே.ஆரும்

JRSarath_Fonsekaஇராணுவ தடுப்புக்காவலில் இருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையில் ஜனநாயக தேசிய முன்னணியை அமைத்திராவிட்டால் கடந்த பொதுத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனைக்கு (ஜே.வி.பி.) ஏற்பட்டிருக்கக் கூடிய கதி என்னவாக இருந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஜனநாயக தேசிய முன்னணியின் சார்பில் பாராளுமன்றத்துக்குத் தெரிவான 7 பேரில் ஐவர் ஜே.வி.பி.உறுப்பினர்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தங்களது பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகாவை நிறுத்திய எதிரணிக் கட்சிகளின் செயலினால் இறுதியில் சொற்ப பயனையாவது அடையக் கூடிய வாய்ப்பு ஜே.வி.பி.க்குத்தான் ஏற்பட்டது. ஆனால், காலப்போக்கில் ஜெனரல் பொன்சேகா ஜே.வி.பி.க்கு அனுகூலமாக இருப்பாரா அல்லது ஒரு பிரச்சினையாகி விடுவரா என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. அவர் பாராளுமன்றத்திலும் சரி ஊடகவியலாளர் மகாநாடுகளிலும் சரி தன்னெண்ணப்படியே பேசுகிறார். தன்னால் வெளிப்படுத்தப்படும் கருத்துகள் தன்னுடன் அணிசேர்ந்து நிற்கும் ஜே.வி.பி.யினருக்கு ஏற்புடையதாக இருக்கிறதோ இல்லையோ என்பதைப் பற்றி ஜெனரல் பொன்சேகா அக்கறைப்படுபவராகத் தெரியவில்லை.  (மேலும்)  14.05.10

____________________________________________________________________________________________

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்களால் 08-04-2010 இல் நடந்தேறிய பொதுத்தேர்தல் சம்பந்தமான அறிக்கை

50 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் ஈடுபட்டு வரும் மிக முதிர்ந்த தமிழ் அரசியல்வாதியாகிய என்னை மக்கள் மத்தியில் அரசின் ஏவலாளியாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பத்திரிகைகளின் உதவியுடன் சித்தரித்து மக்களை ஏமாற்றி நம்ப வைத்துள்ளனர்

a.sangary-1தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம் வடக்கு கிழக்கிலுள்ள சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள் என்று”, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரான இரா.சம்பந்தனின் பகிரங்க வேண்டுகோள் எனக்கு ஆச்சரியத்தை தராது போனாலும் நல்லதோர் நகைச்சுவையாகவே தோன்றுகிறது. தேர்தலுக்கு முன்பு இவ் ஆர்வத்தை காட்டியிருந்தால் இன்று நிலைமை வேறாக இருந்திருக்கும். அவரிலும் சிரேஷ்ட அரசியல்வாதி நான். தேர்தலுக்கு முன்பு பத்து அம்சங்கள் கொண்ட பிரேரணையின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து செயற்படலாமெனவும் புதிய பிரேரணைகள் இருப்பின் சேர்க்கலாம் என்றும் இருப்பவையை திருத்தலாம் எனவும் என்னால் விடப்பட்ட கோரிக்கையை பொருட்படுத்தாது, என்னையும் எமது கட்சியையும் இல்லாததும் பொல்லாததுமான பல குற்றச்சாட்டுக்களை கூறி மக்களை குழப்பமடையச் செய்து வழமைபோல் தேர்தலில் தம் வெற்றியையே மையமாக கொண்டு இயங்கிவிட்டு, இன்று ஒற்றுமையைப் பற்றி பேசுவது வேடிக்கையே. திரு. இரா.சம்பந்தன் அவர்கள் தலைமை தாங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்ற நிலைப்பாட்டுடன் விடுதலைப் புலிகளிடம் நியமனம் பெற்றே வரலாறு காணாத மோசடி மூலம் 22 உறுப்பினர்களை வென்றெடுத்து தமிழ் மக்களின் அழிவுக்கு வழிகோலியது. நியமனம் வழங்கியதே மறைந்த விடுதலைப்புலித் தலைவர் திரு. சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களே. (மேலும்)  14.05.10

முன்னைய பதிவுகள்

wanni

காக்கும் ஷேக்கும் (KAK AND SHEIKH )

புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரே ஸ்ரீலங்கா அரசு வகுத்திருக்கும் சாம, தான, பேத, தண்ட வியூகம்

தமிழ் மக்களுக்குப் பாரிய இன்னல்கள் ஏற்பட்டதற்கு வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி நிறைவேற்றிய தனிநாட்டுத் தீர்மானமே அடிப்படைக் காரணம்.

இலங்கை புலனாய்வுத்துறை எமது மக்களில் சிலர் எண்ணுவதைப்போல் முட்டாள்தனமானது அல்ல. குமரன் பத்மநாதன்

பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்