a_Pen

முதற்பக்கம்

ஆனந்தசங்கரி

ஈ.பி.ஆர்.எல்.எப்

ஈ.பி.டி.பி

ஈரஅனல்

நெருப்பு

புளொட்

தூ

டெலோ நியூஸ் 

இலங்கைநெற் 

மீன்மகள்

 சூத்திரம்   

மகாவலி 

உண்மைகள்  

கவிமலர்

கிருத்தியம்

அலை    

 பூந்தளிர்    

 எங்கள்தேசம்

சலசலப்பு   

நோயல்நடேசன் 

வளர்பிறை  

எங்கள்பூமி 

தமிழ்யுகே   

புயல்  

புளொட்யுகே 

யாழமுஸ்லீம் 

புண்ணியாமீன் 

யவ்னா ருடே  

எஸ்.ஆர்.லெம்பட்

பஷீர்     

தமிழ்யூஎன்  

கவசங்களைதல் 

தூங்காத கண்கள்

யாழ்மண்

தமிழ்குரல்

துருவம்

தினசரி

இலங்கை முஸ்லீம்

ARRR

Asientribune

The lka academic

Tamil Week 

The Hindu

Daily News

Sunday Times

Daily Mirror

The island

The Sunday Leader

ColomboPage

Sunday Times

CNN

BBC

Newsnow

 

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.10                                                        16.01.2012

டான் தொலைக்காட்சி பார்வைகள் நிகழ்ச்சியில்‏

வெள்ளிக்கிழமை (13 - 01 - 2012) அன்று இடம்பெறும் பார்வைகள் நிகழ்ச்சியில் ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள தென்னாப்பிரிக்கா சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியாயமான ஒரு தீர்வை வலியுறுத்தாது வெறுமனே இலங்கை அரசுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபட்டிருந்தமை தொடர்பாக டான் தொலைக்காட்சி நேயர்கள் என்ன கருதுகிறார்கள் என்பது குறித்து கருத்துக் கேட்கப்படவிருக்கின்றது. parvaigal எனும் skype முகவரிக்கு நேரடியாக அழைப்பதன் மூலமாகவோ அல்லது http://www.facebook.com/groups/parvaigal/ எனும் குழுமத்தில் இணைந்து உங்கள் கருத்துக்களை எழுத்துமூலம் பதிவதன் மூலமாகவோ நீங்களும் நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளலாம். நீங்கள் பதியும் கருத்துக்கள் நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ளப்படும்.தொலைபேசியூடாக உங்கள் கருத்துக்களை பதிவுசெய்ய வெள்ளிக்கிழமை  (13 - 01 - 2012)  இலங்கை நேரம் இரவு 10.00 மணிமுதல் நீங்கள் அழைக்கலாம். (ஐரோப்பிய நேரம் 5.30 முதல் 7.30 வரை) இலங்கையில் நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி மீண்டும் ஐரோப்பிய நேரம் இரவு 10.00 மணிக்கு ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0094112667977     

_______________________________________________________________________________________________________

வவுனியா புனர்வாழ்வு முகாம் மூடப்பட்டது

பி.பி.சி

student hostelஇலங்கையின் வடக்கே வவுனியா பம்பைமடுவில் இயங்கி வந்த முன்னாள் விடுதலைப்புலிகளுக்கான புனர்வாழ்வுப் பயிற்சி நிலையம் மூடப்பட்டுள்ளதாக அரசாங்கம் வியாழனன்று அறிவித்திருக்கின்றது. யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் மாணவர் விடுதிகள் உள்ளடங்கலான கட்டிடத் தொகுதியே, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் சார்பில் இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு, இவ்வாறு புனர்வாழ்வுப் பயிற்சி நிலையமாகக் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ராஜகுரு அவர்களினால் இந்த நிலையம் இன்று வைபவரீதியாக கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் டி.பி.திசாநாயக்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான இறுதிச் சண்டைகளின் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பதினோறாயிரம் பேர் வரையில் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. இவர்களின் புனர்வாழ்வுப் பயிற்சிக்கென 24 பயிற்சி நிலையங்கள் செயற்பட்டு வந்தன. அவற்றில் பம்பைமடு புனர்வாழ்வுப் பயிற்சி முகாம் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இங்கு விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வுப் பயிற்சியளிக்கப்பட்டது.பம்பைமடு புனர்வாழ்வு நிலையம் மூடப்படுவதையடுத்து, இங்கு பயற்சி பெற்று வந்தவர்கள் தற்போது கிழக்கு மாகாணத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்கள். யுத்தம் காரணமாகத் தமது கல்வியை இழந்துள்ள அவர்களில் ஒரு பகுதியினர் உயர்கல்வி அமைச்சின் விருப்பத்திற்கமைய சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் புதிய கட்டிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு கணினி பயிற்சியளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ராஜகுரு தெரிவித்திருக்கின்றார்.

_______________________________________________________________________________________________________

புலிகள் சார்பான முத்திரை முதலாவது பாரிய தவறு: லா போஸ்ட்

தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான முத்திரைகளை அச்சடித்தமையானது பிரத்தியேக  முத்திரைகளை அச்சடிக்கும் திட்டத்தில் ஏற்பட்ட முதலாவது பாரிய தவறு என பிரெஞ்சு தபால் துறையான லா போஸ்ட் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எழுத்துமூலமாக லா போஸ்ட் மன்னிப்பு கோரியுள்ளதுடன் பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்கவிடம் லா போஸ்ட்டின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு பணிப்பாளர் பிராங்கோயிஸ் சால்வெட் மற்றும் தந்திரோபாய இ சர்வதேச பணிப்பாளர் லூயிஸ் விரிகில் ஆகியோர் நேரடியாகவும் மன்னிப்பு கோரியுள்ளதாக லா போஸ்ட் விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

_______________________________________________________________________________________________________

அறிவித்தல்

அவுஸ்திரேலியாவில் 14 வருடங்களாக வந்து கொண்டிருந்த உதயம் மாதuthayam சஞ்சிகை 2010 நிறுத்தப்பட்டது தெரிந்ததே. இதனானால ஏற்பட்ட பாரிய வெற்றிடத்தை எந்த ஒரு சஞ்சிகையும இந்த நாட்டில் நிரப்பவில்லை. இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் தென் ஆசிய மக்களை கருத்தில் கொண்டும் குறிப்பாக தமிழ் பேசுவோரின் நலம் கருதிஉதயம் அவுஸதிரேலியா என்ற பேரில் இணையத்தில வரும் தைப்பொங்கலில் இருந்து வெளி வர இருக்கிறது அரசியல், இலக்கியம், சினிமா என்பவற்றோட திருமணசேவை மரண அறிவித்தல் என்ற சமூகத் தேவைகளையும் கருத்தில் கொண்டு இந்த இணைய இதழ் வெளிவரும். வாசகர்களின் ஆதரவு வேண்டி நிற்கும்.
நொயல் நடேசன்
ஆசிரியர் குழுவிற்காக
உங்கள் ஆக்கங்களை அனுப்புவதற்கு -uthayam12@gmail.com

_______________________________________________________________________________________________________

யாழ்.பொலிஸ் நிலைய கட்டிடத்திற்கு அடிக்கல் நடப்பட்டது!

யாழ்ப்பாணம் தலைமையக புதிய பொலிஸ் நிலையக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றைய தினம் (12) அதிகாலை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதிகாலை 6.23க்கு கட்டிடத் தொகுதிக்கான தளத்தை வெட்டியதுடன் 6.44க்கு அடிக்கல்லையும் நாட்டி வைத்தார். அமைச்சர் அவர்களைத் தொடர்ந்து வடபகுதிக்கான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நீல்தளுவத்த 512வது படையணியின் கட்டளைத் தளபதி அஜித் பல்லேவல யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரால் அடிக்கற்கள் நாட்டி வைக்கப்பட்டன. 1927ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ள யாழ் பொலிஸ் நிலையம் யாழ் துரையப்பா விளையாட்டரங்கை அண்மித்த பகுதியில் செயற்பட்டு வந்த நிலையில் 1984ம் வருடம் ஏப்ரல் மாதம் 10ம் திகதி தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று அடிக்கல் நடப்பட்டுள்ள இப்புதிய கட்டிடத்திற்கு 294 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

_______________________________________________________________________________________________________

அதிகமாக தேடப்படுவோர் பட்டியலில் 15ஆவது இடத்தை வகித்த தர்மபாஸ்கரன் செல்லத்தம்பி கனடாவில் கைது

மிக அதிகமாக தேடப்பட்டு வருவோரில் 15ஆவது இடத்தை வகிப்பவரும் இலங்கையருமான தர்மபாஸ்கரன் செல்லத்தம்பி என்பவர், கனடா, ரொறன்ரோ நகர பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகள், நிறுவனமயப்பட்ட குற்றச்செயல்கள் ஆகியவற்றில் ஈடுபடுவோரைக் கொண்ட புதிய பட்டியலை கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விக் தோவ்ஸ் வெளியிடுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முனனரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, குற்றச்செயல்களில் ஈடுபட்ட 15 பேர், அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்கள் நல்ல ஆதரவு வழங்குவதாக கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விக் ரோவ்ஸ் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு கனடாவில் ஒளித்து வாழும் 42 சந்தேகநபர்களின் பெயர்களை அந்நாட்டு குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி வெளியிட்டுள்ளார்.  இந்த 42பேரும் கனடா எல்லை சேவை முகவராண்மையால் தேடப்படுவோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

_______________________________________________________________________________________________________

எல்.ரி.ரி.ஈ. மீளத்தோன்றும் சாத்தியமே இலங்கை எதிர்நோக்கும் பிரதான சவால்: கோட்டாபய

Gotabhaya_Rajapaksa1தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தோற்றும் பெறுவதற்கான சாத்தியப்பாடானது யுத்தத்தற்குப் பின்னர் நாடு எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கூறினார். இராணுவம் இந்த அச்சுறுத்தலை இனங்கண்டுள்ளதுடன் இலங்கையின் புலனாய்வு சேவைகளை பலப்படுத்தவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில்  முகாம்களை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் இலங்கை முகம்கொடுக்கும் தேசிய பாதுகாப்பு சவால்கள் எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார் "யுத்தத்தின்போது இராணுவத்தினரிடமிருந்து தப்பிய எல்.ரி.ரி.ஈ. முன்னாள் போராளிகளை எல்.ரி.ரி.ஈ. முகவர் அமைப்புகள் ஊக்குவித்து வசதிகளை அளித்து  அவ்வமைப்பை மீளத் தோன்ற செய்யக்கூடும். 11,000 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள போதிலும் 100 சதவீதம் புனர்வாழ்வு பெறாத போராளிகளும் இருக்கக்கூடும். அவர்களை இராணுவ ரீதியாக நாம் தோற்கடித்துவிட்டதனால் அனைத்தையும் நாம் மறந்துவிட முடியாது. இன்னும் அச்சுறுத்தல் உள்ளது.  சர்வதேச அமைப்புகளில் உள்ள பெரும் எண்ணிக்கையான எதிரிகள் அரசாங்கத்தை தடம்புரளச் செய்வதற்கு செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இதனால்தான் நாம் இன்னும் வலிமையான இராணுவத்தைப் பேணுகிறோம். இதனால்தான் வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்கு இராணுவத்துக்கு ஒதுக்கப்படுகிறது.  எல்.ரி.ரி.ஈ.யை இராணுவ ரீதியாக தோற்கடித்து இரண்டரை வருடங்கள் மாத்திரமே கடந்துள்ளன" என அவர்  கூறினார். (மேலும்) 12.01.12

_______________________________________________________________________________________________________

ஒரு பெண்புலியின் உண்மைக் கதை (தொடர்ச்சி) (6)

யாழ்ப்பாணக் கோட்டை காவலரணில் காவலுக்கு நிற்கும் கெரில்லாக் கவிஞர்

- டி.பி.எஸ். ஜெயராஜ்

ltte women-2தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இணைந்த பின்னர், இரண்டு சிநேகிதிகளான சேனுகாவும் நிர்மலாவும் மூத்த புலித் தலைவர் முரளியினால் மூன்று பெண்களின் தாயான ஒரு விதவையின் வீட்டில் முறைப்படி தங்க வைக்கப்பட்டனர். அந்தப் பெண்மணி எல்.ரீ.ரீ.ஈயின் அப்போதைய தொலைக்காட்சி மற்றும் புகைப்படப் பிரிவிற்கு பொறுப்பாகவிருந்த பரதன் ராஜநாயகத்தின் மாமியாராவார். பரதனின் தந்தையான ராஜநாயகம் மாஸ்டர் யாழ்ப்பாணத்தின் மதிப்புமிக்க ஒரு முற்போக்கு எண்ணமுள்ள பிரஜையாவார். அப்போது நான் தமிழ் தினசரிப் பத்திரிகையான வீரகேசரியின் நிருபராக இருந்தபடியால், எனது நண்பரும், முந்தைய தொடர்புகள் உள்ளவர்களில் ஒருவருமான ஆசிரியர் தொழிற்சங்க செயற்பாட்டாளரும், மற்றும் முன்னாள் ஜேவிபி தலைவர் ரோகண விஜேவீரவின் சகோதரருமான எச்என். பெர்ணாண்டோ அவர்களைச் சந்திப்பதற்காக, 1986ல் நான் பலமுறை திருநெல்வேலியிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்றுள்ளேன்.தோழர் எச்.என் ஜெயவர்தனா அரசாங்கம் மேற்கொண்டுவரும் கடும் நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக கொழும்பை விட்டு வெளியேறி ராஜநாயகம் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். அது சுவராஸ்யமான சம்பவங்கள் பல நடைபெற்ற காலம், ஐதேக வின் ஆட்சிக்குப் பயந்த சிங்கள முற்போக்கு வாதிகள், ”பாதி விடுதலை பெற்ற” யாழ்ப்பாணத்தை ஒரு பாதுகாப்பான சொர்க்கமாகக் கண்டுபிடித்திருந்தார்கள். வருத்தத்துக்கு உரிய வகையில் 1987ல் இந்த நிலை மாற்றமடைந்தது, குமரப்பா, புலேந்திரன்,  நளன், மற்றும் அப்துல்லா உட்பட 12 புலிகளின் மரணத்துக்கு பழிவாங்கும் விதத்தில் எல்.ரீ.ரீ.ஈ யினால், யாழ்ப்பாணத்திலிருந்த பல சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் எச். என் மற்றும் இதர தென்னிலங்கை முற்போக்குவாதிகள், இந்தோ – லங்கா சமாதான ஒப்பந்தம் காரணமாக எழுந்துள்ள சமாதான சூழல் காரணமாக தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.  (மேலும்) 12.01.12

_______________________________________________________________________________________________________

யாழ். மாநகர சபை உறுப்பினர் மீது வழங்கு தாக்கல் செய்ய தீர்மானம்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினராக முருகையா கோமான் மீது வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று புதன்கிழமை தெரிவித்தார். மனுதாரரான முருகையா கோமகன் (வயது 29) தற்போது கொழும்பு தடுப்பு காவல் சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளார். நண்பர் ஒருவர் ஊடாக சமூக சேவைகள் அமைச்சருக்கு அறிமுகமாகிய மனுதாரர், பின்னர் சமூக சேவை அமைச்சில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இதனையடுத்து இவர், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் யாழ். மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றார். பின்னர், 2010 ஆகஸட் 23ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மூவரினால் தான் கைது செய்யப்பட்டதாக அவர் மனுவில் கூறியுள்ளார். தன் மீது பயங்கரவாத செயல்ளுக்கு துணை போனதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார். புலனாய்வு பிரிவினர், தடுப்பு காவில் வைத்து தன்னை தாக்கியதாகவும் தனக்கும் எல்.ரி.ரி.ஈக்கும் இடையில் தொடர்பு இருந்ததென ஒத்துக்கொள்ளும் படி கேட்டு நெருக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மனுதாரர் தனது உரிமைகள் பல மீறப்பட்டதாகவும் எதேச்சாதிகார முறையில் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் முறையிட்டுள்ளார். இவர் மீது வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக இன்று புதன்கிழமை சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

_______________________________________________________________________________________________________

வட மாகாண தேர்தலை நடத்தி 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த கிருஷ்ணா வழிசெய்ய வேண்டும்: மனோ கணேசன்

தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வரும் வட மாகாண தேர்தலுக்கு நாள் குறிக்கும் அதேவேளை, 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்துவதற்கான வழிசமைத்துக் கொடுப்பதே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா செய்யவேண்டிய வேலையாகும். இதுவே இலங்கை  தொடர்பில் இந்தியாவின் முதல் கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும்' என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்றைய நிலைமையில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு இதுதான். வீடுகள் கட்டித் தருகிறோம், வீதிகளை நிர்மாணித்துத் தருகிறோம் என்று வழமையாக வழங்கப்படும் வாக்குறுதிகள் தமிழ் மக்களை இனிமேலும் மகிழ்ச்சிப்படுத்தாது. இதை இந்திய அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மனோ கணேசன் மேலும் கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய இன பிரச்சினைக்கு மாகாணசபை என்பதே தீர்வு என்று நான் சொல்ல வரவில்லை. அதை அரசாங்கமும் வட - கிழக்கின் தமிழ் தலைமைகளும் பேசி முடிவு  எடுக்கட்டும். தற்சமயம் தமிழ் தேசிய இனத்திற்கான தீர்வு எத்தகையது என்பது தொடர்பில் கூட்டமைப்புக்கும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையில் கருத்து பரிமாற்றம் நடைபெறுகிறது. இது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.  தீர்வு தொடர்பில்  ஜனநாயக மக்கள் முன்னணி கருத்து கூறாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிரணியில் இருக்கின்ற ஏனைய தமிழ் கட்சிகளுடன் கலந்து பேசும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. இந்நிலையில் நாம் வலிந்து சென்று எமது கருத்துகளை முன் வைக்க விரும்பவில்லை. (மேலும்)   12.01.12

_______________________________________________________________________________________________________

ராமேசுவரத்தில் ராஜபட்ச உறவினர் மீது தாக்குதல்: 7 பேர் கைது: நடேசன் மீது தாக்குதலை எதிர்த்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் !

ராnadesan1மேசுவரம், ஜன. 10: ராமேசுவரத்தில் சுவாமி தரிசனம் செய்ய வந்த இலங்கை அதிபர் ராஜபட்சவின் மைத்துனரைத் தாக்கியதாக மதிமுக, நாம் தமிழர் இயக்கத்தினர் 7 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.  இலங்கை அதிபர் ராஜபட்ச தங்கையின் கணவர் திருகுமரன் நடேசன். இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்.  இவர் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக திங்கள்கிழமை இரவு ராமேசுவரம் வந்து தங்கினார். செவ்வாய்க்கிழமை காலை நடுத்தெருவில் உள்ள புரோகிதர் வீட்டில் சிறப்பு பூஜை செய்தார்.  இதுகுறித்து தகவலறிந்த மதிமுக, நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், புரோகிதரின் வீட்டின் முன்பு திரண்டு ராஜபட்சவுக்கு எதிராக கோஷமிட்டு நடேசனுக்கு கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.  பின்னர் பூஜை முடிந்து, வீட்டில் இருந்து நடேசன் வெளியில் வந்தார். அப்போது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் நடேசன் மீது காலணி வீசித் தாக்கி, அவரது கையைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் போலீஸாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  பின்னர் கூடுதலான போலீஸார் விரைந்து வந்து மதிமுக, நாம் தமிழர் இயக்கத்தினரை அப்புறப்படுத்திவிட்டு, நடேசனை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தில் நடேசனுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.  இச்சம்பவம் குறித்து புரோகிதர் அனந்தபாலு, நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகத்திடம் புகார் கொடுத்தார். அதன்படி மதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலர் கராத்தே பழனிச்சாமி, நாம் தமிழர் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண். இளங்கோ மற்றும் மதிமுக, நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த நம்புகுமார், வெள்ளைச்சாமி, பாலு, சின்னதம்பி, திருமுருகன் ஆகிய 7 பேர் மீது 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். (மேலும்)   11.01.12

_______________________________________________________________________________________________________

திறமையற்ற அதிகாரிகள்: ஆசியாவிலேயே இந்தியா முதலிடம்

சிங்கப்பூர், ஜன.11: இந்தியாவின் ஆட்சி நிர்வாகப் பணியில் உள்ள அதிகாரிகள் ஆசியாவில் உள்ள மற்ற எந்த நாட்டைக்காட்டிலும் திறமை குறைந்தவர்களாக உள்ளனர் என ஹாங் காங் சார்ந்த அரசியல், பொருளாதார கன்சல்டன்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகளின் அரசு அமைப்பு முறை, அதிகாரிகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பது: திறமையற்ற அதிகாரிகள் உள்ள பட்டியலில் 10 புள்ளிகளுக்கு 9.21 புள்ளிகள் பெற்று இந்தியாதான் முதல் இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து வியத்நாம் (8.54), இந்தோனேசியா (8.37), பிலிப்பின்ஸ் (7.57), சீனா (7.11), மலேசியா (5.89), தென் கொரியா (5.87), ஜப்பான் (5.77), தைவான் (5.57), தாய்லாந்து (5.25), ஹாங் காங் (3.53), சிங்கப்பூர் (2.25) ஆகிய நாடுகள் வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் அந்நாடு சந்தித்து வரும் ஊழல், உள்கட்டமைப்பு பற்றாக்குறை உள்ளிட்ட முக்கியமான பிரச்னைகள் அனைத்துக்கும் அதிகாரிகளின் திறன் குறைவே காரணம். அவர்களில் பெரும்பாலானோர் மேஜைக்கு கீழ் கையூட்டு வாங்குபவர்களாகவும், தனியார் நிறுவனங்களுக்கு உதவி செய்து ஆதாயம் அடைபவர்களாகவும் இருக்கின்றனர். இதுபோன்ற அதிகாரிகளுடன் தனியார் நிறுவனங்களும் இணங்கிச் சென்று அதிக ஆதாயம் அடைகின்றன. அவர்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்தியாவில் உள்ள பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் எந்த ஒரு பிரச்னையையும் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று தீர்வு காண்பதை விடுத்து சம்பந்தப்பட்ட தரப்புடன் சமரசம் காண்பதையே விரும்புகின்றன. நீதிமன்றத்துக்கு செல்வதை முடிந்தவரை தவிர்க்கவே முயல்கின்றன. தாங்கள் எடுக்கும் முடிவு எதிர்பார்த்த பலனை கொடுக்காதபோது அதற்குத் தார்மிகப் பொறுப்பேற்கும் மனப்பக்குவமும் இந்திய அதிகாரிகளுக்கு இல்லை. தங்களது முடிவு தவறாக இருந்தாலும் அதை நியாயப்படுத்துவதில்தான் முனைப்புகாட்டுகின்றனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

_______________________________________________________________________________________________________

இந்து பத்திரி்கை ஆசிரியர் பதவியிலிருந்து என்.ராம் விலகல் !

சென்னை: இந்து ஆங்கில நாளிதழின் தலைமை ஆசியரியரான என்.ராம் அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும் இந்து பதிப்பாளர், அந்தக் குழுமத்தின் பிற பத்திரிக்கைகளான பிஸினஸ் லைன், பிரண்ட் லைன், ஸ்போர்ட்ஸ்டார் ஆகியவற்றின் ஆசிரியர் பொறுப்புகளில் இருந்தும் அவர் விலகியுள்ளார். இந்து குழுமத்தை நடத்தி வரும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட குடும்ப மோதல் காரணமாக அவர் பதவி விலகியுள்ளார். இந்து நாளிதழின் புதிய ஆசிரியராக சித்தார்த் வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கஸ்தூரி அண்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. இவர் அடுத்த வாரம் வியாழக்கிழமை இந்தப் பதவியில் அமர்வார். அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் இயக்குனராக என்.ராம் நீடிப்பார். நிறுவனத்தின் புதிய செயல் இயக்குனராக அருண் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் யுடிவி நியூஸ் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை நடத்தி வரும் பென்னட், கோஸ்மேன் அண்ட் கோ நிறுவனத்தில் பணியாற்றியவர் ஆவார். கஸ்தூரி ரங்க அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்த 12 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் (board members) மற்றும் 50 பங்குதாரர்களிடம் தான் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடையே பத்திரிக்கையை நடத்துவதிலும் யார் ஆசிரியராக இருப்பது என்பதிலும் பிரச்சனை இருந்து வந்தது. இந் நிலையில் குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களை ஆசியராகவும் செயல் இயக்குனராகவும் நியமிக்கும் முடிவுக்கு இந்த நிறுவனம் வந்தது. தீவிர இடதுசாரி சிந்தனை கொண்டவரான என்.ராம், கடந்த 8 ஆண்டுகளாக இந்து பத்திரிக்கையின் ஆசிரியராக மிகத் திறம்பட செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________________________________________

மேர்வினுக்கு எதிராக முலட்டியான பிரதேச சபையும் போர் கொடி

களனி பிரதேச சபை உறுப்பினர்கள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க முலட்டியான பிரதேச சபையும் முன்வந்துள்ளது. இது தொடர்பிலான தீர்மானம் ஒன்று முலட்டியான பிரதேச சபை உறுப்பினர் நுவன் கரன்னாகொடவினால் சபையில் முன்வைக்கப்பட்டதோடு அதனை ஆளும், எதிர்கட்சி உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகரித்துள்ளனர். இடையூறுகளுக்கு மத்தியில் மக்களுக்கு சேவை செய்ய முடியாது என முலட்டியான பிரதேச சபை உறுப்பினர் நுவன் கரன்னாகொட சுட்டிக்காட்டியுள்ளார். இன்று களனி பிரதேச சபைக்கு நேர்ந்துள்ள சம்பவம் நாளை நாட்டில் உள்ள ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கும் ஏற்படலாம் என்பதனை கருத்திற் கொண்டே தான் இந்த முடிவை எடுத்ததாக நுவன் கரன்னாகொட தெரிவித்துள்ளார்.

_______________________________________________________________________________________________________

மூன்று இலட்சம் தமிழ் மக்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியவர்கள் புலிகள்! .

 எஸ்.அருளானந்தம்

tamil-refugeesயாழ்.குடாநாட்டின் வட திசையிலுள்ள பருத்தித்துறை உள்ளிட்ட பகுதிகள் வடமராட்சி என்று அழைக்கப்படுகிறது. குடாநாட்டின் தென்புறத்தேயுள்ள சாவகச்சேரி உள்ளிட்ட பகுதிகள் தென்மராட்சி என்று அழைக்கப்படுகிறது. யாழ் குடாநாட்டையும் வன்னி உட்பட நாட்டின் பெருநிலப் பரப்பையும் இணைப்பதற்கான ஒரேயொரு தரைவழிப் பாதைதான் உண்டு. நாவற்குழியிலுள்ள தரைவழிப் பாதையே அது. நாவற்குழிப் பாலமே அது. அதனைச் செம்மணிப் பாலமென்றும் அழைப்பதுண்டு. கடலேரியொன்று யாழ் குடாநாட்டையும் நாட்டின் பெருநிலப் பரப்பையும் பிரிக்கிறது. சாவகச்சேரியிலிருந்து மறு முனையிலுள்ள சங்குப்பிட்டிக்கு வள்ளங்கள் மூலம் கடலேரியைத் தாண்டிச் செல்ல முடியும். இதனால்தான் யாழ்ப்பாணத்திலிருந்து மக்களை மிரட்டி, விரட்டிய புலிகள், தப்பிச் செல்லும் மக்களை மறுமுனையில் கொண்டு சென்று விடுவதற்கு இலவச படகுச் சேவையையும் நடத்தினர். அக்காலகட்டத்தில் 'புலிகளின் குரல்' என்ற வானொலி சேவைiயைப் புலிகள் நடத்திவந்தனர். அன்றோ அதற்குப் பின்னரோ செம்மணிப் பாலத் தகர்ப்புச் சம்பந்தமான மிரட்டலைப் 'புலிகளின் குரல்' ஒலிபரப்பவில்லை. அவர்கள் அறிவித்தபடி செம்மணிப் பாலம் தகர்க்கப்படவில்லை. ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி மாலை ஆறு மணியளவில் கண்டி வீதி மக்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. பீதியடைந்த மக்கள் கால்நடையாகவும் மாட்டு வண்டில்கள், சைக்கிள்கள் மூலமாகவும் யாழ் நகரத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்கள். கையில் அகப்பட்ட பொருட்களை மூட்டை முடிச்சுகளாகக் கட்டிக்கொண்டு மக்கள் அடித்துப் பிடித்து வெளியேறிக்கொண்டிருந்தார்கள். முந்நூறு யார்களைக் கடப்பதற்கு இரண்டு மணித்தியாலங்கள் தேவைப்பட்டன. முத்திரைச் சந்திக்கும் நாயன்மார்கட்டுக்கும் கால் மைல் இடைவெளியே இருக்கும். அன்று சில சந்தர்ப்பங்களில் இந்தத் தூரத்தைக் கடப்பதற்கு நான்கு மணி நேரங்கள் பிடித்தன. யாழ் நகரத்தை விட்டு வெளியேறாமல் தங்கியருக்கும் மக்கள் 'துரோகிகள்' என்றும், 'இராணுவத்தின் ஒற்றர்கள்' என்றும் புலிகள் மிரட்டியதால் மக்கள் பீதியடைந்திருந்தனர். (மேலும்)   11.01.12

_______________________________________________________________________________________________________

இந்தியா புலிகளை அழித்ததா?

நோர்வே அறிக்கையை முன்னிறுத்தி ஒரு மதிப்பீடு

- யதீந்திரா

IndiaTodayprabakaranபிரபாகரனின் கணிப்பில், தெற்கில் தீவிர தேசியவாதத் தலைமைத்துவம் ஒன்றின் வருகையே தனது தமிழீழக் கோட்பாட்டிற்கான நியாயத்தை வழங்கும். இது விடுதலைப் புலிகளின் அடிப்படையான அரசியல் அணுகுமுறை. இது குறித்து நோர்வேயின் அறிக்கை போதியளவு கவனம் செலுத்தியிருக்கவில்லை. பிரபாகரனின் அடிப்படையான அரசியல் அணுகுமுறை எதிரியைப் பேணிக்கொள்வதன் மூலத் தனது இலக்கிற்கான நியாத்தை உருவாக்கிக்கொள்வதாகும். ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றிருப்பின் பிரபாகரன் ஏதாவதொரு இணக்கப்பாட்டிற்கு நிச்சயம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும். அறிக்கை வெளியீட்டின்போது பேசிய ஷொல்கெய்ம் தானும் அரசாங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட மிலிந்த மொறகொடவும் இணைந்து சமஸ்டித் தீர்வு நகலொன்றை வரைந்ததாகவும் அதை விடுதலைப்புலிகளின் தத்துவ ஆசிரியர் (என அழைக்கப்பட்ட - அழுத்தம் என்னுடையது) அன்ரன் பாலசிங்கம் ஏற்றுக்கொண்டதாகவும் ஆனால் அது பிரபாகரன் பார்வைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது நிராகரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். எனவே எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பரிசீலிக்கப்போவதில்லை என்ற முடிவிலிருந்தே பிரபாகரன் தனது திட்டங்களை வகுத்திருந்தார். அத்தகையதொரு மாற்றுத் தீர்வை நோக்கிச் செல்வதற்கானதொரு புறநிர்ப்பந்தமாக ரணில் விக்கிரமசிங்க இருந்ததன் காரணமாகவே ரணிலை அரசியல்ரீதியாகக் கொலைசெய்தார். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னணியில் அரங்கேறியிருந்த விடயங்களுக்கும் தற்போது நோர்வேயின் இணக்கப்பாட்டு முயற்சிகளின் போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் விடயங்களுக்கும் இடையில் அடிப்படையிலேயே சில ஒற்றுமைகள் இருப்பதை நாம் அவதானிக்கலாம். இந்தியப் படைகள் வடகிழக்கில் நிலைகொண்டிருக்கும்வரை தன்னால் முன்னகர முடியாது என்பதை விளங்கிக் கொண்ட பிரபாகரன், (சிங்களத் தலைவரான) ரணசிங்க பிரேமதாசவுடன் கைகோத்துக்கொண்டதன் மூலம் இந்தியாவை வெளியேற்றுவதில் வெற்றி பெற்றார். இறுதியில் ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்வில், இலங்கை அனுபவம் ஒரு கரும் புள்ளியானது.  (மேலும்)   11.01.12

_______________________________________________________________________________________________________

 விவேகானந்தரின் சிலை உடைப்பு; ஹிஸ்புல்லா, பஷீர் கண்டனம்

viveganantharஆரையம்பதி பிரதேசத்தில் சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை சேதப்படுத்தப்பட்டசம்பவம் தொடர்பில் இனம் என்று பார்க்காமல் குழப்பவாதிகள் என்றே பார்க்க வேண்டும். இந்த செயலை குழப்பவாதிகளே செய்துள்ளனர். இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என உள்நாட்டு வர்த்தக கூட்டுறவு பிரதியமைச்சர் பசீர் ஷேகுதாவூத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் சிலைகள் உடைக்கப்படும் கலாசாரம் இருந்த குழப்ப நிலையும் அமைதியின்மையும் நீங்கி இன உறவு மேம்படுத்தப்பட்டு வரும் இன்றைய சூழ்நிலையில் இந்த செயலை செய்தவர்களை ஒரு இனம் என்று பார்க்காமல் குழப்பவாதிகள் என்றே பார்க்க வேண்டும். இனங்களை குழப்பும் குழப்பவாதிகளே இவ்வாறான செயல்களை செய்கின்றனர். இதற்காக ஒரு இனத்தின் மீதுபழியை போட்டு விடக்கூடாது. இஸ்லாம் ஒரு போதும் இவ்வாறான செயல்களை அங்கீகரிப்பதில்லை. சிலைகளை வணங்க வேண்டாமென்றே இஸ்லாம் கூறுகின்றதே தவிர மற்ற சமயத்தின் சிலையை உடைக்குமாறு இஸ்லாம் ஒருபோதும் கூறவில்லை. இவ்வாறான செயல்களை ஒரு இனத்தின் தலை மேல் போட்டுவிட்டு இன ஒற்றுமையை சீர்குலைக்க யாரும் முற்படக்கூடாது. இன ஒற்றுமையும் சகோதரத்துவமும் நம்மிடையே மிக முக்கியமானதாகும். சுவாமி விவேகானந்தர் உலகம் அறிந்தஒருஅறிஞர். சகல மதங்களாலும் சமய தலைவர்களாலும் மதிக்கப்பட்டஒரு பெரியார்  என்றார். இது தொடர்பில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கருத்து தெரிவிக்கையில்,இன்று அதிகாலைஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், குறித்த சிலைஅமைந்துதுள்ள இடத்திற்கு முன்னாலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இரவு வேளை கடமையாற்றிய ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். (மேலும்)   11.01.12

_______________________________________________________________________________________________________

Issue of a Personalised Stamp in Canada

Following  reports in the LTTE affiliated websites and media on the alleged issue of a personalised stamp by Canada Post Corporation promoting the LTTE’s separatist  agenda which also includes a reference to “genocideâ€, the High Commission of Sri Lanka in Canada on 3rd January 2012 sent two letters, one to Denis Lebel, MP, Minister responsible for Canada Post Corporation and the other to Mr. Deepak Chopra, President and CEO of Canada post to register Sri Lanka’s protest and expressing the deep concern of the High Commission on this matter. This issue  was also brought to the notice of the Department of Foreign Affairs and International Trade, Canada. In the said letter, the High Commission while drawing attention to the LTTE affiliated organisations and their activities in Canada, requested  Canada Post to take immediate steps to withdraw the stamp in question from circulation and to  initiate an inquiry on how such a stamp came to be  issued by  Canada Post. The letter also drew attention to the propaganda activities carried out by the front organizations of the LTTE. Mr. Deepak Chopra, President and Chief Executive Officer of Canada Post Corporation in his letter dated 9th January 2012 addressed to the High Commissioner Chitranganee Wagiswara states “I had this matter reviewed immediately upon receipt of your letter.  Please be assured that the image has never been printed by Canada Post; it is a false representation of our picture postage programme and is being fully investigated by our Security Departmentâ€.  The letter further states that the postage stamp “was not printed by our picture postage programme and is in no way part of our official philatelic programme which goes through a very careful selection process including approval by our Board of Directorâ€.

High Commission of Sri Lanka

Ottawa

January 10, 2012

_______________________________________________________________________________________________________

ஆஸி. செல்ல முயன்ற மேலும் நால்வர் கைது

 சட்டவிரோதமான முறையில் படகின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முயற்சித்த மேலும் நால்வரை தங்காலை பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் தங்காலை, அம்பாந்தோட்டை கடற்பரப்பில்வைத்து குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்டு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தங்காலை பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, கடந்த வாரம் படகு மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 14 பேரும் அவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி புரிந்த 7 பேருமாக 21 பேர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________________________________________

ராஜபக்சே உறவினர் மீது ராமேஸ்வரத்தில் தாக்குதல்

- பி.பி.சி

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேயின் சகோதரரின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிருபமா ராஜபக்சேயின் கணவர் திருக்குமரன் நடேசன் இன்று ராமேஸ்வரத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் இயக்கத்தினரால் தாக்கப்பட்டார். ஆனால் காவல்துறையினர் நடேசனைக் காப்பாற்றிவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நடேசன் மற்றும் நிருபமா ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாகவே ராமேஸ்வரம் வந்து அங்கிருக்கும் இராமநாதஸ்வாமி ஆலயத்தில் வழிபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டே அவர்களது வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்தன. இந்நிலையில் அவர்கள் திங்களன்று இராமேஸ்வரம் வந்து ஆலயத்தில் வழிபட்டிருக்கின்றனர். செவ்வாய் காலை அர்ச்சகர் ஒருவரது இல்லத்தில் நடந்த யாகத்தில் நடேசன் பங்கேற்றார். அதிபர் மஹிந்த ராஜபக்சேயின் உறவினர்கள் வந்திருப்பதாக செய்தி பரவ மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகம் மற்றும் நாம் தமிழர் இயக்கத்தைச் சார்ந்த சிலர் யாகம் நடந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கறுப்புக்கொடி வீசிய வண்ணம் முழக்கங்கள் எழுப்பினர். வெளியே வந்த நடேசனையும் தாக்கினர். சிலர் அவர் மீது செருப்புக்களையும் வீசினர். ஆனால் நிலைமை மோசமடைவத்ற்குள் அவர் வீட்டிற்குள் இழுத்துக்கொள்ளப்பட்டார். தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து பாதுகாப்பாக நடேசனை அழைத்துச்சென்றனர். ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காளிராஜ் நடேசனை தாக்க முயற்சி நடந்தது. ஆனால் அவர் காயமடையவில்லை. தக்க சமயத்தில் போலீசார் அவரைக் காப்பாற்றிவிட்டனர் என்றார். கைதுசெய்யப்பட்ட ஏழுபேரும் நீதிமன்றக்காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர். நடேசனும் நிருபமாவும் இலங்கை திரும்பிவிட்டனர்.

_______________________________________________________________________________________________________

ஆரையம்பதியில் சுவாமி விவேகானந்தரின் சிலை உடைப்பு - பிரதேசத்தில் பதற்றம்

மட்டக்களப்பு ஆரையம்பதி எல்லையில், ஆரையம்பதி எரிபொருள் நிரப்பு மையத்திற்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் முழுஉருவச்சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் காரணமாக காத்தான்குடி ஆரையம்பதி எல்லையில் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நள்ளிரவு வேளையில் விஷமிகளால் இச்சம்பவம் மேற்கொள்ளப்படடிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்

_______________________________________________________________________________________________________

சந்திரகுமார் எம்.பியின் செல்லிடத் தொலைபேசிக் கட்டணம் 300,000 ரூபா

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராகிய முருகேசு சந்திரகுமார் எம்.பியின் 2011 நவம்பர் மாதத்துக்கான செல்லிடத் தொலைபேசிக் கட்டணம் 300,000 ரூபாவரையில் அதிகரித்துக் காணப்பட்டதாக தெரியவருகின்றது. இவரது செல்லிடத் தொலைபேசி அழைப்புக்கான உத்தியோகபூர்வப் படியானது மாதமொன்றுக்கு 10,000 ரூபா மட்டுமேயாகும். இந்தக் கட்டணத்தை சந்திரகுமார் சார்பில் முதலில் செலுத்திவிட்டு அதை அவரது சம்பளத்திலிருந்து மாதாந்த தவணைக் கட்டணமாக அறவிட நாடாளுமன்ற ஆலோசனைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி முதலாவது தவணைக் கட்டணமாக 14,000 ரூபா இவரது சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சந்திரகுமார் தனது செல்லிடத் தொலைபேசியில் சர்வதேச றோமிங் வசதியை பயன்படுத்தியமையே நவம்பரில் உயர் கட்டணத்திற்கான காரணமென அறியப்படுகின்றது.

_______________________________________________________________________________________________________

புகலிட வாழ்வின் நிறைவும் வேர்களை நோக்கிய திரும்பலும்: அச்சங்கள், சவால்கள், மற்றும் நம்பிக்கைகள்

- தயாபால திரணகம

rajani_dayapala_daughterஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, வேறு எந்த அரசியல் தலைவரும் இதுவரை பெற்றிராத கட்டளைகளை நிறைவேற்றக் கூடிய உறுதியான உயரிய அரசியல் ஆதரவினை கிராமப்புற சிங்கள மக்கள் மத்தியில் பெற்றிருக்கிறார். அவரது புகழ் கணிப்பிட முடியாதது மற்றும் சமீபத்தைய உள்ளுராட்சித் தேர்தல்களின் முடிவுகள் வெளிக்காட்டுவது அவரது அரசியல் எதிர்ப்பாளர்களால் அத்தகைய புகழினை வெகு சுலபத்தில் பெற்றுவிட முடியாது என்பதையே. சந்தேகமில்லாமல் இந்தப் புகழினை அவர் பெற்றது, எல்.ரீ.ரீ.ஈ பிரிவினைவாதத்தை தோற்கடிப்பதில் அவரால் வழங்கக்கூடியதாக இருந்த அரசியல் தலைமைத்துவத்தின் காரணமாகவே. இது தொடர்ந்து இனிவரும் தலைமுறைகளிலும் நாட்டில் மிகப்பெரும் அரசியல் முக்கியத்துவத்தை வழங்கும். ராஜபக்ஸ சகோதரர்கள் நாட்டின் உயர் அரசாங்க அதிகாரத்தில் வீற்றிருக்காது இருந்திருந்தால் தமிழ் புலிகளை தோற்கடிப்பது சாத்தியப்பட்டிருக்காது. நாங்கள் விரும்பினாலோ அல்லது விரும்பாவிட்டாலோ மேற்குலகம் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகளை வலியுறுத்தி வரும்வரை, ராஜபக்ஸவின் புகழ் அதிகரித்துக் கொண்டே போவதுடன், ஜனாதிபதி ராஜபக்ஸ ஏற்கனவே அனுபவித்துவரும் ஆதரவினை உறுதிப்படுத்தவும் செய்யும். இந்தப் புகழ்கூட இனம் சம்பந்தமான உள்ளடக்கங்களுக்கு ஒரு பிரதான தடையாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, தமிழர்களின் ஜனநாயக உரிமைகள் சம்பந்தப்பட்ட அரசியல் தீர்வினை அடைவதற்காக இந்தியா மற்றும் மேற்கினூடாக தொடர்ந்தும் அழுத்தங்களைப் பிரயோகித்து வரும்வரை, அது ஸ்ரீலங்காவின் உள் விவகாரங்களில் அவைகள் செலுத்தும் அரசியல் குறுக்கீடுகளாகவே நோக்கப்படும், அதன் காரணமாக பெரும் எதிர் விளைவான ஒரு தாக்கமே உருவாகும். வெளிநாட்டு நிதியுதவி மூலம் செயற்படும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தமிழர்களின் உரிமைகளுக்காக பிரச்சாரங்களை மேற்கொள்ளும்போது அது இதில் உள்ள மற்றொரு சக்தியாக உருவெடுக்கும்.   (மேலும்)   10.01.12

_______________________________________________________________________________________________________

நோக்கங்கள் சிதைக்கப்படும் குடியேற்றங்கள்

-கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

jaffna-farmersஉதாரணமாக, முன்னர் யாழ்ப்பாணத்தில் கரணைக்கிழங்கு, வெங்காயம், மரவெள்ளிக்கிழங்கு, குரக்கன், புகையிலை, மிளகாய், இராசவள்ளிக்கிழங்கு  போன்ற பயிர்கள் சில பகுதிகளில் மிகப் பிரசித்தமான அளவுக்கு விளையும். அந்தந்தப் பிரதேச மண்ணின் மணத்தைப்போல இந்த விளைபொருட்களின் சுவையும் இருக்கும். அப்படியிருக்கும்போது இந்தப் பொருட்களைப்பற்றிய நினைவுகளும் தனி அடையாளத்துக்குரிய நினைவையும் தகுதிப் பெறுமதியையும் கொண்டிருந்தன. இவை இந்தப் பிரதேசத்தின் சூழல் அடையாளம், தொழில் முறை, பொருளாதார அடையாளம் எனப் பலவகைகளில் அமைந்திருந்தன. ஆனால், குடியிருப்புகளாக இந்தப் பிரதேசங்கள் மாறும்போது இந்தப் பிரதேசத்தின் முகமாக இருந்த தனித்துவ அடையாளங்கள் குலைந்து போகின்றன. இதைப்போலவே இன்று வன்னியில் விளைநிலங்களாக இருந்த இடங்களும் கால்நடைகள் வளர்க்கும் இடங்களாக இருந்த இடங்களும் மேய்ச்சற் தரைகளாக, நீர்நிலைகளாக, ஆற்றுப்படுகைகளாக இருந்த பகுதிகளும் மாற்றத்துக்குள்ளாகியுள்ளன. இதன்மூலம் ‘வன்னிப் பகுதியானது ஒரு பெரும் விவசாயப் பிரதேசம்’ என்றிருந்த அடையாளம் குலைந்து, சனங்களின் குடியிருப்புப் பிரதேசங்களாக மாறிவருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது இந்தப் பகுதியிலுள்ள மக்களின் தொழில் மற்றும் பொருளாதார அடிப்படைகளிலும் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன. இதைவிட, இந்தப் பிரதேசங்களின் தனித்துவ அடையாளங்களும் மாறிவிட்டன.  (மேலும்)   10.01.12

_______________________________________________________________________________________________________

யாழ்.மாநகர சபைக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல்!

யாழ் மாநகர சபைக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். யாழ் மாநகர சபை பொது சுகாதாரப் பகுதியினர் யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வடிகால்களை சிரமைப்பதில்லை எனவும் கழிவுகளை ஒழுங்காக அகற்றுவதில்லை இதன் காரணமாக டெங்கு தாக்கம் அதிகரித்து வருவதாக குற்றச் சாட்டுக்களை முன் வைத்து யாழ்ப்பாணத்து பொலிஸார் யாழ் நீதவான் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, யாழ் மாநகர சபை பொதுக்கூட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாநகரசபை நிர்வாகம் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவரும் நிலையில் யாழ் பொலிஸாரும் தற்போது குற்றச்சாட்டை முன்வைத்து நீதிமன்றில் வழக்கு பதிவு செய்துள்ளனர். குறித்த வழக்கு தொடர்பாக யாழ் மாநகர சபை நாளை யாழ் நிதவான் நீதிமன்றில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளனர்.

_______________________________________________________________________________________________________

யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மக்களின் உறுதி மற்றும் சோலைவரிப் பிரச்சினை தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்கப்படும் -

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

விசேட அமைச்சரவைப் பத்திரம் மூலம் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவின் கீழான கிராம மக்களின் உறுதி மற்றும் சோலைவரிப் பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிமொழி வழங்கினார். யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பலநூற்றுக் கணக்கான மக்கள் இன்றைய தினம் (9) அமைச்சரின் யாழ். அலுவலகத்திற்கு முன்பாக வருகைதந்து தமது பிரச்சினைகள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்த போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். அவர் மேலும் தெரிவிக்கையில் குறிப்பிட்ட கிராம மக்களது கோரிக்கைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக ஏற்கனவே துறைசார்ந்தவர்களால் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இது வியடம் தொடர்பில் அவற்றை நிறைவேற்றுவது முக்கிய கடமையாகும் எனவும் அதற்கு குறைந்தது ஒரு மாத கால அவகாசம் தேவை எனவும் தெரிவித்தார். (மேலும்)   10.01.12

_______________________________________________________________________________________________________

விடுதலைப் புலிகளின் முத்திரைகள் ஒட்டப்பட்ட கடிதங்கள் முத்திரை இன்றி விநியோகிக்கப்படும்

Prabakaran_stampதமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான சின்னங்கள் மற்றும் படங்களை கொண்டமைந்த முத்திரைகள் ஒட்டப்பட்ட கடிதங்கள், பொதிகள் இலங்கைக்கு அனுப்பப்படும் பட்சத்தல் அந்த முத்திரைகளை அகற்றிவிட்டு தபால்கள் விநியோகிக்கப்படும் என தபால் மா அதிபர் எம்.கே.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரைகளைக் கொண்ட கடிதங்கள் மற்றும் பொதிகளை கையாளும் பட்சத்தல் சர்வதேச தபால் ஒன்றியத்தின் சில விதிகளை புறக்கணிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச தபால் ஒன்றிய அங்கத்துவ நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்ட முத்திரையானது சர்வதேச நாடுகளின் தபால் சேவைகளிக்கு ஏற்றுக் கொள்ளப்படும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கும் அந்த முத்திரைகள் ஒட்டப்பட்ட கடிதங்கள் மற்றும் பொதிகள் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு. இதன் காரணமாகவே சர்வதேச தபால் ஒன்றியத்தின் சில விதிகளை புறக்கணித்து நடக்கத் இலங்கை தீர்மானித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகளின் சின்னங்கள் கொண்ட முத்திரைகள் பிரான்ஸ், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளால் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளன.

_______________________________________________________________________________________________________

சேவலும் கோழிகளும்

நடேசன்

சமிபத்தில் எனது சிங்கள நண்பியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது ‘நடேசன், எனது நண்பியின் மகன் மொனாசில்(Monash University) இரட்டை டீகிரி செய்தவர். யாழ்ப்பாணத்தில் ஒரு வருடம் படிப்பிக்க போகிறான் பெற்றோர்கள் பயப்பிடுகிறார்கள். அவர்களை சந்திக்க முடியுமா?’ என கேட்டாள். சந்தோசத்துடன அவர்களையும் அந்த இளைஞனையும் எனது கிளினிக்கு வரவளைத்து ‘யாழ்பாணத்தில எந்த பிரச்னையும் உங்கள் வராது மேலும் சென் ஜோன் பாடசாலையில் படிப்பிக்க போவது மிகவும் நல்லது. யாழ்பாணத்தில் முதன்மையான கல்லுரி. அந்த இடம் யாழ்பாணத்தின் கறுவாக்காடு. அத்துடன் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அரசாங்க அதிபரின் காரியாலம் பக்கத்தில் இருக்கிறது. அவர்களது தொடர்புகளை ஒழுங்கு செய்யலாம் என பெற்றோருக்கு சொல்லி விட்டு மெல்பேனில் எனது நண்பரும் சென் ஜோன் கல்லுரியின் பழய மாணவர்களில் ஒருவரான டாக்டர் சிவகடாச்சத்துடன் பேசி அவரது தொடர்பையும் கொடுத்தேன். அந்த இளைஞனின் சேவை மனத்தை மனமார பாராட்டினே;. இந்தமாதம் 9ம் திகதி போக இருந்த இருந்தவர்கள் மீண்டும் என்னை பெற்றோர்கள் தொடர்பு கொண்டார்கள். நான் எனது நண்பரும் சிவில் பொறியலாளராக இலண்டனில் நாப்பது வருடங்கள் கடமையாற்றிய சூரியசேகரம் தற்போது இரண்டு வருடங்களாக யாழ்பாணத்தில் சேவை செய்து வருகிறார். அவரிடம் பேசி இந்த இளைஞனை நீங்கள் பார்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். மேலும் சூரியசேகரத்தின் தொலைபேசியை அந்தப் பெற்றோரிடம் கொடுத்த போது, இப்போதுதான் எங்களுக்கு நிம்மதி என அந்த பெற்றோர எனக்கு சொன்னார்கள். இது ஒரு சிறிய விடமாக இருந்தாலும் தனது இலணடன் வாழ்வையும் குடும்பத்தையும் விட்டுப் பிரிந்த யாழ்ப்பாணத்தில் வேலை செய்யும் சூரியசேகரமும் இந்த இருபத்து மூன்று வயது சிங்கள இளைஞனும் எனது ஹீரோக்கள். இவர்களது செயல்கள்தான் மனிதம் இன்னும் வாழ்கிறது மேலும் அது இனம் மதம் மொழிக்கு அப்பாற்பட்டது என நினைக்க வைக்கிறது. குப்பைமேட்டில் கொக்கரிக்கும் சேவல்கள் போல் இருக்கும் வெளிநாட்டு தமிழர்களுக்கு இப்படி சத்தம் இடாமல் பல முட்டைகள இடும் கோழிகள் உள்ளது என்பதற்காக இந்த குறிப்பைத்தருகிறேன்.

_______________________________________________________________________________________________________

இலங்கையரை பயங்கரவாதி எனக்கூறிய நபர் மன்னிப்பு கோரினார்

பிரிட்டனிலுள்ள கடையொன்றில் பணியாற்றிய இலங்கை மற்றும் இந்திய ஊழியர்களை பயங்கரவாதிகள் எனக் கூறிய ஒருவர் நீதிமன்றில் மன்னிப்பு கோரியுள்ளார். 45 வயதான ஸ்டுவர்ட் ஜோன்ஸன் எனும் நபர் முன்னர் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்தவர். இனவாத ரீதியாக தொந்தரவு செய்தமை மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை தாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தன. கேம்பிரிட்ஜை சேர்ந்த இந்நபர் டிசெம்பர் 22 ஆம் திகதி மதுபோதையுடன் கடையொன்றுக்குள் சென்று அங்கிருந்த ஊழியர்களை பயங்கரவாதிகள் எனக்கூறியதாக வழக்குரைஞர் லோரா மார்டெல் கூறினார். "பிற்பகல் 3.30 மணிக்கு கடைக்குள் சனெ;ற சந்தேக நபர், கடை ஊழியர்கள் எந்த நாட்டிலிருந்து வந்தவர்கள் எனக் கேட்டார். அவர்களில் ஒருவர் தான் இலங்கையிலிருந்து வந்தர் எனக் கூறியபோது, அவரை தமிழ் புலி என ஜோன்ஸன் கூறியுள்ளார். அந்நபர் பேசிய விதத்தை கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தாம் பயங்கரவாதி என அழைக்கப்பட்டதாக அவர்கள் உணர்ந்தனர்" என வழக்குரைஞர் கூறினார். சந்தேக நபர் கைது செய்வதற்கு வந்த பொலிஸார் இருவரை அவர் உதைத்தாகவும் வழக்குரைஞர் மார்டெல் கூறினார். சந்தேக நபரான ஜோன்ஸன், தன்மீதான குற்றச்சாட்டை நீதிமன்றில் ஒப்புக்கொண்டதுடன் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவரின் வழக்குரைஞர்  தெரிவித்தார். ஜோன்ஸனுக்கான தண்டனை ஜனவரி 27 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

_______________________________________________________________________________________________________

வேதாளமும் முருங்கையும் -2

-அசன்-

விக்கிரமாதித்தன் யார்? இவனுக்கும் வேதாளத்துக்கும் என்ன உறவு?

இதை அறிய கதையை ஐம்பதுகளின் நடுக்கூறிட்கு பின் நோக்கி நகர்த்த வேண்டும். பனிப்புலம் என்று அயலூரவர்களாலும் பணிப்புலம் என உள்ளூரவர்களாலும் அழைக்கப்படும் பெருநிலப்பரப்பின் ஒரு சிற்றூரான காலையடியில் மருத்துவிச்சியின் உதவியின்றியே நல்லதம்பிக்கும் சின்னம்மாவுக்கும் மகனாக அவதரித்தார் விக்ரமாதித்தன். தான் குறித்த திகதிக்கு முன்னரே அவசர அவசரமாக வந்தருளியதால் தன் கணிப்பை பொய் ஆக்கிய எதிரியாகவே விக்ரமாதித்தனை மருத்துவிச்சி இன்றுவரை கருதிக்கொண்டாள். மேலும் அவன் நல்ல ஆரோக்கியமாக சிரித்துக்கொண்டே பிறந்தபடியால் பிசாசுக்கு பிறந்தவன் என்று கதையை வேறு கட்டிவிட்டாள். விக்கிரமாதித்தனுக்கு நல்லதம்பியும் சின்னம்மாவும் ஆசைஆசையாக இட்ட இயற் பெயர் பாலசிங்கம். பாலசிங்கம் தனித்திருக்கும் போதெல்லாம் தன்னுள் கதைப்பதை அவதானித்த சின்னம்மா, 'தம்பி பாலா ஆரோடை கதைக்கிறாய்?" என்று கேட்கும்போதெல்லாம் பாலசிங்கம் கொஞ்சமும் யோசியாமல் பதில் சொல்வான். வேதாளத்தோடு' என்று. பாலசிங்கம் வேதாளத்தோடு கதைக்கும் விசயத்தையும் பிசாசுக்கு பிறந்தவன் என்று மருத்துவிச்சி கட்டிய கதையையும் இணைத்து ஊரவர் அவனுக்கு விக்ரமாதித்தன் என நாமகரணம் சூடினர். பிறப்பு அத்தாட்சி பத்திரத்திலும் பாடசாலை குறிப்பேடுகளிலும் கடவுச் சீட்டிலும் மட்டுமே பாலசிங்கம் மிஞ்சி உள்ளது. எனவே நாமும் பாலசிங்கம் என்ற பெயரை மறந்துவிடுவதே நியாயமானது. (மேலும்)   10.01.12

_______________________________________________________________________________________________________

தமிழர் அறிக்கைப் போரும் ஆதங்கமும் ! அரவணைக்க முஸ்லிம்களும்!!

 எஸ்.எம்.எம்.பஷீர் 

 ”பாலதீனத்துக்கு திருப்பிச் செல்லும் இலக்கை அடைவதற்காக நாங்கள் எல்லோரும் சிலவேளைகளில் எங்களின் பற்களை இறுக்கி கடித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது” .  யாசீர் அரபாத்

இலங்கையில் நடைபெற்ற இன வன்முறைகள் சிவில் யுத்தம் காரணமாக மேற்கு நாடுகளில் புலம் பெயர்ந்த புலி எதிர்ப்பு தமிழர்கள் பலர்  இப்போது தமது புலிப் பயம் நீங்கி இலங்கைக்கு உல்லாசப் பிரயானிகளாய்    சென்று வருவதுடன் தமது முன்னைய அரசியலை அல்லது தாம் புலம் பெயர் நாட்டில் கண்டு கொண்ட , கற்றுக்  கொண்ட "ஜனநாய அரசியலை" இலங்கையிலும் செய்வதற்கு சூழல் தோன்றியுள்ளதை உணர்ந்து மீண்டும் இலங்கை அரசியல், சமூகத் தளத்தில் நுழைவதற்கு முயற்சிக்கின்றனர். இந்த புலம் பெயர் பிருகிருதிகளில் மிகச் சிலர் மீண்டும் தமது பிறந்த மண்ணுக்கு சென்று வாழ்வதையும், அங்கு அரசியல் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் விரும்புகின்றனர். இவர்களின் நியாயமான இந்த எண்ணத்திற்கும் செயலுக்கும் உண்மையில் இலங்கை மக்கள் ஆதரவளிப்பார்கள். ஆனால் நடைமுறையில் இவர்களில் சிலர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைகிறார்களா என்ற ஐயத்தையும் எழுப்புகிறது. ஏனெனில் இந்த புலம் பெயர் புத்தி ஜீவிகளில் சிலரின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் மட்டுமல்ல , அண்மைக்கால அரசியல் கருத்தோட்டமும் செயற்பாடுகளும் அத்தகைய கேள்வியை தோற்றுவிக்கிறது. புலிகளின் படு தோல்வியின் பின்னர் இலங்கையிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில்  பல புத்தி ஜீவிகளுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் வடக்கு கிழக்கில் அரசியல் சமூக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. (மேலும்)   09.01.12

_______________________________________________________________________________________________________

தினகரனுக்குள் கறுப்பு ஆடுகள் அல்ல; ஞான சூனியங்கள்! .

- எஸ்.அருளானந்தம், முன்னாள் பிரதம ஆசிரியர் - தினகரன்

லேக்ஹவுஸ் நிறுவன 'தினகரன்' பத்திரிகைக்குள் கறுப்பு ஆடுகள்' என்ற தலைப்பில் 'தேனீ' இணையத்தளத்தில் வெளிவந்த விடயதானத்தைப் பார்வையிட்டேன். அதில் விமர்சிக்கப்பட்டிருந்த இரண்டு கட்டுரைகளையும் முன்னதாகவே வாசித்தபோது அதிர்ச்சியடைந்தேன். இரண்டுமே குறுந்தேசியவாதிகளுக்கும் புலிப் பயங்கரவாதிகளின் வால்பிடிகளுக்கும் சாமரம் வீசும் கடடுரைகள் என்பதுதான் எனது கருத்தும். பச்சைப் பொய்களுடன் இனமுறுகலை ஏற்படுத்தும் பாணியிலமைந்த இந்தக் கட்டுரைகள் அரச சார்புப் பத்திரிகையான தினகரனில் வெளிவந்தமையே எனக்கு அதிரச்சியை ஏற்படுத்தியிருந்தது. தினகரனை வெளியிடும் லேக்ஹவுஸ் நிறுவனத்தில்,  1976ஆம் ஆண்டிலிருந்து 2002ஆம் ஆண்டு இறுதி வரை கடமை புரிந்தவன் நான்.  உதவி ஆசிரியராகத் தினகரனில் இணைந்து, பிரதம உதவி ஆசிரியர், செய்தி ஆசிரியர், பிரதிப் பிரதம ஆசிரியர், பிரதம ஆசிரியர் பதவிகளை படிப்படியாக வகித்தவன் என்ற வகையில் இது தொடர்பாகக் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு எனக்குண்டு. 2011 டிசம்பர் 11இல் வெளிவந்த 'நாங்கள் - நாங்களாக வாழ்வது எப்போது?', டிசம்பர் 18இல் வெளிவந்த 'TNA பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம்', டிசம்பர் 25இல் வெளியான 'தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை' ஆகிய மூன்றுமே தமிழ்பேசும் மக்களுக்குப் பிழையான தகவல்களையும் கருத்துகளையும் வழங்குகின்றன. பிரிவினைவாத சக்திகளின் தொங்கு சதைகள் வெளியிட்ட கருத்துகளே அவை. (மேலும்)   09.01.12

_______________________________________________________________________________________________________

ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி: நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு

போராட்டம் நடத்திய அ.தி.மு.க.வினர் மீதும் வழக்கு போடப்பட்டது

nakkeeran_gopalமுதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நக்கீரன் கோபால் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நக்கீரன் வாரம் இரு முறை பத்திரிகையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிட்டுள்ளதாக புகார் கூறி, அதை கண்டிக்கும் வகையில் நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். சென்னையிலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடந்தன. ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் பத்திரிகை அலுவலகம் முன்பும் ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டு, வேளச்சேரி எம்.எல்.ஏ.அசோக் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்வீச்சு சம்பவம் நடந்தது. போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. அசோக் உள்பட அ.தி.மு.க.வினரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். நக்கீரன் பத்திரிகை சார்பில் இது தொடர்பாக ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் எம்.எல்.ஏ.அசோக் உள்பட அ.தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. (மேலும்)   09.01.12

_______________________________________________________________________________________________________

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் நூற்றாண்டில் தமிழ் கூட்டமைப்பு

பி.பி.சி

ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸின் நூற்றாண்டு விழாவை தென்னாப்பிரிக்கா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடியது. ப்ளூம்பொன்டீன் நகரில் நடந்த நூற்றாண்டு விழா நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான தென்னாப்பிரிக்கர்கள் கூடியிருந்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டனர். புலம்பெயர் தமிழர்கள் அங்கம் வகிக்கும் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் விழாவில் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, உலகத் தமிழர் பேரவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸின் நூற்றாண்டு விழாவில் இலங்கை அரசாங்கம் கலந்துகொள்ளப் போவதில்லையென்று அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைக்கும் இயக்கமாக அங்கீகரித்து தமக்கு தென்னாபிரிக்கா இந்த அழைப்பை விடுத்திருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழோசையிடம் கூறினார். (மேலும்)   09.01.12

_______________________________________________________________________________________________________

தமிழ்ச்சமூகத்தின் முன்னேயிருக்கும் பாரியகடமை: கவனத்திற்கொள்ளப்படவேண்டிய ஆதரவற்ற சிறார்கள்

- கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

DSC_0207கடந்த 2011 ஆம் ஆண்டின் இறுதி வாரத்தில் மேலும் ஒரு சிறுவர் இல்லம் வன்னியில்  முல்லைத்தீவில் - திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஆண்டின் தொடக்கத்தில்  இந்த வாரம் - கிளிநொச்சியில் மேலும் ஒரு முதியோர் இல்லம் புதிதாகத்திறக்கப்படுகிறது. இது எதனைக் காட்டுகிறது? சமூகத்தில் ஆதரவற்றோரின் நிலை அதிகரித்துள்ளது. அவர்களைப்பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களைப் பராமரிக்கும் முயற்சிகள், அந்த அரும்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைத்தானே!வன்னியில் நடந்த போர் அங்கே, ஆதரவற்றோரையும் உதவி தேவைப்படுவோரையும்  பெருக்கியுள்ளது. ஆனால், இந்தத் தேவைகளுக்கான உதவிகளைச் செய்வோரை அது பெருக்கியுள்ளதா என்றால், சற்று வருத்தத்துடன்தான் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டியுள்ளது. உதவிகளும் ஆதரவும் தேவைப்படும் அளவுக்கு அவற்றைச் செய்வோரின் தொகை குறைவு. ஆதரவு தேவைப்படுவோருக்கு உதவுவதே சிறந்த பணி. தொண்டிற் சிறந்தது,  தேவைப்படுவோருக்குத் தேவைப்படும் காலத்தில் செய்யும் பணியே! எனவேதான் ‘காலத்திற் செய்யும் பணி, ஞாலத்திற் சிறந்தது’ என்று சொல்வார்கள். இடமறிந்து, நிலையறிந்து செய்யும் உதவியே பேருதவியாகும். போர் எப்போதும் வேர்களை அறுத்தெறியும். சிதைவுகளையும் அழிவுகளையும் ஏற்படுத்தும். அதிலும் நவீன போர்கள் மிக அதிகமான சேதாரங்களை ஏற்படுத்துவன.  நவீன போர்களில் அதிக சேதங்களையும் அழிவுகளையும் சந்திப்பவர்கள் பொதுமக்களே. இவர்களே, பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். போர்ப்பயிற்சியோ, பாதுகாப்புக்கான ஆயுதங்களோ இல்லாத நிலையில் இருப்பவர்களும் இவர்களே.> மட்டுமல்ல, நவீன போரானது, வெடிபொருட்களை ஆதாரப் பொருளாகக் கொண்டிருப்பதால், அதன் தாக்கம் போர்க்களத்துக்கு அப்பாலும் ஏற்படுகிறது. இதைவிடப் பொது மக்களை மையப்படுத்தி, அவர்களை இலக்கு வைத்துத் தாக்குதலை நடத்தும் போர் முறையில், மக்களுக்கே அதிக சேதமேற்படுகிறது.  (மேலும்)   08.01.12

_______________________________________________________________________________________________________

தமிழகத்தில் இருந்து இருந்து இலங்கை திரும்பும் அகதிகளுக்கு இலவச பாஸ்போர்ட்

தமிழ் நாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இலவசமாக பாஸ்போர்ட் பெற்றுக்கொடுக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தமிழ் நாட்டில் அகதிமுகாம்களிலும்இ உறவினர் வீடுகளிலுமாக சுமார் 90 ஆயிரம் இலங்கை தமிழ் அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் நாடு திரும்ப பாஸ்போர்ட் பெறுவதற்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தமிழ் நாட்டின் சென்னையிலுள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தில் இலங்கை பாஸ்போர்ட் பெறுவதற்கு இந்திய நாணயப்படி ரூ. 4 ஆயிரத்து 400 கட்டணமாக செலுத்த வேண்டும். இது இலங்கை நாணயப்படி சுமார் 10 ஆயிரம் ரூபாயாகும். எனினும் ராஜபட்சவின் ஆலோசனைக்கு ஏற்ப அவர்களுக்கு இலவச பாஸ்போர்ட் பெற்றுக்கொடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

_______________________________________________________________________________________________________

சுயநிர்ணய உரிமையும் தேசமும் - 2

தி.ஸ்ரீதரன் (சுகு)

T-SRIDARANபௌத்த சிங்கள் பேரினவாதம் எவ்வாறு சிறுபான்மையாக இருக்க் கூடிய சமூகங்களின் உரிமையை மறுக்கிறது அது அரசாக இருப்பதால் வலிமையுடன் மறுக்கிறது. சாம,பேத தான, தண்டம் எல்லாவற்றையும் பாவித்து மறுக்கிறது. ஆனால் அரசாக இல்லாத யாழ்மையவாதம் முஸ்லீம் மக்களின் பிரச்சனைகளோ அல்லது மலையக மக்களின் பிரச்சனைகளோ யாழ்ப்பாணத்தில் சமூகரீதியாக ஒடுக்கபட்டவர்களின் பிரச்சனைகளோ யாழுக்கு அப்பாலான வடக்கு கிழக்கின் பிரச்சனைகளோ இரண்டாம் பட்சமானவையாகத்தான் அணுகுகின்றன என்பது துரதிஸ்டமான உண்மையாகும் .1970களில் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தல் வடக்கு கிழக்கின் பிரச்சனை அல்ல அது யாழ்ப்பாணத்தின் பிரச்சனை. யாழ்ப்பாணம் தவிர்ந்த  பிற வடக்குகிழக்கு   மாவட்டங்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாத ஓரளவு பயனளிக்கக் கூடிய விதமாகவே இருந்தது. இனப்பிரச்சனையின் வரலாற்றைச் சொல்லும் போது பல்கலைக்கழக அனுமதியில் 1970களின் முற்பகுதியில் தரப்படுத்தலை கொணடுவந்ததை சொல்வது எவ்வளவு தூரம் பொருத்தமானது என்பது கேள்விக்குறியே. அது மிகவும் பலவீனமானது. யாழ்மையவாதம் வெறும்பிரதேசக் குறியீடு மாத்திரமல்ல. வர்க்க ஏற்றதாழ்வின் குறியீடும் அது. யுhழ்மையவாதம் தன்னை ஈழப்போராட்டத்தின் அறிவாகவும் யாழ்ப்பாணத்தில் வறுமையில் உழல்பவர்களையும்  ஏனைய பிரதேசங்களைச் சோந்தவர்களை உடல் உழைப்பாளிகளாகவும் வரிந்துகொண்டது. இது ஒருவகை வருணாச்சிரம தருமமாகும். குருதிக் கொடையை வழங்குபவர்கள் இவர்களாகவும்  சித்தாந்த வசிட்டர்களாக யாழ்மையவாதிகளும் இருக்கும் படியாகபார்த்துக் கொண்டார்கள்.  (மேலும்)   08.01.12

_______________________________________________________________________________________________________

"ஒசாமா பின்லாடன் பாகிஸ்தானில் இருந்தது எனக்கு தெரியாது' : முன்னாள் அதிபர் முஷாரப் மறுப்பு

ஜெருசலேம் : பாகிஸ்தானின் அபோதாபாத்தில், ஒசாமா பின்லாடன் தங்கியிருந்தது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என, அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மறுத்துள்ளார். இதுகுறித்து, இஸ்ரேலின் முன்னணி நாளிதழான, "ஹாவூரெட்ஸ்' என்ற பத்திரிகைக்கு, அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அபோதாபாத்தில், பின்லாடன் ஐந்தாண்டுகள் இருந்ததாகக் கூறுகின்றனர். அதாவது என் ஆட்சியில், இரு ஆண்டுகள் இருந்ததாகச் சொல்கின்றனர். ஆனால், அவர் அங்கு தான் இருந்தார் என்பது எனக்குத் தெரியாது என்பதை நான், 100 சதவீதம் உறுதியாகச் சொல்கிறேன். இவ்விவகாரத்தில், அவர் பாகிஸ்தானில் தங்கியிருந்ததற்கு உடந்தையாக சிலர் இருந்தனர் என்பதா அல்லது கண்காணிப்பில் கோட்டை விட்டார்கள் என்பதா என கேட்டால், இரண்டாவைத் தான் நான் குறிப்பிடுவேன். அவ்வாறு, கோட்டை விட்டது வெட்கக் கேடு தான். அவரது அண்டை வீட்டார் கூட அவர் யார் என தெரியாமல் தான் இருந்தனர். ஐ.எஸ்.ஐ.,க்கு கூட அவர் தட்டுப்படாமல் இருந்ததற்கு, அவர் தொலைபேசி எதுவும் பயன்படுத்தவில்லை என்பது தான் முக்கிய காரணம். அபோதாபாத் பகுதி, கோட்டை போன்ற காவற்பகுதி என மேற்குலகில் நினைக்கின்றனர். ஆனால், அவர்கள் நினைப்பது போல அபோதாபாத் ஒன்றும், பிராக் கோட்டை அல்ல. (பிராக் கோட்டை என்பது, அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள ராணுவத் தளம்). அது சுற்றுலாவுக்குரிய அமைதியான இடம். அங்கு ஓட்டல்கள், பள்ளிகள் மற்றும் கடைகள் தான் அதிகம். அதனால், அபோதாபாத் பற்றிய கதைகள் மிகைப்படுத்தப்பட்டவை. அதேபோல், பின்லாடன் வீட்டைச் சுற்றி மிகப் பெரிய சுவர்கள் இருந்ததைக் குறிப்பிடுகின்றனர். மேற்கு நாடுகளில், அதுபோல கட்டுவது என்பது வழக்கத்திற்கு மாறானதாக இருக்கலாம். ஆனால், பாகிஸ்தானில் இது சகஜம். இவ்வாறு, முஷாரப் தெரிவித்தார்.

_______________________________________________________________________________________________________

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (30)

30. ‘மார்க்சியவாதிகள்’ திசைமாறி தமிழ் தேசியவாதிகளுடன் இணைந்தமைக்கான காரணிகள்!

karthigeyanஎமது கட்சியிலிருந்து தமிழ் தேசியவாத இயக்கங்களுடைய அணிகளுக்குத் தாவியோர் பட்டியல் சற்று நீண்டது. புலிகளுடன் மட்டுமின்றி அநேகமாக எல்லா இயக்கங்களிலும் அவர்கள் இணைந்தனர் என்று கூறலாம். புளொட் இயக்கத்திலும் தோழர்கள் கரவை கந்தசாமி, அ.கௌரிகாந்தன் போன்றோர் இணைந்ததுடன் முக்கிய பொறுப்புகளிலும் இருந்தனர். அதேமாதிரி எமது கட்சியின் வட பிரதேச முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த தோழர் வீ.ஏ.கந்தசாமி உட்பட கே.சுப்பையா, எஸ்.சிவதாசன் போன்றோர் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தில் இணைந்து முக்கிய பொறுப்புகளில் இருந்து செயல்பட்டனர். (சிவதாசன் பின்னர் டக்ளஸ் தேவானந்தா ஈ.பி.ஆர்.எல்.எப்பில் இருந்து விலகி ஈ.பி.டி.பி கட்சியை ஆரம்பித்த போது அதில் சேர்ந்து, பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து அண்மையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது) முல்லைத்தீவு மாவட்டத்தில் கட்சி மற்றும் விவசாயிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த தோழர்கள் இ.வே.துரைரத்தினம், இ.விக்கினராஜா, க.கந்தசாமி போன்ற தோழர்கள் ஈரோஸ் இயக்கத்தில் இணைந்ததுடன் பாராளுமன்றத் தேர்தல்களிலும் அவ்வியக்கத்தின் சார்பாகப் போட்டியிட்டனர். நெல்லியடி – கரவெட்டி பகுதிகளைச் சேர்ந்த சில தோழர்கள் ரெலோ இயக்கத்தின் தாஸ் பிரிவுடன் தொடர்பு வைத்து வேலை செய்தனர். இதுதவிர எமது கட்சியே நேரடியாக ஆரம்பித்த ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ என்ற அமைப்பில் கட்சி சார்பாக பல தோழர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். (மேலும்)   08.01.12

_______________________________________________________________________________________________________

ஒரு இலட்சத்தைத் தாண்டியது விடைத்தாள் மீள் திருத்த விண்ணப்பங்கள்

 கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மீள் திருத்தத்திற்காக சுமார் ஓர் இலட்சம் மாணவர்கள் விண்ணப்பித் திருப்பதாகத் தெரிய வருகிறது. 011 ஆம் ஆண்டு இரண்டு இலட்சத்து 94 ஆயிரத்து 800 பேர் உயர்தரப் பரீட்சை எழுதியிருந்தனர். இவர்களில் ஓர் இலட்சத்து 42 ஆயிரம் பேர் மூன்று பாடங்களிலும்; சித்திபெற்றுள்ளனர். பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானதையடுத்து பெறுபேறுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெளியாயின. இந்நிலையில் பரீட்சார்த்திகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை விடைத்தாள் மீள்திருத்தத்திற்காக விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. மீள்திருத்தத்திற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித் ததையடுத்து விண்ணப்பிப்பதற்கான கால எல்லை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மீள்திருத்தக் கட்டணமாக மூன்று பாடங்களுக்கும்; 750 ரூபா அறவிட வேண்டும் எனவும் பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் குளறுபடிகள் ஏற்பட்டு ள்ளதாகவும் அனைத்து பெறுபேறுகளையும் நிராகரிக்க வேண்டும் என்று கோரியும் கடந்த வாரமளவில் பல்வேறு மட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.பெறுபேறுகள் குறித்து மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தங்களது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து பெறுபேறுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதியினால் விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________________________________________

75 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு விடுதலை

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் 75 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர் என புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து இவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவர் என புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜனரல் சந்தன ராஜகுரு தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 12ஆயிரம் பேர் புனர்வாழ்வு முகாம்களிற்கு உள்வாங்கப்பட்டதாகவும் அவர்களில் 11,375பேர் இதுவரையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  தற்போது புனர்வாழ்வு அமைச்சின் கீழ் 750 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களும் மிக விரைவில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படவுள்ளனர் எனவும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

_______________________________________________________________________________________________________

த.தே.கூ. தூதுக் குழு 14 ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை

 தென்னாபிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழு சுமார் 14 ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அங்கிருந்தும் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மக்களின் அரசியல் உரிமை குறித்த போராட்டம், இலங்கையில் தமிழ் மக்கள் கொண்டுள்ள அரசியல் அந்தஸ்து, இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாக அறிய முடிகிறது. குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்ஸில் குறித்தும் விரிவாக இரு பகுதியினரும் கலந்துரையாடியதாகத் தெரியவருகின்றது. இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மாநாட்டில் இந்த நாடுகள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டதாகவும் அறிய முடிந்தது. இந்த நாடுகள் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஜெனீவா மாநாட்டில் எடுக்கக்கூடும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

_______________________________________________________________________________________________________

'மார்க்கிரட் தச்சர்- ஒரு இரும்புப் பெண்மணி (சினிமா விமர்சனம்)

 Margaret Thatcher ,The Iron Lady

-  இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

Margaret-1விரைவில் நடக்கப்போகும் அமெரிக்கத் திரைப்படத் தறையின் விழாவான 'ஒஸ்கார்' மகாவிழாவிற் தெரியப்படவிருக்கும் சிறந்த படங்களில் தங்களின் படைப்பும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதற்காகக் கடந்த சிலகாலங்களாகப் பல தயாரிப்பாளர்களின் திரைப்படங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதில் மிகவும் குறிப்பிடப்படவேண்டியதும் ஆராயப்படவேண்டியதுமாக, பிரித்தானியாவின் முதற் பெண் பிரதமரான மார்க்கிரட் தச்சர் பற்றிய 'அயன்லேடி' என்ற படம் முன்னெடுக்கப் படுகிறது. இதில் மார்கரட் தச்சராக நடித்திருக்கும் அமெரிக்க நடிகை மெரில் ஸ்றீப் ஏற்கனவே இருதரம் ஒஸ்கார் பரிசுபெற்றவர், 'கிறாமர் வி கிறாமர்' என்ற படத்திற்கு 1979லும் 'சோபிஸ் சொய்ஸ்' என்ற படத்திற்கு 1982லும் ஒஸ்கார் பரிசைத்தட்டியவர். மார்கிரட் தச்சராகத் தத்ருபமாக நடித்திருக்கிறார். அவரின் நடிப்புக்கு ஒஸ்கார் கிடைப்பது பெரும்பாலும் நடக்கும். ஆனால் மார்க்கரட் தச்சர் காலத்தில் நடந்த யதார்த்த பூர்வமான அரசியல், சமுதாய விடயங்களை இப்படம் பிரதிபலிக்கிறா என்பது கேள்விக்குரிய விடயமாகும்.  இந்தப் படத்தை இயக்கியவர் பிலிடியா லொயிட் என்ற பெண்மணி. மார்க்கிரட் தச்சரை ஒரு இரும்புப்பிடியான பெண்மணியாகப் படைக்காமல் அவரை ஒரு அன்புள்ள தாயாக காதலில் உருகும் மனைவியாக. தனிமையிற் தவிக்கும் வயதுபோன மூதாட்டியாகப் படைத்ததன்மூலம், அதிகாரத்திலிருக்கும்போது உண்மையான, ஆதிக்கவெறிபிடித்த தச்சருக்கு அவர் வாழும்காலத்தில் இரண்டாவது  அவதாரம் கொடுத்து அரசியல் விவாதங்களைத் தவிர்த்திருக்கிறாரோ என்று யோசிக்கத் தூண்டுகிறது. இந்தப்படத்தைப் பார்க்கும் இளம் தலைமுலையினர் அவரை ஒரு நல்ல தாயாக, பிரித்தானியாவின் பெருமையை உலகுக்கு வலியுறுத்திய அதிமிகு சக்தி படைத்த தேசியத் தாயாகத்தான் கிரகிப்பாளர்கள். ஆனால் அவர் அரசு நடத்தியகாலத்தில் பலவிடயங்களில் நேரடி ஈடுபாடு கொண்டவர்கள், இந்தப் படம் என்ன சொல்ல வருகிறது என்று குழம்புவது தவிர்க்க முடியாத விடயம். (இந்தக் கட்டுரையும் மார்க்கிரட் தச்சர் பற்றிய கருத்துக்களும் 1970ம் ஆண்டிலிருந்து, நான், பிரித்தானிய வாழ்வின் அரசியலில் ஈடுபட்ட அனுபவங்களிலிருந்தும, ;மனித உரிமைப்ப்போராட்டங்கள் பங்குபற்றிய அனுபவங்களிலிருந்தும் பெண்ணியவாதக் கருத்க்களின் அடிப்படையிலும் சம்பந்தப்பட்டது). (மேலும்)   08.01.12

_______________________________________________________________________________________________________

மன்னார் விடத்தல் தீவில் வெடிபொருட்கள் மீட்பு

மன்னார் மாவட்டத்தில் விடத்தல் தீவு பெரியமடு காட்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடிபொருட்களை, மன்னார் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் வழங்கிய தகவலையடுத்து நேற்று இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போதே இவ் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, 60 மில்லி மீற்றர் மோட்டார் குண்டு- 14, 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டு- 1, பியூஸ் இணைப்பு- 3, சார்ஜ்ஜர்- 5, என்பன கண்டு பிடிக்கப்பட்ட ஆயுதங்களுள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

_______________________________________________________________________________________________________

நக்கீரனின் அத்துமீறலும்...அதிமுகவினரின் அராஜகமும்..! ஒரு ரிப்போர்ட்!

nakkeeranபத்திரிக்கை தர்மம் என்பதை இந்திய பத்திரிக்கைகள் எல்லாம் மீறி வெகுகாலம் ஆகிவிட்டன என்றாலும், அரசியல்வாதிகளின் கைப்பாவையாய் அவை மாறிப் போன கேவலமும் சமகாலத்தில் ஒருங்கே அரங்கேறிக் கொண்டிருப்பது இன்னமும் வேதனையான விசயம். தன்னை ஒரு புலனாய்வு வாரப்பத்திரிக்கையாய் வரிந்து காட்டிக் கொண்டிருக்கும் நக்கீரன் பத்திரிக்கைக்கு மக்கள் பிரச்சினைகளை விட தனது வியாபார பெருக்கமே முக்கியம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அதிரடி செய்திகளைத் தருகிறேன் என்ற பெயரில் இவர்கள் செய்து வரும் அட்டூழியம் ஒரு பக்கமென்றால், தங்கள் தலைவியைப் பற்றி மாட்டுக்கறி சாப்பிடும் மாமி என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு விட்டார்கள் என்பதற்காக கொலை வெறியாட்டம் நடத்தி இருக்கும் அதிமுக தொண்டர்கள் ஒரு பக்கமும் நின்று ஜனநாயகத்தினை கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கவனிக்கின்றன. பத்திரிக்கைகளை தங்கள் வசதிக்கு ஏற்றார் போல கட்டிபோட்டு வைக்கிறன. வசதியான விசயங்களை வெளியிடச் சொல்லியும், தங்களுக்கு வசதியற்ற விசயங்களை அடக்கி வாசிக்கச் சொல்லியும் அதிகாரிகளைக் கொண்டு மிரட்டி பத்திரிக்கை துறையினை முடக்கி போட்டு வைத்திருப்பதின் விளைவு விபரம் தெரியாத மக்களை, உண்மையை தெளிந்து கொள்ளாத பிரஜைகளை தேசமெங்கும் பித்தர்களாக அலைய வைத்திருக்கிறது.நக்கீரனும் அப்படித்தான் தனது வசதிக்கேற்றார் போல தனது ரசிப்புக்கும், தனக்கு கிடைக்கும் ஆதரவுக்கும் ஏற்றார் போல செய்திகளை திரித்தும், தேர்தல்களின் போது கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகளில் விளையாடியும் மக்களை மடையர்களாக வைப்பதில் தினமலர் போன்ற பத்திரிகைகளுக்கு தாங்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்று பலமுறை நிரூபித்து இருக்கிறது. (மேலும்)   08.01.12

_______________________________________________________________________________________________________

இலங்கையில் 30 லட்சம் நாய்கள்; கட்டாக்காலி நாய்களை கொல்வதற்கான தடை நீக்கம்

கட்டாக்காலி நாய்களை கொல்வது தொடர்பாக கடந்த 5 வருட காலமாக அமுலில் இருந்த தடையுத்தரவை நீக்குவதற்கு  இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. தினமும் நாய்க்கடியினால் சுமார் 2000 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதே இதற்குக் காரணம். இலங்கையின் சட்டங்கள் கட்டாக்காலி மிருகங்களை அதிகாரிகள் கொல்வதற்கு அனுமதிக்கின்றன. எனினும் மிருக உரிமைக் குழுக்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து கட்டாக்காலி மிருகங்களைக் கொல்வதை இடைநிறுத்த  2006 ஆம் ஆண்டு  ஜனாதிபதியினால் உத்தரவிடப்பட்டது. அதன்பின் நாய்களை கொல்லாமல் மலடாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும் தற்போது இலங்கையிலுள்ள நாய்களின் எண்ணிக்கை 30 லட்சமாக அதிகரித்துள்ளதுடன் இலங்கையிலுள்ள 2 கோடி மக்களின் ஆரோக்கிய பிரச்சினையாகவும் கட்டாக்காலி நாய்கள் உள்ளன.  இந்நிலையிலேயே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தொலைக்காட்சி பேட்டியொன்றில் கூறுகையில், 'எமது கொள்கை தோல்வியுற்றுள்ளது. ஓர் அரசாங்கம் என்ற வகையில் நாம் எமது முந்தைய நடைமுறையை பின்பற்றத் தீர்மானித்துள்ளோம்' என்றார்.

_______________________________________________________________________________________________________

ஊடக அறிக்கை

பாதுகாப்பான நம்பிக்கை தரும் சூழலுக்காக உழைக்க ஊடகங்கள் முன்வர வேண்டும்

-  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

douglas.0112இனம் சார்ந்து மக்களை கூருணர்ச்சிப் படுத்துவதன் மூலம் தம்மை பிரபல்யப்படுத்த முனையும் ஊடகங்களால் உயிரச்சம் கலந்த நம்பிக்கையற்ற வாழ்க்கை நிலைக்குள் எம்மக்களை தள்ளிவிட முடியுமே தவிர, எம் மக்கள் பாதுகாப்பான நம்பிக்கைதரும் ஒரு சூழலை நோக்கி நகர்வதற்கு இவை ஒருபோதும் உதவப் போவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு புதிய நம்பிக்கையுடன், புதியதொரு சூழலில் தம்மை மீளவும் நிலைப்படுத்திக் கொள்ள தேவையான நம்பிக்கையை நம் தமிழ்த் தலைமைகள் வழங்க வேண்டிய ஒரு சூழலில் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை தோற்றுவிப்பதன் மூலம் தம் வாழ்வையே வெறுமையாகவும், வெறுப்பாகவும் சிந்திக்கின்ற ஒரு நிலைமையை இந்த ஊடகங்கள் ஏற்படுத்த முனைகின்றன. குண்டு சத்தங்கள் ஒய்ந்து போயுள்ள இன்றைய இந்தச் சூழலில் முற்றிலும் மாறுபாடான புதிய சமூக நிலமையொன்றுக்குள் மக்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். யார் எமது இருப்பையும்; வாழ்வையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள் என்று நீண்டகாலமாக கூறிவந்தோமோ அவர்களது பாதுகாப்பின் கீழேயே இன்று எமது மக்கள் வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கூடவே எமக்கான வாழ்வாதார உதவிகள், அடிப்படை தேவைகளுக்காக அவர்களையே சார்ந்து வாழவேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்குள் நம் தேச விடுதலை போராட்டம் எம் மக்களை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.  (மேலும்)   07.01.12

_______________________________________________________________________________________________________

ஒரு தமிழ் பெண்புலியின் உண்மைக் கதை – (5) (தொடர்ச்சி)

சேனுகாவின் ‘கெரில்லி’ அவதாரம்: புலிகளின் மாணவ அமைப்பு (சோல்ட்) செயற்பாட்டாளர் என்பதிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ) பயிற்சியாளர் என்பது வரை

- டி.பி.எஸ்.ஜெயராஜ்

Kittu-1பொதுவாக மற்ற இயக்கங்களால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களை எல்.ரீ.ரீ.ஈயில் சேர்த்துக் கொள்வதை பிரபாகரன் விரும்பாவிட்டாலும், இந்தப் பெண்கள் விடயத்தில் ஒரு விதிவிலக்கினை அவர் மேற்கொண்டார். அவர்களுக்கு பொதுமன்னிப்பு வகையான ஒன்று வழங்கப்பட்டு எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்து ஆயுதப்பயிற்சி பெற வாய்ப்பு வழங்கப்பட்டது. நான்காவது வகையானவாகள், எல்.ரீ.ரீ.ஈயினால் கிழக்கு மாகாணத்திலும் மற்றும் வடக்கு பெருநிலப் பரப்பான வன்னியிலும் நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள். திண்டுக்கல்லில் முழு அளவிலான ஆயுதப்பயிற்சி பெற்ற முதல் தொகுதி பெண் போராளிகள் நான்கு படையணிகளாகப் பிரிக்கப்பட்டு மன்னாருக்கு அனுப்பப்பட்டர்கள். அங்கு அவர்கள் மன்னார் எல்.ரீ.ரீ.ஈ தளபதி மருசலீன் பியுசிலஸ் என்கிற விக்டரின் கட்டளைகளினதும், கட்டுப்பாட்டினதும் கீழ் வைக்கப்பட்டார்கள். இந்த நான்கு படைப்பிரிவினையும் தீபா, சுகி, ஜெயா மற்றும் அனோஜா ஆகியோர் தலைமை ஏற்றனர். திண்டுக்கல்லில் பயிற்சி பெற்ற அனைத்துப் பயிற்சிக் குழுக்களிலும் தீபா முதலாவது இடத்தை சுவீகரித்திருந்தார். விக்டரின் மரணத்தை தொடர்ந்து மன்னார் கட்டளையகம் ராதாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தப் பெண்கள் தொடர்ந்தும் ராதா மற்றும் அவரது துணைத் தளபதி சாஜஹான் ஆகயோரின் கீழேயே பணியாற்றி வந்தனர்.மார்ச் 1987ல் கிட்டு தனது வருங்கால மனைவி சிந்தியாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்புகையில் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலுக்கு அகப்பட்டு காயமடைந்ததுடன் ஒரு காலையும் இழந்திருந்தார். மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மற்றும் யாழ்ப்பாணம் தொடாந்தும் அச்சுறுத்தலுக்கு இலக்காகி வருவதைத் தொடர்ந்து, மன்னாரிலிருந்த போராளிகளில் பெரும் எண்ணிக்கையானவர்கள் ராதா மற்றும் சாஜஹான் ஆகியோருடன் சேர்ந்து யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார்கள். பெண்புலிகளும் யாழ்ப்பாணத்துக்கு இடம் பெயாந்தார்கள்.  (மேலும்) (Pdf) 07.01.12

 

முன்னைய பதிவுகள்

10years thenee-1

yarltv

Yarl TV Live

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்

சிங்களவர்கள் ஆகிய நாங்கள்

யாழ்ப்பாணத்தின் அவலம்!

பரீசில் பரிதிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்: புலிகளின் உள்ளக அதிகாரப் போராட்டம் (பகுதி-1)

பரீசில் பரிதிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்: புலிகளின் உள்ளக அதிகாரப் போராட்டம் (பகுதி-2)

ராஜீவ் கொலையாளிகளின் குற்றப் பின்னணி!

தமிழ் மக்கள் இழந்து வரும் சந்தர்ப்பங்கள்

றொபேட் பிளேக், தயவுசெய்து ஸ்ரீலங்கா மக்களுக்குப் பதில் சொல்லுங்கள் (1)

றொபேட் பிளேக், தயவுசெய்து ஸ்ரீலங்கா மக்களுக்குப் பதில் சொல்லுங்கள் (2)