a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி             உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்      எங்கள்தேசம்         சலசலப்பு         நோயல்நடேசன்     விடிவெள்ளி         எங்கள்பூமி              ரீவடை இணையம்        பார்வை             தமிழ்யுகே
 

Asientribune
Lines-Magahzine
Srilankaguardian
The lka academic
Tamil Week            sldf
Uthr                
        

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                          05.10.2010

பிரிட்டனில் குடியேற கட்டுப்பாடு: புதிய அரசு முடிவு

லண்டன், மே 28: பிற நாடுகளிலிருந்து பிரிட்டனில் குடியேறுவோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த புதிதாக பொறுப்பேற்றுள்ள டேவிட் கேமரூன் அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அல்லாத பிற நாடுகளிலிருந்து அதாவது இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பிரிட்டன் குடியுரிமை கோருவோரைக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது. இத்தகவலை குடியேற்றத்துறை அதிகாரி டேமியன் கிரீன் தெரிவித்துள்ளார். பிரிட்டன் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். 2009-ம் ஆண்டில் பிரிட்டனில் நிரந்தர குடியுரிமை கோரி குடியேறியவர்களில் முதலிடத்தில் இந்தியர்கள் உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 26,535 பேர் பிரிட்டனில் குடியேறியுள்ளனர். இது ஒட்டுமொத்தமாக குடியேறியவர்களுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகமாகும். ஆனால் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 124 சதவீதம் அதிகமாகும். இந்தியர்களுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானிலிருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 20,945 மற்றும் வங்கதேசத்தவர்களின் எண்ணிக்கை 12,040 ஆகும். (மேலும்)  29.05.10

____________________________________________________________________________________________

விஜய் படங்களால் ரூ.30 கோடி நஷ்டம்-சரிகட்ட ஜூன் வரை 'கெடு'!

 vijayaநடிகர் விஜய்யின் சமீபத்திய 6 படங்கள் தோல்வியைத் தழுவியதால் தங்களுக்கு ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 35 சதவீதத்தையாவது ஜூன் 3வது வாரத்துக்குள் திருப்பித் தர வேண்டும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். இது தொடர்பாக இன்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். செக்கர்ஸ் ஹோட்டலில் நடந்த இந்த சந்திப்பின்போது, திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் கூறியதாவது: 2010ல் வெளியான எந்தப்படமும் லாபம் கொடுக்கவில்லை. தமிழ்ப்படம், அங்காடித்தெரு ஆகிய படங்களால் மட்டுமே லாபம் கிடைத்தது. பையா படம் முதலுக்கு மோசமில்லாமல் ஓடிவிட்டது. விஜய் ரசிகர்களை மட்டுமல்ல, எங்களையும் ஏமாற்றி வருகிறார். தொடர்ச்சியாக விஜய் நடித்து வெளிவந்த 6படங்களும் தோல்வி அடைந்துள்ளன. 5 படங்கள் தோல்வி அடைந்துவிட்டாலும், 6வது படம் விஜய் நடிக்கும் 50வது படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் சுறா படத்தை வாங்கினோம். 240 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. படம் படுதோல்வி அடைந்தது. (மேலும்)  29.05.10

____________________________________________________________________________________________

வடக்குக்கு விரைவில் மாகாணசபை தேர்தல்

நாட்டின் ஏனைய பிரதேச மக்கள் அனுபவிக்கும் சகல ஜனநாயக உரிமைகளையும் வடக்கு மக்களும் அனுபவிக்கும் வகையில் வடக்கில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென வடக்கு அபிவிருத்திச் செயலணியின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கிளிநொச்சியில் தெரிவித்தார். மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ மன்னாரிலும் கிளிநொச்சியிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்ததுடன் கிளிநொச்சி, சுன்னாகம், வவுனியா கிளிநொச்சிக்கான மின்சார இணைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். நேற்று முன்தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் பசில் ராஜ பக்ஷ, கிளிநொச்சி மின் இணைப்புத் திட்டத்தின் பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துவைத்ததுடன் கிளிநொச்சி அரசாங்க வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைப் பிரிவையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். பயங்கரவாத சூழல் நிலவிய இருபது வருட காலத்திற்குப் பின்னர் கிளிநொச்சி அரசாங்க வைத்தியசாலையில் நேற்று முதல் சத்திர சிகிச்சைப்பிரிவு செயற்பட ஆரம்பித்துள்ளதுடன் முதலாவது நோயாளியும் சத்திர சிகிச்சைப் பிரிவில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். (மேலும்)  29.05.10

____________________________________________________________________________________________

Germany-based LTTE fund raiser arrested

Police on Wednesday arrested a key supporter of the now defunct LTTE, on her arrival in Colombo. Well informed sources said that she had been instrumental in collecting funds in Frankfurt for the terrorist organisation and played a key role in the anti-Sri Lanka demonstrations held in the German Commercial Capital during the final stages of the 'humanitarian operation' launched by the security forces. "She was a key member of the pro -LTTE group who sat across railway lines and blocked the movement of trains in Frankfurt demanding the Sri Lanka government to halt the operation against the LTTE," sources said. The woman, who had lived in Germany for a considerable period, was also one of the main organisers of the anti-Sri Lanka demonstration held opposite the Indian Consul General's office in Frankfurt, sources said.  The suspect is a native of Chilaw and is around 50 years of age.  Some of her close relatives too had been involved in the demonstrations against Sri Lanka and had raised funds for the LTTE in Frankfurt, the sources said. Her family owns the GS Traders in Frankfurt and her son-in-law who is also an LTTE supporter is looking after the business, the source said. She is being interrogated by the CID, sources said.

Courtesy : The Island

____________________________________________________________________________________________

பொலிஸ் நிலையங்களில் தமிழில் முறைப்பாடு : மஹிந்த பாலசூரிய 

நாட்டின் சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழியில் முறைப்பாடுகளைப் பதிவு செய்யப்படும். இவர்களுக்கான பயிற்சி யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, திருகோணமலை, அனுராதபுரம் மற்றும் களுத்துறை ஆகிய நகரங்களில் நடத்தப்படும் எனப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழ் மொழியில் முறைப்பாடுகளை பதிவு செய்யக் கூடிய வகையில் கடமையாற்றக் கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மொழியை எழுதவும் பேசவும் கூடிய அதிகாரிகளின் தட்டுப்பாட்டை நீக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, திருகோணமலை, அனுராதபுரம் மற்றும் களுத்துறை ஆகிய நகரங்களில் அமைந்துள்ள பொலிஸ் பயிற்சி நிலையங்களில் ஆறு மாத கால தமிழ் மொழிப் பயிற்சி நெறி நடத்தப்படவுள்ளது.

____________________________________________________________________________________________

ஊடக தர்மத்தை உயர்த்திப் பிடிப்போம்

கருத்தரங்கு

விடயம்:   ‘ஊடக தர்மமும் தமிழ் ஊடகங்களும்

காலம்:   யூன் 06, 2010 ஞாயிற்றுக்கிழமை, காலை 9.00 – 12.00 வரை

இடம்:   ஸ்காபரோ சிவிக் சென்ரர்  (மக்கோவன் - எல்ஸ்மெயர்)

சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் பலர் கருத்துரைகள் வழங்குவர். தமிழ் ஊடகத்துறையில் நடுநிலைமை, நேர்மை, கருத்துச் சுதந்திரம் என்பவற்றை வேண்டி நிற்கும் அனைவரையும் கலந்து கொண்டு, தங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன்  அழைக்கின்றோம்.

கனடிய தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம் - demovizhippu @hotmail.com

____________________________________________________________________________________________

உள்ளூரில் வளர்க்கப்படும் பயங்கரவாதிகள்:முதலில் களையெடுக்க அமெரிக்கா திட்டம்

usaவாஷிங்டன்:அமெரிக்காவில் வளர்ந்து குடியுரிமை பெற்றவர்கள், பயங்கரவாதத்தில் ஈடுபட்டு சதிகளில் ஈடுபடுவதை தடுக்க தற்போது அமெரிக்கா அதிக கவனம் செலுத்துகிறது. அதற்கான புதிய யுக்திகள் மற்றும் நடைமுறைகள் உருவாக்கப்படும்."உள்ளூரில் வளர்ந்த பயங்கரவாதிகள்' இப்போது முதலில் கண்டறியப்பட்டு களையெடுக்கப்பட வேண்டியவர்கள் என்று, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் கூறியிருக்கிறார்.தேசிய பாதுகாப்பு குறித்த யுக்திகள் பற்றி நேற்று ஒரு அறிக்கையை அமெரிக்க அரசு வெளியிட்டது. அதில், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென்ரோடிஸ் தெரிவித்த கருத்தில், "அமெரிக்காவுக்குள் பயங்கரவாதிகள் வளர்ந்து வாழ்ந்து, இருந்து சதி செய்வதை முதலில் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும் என்று ஒபாமா அரசு கருதுகிறது' என்று கூறியுள்ளார். அவர் தன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:அல்-குவைதா தாக்குதல் நடைமுறை மாறியிருக்கிறது. அவர்கள் தங்கிய மறைமுக இடங்களில் இருந்து, பயிற்சி பெற்ற நபர்கள் மூலம் இலக்குகளை நோக்கி தாக்குவது என்ற நிலையில் இருந்து சற்று மாறி, பயங்கரவாதத்தில் பயிற்சி பெற்றவர்களை இந்த மண்ணில் இருந்தே தேர்வு செய்து தாக்குதல் நடத்தும் யுக்தியை பின்பற்றுகின்றனர். (மேலும்)  29.05.10

____________________________________________________________________________________________

யாழ். பெரிய பள்ளியில் மீண்டும் தொழுகை -அஸ்வர் எம்.பி. மகிழ்ச்சி

இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாண பெரிய பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகை இடம்பெறுவது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு பெரும் மறுமலர்ச்சியென ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. குறிப்பிட்டுள்ளார். “யாழ்ப்பாண சீமை-தமிழ் முஸ்லிம் உறவை மேலும் பலப்படுத்தும் முஸ்லிம்களும் தமிழர்களும், அந்நியோன்னிய உறவு பூண்டு நெருங்கிய தோழமை பூண்டு வர்த்தக கல்வித் துறையில் மட்டுமன்றி இன்னும் பல துறைகளில் இந் நாட்டில் ஒரு மகோன்னத இடத்தை பிடித்திருந்தனர். துரதிஷ்டவசமாக யாழ். முஸ்லிம்களை உடுத்த துணியுடன் இரவோடு இரவாக சொந்த மண்ணிலிருந்து புலி பயங்கரவாதிகள் துரத்தியடித்தனர். நாட்டின் பல பாகங்களிலும் சிதறுண்டு, அல்லலுற்று அகதி முத்திரையை தம் நெற்றியில் குத்திக்கொண்டவாறு வாழும் நிர்க்கதிக்கு ஆளாக்கப்பட்டனர். ‘ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிப் பயங்கரவாதத்தை அழித்தொழித்து முழு நாட்டிலும் சமாதானத்தை ஏற்படுத்திய பிறகு யாழ் முஸ்லிம்களின் வாழ்வில் தீனுல் இஸ்லாத்தின் சுடர் இப்போது மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கியிருக்கின்றது. வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் அதான் ஒலியின் இனிய நாதத்தை செவியுறுவதற்கும் ஜும்ஆத் தொழுகையில் ஈடுபடுவதற்கும் யாழ் முஸ்லிம்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

____________________________________________________________________________________________

kinniyaஅடையாளம் காண உதவுங்கள்

போட்டோவில் உள்ளவர் வாய்பேச முடியாதவர் கடந்த இரண்டு வாரங்களாக கிண்ணியா மத்திய கல்லூரியின் முன்னுள்ள பஸ்நிலையத்தில் காலத்தைக் கடத்தி வருகின்றார் எங்கிருந்து வந்தார் எப்படி வந்தார் என்ற எத்தகவல்களும் பெறமுடியாதுள்ளது எந்தவித ஆவணமும் அவரிடமில்லை. ஆனால் சமய அடிப்படையில் முஸ்லீம் என மட்டும் இடையாளங்காணப்பட்டுள்ளது. தயவுசெய்து முடியுமானவரை இச்செய்தியை  பரவவிட்டு அவரது உறவினர்களுடன் அவரை இணைப்போம்

தகவல்கள். - அப்ரார் - 0779677330, அஸார் - 0777073441, 0718161660 

____________________________________________________________________________________________

புலி ஆதரவு பேச்சு-பினாங்கு மாநில துணை முதல்வர் மீது நடவடிக்கை கோரும் இந்தியா!

டெல்லி: இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசிய மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. மலேசிய அரசுக்கு இந்தக் கோரிக்கையை இந்தியா விடுத்துள்ளது. சீமானின் நாம் தமிழர் அரசியல் மாநாடு மதுரையில் மே 18ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ் ஆர்வலர்களும், ஈழ மக்களுக்கான பல்வேறு அமைப்புகளும் பங்கு கொண்டன. மேலும் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாகக் கூறப்படுகிறது. மலேசியாவில் எங்கள் ஆட்சி அமைந்தால் விடுதலைப் புலிகளுக்கு அங்கீகாரம் அளிப்போம்" என்று அவர் பேசியதாக உளவுத்துறை குறிப்பு தெரிவிக்கிறது. இது குறித்து இந்திய உளவுத்துறை மத்திய அரசுக்கு விரிவான அறிக்கையை அளித்தது. இதையடுத்து இந்த குறிப்புகள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை இந்த குறிப்புகளை மலேசிய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும், அத்துடன் ஒரு கோரிக்கை கடிதமும் அனுப்பியுள்ளது.அதில், இந்திய இறையாண்மைக்கு எதிராக பினாங்கு துணை முதல்வர் ராமசாமி பேசியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

____________________________________________________________________________________________

குடாநாடு எங்கும் "வெசாக்'' கோலாகலம்; யாழ். நகரில் வண்ணமிகு அலங்காரங்கள்! துரையப்பா அரங்கப் பகுதியில் கண்கொள்ளாக் காட்சிகள்

வெசாக் பண்டிகையை ஒட்டி குடாநாட்டின் எல்லாப் பிரதேசங்களிலும் பரவலாகப் பந் தல்களும், வெளிச்சக் கூடுகளும் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. வலிகாமம், வட மராட்சி, தென்மராட்சி, தீவகம் ஆகிய பகுதிகளில் பிரதான இடங்களில் பந்தல்கள் அமைக் கப்பட்டு, வெளிச்சக் கூடுகள் அமைக்கப் பட்டு, கண்கவர் மின்குமிழ்கள் பொருத் தப்பட்டிருந்தன.ஆரியகுளம் விகாரை மற்றும் நகரின் பல பகுதிகளிலும் வெளிச்சக்கூடுகள் கட் டப்பட்டு நகர் எங்கும் நேற்றிரவு வண்ண மயமாகக் காட்சியளித்தது. பிரதானமாக யாழ். துரையப்பா விளை யாட்டரங்கு, கோட்டை, பொது நூலகம் அடங்கிய பகுதிகளில் விசேட பந்தல்கள் மின்னொளியுடன் ரம்மியமாக அமைக்கப் பட்டிருந்தன. விதம்விதமான அலங்கார வெளிச்சக்கூடுகளும் கட்டப்பட்டிருந் தன. அப்பகுதியில் நாலா திக்கிலும் கண் கவர் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு பிரதேசம் முழுவதும் ஜெகஜோதியாகக் காட்சியளித்தது. விசேட மேடைகள் அமைக்கப்பட்டு பக்தி கீதங்களும் இசைக்கப்பட்டன. நேற்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பிராந்திய படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க கலந்துகொண்டார். படை அதிகாரிகள், அரச பிரமுகர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் நேற்றைய வெசாக் காட்சிகளைக் கண்டுகளித்தனர். நேற்றுக்காலையிலும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அங்கு அமைக்கப்பட்டிருந்த தானசாலைகளில் பொதுமக்களுக்கு உணவு வகைகள் படையினரால் பரிமாறப்பட்டன.

____________________________________________________________________________________________

நக்சல்களின் அடங்காத கொட்டம் ; மும்பை ரயில் குண்டு வைத்து தகர்ப்பு; பலி 65 ;காயம்100

nachliteகோல்கட்டா: மேற்கு வங்கத்தில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 70 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 100க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். மாவோ., நக்சல்கள் நடத்தி வரும் வெறி தாக்குதல் தொடர்ந்த வண்ணமே உள்ளதே தவிர மத்திய அரசு இன்னும் ஓடுக்கும் விஷயத்தில் தெளிவான முடிவை அறிவிக்கவில்லை. தொடர்ந்து வரும் தாக்குதல்கள் : இந்தியாவில் மவோயிஸ்ட் நக்சல்கள் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு தாக்குதலை நடத்தியுள்ளனர். பெரும் உயிரிழப்பு மற்றும் பொதுச்சொத்து தேசம் என மத்திய அரசுக்கு விடாத தலைவலியாகவே இருந்து வருகின்றனர். மலைப்பகுதியில் பதுங்கி இருக்கும் இந்த நக்சல்கள் தாக்குதலின் உச்சக்கட்டமாக கடந்த மாதம் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 76 பேரை கண்ணி வெடி வைத்தும் துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநேரத்தில் நக்சல்கள் ஒடுக்கும் விஷயத்தில் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மட்டுமே நடத்தப்பட்டது. உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை. (மேலும்)  28.05.10

____________________________________________________________________________________________

இலங்கை அமைச்சருக்குக் கறுப்புக் கொடி காட்ட முயன்ற 11 பேர் கைது

நாகப்பட்டினம், மே 27: நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே, இலங்கைஅமைச்சருக்குக் கறுப்புக் கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் இயக்கத்தினர் 11 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். இலங்கை அரசின் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தயஷ்ரீதா திசேரா மற்றும் அவரது குடும்பத்தினர் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் வழிபாடு மேற்கொள்ள வியாழக்கிழமை பிற்பகல் நாகை மாவட்டத்துக்கு காரில்வந்தனர். இதனிடையே, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஒரு சில அமைப்புகள் சார்பில் நாகை புத்தூர் அண்ணா சிலை, நாகை - வேளாங்கண்ணி ரயில்வே கேட், பரவை, வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் கறுப்புக் கொடி காட்டத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, நாகை காவல் துணைக் கண்காணிப்பாளர் டி.கே. நடராஜன் தலைமையில் மேற்கண்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. (மேலும்)  28.05.10

____________________________________________________________________________________________

கோவையில் வைகோ உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது

கோவை, மே 28: நதி நீர் பிரச்னை தொடர்பாக கேரள அரசைக் கண்டித்து கேரள எல்லையில் மறியல் செய்ய முயன்ற மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பேர் கைது செய்யப்பட்டனர். முல்லைப் பெரியாறு, பாம்பாறு, செண்பகவல்லி தடுப்பு அணை, நெய்யாறு இடதுகரைச் சானல் ஆகிய நதி நீர் பிரச்னைகளில், தமிழகத்தின் உரிமைகளுக்கு பங்கம் விளைவிப்பதாகக் கூறி கோவை மாவட்டம் கந்தேகவுண்டன் சாவடியில் கேரளத்துக்கு செல்லும் சாலையில் வைகோ தலைமையில் இன்று மறியல் போராட்டம் நடந்தது. இதில் மதிமுக துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா உள்ளிட் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து, மறியல் செய்ய முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல், வேலந்தாவலத்தில்  இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட 500 பேரும் ஆனைக்கட்டியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட 340 பேரும், பொள்ளாச்சி கோபாலபுரத்தில் கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளர் உ. தனியரசு உள்ளிட்ட 750 பேரும், வலந்தாயமரத்தில் தமிழ் தேசப் பொதுவுடமை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்ட 150 பேரும், நடுப்புணியில் மதிமுக விவசாயி அணித் தலைவர் சூலூர் பொன்னுசாமி, மற்றும் உடுமலை 9-6 சோதனைச் சாவடியில் ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேச மூர்த்தி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

____________________________________________________________________________________________

மன்னிப்புச்சபை போன்ற குழுக்களுக்கு எந்த தார்மீக அதிகாரமும் இல்லை - வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

peirisஇலங்கையில் புலிகளால் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று கூறியுள்ள பீரிஸ், சிங்கள உயிர்களை மட்டும் தான் குறிப்பிடவில்லை என்று தமிழர்களும் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார் கதிர்காமர் சிங்களவரா? நீலன் திருச்செல்வத்துக்கு என்ன நடந்தது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசாங்கம் அமைத்த பல்வேறு ஆணைக்குழுக்கள் மனித உரிமை அமைப்புகளின் நம்பகத்தன்மை தொடர்பாக சந்தேகம் தெரிவித்து மன்னிப்பு சபை பிரதிநிதி கேள்வி எழுப்பியபோது, யுத்தம் முடிவடைந்து ஒருவருடம் மட்டுமே கடந்திருப்பதை மறந்துவிட வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். இத்தகைய சூழ்நிலைகளில் ஏனைய நாடுகளின் அனுபவங்களைப் பாருங்கள். சிலநாடுகளுக்கு 36 வருடங்கள் எடுத்தன. ஏன் இரண்டு விதமான நிலைப்பாடுகளைப் பிரயோகிக்கிறீர்கள்? உலகளாகவிய ரீதியில் இதே விதமான நிலைப்பாட்டை சர்வதேச மன்னிப்புச் சபை ஏன் எடுக்கவில்லை? ஏன் இலங்கையை மட்டும் வேறுபடுத்துகிறீர்கள். ஏனென்றால் இலங்கை வறிய நாடு. அதனை உதைபந்து போன்று சுற்றிவர உதைத்துத் தள்ளிவிட முடியும்? இதற்கு நிச்சயமாக நாம் இடமளிக்க மாட்டோம். மன்னிப்பு சபையோ வேறு எவருக்கோ நாம் இடமளிக்கமாட்டோம் எனவும் அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார் (மேலும்)  28.05.10

____________________________________________________________________________________________

அரசியலமைப்பு மாற்றத்திற்கு சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அங்கீகாரம்: அலரி மாளிகையில் ஜூன் 7இல் வருடாந்த மாநாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜூன் மாதம் 7 ஆம் திகதி அலரி மாளி கையில் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் கூடிய போது இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அக்கட்சி யின் சிரேஷ்ட உபதலைவர்களில் ஒருவரும், மேல் மாகாண ஆளுநரு மான அலவி மெளலானா நேற்றுத் தினகரனுக்குத் தெரிவித்தார். இம்முறை நடைபெறவுள்ள வரடாந்த பொதுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பது தொடர்பாக ஆராய்வதற்கென கூட்டப்பட்ட இந்த மத்திய குழுக் கூட்டத்தின் போது பல்வேறு அரசியல், முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் அரசாங்கம் அடுத்தடுத்து அமோக வெற்றி யீட்டியதையடுத்து அலரி மாளிகை யில் முதற்தடவையாக இந்த மாநாடு பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளதால் இம்முறை பாரிய ஏற்பாடுகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ள அரசாங்கம் நாட்டினதும், மக்களினதும் நலனை கருத்திற்கொண்டு அரசியலமைப்பு உட்பட பல்வேறு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவுள்ளது.  (மேலும்)  28.05.10

____________________________________________________________________________________________

கொழும்பு திரைப்பட விழாவுக்கு றோ பாதுகாப்பு!

rawஜூன் 3 முதல் 5ம் தேதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் பாதுகாப்பு பணிகளுக்காக இந்தியாவின் றோ உளவுப் பிரிவு இலங்கை சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. றோ அமைப்பு தவிர, இந்தியாவின் முக்கிய பாதுகாப்புப் படையணிகள் சிலவும் ஏற்கெனவே இலங்கையில் இந்த விழாவுக்காக முகாமிட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையத் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச இந்திய திரைப்பட விழா என்ற பெயரில் கொழும்பில் நடக்கும் இந்த விழாவை இந்திய தொழில் கூட்டமைப்பு (ஃபிக்கி) நடத்துகிறது. ஆனால், தமிழ் நட்சத்திரங்கள் அனைவரும் இந்த விழாவைப் புறக்கணித்ததுடன், மற்ற மொழிக் கலைஞர்களும் இதில் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர். தமிழ் அமைப்புகளும், உணர்வாளர்களும் இத் திரைப்பட விழாவுக்கு எதிரான பிரச்சாகங்களில் ஈடுபட்டுள்ளனர். (மேலும்)  28.05.10

____________________________________________________________________________________________

அடுத்த அதிமுக ஆட்சி, பழைய செயலகத்தில்

அதிமுக ஆட்சி புனித ஜார்ஜ் கோட்டையில்தான் - ஜெயலலிதா

அதிமுக மீண்டும் அடுத்து வரும் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தால், அரசு, பழைய தலைமைச் செயலகத்தில்தான் இயங்கும் என்று முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா jeyalalithaகூறியுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்து அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்போது, புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தில் அதன் அரசு அமையாது என்றும், ஏற்கெனவே செயல்பட்டு வந்த புனித ஜார்ஜ் கோட்டையில்தான் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   இன்று மாலை சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தொண்டர்களிடம் பேசியபோது, ஜெயலலிதா, இதைத் தெரிவித்தார். இதன் மூலம், அதிமுக ஆட்சிக்கு வந்தால், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்டு கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் பயன்படுத்தாது என்று ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். இது தமிழக அரசியலில் மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தக்கூடு்ம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கட்சியிலிருந்து மூத்த பிரமுகர்கள் சிலர் திமுகவில் சேர்வது பற்றி அவர் பேசும்போது, கட்சியை விட்டுப் போன தலைவர்ளைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும், தொண்டர்களை மையமாகக் கொண்ட கட்சி அதிமுக என்றும் தெரிவித்தார்.

____________________________________________________________________________________________

பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம். சீனாவிடம் இந்திய ஜனாதிபதி கோரிக்கை

india-prasidentீஜிங் : ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா இருப்பதற்கு ஆதரவளிக்க வேண்டும் என, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், சீனாவிடம் கோரியுள்ளார். சீனாவுக்கு ஆறு நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், அந்நாட்டு பிரதமர் வென் ஜியாபாவை நேற்று சந்தித்து பேசினார். ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக சீனா ஆதரவளிக்க வேண்டும் என, அவர் அப்போது கோரினார். இந்தியா - சீனா தூதரக உறவு ஏற்பட்டு 60 ஆண்டுகள் ஆனதையொட்டி, சீனாவின் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாக்களில் பிரதிபா பங்கேற்கிறார். மத்திய சீனாவின் லயோங் என்ற இடத்தில் இந்திய கட்டடக் கலையுடன் கட்டப்பட்ட புத்தர் கோவிலையும் பிரதிபா திறந்து வைக்க உள்ளார். சீன அதிபர் ஹு ஜிண்டோவோவை நேற்று சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பிரதிபா பேசினார். சீன பார்லிமென்ட் வளாகத்தில் பிரதிபாவை, ஹு ஜிண்டாவோ வரவேற்றார்.

____________________________________________________________________________________________

கனடாவில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறும் வேளையில், பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு!

- பார்த்திபன்

உலகின் மிக வளர்ச்சி அடைந்த நாடுகளின் அமைப்பான ஜி 20 ( G 20)  நாடுகளின் உச்சி மாநாடு, யூன் 26 – 27ம் திகதிகளில் கனடாவில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், அவுஸ்ரேலியா போன்ற பெரும் முதலாளித்துவ நாடுகளின் தலைவர்கள் பங்குபற்ற உள்ளனர். முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி, சுற்றுச்சூழல் பாதிப்பு என்பன இம்மாநாட்டில் விவாதிக்கப்படும் முக்கிய விடயங்களாக இருக்கப் போகின்றன. தற்பொழுது உலகம் கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத பெரும் பொருளாதார நெருக்கடி நிலையில் உள்ளது. அது ஒரு புறத்தில் உலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முதலாளித்துவம் தீர்வல்ல என்பதை ஓங்கிப் பறைசாற்றி நிற்பதுடன், மறுபக்கத்தில் உலகம் முழுவதுமுள்ள தொழிலாளி வர்க்கத்தினதும், உழைக்கும் மக்களினதும் கோபாவேசத்தையும் கிளறி விட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வளர்;ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் மாநாடுகள் நடைபெற்ற இடங்களில் எல்லாம், பல்லாயிரக்கணக்கான மக்கள் நேரடியாகச் சென்று தமது ஆக்ரோசமான எதிர்;ப்பை ஆர்ப்பாட்டங்கள் மூலம் தெரிவித்து வந்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்களை சில இடங்களில் பொலிசாரால் கட்டுப்படுத்த முடியாமல் போனதுடன், பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் மோதல்களும் நிகழ்ந்து வந்துள்ளன.  (மேலும்)  28.05.10

____________________________________________________________________________________________

அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் தமிழ் மக்களுக்கு முக்கியமானவை

வட மாகாணத்துக்கான சில அபிவிருத்தித் திட் டங்களின் செயற்பாடு நேற்று அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார், பள்ளிமுனையில் வாழும் மக்களுக்கு நீர் விநியோகத் திட்டமும் கிளிநொச்சி மற்றும் சுன்னாகம் மின் நிலையங்கள் தடையின்றி மின்சாரம் விநி யோகிப்பதற்கான திட்டமும் நேற்று முதல் நடைமுறைக்கு வருகின்ற அதே வேளை மன்னாரிலும் கிளிநொ ச்சியிலும் வைத்தியசாலைகளுக்கான புதிய கட்டடங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஏழாயிரம் மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவாகியுள்ளது. வடபகுதி மக்களுக்குப் பிரதேச அபிவிருத்தி அரை நூற் றாண்டுக்கு மேல் எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரே இம்மக்கள் அபிவிருத்தியை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். வட மாகாணம் அபிவிருத்தியில் பின்தங்கியிருந்ததற்கு அரை நூற்றாண்டுக்கு மேலாக அம் மாகாண மக்களின் அரசியல் தலைமையை நியாயமான முறையிலும் நியா யமற்ற முறையிலும் தமதாக்கிக் கொண்டிருந்தவர்களே முழுப் பொறுப்பாளிகள். வடபகுதி மக்களை வெவ் வேறு காலகட்டத்தில் வெவ்வேறு கட்சிப் பெயர்களில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர் கள் அபிவிருத்தியில் சிறிதளவேனும் அக்கறை செலுத்தவில்லை. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே தங்கள் பிரதான பணி என்று இத் தலைவர்கள் கூறிய போதிலும் அந்தப் பணியையும் சரியான முறையில் முன்னெடுக்கவில்லை.  (மேலும்)  28.05.10

____________________________________________________________________________________________

Interview with Sri Lanka's FM

gl peirisPresident Rajapaksa has consistently emphasized that he does not see the country’s change as an occasion for exaltation or jubilation. On the contrary it is an occasion for renewed commitment to economic development for the benefit of all the people who inhabit the country, no matter what language they speak or religion they profess or cultural background they come from. The Tamil community was terrorized by the LTTE just as everybody else was. Don’t forget the LTTE has killed as many Tamil leaders as they have Sinhalese leaders. The LTTE annihilated the democratic Tamil leadership – the Tamil community could not give expression to their views. Now the Tamil community is empowered in just the way that everybody else is … There is no fear in the minds of people, there is a sense of freedom, and that is what is most striking about the overall atmosphere in Sri Lanka right now.
 It is certainly not the view of the pres government that a military victory provides us with a final solution. It is the president’s view that the defeat of terror must be followed by a political solution acceptable to all communities, and formulating those proposals must be as broad a process of consultation as possible with different shades of political opinion in the country.  (Read) 28.05.10

____________________________________________________________________________________________

புலிகளுக்கு சார்பான பிரசாரங்களில் ஈடுபட்டதாக கிழக்கில் இருவர் கைது

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு சார்பான பிரசாரங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கல்முனை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய இரு பிரதேசங்களையும் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைதாகும் போது அவர்களிடமிருந்த கையடக்க தொலைபேசிகளில் விடுதலைப் புலிகளுக்குச் சார்பான வீடியோ காட்சிகள் இருந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். வடக்கின் பாண்டிருப்பு மற்றும் எருவில் போன்ற பிரதேசங்களைச் சொந்த இடமாகக்கொண்ட இவ்விருவர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களை அடுத்தே இந்த கைது இடம்பெற்றதாகவும் அவர் கூறினார். கடந்த வருடம் விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டதை அடுத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான பிரசாரங்களில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.  இவ்விருவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் களுவாஞ்சிக்குடி பொலிஸாரும் முன்னெடுத்து வருகின்றனர். 

____________________________________________________________________________________________

காணாமல்போனோர் தொடர்பாக உரிய பதில் கிடைக்காவிடின் போராட்டம் தொடரும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு

vavuniyaயுத்தம் முடிவடைந்த நிலையில் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டிருக்கும் அரசாங்கம் தடம்மாறிச் செல்வதாகக் குற்றம்சாட்டும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், காணாமல் போனவர்கள் தொடர்பாக உரிய பதில் கிடைக்காவிடின் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறது. அகதி முகாம், சிறை மற்றும் இடைத்தங்கல் முகாம்களிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமெனவும் மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று புதன்கிழமை கொழும்பில் வடக்கில் காணாமல்போனவர்களை அழைத்து வந்து நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அமைப்பின் தலைவர் உதுல் பிரேமரட்ண பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார் .அவர் மேலும் கூறியதாவது;கடந்த காலத்தில் நாட்டில் பலர் காணாமல்போயிருந்தனர். குறிப்பாக வட பகுதியில் காணாமல்போனவர்கள் எங்கிருக்கின்றனரெனத் தெரியாமல் எதுவித தகவலுமின்றி உறவினர் கவலையுடன் வாழ்கின்றனர். தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ள நிலையில் இவர்களது பிரச்சினையத் தீர்ப்பதற்கு நாம் அழுத்தம் கொடுத்து வருகின்றோம்.  (மேலும்)  27.05.10

____________________________________________________________________________________________

மனிதஉரிமையில் மட்டும் கவனம் செலுத்துவதில் நிற்கவேண்டாம் அமெரிக்காவுக்கு  இலங்கை தெரிவிப்பு

 மனித உரிமைகள் விவகாரங்களில் கவனத்தைச் செலுத்தும் ஒரு விடயத்தில் மட்டும் நிற்கவேண்டாம் எனவும் இலங்கையில் யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் ஏனைய வாய்ப்புகளும் அலுவல்களும் இருப்பதாகவும் இலங்கை அமெரிக்காவுக்குத் தெரிவித்திருக்கிறது. யுத்தம் முடிவடைந்து ஒருவருடம் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். மனிதஉரிமைகள் விடயத்தில் கவனத்தை செலுத்துவதையிட்டு எந்த வழியிலும் நாங்கள் இணக்கமின்மையை வெளிப்படுத்தவில்லை. அது விளங்கிக்கொள்ளக் கூடியது. அதுதொடர்பாக நாங்கள் புகார் தெரிவிக்கவில்லை என்றும் பீரிஸ் கூறியுள்ளார். கேந்திரோபாய மற்றும் சர்வதேசகற்கைகளுக்கான நிலையத்தில் குழுமியிருந்த புத்திஜீவிகள் மத்தியில் உரையாற்றும்போதே பீரிஸ் இதனைத் தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. உறவானது ஒரு பரிமாணத்திற்குட்பட்டதாக இருக்கக்கூடாது என்றவிடயத்தையே நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். இலங்கையும் அமெரிக்காவும் ஒன்றுபட்டு மேற்கொள்வதற்கான வேறு பல விடயங்களும் உள்ளன என்று அவர் கூறியுள்ளார். (மேலும்)  27.05.10

____________________________________________________________________________________________

நாட்டைப் புனரமைக்கப் புலம்பெயர் தமிழர் உதவ வேண்டும் : பீரிஸ்

 நாட்டின் புனர்நிர்மாண செயற்பாடுகளுக்குதவ புலம் பெயர் தமிழர்களும் முன்வரவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அழைப்பு விடுத்தார். அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், நியூயோர்க்கில் பி. பி. சி. சேவைக்கு அளித்த பேட்டியின் போதே இவ்வாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தார். "இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களைத் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தி வருகிறது. அத்துடன் வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் மீள் நிர்மாணிக்கப்பட்டும் வருகின்றன. இந்தச் செயற்பாடுகளில் உலகளாவிய ரீதியில் புலம் பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களும் தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று விரும்புகின்றோம். அரசாங்கம் ஆரம்பித்துள்ள நடவடிக்கைகளுக்கு ஓர் உந்து சக்தி தேவை. புலம் பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்கள் இவ்விடயத்தில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. எனவே வடக்கு கிழக்கு மக்களுடன் உலகளாவிய ரீதியில் புலம் பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களும் இதில் பங்கு கொள்ள வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் சில பிரதேசங்களைக் கட்டியெழுப்ப பொருளாதார மறுமலர்ச்சி தேவைப் படுகிறது" என்று அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

____________________________________________________________________________________________

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: இலங்கையில் கடும் எதிர்ப்பு

கொழும்பு, மே 26:  இந்தியாவுடன் வர்த்தகம் செய்து கொள்ளக்கூடாது என்று கூறி டாக்டர்கள், என்ஜீனியர்கள் உள்பட ஏராளமானோர் கொழும்புவில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து போராட்டக்காரர்களை அழைத்து அதிபர் மகிந்த ராஜபட்ச பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையை பாதிக்கும் எந்த ஒரு உடன்பாட்டையும் தனது தலைமையிலான அரசு மேற்கொள்ளாது என்று அவர்களிடம் உறுதி அளித்தார்.  அப்படி ஒருவேளை உடன்பாடு செய்து கொள்ளப்பட்டாலும் அது இரு நாடுகளுக்கும் சம அளவில் பலனை அளிப்பதாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச, ஜூன் 8-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். அவரது இந்த பயணத்தின் போது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே வர்த்தக உடன்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியானது.  இதை இலங்கையில் டாக்டர்கள், என்ஜீனியர்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்த்துள்ளனர். இந்த உடன்பாடு எட்டப்பட்டால் இலங்கை சந்தையை இந்திய பொருள்கள் ஆக்கிரமித்துவிடும். இதனால் உள்நாட்டுத் தொழிற்சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறி வருகின்றனர். 

____________________________________________________________________________________________

மகத்தான மனிதாபிமானப் பணி

child soldiers.8சரணடைந்த புலி இயக்க உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுப் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது பற்றியும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பெண் புலி உறுப்பினர்களுக்குத் தனியார் துறையில் வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கப்பட்டது பற்றியும் நேற்றுக் குறிப்பிட்டிருந்தோம். இந்தக் கையளிப்பைத் தொடர்ந்து 198முன்னாள் போராளிகள் நேற்று முன்தினம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டனர். இவர்கள் எல்லோரும் பதினெட்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் சிறுமியரும் என்பது குறிப்பிடத்தக்கது. புலித் தலைமையினால் தமது படையணியில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சிறுவர், சிறுமியரில் 294 பேர் அரசாங்கத்திடம் சரணடைந்தனர். இவர்களுள் 96பேர் வெவ்வேறு கட்டங்களில் பெற்றோரிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டனர். மற்றைய 198 பேரும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அனுசரணையுடன் இரத்மலானை இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வந்தனர். தங்கள் பிள்ளைகளைத் தங்கள் சொந்தப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் சேர்த்துப் படிப்பிப்பதற்குப் பெற்றோர் விரும்பியதால் இவர்கள் இப்போது பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்திலும் இவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கான சகல வசதிகளையும் செய்து தருவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கின்றது. அரசாங்கத்திடம் சரணடைந்த சிறுவயதினர் அனைவரும் இப்போது பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுவிட்டனர். (மேலும்)  27.05.10

____________________________________________________________________________________________

90 நாட்களில் மீள்குடியேற்றம் முடிவு?

- பி.பி.சி செய்தி

karunaஇலங்கையில் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த நிலையில் இருப்பவர்கள் இன்னும் மூன்று மாதங்களுக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் மக்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்கிற அறிவுறுத்தலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ளதாக மீள்குடியேற்றத்துறையின் துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார். கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வேகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறுகிறார். இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், அகதிகள் நலன்களுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்துடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் மீள்குடியேற்றத்துறையின் துணை அமைச்சர் தெரிவிக்கிறார். மக்கள் அனைவரும் எந்த குறிப்பிட்ட நாளுக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்த நடவடிக்கையை நிறைவு செய்யும் திட்டத்தில் அரசு இறங்கியுள்ளது எனவும் அவர் கூறுகிறார். (மேலும்)  27.05.10

____________________________________________________________________________________________

Pro-LTTE diaspora pursue Eelam agenda without any thought about Tamils living in Sri Lanka

By Dr. Rajasingham Narendran

"Innaa Seytharai Oruthal Awar Naana-
Nan Nayam Seythu Widdal" (Thirukkural –Tamil)

(Perform a good deed in return, to those who have harmed you, in order to shame them-my translation)

It is one year since the LTTE was militarily defeated at Nanthikadal, 300,000 victims of this war ended up as 'Internally Displaced Persons' in camps and several thousands, both combatants and non-combatants, died. In the past year, Provincial Councils have been elected anew, the President has been re-elected and the general elections have been held for a new parliament. In the past year, the people, who were not in the war Theater, have enjoyed peace, sans terrorism. The woes of those who faced the brunt of the war and its brutal end however continue unabated! Have we learned our lessons from the war and its brutal end, and done what we should have? Sadly, we have done neither. The victims of the war- principally the Tamils in the Vanni, who paid the price for someone else's war, became the victims of political chicanery, in the hands of Diaspora Tamils, their politicians, their militant turned democratic groups, the international community and the Sri Lankan government. (Read) 27.05.10

____________________________________________________________________________________________

மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள்:: ரூ.7000 மில். செலவில் அபிவிருத்தி திட்டங்கள்

  • பள்ளிமுனை நீர்விநியோகம்
  • வவுனியா - கிளிநொச்சி, சுன்னாகம் மின் விநியோகம்
  • மன்னார், கிளிநொச்சி வைத்தியசாலைகள் புனரமைப்பு

மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் சுமார் 7000 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர், மின் விநியோகம், நீர்ப்பாசனம், மற்றும் சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பனவற்றுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த அபிவிருத்தி திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார். (மேலும்)  27.05.10

____________________________________________________________________________________________

May18

விபரங்கட்கு

____________________________________________________________________________________________

இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாதவரை சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு நீண்டகாலம் முகம் கொடுக்கமுடியாது.

26.05.2010 தாயகக்குரல்

மேற்குலக நாடுகளின் நெருக்குதலுக்கு முகம் கொடுத்துவரும் இலங்கை அரசு மேற்படி நாடுகளின் எதிர்முகாம்களாக கருதப்படும் நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை பேணி சர்வதேச அரங்கிலும் தன்னைப் பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளங்களைச் சுரண்டிவரும் ஏகாதிபத்திய மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு  எதிராக சுரண்டப்படும் நாடுகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்குடன் கூட்டு அமைப்புகளை உருவாக்கியுள்ளன. அந்தவகையில் பிராந்திய பாதுகாப்பு ஏற்பாடாக ஆரம்பிக்கப்பட்டது ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பாகும். ரஷ்யா, சீனா உட்பட ஆறு நாடுகளைக் கொண்ட ஷங்காய் அமைப்புடன் நாட்டின் பாதுகாப்பு, நாணய மாற்று, விடமைப்பு உட்பட பல விடயங்களை உள்ளடக்கி ஒப்பந்தம் ஒன்றை இம்மாத ஆரம்பத்pல் இலங்கை ஏற்படுத்தியுள்ளது. பிராந்திய பாதுகாப்பு ஏற்பாடாக ஆரம்பிக்கப்பட்ட ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு இப்போது பொருளாதார ஒத்துழைப்பு விடயத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. (மேலும்)  27.05.10

____________________________________________________________________________________________

முன்னாள் சிறுவர் போராளிகளின் புனர்வாழ்வு முகாம் மூடப்பட்டது 49 பேர் ரத்மலானை இந்துவில் கல்வியைத் தொடர்வர்

இந்தப் புனர்வாழ்வு முகாம் வாழ்க்கையானது சட்டத்தரணியாகவரும் தனது கனவுகளுக்கு அண்மித்ததாகக் தன்னைக் கொண்டு சென்றுள்ளதாக 16 வயதுடைய கிறஸ்டி கூறினார்.பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்ய விரும்பியிருந்தேன். புலிகள் இப்போது முடிந்துவிட்டனர். ஆட்கள் வந்து என்னை சண்டையிடுவதற்கு திரும்ப அழைத்துச் செல்லமாட்டார்கள்

childsolldiers-9முன்னாள் சிறுவர் போராளிகள் வைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு முகாமொன்றை இலங்கை நேற்று செவ்வாய்க்கிழமை மூடியுள்ளது. ஆனால், 52 பேர் அரசாங்கத்தின் பராமரிப்பில் அவர்களின் கல்வி பூர்த்தியடையும் வரை தொடர்ந்தும் வைக்கப்பட்டிருப்பார்கள் என்று அதிகாரியொருவர் தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து 500 சிறுவர் போராளிகள் படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் அநேகமானோர் தமது குடும்பங்களுடன் சேர்ந்துள்ளனர். 198 ஆண்களும் பெண்களும் கொழும்பில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அந்தப் புனர்வாழ்வு நிலையம் நேற்று செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருப்பதாக புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுகந்த ரணசிங்க ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். இந்தப் பிள்ளைகள் அவர்களுடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்ற ரணசிங்க கூறினார். இந்த முகாமை மூடிவிடுமாறு இலங்கை நீதிமன்றம் கடந்த பெப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது. "முகாமில் நான் இருந்த வேளை எனக்கு நண்பர்கள் கிடைத்தார்கள். நான் கற்றுக்கொண்டேன். சிங்கள மக்களை நம்ப முடியும் என்று 17 வயதுடைய லக்ஷியா என்ற பெண் கூறினார். இவர் புலிகளின் பெண்கள் படையணியில் 3 வருடங்கள் இருந்தவர். . (மேலும்)  26.05.10

____________________________________________________________________________________________

பொன்சேகாவை விடுவிக்கக் கோரி 50 எம்.பி.க்கள் ஜனாதிபதிக்கு மகஜர்

 நாட்டை மீட்டெடுக்கும் போரில் தலைமையேற்று வெற்றிக்குக் காரணமாக இருந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட்டிருப்பது அநீதியான செயலெனவும் அவரை உடனடியாகவிடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கோரி பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐம்பது பேர் கையெழுத்திட்ட மகஜரொன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயகத் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 50 பேர் இந்த மகஜரில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த மகஜர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். (மேலும்)  26.05.10

____________________________________________________________________________________________

போர்குற்றம் -ஐ.நா வுடன் ஒத்துழைப்பில்லை

- பி.பி.சி

unoஇலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பிலான பொறுப்பேற்றல் குறித்து தமக்கு ஆலோசனைக் கூறக் கூடிய நிபுணர் குழுவை அமைக்க தான் தொடர்ந்து முயன்று வருவதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்தார். ஆனால் இதற்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது.மனித உரிமைகள் சம்மந்தமான விடயங்களில் பொறுப்பேற்றல் குறித்து இலங்கை அரசு ஏற்கனவே அளித்த உறுதிமொழிகள் எந்த அளவுக்கு அமல் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து சர்வதேச அளவில் உள்ள அனுபவங்கள் மற்றும் ஏற்கப்பட்ட நெறிமுறைகளின் அடிப்படையில் தனக்கு அறிவுறை கூறக்கூடிய நிபுணர் குழு அமைப்பது குறித்து முயற்சி எடுத்து வருவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை கூற ஒரு நிபுணர் குழுவை அமைக்கப் போவதாக ஐ நா பொதுச் செயலர் கூறி 80 நாட்கள் ஆன நிலையில், இது தொடர்பில் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் போனதற்கு இலங்கை அரசின் அழுத்தம் காரணமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.  (மேலும்)  26.05.10

____________________________________________________________________________________________

சுமுக எதிர்காலம் பற்றிய நம்பிக்கை

child soldiers-1புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் வெற்றியீட்டியவுடன் பொறுப்பு முடிந்துவிட்டது என்று அரசாங்கம் கருதவில்லை. இராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோ அதேயளவு முக்கியத்துவம் வெற்றிக்குப் பின் சுமுக வாழ்வை ஏற்படுத்துவதற்கும் அளிக்கப்பட வேண்டும். இவ்விட யத்தில் அரசாங்கம் அதன் பொறுப்பை உணர்ந்து செயற் படுவதை அவதானிக்க முடிகின்றது. புலிகள் இயக்கத்தின் போராளிகளாகக் கடைசிக் கட்டத்தில் செயற்பட்டவர்களில் பெரும்பாலானோர் தவறாக வழி நடத்தப்பட்டவர்களும் பலவந்தமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களுமே. இவர்கள் தண்டனைக்கு உரியவர்களல்ல. மீண்டும் சமுதாயத்துடன் ஒன்றிக் கலந்து நற்பிரசைகளாக வாழ வேண்டியவர்கள். சமூகத்துக்கும் நாட்டுக்கும் பயனுறு வகையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டியவர்கள். இவர்களுக்குப் புனர்வாழ்வு அளித்துச் சமுதாயத்துடன் ஒன்றிணைக்கும் பொறுப்பை அரசாங்கம் சிறப்பாக நிறைவேற்றி வருவது சுமுகமான எதிர்காலம் பற்றிய நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றது. (மேலும்)  26.05.10

____________________________________________________________________________________________

யாழ்.குடாவில் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு நகைகள் கொள்ளை

வீட்டுக்குள்ளிருந்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு அவரது நகைகளை திருடர்கள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவமொன்று யாழ்ப்பாணம், நாவலர் வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த குறித்த பெண், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

____________________________________________________________________________________________

18 வயதுக்குட்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் அனைவரும் பெற்றோரிடம் ஒப்படைப்பு: இறுதியாக 198 பேர் நேற்று வவுனியாவில் கையளிப்பு; சொந்த இடங்களில் கல்வியை தொடரவும் வசதி

child soldiersபுனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களான 18 வயதுக்குட்பட்ட 198 பேர் நேற்று வவுனியாவில் அவர்களது பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டனர். இரத்மலானை இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வந்தவர்களே இவ்வாறு பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். 18 வயதுக்குட்பட்ட 294 பேர் இரத்மலானை இந்துக் கல்லூரியில் கல்வி கற்றனர். இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டும் வந்தது. இவர்களில் பலர் அவ்வப்போது பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், நேற்றுடன் 294 பேரும் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டார். தங்களது சொந்த பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் இவர்களுக்கு கல்வி கற்பிக்க பெற்றோர் விரும்பியதால் அவர்களிடம் இச்சிறுவர்களை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்கள் கல்வியை தொடர்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் தொடர்ந்தும் செய்து கொடுக்கும் என்றும் ஆணையாளர் குறிப்பிட்டார். (மேலும்)  26.05.10

____________________________________________________________________________________________

அமெரிக்காவுடன் நெருங்கிய ராஜதந்திர உறவுக்குத் தயார்-​ சீனா

பெய்ஜிங்,​​ மே 25:​ அமெரிக்காவுடன் நெருங்கிய ராஜதந்திர உறவு வைத்துக் கொள்ள தாங்கள் தயாராகவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. ​ ஆனால் நெருங்கிய ராஜதந்திர உறவை வைத்துக்கொள்ள வேண்டுமானால் தைவான்,​​ திபெத் உள்ளிட்ட எங்களின் உணர்வுப்பூர்வமான விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா தவிர்ப்பது அவசியம் என்றும் சீனா நிபந்தனை விதித்துள்ளது. ​ சீனா-அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவு குறித்த முதல்சுற்றுப்பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் நடந்து வருகிறது. ​ இதில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவிடம் 7 பரிந்துரைகளை சீனா முன்வைத்துள்ளது.​ இதில் தைவான்,​​ திபெத் விவகாரங்களும் அடங்கும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அந்நாட்டுக் குழுவின் செய்தித்தொடர்பாளர் மா ஷாவோஸன் தெரிவித்தார். ​ தவிர,​​ சர்வதேச அளவில் பயங்கரவாதம்,​​ சுற்றுச்சூழல் மாசு அடைதல் உள்ளிட்ட பொதுவான சவால்களை இரு நாடுகளும் இணைந்து எதிர்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.  (மேலும்)  26.05.10

____________________________________________________________________________________________

மலேசியாவில் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதம்

தம்மை அகதிகளாக ஏற்றுக் கொள்ளக் கூடிய நாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு கோரி மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 67 இலங்கைத் தமிழர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். மலேசியக் கடற் பகுதியில் வைத்து மலேசியக் கடற்படையினரால் 75 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 67 ஆண்கள் தம்மை விடுவிக்க கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். 

____________________________________________________________________________________________

நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்

நியூயார்க் : கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை நடத்தினர்.அதில், கம்ப்யூட்டர், லேப்-டாப், ஐபாட் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு, நாளடைவில், தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிய வந்தது.கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிப்படும் அதிக சக்தி வாய்ந்த ஒளிக்கற்றைகள், மனித மூளையின் வழக்கமான செயல்பாடுகளை பாதிப்பதும் தெரிய வந்தது.மனித மூளை, காலை சூரிய வெளிச்சம் வந்தவுடன் இயங்க ஆரம்பித்து இரவு சூரிய ஒளி மங்கியவுடன் செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளும் வகையில் செயல்படுகிறது.இதை, மெலட்டோனின் என்ற ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது. இது அறிவியல் விந்தையாக கருதப்படுகிறது.ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் நீல நிற வெளிச்சம், மெலட்டோனின் ஹார்மோன் செயல்பாட்டை பாதித்து, தூக்கத்தை கெடுப்பதாக தெரிவிக்கின்றனர்.  (மேலும்)  26.05.10

____________________________________________________________________________________________

சொந்த இடங்களில் வாழ வழிசெய்யுங்கள் உறவினர்களை கண்டுபிடிக்க உதவுங்கள்

இடைத்தங்கல் முகாமில் உள்ளோர் தமிழ்க் கூட்டமைப்பிடம் கோரிக்கை சொந்த இடங்களில் நாங்கள் வாழ்வதற்கு வழி செய்து தாருங்கள், தடுப்பு முகாம்கள், சிறைகளில் உள்ளவர்களை விடுவிக்கவும் காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்கவும் உதவுங்கள .இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட வன்னி மக்களின் உருக்கமான வேண்டுகோள் இதுவே என்று தமிழ்க் கூட்டமைப்பு நேற்று திங்கட்கிழமை தெரிவித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிக்கான பயணத்தை மேற்கொண்டது. தர்மபுரம், கண்டாவளை முதலிய பகுதிகளுக்குப் பாராளுமன்றக் குழு விஜயம் செய்தது.மீளக்குடியமர்த்தப்படுவதற்காகக் கூட்டிவரப்படும் அகதிகள் மூன்று நாட்கள் தங்க வைக்கப்படுவதற்காக வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாமுக்கும் பாராளுமன்றக் குழு சென்று பார்வையிட்டது. இடைத்தங்கல் முகாமில் மதியச் சாப்பாடாக சிவப்பு அரிசிச் சோறு, பலாக்கொட்டைக் கறியும் அவ்வகதிகளுக்கு வழங்கப்படுவதைக் காணக்கூடியதாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.  (மேலும்)  25.05.10

____________________________________________________________________________________________

இலங்கைக்கான விசா அனுமதியில் மலேசியா தளர்வு

இலங்கைக்கான விசா அனுமதியினை தளர்த்துவதற்கு மலேசியா தீர்மானம் எடுத்துள்ளது. இந்நிலையில், இலங்கையிலிருந்து  மலேசியா ஊடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் விசா அனுமதியின்றி பயணத்தை மேற்கொள்ள முடியும் என மலேசியாவின் பிரதி பிரதமர் ரன் ஸ்ரீ முஹ்யிட்டின் யச்சின் தெரிவித்தார். எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இதனை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.  அத்துடன், இலங்கைக்கு மாத்திரமின்றி பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குமான விசா நடைமுறையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் மலேசியாவின் பிரதி பிரதமர் குறிப்பிட்டார். மலேசியாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கிலேயே  இந்த விசா நடைமுறையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

____________________________________________________________________________________________

உலக நாடுகள் பல வழங்கிய அதிநவீன ஆயுதங்களே புலிகளைத் தோற்கடிக்க உதவியது

புலிகள் இயக்கத்தினருக்கு எதிராக அரசபடையினர் மேற்கொண்டிருந்த வன்னி இராணுவ நடவடிக்கைகளிலும் அதன் இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கைகளிலும் பயன்படுத்துவதற்காக ஐக்கிய அமெரிக்கா, சீனா, இத்தாலி, கனடா, பாகிஸ்தான், பிரிட்டன், பல்கேரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பல்வேறு நவீன தொழில் நுட்பங்களைக்கொண்ட கனரக மற்றும் இலகுரக ஆயுதங்கள் உபகரணங்களை அரசு கொள்வனவு செய்திருந்தது. இவ்வாறு மேற்படி நாடுகளிலுள்ள ஆயுத உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களிலிருந்து நவீன ஆயுதங்கள், உபகரணங்கள் கொண்டுவரப்பட்டதைப் புலிகள் இயக்க உளவுத்துறைத் தலைவர் எனக்கூறப்படும் பொட்டு அம்மானோ அல்லது அவருடைய ரொஸி உளவுப்பிரிவினரோ அறிந்திருக்கவில்லை. இதற்குக் காரணம் பொட்டு அம்மானுக்கு தலைநகர் கொழும்பு மற்றும் பிரதேசங்களிலிருந்து அரச பாதுகாப்புத்துறையினர் மற்றும் அரச படைத்தரப்பினர் சம்பந்தப்பட்ட உளவுத்துதகவல்களை சேகரித்துவந்த புலிகள் இயக்கத்தினர் மற்றும் புலிகள் இயக்க ஆதரவாளர்களும் பாதுகாப்புத் தகவல்களை வெளிப்படுத்தி வந்த தமிழ் ஊடகங்கள் சிங்கள ஊடகங்களைச் சேர்ந்த சந்தேகத்திற்குரிய ஊடகவியலாளர்கள் மற்றும் தகவல் சேகரிப்போரும் கிழக்கு இராணுவ நடவடிக்கைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு கிழக்குப் பிரதேசங்களிலிருந்து புலிகள் இயக்கத்தினர் முற்றாக ஒழிக்கப்பட்ட கட்டங்களுக்குப் பின்னரும் வன்னி இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்திலும் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டனர். (மேலும்)  25.05.10

____________________________________________________________________________________________

20 வருடங்களின் பின்னர் யாழ்பாண பெரிய பள்ளிவாசல் வெள்ளிக்கிழமை திறப்பு

கடந்த 20 வருடங்களின் பின்னர் யாழ்பாண பெரிய பள்ளிவாசல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளாதாக அப்பள்ளி வாசல் நிர்வாக சபை முக்கியஸ்தர் சட்டத்தரணி ரமீஸ் சற்று முன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். 1996ஆம் ஆண்டு யாழ் குடா நாடு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பிற்பாடு யாழ்  நகரில் முஸ்லிம்கள் வசிக்காத காரணத்தால் கைவிடப்பட்ட நிலையிலேயே இப்பள்ளிவாசல் காணப்பட்டது. எனினும் தற்போது யாழ் நகரில் முஸ்லிம்கள் மீண்டும் குடியேறியுள்ள காரணத்தால் மீள் புனர்நிர்மானத்துடன் இப்பள்ளிவாசல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இப்பள்ளிவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு எதிர்வரும் வியாழக் கிழமை யாழ்ப்பாண ஜின்னா மைதானத்தில் வைத்திய முகாம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரமீஸ் தெரிவித்தார். யாழ்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள இப்பள்ளிவாசல், 1713ஆம் ஆண்டு ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்டது. இதுவே யாழ்ப்பாணத்தின் முதல் பள்ளிவாசலும் ஆகும். எதிர்வரும் வெள்ளிக் கிழமை இப்பள்ளிவாசலில் இடம்பெறவுள்ள குத்பா பேருரை அஷ்ஷெய்க் எம்.ஜே.அப்துல் ஹாலிக் அவர்களால் நிகழ்த்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

____________________________________________________________________________________________

இனிய தமிழில் வாழ்த்துப் பாடிய சிங்கள ஆசிரியர்கள்: சமாதானத்தின் அறுவடையாக அம்பாந்தோட்டையில் நடந்த நிகழ்வு

sinhala teachers-1

தமிழ் மொழிப் பயிற்சியை நிறைவு செய்த ஆசிரியை ஜீ. வசந்தாவிற்கு ஐ. நா. தி. பணிப்பாளர் அகிலா தில்லைநாதன் சான்றிதழ் வழங்குகிறார்.

நான் நீ பேதமில்லை, ஓர் தாய் பெற்ற பிள்ளை இந்தப் பாடல் வரிகைளை அம்பாந்தோட்டை வலய சிங்கள மொழி ஆசிரியர்கள் பாடுவதைகேட்கும் போது மலர்ந்துள்ள சமாதானத்தின் பயன்களை முழு நாடும் அனுபவித்து வருவது என்பதை உணரக் கூடியதாய் உள்ளது. வடக்கு, தெற்கு என்றதும், வடக்கிலுள்ளவர்கள் அனைவரும் தமிழர்கள், தெற்கிலுள்ளவர்கள் சிங்களவர்கள். இரு சாராரிடமும் சந்தேகமும் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்த்து சிங்களவர்கள் கூறுவதை தமிழர்களாலும் தமிழர்கள் கூறுவதை சிங்களவர்களாலும் புரிந்துகொள்ள முடியாத ஒரு நிலை எமது தாய் நாட்டில் இருந்து வந்தது. இந்த நிலைமையினை நன்கு உணர்ந்த 1970 களில் அப்போதைய பாராளுமன்றத்தில் இளைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்து 2005 ஜனாதிபதி தேர்தல் வரை இலங்கையிலேயே பின்தங்கிய மாவட்ட மக்களின் பிரதிநிதியாக தொடர்ந்து தெரிவு செய்யப்பட்டுவந்து இந்த நாட்டு மக்களின் தேவைகளை உணர்வுகளை, உணர்ந்து அந்தத் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய சுதந்திர நாட்டை உங்களுக்கு பெற்றுத் தருவேன் என்ற வாக்குறுதியை அன்று வழங்கி அதனை குறுகிய காலத்தில் நிறைவேற்றி சாதனை படைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அந்த துணிச்சலான செயலின் விளைவாக அம்பாந்தோட்டை வலய சிங்கள ஆசிரியர்களுக்கு தமிழ் கற்கும் வாய்ப்பு கிடைத்தது. (மேலும்)  25.05.10

____________________________________________________________________________________________

உள் விவகாரங்களில் ஐநா தலையீடு கூடாது : பான் கீ மூனிடம் பீரிஸ் கோரிக்கை

நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ முனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்திய செய்தி இணையத்தளமான பி.ரி.ஐக்கு இத்தகவலைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான அழுத்தங்கள் தமது எதிர்கால நடவடிக்கைகளைப் பாதிக்கும் என அமைச்சர் கூறியதாக பி.ரி.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் ஐ.நா.சபையின் செயலாளர் நாயகத்தைச் சந்தித்த பிறகு இவ்வாறு தெரிவித்ததாக அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.போர்க் குற்றங்கள் சம்பந்தமாக கிடைக்கப் பெற்றுள்ள தகவல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கடந்த வாரம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியன வலியுறுத்தியிருந்தன. அதேவேளை, போர்க்குற்றங்கள் தொடர்பில் வெளியாகும் போலியான செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கத் தயாராக இல்லை என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

____________________________________________________________________________________________

தீர்வு முயற்சியை முன்னெடுக்க செயற்திட்டம் அவசியம்

கொழும்பில் நடக்கவிருக்கும் இந்திய சர்வ தேச திரைப்பட விருது விழாவைப் பகிஷ் கரிக்க வேண்டும் என்பதில் தமிழகத் திரைப்படத் துறையினர் தீவிரமான அக்கறை காட்டுகின் றனர். இந்த அக்கறை வேண்டுகோள்களுடனும் அறிக்கை களுடனும் மாத்திரம் நிற்காமல் வன்முறையாகவும் வெளிப் படுகின்றது. சில அரசியல் பிரமுகர்களும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். இலங்கைத் தமிழ் மக்களுடன் சகோதரத்துவ ஒருமைப் பாட்டைத் தெரிவிப்பது தங்கள் தார்மீகக் கடமை என்று இவர்கள் கூறுகின்றார்கள். அதாவது இலங்கையின் இனப் பிரச்சினைக்கான தீர்வைத் துரிதப்படுத்துவதற்குப் பங்களிப்புச் செய்வதாக இவர்கள் நினைக்கின்றார்கள் போலும். இப்படியான எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம் இனப் பிரச் சினைக்குத் தீர்வு காணலாம் என்று இவர்கள் கருது வார்களேயானால் அதனிலும் பார்க்க முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. தமிழகத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர் களால் ஊக்குவிக்கப்படும் இலங்கைத் தமிழ்த் தலைமை அதன் தவறான அணுகுமுறைகளால் இனப்பிரச்சினை யின் தீர்வைச் சிக்கலாக்கியதையும் அதன் விளைவாகத் தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு உள்ளாகிய தையும் இங்கு குறிப்பிடாதிருக்க முடியாது. (மேலும்)  25.05.10

____________________________________________________________________________________________

தமிழ் பிரதிநிதித்துவம் ஆகாயத்திலிருந்து குதிக்காது என்பதை கண்டி மாவட்டத் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்

- ஜமமு தலைவர் மனோ கணேசன்

Mano Ganeshan 2தேர்தல் நடைபெறும் தினத்தில் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றாமல், "சும்மாவே" இருப்பது என்ற கொள்கையை தமிழ் மக்கள் மாற்றாத வரைக்கும் இந்நாட்டிலே தமிழ் இனத்திற்கு ஜனநாயக விமோசனம் கிடையாது. அதேபோல் வாக்களிப்பில் கலந்துகொள்ளாத தமிழ் வாக்காளர்களுக்கு அரசியல்வாதிகளை விமர்சனம் செய்வதற்கு தார்மீக உரிமையும் கிடையாது. தமிழ் பிரதிநிதித்துவம் என்பது மந்திரத்தால் ஆகாயத்திலிருந்து கிழே குதிக்கும் விடயம் அல்ல என்பதை கண்டி மாவட்டத் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என தன்னை சந்தித்த கண்டி, பேராதனை பல்கலைக்கழக மாணவர் குழுவினரிடம் ஜமமு தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் மீண்டும் ஒருமுறை கை-நழுவியது தொடர்பில் தன்னை சந்தித்து கலந்துரையாடிய மாணவரிடம் மனோ கணேசன் மேலும் தெரிவித்தாவது, கண்டி மாவட்டத்தின் 93,879 தமிழ் வாக்காளர்களில் சுமார் 36 ஆயிரம் முதல் 40 ஆயிரம் தமிழ் வாக்காளர்களே வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளார்கள். 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவே இல்லை. (மேலும்)  25.05.10

____________________________________________________________________________________________

விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களால் தமிழக பாதுகாப்புக்கு ஆபத்து: இந்தியாவுக்கு கள்ளத்தோணி மூலம் விடுதலைப்புலிகள் வந்துள்ளனர்

- மத்திய அரசு தகவல்

vaiko-3விடுதலைப்புலிகள் கள்ளத்தோணியில் இந்தியா வந்துள்ளனர். அவர்களது ஆதரவாளர்களால் தமிழகத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்விவகாரத் துறை இணை செயலாளர் தர்மேந்திர சர்மா வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தும், இலங்கையில் நிலவும் கொந்தளிப்பை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் (எல்.டி.டி.இ.) இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அதன் ஆதரவு அமைப்புகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி, தமிழகத்துக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இலங்கையில் பெரும்பாலான விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுவிட்டாலும், எஞ்சியுள்ள போராளிகளும், தலைவர்களும், அவர்களது லட்சியமான தமிழ் ஈழத்தை உருவாக்கும் நோக்குடனும், நம்பிக்கை துரோகிகள் (இந்திய அரசு) மற்றும் எதிரிகளை' (இலங்கை அரசு) பழிவாங்கும் நோக்குடனும் தமிழகத்தில் ஒன்று சேர்ந்து வருகின்றனர் என்பது சமீபத்தில் பெறப்பட்ட அறிக்கைகள் வாயிலாக தெரியவந்துள்ளது. எஞ்சியுள்ள போராளிகள் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தும், கள்ளத்தோணியில் இந்தியா வந்துள்ளனர். இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை தாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து திட்டம் வகுக்கும் தளமாக அவர்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதை ஒதுக்கிட விட முடியாது. (மேலும்)  24.05.10

____________________________________________________________________________________________

கொழும்பு திரைப்பட விழாவில் 'ஃபிக்கி' அமைப்பு பங்கேற்காது! - கமல் அறிவிப்பு

kamal-hassanசென்னை: கொழும்பில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் தான் தலைவராக உள்ள ஃபிக்கி (Federation of Indian Chamber of Commerce and Industry) அமைப்பிலிருந்து யாரும் பங்கேற்க மாட்டார்கள் என நடிகர் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு வணிக ஆதரவு தந்துள்ளது ஃபிக்கி எனப்படும் இந்திய வர்த்தக-தொழில் கூட்டமைப்பு. இந்த ஃபிக்கி அமைப்பின் ஊடக- பொழுதுபோக்கு பிரிவுக்கு தலைவராக இருப்பவர் நடிகர் கமல் ஹாஸன். ஃபிக்கி தனது ஆதரவை வாபஸ் பெற வேண்டும், ஃபிக்கியின் பொறுப்பிலிருந்து கமல்ஹாஸன் விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர் தமிழ் உணர்வாளர்கள். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 17 இயக்கம் சார்பில் கமல் ஹாஸன் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பின்னர் தங்கள் வேண்டுகோள் அடங்கிய மனுவை கமல் ஹாஸனிடம் அளித்தனர் போராட்டக் குழுவினர். இந்தப் போராட்டம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் கமல்ஹாஸன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.  (மேலும்)  24.05.10

____________________________________________________________________________________________

இறுதி யுத்தத்தில் தப்பிச்செல்ல முயன்ற பெண்கள் புலிகளால் சித்திரைவதை-ஐ.நா

Refugees_India2_2006வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தப்பிச்செல்ல முயற்சித்த பெண்களை விடுதலைப் புலிகள் சித்திரைவதைக்கு உள்ளாக்கியதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையிடம், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் வழங்கியுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. தப்பிச்செல்ல முற்பட்ட பெண்களின் தலைமுடியை விடுதலைப் புலிகள் கட்டையாக வெட்டியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு தலைமுடி கட்டையாக வெட்டப்பட்ட பெண்களை  விடுதலைப் புலி உறுப்பினர்கள் என  கருதிய இராணுவத்தினர், முகாம்களில் அவர்களை  வித்தியாசமான முறையில் நடத்தியுள்ளனர். இந்நிலையில், விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் பெண்கள் இணைந்துகொள்வதனை தடுக்கும் முகமாக, பெற்றோர் மிக இள வயதில் அவர்களுக்கு உறவினர்களுடன்  திருமணம் செய்துவைத்தாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (மேலும்)  24.05.10

____________________________________________________________________________________________

"மற்றொருநாள் போராடுவதற்காக தப்பிச்செல்ல விரும்பியிருந்தார் புலிகளின் தலைவர் பிரபாகரன்

prabhakaran-dead-bodyமுல்லைத்தீவு மாவட்டத்திலிருந்த மோதல் சூன்யப்பகுதிக்கு அருகே கிறிஸ்ரினா கப்பலை வரவழைப்பது பிரபாகரனின் துணிச்சலான திட்டங்களில் ஒன்றாக இருந்தது. அக்கப்பலிலிருந்த சொப்பர் மூலம் கரையிலிருந்து அக்கப்பலுக்குச் செல்வது அவரின் திட்டமாக இருந்தது. இந்தக் கப்பலைக் கனடாவிலுள்ளரவிசங்கர் கனகராஜா அல்லது சங்கிலி ஏற்பாடு செய்திருந்தார். அதனை இந்தோனேசியாவில் தயாராக வைத்திருந்தார். ஆனால், சொப்பரை ஏற்பாடு செய்வதற்குப் பொறுப்பாக இருந்த அச்சுதரன் என்பவர் அதனைப் பெற்றுக்கொள்ளத் தவறிவிட்டார் என்று குணரட்ன கூறியுள்ளார். யுத்தத்தின் பின்னர் கிறிஸ்ரினா கப்பல் இலங்கைக் கடற்படையால் எடுத்துக் கொள்ளப்பட்டது. மோதல் சூன்யப்பகுதியிலிருந்து வெளியேறி தென்பகுதியிலிருந்த யால சரணாலயப் பகுதிக்குச் செல்வது இரண்டாவது தெரிவாக இருந்தது. குறைந்தளவிலான ரோந்து நடவடிக்கைகள் இடம்பெறும் தென்பகுதி கரையைப் பயன்படுத்தி தீவிலிருந்து தப்பிச்செல்வது இரண்டாவது தெரிவாக இருந்தது. மூன்றாவது தெரிவாக ராமின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மறைவிடங்களுக்குத் தப்பிச் செல்வது இருந்துள்ளது. கிழக்கில் 2007 இல் யுத்தத்தில் தோல்வியடைந்தபோதிலும் ராம் தப்பியிருந்ததாக குணரட்ண கூறியுள்ளார்.   (மேலும்) 24.05.10

புலிகளின் துஷ்பிரயோகங்கள்-ஐ.நா.வின் அறிக்கை காலம் கடந்தது - கெஹெலிய

வன்னியில் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்களை சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது காலம் கடந்த நடவடிக்கை என்று அராசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கமே இந்த போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்றும், படையினர் அவ்வாறான குற்றங்களை மேற்கொள்ளவில்லை என்றும் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார். வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தப்பிச்செல்ல முயற்சித்த பெண்களின் தலைமுடியை விடுதலைப் புலிகள் கட்டையாக வெட்டியுள்ளனர். இதனால் தலைமுடி கட்டையாக வெட்டப்பட்ட பெண்களை  விடுதலைப் புலி உறுப்பினர்கள் என  கருதிய இராணுவத்தினர், முகாம்களில் அவர்களை  வித்தியாசமான முறையில் நடத்தியுள்ளனர் என்றும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இருப்பினும், சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை படையினர் முறையாக நடத்தி அவர்களுக்கான மருத்துவ உதவிகளையும் செய்தனர் என்று தெரிவித்த ஊடக அமைச்சர், சரணடைந்த புலிகளிடம் படையினர் தவறுதலாக நடந்துகொள்ளவில்லை என்றும் கூறினார்.  24.05.10

____________________________________________________________________________________________

இலங்கை போரில் சிறார் பாதிப்புகள்: ஐ.நா. தகவல்

பி.பி.சி செய்தி

IRIN2009ல் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறார்கள் புதிதாக சேர்க்கப்படுவது நின்றுள்ளதாகவும், ஏற்கனவே சேர்க்கப்பட்டிருந்தவர்கள் பெருமளவில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. கூறுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவரான கருணா என்றழைக்கப்படும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் பெயரும், இந்த அமைப்பின் இந்நாள் தலைவரான பிள்ளையான் என்றழைக்கப்படும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பெயரும், சிறார்களைப் படையில் சேர்ப்பவர்கள் பட்டியலில் இருந்து இந்த வருடம் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் கருணாவுடன் தொடர்புடையவரான இனியபாரதியின் பெயர் இந்த வருடப் பட்டியலில் உள்ளது. 2009 ஆண்டின் முதல் ஐந்து மாத காலகட்டத்தில் போர் உக்கிரமாக நடந்த சமயம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மட்டுமாக சிறார்கள் சுமார் 200 பேர் கொல்லப்பட்டும், சுமார் 150 பேர் அங்க அவயங்களை இழந்தும் இருந்ததாக தங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளது என்று ஐ.நா. கூறுகிறது. உண்மையில் பாதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை இதற்கும் அதிகமாக இருக்கும் என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது. இவ்வாறு சிறார்கள் கொல்லப்பட பெருமளவு காரணம் அரச படைகளின் ஷெல் தாக்குதல்கள் என்று உயிர்தப்பியவர்களிடம் தாங்கள் நடத்திய விசாரணை மூலம் தெரியவருவதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது. (மேலும்)  24.05.10

____________________________________________________________________________________________

வறுமையான சிந்தனைகளை நீக்குவோம்

                       நடேசன்

உயிர்ப்பயத்தால் கண்டுகொள்ள பயந்தவர்களை மன்னிக்கலாம். ஆனால் பாசிசத்தை வடிவமைத்து அதற்கு போர்க்கால இலக்கியம் எனப் புதுப் பெயர் சூட்டி மகிழ்ந்தவர்களை என்ன செய்வது? இப்படியானவர்கள்; மட்டும் இன்றி,  பரந்த தமிழ் நாட்டில் உள்ளவர்கள் கூட இலங்கையில் அழிவைத் தேடி நடத்திய அதிதீவிரவாதிகளின் விளையாட்டை இக்கால புறநானுறாகப் பார்த்து மகிழ்ந்தார்கள்.  அதி தீவிர திராவிடம் பேசுபவர்கள் இத்தீவிரவாதிகளின் இந்திய விரோத நடவடிக்கைகளை இந்திய பேரரசை எதிர்க்கும் தமிழ் வீரமாகவும் போற்றி, அவர்களது  அழிவைத் துரிதப்படுத்தினார்கள். தமிழ் நாட்டில் எழுத்தாளர் ஜெயகாந்தன் பத்திரிகையாளர் சோ ஆகிய இருவரும் மாத்திரமே மிக ஆரம்பத்திலேயே இந்த அதிதீவிரவாதத்தைச் சரியாக அடையாளம் கண்டவர்கள். “ இத்தீவிரவாதிகள் இந்தியாவுக்கும் நண்பர்கள் அல்ல. தமிழர்களுக்கும் நண்பர்கள் அல்ல. இவர்கள் இலங்கைத்தமிழர்களுக்கும் நண்பர்கள் அல்ல. ஏன் இவர்கள் தங்களுக்கே நண்பர்கள் அல்ல” இவ்வாறு, ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஈழ விடுதலை இயக்கத் தலைவர் பத்மனாபாவின் இரங்கற் கூட்டத்தில் பேசியபோதுகூறினார். (மேலும்)  24.05.10

____________________________________________________________________________________________

We are rebuilding Sri Lanka

One year after the conflict, new policies are in place to improve the lives of all of the island's people – including Tamils As Archbishop Desmond Tutu and veteran UN adviser and envoy Lakhdar Brahimi rightly point out, there have been many achievements in northern and eastern Sri Lanka in a very short period of time since the end of the conflict.The government has implemented a multifaceted rehabilitation, reconstruction and reconciliation programme with dedication. As of today, more than 70% of the internally displaced people (210,672 out of 280,000) have been resettled to their home locales. The remaining people will be sent back once their villages are safe of land mines thanks to the accelerated de-mining programmes – some of which are assisted by the UK government.We are in the process of re-establishing and enhancing people's livelihoods, with special emphasis on the fishing and agriculture industries – the lifelines of the people in the region. This is also being done with outside help from the UK and India. (Read) 24.05.10

____________________________________________________________________________________________

முல்லைத்தீவு மாவட்டத்தில் காடுகள் அழிப்பு

- பி.பி.சி

mullaitivu-1இலங்கையில் சுமார் 4000 ஏக்கர் வனப் பகுதி அரசால் கையகப்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொக்கிளாய் பகுதியில் இருக்கும் இந்த வனப் பரப்பு மக்களின் மீள்குடியேற்றத்துக்காக என்றும் கூறப்படுகிறது. அங்கு சென்று வந்த ஸ்ரீலங்கா நேச்சர் ஃபோரம் எனும் அமைப்பினரும் இப்படியாக காட்டு நிலம் கையகப்படுத்தப்படுவதை உறுதி செய்துள்ளனர். இது குறித்த புகைப்படங்களும் பிபிசிக்கு கிடைத்துள்ளன. இந்நிலையில் இப்படியான ஒரு குறுகிய நிலப்பரப்பில் சுமார் 4000 ஏக்கர்கள் காடுகள் அழிக்கப்படுவது இலங்கையின் சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பேராசிரியரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான டாகடர் தங்கமுத்து ஜெயசிங்கம் கூறுகிறார். (மேலும்)  24.05.10

____________________________________________________________________________________________

தமிழுக்காக குருதி சிந்திய  கம்யூனிஸ்ட் தலைவர்கள்

1956 பிப்ரவரி 20ம் தேதி தமிழகமே வெறிச் சோடிக் கிடந்தது. தலைநகரம் சென்னையில் கடைகள் அடைக்கப்பட்டு வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஐலண்டு மைதானத்திலிருந்து எம்.ஆர்.வெங்கட்ராமன், ஜீவா, அண்ணா, ம.பொ.சிவஞானம் ஆகியோர் தலைமையில் மாபெரும் பேரணி புறப்பட்டு, திருவல்லிக் கேணி கடற்கரையை நோக்கிச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், ஆயிரக்கணக்கானோர் ஐலண்டு மைதானத்தில் திரண்டு நிற்கின்றனர். பேரணி புறப்படவேண்டிய நேரத்திற்கு முன்பே எம்.ஆர்.வி., ஜீவா, ம.பொ.சி. ஆகியோர் வந்துவிட்டனர். ஆனால், ஊர்வலம் புறப்பட வேண்டிய நேரத்தில் கூட என்ன காரணத்தாலோ அண்ணா வரவில்லை. எனவே எம்.ஆர்.வி.யும், ஜீவாவும், ம.பொ.சி.யும் தலைமை தாங்க ஊர்வலம் புறப்படத் தொடங்கியது. அவ்வளவுதான்! ஐலண்டு மைதானத்தைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் படை. குண்டாந்தடிகளுடன் எம்ஆர்வி மீதும் ஜீவா மீதும் பாய்ந்தது. வயதா னோர் என்றும் பாராமல் மிருகத்தனமாக இவர் மண்டை மீதும், மார்பிலும், தொடையிலும், தடி கொண்டு தாக்கத் தொடங்கியது. இருவர் தலையிலிருந்தும் ரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தடியடி நிறுத்தப்படவில்லை. உருக்கு மனிதரான எம்ஆர்வி தன் மீது விழும் தடியடிகளை தாங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, ஒரு கையால் ஜீவாவின் தலையிலும், முகத்திலும் விழும் சில அடிகளையும் தாங்கிக்கொண்டார். ஊர்வலத்தினர் மீதும் தடியடி நடத்தப்பட்டு, சிதறடிக்கப்படுகிறார்கள். (மேலும்)  24.05.10

____________________________________________________________________________________________

வடக்கு கிழக்கில் தமிழ் பிரதிநித்துவம் குறைவதற்கு விகிதாசாரத் தேர்தல் முறை மாற்றமதான்; காரணம் எனக் கூறமுடியாது.

- 19.05.2010 தாயகக்குரல்

பத்து இலட்சம் மக்கள் புலம்பெயர்ந்துள்ள நிலையில் தமிழ் பிரதிநித்துவம் வரும்காலத்தில் குறைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழ் பிரதிநித்துவம் குறையும்போது தமிழ் இனத்தின் பலம் குறைந்து இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். வடக்கு கிழக்கில் தமிழ் பிரதிநித்துவம் குறைவதற்கு விகிதாசாரத் தேர்தல் முறை மாற்றமதான்; காரணம் எனக் கூறமுடியாது. தமிழ் மக்களின் பலம் குறைவதற்கு காரணம் யுத்தமும் அதன் காரணமாக ஏற்பட்ட அழிவுகள், மக்கள் புலம் பெயர்வு என்பன முக்கிய காரணங்களாகும். பொருளாதார காரணங்களுக்காக புலம் பெயர்ந்தவர்கள்,அமைதியின்மை காரணமாக புலம் பெயர்ந்தவர்கள் என பலவித புலம் பெயர்வுகள் இடம்பெற்றுள்ளன. பத்து லட்சம் மக்கள் புலம் பெயாந்துள்ளனர் என்பது சாதாரண விடயமல்ல. புலம் பெயர்ந்து சென்று வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் மீண்டும் இலங்கை திரும்புவார்கள் என்று நம்பமுடியாது. யுத்தம் முடிந்த பின்னரும் தமிழ் மக்கள் வெளிநாட்டு மோகத்தில் களவாக பயணம் மேற்கொள்ளவதும் அவர்கள் இடைவழியிலே மடிவதும் பலர் பல நாடுகளில் கைதியாக இருப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. (மேலும்)  24.05.10

____________________________________________________________________________________________

வன்னி தோல்வியுறு காவியத்திற்கான மிக முக்கியமான முன்னுரை 

- தானா விஷ்ணு

MV-0ுள்ளிவாய்க்கால் வரலாற்றின் மிகமுக்கியமான பகுதி. இறுதி யுத்தம் நடந்த பகுதி மட்டுமல்ல, இரண்டரை சதுரகிலோமீற்றர் பரப்பளவிற்குள் ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் மக்கள் வாழ்ந்திருந்த பகுதி. உலக வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலப்பரப்பில் மிகக்கூடிய மக்கள் வாழ்ந்த பகுதியும் இதுவாகத்தானிருக்கும். மிகநெருக்கமாக இருந்ததால் மக்கள் சொல்லமுடியாத பல துயர்களுக்குள்ளாகினார்கள். மலம் கழிப்பதற்கு இடமற்றிருந்தது. தண்ணீர் தட்டுப்பாடாகியிருந்தது. வறண்ட பூமியாக இருந்ததனால் பதுங்குக் குழிகள் அமைக்கமுடியாத நிலை எந்த நேரமும் எறிகணை விழலாம். யாரேனும் சாகக்கூடும். பக்கத்தில் அழுகுரல் கேட்டால் கூட யாரும் சென்று பார்க்கமுடியாத நிலை. பிணங்கள் தெருக்களில் அடக்கம் செய்வதற்கு யாருமற்றுக் கிடந்தன. அடக்கம் செய்வதற்குரிய அவகாசமும் அற்றிருந்தது. பிணங்களிலிருந்து புழுக்கள் வெளிவரத் தொடங்கியும் மக்கள் அருகிலேயே இருந்தார்கள், அதிலிருந்தே சாப்பிட்டார்கள். அப்படியான சூழ்நிலையிலும் கூட மக்களை அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. இறுதிவரை தடுத்துக் கொண்டேயிருந்தார்கள், இறுதிவரை சுட்டுக்கொண்டேயிருந்தார்கள். இதில் வேடிக்கையென்னவென்றால் தடுத்தவர்களும், சுட்டவர்களும் இறுதியில் இராணுவப் பகுதிக்குள் தமது குடும்பத்தோடு வந்து சேர்ந்தார்கள். அவர்கள்தான் மக்களின் முன் வீராவேசமாகக் கதைத்தவர்கள். வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியைப் போட்டுடைத்த கதையாக இராணுவத்திடம் செல்கிறீர்கள் என கேட்டவர்கள். நாட்டுக்காகத் தமது உயிரை எந்த நேரத்திலும் கொடுக்கத் தயாராக இருப்பதாகச் சொன்னவர்கள். ஒவ்வொரு வீட்டிலும் சென்று பிள்ளைகளை வலுக்கட்டாயமாக சண்டைக்களத்துக்குக் கொண்டு சென்றவர்கள். பிள்ளையைவிடாத பெற்றோரைத் தமது சப்பாத்துக் கால்களால் உதைத்தவர்கள். இறுதி வரை தமது சயனற் குப்பியாலோ அல்லது தாம் வைத்திருந்த ஆயுதங்களாலோ தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளாமல் குடும்பத்துடன் தப்பி வந்துவிட்டார்கள். இப்போதுதான் பிரபாகரன் முதலாவதாகவும், இறுதியான தோல்வியைச் சந்தித்துக்கொண்டார். இதில் இன்னொரு வேடிக்கையுமிருக்கின்றது. அப்படிப்பட்டவர்களில் சிலரை அரசத் தரப்பே தடை முகாமிலிருந்து விடுதலை செய்திருக்கின்றது. (மேலும்)  23.05.10

____________________________________________________________________________________________

அரசியலே அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி

இலங்கையில் தமிழ் ஈழம் அமைப்பதற்கு, தமிழகத்தில் அரசியல் கட்சி எதற்கு நடத்துகிறீர்கள் என்று மாற்றுக்கட்சி நண்பர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. இப்போது, அரசியல் அழிந்தாலும், இலங்கை விவகாரத்தை விட மாட்டேன் என வைகோ சொல்லியுள்ளது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

vaikoஇலங்கைத் தமிழர் பிரச்னையில், வைகோ காட்டும் அதீத ஆர்வம் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. கள்ளத்தோணியில் பயணித்து, புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை சந்தித்து வந்தபின், அவர் தமிழகத்து பிரபாகரனாகவே வர்ணிக்கப்பட்டார். ராஜிவ் படுகொலைச் சம்பவத்திற்கு பிறகு, புலிகள் மேல் தமிழக மக்கள் வைத்திருந்த மரியாதை, மதிப்பு, ஆதரவு அனைத்தும் சுக்கல், சுக்கலாகியது. அதற்கு முந்தைய காலங்களில் புலிகளை ஆதரித்த, தி.மு.க., அ.தி.மு.க., உள் ளிட்ட கட்சிகள், இதை உணர்ந்ததால், புலி ஆதரவு பாதையில் இருந்து வெளியே வந்தன. ஆனால், வைகோ புலி ஆதரவு கொள்கையை விடவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்னையையும், புலிகளையும் பிரித்து பார்க்க முடியாது என்ற அவரது வாதம் எடுபடவில்லை. அதன் காரணமாக, அவர் தமிழக மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெற முடியவில்லை. தேர்தல் முடிவுகளிலும் இந்த பின்னடைவு எதிரொலித்து வருகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்த பின்னடைவை வைகோ உணரவில்லை. மாறாக, இலங்கை முள்ளிவாய்க்கால் தாக்குதல் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னையில் நடந்த, பொதுக்கூட்டத்தில், "தனது அரசியல் வாழ்வையே, இலங்கைப் பிரச்னைக்காக தியாகம் செய்வதாக அறிவித்து' பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். . (மேலும்)  23.05.10

____________________________________________________________________________________________

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்னொரு சந்தர்ப்பம்

அரசியலமைப்புத் திருத்த மசோதா விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பது உறுதியாகிவிட்டது. இவ்விடயத்துக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளித்துச் செயற்படுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வின் அவசியத்தை ஏற்றுக்கொள்பவர்கள் இச் சந்தர்ப்பத்தைச் சாதகமான முறையில் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கக் கடமைப்பட்டுள்ளனர். இனப் பிரச்சினையின் தீர்வையே பிரதான இலக்காகக் கொண்டிருப்பதாக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இச் சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்த முயற்சிப்பதாகத் தெரியவில்லை. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை மாற்றுவதற்கு எதிரான கருத்துகளை வெளியிடுவதிலுள்ள ஆர்வம் இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பான ஆலோசனைகளைத் தெரிவிப்பதில் காணப்படவில்லை. அரசிலமைப்புத் திருத்தத்துக்கான ஆலோசனைகள் தயாரிக் கப்படுகின்ற இந்த நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு அதன் ஆலோசனைகளை அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்துப் பேச்சுவார்த்தைக்கான ஒரு சந்தர்ப்பத்தைக் கேட்பது ஆக்கபூர்வமான அணுகுமுறையாக இருக்கும். இச் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது தமிழ் பேசும் மக்களின் நிலையிலிருந்து பார்க்கையில் மிகவும் அவசியமானது. (மேலும்)  23.05.10

____________________________________________________________________________________________

மறுசீரமைப்பு யோசனையால் ஐ.தே.கவில் புதிய குழப்பம்: ரணிலின் தலைமையைப் பாதுகாக்க மேற்கத்திய நாடுகள் காய்நகர்த்தல்

ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளை, செயற்குழு அங்கீகரித்துள்ள போதிலும் அதனை முழுமையாக நடை முறைப்படுத்துவதற்கான சாதகமான சூழல் ஏற்படும் வாய்ப்பு குறைவாகவே காணப்படுவதாக கட்சி வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது. செயற்குழுவின் தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தும் போது அக்குழுவிலுள்ள சில உறுப்பினர்கள் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு ள்ளது. இதனால் குழுக்கள் உருவாகி பகைமை ஏற்பட்டு கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படாலாமென சிரேஷ்ட உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கட்சியின் செயலாளர், பொருளாளர் தவிர்ந்த (தலைவர் உட்பட) அனைத்துப் பதவிகளையும் ரகசிய வாக்கெடுப் பின் மூலம் தெரிவு செய்ய வேண்டு மென்ற பரிந்துரையை செயற்குழு அங்கீகரித்துள்ளது. அவ்வாறு தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவதாயின் கட்சியின் யாப்பினை மாற்றியாகவேண்டும். அதற்கும் செயற்குழு இணக்கம் கண்டிருந்தாலும் யாப்பை மாற்று வதற்கு 75% ஆதரவு அவசியம் எனக் கட்சியின் தற்போதைய தலைவரான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். . (மேலும்)  23.05.10

____________________________________________________________________________________________

யுத்தம் முடிந்த திகதி குறித்து சர்ச்சை கிளப்பி வெற்றியை உதாசீனப்படுத்துகிறார் பொன்சேகா.- அரசாங்கம் குற்றச்சாட்டு

fonseka_rajapakseவடக்கில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியே யுத்தம் முடிவுக்கு வந்ததாக இராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருப்பதை முற்றாக நிராகரித்திருக்கும் அரசாங்கம், மே மாதம் 18 ஆம் திகதியே யுத்தம் முடிவடைந்ததாக திட்டவட்டமாக அறிவித்திருப்பதுடன், யுத்தத்தின் இறுதி நாட்களில் இராணுவத்தின் அப்போதைய தலைமை அதிகாரியே இராணுவத்திற்கான உத்தரவுகளை பிறப்பித்ததாகவும் ஜெனரல் பொன்சேகா அப்போது நாட்டில் கூட இருந்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கானஊடக மத்திய நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த கருத்துகளை வெளியிட்டார். வடக்கில் விடுதலைப்புலிகள் இறுதியாக 500 மீற்றர் 500 மீற்றர் நிலப்பரப்பில் சிக்குண்டிருந்த போது இறுதி மோதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் ஆரம்பமாகி மறுநாள் 19 ஆம் திகதி காலை 9.30 மணி வரை சென்றதாகவும் இதன் இறுதியிலேயே பிரபாகரனின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்ததாகவும் பாராளுமன்ற கட்டிடத்தொடரில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் யுத்த காலத்தின் போது இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். (மேலும்)  22.05.10

____________________________________________________________________________________________

போர்க்குற்ற சாத்தியப்பாடு தொடர்பான புதிய ஆதாரங்கள் தன்வசம் இருப்பதாக கூறுகிறது உரிமைகள் கண்காணிப்பகம்

HRWஇலங்கையில் போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியப்பாடு தொடர்பான புதிய ஆதாரம் தன்னிடம் இருப்பதாக மனித உரிமைகளை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பான "மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வான்மார்க்க நடமாடும் படையணியைச் சேர்ந்த படைவீரர் ஒருவரால் முன்னரங்க நிலைகளில் எடுக்கப்பட்ட 200 இற்கும் அதிகமான புகைப்படங்களை தான் பரிசீலித்துள்ளதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.  சாட்சிகளைக் கொண்டதாகக் காணப்படும் புகைப்படங்களில் விடுதலைப்புலிகளின் அரசியல் பணியாளர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் பிடிக்கப்பட்டிருந்ததையும் பின்னர் தலையில் காயத்துடன் இறந்து காணப்பட்டதையும் காண்பிப்பதாக அமைந்துள்ளது. "சிறையிலிருக்கும்போது நீதி விசாரணையின் பிரகாரம் அந்த மனிதருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது என்ற தீர்மானத்திற்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வர முடியாது. முழுமையான விசாரணை தேவையென்பதை கிடைத்துள்ள ஆதாரம் சுட்டிநிற்கிறது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.  (மேலும்)  22.05.10

____________________________________________________________________________________________

விபத்தில் இந்திய விமானம் எரிந்தது; 160 பேர் பலி; துபாயில் இருந்து வந்தபோது பயங்கரம்

mangalooreமங்களூரூ: துபாயிலிருந்து மங்களூரூ வந்த ஏர் இந்தியா விமானம், தரை இறங்கு‌ம்போது, ஓடு தளத்தில் நிலை தடுமாறி ஓடி விபத்திற்குள்ளானது. உடனே விமானம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதில் விமானத்தில் இருந்த 160 பயணிகள் தீயில் எரிந்து பலியாயினர். இதில் விமான ஊழியர்கள் 6 பேர் அடங்குவர். 8 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.  விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பாலு்ம் கேரளா மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கோர விபத்து நடந்த இடத்திற்கு 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. விபத்து குறித்து விமான துறை அதிகாரிகள் உயர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  விமானம் விபத்தில் சிக்கிய இடத்தில் சி.ஐ.எஸ்.எப்., படை வீரர்கள் 150 பேர்‌ அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பேரிடர் மீட்பு அவசரகால படையினரும் சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் மேற்கொண்டுள்ளனர். இதுவரை 116 உடல்கள் மீட்கப்பட்டுள்ன. வளைகுடா நாடுகளில் பணியாற்றி தங்களுடைய குடும்பத்தினரை சந்திக்க விடுப்பில் வந்தவர்கள் விபத்தில் சிக்கினர். இதில் கேரளாவை சேர்ந்தவர்கள் 60 பேர் ஆவர். (மேலும்)  22.05.10

____________________________________________________________________________________________

கனடாவில் சில ஊடக சாத்தான்கள் வேதம் ஓத ஆரம்பித்திருக்கின்றன!

- கனடா கந்தசாமி

‘சாத்தான் வேதம் ஓதுகின்றது’ என்றொரு பழமொழி தமிழில் உண்டு. இதன் அர்த்தம், சாத்தான் என்ற மக்களுக்கு தீங்கு செய்யும் பிசாசு திருந்திவிட்டது என்பதாகாது. அது மக்களை ஏமாற்ற வேசம் போடுகிறது என்பதே இதன் உண்மையான அர்த்தமாகும். அதுபோன்ற ஒரு நிலையை, இப்போது கனடாவிலுள்ள சில தமிழ் ஊடகங்களும், தம்மை ஊடகவியலாளர்கள் என்று அழைத்துக் கொள்வோரும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். புலம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரையில், கனடாவில்தான் மிக அதிகமான இலங்கைத் தமிழர்கள் - அதாவது மூன்று லட்சம் வரையில் வாழ்கின்றனர். அதன் காரணமாக ஏராளமான வியாபார ஸ்தாபனங்களும் உருவாகியுள்ளன. இந்த வியாபார நிறுவனங்களில் கணிசமான கோவில்களும், பத்திரிகைகளும் கூட அடங்கும். தாயகத்தில் தப்பித்தவறி ஒருமுறை தன்னும் பத்திரிகைகளைக் கையில் எடுக்காதவர்கள் கூட, இங்கு பத்திரிகை நடாத்துபவர்களாகவும், ஊடகவியலாளர்களாகவும் பவனி வருகிறார்கள். இங்கு நடாத்தப்படும் வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் பல ‘அறிஞர்களும்’, ‘ஆய்வாளர்களும்’ செய்து வரும் ‘ஆய்வுகள்’ வரலாற்றில் நாம் முன்னொருபோதும் கண்டு கேட்டு அனுபவித்திருக்காதவை. (மேலும்)  22.05.10

____________________________________________________________________________________________

வெறும் அறிக்கைகளால் நம்பிக்கை தோன்றாது

JVPமக்கள் விடுதலை முன்னணியும் இப்போது இனப்பிரச்சினையின் தீர்வு பற்றிப் பேசுகின்றது. இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தேவை என்கிறார் ரில்வின் சில்வா. ஆனால் அதிகாரப் பகிர்வை எதிர்ப்ப தாகவும் கூறுகின்றார். மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர்கள் அடிக்கடி இனப் பிரச்சினையின் தீர்வு பற்றிப் பேசுவது அவர்களிடம் தோன்றியுள்ள சிந்தனை மாற்றத்தைக் காட்டுகின்றது என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் இந்தச் சிந்தனை மாற்றம் கொள்கை சார்ந்ததா அல்லது வாக்குகளை நோக்கமாகக் கொண்ட சந்தர்ப்பவாத நிலைப்பாடா என்பதே கேள்வி. மக்கள் விடுதலை முன்னணி மாக்சிஸம் - லெனினிஸத்திலும் பார்க்கச் சிங்களக் கடுங்கோட்பாட்டுச் சிந்தனைகளால் வழிநடத்தப்படும் கட்சியாகவே அரசியல் அரங்குக்கு வந்தது. அதன் ஆரம்ப கால ஆறு அரசியல் வகுப்புகளில் இனப்பிரச்சினை இருக்கவில்லை. இந்திய வம்சா வளித் தோட்டத் தொழிலாளர்கள் இந்திய விரிவாக்கல் வாதத்தின் பிரதிநிதிகள் என்று அந்த வகுப்புகளில் இவர்கள் கற்பித்தார்கள். காலப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. தமிழ் பேசும் மக்களையும் தோட்டத் தொழிலாளர்களையும் அணைத் துச்செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த போதிலும் இனப் பிரச்சினையைப்பொறுத்த வரையில் சரியான நிலைப்பாட்டுக்கு இவர்களால் வரமுடியவில்லை. (மேலும்)  22.05.10

____________________________________________________________________________________________

புலிகள் அதிகளவிலான மிதிவெடிகளை முல்லை பகுதியிலேயே புதைĪ