a_Pen

முதற்பக்கம்

கட்டுரைகள்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம்             பெண்ணியம்        புதியபாதை                      அலை                       பூர்வீகம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/  srilankans.org.au              www.lankamuslim.org   Communist party srilanka

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           29.01.2010

ஜனதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு  வீரர்களும்

எஸ்.எம்.எம்.பஷீர்

எனது ஜனதிபத்திதேர்தலும் இனப்பிரச்சினை தீர்வு எனும் மாயமான் வேட்டையும் என்ற கட்டுரையின் பின்னர் நிகழ்ந்த சில சம்பவங்கள் எனது கட்டுரையில் குறிப்பிட்ட அனுமானங்களை பின்னூட்ட கருத்துக்களை மெய்பித்திருக்கின்றன; என்பதால் அவை பற்றி எனது அண்மைய அவதானங்களை எழுதலாம் என நினைக்கிறேன். அண்மையில் (சில தினங்களுக்கு முன்பு ) காத்தான்குடியில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் சரத் போன்செகாவுக்கான ஆதரவுக் கூட்டத்தில் பேசும்போது ஹக்கீம் புலிகளின் சென்ற ஜனாதிபதிதேர்தல் பகிஸ்கரிப்பு குறித்து  " சென்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்க்ரமசிங்ஹா தோல்வி அடையச் செய்யப்பட்டார்.  அந்த அர்த்தமில்லாத பகிஸ்கரிப்பு இன்று மிகப்பெரிய அனர்த்தங்களை   உருவாக்கியது “என்று குறிப்பிட்டார்  (அனர்த்தம் என்றால் சிலருக்கு சுனாமியும் அதற்காக அமைச்சராகவுள்ள அமீரலியும் ஞாபகம் வரலாம்)  ஒரு வேலை  ஹக்கீமை பொருத்தவரைக்கும் மகிந்த ஆட்சிக்கு வந்தது அதன் பின்னரான நிகழ்வுகள் யாவுமே “அனர்த்தங்கள்” என்றால் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதும் அனர்த்தந்தான் .  (மேலும்)  10.01.2010

______________________________________________________________________________________________________________

ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது தாக்குதல்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சிலரால் தாக்கப்பட்டு உடலில் எரியூட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய பிரஜையின் உடல் நிலை தேறிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. விருந்துபசாரம் ஒன்றில் கலந்துவிட்டு மனைவியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது 29 வயதான இந்த நபரின் உடல் மீது கும்பலொன்று திரவம் ஒன்றை வீசி தீ மூட்டியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் இனத் துவேசத்தால் மேற்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் தெளிவில்லையென பொலிசார் கூறுகின்றனர். மெல்பன் நகரில் இந்திய பட்டதாரி மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டு ஒருவாரம் கழிந்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்திய மாணவர்கள் மீது ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் தாக்குதல்கள் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. - B.B.C News

______________________________________________________________________________________________________________

று பக்கம் நான்கு / ஒரே பக்கம்

- அஹ்மத் ஷா

mahinda and sarathகுட்டித் தீவான இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தல் என, உலகம் தெரிந்த மெத்தப் படித்த மேதாவிகள் நினத்துக் கொண்டு - தங்கள் தங்கள் இனப் பிணங்களின்- இரத்தங்களின் வேண்டுகையில் - அவாவில் தங்களது உழைப்பை சந்ததி - சந்ததிக்காய்ச் சொத்துச் சேர்த்து வைக்கிற களிப்பில் பக்கம் பக்கமாக விளாசக் கூடும். நம்ப முடியவில்லை. ஒரு வருடத்துள்ளேயே ஒன்றாய் இருந்து - உலகம் பூராக "பயங்கரவாதிகள் - தடை செய்யப் படவேண்டும்" என்றெல்லாம் ஆதாரம் சமர்ப்பித்து - தொண்ணூறு விகிதத்திலாவது வேரோடு பிடுங்கிய பின் இருவருமே ஏட்டிக்குப் போட்டியாக  நாடு பூராக வெற்றி விழாக் கொண்டாடி சரியாக இன்னும் அமர முடியவில்லை;  "வெற்றி உனதல்ல, எனதே" என்கிறார்கள்,  ஆழுக்கொருத்தராக.  என்ன செய்வது? கண் எதிரே நிகழ்ந்து கொண்டிருப்பதை? நம்புகிறோம் துப்பாக்கிகளெல்லாம் தூங்கிப் போயின என்றால், விடமாட்டார்கள் போலிருக்கிறது, அரசியல் என்கிற தொழிலே ரத்தம் பார்க்கிறதாயிற்று. இதை இன்னும் ஆழமாக நோக்கினால் உறவு, குடும்பம், தவறு, வயது, காலத்தின் சிந்தனைப் போக்கு இப்படி எதுவும் எடுபடாத படி "சட்டப் படி ஆழ" வருபவராக சரத் ஜோடிக்கப் பட்டு, விற்பனைக்கு விடப் பட்டுள்ளார். எல்லாமே சரிதான். ஆனால் எம்மால் இன்னும் நம்ப முடியாத படி சில  சம்சயங்கள் உண்டு. புத்தா, முருகா, அல்லாஹ்வே யாரும் தெரிந்தவரை எனக்குக் காட்டு. எல்லோருக்குமாக விளங்க வை.. (மேலும்)  10.01.2010

______________________________________________________________________________________________________________

 தமிழர் தேய்ந்த கூட்டமைப்பு

   விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழர் தேசிய கூட்டமைப்பு பிரபாகரனின் மரணத்தை அடுத்து பல பிரிவுகளாக உடைந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல தமிழர் தேய்ந்த கூட்டமைப்பாக மாறியுள்ளது. பிரபாகரன் இன்று உயிருடன் எந்த மூலையில் ஒழித்திருக்கிறார் என்று தெரிந்திருந்தால் கூட இந்த தமிழர் தேய்ந்த கூட்டமைப்பினர் உயிருக்குப் பயத்தினால்; இப்படியாகப் பிரிந்து தன்னிச்சையாக இயங்கமாட்டார்கள். பிரபாகரனும் விடுதலைப்புலிகளின் தலைமையும் அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று நன்றாகத்தெரிந்து கொண்ட பின்னர் தமிழர் வரலாற்றில் எந்தத்தமிழ்த்தலைமைகளும் செய்யாத வரலாற்றுத்துரோகத்தை  இந்த தமிழர் தேய்ந்த கூட்டமைப்பினர் இப்போது புரிந்திருக்கின்றனர். ஐனாதிபதி மகிந்தா மட்டக்களப்பு விஐயம் செய்தபோது கோயிலுக்கு சென்று வழிபட்டபோது மகிந்தாவுக்கு சந்தனப்பொட்டு வைத்த காரணத்தினால்  புலிகளிகளினால்  இந்துக்குருக்கள் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டபின்னர்  மகிந்தவின் பிறந்தநாளுக்கு சென்று வாழ்த்தி கட்டிப்பிடித்து படமும் எடுத்துக்கொண்டார் வன்னி மாவட்ட தமிழ் கூட்டமைப்பு எம்.பி கிசோர் அவர்கள்.   (மேலும்)  10.01.2010

______________________________________________________________________________________________________________

நிவாரண கிராமங்களில் இருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்

"அச்சமின்றி வாழும் சூழல் இப்போது உதயமாகியுள்ளது"

mahinda idpஅடுத்ததாக என்ன நடக்குமோ என்ற ஒரு பயங்கரமான சூழலில் ஒருபுறம் உயிரையும் மறுபுறம் பிள்ளைகளையும் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்த அந்த நாட்களை நினைத்தாலே குலை நடுங்குகிறது. அந்தச் சமயத்தில் எங்களையும் பிள்ளை களையும் பாதுகாத்து எமக்கு கைகொடுத்து கரையேற்றியவர் ஜனாதிபதி ராஜபக்ஷ. ஒரு புதிய வாழ்க்கையை பெற்றுத் தந்தார். அதனால் அவரை நாங்கள் என்றுமே மறக்கவே மாட்டோம்.” வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களுக்கும், புனர்வாழ்வு நிலையங்களுக்கும் கொழும்பிலிருந்து ஊடகவியலாளர்கள் விமானம் மூலம் அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டனர். வவுனியா முகாம்களில் இடம்பெயர்ந்தவர்களை அவர்கள் சந்தித்தபோது பலர் இவ்வாறு கூறுவதை கேட்கக் கூடியதாக இருந்தது. இரத்மலானை விமான நிலையத்திலிருந்து விமானப் படை ஏ. என். 32 ரக விமானம் மூலம் அதிகாலை 5.45 மணியளவில் புறப்பட்டுச் சென்ற நாங்கள் சுமார் 45 நிமிட நேரத்தில் வவுனியா விமானப் படைத் தலைமையகத்தைச் சென்றடைந்தோம். யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில் எந்தவித அச்சமும் இன்றி ஊடகவியலாளர்கள் விமானத்தில் செல்லக்கூடியதாக இருந்தது. (மேலும்)  10.01.2010

______________________________________________________________________________________________________________

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆதரித்து வவுனியாவில் பொதுக்கூட்டம், புளொட் தலைவர் உரை-

Siddarthan_Jஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்களை ஆதரிக்கும் கூட்டம் இன்றுமாலை 3மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது. இதில் புளொட் தலைவர். திரு.த.சித்தார்த்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ரிசாத் பதியுதீன், முன்னைநாள் வன்னிப் பாராளுமன்ற சுமதிபால, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிறேம்லால், ஈரோஸ் அமைப்பின் செயலர் பிரபாகரன், சிறீரெலோ தலைவர் உதயகுமார் ஆகியோர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும்;, பத்தாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர். இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள், யுத்த நடவடிக்கைகள் நிறைவுற்று மக்கள் பிரத்தியேகமாக தமிழ்மக்கள் ஒரு சமாதானத் தீர்வு வருமென எதிர்பார்த்திருந்தனர். அப்போது 3லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தார்கள். சர்வதேசமும் இங்கிருக்கின்ற கட்சிகளும் நாங்களும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான இந்த அரசுக்கு இம்மக்களை விரைவில் விடுவிக்க வேண்டும் மற்றும் அவர்களை மீள்குடியேற்ற வேண்டுமென்ற அழுத்தங்களைக் கொடுத்துவந்தோம். எங்களது கட்சியைப் பொறுத்தமட்டில் அழுத்தங்களைக் கொடுத்தது மாத்திரமல்லாது புலிகளால் பலவந்தமாகப் பிடிக்கப்பட்ட சிறார்களை பெற்றோரிடம் கையளிக்க வேண்டுமென்றும் அதுவே அவர்களுக்கு சரியான புனர்வாழ்வு நடவடிக்கையாக அமையுமென்றும் சுட்டிக்காட்டியிருந்தோம். (மேலும்)  10.01.2010

______________________________________________________________________________________________________________

ஜெனரல் பொன்சேகா வெற்றிபெற்றால் பிரபாகரன் மீண்டும் உயிர்பெறுவார்-வீரவன்ச தெரிவிப்பு;

புலிகள் இயக்கத்தின் ஊதுகுழலாக செயற்பட்ட அமெரிக்கா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இன்று ஜெனரல் சரத் பொன்சேகாவினை வெற்றி பெற வைப்பதற்கு பாரியளவு நிதியினை செலவிட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையலுவலகத்தில் நடைபெற்றப் போதே விமல் வீரவன்ச எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,. ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூட்டணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்ததன் மூலம் தேசத் துரோக கும்பல் தனது பரிபூரண நிலையை அடைந்துள்ளது. பாதுகாப்பு வலயங்கள், இராணுவ முகாம்கள் என்பனவற்றை வடக்கிலிருந்து முற்றாக அகற்றல், சுயாட்சியை ஏற்படுத்தல், வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைத்தல், சிறையில் உள்ள புலி உறுப்பினர்களை விடுதலை செய்தல் உட்பட பல்வேறு நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஜெனரல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொண்டுள்ளார்.  (மேலும்)  10.01.2010

______________________________________________________________________________________________________________

தமிழ்கைதிகள் விரைவில் விடுதலை: நீதி அமைச்சின் செயலாளர் தகவல்!

jail-Sri-Lankaவிடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப் பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவிருப்பதாக நீதி அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்துள்ளார்.இந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழ்ப் புத்தீஜீவிகள் குழு ஒன்று அவரை நேற்று சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தியபோதே அவர் இத்தகவலைத் தெரிவித்தார். புலம்பெயர்ந்த தமிழ் புத்திஜீவிகள் குழு ஒன்று ஜனாதிபதியை அண்மையில் அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தது. இச்சந்திப்பின்போது தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இந்த தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தபோது, “எந்தத் தமிழர்களையும் தேவையில்லாமல் சிறையில் வைத்திருப்பது தமக்கு விருப்பமானதல்ல. சட்டப்படியான விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்யுமாறு ஏற்கனவே தான் நீதி அமைச்சின் செயலாளருக்கு பணித்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். (மேலும்)  09.01.2010

________________________________________________________________________________________________________________

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 713 பேர் இன்று வவுனியாவில் விடுதலை: ஏனையவர்களை கட்டம் கட்டமாக விடுவிக்க நடவடிக்கை

புலிகள் இயக்க முன்னாள் உறுப் பினர்கள் 713 பேர் இன்று (09) சனிக் கிழமை வவுனியா செட்டிக்குளத்தில் நடைபெறும் வைபவமொன்றில் வைத்து விடுவிக்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத் தின் பணியகம் தெரிவித்தது. பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பு இல்லாதவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார். வவுனியா, பம்பைமடு புனர் வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இவர்களிடையே 18வயதுக்குக் குறைவானவர்கள் சுமார் 100 பேரும் அடங்குவர். ஏனையவர்கள் தொடர்பான தகவல்களும் திரட்டப்பட்டு வருவதோடு பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்பற்ற வர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். ஏனையவர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட உள்ளனர். படையினரிடம் சரணடைந்துள்ள சுமார் 11,544 புலிகள் இயக்க முன் னாள் உறுப்பினர்கள் 18 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். (மேலும்)  09.01.2010

________________________________________________________________________________________________________________

எதிர்க்கட்சி வேட்பாளரின் விஞ்ஞாபனத்தில் தமிழ்க் கூட்டமைப்பினர் ஏமாற்றம்: இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விசேட குறிப்பு எதுவும் விஞ்ஞாபனத்தில் இல்லை

sampanthan-3எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத் தினால், தமிழ்த் தேவிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில சிறுபான்மைக் கட்சிகள் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விசேட குறிப்பு எதுவும் விஞ்ஞாபனத்தின் குறிப்பிடப்படாததே இந்த ஏமாற்றத்துக்குக் காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது. எதிரணி வேட்பாளர் வெளியிட்டுள்ள விஞ்ஞாபனத்தில் பொரளாதார விவகாரங்கள் அடங்கிய அத்தியாயமே விரிவான முறையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இத னால், சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை அவசரப்பட்டு எடுத்துவிட்டதாக எதிரணியில் உள்ள சில தமிழ்க் கட்சிகள் விசனமடைந்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழ் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வதில் ஒரு தர்மசங்கடமான நிலையைக் தமிழ்க் கட்சிகள் எதிர்கொண்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். (மேலும்)  09.01.2010

________________________________________________________________________________________________________________

மட்டு. முதல்வர் சிவகீதா சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு

மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப் போவதாக ஐ.தே.க தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மகாநாட்டில் அறிவித்துள்ளார். இம்மாகாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோ கணசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஸ்தாபக செயலாளரான இவர் இறுதியாக நடைபெற்ற மட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாநகர முதல்வராகத் தெரிவானார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஸ்தாபகத் தலைவரான அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் லண்டனிலிருந்து நாடு திரும்பி ,கட்சியின் உட்பூசல் காரணமாக விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அக்கட்சியின் உப தலைவராகத் தெரிவானார். (மேலும்)  09.01.2010

________________________________________________________________________________________________________________

வலையுலகப் படைப்பாளிகள்!

எழுத்துலகில் இது தலைமுறை மாற்றத்துக்கான தருணம். பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு, அது பிரசுமாகும் நாளுக்காகக் காத்திருக்கும் தலைமுறையின் காலம் கடந்துபோய்க் கொண்டிருக்கிறது. பெரிய பத்திரிகையில் படைப்புகள் பிரசுரமாகின்றன என்பது படைப்பாளிக்குப் பெருமைதான். ஆனால், அது நடக்காவிட்டால், அந்தப் படைப்புகள் குப்பைக் கூடைக்குத்தான் போக வேண்டும் என்று இன்றையத் தலைமுறை எண்ணிக் கொண்டிருக்கவில்லை.  இந்தக்கால இளைஞர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள், சொல்ல வந்ததைத் தைரியமாகச் சொல்கிறார்கள், பிறரிடம் கருத்துக் கேட்கிறார்கள், விரிவான வாசகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். கட்டற்ற விடுதலை உணர்வு அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. இவற்றையெல்லாம் சாத்தியமாக்க அவர்களுக்கு உதவியிருப்பது இணையம்.  உலகளாவிய வலை, மின்னஞ்சல் போன்ற நிலைகளைத் தாண்டி வேறொரு பரந்த வெளியில் இணையம் பயணிக்கத் தொடங்கி சில ஆண்டுகளாகிவிட்டன. இந்தத் தலைமுறையினர் ஃபேஸ்புக்கையும், ட்விட்டரையும் தெரியாதவர்களைப் படிப்பறிவில்லாதவர்கள் என சீண்டுகிறார்கள். வலைப்பூ இல்லாவிட்டால் முகவரியில்லாதவர்களைப் போலப் பார்க்கிறார்கள். (மேலும்)  09.01.2010

________________________________________________________________________________________________________________

தமிழ்கைதிகள் விடுதலைக்கு நடவடிக்கை: புலம்பெயர் குழுவிற்கு ஜனாதிபதி உறுதி

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். புலம்பெயர்ந்த தமிழ் புத்திஜீவிகள் குழு ஒன்று ஜனாதிபதியை அண்மையில் அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருக்கிறார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் நெயல் நடேசன், சவுதி அரேபியாவிலிருந்து டாக்டர் இராஜசிங்கம் நரேந்திரன், லண்டனிலிருந்து இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோhரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பில், டாக்டர் இராமநாதன் நரேந்திரநாதன் (அவுஸ்திரேலியா) மயில்வாகனம் சூரியசேகரம் (லண்டன்), சபாபதி சுப்பையா குகநாதன் (பிரான்ஸ்), இக்னேசியஸ் செல்லையா யோகநாதன் மனோரஞ்சன் (கனடா), முருகபூபதி (அவுஸ்திரேலியா) ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக புலம்பெயர்ந்த இந்த புத்திஜீவிகள் மகஜர் ஒன்றைக் கையளித்ததுடன், அதுதொடர்பாக நீண்டநேரம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர். (மேலும்)  08.01.2010

________________________________________________________________________________________________________________

தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட வரலாறு காணாத துரோகம்!: வைகோவுக்கு உள்ள உணர்வு கூட சம்பந்தனுக்கு இல்லாமல் போய்விட்டது!!

யாழின் மைந்தன்

sampanthan-15vaiko-1தமிழ் மக்களின் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத துரோகம் ஒன்று அரங்கேறியுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சம்பந்தன் கோஷ்டி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இராணுவத்தளபதியும்,  பேரினவாதியும், போர்வெறியனுமான சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளது. இந்த முடிவு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஏகமனதான முடிவு என்று சம்பந்தன் அறிக்கை விடுத்தாலும், உண்மை அதுவல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோரும், அதன் ஆதரவாளர்களில் ஏகப்பெரும்பான்மையோரும், சம்பந்தன் கோஷ்டியின் காட்டிக்கொடுப்புக்கு விரோதமாகவே உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஜனவரி 27ம் திகதி தேர்தல் முடிவு வெளியாகும் போது அந்த உண்மை நிச்சயம் தெரியவரும். சம்பந்தன் கோஷ்டி சரத் பொன்சேகாவைத்தான் ஆதரிப்பார்கள் என்பது, தமிழ் தலைமைகளின் 60 வருட சரித்திரத்தை அறிந்தவாகள் எல்லோருக்கும் முன்கூட்டியே தெரிந்த விடயம் தான். ஆனால் முன்னைய கால தமிழ் தலைவர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம், அ.அமிர்தலிங்கம் போன்றோரும், பின்னர் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும் கூட, இவ்வளவு தூரம் எவ்வித தயக்கமோ, கூச்ச நாச்சமோ இன்றி, இப்படி தமிழினத்தை எதிரியின் காலடியில் மண்டியிட வைத்த, சம்பந்தன் குழுவின் நடவடிக்கை போன்று ஒருபோதும் செய்ததில்லை!. (மேலும்)  08.01.2010

________________________________________________________________________________________________________________

சரத் ஃபொன்சேகாவின் தேர்தல் அறிக்கை வெளியீடு: வடகிழக்கு இணைப்பு மற்றும் அரசியல் தீர்வு குறித்து கருத்துக்கள் இல்லை

sarath-electionஇலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா வியாழனன்று பத்து அம்சங்கள் அடங்கிய தனது தேர்தல் அறிக்கையை கொழும்பில் வெளியிட்டுள்ளார். முதலாவது நடவடிக்கையாக நாட்டில் அமைதியை ஏற்படுத்தி, ஜனநாயகத்தை நிலைநாட்டுவேன் என்றும், இரண்டாவதாக ஊழலையும், மோசடிகளையும் ஒழிப்பேன் என்றும் சரத் ஃபொன்சேகா தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இவை தவிர ஒவ்வொரு குடும்பத்தினதும் நிதிநிலைமையை உறுதிப்படுத்துவேன் என்றும், வாழ்க்கைச் செலவினங்களை குறைப்பேன் என்றும் கூறியுள்ள அவர் பத்து அம்சங்கள் அடங்கிய தனது தேர்தல் உறுதி மொழிகளையும் வெளிப்படுத்தியுள்ளார். தேசிய நல்லிணக்கத்துக்கான செயற்பாடுகளை ஆரம்பித்து, சுகாதார மற்றும் கல்வி சேவைகளை மேம்படுத்துவேன் என்றும் அவர் உறுதியளித்தார். (மேலும்)  08.01.2010

________________________________________________________________________________________________________________

உபதேசம் மட்டும் உதவாது

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து கொண்டிருந்த தாக்குதல் தற்போது கொலைகளாகப் பரிணமித்துள்ளது. இது ஒரு ஆபத்தான போக்கு. சனிக்கிழமையன்று பஞ்சாபைச் சார்ந்த நிதின்கார்க் என்ற 25 வயது இளைஞர் ஆஸ்திரேலியாவில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். இவ்வாறு ஒரு இந்தியர் கத்திக்குத்துக்கு பலியானது இதுவே முதல்முறை. கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இந்திய மாணவர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதலின் ஒரு பகுதி என பொதுவான கருத்து உண்டு. ஆனால், ஆஸ்திரேலிய அரசு அதை மறுத்துள்ளது. தனிப்பட்ட காரணம் என்று கூறுகிறது. இந்நிலையில் மேலும் ஒரு இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வில்பிரிக் பகுதியில் சாலை ஒரத்தில் எரிந்து கருகிய நிலையில் காணப்பட்ட சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் உடல் இந்தியர் என அறியப்பட்டுள் ளது. இதற்கு சம்பளத் தகராறே காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லும்போது கொடுக்கும் வாக்குறுதிக்கும், அங்கே கொடுக்கும் சம்பளத்திற்கும் சம்பந்தம் இருப்பதில்லை. இதனால் பல்வேறு பிரச்சனைகளும் தகராறுகளும் ஏராளமாக நடப்பதாக ஆஸ்திரேலிய ஏடுகளே செய்திகள் வெளியிடுகின்றன. (மேலும்)  08.01.2010

________________________________________________________________________________________________________________

சரியான முடிவுக்கு மக்கள் வாருங்கள்

‘சொல்பவர் சொன்னால் கேட்போருக்கு மதி என்ன’ என்ற கேள்வி எம்மவர் மத்தி யில் பிரசித்தமானது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது புதிய ஜனநாயக முன்னணி வேட் பாளர் பொன்சேகா அள்ளி வழங்கும் வாக்குறுதிகளைப் பார் க்கும் போது இந்தக் கேள்வியே நினைவுக்கு வருகின்றது. அரசாங்க ஊழியர்ஙகளுக்குப் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்போவதாக இந்த வேட்பாளர் கூறுவதை நம்பும் அளவுக்கு எங்கள் நாட்டு அரசாங்க ஊழியர்கள் முட்டாள்களல்ல. நாட்டின் நிதி நிலைமையைப் பொறுத்தவரை யில் இது சாத்தியமாகாது என்பது அவர்களுக்குத் தெரியும். தொழிற்சங்கமொன்று சம்பள உயர்வுக் கோரிக்கையை முன் வைக்கும் போது கூடுதலான தொகையைக் கோருவதும் அத னிலும் குறைவான தொகைக்குச் சம்மதிப்பதும் சாதாரண நடைமுறை. ஜனாதிபதி வேட்பாளரின் வாக்குறுதி தொழிற் சங்கக் கோரிக்கையைப் போன்றதல்ல. வாக்குறுதி அளித் தால் அதை அப்படியே நிறைவேற்ற வேண்டும். (மேலும்)  08.01.2010

________________________________________________________________________________________________________________

Last ditch Indian bid to stop war revealed

Shamindra Ferdinando

Had President Mahinda Rajapaksa given in to Indian and joint British-French pressure to halt a combined security forces offensive directed at the LTTE, last April, the terrorist leadership would have survived to fight another day.Secretary to the President, Lalith Weeratunga revealed that the President had politely explained to both parties that the LTTE could not be given a lifeline again. Responding to The Island queries, Weeratunga said that Indian delegation comprising Foreign Secretary Shivshankar Menon, Indian National Security Advisor M. K. Narayanan and the then Indian High Commissioner in Colombo Alok Prasad had sought an immediate end to the final assault on the LTTE when they called on the President on April 24. Weeratunga said that the government of India had been concerned about the crisis the Vanni battle could cause, particularly in Tamil Nadu, though the President firmly asserted that Sri Lankan forces could not miss an opportunity to finish off the LTTE. (Read) 08.01.10

________________________________________________________________________________________________________________

இதுவரை செய்த தவறையே கூட்டமைப்பு இப்போதும் செய்கிறது': சம்பந்தனின் அறிவிப்பு தமிழ்ச்சமூகத்தின் குரல் அல்ல

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதுவரை காலமும் செய்து வந்த தவறையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறதென அமைச்சரவை பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் சமூகத்தின் விடிவுக்காக இதுவரை என்ன செய்துள்ளது எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். சம்பந்தனின் கொள்கை தமிழ் சமூகத்தின் கொள்கை அல்ல என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அநுஷ பல்பிட உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இந்த செய்தி யாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடு கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நாட்டில் சட்டம், ஒழுங்கு, சமாதானம், ஸ்திரத்தன்மை, ஜனநாயகம் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கான வாழ்வுரிமை என்பவற்றை நிலைநாட்டினார். (மேலும்)  08.01.2010

________________________________________________________________________________________________________________

ஏ9 வீதியூடாக இராணுவ வழித்துணையின்றி பஸ் சேவைகள்

ஏ9 வீதி 24 மணித்தியாலமும் பொதுமக்களின் பாவனைக்காகத் திறக்கப்பட்டுள்ளதையடுத்து, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கான இரவு நேர இ.போ.ச பஸ் சேவை இன்னும் ஓரிரு தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடபிராந்திய இ.போ.ச பொதுமுகாமையாளர் எஸ்.கணேசபிள்ளை தெரிவித்துள்ளார். வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இருந்து ஏ9 வீதியூடாக இராணுவ வழித்துணையின்றி சாதாரண பஸ் சேவைகள் நேற்று முதல் ஆரம்பாகியுள்ளன. இதுநாள் வரையில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா, மன்னார், கண்டி, திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களை நோக்கிப் புறப்பட்ட பஸ் வண்டிகள் ஏ9 வீதியில் இராணுவ வழித்துணையுடன், வாகனத் தொடரணியாகவே நடைபெற்று வந்தன.  இதேபோன்று வவுனியாவில, மன்னார், கண்டி, திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபட்ட பஸ் வண்டிகளுக்கு ஏ9 வீதியில் இராணுவ வழித்துணையுடன் கூடிய வாகனத்தொடரணியுடனேயே நடைபெற்று வந்தன. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பஸ் வண்டிகள் வவுனியா தேக்கவத்தையில் இருந்து இராணுவத்தினரின் அனுமதி பெற்ற பின்பே பயணிகள் பிரயாணத்தை மேற்கொண்டு வந்தனர் இந்த நடைமுறையும் இப்போது மாற்றப்பட்டுள்ளது. வியாழன் முதல் இந்த நடைமுறை மாற்றப்பட்டு, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து பஸ் வண்டிகள் இ.போ.ச நேர அட்டவணைக்கமைய சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த பஸ் நிலையங்களில் இருந்து அரை மணித்தியாலத்திற்கு ஒரு தடைவ பஸ்களில் பயணிகள் ஏறியதும் புறப்படத் தொடங்கியுள்ளன.

________________________________________________________________________________________________________________

யாழ்ப்பாணத்து மக்களின் காதில் பூச்சுற்றிய முன்னாள் பிரதம நீதியரசர்!

- முல்லை ஈஸ்வரன்

sarath-n-silvaசரத் என் சில்வா பிரதம நீதியரசராக இருந்த போது, பிரதானமாக ஜே.வி.பி கட்சியே வடக்கு கிழக்கை பிரிக்க வேண்டும் என்ற வழக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஜே.வி.பி இந்த வழக்கை தாக்கல் செய்ததின் நோக்கம் கிழக்கு மாகாண மக்களின் நலன் கருதி அல்ல. ‘தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை என்று எதுவுமில்லை. வடக்கு கிழக்கு அவர்களது தாயகம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே வடக்கு கிழக்கை இணைத்து அவர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது தேவையில்லை’ என்ற ஜே.வி.பியின் இனவாத நிலைப்பாட்டிலிருந்தே, அது இந்த வழக்கை தாக்கல் செய்தது. வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது முழுக்க முழுக்க ஒரு அரசியல் ரீதியான பிரச்சினையாகும். எனவே அதை சட்டரீதியாக கையாள்வதை விட, அரசியல் ரீதியாக கையாண்டிருக்க வேண்டும். ஆனால் அந்த பிரச்சினை நீதிமன்றத்திற்கு வந்தபோது, அதை அரசியல் ரீதியான பிரச்சினையாக காட்டி கொள்ளாத, பிரதம நீதியரசராக இருந்த சரத் என் சில்வா, வெறுமனே சட்ட நுணுக்க அடிப்படையில் அதை அணுகி, வடக்கு கிழக்கை பிரிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். உண்மையில் அவர் செய்திருக்க வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்தது, இது ஒரு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை என்ற படியால், அரசாங்கமும், சம்பந்தப்பட்ட அரசியல கட்சிகளும் இதுபற்றி கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வர கால அவகாசம் வழங்கி தீர்ப்பு வழங்குவதை ஒத்தி வைப்பார் என்பதையேயாகும். (மேலும்)  07.01.2010

________________________________________________________________________________________________________________

கிழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பின் தடங்களற்ற பஸ் சேவை

கிழக்கு மாகாணத்தில் இருந்து 20 வருடங்களின் பின் யாழ்ப்பாணம், மன்னார், கொழும்பு, பதுளை, கண்டி, மூதூர், வவுனியா ஆகிய தூர இடங்களுக்கான இ.போ.சபை பஸ் டிப்போக்களினால் மட்டக்களப்பில் இருந்து தினந்தோறும் இடம்பெறுவதால் மாவட்ட, பிரதேச மக்கள் தங்களது பிரயாணங்களை எவ்வித தங்குதடையுமின்றி மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு பஸ் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அதிகாலை 5.00 மணிக்கு பஸ் புறப்பட்டு யாழ். நகரை அன்றே சென்றடைந்து மறுநாள் காலை 7.00 மணிக்கு யாழ். நகரில் இருந்து மட்டக்களப்பை நோக்கி புறப்படுகின்றது. அவ்வாறே யாழ்ப்பாணத்துக்குத் தினமும் காலை 5.30 மணிக்கு கல்முனை இ.போ. ச. பஸ், மத்திய பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்து மறுநாள் 5.30 மணிக்கு மீண்டும் கல்முனையை நோக்கிப் புறப்படுகின்றது. மன்னாருக்கான பஸ்சேவை தினமும் காலை 4.30 மணிக்கு கல்முனை பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பு ஊடாக மன்னாரை அன்றே சென்றடைந்து மறுநாள் நண்பகல் 12.00 மணியளவில் மன்னாரில் இருந்து கல்முனையை நோக்கிப் புறப்படுகின்றது. வவுனியாவுக்கான பஸ்சேவையும் தினமும் கல்முனை இ.போ.ச. பஸ் நிலையத்திலிருந்து அதிகாலை 5.00 மணிக்குப் புறப்பட்டு வவுனியாவை சென்றடைந்து மறுநாள் காலை 5.00 மணிக்கு வவுனியாவிலிருந்து கல்முனை நோக்கிப் புறப்படுகிறது.

________________________________________________________________________________________________________________

சரத் ஃபொன்சேகாவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

இலங்கையில் இந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் ஃபொன்சேகாவை ஆதரிப்பது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. எதிர்வரும் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை எதிர்த்து பிரதான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் ஃபொன்சேகா போட்டியிடுகிறார். மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் மற்றும் தமிழ் சிங்கள சமூகங்களுக்கு இடையே ஒரு இணக்கப்பாட்டை அவரது அரசால் ஏற்படுத்த முடியாத நிலை ஆகியவை காரணமாகவே தாங்கள் அவரை ஆதரிக்க இயலாத நிலை ஏற்பட்டது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

________________________________________________________________________________________________________________

உயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்ற பணி ஆரம்பம்: A – 9 வீதி 24 மணிநேரமும் திறப்பு

சரணடைந்த புலி உறுப்பினர்கள் 1000 பேர் விடுதலை

ஏ-9 வீதி 24 மணி நேரமும் திறந்திருக்கும் மென அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கு அபிவிருத் திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். யாழ்ப்பாணத்திலும், யாழ் தீவகப் பகுதியிலும் நேற்று நடந்த பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அவர், இந்த அறிவிப்பை விடுத்தார். ஏ-9 நெடுஞ்சாலை 24 மணி நேரமும் திறக்கப்பட்டிருப்பதால் இதனூடாகப் பயணம் செய்வதற்கு எவ்வகையான முன்அனுமதியும் பெறத் தேவையில்லை என அவர் கூறினார். இதேவேளை, படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 1000 பேர் எதிர்வரும் 9ம் திகதி விடுதலை செய்யப்படுவதாகவும் பசில் ராஜபக்ஷ அறிவித்தார். வேலணை மத்திய கல்லூரியில் கடற்றொழிலாளருக்கு உதவி வழங்கும் வைபவம் இடம் பெற்றது. பெருமளவில் மக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். யுத்த காலத்தில் சரணடைந்தவர்களில் 12,000பேர் புனர்வாழ்வு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றே 1000பேர் விடுதலை செய்யப்பட வுள்ளனரென்றார். ஏனையவர்களைப் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதெனவும் அவர் தெரிவித்தார். (மேலும்)  07.01.2010

________________________________________________________________________________________________________________

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு: ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

(சாகரன்)

யார் அங்கே! தமிழ் தேசியக் கூட்டமைப்பா? அப்படி ஒரு அமைப்பு இலங்கையில் இருக்கின்றதா? அது என்ன சம்மந்தன் கோஷ்டியா….? சிவாஜிலிங்கம் கோஷ்டியா….? கிஷோர் கோஷ்டியா….? கஜேந்திரகுமார் பொனனம்;பலம் கோஷ்டியா….? அல்லது குதிரை கஜேந்திரன் கோஷ்டியா….?  எந்தக் கோஷ்டியைக் குறிபிடுகின்றீர்கள்? புலிகளின்; ஆயுதப் பிரசன்னம்  இருந்த காலகட்டங்களிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றொரு அமைப்புஃகட்சி ‘தனியாக’ இருந்ததாக வரலாறு, தடையங்கள் எதனையும் காண முடியவில்லை. ஒரு அரசியல் அமைப்புஃகட்சி இற்கு முதலில் அடிப்படையாக இருக்க வேண்டியவைகள் கொள்கை, கோட்பாடு, அமைப்பு, அரசியல் வேலைத்திட்டம். இதில் எதனையும் தன்னகத்தே இல்லாத தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகவோ, அமைப்பாகவோ எப்படிக் ஏற்றுக்கொள்ள முடியும். வெற்றுத் தாளில் கையொப்பம் இட்டு பிரபாகரனிடம் கொடுத்த 22 மந்தைகளின் கூட்டமே தமிழ் தேசியக் கூட்டமைப்பா? மரண சாசனத்தை பொட்டனிடம் ஒப்படைத்த இந்தக் கூட்டத்தை வேறு எப்படி அழைப்பது. தன்மானத்தை தமிழ் செல்வனிடம் அடகு வைத்த இவர்கள் மனிதர்களா? போருக்கு பிந்தைய 22 மந்தைகளின் பத்தரிகைப் பேட்டிகள் இவற்றிற்கு ஆதாரமாக அமைந்தன என்று நிறுவ வேண்டிய அவசியம் எமக்கு இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் வன்னிக்கு அழைத்து தமிழ்செல்வனால் சேவக உத்தரவு இட்டபோது கை கட்டி, வாய் பொத்தி, மூச்சு அடக்கி நின்றபோது எம்மில் பலர் இதனைக்கண்டு ‘பூரித்து’ போனதுண்டு. (மேலும்)  07.01.2010

________________________________________________________________________________________________________________

முன்னாள் புலி இயக்க உறுப்பினர்களை குடும்பங்களாக மீள் இணைக்க நடவடிக்கை:  சட்டபூர்வமாக மணம் முடித்து வைக்கவும் திட்டம்

புலி இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட 144குடும்பங்களைத் துரிதமாக மீள இணைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் தயா ரத்னாயக்க தெரிவித்தார். பெற்றோர் வேறாகவும் பிள்ளைகள் வேறாகவும் தங்கவைக்கப்பட்டுள்ள இவர்கள் முதல் தடவையாக குடும்பமாக ஒன்றிணைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மீளிணைக்கப்படும் குடும்பங்கள் வவுனியாவில் அமைக்கப்பட உள்ள குடும்பப் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட உள்ளனர். புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக 144குடும்பங்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் அவர்களின் 6பிள்ளைகள் தமது பெற்றோருடன் தற்காலிக புனர்வாழ்வு முகாம்களில் தங்கியுள்ளதோடு 11பிள்ளைகள் தமது உறவினர்களுடன் தங்கியுள்ளனர். மேற்படி 144குடும்பங்கனில் பலர் சட்டபூர்வமாக திருமணம் செய்திருக்கவில்லை எனவும் புலிகளின் அனுமதிப்படி மட்டுமே திருமணம் முடித்துள்ளதாகவும் ஆணையாளர் கூநினார். இவர்களுக்கு சட்டபூர்வமாக மணம் முடித்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  முன்னாள் புலி உறுப்பினர்கள் 11, 544 பேரில் 1, 882 பேர் ஆண்கள், 8,667 பேர் பெண்கள், 590 பேர் சிறுவர்களாவர். இவர்கனில் 4,143 பேர் திருமணமானவர்கள் எனவும், 6, 849 பேர் திருமணமாகாதவர் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் பணியகம் தெரிவித்தது.

________________________________________________________________________________________________________________

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால் நாட்டில் மீண்டும் யுத்தம்!

- வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)

TNA MeetingCat-tnaசரத் பொன்சேகாவை பொறுத்தவரையில், சம்பந்தன் கோஷ்டி, தமிழ் மக்களின் இனப்பிரச்சினை குறித்து வாக்குறுதிகள் எதுவும் கேட்காதது, பெரிதும் ஆறுதலளிக்கும் விடயமாகும். ஏனெனில், சரத் பொன்சேகாவை எதிர்க்கட்களின் பொது ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்திய பிரதான கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி, இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லையென்றும், எனவே தமிழர்களுக்கு அதிகார பகிர்வு எதுவும் வழங்க தேவையில்லையென்றும் வலியுறுத்தி வரும் கட்சியாகும். அப்படியிருக்க, சம்பந்தன் கோஷ்டி இனப்பிரச்சினை பற்றி ஏதாவது பேசி, அது பற்றி சரத் பொன்சேகா அவர்களுக்கு ஏதாவது வாக்குறுதி வழங்கப்போனால், அதன் காரணமாக ஜே.வி.பியின் ஆதரவை அவர் இழக்க வேண்டி வந்துவிடலாம். எனவே சம்பந்தன் கோஷ்டி தமிழ்மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து சரத் பொன்சேகாவிடம் வாக்குறுதி எதுவும் கேட்காதது அவருக்கு வசதியாகப் போய்விட்டது. ஆனால் சம்பந்தன் கோஷ்டி, தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி சரத் பொன்சேகாவிடம் எதுவும் பேசாதது, அவரை இக்கட்டில் மாட்டாமல் இருப்பதற்காகவா அல்லது வேறு எதாவது பின்னணி நோக்கங்களுடனா என்ற கேள்வியும் இருக்கிறது. ஏனெனில் தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகளை விட்டுவிட்டு, அவர்களுடன் நேரடியாக சம்பந்தப்படாத, அதேநேரத்தில் நாட்டின் அதிமுக்கிய பிரச்சினையான பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயங்களில், சரத் பொன்சேகாவிடம் வாக்குறுதி பெற்றிருப்பதன் நோக்கம் என்ன என்ற கேள்வி, நாட்டு பற்றுள்ள அனைவரிடமும் எழுந்திருக்கிறது. (மேலும்)  06.01.2010

________________________________________________________________________________________________________________

வெள்ளமுள்ளிவாய்க்காலில் அதிரடித் தேடுதல்: பிரபாகரன் தனிப்பட்ட பாதுகாப்புக்காக பயன்படுத்திய ஆயுதங்கள், கவசம் மீட்பு

புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனிப்பிட்ட பாதுகாப்புக்கு பயன்படுத்திய ஆயுதம், பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட பெருந்தொகை ஆயுதங்களும் வெடிபொருட்களும் வெள்ளமுள்ளி வாய்க்காலிலிருந்து கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எல். கருணாரட்ன தெரிவித்தார். மீட்கப்பட்டிருக்கும் எம் 16-ஏ 2ரக விசேட கிரனேற் லோஞ்சரும் அதனுடன் காணப்பட்ட உடற் கவசமும் பிரபாகரன் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக பயன்படுத்தியவையென்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கருணாரட்ன கூறினார். வெள்ள முள்ளிவாய்க்காலில் சுமார் 15அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டி ருந்த நிலையிலேயே நேற்று முன்தினம் இரவு இவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி விசேட குற்றப்புலனாய்வு பொலிஸ் பிரிவினரே இவற்றை கண்டுபிடித் ததாகவும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் வெடிபொருட்களும் மேலதிக சோதனைகளுக்காக வவுனியா சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். வெள்ள முள்ளிவாய்க்காலிலிருந்து மேலும் 125தற்கொலை அங்கிகள், 50மோட்டார் குண்டுகள், 60 விமான எதிர்ப்பு பீரங்கி, 12போர் ரக சொட் கன், 250குதிரை வலு சக்தி கொண்ட படகு இயந்திரம், 40 குதிரை வலு சக்தி கொண்ட படகு இயந்திரம், ‘ஹெரட்’ குண்டு, 2ஆயிரம் கிலோகிராம் நிறை கொண்ட ஆர். டி. எச். வெடிமருந்து, 02கிளேமோர் குண்டுகள், 50டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பெருந்தொகை ஆயுதங்களும் வெடிபொருட்களும் பொலிஸார் மற்றும் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

________________________________________________________________________________________________________________

ஜனாதிபதி தேர்தலும் இனப்பிரச்சினை எனும் மாயமான் வேட்டையும் (பாகம் 2.)

-எஸ்.எம்.எம்.பஷீர்

சென்ற முறை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ரணில் விக்ரமசிங்ஹா "மஹிந்த ராஜபக்ச வட, கிழக்குடன் சம்பந்தமற்ற   ஜனாதிபதிதேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், இது அபாயமானது"  என்று கருத்துரைத்தார்.  ஆம் இது புலிகளுக்கு (வடக்கு- கிழக்கில் ஆபத்தாகத்தான் முடிந்தது. புலிகளின் கட்டளைப்படி தேர்தலுக்கு முன்பு ஓமந்தை  சோதனை சாவடிக்கு முன்பாக நூற்றுக்கணக்கான வன்னி தமிழ் மக்கள்  கூடி நின்று மஹிந்த ரணில் ஆகியோரின் படங்களையும் வாக்காளர் அட்டைகளையும் தீயிட்டு கொளுத்தியதுடன், அங்கு பிரசன்னமாயிருந்த சர்வதேச கண்காணிப்பாளர்களிடம் " காலங்காலமாக தம்மை ஏமாற்றிய சிங்களத்தலைமைகளுக்கு    இதுவே தக்க பதில் " என்று தெரிவித்தனர். ஆனால் சிங்களத்தலைமைகளுக்கு  வாக்களித்தால் தமிழர்கள் தமது நம்பிக்கையை சிங்களத் தலைவர்கள் மீது கொள்ளவில்லை என்பதை  நிரூபிக்க இன்னொருவிதத்தில் புலி அன்று செய்ததை வேறு விதமாக இன்று செய்ய தமிழ் மக்களின் சார்பாக சிவாஜிலிங்கம்   போட்டியிடுகிறார்  . ஆனால் இறுதியாக வந்திருக்கும் சம்பந்தனின் செய்தி ஆச்சரியமானதல்ல , அவ்வாறில்லாமல் அவர் மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்தால்தான் ஆச்சரியமாக இருந்திருக்கும்.  ஆனால்  புலிகளின் விசுவாசிகள் இப்போது சிங்களத்தலைமையை  -ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரை,- ஜே . வீ பீ யை முன்னிலைப்படுத்தும் வேட்பாளரை - முன்வந்திருக்கின்றனர். இனவாதிகள் என்று மூச்சுக்கு மூச்சு முஸ்லிம் காங்கிரசும் கூட்டமைப்பினரும் குற்றம் சாட்டிய ஜே.வீ.பீ தான் இன்று கொள்கையளவில் துருவ வேறுபாடாக திகழும் ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் தயாரித்துக்கொண்டிருக்கிரார்கள். மா ஒ சொன்ன பல கருத்துக்கள் இப்போது அவர்களை பொறுத்தவரை புதிய வியாக்கியானங்களை வரித்துக்கொள்ள வேண்டி இருக்கும்.  (மேலும்)  06.01.2010

________________________________________________________________________________________________________________

சரத் பொன்சேகா பதவிக்கு வந்தால் சிறுபான்மையினரின் பிரச்சினை தீர்ந்துவிடாது

யாழ்ப்பாணத்தில் மனோ கணேசன் தெரிவிப்பு

சரத் பொன்சேகா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதால்  சிறுபான்மையினருக்குத் தீர்வு கிடைத்துவிடாது என மேலக மக்கள் முன்னணியின் தலைவர்  மனோ கணேசன், எம்.பி; தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த சனியன்று பிரசார கூட்டமொன்று  நடைபெற்றது.  இங்கு உரையாற்றுகையிலேயே  மனோ கணேசன்  மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதோடு இளைஞர்களே இதில் அதிகமாகக்  காணப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. பலத்த சோதனைகளுக்குப் பின்னரே மக்கள் கூட்ட மண்டபத்திற்கு அனுமதிக்கப்பட்டதோடு சோதனையின்போது  ஒட்டப்படும் “ஸ்டிக்கர்” இல்லாதோர் கூட்ட மண்டபத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. பி.ப 3 மணிக்கு கூட்டம் ஆரம்பிக்கபடுமென அறிவிக்கப் பட்டிருந்தபோதும் பி.ப.4.45 மணிவரையில் மக்கள் காத்திருந்தனர். ஐக்கிய தேசிய  கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத்  ஜயவர்த்தன  சிங்களத்தில் உரையாற்றியபோது தமிழ் மொழிபெயர்ப்பு வழங்குமாறு  மக்கள் கூச்சலிட்டுள்ளனர்.  இதனால் சபையில் குழப்பம் ஏற்பட்டது. இதன்போது ஜயலத் ஜயவர்த்தனாவின் உரையை சதாசிவம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஜயலத் கூறியவற்றை  அவரால் சரியாக மொழிபெயர்க்க முடியவில்லை. ஜயலத்தின் கருத்துக்களை தமிழில் மொழிபெயர்க்க முடியாமல் சதாசிவம்  தடுமாறியதாக   கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். இதனால் மேடையில் அமர்ந்திருந்த மனோ கணேசன் மற்றும் ரவ+ப் ஹக்கீம் போன்றோரின் முகங்கள் களையிழந்திருந்தன. (மேலும்)  06.01.2010

________________________________________________________________________________________________________________

மனச்சாட்சிக்கு அமைவாக பிரச்சினையை அணுகுவோம்

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பி´னர் சிவாஜிலிங்கம் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடு கின்றார். கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுள் ஒன்றாகிய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தேர்தலைப் பகிஷ்கரிப்பதெனத் தீர்மானித்திருக்கின்றது. பிரதான வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது என்பதையிட்டு ஓருமித்த நிலைப்பாடு கூட்டமைப்புக்குள் இல்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் என்ற நிலை ப்பாட்டைப் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டிருப்பதாகவும் கூட்டமைப்புக்குள் சக்தி வாய்ந்தவர்க ளான சிலர் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தைத் திணிப்பதற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தெரியவருகின்றது. எனவே கூட்டமைப்பு வெளியிடும் முடிவு ஏகமன தான முடிவாக இருக்கப் போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாறுபட்ட நிலைப்பாடுகளை வலியுறுத்துவதும் சிலர் முடிவுகளை மீறிச் செயற்படுவதும் புதியதொரு வளர்ச்சிப்போக்கு. புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்ட காலம் வரை இத்தகைய சுதந்திரமான செயற்பாடு பற்றிக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நினைத்துப் பார்த்திருக்கவும் முடியாது. புலிகள் என்ன சொல்கின்றார்களோ அதைச் செய்ய வேண்டியவர்களாகவே இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகரமாக முடித்ததன் மூலம் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் இச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றது. (மேலும்)  06.01.2010_

Home / Page-1 / Page-2 / Page-3 / Page-4

wanni

இன்னொரு தடவை ஆயுதம் போராட்டம்னு எவனாச்சும் சொன்னா தும்புக்கட்டையால  (துடைப்பம்) அடிச்சு சாத்திப்புடுவேன். போரை எதிர்கொண்ட எளிய மக்களின் மனநிலை இதுதான்.

‘புதிய பாதை’ ஆசிரியர் சுந்தரம் நினைவாக..

யாழ்ப்பாணத்து மக்களின் காதில் பூச்சுற்றிய முன்னாள் பிரதம நீதியரசர்!

புலிப் பாசிசம் தோற்கடிக்கப் பட்டமையே, 2009ம் ஆண்டின் மாபெரும் வரலாற்று நிகழ்வாகும்!

சரத் பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம், சம்பந்தன்  கோஷ்டி அடையப்போகும் கேவலமான முடிவு!

ஐதேகவுக்கு சேவகம்செய்ய துடிக்கும் கூட்டமைப்ப