a_Pen

முதற்பக்கம்

ஆனந்தசங்கரி

ஈ.பி.ஆர்.எல்.எப்

ஈ.பி.டி.பி

ஈரஅனல்

நெருப்பு

புளொட்

தூ

டெலோ நியூஸ் 

இலங்கைநெற் 

மீன்மகள்

 சூத்திரம்   

மகாவலி 

உண்மைகள்  

கவிமலர்

கிருத்தியம்

அலை    

 பூந்தளிர்    

 எங்கள்தேசம்

சலசலப்பு   

நோயல்நடேசன் 

வளர்பிறை  

எங்கள்பூமி 

தமிழ்யுகே   

புயல்  

புளொட்யுகே 

யாழமுஸ்லீம் 

புண்ணியாமீன் 

யவ்னா ருடே  

எஸ்.ஆர்.லெம்பட்

பஷீர்     

தமிழ்யூஎன்  

கவசங்களைதல் 

தூங்காத கண்கள்

யாழ்மண்

தமிழ்குரல்

துருவம்

தினசரி

இலங்கை முஸ்லீம்

ARRR

Asientribune

The lka academic

Tamil Week 

The Hindu

Daily News

Sunday Times

Daily Mirror

The island

The Sunday Leader

ColomboPage

Sunday Times

CNN

BBC

Newsnow

 

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.10                                                        24.01.2012

கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயார்

 தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு தாம் தயாராகவே இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். “இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமது பெயர்களை வழங்க வேண்டும். இலங்கை - இந்திய உறவுகள் ஆழமானதாகவே இருந்து வருகின்றது. பூகோள மற்றும் பொருளாதார ரீதியில் சிறந்த தொடர்பு காணப்படுகின்றது. அது மாத்திரமன்றி இலங்கை இந்தியாவுக்கிடையிலான உறவை மேலும் பலப்படுத்த வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

_______________________________________________________________________________________________________

ஆர்ப்பாட்டத்திற்காக யாழ். சென்ற ஜே.வி.பி. கிளர்ச்சிக்குழு வவுனியாவில் தடுப்பு

யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்வதற்கு கொழும்பிலிருந்து சென்றவர்கள், வவுனியாவில் வைத்து தடுக்கப்பட்டனர். அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்ட லலித் மற்றும் குகனை விடுதலை செய்ய வேண்டும் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என் வலியுறுத்தி ஜே.வி.பியிலிருந்து பிரிந்த குழுவினரின் மக்கள் போராட்ட இயக்கமும், நாம் இலங்கையர் அமைப்பும் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. இந்நிலையில், வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் புதிதாக சோதனைச்சாவடி அமைத்து, யாழ்ப்பாணம் சென்ற அனைத்து வாகனங்களையும் தடுத்து வைத்ததுடன் சோதனை நடத்தினர். நாம் இலங்கையர் அமைப்பின் உறுப்பினர்கள் பயணித்த பேரூந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. 12 பஸ்கள் உட்பட 20 வாகனங்களில் இவர்கள் பயணம் செய்தனர். இத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா மற்றும் ஏனைய பகுதிகளுக்கு வந்து அனைத்து வாகனங்களும் கனகராயன்குளம் மற்றும் புளியங்குளம் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டன. காலையில் இருந்து மாலை வரை போக்குவரத்து சீராக இடம்பெறாமையினால் பலரும் தமது பயணத்தை நிறுத்தி மீள திரும்பி சென்றதுடன் சிலர் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டியேற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சுமார் 800 பேர் தடுக்கப்பட்டதாக மக்கள் போராட்ட இயக்கத்தைச் சேர்ந்த சமீர கொஸ்வத்த தெரிவித்தார். மாலை 5 மணிக்கு நாம் ஓமந்தையை அடைந்தோம். யாழ்ப்பாணத்திற்கு நுழைய எமக்கு இராணுவம் அனுமதி வழங்கவில்லை என சமீர கொஸ்வத்த கூறினார். வீதிகள் திருத்தப்படுவதையே இவ்வாறு தாம் தடுக்கப்பட்டமைக்கு காரணமாக காட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை யாழ். பஸ் நிலையத்தை சூழ்ந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாக டெலோ அரசியல் குழுத் தலைவர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கு யாழ்ப்பாணம் செல்லவிருந்தவர்கள் இரவு 7 மணியளவில் ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து திருப்பியனுப்பப்பட்டதாக நாம் இலங்கையர் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். (தமிழ்மிரர்)

_______________________________________________________________________________________________________

போருக்கு ஆதரவு அளித்த இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா நாடுகளை பார்த்தாவது சம்பிக்க ரணவக்க திருந்த வேண்டும்

- மனோ கணேசன்

mano-ganeshanஇலங்கை அரசாங்கத்திற்கு போர் நடத்த உதவி செய்த இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா  ஆகிய நான்கு முக்கிய நாடுகளிலும் அதிகார பரவலாக்கல் இருக்கிறது.  இந்நாடுகளில் மத்திய அரசாங்கத்துடன் மாநில அரசாங்கங்களும், சுயாட்சி பிரதேச அரசாங்கங்களும் இருக்கின்றன. மாநில காவல் துறையும் , மத்திய காவல் துறையும் இருக்கின்றன. பல மொழிகள், பல இனங்கள் வாழ்கின்ற  நாடுகள்தான்  இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா  ஆகியவை. இந்த உண்மைகள் தெரியாதவர்கள் முட்டாள்கள். தெரிந்தும் உடன் பட மறுப்பவர்கள் பேரினவாதிகள். ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் பேரினவாத முட்டாள்கள். பௌத்த மதத்தின் பெயரில்  அரசியல்  நடத்தும் இவர்களின் முகமூடியை  வரலாறு விரைவில் கழற்றி எறியும்  என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமயவின் அதிகார பரவலாக்கல் எதிர்ப்பு நிலைப்பாடு தொடர்பிலே கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது, உலகம் முழுக்க இன்று அதிகார பரவலாக்கலை நோக்கி போய் கொண்டு இருக்கின்றது. சம்பிக்க ரணவக்கவும், அவரது அணியினரும் இன்று வரலாற்றை பின்னால் கொண்டு செல்லும் முடியாத வேலையை செய்கிறார்கள். முழு நாட்டையும் ஒரே இனத்திற்கு மாத்திரம் சொந்த கொண்டாட இவர்கள் திட்டம் போட்டு வேலை செய்கிறார்கள். தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்வதானால் இரண்டாம் மட்ட பிரஜைகளாக வாழலாம் என்பதுதான் இந்த பௌத்த கட்சியின் நிலைப்பாடு. 13 ம் திருத்தத்தை கடக்கும் தீர்விற்கு உடன் படுவதாக ஜனாதிபதி இந்திய அரசிடம் உறுதி அளித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதை கேட்டு நாம் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய முடியாது. பட்டாசு கொளுத்த முடியாது. இத்தகைய எத்தனையோ வாக்குறுதிகளை நாம் கேட்டு பழக்கப்பட்டவர்கள். (மேலும்) 18.01.12

_______________________________________________________________________________________________________

13ஆவது திருத்தத்திற்கு அப்பாலான அதிகார பரவலாக்கம் அமுல்படுத்தப்படும்: கிருஷ்ணாவிடம் ஜனாதிபதி உறுதி

KRISHNA-MAHINDA13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் அதிகார பரவலாக்கம் செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். எனினும் இதற்கான கால எல்லை குறிப்பிடப்படப்படவில்லை என அவர் கூறினார். வெளிவிவகார அமைச்சில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடாந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் அதிகார பரவலாக்கம் செய்வதாக பல தடவைகள் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு ஏற்ட்டப்படும் என இந்தியா நம்புகி;ன்றது. பல சிறந்த முன்மொழிவுகளை கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமுல்படுத்தப்பட்டால் அது தேசிய நல்லிணக்கத்திற்கு சிறந்த முன்மாதிரியாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் போது, இரு தரப்பு உறவு உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. (மேலும்) 18.01.12

_______________________________________________________________________________________________________

invitation email

_______________________________________________________________________________________________________

இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்தது த.தே.கூ.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது இலங்கை விஜயத்தை ஆரம்பித்துள்ளார். திங்களன்று கொழும்பு வந்திறங்கிய அமைச்சர் கிருஷ்ணா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரையும் சந்தித்துள்ளார். நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர், இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸையும், பிற இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். வடக்கில் உள்ள யாழ்ப்பாணம் முதல் தென் முனையில் உள்ள காலி வரையில் பல இடங்களுக்கும் அவர் இந்தப் பயணத்தின்போது செல்லவுள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் அவர் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகளில், இலங்கையின் இனச் சிறுபான்மையினருக்கும் மாகாண நிர்வாகங்களுக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கும் தீர்வுத் திட்டம் என்பது முக்கிய விவகாரமாக இடம்பெறும் எனத் தெரிகிறது.இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவுடன் தாங்கள் மேற்கொண்ட சந்திப்பு பற்றி த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசியிடம் கருத்து வெளியிட்டார். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது மற்றும் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பில் இலங்கை அரசுடன் கடந்த ஒரு வருட காலமாக பல தவணைகளில் த.தே.கூ. உறுப்பினர்கள் பேசிவருகின்ற போதிலும், அப்பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் வரவில்லை என்பதை இந்திய வெளியுறவு அமைச்சரிடம் விளக்கியதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். இந்தியாவிடம் பல முறை வாக்குறுதிகளை அளித்த்திருந்தும், இழுத்தடிப்பு செய்யும் நோக்கிலேயே இலங்கை அரசாங்கம் செயல்பட்டுவருவதாக அமைச்சர் கிருஷ்ணாவிடம் தாங்கள் முறையிட்டதாக அவர் தெரிவித்தார். காணி தொடர்பான அதிகாரங்கள், பொலிஸ் அதிகாரங்கள் போன்றவற்றை வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகங்களுக்கு வழங்கப்போவதில்லை என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கிறார் என்று தாங்கள் உணருவதாக இந்திய அமைச்சரிடம் தாங்கள் விளக்கியதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.  - B.B.C

_______________________________________________________________________________________________________

தம்மை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள்; முன்னாள் போராளிகள் கவலை

ltte former membersநாட்டில் யுத்தம் முடிந்து அமைதியான வாழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இவ் வேளையில் எம்மை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளின் கூற்றுக்கள் எமது எதிர்கால வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளது என முன்னாள் போராளிகள் கவலை வெளியிட்டுள்ளனர். ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்றவரும் நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான உதுல் பிரேமரட்ண தமது அமைப்பில் முன்னாள் போராளிகள் தொடர்பு வைத்துள்ளதாகவும் அவர்கள் அரசியலில் சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்க வேண்டும் எனவும் அண்மையில் தெரிவித்திருந்தார். அத்துடன் அவர்களை சுதந்திரமாக அரசியலில் ஈடுபட அனுமதிக்காது போனால் அவர்கள் மீளவும் புரட்சியில் ஈடுபடுவார்கள் எனவும் உதுல் தெரிவித்திருந்தார். இக் கருத்துக்களால் தாம் அரச புலனாய்வாளர்களின் விசாரணைகளுக்கு மேலும் உட்படுத்தப்படலாம் என, விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் அரச படையினர் மத்தியில் பல நெருக்கடிகளையும் இவ்வாறான கூற்றுக்கள் உருவாக்கும் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இவ் விடயம் குறித்து, தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் சிலர் கருத்துத் தெரிவிக்கையில், சிறிலங்கா உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில், ஜே.வி.பியினருடன் முன்னாள் போராளிகளும் இணைந்து மீண்டும் புரட்சியில் ஈடுபட முயல்வதாக தெரிவித்திருந்தார்.  (மேலும்) 17.01.12

_______________________________________________________________________________________________________

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைக்கு பதிலளித்துள்ள கூட்டமைப்பின் 100 பக்க அறிக்கை

anuary 16, 2012  01:42 pmஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நிராகரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 100 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இலங்கை மீது சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு: இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் மீது, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கின் தமிழர்கள் மீது திட்டமிட்ட ரீதியிலே மேற்கொள்ளப்பட்டு வந்த சரீரக, அமைப்பு சார்ந்த மற்றும் உளவியல் வன்முறைகளை மீளவும் ஞாபகத்துக் கொண்டுவந்துள்ளது. இந்த நாட்டின் அங்கங்களான மக்கள் மீது தண்டனை எதுவுமே வழங்கப்படாமல் தாராளமாயும் குறிப்பானதாயும் மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளையும், இத்தகைய வன்முறைகளை நெறிப்படுத்தி, அனுசரணை வழங்கி அல்லது அதை திட்டமிட்டு மேற்கொள்வதில் இலங்கை அரசுக்கு உள்ள பங்கினையும் பற்றி ஆற்றொணாத்ததுயருற்றுள்ளோம். அறிக்கையை வாசிக்க  (PDF)

_______________________________________________________________________________________________________

பொருளாதார நெருக்கடியில் வன்னி மக்கள்: அதிகரிக்கும் கடன்சுமைகள்

-  கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

ஒரு காலத்தில், வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, சீட்டுக் கட்டிச் சம்பாதித்துச் சீதனத்துக்குக் காசு சேர்த்தவர்கள் ஈழத்தமிழர்கள். பிறகு, தங்களின் சம்பாத்தியங்களை வங்கிகளில் வைப்பிலிட்டுச் சேமித்தார்கள். வங்கிகளில் சேமிப்பது பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருந்தது அவர்களுக்கு. யுத்தச் சூழலில் இது இன்னும் பாதுகாப்பானதாகத் தோன்றியது. இலக்கங்கள் கூடக்கூட சேமிப்பின் மகிழ்ச்சி உச்சத்துக்கு ஏறும். அதைவிட அதிலொரு பெருமை வேறு. இதனால், தமிழ்ப்பகுதிகளில் இயங்கிய வங்கிகள் சேமிப்பில் முதலிடம் வகித்தன. ஆனால், தெற்கு மற்றும் மேற்கிலுள்ள சிங்களப்பகுதிகளின் வங்கிக் கிளைகள், சேமிப்புக்குப் பதிலாகக் கடனைத் தாராளமாக வழங்கிக் கொண்டிருந்தன. சிங்களவர்கள் சேமிப்பதற்குப் பதிலாகக் கடனை வாங்கிக் கொண்டிருந்தனர். இதை மறுவளமாகப் பார்த்தால், தமிழர்களின் காசில் சிங்களவர்கள் வாழ்ந்தனர் எனலாம். அவர்கள் வங்கிகளில் குறைந்த வட்டிக்குக் கடனை வாங்கி, தங்களுடைய தொழில் முயற்சிகளைச் செய்தனர். முதலீடுகளிலும் தாராளமாக ஈடுபட்டனர். வடக்குக் கிழக்கையும் விட ஏனைய பகுதிகளில் நிலவிய ஒப்பீட்டளவிலான அமைதிச் சூழல் இதற்கு மேலும் சாதகமான வாய்ப்புகளை வழங்கியது. சேமிப்பதற்குப் பதிலாகத் தாராளமாகச் செலவு செய்யும் பழக்கம் சிங்களவர்களுக்கு எப்போதும் அதிகம். செலவு செய்வதற்காகவே சிங்களவர்கள் கடுமையாக உழைப்பார்கள் என்று தென்பகுதியில் நீண்டகாலம் இருந்த நண்பர்கள் சொல்வர்.  உழைப்பதைத் தாராளமாகச் செலவழிக்கும் இயல்பு அவர்களிடம் உண்டு. விதவிதமாகச் சாப்பாடுவதிலும் சுற்றுலாக்களுக்குப் போவதிலும் கொண்டாட்டங்களில் தாராளமாகச் செலவழிப்பதிலும் அலாதிப்பிரியம் அவர்களுக்கு. (மேலும்) 17.01.12

_______________________________________________________________________________________________________

கந்தளாயில் கண் வைத்திய முகாம் - (Cataract Lenses) 

Surgery-3pgஅல்-முஸ்லிமாத் அமைப்பின் அணுசரணையில் கண்வில்லைகள் (Cataract Lenses) பொருத்தும் வைத்திய முகாம் கந்தளாய் தள வைத்தியசாலையில் கந்தளாய் தள வைத்தியசாலை மருத்துவ அத்தியகட்சகர் வைத்தியர் கொஸ்தா தலைமையில் இடம் பெற்றது. இதில் கண்வைத்திய நிபுனர் ரோகண எதிரிசிங்ஹ மற்றும் அல்-முஸ்லிமாத் அமைப்பின் தொண்டராகவும் (Recdo) அமைப்பின் தலைவராகவும் செயற்படும் ஜெய்னுலாப்தீன் முகம்மட் அஸார் இன்னும் ஏனைய வைத்தியர்கள் தாதிமார்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது 125 கண் வில்லைகள் (Cataract Lenses) வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டு உடணடியாக 20 நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சை இடம் பெற்றது. நாடலாவிய ரீதியில் பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றி வரும் அல்-முஸ்லிமாத் அமைப்பின் சேவைகளில் ஒரு கட்டமாகவே இது இடம் பெற்றது. இதன் போது உரையாற்றிய கந்தளாய் தள வைத்தியசாலை மருத்துவ அத்தியகட்சகர் வைத்தியர் கொஸ்தா இவ்வாறான உதவிகள் மிக அரிதாவே கிடைக்கின்றது இவ்வாறான புதிய சிந்தணையில் சேவையாற்றுகின்ற அல்-முஸ்லிமாத் அமைப்பின் ஸ்தாபகர் கண் வைத்திய நிபுணர் மரீனா தாஹா ரிபாய் அவர்களுக் தான் நன்றி தெரிவிப்பதாகவும் மிகவும் கஸ்ட நிலையில் தங்களது சத்திர சிகிச்சையை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் இருந்த இந்த வரிய மக்களுக்கு ஒளியேற்றியதாகவும் அதற்காக தாம் மேலும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.  (மேலும்) 17.01.12

_______________________________________________________________________________________________________

புலிகளின் செயற்பாடுகள் குறித்து ஐரோப்பிய நாட்டு தூதுவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் ஊடாக குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சின்னங்களைக் கொண்டு முத்திரைகள் வெளியிட அண்மையில் சில நாடுகள் நடவடிக்கை எடுத்திருந்தன. அதன்மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு வழங்கும் பிரிவினரின் செயற்பாடுகள் புலப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தூதுவர்களுக்கு அறிவித்துள்ளது. பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் விடுதலைப் புலி முத்திரைகள் வெளியிடப்பட்டதோடு அதற்கு வெளிவிவகார அமைச்சு கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

_______________________________________________________________________________________________________

இலங்கையில் இடம்பெயர்ந்தவர்கள் வடக்கிலிருந்து வெளியியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மாத்திரமல்ல: யூ.என்.எச்.சி.ஆர்

நீண்ட கால யுத்தத்தினால்  வடக்கிலிருந்து வெளியியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மாத்திரம் இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் அல்லர் என கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் (யூ.என்.எச்.சி.ஆர்) தெரிவித்தது. வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு யூ.என்.எச்.சிஆர் நிறுவனமே தடையாக உள்ளது. இதற்கு எதிராக  அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக கைத்தொழில் முதலீட்டு அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றிசாட் பதியுதீன் அண்மையில் தெரிவித்தார். இந்நிலையில் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் குறித்த வழிகாட்டல் தத்துவங்களுக்கு அமைய இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான பாதுகாப்பு, மனிதாபிமான உதவி என்பவற்றை வழங்கும் பிரதான பொறுப்பு அரசாங்கத்திற்கு உரியதாகும். இதனடிப்படையில் பழைய உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் என்பது ஏப்ரல் 2008க்கு முன் யுத்தத்தின் போது உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரை குறிக்கும் பதமாகும். (மேலும்) 17.01.12

_______________________________________________________________________________________________________

ரிஸானா நபீக் விவகாரம் : உப முகவர்களுக்கு 2 வருட கடூழிய சிறை

 ரிஸானா நபீக்கை சவூதி அரேபியாவுக்கு கடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட உப முகவர்கள் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த கொழும்பு நீதிமன்றம் இவ்விருவருக்கும் தலா இருவருட கடூழிய சிறைத் தண்டனையும், 60,000 ரூபா அபராதமும் விதித்துள்ளது. சாஹுல் ஷமீட் மொஹமது அப்துல் லத்தீப் , பாக்கீர் மொஹிடீன், வஜுர்டீன் ஆகிய உப முகவர்களுக்கே நேற்று திங்கட்கிழமை இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட மூன்றாவது நபரான கம்ஸா லெப்பே அப்துல் சலாம் என்பவருக்கு எதிரான விசாரணை ஜனவரி 24 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

_______________________________________________________________________________________________________

13ஆவது திருத்தம் தொடர்பான இந்தியாவின் வலியுறுத்தலை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் - அமைச்சர் வாசு

  இலங்கையின் அரசியல் தீர்வுக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். கேட்பார் பேச்சைக் கேட்டு இந்தியாவுடனோ அல்லது இலங்கை வந்துள்ள எஸ்.எம். கிருஷ்ணாவுடனோ முரண்படுவது அர்த்தமற்ற செயலாகும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். தனி பௌத்த கொள்கைகள் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கப் போவதில்லை. எனவே ஜாதிக ஹெல உறுமய போன்றவர்களின் அரசியல் தீர்வுக்கான எதிர்ப்புகளானது வெறும் அரசியல் நோக்கங்களையே கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தொடர்ந்தும் கூறுகையில், இனப்பிரச்சினைக்கான தீர்வாகவே 13 ஆவது திருத்தச் சட்டம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டது. இதனை இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்கள் ஒப்பந்த ரீதியாக ஏற்றுக் கொண்டுள்ளன. கடந்த காலங்களில் நாட்டில் யுத்தம் காணப்பட்டமையால் தீர்வொன்றிற்கு செல்வது கடினமான விடயமாகவே இருந்தது. ஆனால் தற்போது அவ்வாறானதொரு சூழ்நிலை இன்றி நாட்டில் சுமூகமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த ஏற்ற காலமாகத் தற்போதைய கால கட்டத்தை கூறலாம். இந்தியா இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக 13 ஆவது திருத்தச்சட்டத்தை வலியுறுத்துகின்றது. இதனை இலங்கை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் அரசியலமைப்பில் காணப்படுவதை நடைமுறைப்படுத்தி இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும். 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜாதிக ஹெல உறுமய போன்ற சிறு பிரிவினரே எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இவ் எதிர்ப்புகளும் அடிப்படைத் தன்மையற்றவையாகும். இலங்கைக்கு தனி பௌத்தக் கொள்கைகள் ஒவ்வாது. மாறாக பல்லின சமூகங்களுககு ஏற்ற கொள்கைகள் அத்தியாவசியமானதாகவே உள்ளன எனறார்.

_______________________________________________________________________________________________________

புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர் என கண்டியை சேர்ந்த செந்தூரன் இந்தியாவில் கைது

இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர் எனவும் ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் என்றும் சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு - செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், கொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள எல்லை வழியாக 39 இலங்கை தமிழ் அகதிகளை அவுஸ்திரேலியாவிற்கு கடத்த முற்சித்ததான வழக்குடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் இலங்கையின் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய செந்தூரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதன் பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் விசாரணைளை மேற்கொண்டு கடத்தலுடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.

_______________________________________________________________________________________________________

பிரபாகரனின் புகைப்பட முத்திரை இலங்கையிடம் மன்னிப்பு கோரியது றோயல் மெயில்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களுடன் சில முத்திரைகள் வெளியிடப்பட்டமை தொடர்பாக இலங்கையிடம் பிரிட்டிஷ் றோயல் மெயில் மன்னிப்பு கோரியுள்ளதாக லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. பிரிட்டினின் றோயல் மெயில் மூலம் புலிகளின் முன்னணி அமைப்பொன்று முத்திரைகளை வெளியிடக்கூடியதாக இருந்ததாக புலிகள் சார்பு ஊடகங்களும் இலங்கை ஊடகத்தின் சில பிரிவு களும் அண்மையில் செய்திகளை வெளியிட்டிருந்தமை தொடர்பாகக் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருந்ததாக இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது. புலிகளின் தலைவர் பிர பாகரனின் புகைப்படத்துடன் இந்த முத்திரைகள் வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பாக உயர்ஸ்தானிகராலயம் உடனடியாக றோயல் மெயிலுடன் தொடர்பு கொண்டது. தங்களின் "ஸ்மைலர் சேவை' ஊடாக தனிப்பட்ட ஒருவரின் புகைப்படத்துடன் ரோயல் மெயில் முத்திரையுடன் இணைத்து தனிப்பட்டவர்கள் தமது தபாலை தனிப்பட்ட தாக்கிக் கொள்ளமுடியுமென றோயல் மெயில் விளக்கமளித்திருக்கிறது. பிரிட்டனில் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது என்ற இலங்கையின் கவலைகளைப் பெற்றுக்கொண்டதும் உடனடியாக இந்த விடயத்தை றோயல் மெயில் விசாரணை செய்ததுடன் தனிப்பட்டவரினால் உருவாக்கப்பட்ட பதிவை உடனடியாக தாங்கள் இரத்து செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது. இந்த "ஸ்மைலர் சேவை' மூலம் சிறிய தொகையே தபாலிடப்பட்டதாகவும் மேலதிக பதிவுகள் இரத்துச் செய்யப்பட் டுள்ளதாகவும் றோயல் மெயில் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக ஏற்பட்டுள்ள கவலை களையிட்டு றோயல் மெயில் மன்னிப்பு கோரியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

_______________________________________________________________________________________________________

கபிரியல் ஏர்ணஸ்ட்டுகளும் மற்றும் ரூப் போன்ற சிறுவர்களும்

lasantha-2சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க அவர்களைக் கொலை செய்த கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தத் தவறியிருப்பதன் மூலம் மிகச் சரியாகச் சொல்வதானால் அரசாங்கம் தீச் சுவாலைக்குள் மாட்டிக் கொண்டதைப் போன்ற பயங்கர நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.அவருடைய படுகொலை நடைபெற்று மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும்,ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் அவருக்கு ஏவல்பணி புரியும் அவருடைய அமைச்சரவையும் அதற்கான விசாரணையில் ஏற்படும் மட்டுமீறிய தாமதத்துக்கு தேவையற்ற நொண்டிச் சமாதானங்களைக் கூறி அதைவிட்டு வேகமாக நடைபோடுவது,அந்த விசாரணை வெளிப்படையாகக் கைவிடப்பட்டு விட்டதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கத்தின்மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. கடந்த புதன்கிழமை அரசியல் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களால் கொழும்பில் லசந்தவை நினைவுகூரும் வைபவம் அனுசரிக்கப்பட்டது.அவ்விழாவில் அவர்கள் அரசாங்கத்தை மிகக் கடுமையாக கண்டித்ததோடு,லசந்தவின் மரணத்துக்காக நியாயம் கோரினார்கள்.ஒருவர் தனது கருத்துக்களை தெரிவிப்பதற்கும் மற்றும் அதன் காரணத்தை வேண்டி ஒரு குரல் எழுப்புவதிலும் எவ்வித சிரமமும் இல்லை. ஆனால் அவர்கள் மத்தியில் உருவாகி உள்ள சில கதாபாத்திரங்கள் மோசமான பேர்வழிகள் எனப் பெயரெடுத்த எல்.ரீ.ரீ.ஈ யினை பின் தாங்கவும் மற்றும் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நியாயப்படுத்துபவர்களாகவும் உள்ளது பெரிய புதிராக உள்ளது. (மேலும்) 16.01.12

_______________________________________________________________________________________________________

இந்திய இலங்கை மீனவர் பிரச்னை குறித்து விவாதம்: கூட்டறிக்கை வெளியீடு

கொழும்பு, ஜன.15: கொழும்புவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பயணம் மேற்கொள்ள வுள்ள நிலையில், இன்று இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்னைகள் குறித்து அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. இதன் நிறைவில், இரு நாட்டு அதிகாரிகள் குழு கூட்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. ஒரு நாட்டு கடல் எல்லையில் அடுத்த நாட்டு மீனவர் நுழைவது, மீன் பிடிப்பது குறித்தும் இதில் பேசப்பட்டுள்ளது. மீனவர்கள் குறித்து இருநாட்டு கூட்டுக்குழுவின் நான்காவது கூட்டத்தில் பாதுகாப்பாக மீன்பிடிப்பது, அடுத்தவர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் நடந்துகொள்வது குறித்தும் பேசப்பட்டுள்ளது. மேலும், இரு நாட்டு மீனவர்களும் கைதாகும் சூழ்நிலையில் எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் பேசப்பட்டது என்று, கூட்டாக அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளனர். இந்தியத் தரப்பில் ஹர்ஷ் வர்த்தன் ச்றிங்லா தலைமையில் (இலங்கைக்கான இந்திய வெளியுறவுத் துறை இணைச் செயலர்)  இலங்கை வெளியுறவுத் துறை கூடுதல் செயலர் க்ஷெனுகா செனவிரத்ன தலைமையில் இலங்கைக் குழுவும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளது.

_______________________________________________________________________________________________________

இந்தியாவின் புரிதலும் தமிழர்களின் நம்பிக்கையின்மையும்

-    அரவிந்தன்

இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் பாத்திரத்தைப் பற்றித் தொடர்ச்சியாகப் பலரும் எழுதியும் பேசியும் வருகின்றனர். இதில் இந்திய அரசுக்கான கோரிக்கைகள், கண்டனங்கள், ஆலோசனைகள், நட்புடன் தெரிவிக்கப்படும் கவனிக்க வேண்டிய விசயங்கள், சுட்டிக் காட்டுதல்கள், குற்றச்சாட்டுகள், வசைகள், ஆதரவுகள் எனப் பலவகைகள் உள்ளன. இந்தக் கருத்துகளை இலங்கைத் தமிழர்கள், சிங்களத் தரப்பினர், இந்தியர்கள், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தோர், பிறத்தியார் எனப்படும் வெளியுலகத்தினர் எனப் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தக் கருத்துகளில் சில முக்கியமானவை. பொருட்படுத்தத் தக்கவை. இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவு, இந்த நாடுகளில் ஏற்படவேண்டிய அமைதி, பாதுகாப்பு, இந்த நாடுகளிலுள்ள சமூகங்களுக்கிடையிலான முரண்பாட்டு நீக்கத்துக்கான வழிவகைகள், அவற்றின் அவசியம் போன்றவற்றை, கடந்த கால - சமகால – எதிர்கால அடிப்படைகளில் வைத்து அவர்கள் இந்தக் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். அதிலும் பல ஆய்வுகள் இந்தப் பிராந்தியத்தின் அமைதியையும் இந்தப் பிராந்திய மக்களின் நலன்களையும் பாதுகாப்பையும் மையப்படுத்தியவை. பிராந்தியத்திலுள்ள நாடுகளை மையப்படுத்திய ஆய்வுகள் என்பதற்குப் பதிலாக, அரசுகளின் நலனை மையப்படுத்தியவை என்பதற்கப்பால், இந்தப்; பிராந்தியத்தின் மக்கள் மற்றும் அவர்கள் அடையாளப்படுத்தும் சமூகங்களை மையப்படுத்திய ஆய்வுகளும் கவனங்களும் முக்கியமானவை. (மேலும்) 16.01.12

_______________________________________________________________________________________________________

நல்லிணக்க ஆணைக்குழு: தமிழ்க் கூட்டமைப்பு விமர்சனம்

பி.பி.சி

இலங்கைப் போருக்குப் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஞாயிற்றுக்கிழமை அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டது.போர்க்கால குற்றச் செயல்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து இலங்கை அரசை விடுவிக்கும் முயற்சியாகவே இந்த விசாரணை அறிக்கையை நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகின்றது. எனவே, இலங்கைப் போர்க்காலச் சம்பவங்கள் தொடர்பில் நியாயம் கிட்ட வேண்டுமானால் சர்வதேச மட்டத்திலான விசாரணையொன்றை நடத்தியாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாகவும் அந்தக் கட்சியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் படிமுறைகளும் நடைமுறைகளும் தமிழ் மக்களின் நம்பிக்கையை வெல்லத் தவறிவிட்டதாகவும், அவை சர்வதேச நியமங்களை பின்பற்றியிருக்கவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது. அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித ஏற்பாடுகளும் இருக்கவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ‘ஆணைக்குழுவின் அணுகுமுறை அடிப்படையிலேயே பிழையானது: தேர்ந்தெடுக்கப்பட்ட வகையில் சாட்சிகளை ஆணைக்குழு பயன்படுத்திக் கொண்டுள்ளது, உண்மைத் தகவல்களுக்கு ஏற்ப சட்டம் பிரயோகிக்கப்படவில்லை’ என்றும் ஆணைக்குழு தொடர்பில் தமிழோசையிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

_______________________________________________________________________________________________________

இந்தியா வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகை

  இந்தியா வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளார். இலங்கையில் மூன்று நாள் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி உட்பட பல அரச உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவரது விஜயத்தின் போது, மேற்கொள்ளப்போகும் பேச்சுக்கள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பாகவே அனைவரது கவனமும் இன்று திரும்பியுள்ளது. கிருஷ்ணாவின் இந்த விஜயத்தின் போது பொருளாதார உடன்படிக்கைகள் சிலவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டாலும்கூட, அரசியல் விவகாரங்களே இதில் மேலோங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுக்களில் காணப்படும் இறுக்கத்தைத் தளர்த்துவதற்கு கிருஷ்ணாவின் விஜயம் உதவும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

_______________________________________________________________________________________________________

கொலையும் கொலைவெறியும்..

- டாக்டர் ருத்ரன்

1Sethulaxmy.ஒரு டாக்டர் கொல்லப்பட்டார்..என்ன பெரிய விஷயம்? பலரும் கொல்லப்படுகிறார்கள், டாக்டர்னா என்ன கொம்பா முளைச்சிருக்கு? 2.கொல்லப்பட்டது ஒரு பெண்.. என்ன பெண்கள் கொல்லப்படுவதில்லையா? 3.அவர் தந்த சிகிச்சை பயனளிக்காமல் நோயாளி இறந்தததால் அவர் கொல்லப்பட்டார்..   பின்னே என்ன..இந்த டாக்டர்களெலாம் திமிர் பிடிச்சி திரியறாங்க..போட்டா தான் புத்தி வரும். அவங்க ஆளை கொன்னுட்டாங்களாம் அதுக்கு ‘அடையாள’ பணிநிறுத்தம் பண்றான்களாம்..டேய், நீங்க வேலை செய்யலேன்னா ஜனங்க சாவாங்களே, அறிவில்லே, பொறுப்பில்லே, பொறுக்கிகளா! எவ்வளோ காசு சம்பாதிக்கிறீங்க....ஏழைங்க வயித்திலே அடிக்காதீங்கடா... மேல் குறிப்பிட்ட மாதிரிதான் சென்ற வாரம் கொல்லப்பட்ட டாக்டர் சாவு பற்றி இணையத்தில் மிகுந்த தொணதொணப்பு. விஷயம் தெரிந்தவர் தெரியாதவர் என்று இணையத்தில் எதுவும் கிடையாதே  எல்லாரும் எச்சில் துப்பினார்கள், எதிர்த்தார்கள், விவாதித்தார்கள், விளக்கினார்கள் விமர்சித்தார்கள்.  சீக்கிரமே ஒரு தொலைகாட்சியில் நடந்தது என்ன என்று தெரியாமலேயே பேசிவிட்டு மாமனுக்கும் மச்சினிக்கும் ஃபோன் போட்டு ”இன்னைக்கு டிவிலெ வரேன்” என்றும் சிலாகித்துக் கொள்வார்கள். அவர்கள் பாவம், தாம் என்ன சொல்கிறோம் செய்கிறோம் என்று தெரியாதவர்கள் என்பதால் பரமபிதாவும் மன்னித்து விடுவார். ஆனால் அறிவாளிகளாகத் தம்மை அடையாளப் படுத்திகொண்டவர்களும் இந்த கோஷத்தில் இணைந்தார்கள், `கொலவெறி` பாட்டை ரசித்தே ஆக வேண்டும் என்பது போல. புனைக்கப்பட்ட போலி புது காந்தி போலல்லாமல், இது வெறும் ஊடக விளையாட்டாக இருக்கவில்லை. மக்களில் ‘சாது’ என்று கருதப்பட்டவர்களும் கொதித்தார்கள். கொலைக்காக அல்ல, கொன்றது என்ன பெரிய தப்பு என்று! பேரறிவாளனுக்கு மரண தண்டனை கூடாது என்று கூக்குரலிட்டவர்கள் கூட, செத்த டாக்டர் என்ன பெரிய வெங்காயமா  என்று மட்டும் தான் கேட்கவில்லை; ”தப்பு பண்ணினா அதனாலெ கொன்னுட்டாங்க..என்னப்பா பெரிய மேட்டர்” என்றும் நேரடியாகக் கேட்கவில்லை, என்ன இருந்தாலும் அறிவாளிகள் அல்லவா?  (மேலும்) 16.01.12

_______________________________________________________________________________________________________

சஜித் , தயாசிறி இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவர்?

 ஐக்கிய தேசியக் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச குருணாகலை மாவட்ட எம்.பி தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு கட்சி தடை விதித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பான இறுதி முடிவு நாளை எடுக்கப்படும். ஐ.தே.க கட்சியின் செயற்குழு நாளை கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெறவுள்ளது. ஒழுக்காற்று நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு அதில் அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டால் கட்சியில் இருந்து நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஐ.தே.கட்சியின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். சஜித் பிரேமதாச, தயாசிறி ஜயசேகர எம்.பி.க்கள் சில வருடங்களாக கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயற்படுவதாகவும் பிரதேச மட்டத்தில் கட்சிக் கூட்டங்களை நடத்தி கட்சி ஆதரவாளர்களைத் திசை திருப்புவதாகவும் பல குறைபாடுகள் கட்சித் தலைமைக்குக் கிடைத்துள்ளதாகவும் அப்பேச்சாளர் தெரிவித்தார்.  மேற்படி இருவரையும் நல்வழிப்படுத்தி கட்சியின் வளர்ச்சிக்குப் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ள எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

_______________________________________________________________________________________________________

இராஜதந்திர சிறப்புரிமையால் ஜனாதிபதிக்கு வழக்கிலிருந்து விலக்கு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மீது போர் குற்றம் சுமத்தி கொலம்பியா மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த வழக்கில் இலங்கை ஜனாதிபதிக்கு இராஜதந்திர சிறப்புரிமைகள் உள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. காசிப்பிள்ளை மனோகரன் உள்ளிட்ட மூவர் இணைந்து இலங்கை ஜனாதிபதி மீது போர் குற்ற வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கை ஜனாதிபதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜனாதிபதிக்கு இராஜதந்திர சிறப்புரிமை இருப்பதாக வாதிட்டார். இவரது இந்த வாதம் குறித்து தமது நிலைப்பாட்டை வெளிப்பட்டுத்துமாறு கொலம்பிய மாவட்ட நீதிமன்றம் அமெரிக்க அரசாங்கத்தை கோரியிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நீதிமன்றிற்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இலங்கை ஜனாதிபதிக்கு இராஜதந்திர சிறப்புரிமை இருப்பதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

_______________________________________________________________________________________________________

ஒரு பெண்புலியின் உண்மைக் கதை (தொடர்ச்சி) (7)

யாழ்ப்பாணக் கோட்டை காவலரணில் காவலுக்கு நிற்கும் கெரில்லாக் கவிஞர்

டி.பி.எஸ். ஜெயராஜ்

காவலரண் கடமை

weddedறு பெண்கள் சித்திரா, சஞ்சிகா, துவாரகா, பானு.சேனகா மற்றும் நிர்மலா ஆகியோர் ஒரு குழப் பிரிவாகப் பிரிக்கப்பட்டு காவலரண் கடமைக்காக நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் திருநெல்வேலியில் உள்ள சித்திராவின் வீட்டில் தங்கியிருந்து மிதிவண்டி மூலம் யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதிக்குப் போய் வந்தார்கள். ஆண் புலி அங்கத்தவர்களும் காவலரண் கடமையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தார்கள். சேனுகாவும் மற்றவர்களும் தொலைத் தொடர்பு கட்டிடம் அமைந்திருந்த சுற்றாடலில் காவலில் ஈடுபட்டிருந்தார்கள். பெண்களின் கடமைகள் ஒரு துணைத் தன்மையானதாக இருந்தன.உண்மையான காவலரண் கடமை ஆண்களினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன. அந்த ஆறு பெண்களும் ஒரு மாற்றீடு அடிப்படையில் காத்திருப்பவர்களாகவே இருந்தாhகள். அவர்கள் வெறுமனே அவதானித்துக் கொண்டு முதலுதவி உபகரணங்களை தயார் நிலையில் வைத்தபடியே இருக்கவேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த காவலரண் இலக்கங்கள் 2,3 மற்றும் 6என்பனவாகும்;. காலரண் 6க்கு பொறுப்பாக வேந்தனும் காவலரண் 3க்குப் பொறுப்பாக முத்துவும் இருந்தாhகள். தரணி எனும் இயற்பெயரைக் கொண்ட சித்திரா மற்றும் சேனுகா ஆகியோர் காவலரண் 2க்கு நியமிக்கப் பட்டிருந்தார்கள். குபேரன் என்றும் அழைக்கப்படும் ரங்கன் என்பவரே இதற்கு பொறுப்பாக இருந்தார் .சிறிது காலத்துக்குள் ரங்கன் அங்கு ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகவே அங்கு இருக்கிறார் என்பதை சேனுகா புரிந்து கொண்டாள். அது வாழ்வுக்கும் சாவுக்கும் மத்தியில் காதல் கடவளாகிய மன்மதன் தனது ஐவகை மலர்கள் கொண்டு விடுக்கும் காதல் அம்புக்காகவே. ராஜசூரியர் எனும் இயற்பெயர் கொண்ட ரங்கன், சேனுகா ஒரு பாடசாலை மாணவியாக இருந்த போதிலிருந்தே அவள்மீது ஒரு கண் வைத்திருந்ததோடு அவளது கவனத்தை ஈர்ப்பதற்காக பலமுறை முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரது ஆர்வத்தைப் பற்றி அவளுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. சேனுகா எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்த பின்பு ரங்கன் தனது முயற்சிகளை மீண்டும் புதுப்பித்துக் கொண்டார். சந்தர்ப்ப வசமாக “தமிழ் பெண்புலி”நூலில் ரங்கன், ரோசன் எனும் பெயரால் குறிப்பிடப் பட்டிருக்கிறார்.  (மேலும்) 14.01.12

_______________________________________________________________________________________________________

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (30)

31. வாயினால் கொடுத்து உடம்பினால் வாங்கினேன்!

ipkf-ltteபுலிகளின் விசாரணையாளன் தயாபரன் கேட்ட கேள்விக்கு காரண காரியங்களோடு விரிவான ஒரு பதிலை அளிப்பதென்பது சாத்தியமான ஒன்றல்ல. எனவே சுருக்கமான பதில் ஒன்றைச் சொன்னேன். “எமது கட்சி தமிழ் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வாக தமிழீழத்தை ஏற்கல்லை. அதாலை அந்தக் கொள்கையுடைய எந்த இயக்கத்தோடையும் என்னாலை சேர்ந்து வேலை செய்யேலாது. அதாலைதான் நான் ஒரு இயக்கத்தோடையும் சேரேல்லை”. இதுவே அவனது கேள்விக்கு எனது பதில். “சிங்கள அரசாங்கம் தமிழர்களுக்கு இவளவு கொடுமையளைச் செய்த பிறகும் அவங்களோடை சேந்து வாழலாம் எண்டு நம்புறியளோ?” என அவன் சற்று காட்டமாகக் கேட்டான். “இந்தப் பிரச்சனை வெள்ளைக்காரனாலை உருவாக்கப்பட்டு இரண்டு பக்கத்திலையும் உள்ள இனவாதிகளாலை வளக்கப்பட்ட விசயம். எனவே இதிலை மக்களிலை பிழை இல்லை” என்று சொன்னேன். “அப்படியெண்டால் தமிழ் மக்களுக்கு ஒரு கொடுமையும் சிங்களவங்களாலை நடக்கல்லை எண்டு சொல்லுறியளோ?” எனக் கேட்டான். “சில சந்தர்ப்பங்களிலை சாதாரண சிங்கள மக்களும் சில சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கெதிரான பெரும்பாலான சம்பவங்கள் சிங்கள இனவாத அரசியல்வாதிகளாலையும் அவங்கடை காடையர் கூட்டத்தாலும் தான் நடத்தப்பட்டது” எனச் சொன்னேன். எனது பதில் அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்பது புரிந்தது. ஆயுதப் போராட்டம் ஒன்றைத் தொடங்கி, அவ்வாறு தொடங்கிய ஏனைய இயக்கங்கள் எல்லாவற்றையும் அழித்தொழித்துவிட்டு, அதன் பின்னர் இந்திய அமைதிப்படையுடனும் போர் புரிந்துவிட்டு, தனிக்காட்டு ராஜாவாக இருக்கும் ஒர் இயக்கத்தைச் சேர்ந்தவன் அவன். அதுவும் அவ்வியக்கத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவன். பெரும் பயிற்சிகளைப் பெற்றிருப்பான். தமிழ் தேசிய வெறியின் உச்சத்தில் இருக்கும் அவன் போன்றவர்கள் நான் சொல்லும் கருத்துக்களை காதால் கேட்கவே விரும்பமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். (மேலும்) 14.01.12

_______________________________________________________________________________________________________

இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்காவிட்டால்  இணையதளங்களை தடை செய்ய நேரிடும் என டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 13-01-2012 அன்று வெளியிட்டது

இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில் நீதிபதி SURESH CAIT இவ்வாறு தெரிவித்துள்ளார். Google நிறுவனத்தின் விநியோக உரிமை மட்டுமே தங்களிடம் உள்ளதாகவும்இ இணையதளங்களில் பதிவேற்றப்படும் தகவல்கள் புகைப்படங்கள் போன்றவற்றிற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றும் Google India நிறுவனம் எடுத்துரைத்த வாதங்களை நீதிபதி நிராகரித்து விட்டார். மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டால் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்கள் மீதும் சீனாவைப் போல் இந்தியாவிலும் கடும் நடவடிக்கை எடுக்க ஆணையிடப்படும் என்று நீதிபதி கூறினார். இணையதளங்களில் உள்ள தகவல்களை தணிக்கை செய்யும் பொறுப்பை இணைய சேவை வழங்கும் பிஎஸ்என்எல் ஏர்டெல் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும் என்ற கூகுள் நிறுவனத்தின் கருத்தை ஏற்றுக் கொள்ள நீதிபதி மறுத்துவிட்டார்.

_______________________________________________________________________________________________________

அமைச்சர் எஸ்.பியின் உரையின்போது யாழ் பல்கலை மாணவர்கள் கூச்சல்'

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் யாழ் பல்கலைக்கழத்தில் உள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கூறியபோது, முதல் வருட மாணவர்கள் கூச்சலிட ஆரம்பித்தாக பல்கலைக்கழக மாணவர் உரிமை செயற்பாட்டாளரான உதுல் பிரேமரட்ன கூறினார். அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் என முத்திரைக்குத்த முற்படுவதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரும் நாம் இலங்கையர் அமைப்பை நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான உதுல் பிரேமரட்ன கூறினார். 'ஒருவரை எல்.ரி.ரி.ஈ. செயற்பாட்டாளர் என முத்திரைகுத்திவிட்டால் அவரின் உரிமைகளை அரசாங்கம் நசுக்குவது சுலபமாகும். அரசாங்கம் எம்மை பயங்கரவாதிகள் எனவும் விமர்சிக்கிறது' என அவர் தெரிவித்தார். யாழ் பல்கலைக்கழகத்தில் அமைச்சர் தமிழ் மொழிபெயர்ப்பாளரின் உதவியின்றி சிங்களத்தில் உரையாற்ற ஆரம்பித்தபோதும் மாணவர்கள் கூச்சலிட்டதாகவும் அதன்பின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் அழைக்கப்பட்டதாகவும் உதுல் பிரேமரட்ன கூறினார்.

_______________________________________________________________________________________________________

சடலங்கள் மீது சிறுநீர் கழித்த அமெரிக்க படையினர் இனங்காணப்பட்டனர்.

 

ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட ஆப்கானியர்களின் சடலங்கள் மீது சிறுநீர் கழித்த அமெரிக்கப் படையினர் நால்வரும் இனங் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படையினர் நால்வரில் இருவர் அதிகாரிகளால் நேர்காணப்பட்டுள்ளனர். அவர்கள் கைதுசெய்யப்படவில்லை எனினும் அவர்கள் படையினருக்கு இழுக்கை ஏற்படுத்திய குற்றச்சாட்டை எதிர்நோக்குவதாகவும் அமெரிக்காவின் சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் அமெரிக்க கடற்படையின் 'மரைன்ஸ்' எனும் பிரிவை சேர்ந்தவர்களாவர். இப்படையினர் நால்வரும் வடகரோலினா மாநிலத்தின் கேம்ப் லெஜுவன் எனும் மரைன்ஸ் முகாமை தளமாகக் கொண்ட இரண்டாவது மரைன்ஸ் ரெஜிமென்டின் 3 ஆவது பெற்றாலியனில் இருந்தவர்கள் என  சி.என்.என். தெரிவித்துள்ளது. எனினும் இவர்களின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இம்முகாமில் சுமார் 40,000 படையினர் இருப்பதாகவும் 2 ஆவது மரைன்ஸ் படையணியின் 3 ஆவது பெற்றாலியனில் சுமார் 800 பேர் அங்கம் வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க கடற்படையின் சட்ட அமுலாக்கல் பிரிவு, இச்சம்பவம்  தொடர்பான பிரதான விசாரணையை நடத்துகிறது. அமெரிக்க படை சட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் சர்வதேச போர்விதிகளை மீறியமை தொடர்பான ஆதாரங்களை அப்பிரிவு மதிப்பீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை மரைன்ஸ் படைப்பிரிவும் தனியான விசாரணையை நடத்துகிறது. 'இந்த வீடியோ வெளிவந்த விதம் அதன் உண்மைத் தன்மையை நாம் உறுதிப்படுத்தாத போதிலும், அதில் வெளிப்படுத்தப்பட்டுள் காட்சிகள் எமது எமது ஆழமான பெறுமானங்களுக்கு இசைந்தவையாக இல்லை. அவை மரைன்ஸ் படையினரின் பாத்திரத்தை பிரதிபலிப்பதாகவும் இல்லை' என மரைன்ஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். (மேலும்) 14.01.12

_______________________________________________________________________________________________________

புலிகளின் முத்திரை வெளியிட்ட நபர் மீது பிரான்ஸில் விசாரணை ஆரம்பம்!

ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை செய்யப்பட்ட  புலிகளின் படங்கள் பதித்த அஞ்சல் முத்திரைகளை வெளியிட்டார் என்று அடையாளம் காணப்பட்ட நபர் மீது பிரான்ஸ் சட்டமாதிபர் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரான்ஸின் லா போஸ்ட் நிறுவனத்தின் ஊடாக இலகுவாக யாரும் முத்திரைகளை வெளியிடலாம் என்ற சட்டவிதிகளில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி முத்திரை வெளியிட்டார் என இவர்மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இவர் பிரான்சின் முன்னணி தமிழ் அமைப்பை சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த முத்திரை விநியோகத்தினால் பிரான்ஸ்சுக்கான தூதுவர்- இலங்கை அரசிடம் மன்னிப்பு கோர வைகப்பட்டதனால் பிரான்ஸ் தூதுவர் ஆத்திரமடைந்ததன் காரணமாகவே இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த நடவடிக்கை தற்பொழுது பிரான்ஸ் அரசின் தமிழர் மீதான பரிவான போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும் அறியமுடிகிறது. எனத் தெரிய வருகிறது.

_______________________________________________________________________________________________________

எல்.ரி.ரி.ஈ. முன்னாள் போராளிகள் எம்முடன் இணைந்துள்ளனர்: ஜே.வி.பியிலிருந்து பிரிந்த குழுவினர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், வட மாகாணத்தில் அரசியல் செயற்பாடுகளுக்காக தம்முடன் இணைந்து செயற்பட்டதாகவும், டிசெம்பர் 9 ஆம் திகதி கடத்தப்பட்ட குகன் முருகானந்தனும் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளில் முன்னர் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் ஜே.வி.பியிலிருந்து பிரிந்த குழுவினர் தெரிவித்தனர். ஜே.வி.பியிலிருந்து பிரிந்தவர்களில் ஒருவரும் 'நாம் இலங்கையர்' அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான உதுல் பிரேமரட்ன இது தொடர்பாக கூறுகையில், நாட்டில் சுமார் 900 அரசியல் கைதிகள் இருப்பதாகவும் அவர்களில் 500 பேருடன் தாம் தொடர்புகொண்டுள்ளதாகவும் கூறினார். 'தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அங்கத்தவர்கள் எம்முடன் உள்ளனர் என்பதை நாம் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அதை தெரிவிப்பதற்கு நாம் அஞ்சவில்லை. நாம் பிரிவினைவாத பயங்கரவாதத்தை அங்கீகரிக்கவில்லை  பிரிவினைவாத அமைப்புகள் எதனுடனும் நாம் அரசியல் நடத்தவில்லை. எனினும் முன்னாள் போராளிகளுடன் நாம் இணைந்து செயற்படுகின்றோம்' என அவர் கூறினார். தமது அமைப்பின் அங்கத்தவர்கள் முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை ஆதரித்தவர்கள் என்பதால் தம்முடன் இணைந்து செயற்படுவதற்கு எல்.ரி.ரி.ஈ. முன்னாள் போராளிகளை சம்மதிக்கச் செய்வது கடினமாக இருந்தது எனவும் அவர் தெரிவித்தார். எனினும் பிரச்சினைகளின் உண்மையான காரணம் வேறு இடத்தில் உள்ளது என்பதை நாம் அவர்களுக்கு விளக்கினோம்.  தமிழர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு பிரச்சினைகள் உள்ளன என்பதை நாம் ஏற்றுக்கொண்டோம்.  எனினும் பிரச்சினையின் அடிப்படைக் காரணம் வர்க்க பேதங்கள் மற்றும் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளியாகும். வர்க்கப் பிரச்சினை உள்ளது இதற்கு நாம் தீர்வுகாண வேண்டும்' என அவர் கூறினார். எல்.ரி.ரி.ஈ. முன்னாள் போராளிகளுக்கு அரசியல் வாய்ப்புகள் உருவாக்கப்படாவிட்டால் அவர்கள் மீண்டும் பிரிவினைவாதத்தை நோக்கி தள்ளப்படலாம் என உதுல் பிரேமரட்ன கூறினார். டிசெம்பர் 9 ஆம் திகதி கடத்தப்பட்ட குகன் முருகானந்தன் மற்றும் லலித் குமார் வீரராஜு ஆகியோர் கடத்தப்பட்டமை குறித்து ஐ.நா.விடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக ஐ.நா. விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரவித்தார்.

_______________________________________________________________________________________________________

சுவாமி விவேகானந்தரின் சிதைக்கப்பட்ட சிலையும்  சீர்மை பெற்ற சமூக பிரதிபலிப்பும் !

எஸ்.எம்.எம்.பஷீர்

viveganantharசில நாட்களுக்கு முன்னர் ஆரையம்பதி காத்தான்குடி எல்லையில் வைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் சிலையை சில விசமிகள் சேதப்படுத்தியிருக்கிறார்கள். அதனை தொடர்ந்து தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியல் இயக்கங்கள் அப்பிரதேச உள்ளூர் ஆட்சி மன்றங்கள் ஆகியன தமது கண்டனங்களை தெரிவித்துள்ளதுடன் சமூக ஐக்கியத்துக்கு எதிரானவர்கள் இதனை செய்துள்ளார்கள் என்பதால் இது குறித்து மிக அவதானமாக இருக்கும்படி வேண்டி கொண்டதுடன் , இவ்வாறான சமூக விரோத செயலுக்கு பொறுப்பானவர்களை கண்டு  பிடித்து தகுந்த நடவடிக்கையை காவல் துறை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்கள். இந்த உடனடி நடவடிக்கை பரஸ்பரமாக இரு சமூகப் பிரிவினரும் மிகப் பொறுப்புடன் விசமிகளின் விருப்பங்களுக்கு எதிராக வீரியத்துடன் செயற்பட்டுள்ளார்கள் என்பதை  காட்டுகிறது, விவேகானந்தரின் சிலையை உடைத்தவர்கள் யார் என்ற சந்தேகம் , சம்பந்தப்பட்ட இரண்டு ஊர் மக்களின் இடையிடையே எழும் பிரச்சினைகளுடன் தவிர்க்க முடியாமல் தொடர்புபடுத்தப்பட்டு பார்க்கப்பட்டாலும் , இந்த சிலைச் சேதத்தினை தமிழர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்ற அனுமானத்திலும் , ஒருவேளை மூன்றாவது சக்தியாக யாரும் இதனை செய்திருக்கலாம் என்ற ஊகத்திலும் கருத்துக்கள் பரிமாறப்படுவதை உள்ளூர் மட்டத்தில் தவிர்த்திருக்கிறார்கள். சகலரும் சட்டத்தை துணைக் கழைத்திருக்கிறார்கள். இந் நிலைப்பாடு  ஆரோக்கியமானதே. இது ஒரு சிறிய அளவிலான சேதமாயினும் ஒரு சமூகத்தின் , ஒரு பிரதேசத்தின் மத , நம்பிக்கை, அடையாளத்தின்  மீதான அத்துமீறலாக , அடாவடித்தனமாகவே பார்க்கப்படல் வேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக இந்த வேகத்துடனும் வீரியத்துடனும், விவேகத்துடனும் தமிழ் அரசியல் வாதிகளோ முஸ்லிம் அரசியல் வாதிகளோ தமிழ் இயக்கங்களோ மத சமூக சிவில் நிறுவனங்களோ, தனி நபர்களோ  கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனி பள்ளிவாயல் தரைமட்டமாக்கப்பட்ட போது, அல்லது அதன் மீது பிரும்ம குமாரி தியான நிலையம் கட்டப்பட்டபோது கண்டனம் தெரிவிக்க , தமிழ் நிர்வாக அதிகாரிகளின் மேலாதிக்கத்தை கண்டிக்க , அடிப்படை உரிமை மீறலுக்காய் சட்ட நடவடிக்கை எடுக்க, சரி அது போகட்டும் ஒரு அடையாள எதிர்ப்பை தன்னும் காட்ட முன் வரவில்லை. (மேலும்) 14.01.12

_______________________________________________________________________________________________________

நக்கீரன் ஆசிரியர் அவர்களே!

வாசகர்களிடம் மன்னிப்பு கோருங்கள்!

நக்கீரன் வார இதழ் ஆசிரியர் கோபால் அவர்களுக்கு!

தங்களின் வாரம் இருமுறை இதழின்  5-7.01.2012 தேதியிட்ட அட்டைப்பட செய்தித் தலைப்பும், அதன் தன்மையும் பத்திரிகை தர்மத்திற்கும், என் போன்ற படித்த தமிழ் வாசகர்களுக்கும் ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா' என்பதற்கு பதில் இந்தத் தமிழ் தேசத்தில் ‘ஏன் பிறந்தாய் மகனே' என வெட்கித் தலைகுனிந்து வேதனைப்பட வைத்துள்ளது. தாங்கள் இந்தியாவிற்கு சுதந்தரம் தேவை எனப் போரிட்டவரில்லை. தெரியும். இந்திய தேசம் பாருக்குள் நல்ல நாடாக, ஞானத்திலும் பர மோனத்திலும் உயர்ந்திருந்தது. மனிதனின் உச்சத்தை தெய்வம் என்று தானறிந்து  உயர்ந்து வாழ்ந்த தேசம். ஞான ஒளியேற்றி ஆசிய ஜோதியாய்த் திகழ்ந்த புத்தர் பிறந்த பூமி. - இந்த பூமி அந்நியனிடம் அடிமைப்பட்டு தன் சுயம் இழந்து தவிப்பதை கண்ட மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும், வ.உ.சிதம்பரனார் மற்றும் பணம்படைத்த, செல்வாக்குமிக்க இந்தியர்கள் பலரும் சிறை சென்று பாரத தேசத்தை சிறைமீட்டனர். இன்றுவரை மகாத்மா காந்தி தன் 25 வயது தொடங்கி 85 வயது வரை நடத்திய சத்தியத்திற்கான போராட்டம் தங்கள் அறிவிற்கு எட்டியதில்லை. காந்தியும், நேருவும் இவர்கள் போன்ற பலரும் சுதந்தரம் என்றால் என்ன என்பதை அறிந்து உணர்ந்து, போராடி சிறை சென்று பெற்ற சுதந்திரம். நமது நாட்டின் அரசியல் சட்டம் சில அடிப்படை உரிமைகளை நமக்கு வழங்கியுள்ளது. அதில் ஒன்று கருத்து சுதந்தரம். தயவு செய்து இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை ஒருமுறையாவது படித்துப் பாருங்கள். நமது அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை ஒவ்வொரு சாதாரண இந்தியக் குடிமகனின் உரிமை.   (மேலும்) 14.01.12

_______________________________________________________________________________________________________

கிறீன் கார்ட்டுடன் விளையாடும் பொன்சேகா

இந்த ஆசிரியத் தலையங்கம் 2008 ஒக்டோபர் 5 ந்திகதிய சண்டே லீடர் பத்திரிகையில் லசந்த விக்கிரமதுங்க அதன் ஆசிரியராக இருந்தபோது பிரசுரிக்கப்பட்டது.

மூன்று வருடங்களுக்கு முன்பு 2009 ஜனவரி 8ல்; படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க அவர்களின் ஞ}பகார்த்தமாக நாங்கள் இக் கட்டுரையை மறு பிரசுரம் செய்கிறோம்.

lasantha-1பொன்சேகாவின் சித்தாந்தத்தின்படி, ஸ்ரீலங்கா 74 விகிதமான பெரும்பான்மை இனத்தவர்களினால் ஆளப்படுமானால்,13.4 விகிதமான அமெரிக்காவின் கறுப்பு இனத்தவர்களைப்  பிரதிநிதித்துவப் படுத்தும் பராக் ஒபாமாவுக்கு அமெரிக்காவின் ஜனாதிபதி பதவி கையெட்டும் தொலைவில் இருக்கிறது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்? மற்றும் யாரும் இதுவரை, அவரின் முகத்தின் நிறம் பொன்சேகாவின் கமக்கட்டின் நிறத்தைப் போலுள்ளது என்பதையோ அல்லது அவர் ஒரு இரண்டாவது தலைமுறை குடியேற்றக்காரர் என்கிற உண்மையையோ குறிப்பிடவில்லை. இந்த விடயத்தில் பொன்சேகாவின் கருத்து என்ன என்பது நமக்குத் தெரியாது, ஆனால் வரும் நவம்பர் 4 ந்திகதி அவர் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும், குறைந்தது அவரை வேட்பாளராக தெரிவு செய்த ஜனநாயகக் கட்சிக்கு நாம் தலை வணங்கத்தான் வேண்டும். மேலும் பொன்சேகா நிச்சயம் இதைப்பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும், ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அவர் – சுயநலமற்ற தேசபக்தியின் உயர் செயற்பாடு காரணமாக – அவரது நேசத்துக்குரிய ஸ்ரீலங்காவையும் மற்றும் அவரது பெரும்பான்மை சிங்கள சகோதரர்களையும் விட்டுவிட்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்வதற்கு விண்ணப்பித்தார். மற்றும் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்கர்கள் அவருக்கு ஒரு பச்சை அட்டையை (கிறீன் கார்ட்) வழங்கிக் கௌரவித்துள்ளார்கள், அதன் தொழில்நுட்பக் கருத்து – அதற்காக காத்திரு – ஒரு பன்முகத் தன்மையான விசாவுக்காக என்பதாகும். அநேகமாக தேசபக்தியாளரான பொன்சேகா ஒருவர்தான் உலகத்திலேயே தான் இராணுவத் தளபதியாக பணிபுரியும் நாட்டைவிட்டு வெளிநாடொன்றின் குடியுரிமைக்காக விண்ணப்பித்து அந்நாட்டின் வதிவிட அனுமதியைப் பெற்றுக் கொண்டவர். அதே மனிதர்தான், தேசபக்தியாளர்களின் சேவைக்காக ஸ்ரீலங்காவில் வழங்கப்படும் அதியுயர் கௌரவத்துக்குரிய விருதுகளாகிய (ஆர்.டபிள்யு.பி) ரண விக்கிரம பதக்கம், (பி.பி.பி)பூரண பூமி பதக்கம், (டி.பி.எஸ்)தேச புத்திரர் சன்மானம் என்பனவற்றைப் பெற்றுக் கொண்டதோடு, இப்போது பிறநாட்டு விருதாகிய ஜி.எம்.ஜி.சி ‘எனக்கு ஒரு கிறீன் கார்ட் தாருங்கள’; எனும் விருதையும் வேண்டி நிற்கிறார். தரவுகளின்படி அமெரிக்காவில் 74விகிதம் வெள்ளையர்கள் (ஸ்ரீலங்காவில் 74விகிதம் சிங்களவாகள் உள்ளதைப்போல) உள்ளார்கள், அவரது சொந்த வரைவிலக்கணத்தின்படி அங்கு ஒரு இரண்டாந்தரப் பிரஜையாகப் போவதில் அவரது மனச்சாட்சி அவரை உறுத்தாதா என ஒருவர் எண்ணலாம். (மேலும்) 12.01.12

_______________________________________________________________________________________________________

சீனாவின் வளர்ச்சி – ஒரு பார்வை (3)

நிலம் குறைவு, உற்பத்தி அதிகம்!

– ஜி.விஸ்வநாதன்

china farmers-4உலக மக்கள் தொகையில் 21 சதவிகிதத்தை சீனா கொண்டிருக்கிறது. இந்தியாவை விட பரப்பளவில் சீனா மூன்று மடங்கு பெரிய நாடு. ஆனால், விளைநிலப் பரப்பளவு இந்தியாவை விட சீனாவில் குறைவாகவே உள்ளது. உலகமெங்கும் உள்ள மொத்த விளைநிலங்களில் (Cultivable lands) 7 சதவிகிதம்தான் சீனாவில் உள்ளது. இதை வைத்துக் கொண்டு உணவுப் பொருட்களை மக்களுக்குத் தட்டுப்பாடின்றி வழங்குவது சாதாரண காரியம் அல்ல. சீனாவின் மொத்த நிலப் பரப்பில் விளைநிலப் பரப்பளவு குறைவாக இருப்பதற்கு, அங்கு மலைகள், குன்றுகள், காடுகள் அதிகமாக இருப்பதுதான் காரணமாகும். அதே சமயம் இந்தியாவைப் பொறுத்தவரை, மொத்த நிலப் பரப்பில் 50 சதவிகித அளவு விளைநிலங்களாக இருப்பது நமக்குச் சாதகமான அம்சமாகும். சீனாவில் விவசாயப் பயன்பாட்டுக்கான நிலத்தின் அளவு ஏற்கெனவே குறைவாக உள்ள சூழ்நிலையில், ஆண்டுதோறும் விளை நிலப் பரப்பளவு மேலும் குறைந்து கொண்டே வருகிறது. இதற்குக் காரணம் – மண் அரிப்பு, தொழிற்சாலைகளின் பெருக்கம் மற்றும் நகர்ப்புறங்களில் வீட்டு மனைகளை உருவாக்க விளைநிலங்களைக் கையகப்படுத்துவது ஆகியனதான். இதன் காரணமாக வருடத்துக்கு சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவுக்கு விளைநிலப் பரப்பளவு குறைந்து வருகிறது. சீன அரசு இதுகுறித்து பெரிதும் கவலைப்படுகிறது. சீனாவில் உள்ள வேளாண் விஞ்ஞானிகள், 2020-ஆம் ஆண்டுக்குள், இப்போதுள்ள விளைநிலப் பரப்பில், 1 கோடி ஏக்கர் விளைநிலத்தை சீனா இழந்துவிடும் என்று எச்சரித்துள்ளனர். அதனால் சீன அரசு, 12 கோடி ஏக்கரை விளைநிலமாகப் பாதுகாக்க வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளது. விளைநிலத்தின் அளவு குறைவாக இருந்தாலும், சீனாவில் உற்பத்தித் திறன் அதிகம். அங்கு ஒரு ஏக்கரில் சராசரி விளைச்சல் இந்தியாவை விட இரு மடங்கு அதிகம். அதற்குக் காரணம் – மண்ணின் தன்மை, பாசன முறை மற்றும் அதிக விளைச்சல் தரும் ரகங்களைப் பயிரிடுவது ஆகியவைதான்.உலக நாடுகளில் தானிய வகைகளையும், இறைச்சியையும் அதிகம் உட்கொள்வது சீனர்கள்தான். அதே போல உரங்களைப் பயன்படுத்துவதிலும் சீனா முதலிடத்தில் உள்ளது. அங்கு ஒரு ஆண்டுக்கு மொத்த உணவுப் பொருள் உற்பத்தி 53 கோடி டன். இந்தியாவில் உற்பத்தி 24 கோடி டன்.1949-ல் சீனாவில் கம்யூனிஸ ஆட்சி வந்த பிறகு, நிலங்கள் முழுவதும் அரசுடைமை ஆக்கப்பட்டது. அரசு அந்த நிலத்தை விவசாயிகளுக்கு 30 வருடங்கள் குத்தகைக்குகொடுத்தது. (மேலும்) 12.01.12

முன்னைய பதிவுகள்

10years thenee-1

yarltv

Yarl TV Live

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்

சிங்களவர்கள் ஆகிய நாங்கள்

யாழ்ப்பாணத்தின் அவலம்!

பரீசில் பரிதிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்: புலிகளின் உள்ளக அதிகாரப் போராட்டம் (பகுதி-1)

பரீசில் பரிதிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்: புலிகளின் உள்ளக அதிகாரப் போராட்டம் (பகுதி-2)

ராஜீவ் கொலையாளிகளின் குற்றப் பின்னணி!

தமிழ் மக்கள் இழந்து வரும் சந்தர்ப்பங்கள்

றொபேட் பிளேக், தயவுசெய்து ஸ்ரீலங்கா மக்களுக்குப் பதில் சொல்லுங்கள் (1)

றொபேட் பிளேக், தயவுசெய்து ஸ்ரீலங்கா மக்களுக்குப் பதில் சொல்லுங்கள் (2)