|
நிவாரணக் கிராமங்களிலுள்ளோரை மீள்குடியேற்ற முடியாமல் முகாம்களில் தடுத்து வைத்திருந்தவர் பொன்சேகாவே
அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்களை மீளக் குடியமர்த்த முடியாமல் முகாம்களில் தடுத்து வைத்திருந்தவர் அப்போதைய தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவே என்று மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரணச் சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சரத் பொன்சேகா பதவியிலிருந்து விலகிய பின்னர் எந்த விதமான தடைகளும் இன்றி இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை மீளக்குடியமர்த்த முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது ஐ. தே. க. எம். பி. ரவி கருணா நாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளி க்கும் போதே அமைச்சர் ரிஷாத் பதியு தீன் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் மேலும் உரையாற்று கையில்:- சரத் பொன்சேகா தளபதியாக இரு ந்த காலத்தில் அம்பாறை மாவட்ட மக் களை அவர்களது சொந்த இடங்களுக்கு மீளக்குடியமர்த்த அனுப்பினோம். அதனை அனுமதிக்க முடியாது என்று அந்த மக்களை மீண்டும் முகாம்களுக்கு அனுப்பி வைத்தவர் சரத் பொன்சேகா. மக்களை மீளக் குடியமர்த்துவதை தடை செய்வதற்கான உத்தரவை சரத் பொன்சேகாவே அன்று படையினருக்கு விடுத்திருந்தார். இடம்பெயர்ந்த மக்களில் பெருந் தொகையானவர்கள் துரிதமாக மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். எஞ்சிய மக்களை இம்மாதம் 31ம் திகதிக்குள் மீளக் குடியமர்த்த சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். 31ம் திகதிக்குள் மீளக்குடியமர்த்தும் நோக்குடன் மிதி வெடிகள் அகற்றும் நடவடிக்கைகளும் துரிதமாக்கப்பட்டு ள்ளது. இந்த மக்களுக்கு தேவையான சகல வசதிகளும் ஆரம்ப காலம் தொடக்கம் வழங்கியுள்ளோம் என்றார்
________________________________________________________________________________________________________________
யாழ். குடா நாட்டில் முதலீட்டு வாய்ப்புகள் ஊக்குவிப்பு
யாழ். குடாநாட்டில் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிக்கும் நடவடிக்கை´களை முதலீட்டு சபை எடுத்து வருகிறது. இது தொடர்பாக முதலீட்டு சபையின் முதலீட்டு மற்றும் ஊக்குவிப்புக்கான பிரதி பணிப்பாளர் நாயகம் ஏ. எம். சி. குலசேகரவின் தலைமையிலான குழு வட பகுதியில் முதலீட்டு வாய்ப்புக்களில் ஈடுபட விரும்பும் வர்த்தக சமூகத்தினரை இன்று 5 ஆம் திகதியும் நாளை 6 ஆம் திகதியும் சந்தித்து பேசுகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள டில்கோ சிட்டி ஹோட்டலில் இந்த வர்த்தக சந்திப்புகள் இடம்பெறவுள்ளன. இதேவேளை மேற்படி முதலீட்டு சபை குழு யாழ். பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நாளை 6 ஆம் திகதியும் நாளை மறு நாள் 7 ஆம் திகதியும், யுத்தத்தினை அடுத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் முதலாவது வர்த்தக ரீதியிலான கருத்தமர்வு ஒன்றிலும் கலந்து கொள்கிறது. வட மாகாணத்தில் வர்த்தக வாய்ப்புகளில் ஈடுபட விரும்பும் வர்த்தகர்கள் யாழ். டில்கோ சிட்டி ஹோட்டலில் முதலீட்டு சபையின் தூதுக்குழுவை நேரடியாக சந்தித்து பேசலாம். அல்லது யாழ். பொது நூலகத்தில் இடம்பெறும் கருத்தமர்வில் கலந்து கொண்டு தமது வர்த்தக வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். முதலீட்டு சபை தூதுக்குழுவினரை சந்தித்து பேச விரும்பும் வர்த்தகர்கள் முதலீ டுக்கான பணிப்பாளர் எஸ். பண்டாரவை 0777915477 என்ற தொலைபேசி இலக்கத்தில் அல்லது ஊக்குவிப்புக்கான பணிப்பாளர் சி. இக்னேஷியஸை 0777915477 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இதேவேளை யாழ்ப்பாணத்தில் முதலீட்டு சபை தனது கிளையொன்றை திறக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
________________________________________________________________________________________________________________
தெற்கிலும் வடக்கிலும் உள்ள இடதுசாரி, முற்போக்கு, சக்திகளின் நெருங்கிய ஒத்துழைப்பின் மூலமே நாம் விரும்புகின்ற தேசிய ஒற்றுமையை அடைய முடியும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.
யுத்தம் தீவிரமடைந்திருந்த வேளையிலும் கூட தமிழ் பேசும் மக்களில் 61 சதவீதமானவர்கள் வடக்குக்கும் கிழக்குக்கும் வெளியே, சிங்கள மக்கள் மத்தியில் அச்சமும் சந்தேகமும் இல்லாமல் வாழ்ந்தார்கள் என்ற உண்மையை நாம் குறைவாக மதிப்பிட்டுவிடக் கூடாது.
- அரசியலமைப்பு, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டி.யூ.குணசேகர
ேசிய ஒற்றுமைக்காகவும் ஜனநாயக வழியிலான அபிவிருத்திக்காகவும் ஐக்கிய இலங்கையின் கட்டமைவுக்குள் அரசியல் தீர்வுக்காகவும் முன்வந்த இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் ஓரங்கட்டப்பட்டன. அல்லது அழிக்கப்பட்டன. மிதவாத பூர்ஷ்வா தலைவர்கள் கூட விட்டு வைக்கப்படவில்லை. மக்கள் மட்டத்திலும் முற்போக்குச் சக்திகள் மட்டத்திலும் வடக்குக்கும் தெற்கிற்கும் இடையிலான பாலம் தகர்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சி,லங்கா சமசமாஜக் கட்சி ஆகிய இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த நாமும் ஆரம்பம் முதலே தேசிய சிறுபான்மை இனங்களின் நோக்கங்களுக்காகவும் தேசிய ஒற்றுமைக்காகவும் நாட்டம் கொண்டிருந்தோம். 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காகத் தமது உயிரைக் கொடுத்தவர்கள் கூட விட்டு வைக்கப்படவில்லை. பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு துறைகளில் இருந்த எமது தலைவர்களில் 54 பேர் மக்கள் விடுதலை முன்னணியினாலும் தமிழீழ விடுதலைப்புலிகளாலும் கொல்லப்பட்டனர். அக்குரஸ்ஸ துயரச் சம்பவத்தில் எல்.ரீ.ரீ.யினருக்கு பலிக்கடாவான ஐந்து பேர் எமது கட்சியின் இளம் மாவட்டத் தலைவர்கள், இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள். (மேலும்) 05.01.2010
________________________________________________________________________________________________________________
இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையின் மாதாந்த உரையரங்கும், கலந்துரையாடலும்
விடயம் : “இலங்கை முற்போக்கு இலக்கிய எழுச்சிக்காலமும் கருத்தியலும் - என்.கே.ரகுநாதன் –- கே.டானியல் – டொமினிக் ஜீவா – நீர்வை பொன்னையன் ஆகியோரின் சிறுகதைகளை முன்னிறுத்தி ஓர் தேடல்”
உரை நிகழ்த்துபவர்: ந.ரவீந்திரன் (அழுத்கம ஆசிரிய பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர்)
தலைவர்: கலாநிதி சபா.ஜெயராசா (முன்னாள் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்)
இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 58 தர்மராம வீதி, வெள்ளவத்தை, கொழும்பு – 06 காலம்: ஜனவரி 10, 2010 – ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர். இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை.
________________________________________________________________________________________________________________
த.தே.கூட்டமைப்பினரின் முடிவு நாளை
கூட்டமைப்பினரின் முடிவு இன்றும் எட்டப்படாத நிலையில் கூட்டம் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக நாளை செவ்வாய்க்கிழமை ஆராய்ந்து முடிவினை அறிவிப்பதாக கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்ற நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடினர். கூட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பமானபோது இரு பிரதான வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் தொடர்பாக கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் எடுத்துக்கூறியுள்ளார். முதல் கட்ட கலந்துரையாடலில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனினும் மாலை 4 மணியின் பின்னர் கூட்டம் தொடர்ந்தும் நடைபெற்றது. நாளையும் கலந்துரையாடி முடிவினை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரா.சம்பந்தன் தலைமையில் நடை பெற்றற இக் கூட்டத்தில் எம்.கே.சிவாஜிலிங்கம் ,சந்திரநேரு சந்திரகாந்தன் ( தற்போது லண்டன்) ,எஸ்.ஜெயானந்தமூர்த்தி ( தற்போது லண்டன் ) த.கனகசபை (தற்போது இந்தியா ) ,சதாசிவம் கனகரத்தினம் ( தடுப்புக் காவல் ) தவிர்ந்த ஏனைய 17 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
________________________________________________________________________________________________________________
சரியான முடிவுக்கு வருவதில் எவ்வித சிரமமும் இல்லை
ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் வகிககும் முக்கியத்துவம் பற்றி அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகின்றது. முன்னைய ஜனாதிபதித் தேர்தல்களிலும் சிறுபான்மையினரின் வாக்குகள் முக்கிய பாத்திரம் வகித்த போதிலும் இந்தத் தேர்தலில் அவற்றின் முக்கியத்துவம் கூடுதலாக உணரப்படுகின்றது. சிறுபான்மையினருக்கு இந்த நாடு சொந்தமில்லை எனக் கூறியவர் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிப் பேசுவதையும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு சட்ட விரோதமானது எனத் தீர்ப்பு வழங்கியவர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று இரு மாகாணங்களினதும் இணைப்பு பற்றிப் பேசுவதையும் பார்க்கும் போது சிறுபான்மையினரது வாக்குகளின் முக்கியத்துவம் எவ்வளவுக்கு உணரப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் இந்த முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்வது மாத்திரம் போதுமானதல்ல. சிறுபான்மையின மக்களும் இதை விளங்கிக் கொண்டு சரியான முடிவுக்கு வரவேண்டும். (மேலும்) 05.01.2010
________________________________________________________________________________________________________________
கிளிநொச்சி மாவட்டத்தின் ஐந்து பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை-
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஐந்து பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியினால் நாளைதினம் இப்பாடசாலைகள் திறந்து வைக்கப்படவுள்ளன. கிளிநொச்சி கரைச்சி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஐந்து பாடசாலைகளே இவ்வாறு திறக்கப்படவுள்ளன. கிளிநொச்சி இந்து வித்தியாலயம், புனித பாத்திமா றோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலை, கனகபுரம் மகாவித்தியாலயம், புனித திரேசா வித்தியாலயம் உள்ளிட்ட ஐந்து பாடசாலைகளே நாளை திறந்து வைக்கப்படவுள்ளன. இதற்கான நிகழ்வு நாளைகாலை கிளிநொச்சி இந்து வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த கிளிநொச்சி மாவட்ட மக்கள் பூநகரி மற்றும் கரைச்சி ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இதனையடுத்தே கரைச்சி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஐந்து பாடசாலைகள் நாளை திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
________________________________________________________________________________________________________________
முல்லைத்தீவில் 12 ஆயிரம் பேர் இதுவரையில் மீளக் குடியேற்றம் - முல்லைத்தீவு அரச அதிபர் தெரிவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமையும் நாளை மறுதினம் புதன்கிழமையும் 1,200 பேர் மீளக்குடியமர்த்தப்பட வுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இதுவரை 12 ஆயிரம் பேர் முல்லைத் தீவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறி யவை வருமாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். முகாம்களிலுள்ள ஏனை யோரையும் கட்டம் கட்டமாகக் குடியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இன்று திங்கட்கிழமை ஏ 9 வீதியின் மேற்குப் பக்கமாக ஒட்டுசுட்டான் உதவி அரச அதி பர் பகுதியிலுள்ள கிராமங்களிலும் எதிர் வரும் புதன்கிழமை மாந்தை கிழக்கிலும் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். மேலும் 1,200 பேர் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சேதமடைந்த அரச கட்டடங்கள் மற்றும் வீடுகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. புனரமைக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் கட்டம் கட்டமாக மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றார்.
________________________________________________________________________________________________________________
ஜனாதிபதி தேர்தலும் இனப்பிரச்சினை எனும் மாயமான் வேட்டையும் (பாகம் 1.)
-எஸ்.எம்.எம்.பஷீர்
இப்போது இலங்கையில் ஜனாதிபதிதேர்தல் சூடுபிடித்துவருகிறது , தான் குடிக்காவிட்டால் கவிழ்த்துவிடுவோம் என்ற பாணியில் இலங்கை தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் புலிகளின் அனுதாபிகள் அடங்காத்தமிழரின் வாரிசுகள், வறட்டு தமிழ் தேசிய வாதிகள் இரண்டு சிங்களவர்களும் அடித்துக்கொண்டு சாகட்டும் என்று செயற்படுகின்ற வேலையில் , சென்ற ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு முறைமை ஒரு செய்தியை கோடிட்டு காட்டுகிறது. சென்ற தேர்தலில் பதினோரு மாவட்டங்களில் ரணிலும் மிகுதி பதினோரு மாவட்டங்களில் மகிந்தவும் வெற்றிபெற்றார்கள். சென்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச கம்பஹா, மொனராகல, காலி, அம்பாந்தோட்டை ,மாத்தறை, குருநாகல்,அனுராதபுரம், பொலன்னருவ, கேகாலை, இரத்னபுரி களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதி கூடிய வாக்குளை பெற ஏநைய 11 மாவட்டங்களான; கொழும்பு, கண்டி, மாத்தளை, நுவரேலியா, மட்டக்களப்பு,வன்னி, திகாமடுல்ல , திருகோணமலை, புத்தளம், பதுளை ஆகிய மாவட்டங்களில் ரணில் விக்ரம்சிங்ஹா அதிக வாக்குகளை பெற்றிருந்தார். இன்று பயங்கரவாதிகள் அழிக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்களிக்கும் தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா எனதை இத்தேர்தல் புலப்படுத்தப்போகிறது, மறு புறத்தில் வழமையான மாவட்ட ஆதரவுத்தளங்கள் அவ்வாறே அமையும் என ஊகிக்கமுடிகிறது. (மேலும்) 04.01.2010
________________________________________________________________________________________________________________
கிளிநொச்சியை கைப்பற்றிய ஆண்டுவிழா
கொழும்பு : விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கை ராணுவம் கிளிநொச்சி நகரை கைப்பற்றியதன், முதலாம் ஆண்டு விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக விளங்கிய கிளிநொச்சியை, கடந்தாண்டு, ஜனவரி 2ம் தேதி, இலங்கை ராணுவம் கைப்பற்றியது. விடுதலைப் புலிகள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இது அமைந்தது. இதன் முதலாம் ஆண்டு விழா, நேற்று முன்தினம் இலங்கை ராணுவத்தால் கொண்டாடப்பட்டது. புலிகளிடம் இருந்து கிளிநொச்சியை கைப்பற்றிய 180 நாட்களில், அந்த நகரத்தை சீரமைத்து, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக, இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
________________________________________________________________________________________________________________
சரத் பொன்சேகாவின் குடும்ப ஆயுதக் கம்பனியின் ஊழல், மோசடிகள்: 48 மணி நேரத்தினுள் விவாதம் நடத்த அரச தரப்பு தயார்
சரத் பொன்சேகாவின் குடும்ப ஆயுதக் கம்பனியினால் புரியப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பாக எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் தனியார் தொலைக்காட்சியொன்றில் விவாதம் நடத்த அரச தரப்பு தயாரெனவும், எதிர்க்கட்சி அதற்கு இணங்காவிடின் குறித்த ஆயுதக் கொள்வனவின்போது இடம்பெற்ற ஊழல் தொடர்பான தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப்படுமென்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்பி.யுமான விமல் வீரவன்ச நேற்று மீண்டும் சவால் விடுத்தார். மணமகனும் மணமகளும் சந்தித்துப் பேச்சு நடத்த இதுவொன்றும் மணமேடையல்ல. விவாத மேடை. இங்கு அரச தரப்பில் ஜனாதிபதி தான் விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை. அதற்கு நாம் யாரையும் நியமிப்போம். அதேபோல் எதிர்க்கட்சி சார்பாக பொன்சேகா தான் விவாதத்தில் பங்குபற்ற வேண்டுமென நாம் கோரவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா, இராணுவத் தளபதியாக இருந்தவேளை அவரது மருமகனின் பெயரில் ஆயுதக் கம்பனியொன்றை நடத்தி வந்தமை தொடர்பாக நாம் அறிந்திருந்தோம். (மேலும்) 04.01.2010
________________________________________________________________________________________________________________
பூரண அரசாங்க மரியாதைகளுடன் இன்று அமைச்சர் சந்திரசேகரனின் இறுதிக் கிரியை: தலவாக்கலைக்கு நேரில் சென்று ஜனாதிபதி இறுதி அஞ்சலி
காலஞ்சென்ற அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இன்று தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ளன. தலவாக்கலையில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் சந்திரசேகரனின் பூதவுடலுக்கு பொது மக்கள் இன்று பி. ப. ஒரு மணி வரை தமது இறுதி அஞ்சலியை செலுத்த முடியும். ஒரு மணியிலிருந்து மூன்று மணி வரை அவரது குடும்ப அங்கத்தவர்களினால் இந்து சமய முறைப்படியிலான சமயக் கிரியைகள் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து பூதவுடல் நகர சபை மைதானத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு பூரண அரச மரியாதையுடனான இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன. இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தலவாக்கலைக்கு விஜயம் செய்து தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். (மேலும்) 04.01.2010
________________________________________________________________________________________________________________
ஜனாதிபதித் தேர்தலும் சிறுபான்மை இனங்களும்!
பூ.சந்திரா
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் என்பது சிறுபான்மை இனங்களைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். வரலாற்றில் என்றும் இல்லாதவாறு தற்போது ஜே.வி.பி முதற்கொண்டு ஜனாதிபதி முறையை அமுல் செய்த யூ.என்.பி. வரை மிதமிஞ்சிய அதி்காரங்களைக் கொண்ட ஜனாதிபதி பதவியை ரத்துச் செய்ய வேண்டும் என ஓங்கிக் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளன. எனவே இன்றைய சந்தர்ப்பத்தில், சிறுபான்மை மக்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சற்று ஆழமாக நோக்க வேண்டியுள்ளது. இதுவரை காலமும் நடந்தேறிய ஜனாதிபதித் தேர்தல்களில் ஜனாதிபதி வேட்பாளர்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் தரப்பாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் திகழ்ந்ததைப் போலவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் சிறுபான்மை மக்களின் வாக்குகளே தீர்க்கமானவையாக இருக்கப் போகின்றன. (மேலும்) 03.01.2010
________________________________________________________________________________________________________________
வவுனியாவில் பொது சுகாதார பிரிவுகள்தோறும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்
வவுனியாவில் டெங்கு நோயைக்கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வடமாகாண ஆளுனர் நிதியில் இருந்து ஐந்து மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருவதாக வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழித்து துப்பரவு செய்வது குறித்து பொதுமக்கள், மாணவர்கள், திணைக்களங்கள், நிறுவனங்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், இது குறித்த பயிற்சியை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார். டெங்கு நோய் ஒழிப்பு நடவடிக்கைக்கென மாவட்டம் தழுவிய அளவில் செயலணி குழுவொன்று ஆளுனரினால் அமைக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது. இந்த செயலணி குழுவின் தலைவராக டாக்டர் ரீ.சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். டெங்கு நோயினால் இதுவரையில் வவுனியாவில் 22 பேர் உயிரிழ்ந்துள்ளதாகவும், 1100 இக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் வவுனியா பிரதேசத்தில் உள்ள 9 பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளும் 9 வலயங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றில் தகுதிவாய்ந்த அதிகாரிகள் பொறுப்பாக நியமிக்கப்பட்டு, டெங்கு நோய்த்தடுப்பு பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
________________________________________________________________________________________________________________
தீர்க்கம் மிக்க திருப்புமுனையில் தமிழர்கள் இன்று!
இது வடக்கு,கிழக்கு தமிழர் அரசியலின் புதிய அணுகு முறையாகும் புதிய தோற்றமுமாகும். இதுவரையிலும் இக்கருத்து தோட்டப்பகுதி அரசியல் தலைவர்கள் கைக்கொண்டிருந்த கருத்தியலாகவே இருந்துள்ளது. எப்போதுமே அரசுடன் ஒத்துழைத்துச் செல்வதையே தோட்டப்பகுதி அரசியல்வாதிகள் கைக்கொண்டிருந்தனர். அதை எள்ளிநகையாடி வந்தவர்கள் வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகளேயாவர். தமக்குள்ள அவசியம், உள்ள அரசுடன் நயந்து பேசி எதையும் பெறுவதல்ல, தமது பாரம்பரிய கோரிக்கைகளை வென்றெடுப்பதேயென்பதாக வடக்கு , கிழக்கின் தமிழ் அரசியல்வாதிகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கருத்து வெளிப்படுத்தி நின்றுள்ளனர். சிங்களத் தலைவர்களுடன் எந்தவொரு கொடுக்கல் வாங்கலும் இல்லையென்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால், இன்று நிலைப்பாடு முழுவதுமாக மாற்றமடைந்துள்ளது. சிங்களத் தலைவர்களுடன் இணக்கப்பாடுகளை எட்டுவதன் முக்கியத் துவத்தை இன்று வடக்குக், கிழக்கின் தமிழ்த் தலைவர்கள் தெரிவுடுத்தி வருகின்றனர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காலம் கடந்தும் தாமதத்துக்குக் காரணமாகியிருப்பதும் இந்தச் சிக்கலேயாகும். தாம் சிங்களத் தலைவர்களுள் யாரைத் தேர்ந்தேடுப்பது என்ற சிக்கலுக்கும் அவர்கள் முகம் கொடுத்துள்ளனர். அதே சிக்கல்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறுண்டு போவதற்கும் காரணமாகியுள்ளது. விடுத லைப்புலிகள் அமைப்பின் தோல்விக்குப் பின்னர், விடுதலைப் புலிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கி வந்துள்ள அரசி யல் கட்சிகளும் கூட தோல்வியைத் தழுவ ஆரம்பித்துள்ளன. (மேலும்) 03.01.2010
________________________________________________________________________________________________________________
மலையக மக்களின் தலைவர் பெ. சந்திரசேகரன் அவர்கட்கு எம் இதய அஞ்சலிகள்
- தி. ஸ்ரீதரன் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.
மலையக மக்களின் மனம் கவர்ந்த இளம் சிரேஷ்ட தலைவரான திரு. பெரியசாமி சந்திரசேகரன் அவர்களின் திடீர் மறைவு எம்மை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. முற்போக்கு சிந்தனை கொண்ட சந்திரசேகரன் அவர்கள் மலையக மக்கள் உட்பட இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்களுக்கு செய்த சேவை அளப்பரியவை. அவரது அரசியல் பயணத்தில் பல சவால்களை எதிர்நோக்கியவர். 1980 களின் இறுதி பகுதி தொடக்கம் 1990 களின் முற்பகுதி வரை சிறைவாசத்தையும் அவா அனுபவித்தார். மலையக தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காக மாத்திரமல்லாமல் மலையக மக்கள் ஒரு சமூகம் என்ற வகையில் அம் மக்களின் தனித்துவ உரிமைகளுக்காகவும் குரல கொடுத்தவர். மலையகத்தில் லயன் காம்பிராவுக்கு மாற்றாக வீடமைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் காத்திரமான பங்களிப்பை வழங்கியவர். மலையக மக்கள் வாழும் பிரதேசங்களில் கிராம சேவகர்களை நியமித்து பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், அடையாள அட்டை போன்றவற்றை பெறுவதற்கு காத்திரமான முறையில் செயற்பட்டவர். மலையகத்தில் உள்ளக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் அயராது பாடுபட்டவர். குறிப்பாக இளந்தலைமுறையினரின் கல்வி தொழில் தொடர்பான விடயங்களில் கரிசனையை செலுத்தியவர். (மேலும்) 02.01.2010
________________________________________________________________________________________________________________
சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம்
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சியின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் ஒய்வு பெற்ற இராணுவத்தளபதி சரத் பொன்சேகா சனிக்கிழமையன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். இவருடன் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜேவிபி தலைவர் சோமவன்ச அமரசிங்க, மேலக மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஒய்வு பெற்ற பிரதம நீதியரசர் சரம் எம் சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மக்கள் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய சரத் பொன்சேகா தான் பதவிக்கு வந்தால் பாதுகாப்பு வலயங்களை நீக்குவேன் என தெரிவித்தார். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் திட்டம் இருப்பதால் அப்பகுதியில் மீள்குடியேற்றம் பற்றி சிந்திக்க வேண்டும் என கூறினார். தேவை ஏற்பட்டால் இராணுவ முகாம்களை இடம்மாற்றி மக்களை மீள்குடியேற்றம் செய்யலாம், யுத்தம் இல்லாத நிலையில் பாதுகாப்பு வலயம் எதற்கு எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இனப்பிரச்சனை தீர்வு பற்றி பேசிய ரணில் விகரமசிங்க, தான் ஒரு சர்வ கட்சி குழுவை அமைத்து அனைத்து இன மக்களும் எவ்வித பாகுபாடும் இன்றி வாழ கூடிய சூழலை ஏற்படுத்துவோம் என்றும் கூறினார். . B.B.C News
________________________________________________________________________________________________________________
யாழ். உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இலகுவில் செல்ல ஏற்பாடு
யாழ் குடாநாட்டின் உயர் பாதுகாப்பு வலயங்களில் தற்போது இயங்கும் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களும், மாணவர்களும் இலகுவில் சென்று வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள ஏனைய பாடசாலைகளைத் திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக வட மாகாண கல்வி, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.உயர் பாதுகாப்பு வலயங்களில் தற்போது இயங்கும் தெல்லிப்பளை மஹாஜனாக் கல்லூரி, வேலணை மத்திய கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி, மெதடிஸ்ட் கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகளுக்கான போக்குவரத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இளங்கோவன் குறிப்பிட்டார்.உயர் பாதுகாப்பு வலயங்களில் தற்போது இயங்கும் பாடசாலைகளுக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் சிறிது தூரத்தை நடந்துசெல்ல வேண்டியுள்ளதால், அவர்களின் அசௌகரியத்தைக் களைய அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.உயர் பாதுகாப்பு வலயங்களில் இன்னமும் 51 பாடசாலைகள் மீளத் திறக்கப்பட வேண்டியுள்ளன. இவை தற்போது வேறு பாடசாலைகளுடன் இணைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
________________________________________________________________________________________________________________
நாடெங்கும் புத்தாண்டு மகிழ்ச்சி கொண்டாட்டம்: 30 ஆண்டுகளின் பின் வடக்கு, கிழக்கில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம்
நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் நாடெங்கும் மக்கள் நேற்று புத்தாண்டை வெகுவிமர்சையாகக் கொண்டாடினர். வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் மக்கள் பட்டாசுகள் கொளுத்தியும் வான வேடிக்கைகளை நிகழ்த்தியும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் புதுவருடத்தை வரவேற்றனர். நேற்று நள்ளிரவு முதலே பட்டாசு சத்தங்கள் காதுகளைப் பிளந்தன. இன, மத பேதமின்றி சகல மக்களும் விழித்திருந்து புதிய ஆண்டை கோலாகலமாக வரவேற்றதுடன் சகல மத வழிபாட்டுத் தலங்களிலும் விசேட சமய வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். கொழும்பில் வழமைக்கு மாறாக இம்முறை பட்டாசுகள் கொளுத்தப்பட்டு பெரும் வானவேடிக்கைகளும் இடம் பெற்றன. கொழும்பு காலி முகத்திடலில் கூடிய மக்கள் மிகுந்த சந்தோசத்துடன் பட்டாசுகளைக் கொளுத்தி புதிய வருடத்தை வரவேற்றனர். கொழும்பு கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய தேவஸ்தானம் உட்பட இந்து ஆலயங்களில் நள்ளிரவு மற்றும் விடியற்காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. (மேலும்) 02.01.2010
________________________________________________________________________________________________________________
தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்: ப.சிதம்பரம்
ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, சென்னையில் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம். "தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்'' என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் சிதம்பரம். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "புத்தாண்டு தினத்தை ஒட்டி, முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்தேன்'' என்றார். தெலங்கானா விவகாரத்தில் மத்திய அரசு அவசர முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறதே?. தனித் தெலுங்கானா குறித்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எதுவும் எடுக்கவில்லை. இந்தப் பிரச்னை தொடர்பாக, கடந்த மாதம் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அறிவிக்கப்பட்டது. (மேலும்) 02.01.2010
________________________________________________________________________________________________________________
புதிய பாதை| சுந்தரம் - புலிகளின் முதலாவது பகிரங்க அரசியல் படுகொலை
02-01-2006 திகதியுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் தமிழீழ விடுதலைக்கழகத்தின் ஆரம்பகால தமிழீழ தேசிய விடுதலைப்போராளி, ~புதிய பாதை| ஆசிரியர் சுந்தரம் என்கின்ற சிவசண்முகமூர்த்தி தமிழீழ விடுதலைப்புலிகளால் கொலைசெய்யப்பட்டு 24 வருடங்களாகின்றன. 02-01-1982 இல் இவர் கொலைசெய்யப்பட முன்னர், பற்குணம் மற்றும் மைக்கேல் போன்றவர்கள் தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகால தலைமறைவுச்சூழலில் கொல்லப்பட்டாலும் சுந்தரத்தின் கொலையின் பின்னரே ~புதிய அத்தியாயம்| ஒன்று ஆரம்பித்தது. அதாவது தமிழீழ தேசிய விடுதலைக்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் குழுக்களிலொன்று, தமிழீழ தேசிய விடுதலைக்காக போராடும் ஏனைய குழுக்களை ~எதிரிகளாக| பகிங்கரமாக பிரகடனப்படுத்தியது அரசியல் படுகொலைகளை ஏகபோகமாக்கியது. தமிழீழ விடுதலைக்கழகத்தின் அரசியல் தத்துவார்த்த ஏடான ~புதிய பாதை| யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தினுள் பதிப்பாவதையும், அதனது ஆசிரியரான சுந்தரம் அச்சக அலுவல்களை நிர்வகித்து வருவதினையும், தமிழீழ விடுதலைப்புலிகள் முன்கூட்டியே தெரிந்துவைத்திருந்தனர். அன்றைய யாழ்நகரத்தின் நெரிசல் நிறைந்த தெருக்களில் சாதாரண மனிதனாய் நடந்து சித்திரா அச்சகத்தினுள் நுழைவதை கொலையாளிகள் அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை சுந்தரம் அறிந்திருக்கவில்லை. (மேலும்) 02.01.2010
________________________________________________________________________________________________________________
வடபகுதி மக்களை மிருகங்களைப் போல் வைப்பதே பொன்சேகாவின் விருப்பம்
- எஸ்.பி.திஸாநாயக்க
சரத் பொன்சேகா தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கடிதமொன்றை எழுதி இருந்தார். அக்கடிதத்தில், வட பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்தும் போது ஒவ்வொரு கிராமத்திலும் இராணுவ முகாம்களை அமைத்து அப்பிரதேசங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக நான் ஒரு நாள் சரத் பொன்சேகாவிடம் வினவினேன். அப்போது பொன்சேகா “இல்லாவிட்டால் காட்டில் தலைமறைவாகியுள்ள புலிகள் மீண்டும் ஒன்றாகி பயங்கரவாத செயற்பாடு களில் ஈடுபடலாம். அவ்வாறான நிலைமையைத் தடுக்க வேண்டும்” என்றார். இது அவரது மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றது. இராணுவ முகாம்களை அமைத்து வட பகுதி தமிழ் மக்களை மிருகங்களைப் போன்று நடத்தவே அவர் விரும்புகின்றார். அவர் ஒரு குரூரமான இராணுவத் தளபதி. அவருக்கு ஜனநாயகம் குறித்த அறிவு கிடையாது. புலிப் பயங்கரவாதம் ஒழித்துக் கட்டப்ப ட்டதால் பெரிதும் நன்மை பெற்றிருப்பது வடபகுதி தமிழ் மக்கள்தான். அவர்களைப் புலிகள் மிகவும் துன்புறுத்தினார்கள். கொடுமைப்படுத்தினார்கள். (மேலும்) 02.01.2010
________________________________________________________________________________________________________________
தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க இங்கிலாந்து விமான பயணிகளுக்கு `ஸ்கேன்' சோதனை நடத்தப்படும்
பிரதமர் கார்டன் பிரவுன் அறிவிப்பு
தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க இங்கிலாந்து விமான பயணிகளுக்கு `ஸ்கேன்' சோதனை நடத்தப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் அறிவித்தார்.கடந்த வாரம், நைஜீரியாவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நகர் வழியாக அமெரிக்காவின் டெட்ராய்ட் நகருக்குச் சென்ற பயணிகள் விமானத்தை, அப்துல் முத்தலீப் என்னும் 23 வயது அல்கொய்தா தீவிரவாதி ஊசி மூலம் எடுத்துச் சென்ற திரவ வெடிமருந்து மூலம் தகர்க்க முயற்சித்தான். ஆனால், அதை விமான பயணிகள் விமான ஊழியர்களுடன் இணைந்து முறியடித்தனர். அந்த விமானம் டெட்ராய்ட் நகரில் தரையிறங்கியதும், அப்துல் முத்தலீப் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டான். திரவ வெடி மருந்தை உடலோடு சேர்த்து முத்தலீப் எடுத்துச் சென்றதால் அதை விமான நிலைய அதிகாரிகளால் சோதனையின்போது கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் வெடிமருந்து திரவ வடிவில் கொண்டு செல்லப்பட்டதால் அதை மெட்டல் டிடெக்டர்களாலும் கண்டறிய இயலவில்லை. இதனால், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்கா நாடுகளுக்கும் தீவிரவாதிகளால் நூதன முறையில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, பயணிகள் உடல் முழுவதையும் நிர்வாணமாக சோதனை செய்யும் ஸ்கேன் முறையை அறிமுகப்படுத்தப்போவதாக நெதர்லாந்தும், நைஜீரியாவும் உடனடியாக அறிவித்தன. (மேலும்) 02.01.2010
________________________________________________________________________________________________________________
சம்பந்தன் ஐயாவுக்கு ஒரு கோரிக்கை!
-ஈழப்பிரியன்.
மே 18 வரை பிரபாகரனை எப்படியும் காப்பாற்றி விடவேண்டும் என்று துடியாய் துடித்தவர்கள் தமிழ்க் கூட்டமைப்பினர்.புலிகள் பலவந்தமாக மக்களையும் தம்முடன் அழைத்துச்சென்று பலியாக்கியபோது அதற்கு எதிராக வாய்திறக்க திராணியற்று இருந்தவர்கள்.அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் புலிகளின் தயவுடன் எப்படியும் நுழைந்துவிட்டால் போதும் என்பதுதான் அவர்களின் அப்போதைய குறியாக இருந்தது. ஆனால் மே 18க்குப் பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் தாம்தாம் தமக்கு தனிப்பட்ட முறையில் எது நல்லதோ அந்த முடிவுகளுக்கு அமைய செயற்படத்தொடங்கிவிட்டனர். எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆலவட்டம் பிடிக்கும் தமிழரசுப் பாரம்பரியம் இப்போதும் அவர்களுக்கு ஆலவட்டம் பிடிக்க சம்பந்தன் போன்ற தலைவர்கள் துடிக்கின்றனர். இதனால்தான், இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தனை கூறவைத்தது. (மேலும்) 01.01.2010
________________________________________________________________________________________________________________
ம.ம.மு. தலைவர் பெ.சந்திரசேகரன் மாரடைப்பால் மரணம்: மலையக மக்கள் முன்னணியின் தலைவியாக திருமதி சந்திரசேகரன் நியமனம்
சமூக அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்புத்துறை அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெரியசாமி சந்திரசேகரன் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 52 . இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அமைச்சரை உடனடியாக கொழும்பின் நவலோக்க வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும், சிகிச்சை பலனின்றி அவர் மரணமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் பிரபல அரசியல்வாதியாக திகழ்ந்த அவர், பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியவராவார். 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி பிறந்த சந்திரசேகரன், முதன்முதலாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூலம் அரசியலுக்கு பிரவேசித்தார். இதற்கு முன்னர் அவர் வகித்து வந்த சமாதான நீதிவான் பதவியே அவரைச் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு இட்டுச்சென்றது. (மேலும்) 01.01.2010
________________________________________________________________________________________________________________
புலிப் பாசிசம் தோற்கடிக்கப்பட்டமையே, 2009ம் ஆண்டின் மாபெரும் வரலாற்று நிகழ்வாகும்!
- சண்முகம் சுப்பிரமணியம்
 தமிழ் மக்களின் கடந்தகால அரசியல் தலைமைகளை எடுத்து நோக்குகையில், விடுதலைப் புலிகளே பிற்போக்கு தமிழ் தேசியவாதத்தின் உச்சக் கட்ட வடிவமாக உருவெடுத்தனர். புலிகளுடன் சகல உள்நாட்டு தமிழ்ப் பிற்போக்கு சக்திகளும், சர்வதேசப் பிற்போக்கு சக்திகளும் அணிவகுத்து நின்றன. அவர்களது ஆலோசனையுடனும், வழிகாட்டலுடனும் புலிகள் தமிழ் மக்கள் மத்தியிலிருந்த சகல முற்போக்கு – ஜனநாயக சக்திகளையும் முற்றாகத் துவம்சம் செய்தனர். தமிழ் இனத்தைவிட சிறியதும், தமிழ் மக்களது சகோதர இனமாகத் திகழ்ந்ததுமான முஸ்லீம் மக்களை வடக்கிலிருந்து விரட்டி, கொடுங்கோலன் ஹிட்லர் யூதர்களுக்கு செய்தது போல, இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்டனர். யுத்தத்தில் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத, சாதாரண சிங்கள மக்களை (கூடுதலான மக்கள் கிராமப்புற விவசாயிகள்), முதியோர், குழந்தைகள், பெண்கள் என்ற வேறுபாடு கூட இல்லாமல் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தனர். புலிகளின் இத்தகைய நடவடிக்கைகள், முன்னைய பிற்போக்குத் தமிழ் தலைமைகளின் தொடர்ச்சியாக இருந்த அதேவேளையில், அதன் உச்சகட்ட பரிணாமமாக, பாசிச நிலைக்கு இட்டுச் சென்றதை அடையாளம் காட்டியது. அது தமிழ் தேசியம் என்ற சுலோகத்தை உச்சரித்துக் கொண்டு, உண்மையில் தமிழ் மக்களைக் கூறுபோட்டது. (மேலும்) 01.01.2010
பிரதியெடுக்க
________________________________________________________________________________________________________________
சமாதானம் நோக்கிய பயணத்தில் எம்மை ஊக்குவிப்பவர்களோடு நல்லுறவைப் பேண தயார் -புத்தாண்டு செய்தியில் ஜனாதிபதி
“ எமது இறைமையை ஏற்று சமாதானம், சுபீட்சத்தை நோக்கிய எமது பயணத்தில் எம்மை ஊக்குவிப்பவர்களோடு நல்லுறவைப் பேணுவதற்கும் நாம் தயாராக உள்ளோம்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்து ள்ளதாவது; புதியதோர் ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் வேளையில் கடந்த வருடத்தை மீட்டிப்பார்ப்பதும் புதிய ஆண்டின் எதிர்பார்ப்புகள் குறித்து சிந்திப்பதும் மரபாகும். கடந்த வருடம் நாம் ஒரு தேசமாக ஒன்றிணைந்து 27 வருடகால கொடூரப் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளிவைத்து, எமது மக்கள் மத்தியிலிருந்த சந்தேகம், பிரிவினை என்பவற்றைத் துடைத்தெறிந்ததன் மூலம் நாம் பெற்றுக்கொண்ட அடைவுகள் குறித்த பெருமையோடும் திருப்தியோடும் புதிய ஆண்டில் பிரவேசிக்கின்றோம். (மேலும்) 01.01.2010
________________________________________________________________________________________________________________
அலி சாஹீரும் (மௌலானா) அரசியல் பச்சோந்தித்தனமும் !!!
( பாகம் 2)
- எஸ் எம் எம். பஷீர்
அலி சாகிர் மௌலானா தான் ஐக்கிய தேசிய கட்சின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படாமல் ரிஸ்வி சின்னலெப்பை நியமிக்கப்பட்டதால் ஆத்திரமுற்று தனது மாமா என அறியப்படும் அளவி மௌலானா ( இன்றைய தென் மாகான கவர்னர் ) மூலம் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்தார். அப்போதுதான் அவர் முதன் முதலில் சுதந்திரக் கட்சியில் 1989 பொதுத்தேர்தலில் போட்டியிட்டார். இத்தேர்தலில் படு தோல்வியுற்றதும் கொழும்பில் வாழ்ந்து வந்தார். 1990 ல் புலிகள் ஏறாவூர் முஸ்லிகள் மீது நடத்திய இனப்படுகொலையின்போது அங்கு மாற்று ஜனநாயக அரசியல் கட்சிகள் யாவும் செயற்படுவது புலிகளால் தடுக்கப்பட்டிருந்த வேலையில் அரசின் தயவிலே –பாதுகாப்பிலே-தான் அங்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் செல்லக்கூடிய நிலைமை காணப்பட்டது , இந்த நிலையில் தான் அலி சாகிர் மௌலானா அன்றைய பாதுகாப்பு அமைச்சருக்கு ஏற்கனவே அறிமுகப்பட்டிருந்தபடியால் அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை ஏறாவூருக்கு செல்ல உடனடியாக அனுமதிக்காமல், அலி சாகிர் மௌலானவை அங்கு அந்த தேவைப்பட்ட நேரத்தில் அனுப்பி முஸ்லிம் காங்கிரசின் மக்கள் பிரதிநிதிகளை அரசியல் காய் நகர்தல் மூலம் ஒரம் தள்ளி மௌலானாவை செல்வாக்கடைய செய்தார். இது ஐக்கிய தேசியக்கட்சியின் திட்டமிட்ட காய் நகர்த்தலாகும். (மேலும்) 01.01.2010
_
|