a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி             உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்      எங்கள்தேசம்         சலசலப்பு         நோயல்நடேசன்     விடிவெள்ளி         எங்கள்பூமி              ரீவடை இணையம்        பார்வை             தமிழ்யுகே
 

Asientribune
Lines-Magahzine
Srilankaguardian
The lka academic
Tamil Week            sldf
Uthr                
        

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                          05.10.2010

பூநகரியில் இடம் பெயர்ந்தவர்களுக்கு சொந்தக் காணிகளில் 1230 வீடுகள்

பூநகரியில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் சொந்தக் காணிகளில் 1230 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். நிர்மாணிக்கப்படவுள்ள வீடொன்றுக்குத் தேவையான கூரைத் தகடுகள், உபகரணங்க ளுடன் தலா 80 ஆயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய 1230 வீடுகளை நிர்மாணிக்கவென 9 கோடி 49 இலட்சம் ரூபா நிதி செலவு செய்யப்படவுள் ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஒரு மாத காலத்திற்குள் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அந்த மக்களிடம் கையளிக் கப்படவுள்ளன என்று தெரிவித்த அவர், இதன் மூலம் பூநகரி உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள 1230 குடும்பங்கள் நன்மைய டையவுள்ளன என்றும் குறிப்பிட்டார். பூநகரியில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் நலனை கருத்திற்கொண்டு அரசாங்கம் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த வீடமைப்பு திட்டத்தை துரிதப்படுத்துவதற்குத் தேவையான பணிப்புரைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தான் வழங்கியுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். 1230 வீடுகளை நிர்மா ணிப்பதற்கான அங்கீகாரத்தை அரசாங்கம் மூன்று அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார். அரசாங்கத்தின் அங்கீகாரத்திற்கு அமைய யுனொப்க்ஸ் என்ற அரச சார்பற்ற நிறுவனம் 1000 வீடுகள், கரிட்டாஸ் நிறுவனம் 200 வீடுகள், ஸோஆ நிறுவனம் 30 வீடுகள் என்ற அடிப்படையில்1230 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

_______________________________________________________________________________________________________

இந்தியாவின் தாளத்துக்கு ஆடுகிறது இலங்கை : ஜே.வி.பி கூறும் அதிரடித் தகவல்

இந்தியாவின் தாளத்துக்கு நன்றாகவே ஆட்டம்போடுகிறது இலங்கை. நமது நாட்டு அரசியலில் எது,எப்போது நடந்தாலும் அதனை இந்தியா நன்கு அறிந்துவைத்திருக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆனால் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் புலி முத்திரை குத்தி பிரிவினைவாதத்தை தூண்டுவதாக அக்கட்சியின் மீது குற்றம் சுமத்தியிருந்தது. இந்நிலையில் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே கூட்டமைப்பை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது” என ரில்வின் சில்வா அங்கு மேலும் தெரிவித்தார். பேச்சுவார்த்தையின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராய்ந்து பார்த்தால் நாம் இதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் கோபமான தொனியில் குறிப்பிட்டார்.

_______________________________________________________________________________________________________

ஜனாதிபதி தலைமையில் உயர் குழு நாளை புதுடில்லி விஜயம் :  இந்திய தலைவர்களை சந்திக்க ஏற்பாடு ஐந்து ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகும்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை செவ்வாய்க்கிழமை புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் இருதரப்பு உறவுகள், அரசியல், பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பாக ஆராய்ந்து பல புதிய தீர்மானங்களை முன்னெடுக்கும் நோக்கிலேயே ஜனாதிபதினின் இந்தியாவுக்கான விஜயம் அமையவிருப்பதாகவும் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.என். கிருஷ்ணா, அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்துவார். இச்சந்திப்புக்களின் போது, அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள், நல்லிணக்க குழு வின் செயற்பாடுகள், அரசியலமைப்பு மாற்றம் உள்ளிட்ட நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக ஜனாதிபதி அந்நாட்டுத் தலைவர்களுக்கு விளக்க மளிப்பார். இந்த மூன்று நாள் விஜயத்தின் போது இரு நாடுகளுக்குமிடையிலான 03 இருதரப்பு ஒப்பந்தங்களும் 02 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் (மொத்த மாக 05 ஒப்பந்தங்கள்) கைச்சாத்திடப் படவிருப் பதாகவும் அமைச்சின் அதிகாரி தெரிவித்தார். ஜனாதிபதியுடன் அமைச்சர்களான ஜீ. எல். பீரிஸ், கெஹெலிய ரம்புக்வெல்ல, டக்ளஸ் தேவானந்தா, நிதியமைச்சின் செயலாளர் பி. பி. ஜயசுந்தர, மின் சக்தியமைச்சின் செயலாளர் பெர்னான்டோ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க, போக்குவரத்து அமைச்சின் செயலாளர், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட குழுவினரும் நாளை இந்தியா பயண மாகின்றனர்

_______________________________________________________________________________________________________

தமிழர் பிரச்சனை தீரும் வரை அவமானம் தொடரும்!

- இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் பெண் எம்பி ரோஸி சேனநாயக்க

rosieகொழும்பு: வதை முகாம்களில் உள்ள தமிழ் மக்களை மீளக்குடியேற்றி, நியாயமான அரசியல் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின் முன் தொடர்ந்து தலைகுனிவுக்குள்ளாவதை இலங்கை தவிர்க்க முடியாது. ஐஃபா விழாவில் நடந்துள்ள அவமானம் தொடரும் என்று இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் பெண் எம்பி ரோஸி சேனநாயக்க கூறியுள்ளார். மேலும் அமிதாப் பச்சன் இல்லாத ஐஃபா விழா, மணமகன் இல்லாத திருமணத்துக்குச் சமமாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற ரோஸி கூறியதாவது: போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து வாழும் மக்களை மீளக்குடியேற்றி விட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். இது அப்பட்டமான பொய். உண்மையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையான மக்கள் இன்றும் அகதி முகாம்களில் எதுவிதமான வசதிகளுமின்றி வாழ்கின்றனர். மக்களை மீளக் குடியேற்றியதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அம் மக்கள் இன்றும் தகரக் கொட்டகைகளில் மிருகங்களைப் போல் வாழ்கின்றனர். (மேலும்) 07.06.10

_______________________________________________________________________________________________________

போபால் விஷ வாயு வழக்கில் 26 ஆண்டு இழுவைக்கு பின் தீர்ப்பு; 15 ஆயிரம் பேரை கொன்ற 8 பேர் குற்றவாளி என அறிவிப்பு

Bopalபோபால் : சுமார் 15 ஆயிரம் கொன்ற போபால் விஷ வாயு வழக்கில் சேர்க்கப்பட்ட 8 பேர் குற்றவாளிகள் என கோர்ட் அறிவித்துள்ளது. இன்றைய தீர்ப்பை கேட்க பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் கோர்‌ட் முன்பாக கூடினர். கடும் தீர்ப்பு வழங்கிட வேண்டும், என்று கோஷங்கள் எழுப்பினர். இதனையொட்டி கோர்ட் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள 8 பேருக்கும் தண்டனை பின்னர் மற்றொரு நாளில் அறிவிக்கப்படும் . அதிகம் பட்சம் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்ற பேச்சினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடும் எரிச்சல் அடைந்துள்ளனர். மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 1984ம் ஆண்டில், யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானது குறித்த வழக்கில் 26 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் உள்ள நிறுவன தலைவர் வழக்கில் இருந்து தப்பித்து விட்டார் . போபாலில் ஏற்பட்ட விஷவாயு கசிவில், அதன் பாதிப்பில் 15 ஆயிரம் பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது; 2 ஆயிரத்து 259 பேர் இறந்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.  (மேலும்) 07.06.10

_______________________________________________________________________________________________________

அரசியல் தீர்வுக்கான காத்திரமான உள்ளீடுகளை தமிழ் அரசியல் கட்சிகள் வழங்க வேண்டும்

-ஜீ.எல்.பீரிஸ்

gl peirisஇலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு தமிழ் அரசியல் கட்சிகள் காத்திரமான உள்ளீடுகளை வழங்க வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு தந்திரோபாய ஆய்வுக்கான சர்வதேச நிறுவகத்தின் ஒன்பதாவது ஆசிய பாதுகாப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபஸ, தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், அதன் மூலம் அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை ஜனாதிபதி அறிந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 15 வருடங்களாக ஆட்சி நடத்திய அரசாங்கங்கள் பல்வேறு தீர்வுத் திட்டங்களை முன்வைத்த போதிலும், ஏனைய தரப்பினர் போதியளவு ஒத்துழைப்பினை வழங்காத காரணத்தினால் இந்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நடைமுறைச் சாத்தியப்பாடுடைய யோசனைகளை கட்சிகளிடமிருந்து அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தென் ஆபிரிக்காவில் உருவாக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிற்கு நிகரான ஓர் ஆணைக்குழு இலங்கையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (மேலும்) 07.06.10

_______________________________________________________________________________________________________

கல்வியில் பின்தங்கும் கிழக்கு மாகாணம்

இலங்கையில் உலக வங்கியின் உதவியுடன் தேசிய கல்வி ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில், ஆரம்பக் கல்வியில் கிழக்கு மாகாணமே கடைசி நிலையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 9வது இடத்தையும், தமிழ் மொழிப் பாடத்தில் 5வது இடததையும் கிழக்கு மாகாணம் அடைந்துள்ளதாக தேசிய கல்வி அய்வு மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "கிழக்கு மாகாணத்தில் ஆசியரியர்கள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டாலும், ஆரம்பக் கல்வியில் பயிற்சி பெற்றட ஆசிரியர்கள் பயன்படுத்தப்படாமையும் பின்தங்கிய பிரதேசங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை போன்றவையுமே இந்நிலைக்கு பிரதான காரணங்கள்" என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் கூறுகிறார். ஆரம்பக் கல்வியில் ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவானது இடைநிலை கல்வி மற்றும் உயர்நிலை கல்வியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் சுட்டிக்காட்டுகின்றார். இதற்கு தீர்வு காணும் வகையில் பாடசாலைகளில் அல்லது கல்வி வலயங்களில் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஆசிரியர்களின் வருடாந்த சமபள உயர்வை, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அடிப்படையில் வழங்கும் திட்டமொன்றை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் , இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் கல்வியை முன்னேற்றமடையச் செய்ய முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். - B.B.C News

_______________________________________________________________________________________________________

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு மிடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் 4.00 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. இச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவொன்று கலந்துகொள்வதுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்புக்கு முன்னோடியாக நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தக்கூடிய விடயங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப் பட்டுள்ளது. தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இன்றைய சந்திப்பில் கவனம் செலுத்தப்படுவதுடன் கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்குப்பின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி யைச் சந்திக்கும் முதலாவது சந்திப்பு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________________________________________

சிக்கலில் முறிகண்டி மீள்குடியேற்றம்

பி.பி.சி

முல்லைத்தீவு மாவட்டம் முறிகண்டி பகுதியில் ஏ9 வீதிக்கு கிழக்கே மீள்குடியேற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பிரதேசத்தில் உள்ள திருமுறிகண்டி, செல்வபுரம், இந்துபுரம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தம்மை தமது சொந்தக் கிராமங்களில் விரைவாக மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். முறிகண்டி பிரதேசத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் கடந்த டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டன. ஆயினும் ஏ9 வீதியின் கிழக்குப் பிரதேசத்தில் உள்ள குடும்பங்கள் இன்னும் முற்றாக மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. அதிகாரிகள் தம்மை அலைக்கழிப்பதாகவும், தமது காணிகள் வேறு தேவைகளுக்காக எடுக்கப்படப் போகின்றதோ என்ற அச்சம் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்திருக்கின்றார்கள். (மேலும்) 07.06.10

_______________________________________________________________________________________________________

சல்மான்கான், கரீனாவின் 7 படங்களுக்கு 5 மாநிலங்களில் தடை!!

சென்னை: தடையை மீறி ஐஃபா விழாவில் பங்கேற்ற சல்மான்கான், கரீனா கபூர் நடித்து வெளியாகவுள்ள 7 புதிய படங்களுக்கு தென்னகத்தில் உள்ள 5 மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழர்களை படுகொலை செய்த இலங்கையில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் நடிகர்- நடிகைகள் பங்கேற்க கூடாது என்று தென்னிந்திய திரைப்பட அமைப்புகள் தடை விதித்தன. ஆனால் தடையை மீறி இந்தி நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், விவேக் ஒபராய், சல்மான்கான், சஞ்சய்தத், கரீனாகபூர், பிபாசா பாசு, ரிதேஷ் தேஷ்முக், சீமாகான் போன்றோர் பங்கேற்றனர். இதையடுத்து சென்னையில் சத்தியம், ஈகா, பி.வி.ஆர்., ஐநாக்ஸ் ஆகிய 4 தியேட்டர்களில் திரையிட்டு ஓடிக்கொண்டிருந்த ஹிரித்திக் ரோஷனின் கைட்ஸ் படம் நேற்று முன்தினம் உடனடியாக தூக்கப்பட்டது. ஹிரித்திக்ரோஷனிடம் நஷ்டஈடு கேட்கவும், அவர் மறுத்தால் வழக்கு தொடரவும் விநியோகஸ்தர் தரப்பில் ஆலோசனை நடக்கிறது. அடுத்தக்கட்டமாக விரைவில் ரிலீசாக உள்ள சல்மான்கான், கரீனா கபூரின் 7 படங்களுக்கும் தடைவிதிக்கப்படுகிறது. (மேலும்) 07.06.10

_______________________________________________________________________________________________________

இலங்கையில் தமிழர் மறுகுடியமர்த்தம் : முதல்வர் அவசர கடிதம்

-karunanithiசென்னை : "இலங்கைத் தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணிகளை விரைவில் மேற் கொள்ளுமாறு இலங்கை அதிபரிடம் அறிவுறுத்த வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி அவசர கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள அவசர கடிதத்தில் கூறியிருப்பதாவது:கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன், இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த அனைத்து தமிழர்களும் மறுகுடியமர்த்தப்படுவர் என்று இலங்கை அரசு உறுதியளித்திருந்ததை நன்கு அறிவீர்கள். ஆனால், இன்னமும் 80 ஆயிரம் பேர் முகாம்களில் வசித்து வருகின்றனர் என்றும், அவர்கள் மறுசீரமைப்பு நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருக் கின்றனர் என்றும் எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் மறுகுடியமர்த்தப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினருக்கு பொருளாதார வசதிகள் செய்து தர வேண்டியுள்ளது. நீதி சார்ந்த மறுவாழ்வு மூலம் நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும். எனவே, டில்லிக்கு வரும் இலங்கை அதிபரை சந்திக் கும் போது, சிறப்பு கோரிக் கையாக இந்த இரண்டு விஷயங்களை தாங்கள் வலியுறுத்த வேண்டும். இலங்கை முகாம்களில் வசிக்கும் தமிழர்களின் எதிர்பார்ப்புகளான, அவர்களை மறுகுடியமர்த்தும் மறுகட்டுமானப் பணிகளையும் விரைவில் மேற்கொள்ளச் செய்ய, அவரை தாங்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

_______________________________________________________________________________________________________

இனப்பிரச்சினைக்கான தீர்வு.

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

rajapaksha-7a.sangary-1இனப்பிரச்சினைக்கு ஓர் திருப்திகரமான தீர்வு காண்பதற்கு வேண்டிய பேச்சுவார்த்தைகளுக்கான ஆரம்ப நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்வதை முன்னிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். முதற்கட்டமாக தாங்கள் புதுடில்லிக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்தை மக்கள் வரவேற்கின்றார்கள். இத்தனை உயிரிழப்புகள்,சொத்திழப்புகளின் பின் காணப்போகின்ற தீர்வு பல்வேறு மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமன்றி, எதிர் காலத்தில் ஏதாவது ஒரு சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் எவரும் தலையிடாது இருக்கக்கூடியதாக அமைய வேண்டும். இது சம்பந்தமான எனது நிலைப்பாடு தாங்கள் அறிந்ததே. ஓற்றையாட்சியின் கீழ் ஒரு தீர்வு காணமுடியாதென்ற கருத்தை நான் பல காலமாக கொண்டுள்ளேன். அதற்கு ஒரேயொரு மாற்றீடாக நாட்டுப் பிரிவினைக்கு இடமளிக்காது, அவசியமேற்படின் இந்தியாவின் உத்தரவாதத்துடன் இந்திய அரசியல் முறையிலான ஒரு தீர்வை ஏற்பதே பொருத்தமாக இருக்கும். சர்வகட்சி குழுவினரின் ஆலோசனையை பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன தங்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சியில், 2008ம் ஆண்டு தை மாதம் 23ம் திகதி அலரி மாளிகையில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை இங்கு தருகின்றேன்.  “இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எப்போதும் சமஸ்டி முறைமையே பொருத்தமான தீர்வாக வற்பறுத்தி வந்தமை ஓர் இரகசியமான விடயமல்ல. சமஸ்டி என்ற பதம் சிலருக்கு ஏற்புடையதாக இல்லாமையால், சமஸ்டி அடிப்படையிலான தீர்விற்கு ஒரேயொரு மாற்றாக இந்திய முறையிலான தீர்வை ஏற்பதாக கூறி வந்துள்ளோம்.  (மேலும்) 07.06.10

_______________________________________________________________________________________________________

தி.மு.க., எம்.பி.,க்கள் ராஜபக்ஷேவை சந்திக்க ஏற்பாடு

சென்னை : டில்லி வரவுள்ள இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை, தி.மு.க., எம்.பி.,க்கள் சந்தித்து இலங்கை தமிழர் மறுவாழ்வு குறித்து வலியுறுத்த உள்ளனர்.இதுகுறித்து, தி.மு.க., தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இலங்கை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களை பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை நியாயப்படி வழங்கவும், டில்லி வரவிருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம், பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்த வேண்டுமென அவருக்கு, முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இதைதொடர்ந்து, தி.மு.க., எம்.பி.,க்கள் டில்லி சென்று, ராஜபக்ஷேவிடம் இலங்கை தமிழர் மறுவாழ்வு குறித்து வலியுறுத்த உரிய ஏற்பாடுகளை செய்ய, பார்லிமென்ட் தி.மு.க., குழுத்தலைவர் டி.ஆர்.பாலுவை, முதல்வர் கருணாநிதி டில்லி அனுப்பி வைத்துள்ளார்.இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

_______________________________________________________________________________________________________

ஐரோப்பா முழுவதும் கடும் சிக்கன நடவடிக்கைகள்

Peter Schwartz  29 May 2010

sparplanஇரு வாரங்களுக்கு முன்பு ஐரோப்பிய அரசுகளின் தலைவர்களும் சர்வதேச நாணய நிதியமும் யூரோவிற்கான 750 பில்லியன் யூரோக்கள் மீட்புப் பொதிக்கான உடன்பாடு ஒன்றை அடைந்தனர். அப்பொழுது முதல் கடுமையான சிக்கன நடவடிக்கைகளின் புதிய சுற்று பற்றிய அறிவிப்பு இல்லாமல் ஒரு நாள் கூட கடக்கப்படவில்லை. இப்பொழுது வங்கிகளுக்கும் யூரோவிற்கும் பல மீட்புப் பொதிகளால் ஏற்பட்ட விளைவான பொது நிதிப் பெரும் பற்றாக்குறைகளினால் ஏற்பட்ட ஓட்டையை அடைப்பதற்கு உழைக்கும் மக்கள் விலை செலுத்துமாறு உத்தரவிடப்படுகின்றனர். ஐரோப்பிய உறுதிப்பாட்டிற்கான அளவு கோல்கள் பற்றிய 2013 குறிப்பிட்ட காலக்கெடுவை செயல்படுத்துவதற்காக—அது அதிகபட்ச வரவு-செலவுப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கு மேல் போகக்கூடாது என்கிறது அதாவது யூரோப்பகுதி நாடுகளும் பிரிட்டனும் தங்கள் வரவு-செலவுப் பற்றாக்குறைகளை மொத்தம் 400 பில்லியன் யூரோக்களுக்குக் குறைத்தாக வேண்டும். இந்த மிகப் பெரிய தொகை முக்கியமாக பொதுத் துறை ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், வேலையின்மையில் வாடுபவர்கள் மற்றும் சமூக நலன்களை நம்பியிருப்பவர்கள் ஆகியோரின் இழப்பில்தான் ஈடுகட்டப்படும்.  (மேலும்) 07.06.10

_______________________________________________________________________________________________________

அவசர உதவி கோரல்

பெயர் : அப்துல் மஜீட் முகம்மட் அலி
முகவரி : இல. 216, ஜெயா வீதி, மருதமுனை
தொழில் : சிறுவர் குர்ஆன் பாடசாலை ஆசிரியர்.
தொலைபேசி இல : +94 77 918 9057, +94 77 355 6152
helpமேற்படி விபரங்களையுடைய 48 வயதையுடையவர் தற்போது இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அவசரமாக வைபாஸ் (By pass) இருதயச் சத்திரசிகிச்சை செய்யவேண்டியுள்ளது. இதற்காக இலங்கை பெறுமதியில் சுமார் ஏழு இலச்சம் ரூபாய்களுக்கு அதிகமாக தேவைப்படுகின்றது. இவர் சிறுவர்களுக்கு குர்ஆன் சொல்லிக்கொடுக்கும் பணியைச் செய்து வந்ததால் மிகவும் வறுமையான நிலையில் உள்ளார். இவர் 05 பிள்ளைகளின் தகப்பனாவார் பிள்ளைகள் ஐவரும் கல்வி கற்கும் மாணவர்களாகவே உள்ளனர். இந்நிலையில் குறித்த சத்திரசிகிச்சைக்காக எந்த பணவசதியுமின்றி அவதியுறும் இவருக்கு சத்திரசிகிச்சைக்கான பண உதவிகளை வழங்குமாறு நல்ல உள்ளம் படைத்த அனைத்து அன்பர்கள், நண்பர்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.

உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி

MA Fathima Saleema
Account No : 023-2-001-9-8047904
Peoples Bank
Maruthamunai
No.216, Jeya Road, Maruthamunai, Kalmunai, Sri Lanka.

_______________________________________________________________________________________________________

கண்டி, ஹந்தானை தோட்ட மக்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்

பத்து வருடங்களாக நிலுவையிலுள்ள ஊழியர் சேமலாப நிதியத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி கண்டி, ஹந்தானை தோட்ட மக்கள் சாகும்வரையான உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்துள்ளனர். கடந்த 10 வருடங்களாக நிலுவையிலுள்ள ஊழியர் சேமலாப நிதியம் உட்பட ஏனைய கொடுப்பனவுகளின் பெறுமதி ஆறு கோடி ரூபாவினைத் தாண்டியுள்ளது என்று குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர். கடமையினையும் புறக்கணித்து நடத்தப்பட்டு வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 150பேர் வரையில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்துக்குச் சொந்தமான "ஜனவசம" எனும் இந்தத் தோட்டப்பகுதியானது, தனியார்க்கு விற்கவுள்ள நிலையிலேயே குறித்த ஊழியர் சேமலாப நிதி உட்பட கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த மக்கள் மேலும் சுட்டிக்காட்டினர். 

_______________________________________________________________________________________________________

சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் சிறந்த முதலீடாக அமையும்

- ஜப்பான் ரைம்ஸ்

நாட்டின் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம்களின் துன்பங்களுக்கு பகிரங்கமாக தீர்வுகாணும் நடவடிக்கைகளை தேசிய மட்டத்தில் மேற்கொள்ள வேண்டும். அத்துடன், மோதலின்போது புலிகளும் அரசாங்கமும் இழைத்திருந்த மீறல்கள் தொடர்பாக கலந்துரையாட வேண்டும். தென்னாபிரிக்காவில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறையானது இங்கு மிகவும் அவசியமான அத்திவாரமாக அமையும். நிலையானதும் செயற்பாட்டுத்திறன் வாய்ந்ததுமான நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு இந்த விடயம் அத்திவாரமாக விளங்கும். அதேசமயம், நாட்டின் அரசியல் பரிமாணம் மற்றும் பல்வேறு இனங்களை உள்ளடக்கிய இலங்கை மக்களின் நியாயபூர்வமான குரல்களுக்கு செவிசாய்த்து அவற்றுக்கு பதிலளிக்க வேண்டிய நடவடிக்கையை அரசாங்கமே ஆரம்பிக்க வேண்டும். இந்தத் துன்பங்கள் தொடர்பாக நியாயபூர்வமான முறையில் பரிகாரம் காணப்படாவிட்டால் அவர்கள் ஆரோக்கியமற்ற வழிமுறையை நாடும் நிலையேற்பட்டுவிடும். அரசாங்கம் சட்டவிதியை மேற்கொள்வது தொடர்பாக சகல முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும்.அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும். மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் 13 ஆவது திருத்தத்தையும் அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். இந்த உத்தரவாதங்களை நீக்குவதற்கான திருத்தங்களுடன் கூடிய நகல்வரைபு தயாரிக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் செய்தி உறுதிப்படுத்தப்பட்டால் மிகவும் மோசமான வகையில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும். (மேலும்) 06.06.10

_______________________________________________________________________________________________________

வடக்கு மக்களின் அவல நிலைக்கு கூட்டமைப்பும் பொறுப்பாளிகள் - பிரதி அமைச்சர் முரளிதரன் குற்றச்சாட்டு

karuna-6வடக்கு மக்களின் அவல நிலைமைக ளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சி யும் முக்கிய பொறுப்பாளி என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தை நிறுத்த வேண்டுமெனக் கோரி தாம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யுத்தத்தை முன்னெடுப்பதற்குப் புலிகளுக்கு ஊக்கமளித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வன்னி மக்களின் நிலைமைகள் திருப்தி அடையக் கூடிய வகையில் இல்லை என்பது உண்மை என்ற போதிலும் குறைகளை மட்டும் கண்டு பிடிப்பதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றம் கண்டு பிடிப்பது மிகவும் இலகுவானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறைகளைக் கண்டு பிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டாது தமிழ் மக்களது பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளில் முனைப்புக் காட்ட வேண் டும். வடக்குக் கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப் பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு. இரண்டு மாகா ணங்களாகச் செயற்படுவதில் தவறில்லை. இரண்டு மாகாண அலகுகளாக இயங்குவதன் மூலம் அதிகளவு வளங்களை ஒதுக்கீடு செய்யக் கூடிய சாத்தியம் காணப்படு கின்றது. மக்களின் மீள்குடியேற்ற நடவ டிக்கைகள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

_______________________________________________________________________________________________________

அரசும் சர்வதேச சமூகமும் வடகிழக்கு மாகாண மக்களுடைய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற திரு. சம்பந்தனின் கோரிக்கைக்கான பதில்

வீ. ஆனந்தசங்கரி, தலைவர்

a.sangaryஇலங்கை தமிழரசுக்கட்சியும் தமிழ்தேசியகூட்டமைப்பும் விடுதலைப்புலிகளின் முகவர்களாக செயற்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல சந்தர்ப்பங்களை இழந்தபின் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் கோடிக்கணக்கில் சொத்துக்களும் அழிக்கப்பட்ட பின்பு இந்திய அமைப்பு முறைபற்றி பேசுகிறார் திரு. சம்பந்தன் அவர்கள், அதுவும் கூட அரை மனதாக. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனது ஆலோசனையை எற்றிருந்தால் எமது மக்களின் பல்வேறு இழப்புக்களை தவிர்த்திருக்கலாம். இதுவரை காலமாக மௌனமாக இருந்துவிட்டு, ஐனவரி மாதம் 20ம் திகதி கல்முனையில் nஐனரல் பொன்சேகாவை ஐனாதிபதி தேர்தலில் ஆதரிக்கும் கூட்டத்தில் இவ் ஆலோசனை முதற்தடவையாக முன்வைத்தது. இத்திட்டம் என்னாலேயே முன்வைக்கப்பட்டதென்றோ அத்திட்டத்திற்கு எனது ஆதரவு உண்டென்றோ கூறவில்லை. மீண்டும் ஏப்ரல் 20ம் திகதி ஒரு தேசிய பத்திரிகை முன் பக்க செய்தியில் தாம் இந்திய முறையை ஆதரிக்கத் தயாரென திரு. சம்பந்தன் அவர்கள் கூறியதாக செய்தி வெளிவந்தது. இச்சந்தர்ப்பத்தில் கூட இத்திட்டம் என்னால் முன்வைக்கப்பட்டதென்றோ அல்லது இத்திட்டத்திற்கு  எனது ஆதரவும் உண்டென்றோ அப்பத்திரிகையோ அல்லது சம்பந்தனோ வெளிப்படுத்தவில்லை. ஐனாதிபதியால் ஏற்கனவே இத்திட்டம் வெளிப்பட்டதென மட்டும் திரு.சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார். திரு. சம்பந்தன் அவர்களின் இத்தகைய விபரீதப் போக்கே தமிழ்மக்கள் இந்நிலைக்கு தள்ளப்பட்டமைக்கு காரணமாகும். இது என்னுடைய திட்டமென முழு உலகமும் அறிந்திருந்தது.   (மேலும்) 06.06.10

_______________________________________________________________________________________________________

இராமாவில் இடம்பெயர் முகாமிலுள்ள மக்களுக்கு ஒருமாதமாக காலை உணவு வழங்கப்படவில்லை

கொடிகாமம் இராமாவில் இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளோருக்கான காலை உணவு கடந்த ஒருமாதத்திற்கு மேலாக வழங்கப்படாததால் மக்கள் பசியுடன் இருப்பதாகத் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை இராமாவில் இடம்பெயர்ந்தோர் முகாமிற்கு நிலைமைகளை அறியுமுகமாகச் சென்றிருந்தனர். இப்பயண நிறைவிலேயே சிறிதரன் எம்.பி. இதனைத் தெரிவித்திருந்தார்.முகாமில் உள்ள நிலைமைகள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;இராமாவில் முகாமிற்கு நாம் சென்றபோது உள்ளே செல்ல எமக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், ஒரு மணிநேர தாமதத்தினையடுத்து அனுமதிக்கப்பட்டோம். இம் முகாமில் வடமராட்சி கிழக்கின் பதினொரு கிராமங்களைச் சேர்ந்த 750 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 207 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். (மேலும்) 06.06.10

_______________________________________________________________________________________________________

ஐ.ஐ.எஃப்.ஏ.: ரசிகர்கள் ஏமாற்றம்

- பி.பி.சி.

iifa-1 கொழும்பில் நடந்துவரும் ஐ.ஐ.எஃப்.ஏ. சர்வதேச இந்திய திரைப்பட கழகத்தின் விழாவில் கடைசியாக நடக்கின்ற விருது வழங்கும் விழாவில் இந்திய திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் கலந்துகொள்ளாமல் போனதால், இலங்கை சினிமா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.பாலிவுட் ஆஸ்கர்ஸ் என்று வருணிக்கப்படுகின்ற இந்த விழாதான் இலங்கையில் இதுவரை நடந்ததிலேயே மிக பெரிய அளவில் மிகுந்த ஆடம்பராத்துடன் நடத்தப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்று கூறப்படுகிறது. தனது யுத்த காலத்திலிருந்து வெளிவர இத்தகைய கேளிக்கை நிகழ்ச்சி உதவும் என்று இலங்கை நினைத்திருந்தாலும், இலங்கையில் இந்த நிகழ்வு நடப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதன் எதிரொலியாக சில பெரிய சினிமா நட்சத்திரங்கள் இந்த விழாவுக்கு வரவில்லை என்பது ஒரு கரும்புள்ளியாக அமைந்திருக்கிறது. இந்திய திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. இந்தி திரைப்பட உலகின் இன்னொரு பெரிய நட்சத்திரமான ஷாருக்கானும் இந்த விழாவில் காணப்படவில்லை. (மேலும்) 06.06.10

_______________________________________________________________________________________________________

ஐரோப்பிய நாடுகளில் புலிகளிடையே மோதல் பிரான்ஸில் ஒருவர் கொலை; இருவர் கைது; உருத்திரகுமாரனின் ‘தாய்நிலம்’ பத்திரிகை எரிப்பு

(அனந்த் பாலகிட்ணர்)

ஐரோப்பிய நாடுகளில் புலிகள் இயக்க ஆதரவாளர்களுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. புலிகளின் உருத்ரகுமாரன் பிரிவினருக்கும் நெடியவன் பிரிவினருக்குமிடையில் இந்த மோதல் உக்கிரமடைந்து ஒருவரை யொருவர் நேரடியாகத் தாக்கும் நிலை உருவாகியுள்ளது. இதன் விளைவாக உருத்ரகுமாரன் பிரிவைச் சேர்ந்த ரமேஷ் சிவரூபன் என்பவர் பாரிஸில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் நெடியவன் குழுவைச் சேர்ந்த இருவர் பாரிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரமேஷ் சிவரூபனை பாரிஸில் உள்ள இல்லத்திலிருந்து சில தினங்களுக்கு முன்னர் சிலர் வானொன்றில் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரது வீட்டுக் கருகில் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டிருக்கிறார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இறப்பதற்கு முன்னர் அவர் பாரிஸ் பொலிஸாருக்கு அளித்த வாக்கு மூலத்தில், தம்மை நெடியவன் குழுவைச் சேர்ந்தவர்களே கடத்திச் சென்று தாக்கியதாகக் கூறியுள்ளார். இதனடிப்படையில், தம்பையா கணேஷ், குப்பிளான் ரவி ஆகிய இருவரையும் பாரிஸ் பொலிஸார் கைது செய்ததாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன. (மேலும்) 06.06.10

_______________________________________________________________________________________________________

ராஜபட்ச வருகையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

Thirumavalavanசென்னை, ஜூன் 5- இலங்கை அதிபர் ராஜபட்ச இந்தியா வருவதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராஜபட்ச எதிர்வரும் 8-6-2010 அன்று இந்திய ஆட்சியாளர்களைச் சந்திப்பதற்காக புதுதில்லி வருவதாகத் தெரிகிறது.  முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களைப் பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித்த மனிதநேயமில்லாத ராஜபட்ச, அந்தப் பேரவலம் நடந்து முடிந்து ஓராண்டு ஆன நிலையிலும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவோ அச்சிக்கலுக்கான அரசியல் தீர்வை உருவாக்கவோ சிறிதும் முனைப்புக் காட்டவில்லை. கடந்த சனவரி மாதத்திற்குள்ளாக வவுனியாவில் உள்ள வதைமுகாம்களிளுள்ள அனைவரையும் விடுவித்து அவரவருக்கான சொந்த வாழிடங்களில் மீள்குடியமர்த்தம் செய்யப் போவதாகவும் மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளை நிறைவேற்றப் போவதாகவும் இந்திய அரசுக்கு வாக்குறுதி அளித்த ராஜபட்ச அவற்றை நிறைவேற்றுவதற்கு எள்முனையளவும் அக்கறை காட்டவில்லை. (மேலும்) 06.06.10

_______________________________________________________________________________________________________

தொடரும் முரண்பாடுகளும் தமிழ்ச் சமூகமும்.

 தேவன் (கனடா)

வைகாசி மாதம் தமிழர்களால் மறக்கமுடியாத மாதமாகியிருக்கிறது. இதை வலிசுமந்த மாதமாகவும் கடைப்பிடிக்கின்றனர் தமிழர். இந்த மாதம் மட்டுமா? நமக்கு வலி சுமந்த மாதம்? கடந்த 30 வருடத்துக்கு மேலாக அல்லவா சொல்லொணா துயரங்களையும் வலி சுமந்த தசாப்தங்களையும் சுமந்து வந்துள்ளோம். இதற்கெல்லாம் யார் காரணம்? யார் பொறுப்பு? ஒரு சிலர் கூறலாம் சிங்கள அரசியல் தலைமை என. இன்னும் ஒரு சிலர் கூறலாம் தமிழ் அரசியல் தலைமைகள் என. என்னைப் பொறுத்தவரையில் சுதந்திர இலங்கைக்குள் பெரும்பான்மை இன ஒருசில தலைவர்களால் சிறுபான்மை இன மக்களை சமத்துவமாக நடாத்தாதன் விளைவாகவே தேசிய இன முரண்பாடு தீவிரம் அடைந்தது. இது அனைவரும் அறிந்த விடயம். சுதந்திரத்துக்குப் பின்பு இலங்கையை ஆட்சி செய்த தலைவர்களில் எஸ்.டபிள்ய. ஆர். பண்டாரநாயக்கா சிறந்த தலைவராக கருதப்படுகிறார். மிக மோசமான இனவாத தலைவராக ஜே.ஆர்.ஜெயவர்தனா கருதப்படுகிறார். மனிதர்கள் பொதுவாக நல்லவர்களுடனேயே உறவுகள், கூட்டுகள் வைத்துக்கொள்ள விரும்புவார்கள். ஆனால் நம் சமூகத்துக்கு தலைமை தாங்கின அரசியல் சக்திகள் மோசமான கிழட்டு நரி என வர்ணிக்கப்பட்டவரும் தமிழருக்கு அதிக வலியை ஏற்படுத்தியவருமான ஜே.ஆருடனும் அவரது கட்சியுடனும் அரசியல் உறவுகளை வைத்துக்கொண்டு பரஸ்பர இனவாத – வர்க்க நல கொம்பு சீவல் அரசியலையே செய்து வந்திருக்கிறது. (மேலும்) 06.06.10

கல்முனை பிரதேசத்தின் வீடொன்றிலிருந்து பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு

கல்முனை, பாண்டிருப்பு பகுதியில் வீடொன்றிலிருந்து பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாள் பிரசாந்த ஜெயகொடி தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார். அம்பாறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பாண்டிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வலைப்பு நடவடிக்கையின் போதே ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் உரப்பைக்குள் வைத்து புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதன் போது சந்தேகத்தின் பேரில் அவ்வீட்டு உரிமையாளர் 40 வயதான பெண் கைது செய்யப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளர். இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

_______________________________________________________________________________________________________

இந்தியாவின் மாவோயிஸ்ட்டுகள்’ யாருக்கு துணைபோகிறார்கள்?

- கி.இலக்குவன்

மற்றொரு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளர் கொல்லப்பட்டார் என்ற தலைப்புடன் பெட்டிச் செய்தியொன்றை அண்மையில் இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது. தலைப்புச் செய்திகளை மட்டும் படித்துவிட்டு அடுத்த செய்திக்குத் தாவும் வாசகருக்கு இச்செய்தியின் உண்மையான பின்னணி புரிந்திருக்காது. இரண்டு கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார் போலும். அரசியலில் இது சகஜம் தானே என்று கூட அவர் இச்செய்தியை அலட்சியப்படுத்தியும் இருப்பார். ஆனால் இது கட்சி மோதலின் போது ஏற்பட்ட மரணம் அல்ல. மாறாக கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக மேற்குவங்கத்தில் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் நூற்றுக்கணக்கான படுகொலைகளில் இதுவும் ஒன்று. இப்போது கொல்லப்பட்டுள்ளவர் ஒரு ஓய்வுபெற்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியர், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக இருப்பதே இவர் செய்த குற்றம். இவர் தனது பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது ஒரு மாவோயிஸ்ட் கும்பலால் வழிமறித்துக் கொல்லப்பட்டார். (மேலும்) 06.06.10

_______________________________________________________________________________________________________

இன உரிமைப் போராட்டத்தின் புதிய பரிமாணம்

இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்துடன் தமிழ் மக்களின் இன உரிமைப் போராட்டத்தின் பின்னடைவும் தொடங்கியது. இன உரிமைப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்த தமிழரசுக் கட்சியின் வழித்தோன்றலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இப்பின்னடைவைத் தொடக்கி வைத்தமை மிகப் பெரிய முரண்நகை. தமிழரசுக் கட்சி 1952ம் ஆண்டு சமஷ்டிக் கோரிக்கையுடன் தேர்தல் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தது. கால் நூற்றாண்டு அரசியல் போராட்டங்களின் பின் சமஷ்டிக் கோரிக்கையை வென்றெடுக்க முடியாதது மாத்திரமன்றி, அதை நோக்கிய படிமுறை வளர்ச்சி நிலைகளையும் அடையவில்லை. சமஷ்டிக் கோரிக்கை யைப் பிரிவினையாக சிங்கள மக்கள் பார்க்கும் வகையில் செயற்பட்டமையே இத்தோல்விக்குப் பிரதான காரணம் எனலாம். சமஷ்டியை அடைய முடியாத நிலையில் நடைமுறைச் சாத்தியமற்ற பிரிவினையின் பக்கம் தமிழரசுக் கட்சி திரும்பியது. இக்கட்சியின் முயற்சியால் உருவாகிய தமிழர் விடுதலைக் கூட்டணி 1976 மே 14ந் திகதி வட்டுக்கோட்டையில் உள்ள பண்ணாகத்தில் நடைபெற்ற மகாநாட்டில் தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியது. தனிநாட்டுத் தீர்மானம் ஐந்து வருடங்களுக்கு மாத்திரம் நின்று நிலைத்தது. அதன்பின், 1981ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மாவட்ட சபைத் திட்டத்தை ஏற்று அதற்கான தேர்தலில் போட்டியிட்டது. (மேலும்) 06.06.10

_______________________________________________________________________________________________________

பேச்சுவார்த்தைக்கான முன்முயற்சியை எடுக்கலாமே!

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மிடையே பேச்சுவார்த்தை நடைபெறப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் காணப்படுகின்றது. அண்மையில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ்ஸ¤டன் இரா. சம்பந்தன் பேசினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என்று சில தினங்களுக்கு முன் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் கூறினார். அரசாங்கம் அழைத்தால் பேச்சுவார்த்தைக்குச் செல்வோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறிய செய்தி பத்திரிகையில் வெளியாகியது. மக்களிடம் பேச்சுவார்த்தை பற்றிய நம்பிக்கை ஏற்படுவதற்கு இவை காரணங்கள். பேச்சுவார்த்தை பற்றிய நம்பிக்கை தோன்றுகின்ற போதிலும் ஒரு விடயம் உறுத்துகின்றது. அரசாங்கம் அழைத்தால் பேச்சுவார்த்தைக்குப் போவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் கூறுகின்றார். அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் பிரச்சினைக்குத் தீர்வு இல்லையா என்ற கேள்வி எழுகின்றது. அழைக்காமல் எப்படிப் போவது என்ற கேள்வியிலும் நியாயம் உண்டு. ‘அழையா விருந்தாளி’யாகப் போவது கெளரவக் குறைவு தான். இங்கே கெளரவத்திலும் பார்க்கத் தமிழ் மக்களின் அவலநிலை முக்கியமானதாக இருக்கின்றதே. (மேலும்) 06.06.10

_______________________________________________________________________________________________________

இரகசியமாகத் தடுத்துவைப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் உரிமைகளுக்கான ஐ.நா. நிபுணர்கள் வலியுறுத்தல்

பயங்கரவாத சந்தேக நபர்களை இரகசிய இடங்களில் வைத்திருப்பதை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஐ.நா.வில் உரிமைகள் விவகார நிபுணர்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அழைப்பு விடுத்துள்ளனர்.அமெரிக்க உட்பட 66 நாடுகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஐ.நா.வின் உரிமைகளுக்கான நிபுணர்கள் குழு குற்றம் சாட்டியிருப்பதாக நெதர்லாந்து வானொலி செய்திச் சேவை தெரிவித்தது. சித்திரவதை, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, பலவந்தமாக காணாமல் போதல் ஆகிய விவகாரங்களுக்கான நிபுணர் குழுவே இதனைத் தெரிவித்திருக்கிறது. 66 நாடுகளின் பெயர்களை ஜனவரியில் இக்குழு சமர்ப்பித்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.பயங்கரவாத சந்தேக நபர்கள் என்று குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டோரை இரகசிய இடங்களில் வைத்திருப்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமென்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதியோப்பியா, ருமேனியா, கொசோவோ, பாகிஸ்தான், அமெரிக்கா உட்பட பல நாடுகளின் அரசாங்கங்களை இந்த விடயம் குறித்து அதாவது தடுத்து வைக்கப்படுவதற்கு உத்தரவிட்டோர் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கேட்கப்பட்டுள்ளது. (மேலும்) 05.06.10

_______________________________________________________________________________________________________

இந்த வசை எய்திடலாமோ...?

wctc_tசெம்மொழி மாநாட்டுக் குதூகலங்களுக்கு இடையே மனதில் சற்று வருத்தம். தமிழுக்கு மாநாடு எடுக்கிறோம். உலகெங்கிலும் இருந்து தமிழறிஞர்கள் கோவையில் வந்து கூட இருக்கிறார்கள். தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு சரித்திர நிகழ்வு நடைபெற இருக்கும் வேளையில், தாய்த் தமிழகத்தில் தமிழின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை நினைத்தால் வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை. ஒருபுறம் தமிழே தெரியாத, தாய்மொழி தெரிய வேண்டும் என்கிற உணர்வே இல்லாத ஒரு தலைமுறை வளர்ந்து வருகிறது. இன்னொருபுறம், "ல'கர "ழ'கரங்களைக் கூடச் சரியாக உச்சரிக்கத் தெரியாத நிலையில் நாமமது தமிழரென வாழ்ந்திடுவோர். நுகர்வோர் பொருளாதாரமும், பன்னாட்டு நிறுவனங்களின் வருகையும், தொழில்நுட்ப வளர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கும் கலாசாரச் சீரழிவும், பண்பாட்டுச் சிதைவும் மிக அதிகமாகப் பாதித்திருப்பது தமிழ் மொழியைத்தான். ஊடகங்களும் தமிழுக்கு எதிரான தாக்குதல்களுக்குத் துணைபோகின்றன என்பதுதான் அதனினும் கொடிய வேதனை. இவையெல்லாம் போகட்டும். அறுபதுகளில் காணப்பட்ட தமிழின எழுச்சி என்ன ஆனது?  தமிழ் படிப்பது பெருமை என்று கருதிய தலைமுறையினரேகூடத் தங்களது சந்ததியர் தமிழ் படிக்க வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கிவிட்டனரே, ஏன்? இன்னார் தமிழ் வித்வான், தமிழ்ப் புலவர் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டு வந்த காலம்போய், யாரும் தங்களைத் தமிழாசிரியர் என்று பெருமைப்பட்டுக் கொள்ளத் தயார் இல்லையே, ஏன்? (மேலும்) 05.06.10

_______________________________________________________________________________________________________

திரைப்பட விழாவும் இந்திய முதலீடும் இலங்கையின் வளர்ச்சிக்கு அங்கீகாரம் ஐபா விழாவில் ஜனாதிபதி மஹிந்த

iifa-050510இலங்கையின் மீதும் அதன் பொருளாதாரக் கொள்கையின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையினாலேயே சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவை இந்தியா இலங்கையில் நடத்த முன்வந்துள்ளது. அது மட்டுமன்றி இலங்கையில் அதிகளவு முதலீடுகளைச் செய்யவும் இந்தியா தற்போது முன்வந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவின் முன்னோடியாக நேற்று இந்திய – இலங்கை வர்த்தக சம்மேளனங்களின் விசேட அமர்வு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. வர்த்தக சம்மேளன அமர்வினை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அதிதியாக வருகை தந்திருந்தார். ஜனாதிபதியுடன் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் தலைவர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்தியாவின் பிரபல ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான அனுபம் கெர்ருக்கும் ஜனாதிபதி விருது வழங்கி கெளரவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பேசுகையில்:- பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை ஒரு வருடங்களுக்கு முன்னர் தான் நாம் வெற்றி கண்டோம். தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், சிறுவர் போராளிகள், குண்டுத் தாக்குதல்கள் என பயங்கரவாதத்துக்கு வேறு பரிமாணத்தை எல். ரி. ரி. ஈ. யினர் அறிமுகப்படுத்தினார்கள்.  (மேலும்) 05.06.10

_______________________________________________________________________________________________________

நவநீதம்பிள்ளையின் கருத்து, அமிதாப்பச்சன் பங்கேற்காமை பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் அரசு குற்றச்சாட்டு

navaneethampillaiஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள், இஃபா.விழாவில் அமிதாப்பச்சன் போன்ற முன்னணி நடிகர்கள் பங்கேற்காமை போன்ற விடயங்களின் பின்னணியில் புலம்பெயர்ந்த தமிழர்களின் நடவடிக்கைகள் இருப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்கள் சர்வதேசரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதுடன் சில சந்தர்ப்பங்களில் வெற்றியும் பெற்றிருப்பதற்கு நவநீதம்பிள்ளை அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்களை முன்னுதாரணமாக அமைச்சரவை, பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரான ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுட்டிக்காட்டினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சரவை பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல இந்த தகவல்களை வெளியிட்டார். (மேலும்) 05.06.10

_______________________________________________________________________________________________________

வங்கதேச தலைநகரில் பயங்கர தீ: 125 பேர் பலி

bangaldeshதாகா (வங்கதேசம்) :வங்கதேச தலைநகர் தாகாவில் நேற்று முன்தினம் இரவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 125 பேர் உயிரோடு எரிந்து சாம்பலாயினர்; 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தில்  வங்கதேசமே சோகத்தில் மூழ்கியது. தாகாவின் ஒரு பகுதியான மக்கள் நெருக்கடி மிகுந்த பழைய தாகாவில், ஆறு மாடி அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் இருந்த "டிரான்ஸ்பார்மர்' நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வெடித்துச் சிதறியது. அதன் தீப்பொறிகள் அருகிலிருந்த பிளாஸ்டிக் தொழிற்சாலை, ஆறுமாடி அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் அருகில் இருந்த  சில அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பரவின. இதில், ஆறுமாடிக் குடியிருப்பில் பற்றிய தீ மளமளவென்று சில நொடிகளில் மொத்தக் கட்டடத்தையும் கபளீகரம் செய்யத் துவங்கி விட்டது. அக்குடியிருப்பில் இருந்தவர்களில் 125 பேர் உயிரோடு எரிந்து சாம்பலாயினர்; 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், தீ 300 அடி உயரத்துக்கும் மேல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததாகக் கூறினர். (மேலும்) 05.06.10

_______________________________________________________________________________________________________

இலங்கை பட விழாவில் கலந்து கொண்ட ஹிருத்திக்ரோஷன் படத்துக்கு தடை

சென்னையில், 4 தியேட்டர்களில் இருந்து படம் தூக்கப்பட்டது

சென்னை, ஜுன்.5-இந்தி நடிகர் ஹிருத்திக்ரோஷன் படத்துக்கு, தமிழ் திரையுலகம் தடை விதித்திருக்கிறது. அவர் நடித்த இந்தி படம் சென்னையில் 4 தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டது. இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த படவிழாவை தென் இந்திய திரையுலகம் ஒட்டு மொத்தமாக புறக்கணித்தது. தென் இந்தியாவை சேர்ந்த எந்த நடிகர், நடிகையும், திரையுலக பிரமுகர்களும் இலங்கை படவிழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தென் இந்திய திரையுலகம் தடை விதித்தது. ஹிருத்திக்ரோஷன் உள்பட சில இந்தி நடிகர்கள் மட்டும் இலங்கை படவிழாவில் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு தென் இந்திய திரையுலகம் தடை விதித்திருக்கிறது. ஹிருத்திக்ரோஷன் நடித்த `கயிட்ஸ்' என்ற இந்தி படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படம் சென்னையில் உள்ள ஈகா, சத்யம், பி.வி.ஆர்., ஐநாக்ஸ் ஆகிய தியேட்டர்களில் திரையிடப்பட்டிருந்தது. ஹிருத்திக்ரோஷன், தென் இந்திய திரையுலகம் விதித்த தடையை மீறி இலங்கை படவிழாவில் கலந்து கொண்டதால், அவர் நடித்த `கயிட்ஸ்' படத்தை திரையிடக்கூடாது என்று `நாம் தமிழர் இயக்கம்' எதிர்ப்பு தெரிவித்தது. அதைத்தொடர்ந்து 4 தியேட்டர்களில் இருந்தும் அந்த படத்தை தூக்கிவிட்டார்கள்.

_______________________________________________________________________________________________________

தமிழ் மக்களின் நலன் அரசியல் தீர்விலேயே தங்கியுள்ளது

சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா இன்றுடன் முடிவடைகின்றது. தென்னிந்தியத் திரையுலகத்தின் தீவிரமான எதிர்ப்புக்கு மத்தியிலும் இலங்கையில் இவ்விழா நடைபெறுகின்றது. விழா நடைபெறாமல் தடுப்பதற்குத் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலிக்கவில்லை. பல முன்னணி இந்தி நட்சத்திரங்களின் பங்கு பற்றுதலுடன் இன்று மூன்றாவது நாளாக இவ்விழா சிறப்பாக நடைபெறுகின்றது. இலங்கையில் அய்ஃபா விழாவை நடத்தக் கூடாது என் றும் இங்கு நடைபெற்றால் இந்திய நட்சத்திரங்கள் அதில் பங்குபற்றக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்த தமிழ்த் திரையுலக முக்கியஸ்தர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக வன்முறை சார்ந்த செயற்பாடுகளி லும் ஈடுபட்டார்கள். இலங்கைத் தமிழருடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் செயல் என்று தங்கள் நடவடிக்கைக்கு இவர்கள் அர்த்தம் கற்பிக்கின்ற போதிலும் அது இலங்கைத் தமிழருக்கு எவ்விதத்திலும் நன்மை பயக்காத செயல். உண்மையில் இது இலங்கைத் தமிழருக்குப் பாதகமான செயற்பாடு.  (மேலும்) 05.06.10

_______________________________________________________________________________________________________

முல்லைத்தீவில் 170 குடும்பங்களை சேர்ந்த 529 பேர் 4 பி.செ. பிரிவுகளில் மீள்குடியேற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த 170 குடும்பங்களைச் சேர்ந்த 529 பேர் நேற்று (4) கரைந்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள 4 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றப்பட்டனர். இவர்கள் வவுனியா மெனிக்பாம் நலன்புரி முகாமில் இருந்து விசேட பஸ்கள் மூலம் அழைத்துவரப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக திட்டப்பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார். இவர்கள் முள்ளியவளை வடக்கு, தண்ணீர்ஊற்று மேற்கு, செல்வபுரம், மற்றும் புடரிகுடா ஆகிய பகுதிகளில் நேற்று மீள்குடியேற்றப்பட்டனர். இவர்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் என்பன வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, முள்ளிய வளைவடக்கு மற்றும் ஒட்டுச்சுட்டான் பகுதிகளில் அடுத்த வாரம் ஆயிரம் பேர் மீள்குடியேற்றப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவர்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் உள்ள தமது உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். இதேவேளை, கடந்த இரண்டாம் திகதி 1218 பேர் 17கிராமசேவகர் பிரிவில் மீள்குடியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________________________________________

ஜனாதிபதி தலைமையிலான குழு தமிழ் கூட்டமைப்புடன் திங்களன்று பேச்சு

sambandanrajapaksha-7 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் எதிர்வரும் ஏழாம் திகதி திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அரசாங்க வட்டாரங் களிலிருந்து நம்பகமாகத் தெரியவருகிறது. பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு இன்று வெள்ளிக்கிழமை கூட்டமைப்புக்கு அனுப்பப்படும் சாத்தியம் உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டார். இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருதாகவும் அவர் தெரிவித்தார். அரசாங்க தரப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முக்கிய அமைச்சர்கள் சிலரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார்கள் என்றும் சிரேஷ்ட அமைச்சர் கூறினார். மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என அறிய முடிகின்றது. (மேலும்) 05.06.10

_______________________________________________________________________________________________________

யுத்தம் வென்றெடுக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு சந்திரிகா பாராட்டு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் வென்றெடுக்கப்பட்டமைக்கு காரணமாக இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் ஏனையவர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க பாராட்டு தெரிவித்துள்ளார். எனினும், நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு எவ்வித முனைப்பும் எடுக்கப்படாமை வருத்தமளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நாடு அனைத்து இன மக்களுக்கும் உரித்தானதாகும். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஆயிரக்கணக்கான வருடங்களாக அவர்களும் பாடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இவ்வாறானதொரு நிலைமையில் ஏனைய இனத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டியது அவசியமானதென முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் சகல மக்களும் ஒரே விதமாக நோக்கப்பட வேண்டும் எனவும், அனைவரினது உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்த வெற்றி என்ற கேக் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு உண்ண வேண்டியது எனவும், தனித்து உண்ணக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

_______________________________________________________________________________________________________

புலிகள் அமைப்பிற்கான தடையுத்தரவு நீடிக்கப்படும்- பிரிட்டிஷ் அரசு

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடையுத்தரவு தொடர்ந்து நீடிக்கப்படும் என பிரிட்டிஷ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடையுத்தரவை நீடிப்பது தொடர்பிலான உறுதிமொழி இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹய்ஸினால் பிரதமர் டி.எம்.ஜயரட்னவுக்கு வழங்கப்பட்டது. பிரதமர் அலுவலகத்தில் டி.எம்.ஜயரட்னவை சந்தித்த பீற்றர் ஹய்ஸ், இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர உறவை வளர்த்துக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.

_______________________________________________________________________________________________________

முன்னாள் சிறுவர் போராளிகளைச் சந்தித்த பின்பே தமிழ் ரசிகர்கள், நண்பர்களுக்குப் பதிலளிப்பேன் விவேக் ஓபராய் கூறுகிறார்.

 பிரபலங்கள் பங்கேற்காததால் ஆரம்பம் களைகட்டவில்லை கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட அகடமி விருது (இஃபா) விழாவானது திரைப்படத்துறைக்கு வைபவத்தின் தன்மையை குறைந்தளவிலேயே கொண்டிருப்பதாகத் தென்படுகிறது. கடந்த இரு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பலனாக இஃபா விருது வழங்கும் விழா நேற்று ஆரம்பமாகியுள்ளது.ஆனாலும் இஃபா விருது வழங்கும் விழாவில் அதன் தூதுவரான ஹிந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அமிதாப்பச்சன், ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்வார்களென கூறப்பட்டு தற்பொழுது அவர்கள் கலந்து கொள்ளாத நிலையில் விழா ஆரம்பமாகியுள்ளது.கொழும்பு சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டுடன் இஃபா நிகழ்வுகள் ஆரம்பமாகின.ஆனால், இந்தஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பிரபல ஹிந்தி நடிகர் விவேக் ஓபராயோ அல்லது ஏனைய திரை நட்சத்திரங்களோ திரைப்படத்துறை பற்றி அதிக கருத்துகளை வெளியிட்டிருக்கவில்லை. இந்நிலையில், அங்கு கருத்துத் தெரிவித்த விவேக் ஓபராய் முன்னாள் சிறுவர் போராளிகளையும் போரினால் பாதிக்கப்பட்ட ஏனைய சிறுவர்களையும் சந்தித்த பின்னரே தனது தமிழ் ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் பதிலளிக்க முடியுமெனத் தெரிவித்தார். (மேலும்) 04.06.10

_______________________________________________________________________________________________________

தென்னிந்திய திரைப்படங்களை தடை செய்ய வேண்டியதில்லை

 இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐஃபா) அமிதாப்பச்சன் உட்பட முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ளாததன் காரணமாக தென்னிந்தியத் திரைப்படங்களை இலங்கையில் திரையிடுவதை தடை செய்ய வேண்டிய அவசியமில்லையெனத் தெரிவிக்கும் அரசாங்கம், சர்வதேச ரீதியில் புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் தூண்டுதலின் பேரிலேயே தென்னிந்தியாவில் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லையென்றும் அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,தென்னிந்தியாவில் எமக்கு எதிராக எவ்வாறான எதிர்ப்புகள் எழுந்தாலும் இந்திய மத்திய அரசாங்கம் எமது நாட்டுக்கு சாதாகமான ரீதியிலேயே தீர்மானங்களை மேற்கொள்கின்றது.அண்மையில் மேலும் இரண்டு வருடங்களுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக பிரகடனப்படுத்தியமை இதற்கு சிறந்த உதாரணமாகும். எனவே எந்த ரீதியில் அழுத்தங்கள் வந்த போதிலும் ஐஃபா நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறுகிறது. இதன் மூலம் புலம்பெயர்ந்தவர்களின் முயற்சி தோல்வி கண்டுள்ளது.

_______________________________________________________________________________________________________

மாவோயிஸ்டுகளை ஆதரிப்பதற்காக என்னை கைது செய்தாலும் கவலை இல்லை -எழுத்தாளர் அருந்ததிராய் பேச்சு

arundhati-roy-with-moistமாவோயிஸ்டுகளை ஆதரிப்பதற்காக என்னை கைது செய்தாலும் கவலை இல்லை என்று எழுத்தாளர் அருந்ததிராய் கூறினார்,பிரபல ஆங்கில எழுத்தாளரான அருந்ததிராய் (வயது 48). பிரசித்தி பெற்ற புக்கர் பரிசு பெற்றவர். சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர். இந்தியாவிலிருந்து காஷ்மீரை பிரித்து கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்து காங்கிரசிடமிருந்தும், பாரதீய ஜனதாவிடமிருந்தும் ஒரே நேரத்தில் வாங்கிக் கட்டிக்கொண்டவர் இவர். இப்போது மறுபடியும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். இம்முறை அவர் குரல் கொடுத்திருப்பது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி மனித வேட்டை நடத்தி வரும் மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கு ஆதரவாகத்தான். மும்பையில், ஜனநாயகத்தை காக்கிற உரிமைக்குழுவின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், மக்கள் மீதான யுத்தம் என்ற தலைப்பில் அருந்ததி ராய் ஆற்றிய உரையின் போது கூறியதாவது:-தற்போதைய சூழலில் காந்தீயக் கொள்கைகள் வெற்றி பெறுவதில்லை. எனவேதான் நக்சலைட்டுகள் (மாவோயிஸ்டுகள்) ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் நான் வன்முறையை ஆதரிப்பவள் அல்ல. அதேபோன்றுதான் அரசியல் ஆய்வு அடிப்படையிலான கடுமையான கொடுஞ்செயல்களுக்கு முழுமையாக எதிரானவள். (மேலும்) 04.06.10

_______________________________________________________________________________________________________

karun-japan-eமண்முனை பால நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்த ஜப்பானியத்தூதுவர் உறுதி

மண்முனை பாலத்தின் நிர்மாணப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப் படவுள்ளன. மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் குனியோ தகாஹாஷி ஆகியோருக்கு இடையில் இன்று மாலை மீள்குடியேற்ற அமைச்சு அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.இச்சந்தர்ப்பத்தில பிரதி அமைச்சர் கருனா அம்மானின் வேண்டுகோளுக்கிணங்க விவசாயிகளின் நலன் கருதி ஜப்பானியத் தூதுவர் உறுதியளித்த்தமை குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________________________________________

இஸ்ரேலின் போக்கிரித்தனம்

israel-2மத்திய கிழக்கில் இஸ்ரேலின் முற்றுகைக்குள்ளாகியிருக்கும் காசா பள்ளத்தாக்கு மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற மனிதாபிமானப் பணியாளர்களின் கப்பல் அணி மீது கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சட்டங்களை மதிக்காத இஸ்ரேலிய அரசாங்கத்தின் சுபாவத்தை உலகிற்கு மீண்டும் ஒருதடவை நினைவூட்டுவதாக அமைந்திருக்கிறது. சர்வதேசக்கடல் எல்லையில் வைத்து மட்டுமீறிய படைப்பலத்தைப் பிரயோகித்து இஸ்ரேலிய கமாண்டோக்கள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் சரியான எண்ணிக்கை இன்னமும் தெரியவரவில்லை. ஆரம்பத்தில் வெளியான தகவல்களின்படி பலியானதாக நம்பப்படும் 20 க்கும் அதிகமானவர்களில் பலர் துருக்கியைச் சேர்ந்த மனிதாபிமானப் பணியாளர்கள் என்று தெரியவந்திருக்கிறது. கப்பல்களும் அவற்றின் பயணிகளும் பொருட்களும் சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலியப் படைகளினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் காசா பாலஸ்தீனியர்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்று விநியோகிக்கும் பணிகள் பற்றிய செய்திகளைத் திரட்டுவதற்காக அக்கப்பல்களில் உலகின் பல பாகங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்களும் பயணம் செய்தனர். அவர்களும் கூட இஸ்ரேலியர்களினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.  (மேலும்) 04.06.10

_______________________________________________________________________________________________________

ஊடக தர்மத்தை உயர்த்திப் பிடிப்போம்

கருத்தரங்கு

விடயம்:   ‘ஊடக தர்மமும் தமிழ் ஊடகங்களும்

காலம்:   யூன் 06, 2010 ஞாயிற்றுக்கிழமை, காலை 9.00 – 12.00 வரை

இடம்:   ஸ்காபரோ சிவிக் சென்ரர்  (மக்கோவன் - எல்ஸ்மெயர்)

சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் பலர் கருத்துரைகள் வழங்குவர். தமிழ் ஊடகத்துறையில் நடுநிலைமை, நேர்மை, கருத்துச் சுதந்திரம் என்பவற்றை வேண்டி நிற்கும் அனைவரையும் கலந்து கொண்டு, தங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன்  அழைக்கின்றோம்.

கனடிய தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம் - demovizhippu @hotmail.com

_______________________________________________________________________________________________________

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கென வவுனியாவில் பாடசாலை அமைக்க இந்திய நடிகர் ஒபரோய் முடிவு

indi-cricketஇலங்கையில் யுத்தத்தால் தமது இள¨மைப் பருவம் சூறையாடப்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கென வவுனியாவில் பாடசாலையொன்றை அமைக்கவுள்ளதாக பிரபல இந்திய நடிகர் விவேக் ஒபரோய் தெரிவித்தார். சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நிறைவுபெற்றதும் வவுனியாவுக்குச் சென்று இப்பாடசாலையை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவு ள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக ஆரம்பமாகியது. முதலாம் நாளான நேற்றுக் காலை கொழும்பு, கொள்ளுப்பிட்டி சினமன்கார்டன் ஹோட்டலில் சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே விவேக் ஒபரோய் இதனைத் தெரிவித்தார். தமிழ் நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காய் தனது தந்தையின் ஒபரோய் பவுண்டேஷன் மூலம் உதவக்கிடைத்ததை நினைவு கூர்ந்த விவேக் ஒபரோய், அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டுக்கும் தனக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.  (மேலும்) 04.06.10

_______________________________________________________________________________________________________

இஃபா: முன்னணி நடிகர்கள் புறக்கணிப்பு

-பி.பி.சி. செய்தி

iifaifaமும்பையை தலைமையகமாகக் கொண்ட இந்திய திரைப்படத்துறை கடந்த பத்து வருடமாக தமது திரைப்பட விழாக்களை உலகெங்கும் உள்ள நகரங்களில் நடத்தி வருகின்றது. தொடர்ச்சியாக நடத்தப்படும் இந்தத் திரைப்பட விருது வழங்கும் வைபவங்களை ஏற்பாடு செய்வது இஃபா என்று அழைக்கப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் அமைப்பாகும். இந்த வருடத்துக்கான அந்த அமைப்பின் விழா இலங்கையில் வியாழக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நடக்கிறது. உண்மையில் இந்திய துணைக்கண்டத்தில் இந்த அமைப்பின் விருது வழங்கும் விழா நடத்தப்படுவதும் இதுதான் முதல் தடவையாகும். போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்த விழா ஒரு ஊக்கமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், சில முன்னணி இந்திய திரைப்பட நட்சத்திரங்கள் இந்த விழாவை பகிஸ்கரித்துள்ளமை, அதற்கு ஒரு பெரும் அடியாக பார்க்கப்படுகின்றது. இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் பலர் விழாவுக்காக இலங்கையில் வந்து இறங்கியிருக்கிறார்கள். ஆனால், சென்னையை தளமாக கொண்ட தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்கள் இதனை முற்றாக பகிஸ்கரித்திருக்கிறார்கள். (மேலும்) 04.06.10

_______________________________________________________________________________________________________

இலங்கை தொடர்பான விவரணச் சித்திரத்தை வாபஸ் பெறுமாறு என்.டி. ரி.வி.யிடம் கோரிக்கை: புதுடில்லியிலுள்ள உயர்ஸ்தானிகர் காரியவசம் வலியுறுத்தல்

Ndtvகே.என்.யூ.வின் பேராசிரியர் சென்னோய்,முகாம்களில் 36 இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார். முட்கம்பி வேலிக்குள் இருப்பதாக கூறியுள்ளார். இது முற்றிலும் தவறானதாகும். 30 ஆயிரம் பேர் மட்டுமே இடம்பெயர்ந்தோருக்கான நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளனர். அங்கு அவர்கள் சுதந்திரமாக நடமாட முடியும். மீதமானோர் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். 6இலட்சம் என்ற தொகை கண்டுபிடிக்கப்பட்ட பொய்யாகும். நிலைவரம் தொடர்பான அவரின் விபரிப்பானது காலம் கடந்ததும் கல்விமான்களுக்குரிய நேர்மைக்குப் புறம்பானதாகும் என்று உயர்ஸ்தானிகர் எழுதியுள்ளார். திரைப்படத்துறையைச் சேர்ந்த சீமான் நன்கறியப்பட்ட புலிகளின் ஆதரவாளராவார். புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தபோதும் அவரின் கருத்துக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் அரசாங்கத்தைப் பற்றி தரக்குறைவாகப் பேசியுள்ளார் என்றும் காரியவசத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், விவரணச்சித்திரத்தில் காட்டப்பட்டவை சில மூன்று வருடங்கள் பழமையானவை என்றும் அவர் கூறியுள்ளார். விவரணச்சித்திர செய்தியை உடனடியாக வாபஸ் பெறுமாறும் தொலைக்காட்சியில் பேட்டியளிக்க தனக்கு அனுமதியளிக்குமாறும் இந்த விடயங்கள் குறித்து எழுப்பப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க முடியுமெனவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். (மேலும்) 03.06.10

_______________________________________________________________________________________________________

வன்னி சிறுவர்க்காக களமிறங்கும் இந்தி திரையுலகத்தினரும் கிரிக்கெட் வீரர்களும்

indi-cricketவன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக நிதி திரட்டும் வகையில் இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் யுனிசெப் நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து கிரிக்கட் போட்டியொன்றினை ஏற்பாடு செய்துள்ளன. ஐஃபா சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் கலந்துகொண்டுள்ள நடிகர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் இந்த போட்டியி ப்ங்குபற்றுகிறார்கள். இது தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இந்தி நடிகர் விவேக் ஒபராய் மற்றும் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார ஆகியோர் கலந்துகொண்டுள்ளதை படத்தில் காணலாம். கொழும்பில் நடைபெறும் சர்வதேச இந்தியத் திரைப்பட அகடமி விருது (இஃபா) வழங்கும் விழாவுடன் இணைந்து நடத்தப்படும் கிரிக்கெட் காட்சிப் போட்டி மூலம் கிடைக்கும் பணம் வடக்கில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை, குறிப்பாக முன்னாள் சிறுவர் போராளிகளை சமூகங்களுடன் மீள ஒருங்கிணைக்கும் நடவடிக்கைக்கே பயன்படுத்தப்படுமென யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பிலிப் டியூவல் தெரிவித்தார். (மேலும்) 03.06.10

_______________________________________________________________________________________________________

தமிழ் தேசியக் கூட்டமைப்பு  இருப்பதைப் பிடிக்காமல் பறப்பதை பிடிக்க ஏன் முயற்சிக்கவேண்டும்.

02.06.2010 தாயகக்குரல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது அபிவிருத்தியை முதன்மைப்படுத்தி  வடமாகணசபை தேர்தலில் போட்டியிட எடுத்த முடிவுக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஒரு காரணமாக இருக்கலாம். மாகாண சபைக்கு 13ஆவது அரசியல் திருத்தத்தின்மூலம் கொடுக்கப்பட்ட அதிகாரங்களில் முக்கியமானவை காணி அதிகாரமும், பொலிஸ் அதிகாரமுமாகும். இதில் பொலிஸ் அதிகாரம் மாகாண சபைக்கு கொடுக்கக்கூடாது எனவும் அது மத்திய அரசிடமே இருக்கவேண்டும் எனவும் அண்மையில் ரைம்ஸ் ஒவ் இந்தியாவுக்கு  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அளித்திருந்த பேட்டியில் கூறியுள்ளார். இதன் பின்னர்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபையில் போட்டியிடுவது பற்றி அறிவித்திருக்கிறது என்பதை கவனிக்கவேண்டும். எதிர்வரும் 8ம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றையும் எடுத்து செல்கிறார். அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை இந்தியாவிடம் சமர்ப்பிக்கப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் செய்திகளின்படி இலங்கை இனப்பிரச்சினையை தீர்க்க இரண்டாவது முறையாகவும் அரசாங்கமும்  தமிழ் தரப்பும் இந்தியாவின் உதவியையே நாடியுள்ளனர் என்பது தெளிவாகிறது. (மேலும்) 03.06.10

_______________________________________________________________________________________________________

காஸா பகுதியில் துருக்கி கப்பல் மீதான இஸ்ரேலின் தாக்குதல்; இலங்கை கண்டனம்

காஸாவை நோக்கிச் சென்ற உதவி நிவாரணக் கப்பல்களின் மீது இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் சம்பவத்தின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் இலங்கை அசரசு தனது அனுதாபத்தினையு வெளியிட்டுள்ளது. காஸாவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற துருக்கி நாட்டு உதவிக் கப்பல்கள் மீது கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய கமாண்டோப் படையினர் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாகியதுடன் மெலும் பலர் படுகாயமடைந்தனர். பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதிக்கு துருக்கியை சேர்ந்த 6 கப்பல்களில் உதவி பொருட்களை ஏற்றிச் செல்லப்பட்டன. இந்நிலையில் அந்த கப்பல்களில் சுமார் 600பேர் வரையில் பயணித்துள்ளனர். இந்நிலையிலேயே இஸ்ரேலின் கப்பற்படை கமாண்டோ பிரிவினர் அக்கப்பல்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________________________________________

பிரிட்டனில் துப்பாக்கிச் சூடு : ஐந்து பேர் பலி

லண்டன் : பிரிட்டனில் டாக்சி டிரைவர் கண்மூடித்தனமாக சுட்டதில்ஐந்து பேர் பலியாயினர். 25 பேர் காயமடைந்துள்ளனர். பிரிட்டனின் வடமேற்கு பகுதியில் உள்ளது லேக் மாநிலம். இங்குள்ள கும்பிரியா மாவட்டத்தில் வொயிட்ஹெவன் பகுதியில் உள்ள ட்யூக் தெருவில் டெர்ரிக் பேர்டு(52) என்ற டாக்சி டிரைவர் நேற்று, துப்பாக்கியால் பலரை சுட்டு காயப்படுத்தியுள்ளான். டெர்ரிக் பேர்டு சுட்டதில் ஐந்து பேர் பலியாயினர். சம்பவ இடத்திலிருந்து போலீசார் துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர். டெர்ரிக் பேர்டு வந்த கார், சாலையோரத்தில் அனாதையாக கிடக்கிறது. எனவே, டெர்ரிக் பேர்டு நடந்து சென்றிருக்க வேண்டும் என சந்தேகிக்கும் போலீசார், அவனை தீவிரமாக தேடி வருகின்றனர். ஹெலிகாப்டர்களும், அவனை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வொயிட்ஹெவன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ளவர்கள் வெளியே வரவேண்டாம், கதவை மூடிக்கொண்டு வீட்டுக்குள் இருக்கும் படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். டெர்ரிக் பேர்டு சுட்டதில் இன்னும் பலர் இறந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள அணுசக்தி நிலையத்தின் பிரதான வாயில்கள் மூடப்பட்டுள்ளன. ஷிப்டு முடிந்த தொழிலாளர்களும் தொழிற்சாலைக்குள்ளேயே தங்கியிருக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

_______________________________________________________________________________________________________

ஜனாதிபதியுடன் பேசத் தயார்-சம்பந்தர்

- பி.பி.சி

sampantharஇனப்பிரச்சினை தீர்வுத் திட்டம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக உள்ளதாக அதன் நாடாளுமன்ற குழுவின் தலைவர் இரா சம்பந்தர் கூறுகிறார்.இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அவர்களுடன் தான் இது தொடர்பில் பேச்சு நடத்தியதகவும் அவர் கூறுகிறார். பேராசிரியர் பீரிஸுடனான சந்திப்பின் போது, அரசியல் தீர்வு தொடர்பாகவும் ஒரு ஆரம்ப முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது எனவும் சம்பந்தர் தெரிவிக்கிறார். இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது என்றாலும், இரு வாரங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை அவரை சந்திப்பதற்கான அழைப்பு அரச தரப்பிலிருந்து வெளிவரவில்லை என்றும் சம்பந்தர் கூறுகிறார். இலங்கை வெளியுறவு அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில், தற்போது தகவல்களை வெளியிடுவது பொருத்தமாக இருக்காது என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.  (மேலும்) 03.06.10

_______________________________________________________________________________________________________

புலி முக்கியஸ்தர் ஒருவரின் கீழ் செயற்பட்டு வந்த கொள்ளை கூட்டத்தை சேர்ந்த 6 சிங்களவர்கள் கைது

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்தர் ஒருவரின் கீழ் செயற்பட்டுவந்த கொள்ளைக் கூட்டமொன்றின் சிங்கள உறுப்பினர்கள் ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இராஜாங்கனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மேற்படி உறுப்பினர்களில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் கடற்படை வீரர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மேற்படி புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்தரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்தே இந்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரீ - 56 ரக துப்பாக்கியொன்று, இரு மகசின்கள் மற்றும் 60 துப்பாக்கி ரவைகள் போன்றனவும் கைப்பற்றப்பட்டுள்ளன்ன. மேற்படி ரீ - 56 ரக துப்பாக்கியானது கடந்த 2003ஆம் ஆண்டு மன்னார் பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல் போனது என அடயாளம் காணப்பட்டுள்ளது என்று இராஜாங்கனை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

_______________________________________________________________________________________________________

தமிழர் போராட்டம் கருணாநிதியை நம்பி ஆரம்பிக்கப்பட்டதல்ல : பேராசிரியர் சிவத்தம்பி

 sivathamby"இலங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டம் தமிழக முதல்வர் மு.கருணாநிதியை நம்பி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இது எங்களுடைய போராட்டம். இந்தப்போராட்டத்தை நாங்களே நாடி, நாங்களே வெல்ல வேண்டும்" என யாழ். பல்கலைக் கழகத் தகைநிலை பேராசிரியரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கக் குழுவுக்குத் தலைமை வகிப்பவருமான கா.சிவத்தம்பி தெரிவித்தார். இந்தியா, கோவையில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பாகவும் அங்கு பேசப்படவுள்ள இலங்கை விடயங்கள் பற்றியும் அறிந்துகொள்ள பேராசிரியர் கா.சிவத்தம்பியை அவரது இல்லத்தில் சந்தித்தோம். இந்த மாநாட்டுக்குச் செல்ல வேண்டாம் என சில தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துவருவது தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். "கலைஞர் கருணாநிதி ஈழப்பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதற்காக அங்கு போகக் கூடாது எனச் சொல்வது தவறு. இன்னொருவர் எமக்கு உதவி செய்யவில்லை என்பது இங்கு பிரச்சினையல்ல. இதனை நான் தமிழகத்திலும் சொல்வேன்"என அவர் மேலும் கூறினார். 

_______________________________________________________________________________________________________

முல்லை, கிளிநொச்சி பகுதிகளுக்கு அமைச்சர் பசில், முத்துசிவலிங்கம் விஜயம் :அபிவிருத்தி திட்டங்கள், மீள் குடியேற்றம் பற்றி நேரில் ஆராய்வு

mullaitivuவடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அமைச்சருடன் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் மற்றும் உயரதிகாரிகள் பலரும் இவ்விஜயத்தில் பங்கேற்றதுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்களுடனும் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர். நேற்றுக் காலை கொழும்பிலிருந்து விசேட ஹெலிகொப்டர் மூலம் வவுனியாவைச் சென்றடைந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் வவுனியாவில் வவுனியா மாவட்டச் செயலாளரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். அதனை யடுத்து வவுனியா மாவட்டச் செயலாளர் திருமதி சார்ள்ஸ¤டன் நெடுங்கேணிப் பகுதிக்குச் சென்றுள்ள அமைச்சர் நெடுங்கேணிப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ‘என்ரிப்’ திட்டத்தையும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிட்டுள்ளதுடன் ‘என்ரிப்’ திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள கமநல சேவைகள் திணைக்கள அலுவலகத்திற்கான அடிக்கல்லையும் நாட்டிவைத்துள்ளார்.  (மேலும்) 03.06.10

_______________________________________________________________________________________________________

360 குடும்பங்களைச் சேர்ந்த 930 பேர் நேற்று முல்லைத்தீவில் மீள்குடியேற்றம்: முள்ளியவளையில் நாளை 710 பேர் மீள் குடியமர்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த 360 குடும்பங்களைச் சேர்ந்த 930 பேர் நேற்று (2) கனிக்கேணி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மீள் குடியேற்றப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக திட்டப் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் கூறினார். இவர்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பா ணம் ஆகிய பகுதிகளிலுள்ள தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்த தாகவும் விசேட பஸ்கள் மூலம் இவர்கள் நேற்று சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்கள், தற்காலிக வீடுகள் அமைப்பதற் கான கூரைத் தகடுகள், உபகரணங்கள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் இடம்பெற்ற போது சமுகமளிக்காத ஒரு தொகுதியினரும் நேற்று தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, முள்ளியவளை, வடக்கு பகுதியில் 245 குடும்பங்களைச் சேர்ந்த 710 பேர் நாளை (4) மீள் குடியேற்றப்பட உள்ளதாகவும் திட்டப் பணிப்பாளர் கூறினார். இவர்கள் வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் இருந்து விசேட பஸ் மூலம் அழைத்துவரப்படவுள்ளனர். இதேவேளை, ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள இரு கிராமசேவகர் பிரிவுகளில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதோடு இங்கும் விரைவில் மீள்குடியேற்றம் இடம்பெற உள்ளது.

_______________________________________________________________________________________________________

துருக்கி-இஸ்ரேல் மோதல் முற்றுகிறது

பி.பி.சி

மத்திய கிழக்கின் காசா பகுதிக்கு உதவி நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் தொடரணி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், அதிலிருந்த நான்கு துருக்கிய செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டது துருக்கியில் தேசிய உணர்வுகளை பெருமளவில் தூண்டிவிட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, இஸ்ரேலுடனான அனைத்து இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என துருக்கிய நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. துருக்கியை ஆளும் நீதி மற்றும் வளர்ச்சிக்கான கட்சியின் சில உறுப்பினர்கள் இஸ்ரேல் மீது இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் முகமான அறிக்கையை கோரினார்கள். இதில் இஸ்ரேலுடன் துருக்கிக்கு இருக்கும் குறிப்பிடத்தக்க இராணுவ மற்றும் வர்த்தக உறவுகளும் அடங்கும். இந்த உறவுகளை உறைநிலையில் வைக்க வேண்டும் என அவர்கள் விரும்பினர். ஆனால், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமோ இந்த உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற அளவிலேயே இருந்தது. (மேலும்) 03.06.10

_______________________________________________________________________________________________________

சர்வதேச இந்திய திரைப்படவிழா இன்று கோலாகல ஆரம்பம்: கொழும்பில் விஷேட பாதுகாப்பு:110 நாடுகளில் 600 மில்லியன் மக்கள் கண்டுகளிக்க ஏற்பாடு

பல மாதங்களாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சர்வதேச இந்தியத் திரைப்பட விழா இன்று ஆரம்பமாகின்றது. இந்தியத் திரைப்படக் கலைஞர்களையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும் கெளரவிக்கும் முகமாக வருடா வருடம் நடத்தப்படும் இவ்விழாவை நடத்துவதற்கென இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டது. 11 சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை நடத்துவதற்கு தென்னாபிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அவுஸ்திரேலியா, தென் கொரியா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டு இலங்கை இந்த வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது. இன்று இலங்கையில் ஆரம்பமாகும் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நாளை மறுதினம் 5ஆம் திகதி விருது வழங்கும் விழாவுடன் நிறைவடைகின்றது. இன்று மாலை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நவநாகரிக ஆடை அலங்காரக்காட்சி நடைபெறுகின்றது. இலங்கையின் டைமக்ஸ் கார்மென்ஸின் ‘அவராத்தி’ படைப்புகள் இங்கு அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளன. (மேலும்) 03.06.10

_______________________________________________________________________________________________________

தீர்வு முயற்சியை முன்னெடுக்க வாய்ப்பான சந்தர்ப்பம்

இனப் பிரச்சினைக்கான தீர்வு பேச்சுவார்த்தை மூலமே சாத்தியமாகும் என்பது இப்போது சந் தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆயுதப் போராட்டத்தின் மூலம் தீர்வு காண்பதற் காக மேற்கொள்ளப்பட்ட சிறுபிள்ளைத்தனமான முய ற்சி பேரழிவுகளுக்கு வழிவகுத்தது தான் மிச்சம். ஆயுதப் போராட்டத்தின் தோல்வி பேச்சுவார்த்தை யைத் தவிர வேறு வழி இல்லை என்பதை உறுதிப் படுத்துகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்த பின் இனப்பிரச்சினையின் தீர்வுக்காக உரு ப்படியான கருத்துப் பரிமாறல் இடம்பெறவில்லை என்றுதான் கூற வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முதலாவது பதவிக் காலத்திலேயே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை நியமித்தார். இது ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாறல் இடம்பெறுவதற்கேற்ற அமைப்பு. ஆனால் கூடுதலான தமிழ்ப் பிரதிநிதிகளைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இக் குழுவின் செயற்பாடுகளைப் புறக்கணித்த நிலையில் ஆரோக்கியமான கருத்துப் பரிமாறல் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பம் தவறிப் போனது. (மேலும்) 03.06.10

_______________________________________________________________________________________________________

கொழும்பு - கட்டுநாயக்காவுக்கு இடையில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று ஆரம்பம்

airport-1Airport railகொழும்பு - கட்டுநாயக்காவுக்கான துரிதகதி எல்லைப் புகையிரத சேவை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவினால் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கட்டுநாயக்காவிலிருந்து கொழும்புக்கான இன்றைய பயணத்தில் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம உட்பட அரச அதிகாரிகள் பலரும் கந்துகொண்டு கொண்டனர். கொழும்பில் நடைபெறவுள்ள ஐஃபா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கை வருகின்ற அந்நாட்டு நட்சத்திரங்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து குறித்த புகையிரதத்தினூடாகவே வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு - கட்டுநாயக்காவுக்கான "எயார்போர்ட் எக்ஸ்பிரஸ்" எனும் துரிதகதி புகையிரத சேவை, இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பில் நடைபெறவுள்ள ஐஃபா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கை வருகின்ற அந்நாட்டு நட்சத்திரங்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தியிருந்து கொழும்பை வந்தடையும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரயிலை படத்தில் காணலாம்.

_______________________________________________________________________________________________________

கோரிக்கையை ஏற்றது மலேசியா.. உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர் தமிழர்கள்!

கோலாலம்பூர்: கைதிகளாக நடத்தாமல் அகதிகளாக நடத்த வேண்டும் என்றும், நாடு கடத்தாமல், வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோரி கடந்த எட்டு நாட்களாக மலேசியாவில் உண்ணாவிரதமிருந்தனர் ஈழத் தமிழர்கள். இவர்களின் கோரிக்கையை ஏற்பதாக மலேசிய அரசு அறிவித்துள்ளதால் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளனர். இலங்கையிலிருந்து தப்பி கப்பல் மூலம் வேறு நாட்டுக்கு அடைக்கலம் தேடிப் புறப்பட்டனர் இலங்கைத் தமிழர்கள் 75 பேர். மலேசியா அருகே சென்றுகொண்டிருந்தபோது, இந்தக் கப்பல் பழுதடைந்துவிட்டது. அப்போது மலேசிய கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் இவர்கள் 75 பேரும். தங்களை கைதிகளாக வைத்திராமல், அகதிகளாக ஏற்கும் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் மலேசியா அரசு, இவர்கள் அனைவரையும் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்போவதாக கூறப்பட்டதால், கடந்த 8 நாட்களாக உண்ணாவிரதமிருந்து வந்தனர். உண்ணாவிரதம் இருந்த ஈழத் தமிழர்களை காப்பாற்ற பல்வேறு உலக தமிழ் அமைப்புகளுக்கும், கோரிக்கை விடுக்கப்பட்டது. பினாங்கு துணை முதல்வர் ராமசாமி, ஐ.நா.வின் அகதிகளுக்கான அதிகாரிகளை சந்தித்து, ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தார். உள்துறை அமைச்சகத்திடமும் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தினார். (மேலும்) 02.06.10

_______________________________________________________________________________________________________

இஸ்ரேல் மீது சர்வதேச கண்டனம்

- பி.பி.சி

காசாவை நோக்கிச் சென்ற உதவி நிவாரணக் கப்பல்களின் மீது இஸ்ரேலிய கமாண்டோக்கள் நடத்திய தாக்குதல் குறித்து பக்கசார்பற்ற விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டுமென்று ஐநாவின் பாதுகாப்புச் சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்று கூறியுள்ளது. அந்த விசாரணை உடனடியாகவும், பக்கசார்பற்றதாகவும், நம்பகத்தன்மை மிக்கதாகவும், வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்று பாதுகாப்புச் சபையின் அறிக்கை கூறுகிறது. இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான சர்வதேச கண்டனம் எழுந்துள்ள அதேவேளை காசா மீதான தடைகளை இஸ்ரேல் நீக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இரவு முழுவதும் பாதுகாப்புச் சபையின் கூட்டம் பல மணி நேரம் விவாதித்ததை அடுத்தே இந்த தீர்மானம் வெளியாகியுள்ளது. பாதுகாப்புச் சபையின் தற்போதைய தலைவரான மெக்சிகோ நாட்டுத் தூதுவர் கிளவுட் ஹெல்லர் இது குறித்துக் கூறுகையில்.''காசாவை நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல்களின் தொடரணி மீது சர்வதேச கடற்பரப்பில் வைத்து இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பலவந்தம் காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்தும், காயமடைந்தவர்கள் குறித்தும் பாதுகாப்புச் சபை தனது ஆழமான கவலைகளை வெளியிடுகின்றது'' என்று கூறினார். (மேலும்) 02.06.10

_______________________________________________________________________________________________________

ஜெர்மனி அதிபர் ராஜிநாமா

horst ஜெர்மனி அதிபர் ஹோர்ஸ்ட் கோஹ்லர் (67) திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். ஆப்கானிஸ்தான் மீதான ஜெர்மனியின் நடவடிக்கை குறித்து ஹோர்ஸ்ட் தெரிவித்த கருத்தால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அவர் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. தனது ராஜிநாமா குறித்து செய்தியாளர்களிடம் ஹோர்ஸ்ட் கூறியது: ஆப்கானிஸ்தான் குறித்து நான் தெரிவித்த கருத்துகள், தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், எனக்கு இதுவரை ஆதரவளித்து வந்த மக்களுக்கு இந்த வேளையில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது இந்த முடிவு குறித்து பிரதமர் ஏஞ்சலா மெர்கலுக்கும் தெரிவித்துவிட்டேன். ஜெர்மனி அதிபராக பதவிவகித்ததை எனக்கு கிடைத்த கெற்ரவமாக கருதுகிறேன் என்று உணர்ச்சிப் பொங்க கூறினார் ஹோர்ஸ்ட். முன்னதாக, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட ஜெர்மனி போன்ற நாடுகள், பிற நாடுகளுடன் ஸ்திரமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடன் நிலவும் ஸ்திரமற்ற உறவுகள், வர்த்தகம், வேலைவாய்ப்பு, நாட்டின் வருவாய் உள்ளிட்டவற்றில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என ஹோர்ஸ்ட் கருத்துத் தெரிவித்திருந்தார்.

_____________________________________________________________________________________________________

Let’s mobilise on the international level against the blockade and massacres of Zionism!

israelThe Israeli Zionism brutally attacked the aid ships that departed from different countries with 700 people aboard with the aim of solidarity with the Palestinian people and of breaking the blockade that has condemned the Palestinian people to lack of food and medicine. The Israeli air forces committed a massacre in the international seas. This massacre attack that was carried out in the international seas revealed the unlimited aggression of Zionism to the entire world. The Zionist Israel showed once more the deadlock of the Zionist occupation with its unlimited intolerance towards any little attempt of breaking the blockade which is one of the basic elements of its policy of occupation and annihilation in Palestine. At the same time, it has been seen once more how flagrantly Israel has been acting due to the unlimited support of the imperialist forces. Zionist minister Ayalon has claimed that the assault had developed as a "defence against the lynching attempt". He has repeated their hard-nosed attitude towards the massacres against Palestinian children, the attitude that shows rabidness against the right to resistance of the oppressed and he claimed that the breaking of the blockade would result in opening the way for gun-smuggling and that would cause hundreds of "civilian" deaths.  (Read) 02.06.10

______________________________________________________________________________________________________

30 ஆயிரம் பேர் மட்டுமே இன்னும் முகாம்களில் வருட இறுதிக்குள் அவர்களும் சொந்த இடங்களில்

மீள்குடியேற்றத்தின் முன்னேற்றம், திருப்தி தருவதாக ‘டைம்ஸ் ஒப் இந்தியா’வுக்கு வழங்கிய பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

mahindaஅரசாங்கத்தின் மீள்குடியேற்ற திட்டத்தின் முன்னேற்றம் திருப்தியளிப்பதாக இந் தியாவின் ‘டைம்ஸ் ஒப் இந்தியா’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முகாம்களில் இருந்த 3 இலட்சம் பேரின் எண்ணிக்கை இப்போது 30 ஆயிரமாக குறைந்துள்ளது. இவ்வருட இறுதிக்குள் பெரும்பாலான இடங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விடும். அப்போது முகாம்களில் உள்ள அனைவருமே தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ அந்த போட்டியின் போது குறிப்பிட்டார்.  புலி இயக்கத்துக்குள் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அது தோல்வியடைந் ததற்கான காரணம் தெளிவாகவே உள்ளது. அது தன்னைத்தான் அழித்துக்கொள்ளும் பாதையிலேயே பயணித்தது. தனி ஈழம் என்ற அவர்களது கோரிக்கை எப்போதுமே கேள்விக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது. நாம் அதனை அனுமதித்திருக்க முடியாது. எனினும் முக்கியமாக அவர்களது முத்திரையாக மாறி யிருந்த வன்முறையும் இரத்தக் களரியும் நிறுத்தப்பட வேண்டிī