|
முஸம்மிலுக்கு ரூ.3கோடி வழங்கியமைக்கு எதிராக இன்று சட்ட நடவடிக்கை: ஒலிப்பதிவு ஆவணங்களும் ஊடகங்களுக்கு விநியோகம்
சரத் பொன்சேக்காவை ஆதரித்து அவரது ஊழல் மோசடிகளை மூடிமறைக்கக் கோரியும் முஸம்மில் எம்.பி.க்கு மூன்று கோடி ரூபா பணத்தை வழங்க முற்பட்ட சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்தார். உரிய சட்ட நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இன்று முதல் இதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் மாநாடு பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்றது. இலஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் கைமாறியமை தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதைப் போன்று சம்பவத்துடன் தொடர்புடைய பேச்சுக்கள் இடம்பெற்ற ஒலி நாடாக்கள் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் ஒலிபரப்பிக் காண்பிக்கப்பட்டது. (மேலும்) 18.01.2010
______________________________________________________________________________________________________________
தமிழ் பேசும் சிங்களத் தலைவர் ராஜபக்ஷவுக்கு இலங்கைத் தமிழர் வாக்களிக்க வேண்டும் சுவாமியின் வேண்டுதல்
சென்னை: இலங்கைத் தமிழர்கள் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிக்க வேண்டும் என்று இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி வலியுறுத்தியுள்ளார். இந்திய தரப்பு அபிப்பிராயத்தை இலங்கைத் தமிழர்கள் பெற்றுக்கொள்ள விரும்பினால் அவர்கள் தமிழ் பேசும் சிங்களத் தலைவரான ராஜபக்ஷவுக்கே வாக்களிக்க வேண்டும் என்று டாக்டர் சுவாமி கூறியுள்ளார். எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்காக இந்தியத் தமிழர்களின் ஆதரவைப் புலிகளின் சில பிரதிநிதிகள் திரட்டுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கிளப்பி விடுவதும் ஆச்சரியமாக இருப்பதாகவும் சுவாமி கூறியுள்ளார். ஜெனரல் பொன்சேகாவுக்குத் தமிழர்கள் எதிர்ப்புக் கட்சியான ஜே.வி.பி. ஆதரவளிப்பதாகவும் அக்கட்சி தமிழர்களுக்கு எந்தச் சலுகை வழங்கப்படுவதையும் விரும்பாத கட்சியெனவும் சுவாமி கூறியுள்ளார். பொன்சேகா தெரிவு செய்யப்பட்டால் என்ன செய்வதென்று தெரியாத இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை அவருக்கு ஏற்படும் எனவும் விடுதலைப் புலிகளை நியாயப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் அந்த அமைப்பு பெருந்தொகை பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாகவும் சுவாமி கூறியுள்ளார். இன்று இலங்கைத் தமிழருக்குத் தேவையானது ஸ்திரத்தன்மையான மனிதாபிமான ஆட்சியே என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்று "இந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
______________________________________________________________________________________________________________
எஞ்சியுள்ள 34,604 குடும்பங்களையும் விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கை வடமாகாண ஆளுநர்
வடக்கு, கிழக்கில் போர்ச் சூழல் காரணமாக இடம்பெயர்ந்தோரில் பெரும்பாலானவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதோடு இன்னும் 34,604 குடும்பங்களைச் சேர்ந்த 78,165 பேரே மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் இவ்வருடம் ஜனவரி 14 ஆம் திகதிவரை போர்ச் சூழல் காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் 40,925 குடும்பங்களைச் சேர்ந்த 1,31,600 பேர் தத்தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 18,948 குடும்பங்களைச் சேர்ந்த 59,630 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். மன்னாரில் 3,182 குடும்பங்களைச் சேர்ந்த 10,349 பேரும் வவுனியாவில் 7,395 குடும்பங்களைச் சேர்ந்த 23,979 பேரும் முல்லைத்தீவில் 3,387 குடும்பங்களைச் சேர்ந்த 10,995 பேரும் கிளிநொச்சியில் 4,836 குடும்பங்களைச் சேர்ந்த 16,582 பேரும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். கிழக்கில் மட்டக்களப்பில் 897 குடும்பங்களைச் சேர்ந்த 2,514 பேரும் திருகோணமலையில் 2,111 குடும்பங்களைச் சேர்ந்த 6,700 பேரும் அம்பாறையில் 191 குடும்பங்களைச் சேர்ந்த 591 பேரும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதேவேளை, வவுனியா மாவட்ட 8 முகாம்களில் 32,080 குடும்பங்களைச் சேர்ந்த 77,328 பேர் தத்தமது கிராமங்களில் மீளக்குடியமர்த்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் உள்ள 4 நலன்புரி நிலையங்களில் உள்ள 524 குடும்பங்களைச் சேர்ந்த 1,537 பேர் தத்தமது கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட உள்ளனர் என்றும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்தார்.
______________________________________________________________________________________________________________
கேணல் ராம் ஒருபோதும் கைது செய்யப்படவில்லை:இராணுவ பேச்சாளர்
தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ராம், அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் தரப்பு தெரிவித்திருந்ததை அரச தரப்பு மறுத்துள்ளது. தடுப்பு காவலில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ராம் விடுவிக்கப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகாவின் தரப்பு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் கேணல் ராம் மறைந்திருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தலைமை தாங்கும் நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ள அந்த அறிக்கையில், இது தேர்தலை மாத்திரமன்றி பொதுமக்களின் வாழ்க்கையையும் சீர்குலைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை இந்த அறிக்கை தொடர்பில் கருத்துரைத்துள்ள, இலங்கை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, கேணல் ராம் என்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதியை படையினர் ஒருபோதும் கைதுசெய்திருக்கவில்லை எனக்குறிப்பிட்டுள்ளார். கேணல் ராம் கிழக்கில் மறைந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
______________________________________________________________________________________________________________
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொய் சொல்கின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரின் அண்மைய புதுடில்லி விஜயத்தின் பின்னர், ஜனாதிபதித்தேர்தல் தொடர்பான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதாக மாவை. சேனாதிராஜா பத்திரிகைகளுக்கு அறிக்கையொன்றினை விடுத்தார். புதுடில்லி விஜயத்தின் முன்பாக இந்திய அரசின் உத்தியோகபூர்மான அழைப்பையேற்றே புதுடில்லிக்கு விஜயம் மேற்கொள்வதாகவும் தமிழத்தேசிய கூட்டமைப்பு பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுத்தது. மாவை. சேனாதிராஜாவினதும் மற்றும் தமிழத்தேசிய கூட்டமைப்பினதும் பத்திரிகை அறிக்கைகள் முற்றுமுழுதாக உண்மைக்கு புறம்பானது என்பது தொடர்பாக தமிழநாடு காங்கிரசு செயலாளர் டாக்டர் ஆர். அன்பரசு அன்பரசு பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது. (மேலும்) 17.01.2010
______________________________________________________________________________________________________________
கூட்டமைப்பின் முடிவுக்கு இந்தியா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது!
-ஈழப்பிரியன்
கூட்;டமைப்பின் முடிவுக்கு புதுடில்லி சாதகமான சமிக்ஜை." கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகளில் இன்றைய (17.01.2010) தலைப்புச் செய்தி இதுதான்
'ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவினை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் முடிவுக்கு புதுடில்லி சாதகமான சமிக்ஜை." தமிழ்க் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை எவ்வளவு முட்டாள்கள் என்று இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு விளக்கம் தேவையில்லை. சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற தமது முடிவால் இந்தியா தம்மீது ஆத்திரமடைந்திருக்கும் என்ற நம்பிக்கையுடனேயே கூட்டமைப்பினர் புதுடில்லி சென்றிருந்தனர். தாம் ஏன் அந்த முடிவை எடுத்தார்கள் என்பதற்கு விளக்கம் சொல்லுவதுதான் அந்த விஜயத்தின் நோக்கம்.சம்பந்தன் தலைமையில் சென்ற அந்த நால்வர் குழுவில் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அடங்கியிருந்தனர். முதலில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபாமா ராவ் அவர்களைச் சந்தித்து கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தனர். (மேலும்) 17.01.2010
______________________________________________________________________________________________________________
ஜோதிபாசு மரணம்
கொல்கத்தா,ஜன.17:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சருமான ஜோதிபாசு உடல்நலக்குறைவு காரணமாக இன்று கொல்கத்தா மருத்துவமனையில் காலமானார்.அவருக்கு வயது 96. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்த தலைவரான ஜோதி பாசுவின் உடல்நிலை மோச மடைந்ததை தொடர்ந்து கடந்த 1ந் தேதி அவர் கொல்கத்தாவில் உள்ள ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 96 வயதான அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் பயனாக இடையில் ஓரளவுக்கு உடல்நலம் சீரானது. ஆனால் அதன் பிறகு கடந்த இரு நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் நுரையீரல், சிறுநீரகம், இதயம், ஈரல் ஆகிய அவரது அனைத்து முக்கிய உள் உறுப்புகளும் செயல் இழந்துவிட்டதால் அவருக்கு முழு அளவில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அவரது உடல்நலம் மோசமானதை தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மருத்துவ மனைக்கு நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்து அறிந்தனர். இந்த நிலையில் அவரது இதயத் துடிப்பு மிகவும் குறைந்து அபாய கட்டத்தை எட்டியதாக மருத் துவமனை தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் ஜோதிபாசு இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். (மேலும்) 17.01.2010
______________________________________________________________________________________________________________
ஜனநாயகத்திற்கான மாறுதல்: கனடாவில் இடம்பெற்ற சுந்தரம் நினைவுதினம்!
நேற்றையதினம் கனடா ரொறன்ரோ நகரில் புதிய பாதை ஆசிரியர் சுந்தரம் அவர்களின் 28வது நினைவுதினம் மிகவும் சிறப்பாக நேற்றையதினம் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் இடம்பெற்றது. மார்க்கம் 2401டெனிசன் வீதியில் அமைந்துள்ள மண்டபத்தில் நேற்றுமாலை 5:00 மணிக்கு நிகழ்வுகள் மௌன அஞ்சலியுடன் ஆரம்பமானது. ஜனநாயகத்திற்கான மாற்றத்தின் வெளிப்பாட்டை நேற்றைய கூட்டத்தில் வெளிப்படையாகவே காணமுடிந்தது. பல்வேறு பாதைகள் கொள்கைகளை கொண்ட பலரும் மேற்படி நினைவுகூரல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர். புளொட் அமைப்பின் சார்பில் சாரங்கன் அவர்களின் தொகுப்புடன் கூடிய ஆரம்ப உரையுடன் ஆரம்பமான நிகழ்வில் மாணவர் பொதுமன்றத்தின் பொது செயலர் டேவிற்சன். யாழ் நோர்த்தன் பிறின்ரஸ் உரிமையாளரும் இடதுசாரி உறுப்பினருமான மணியம், இலங்கை சட்டத்தரணி சிவகுருநாதன், யாழ் பல்கலைக்கழக முன்னைநாள் மாணவர் ஜக்கியா ஆகியோர் உரையாற்றியதுடன். சிங்கப் பூரில் இருந்து சுப்பிரமணியம் வள்ளியம்மை அவர்களினால் சுந்தரம் தொடர்பாக எழுதி அனுப்பி வைக்கப்பட்ட கவிதையை நிரஞ்சன் அவர்களும், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைமையகத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட செய்தியை செல்வம் அவர்கள்; வாசித்தார், சுந்தரம் தொடர்பான நற்பண்புகளுடன் கூடிய சுந்தரத்தின் இயல்பினை சிம்ஹராஜ்வர்மா அவர்களும் எடுத்துக் கூறினார். (மேலும்) 17.01.2010
______________________________________________________________________________________________________________
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல்
நாட்டின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னும் ஒன்பது நாட்கள் மாத்திரமே இருக்கின்றன. ஜனநாயக முறையில் தங்கள் தலைவரைத் தெரிவு செய்வத ற்கு மக்கள் தயாராகிவிட்டனர். சகல பகுதிகளிலும் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. முக்கிய வேட்பாளர்கள் சூறாவளிப் பிரசாரத்தில் இறங்கியிருக்கின்றனர். என்றாலும், பணத்தை முதன்மைப்படுத்தி மக்கள் சக்தியைக் கொச்சைப் படுத்தும் செயல்களில் பொன்சேகா தலைமையிலான எதிரணியினர் செயற்பட்டு வருவது அம்பலத்திற்கு வந்திருக்கிறது. ஜனநாயக விழுமியங்களுக்குள் தங்களது கொள்கைகளை முன்வைத்து மக்கள் ஆதரவைப் பெற்று செயற்படுவதே தார்மீகம். நிறைவேற்ற முடி யாத வாக்குறுதிகளை முன்வைப்பதும், நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் தலைவர்கள் மீது சேறுபூசும் பிரசாரங்களை முன்வைப்பதும் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இத்தகைய முயற்சிகளில் தோற்றுப் போன எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மற்றொரு முயற்சியிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளார். தங்களது பிரசார நடவடிக்கைகளுக்காக கோடிக் கணக்கில் பணம் கொடுத்து முக்கியஸ்தர்களைப் பிடிக்கும் படுமோசமான செயற்பாடுகளில் இறங்கியிருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. (மேலும்) 17.01.2010
______________________________________________________________________________________________________________
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும்: சோ
சென்னை, ஜன. 15: தமிழத்தில் அரசு நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. எனவே, ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்றார் பத்திரிகையாளர் சோ. "துக்ளக்' வார இதழின் 40}வது ஆண்டு நிறைவு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வாசகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சோ அளித்த பதில்கள்: தமிழகத்தில் இப்போது நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. தேர்தலில் வெற்றிபெற வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது வாடிக்கையாகிவிட்டது. இதனால் ஓட்டு போட பணத்தை எதிர்பார்க்கும் நிலைக்கு மக்களும் தள்ளப்பட்டுவிட்டனர். சிறு, குறுந் தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதைத் தமிழக அரசு தவிர்க்கிறது. மத்திய அரசின் ஆதரவு இருக்கும் வரைதான் தமிழகத்தின் நிதி நிலை சீராக இருக்கும். திமுக ஆட்சி தொடர்ந்தால் அரசு கஜானா திவாலாகிவிடும். இதில் மாற்றம் வரவேண்டும் என்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும். திமுக}வுக்கு மாற்றுக் கட்சி அதிமுக தான். அதிமுக}வுக்கு மக்கள் ஆதரவு உள்ளது: தமிழகத்தில் ஒரு தேர்தலாவது, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் நடத்தினால் போதும் திமுக}வுக்கு மக்கள் ஆதரவு அதிகமா அல்லது அதிமுக}வுக்கு ஆதரவு அதிகமா என்பது தெரிந்துவிடும். (மேலும்) 17.01.2010
______________________________________________________________________________________________________________
ரூ. 3 கோடி .முஸம்மிலுக்கு வழங்கிய விவகாரம்:
பொன்சேகாவின் ஊழலை மறைக்கும் முயற்சி அம்பலம்; இன்றும் பல திடுக்கிடும் தகவல்கள்
சரத் பொன்சேகாவின் ஆயுத ஊழல் மோசடிகளை மூடிமறைக்கவும், அவருக்கு ஆதரவு வழங்குவதற் குமாக மூன்று கோடி ரூபாவை இலஞ்சமாக வழங்கியுள்ள விடயம் பொய்யானது என எவரேனும் தெரிவித்தால் அவை அனைத்தும் ஒலி/ ஒளி நாடாக்களுடன் நிரூபிக்க முடியும் என தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் நேற்று தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மிலுக்கு மூன்று கோடி ரூபாவை வழங்கிய விடயம் பற்றி மேலும் புதிய தகவல்கள் இன்றைய செய்தியாளர் மாநாட்டிலும் தெரிவி க்கப்படும் என்றும் அந்தப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். சரத் பொன்சேகாவின் ஆயுத ஊழல்கள் தொடர்பாக ஜே. என். பி. தலைவர் விமல் வீரவங்ச முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என தெரிவிக்க வேண்டும் என்றும் அதேவேளை ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கூறி மொஹமட் முஸம்மிலு க்கு கட்டுக்கட்டாக பணத்தை வழங்கியுள்ளனர். (மேலும்) 17.01.2010
______________________________________________________________________________________________________________
கண்டு கொள்ளாத காங்கிரஸ் - 'கார்டன்' கதவு திறக்குமா? சிக்கலில் தே.மு.தி.க.,
ம க்களோடு கூட்டணி என தனித்து களமிறங்கி வந்த தே.மு.தி.க., கூட்டணிப் பாதைக்கு திரும்ப முடிவெடுத்துள்ளது. இரு கழகங்களையும் பிடிக்காத, நடுநிலையாளர்களின் ஓட்டுகள் தே.மு. தி.க., விற்கு விழுந்து வந்த நிலையில், தற்போதைய கூட் டணி முடிவால் தே.மு.தி.க., வின் ஓட்டு வங்கி கணிசமாக குறையும் என, அரசியல் பார் வையாளர்கள் கருதுகின்றனர். கடந்த 2005ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் துவக் கப்பட்ட தே.மு.தி.க., சட்டசபை தேர்தல்(2006), லோக்சபா தேர்தல்(2009) உள்ளிட்ட பல் வேறு தேர்தல் களை தனித்தே சந்தித்தது. சமீபத்திய வந்தவாசி, திருச் செந்தூர் இடைத்தேர்தல்களிலும், தனித்து போட்டியிட்ட அக் கட்சி வேட்பாளர்கள் டிபாசிட் இழக் கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர். தனித்து களம் காண்பது தமிழகத்திற்கு ஒத்துவராது என்பதால், அக்கட்சிக்கு ஆரம்பத்தில் இருந்த செல்வாக்கும் தற்போது சரியத் துவங்கியுள்ளது. அரசியல் ஆதாயம்தேடி, தே.மு.தி.க., சரணாலயத்தில் தஞ்சமடைந்திருந்த, பல கட்சிகளை சேர்ந்த, "முன்னாள்' எம்.பி., எம்.எல்.ஏ.,க்களும், "சீசன்' முடிந்த பறவைகளைப்போல், மீண்டும் தாய் கழகங்களுக்குத் தாவிவிட்டனர். ஒரு சிலர் மட்டுமே மிகப்பெரிய, "எதிர்பார்ப்புகளுடன்' அக்கட்சியில் எஞ்சியிருக்கின்றனர். தொடர் தோல்விகளால், அவர்களின் எதிர்பார்ப்பும் தற்போது குறைந்து போயுள்ளது. (மேலும்) 17.01.2010
______________________________________________________________________________________________________________
இலங்கையில் தேர்தல் வன்முறைகள்
.- பி.பி.சி செய்திகள்
இலங்கையில் அடுத்த நிறைவேற்று ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு இன்னும் ஒன்பது தினங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரங்களும் கூடவே வன்முறைகளும் அரங்கேறி வருகின்றன. இலங்கையின் வடமேற்கே புத்தளம் மாவட்டத்தில் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி நகரில் இன்று சனிக்கிழமை இடம்பெறவிருந்த தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றுக்கு முன்பாக இரண்டு பிரதான கட்சி ஆதரவாளர்களுக்குமிடையே இடம்பெற்ற மோதல்களில் அருண சமன்குமார என்ற 19 வயது இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளரான இந்த இளைஞனுடன் ஏனைய ஐந்து பேரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். மூவின மக்களும் வசிக்கின்ற மதுரங்குளி நகரில் சனிக்கிழமை மாலை நடைபெறவருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கும் கூட்டத்த்துக்கு முன்பாகவே இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. காயமடைந்தவர்களில் மூவர் புத்தளம் வைத்தியசாலையிலும் இருவர் குருணாகல் தேசிய வைத்திய சாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (மேலும்) 17.01.2010
______________________________________________________________________________________________________________
புனர்வாழ்வு முகாம்களிலிருந்த 566 பேர் நேற்று பெற்றோரிடம் ஒப்படைப்பு
படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுள் மேலும் 566 பேர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். வவுனியா காமினி மகா வித்தியாலயம், பம்பைமடு உட்பட வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாம்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இவர்கள் 566 பேரும், வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் அருகே பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். புலிகளினால் பலாத்காரமாக சிறுவர் படையணிக்கு சேர்க்கப்பட்டிருந்த சிறுவர் சிறுமியர்களில் சிலரும், புலிகள் இயக்கத்தில் மிகவும் அடி மட்டத்தில் செயலாற்றிக் கொண்டிருந்தவர்களில் சிலருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிலிருந்தும் சுமார் 1000 பேர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர். சரணடைந்த முன்னாள் புலி உறுப்பின ர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படும் அரசின் திட்டத்திற்கமைய எதிர்வரும் காலங்களில் மேலும் சிலரும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
______________________________________________________________________________________________________________
மகிந்த ராஜபக்ச 12 வீத மேலதிக வாக்குகளால் அமோக வெற்றியீட்டுவார்!:புதிய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது!!
ஆர்.சிவகுருநாதன் (கொழும்பு)
எ திர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச 12 வீதமான மேலதிக வாக்குகளால் அமோக வெற்றியீட்டுவார் என புதிய கருத்து கணிப்பு ஒன்று தெரிவிக்கின்றது. பல்வேறு இந்திய அரசியல்வாதிகளுக்கு கடந்த காலங்களில் முக்கிய ஆலோசகர்களாக பணியாற்றியவர்களை உறுப்பினர்களை கொண்ட Viplav Communications Pvt Ltd என்ற நிறுவனம், ஜனவரி 6 – 13 வரை நாடு முழுவதும் 10,225 பேரிடம் மேற்கொண்ட ஒரு ஆய்விலேயே இந்த விபரம் தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த காலங்களில் இந்தியாவில் பல்வேறு கணிப்பீடுகளை வெற்றிகரமாக செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் படி, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களிலும், மகிந்த ராஜபக்சவே முன்னிலை வகிப்பதாக தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக தென் மாகாணம், வட மேல் மாகாணம், சப்ரமுகா மாகாணம் என்பனவற்றில் மகிந்தவுக்கு அமோக ஆதரவு காணப்படுகிறது. முஸ்லீம்கள் மத்தியிலும் சரத் பொன்சேகாவை விட மகிந்தவுக்கு சற்று கூடுதலான ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. மலையக பகுதிகளிலும் மகிந்தவுக்கு கூடுதலான ஆதரவு உள்ளது. கிராமப்புறங்களிலும், பெண்கள் மற்றும் சிங்கள பௌத்தர்கள், சிங்கள கிறீஸ்தவர்கள் மத்தியிலும் மகிந்தவுக்கே கூடுதலான ஆதரவு உள்ளமை இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. (மேலும்) 16.01.2010
______________________________________________________________________________________________________________
புலிகளின் வழியில் தமக்கு இறுதி அத்தியாயம் எழுதும் தமிழ்க்கூட்டமைப்பு
-ஈழப்பிரியன்
விடுதலைப் புலிகள் இப்போது இல்லை என்றாலும் தமிழ்க் கூட்டமைப்பினர் அவர்களின் வழியொற்றியே நடக்கின்றார்கள் என்பதை இன்று பலரும் உணரத் தொடங்கியிருக்கின்றனர். 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் என்ன நடந்தது? ரணில் விக்கிரமசிங்க, தான் வெற்றி பெற்றால் தமிழ் மக்களின் பிரச்னைக்கு நோர்வே உடன்படிக்கையின் அடிப்படையில் தீர்வு காண்பேன் என்றார். மறுபுறுத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச, சிங்கள இனவாதக் கட்சிகளான ஜே.வி.பி., சிஹல உருமய போன்றவற்றின் துணையுடன் இனப்பிரச்னை பற்றிய எந்தவித அறிவிப்பும் இன்றி களத்தில் இறங்கியிருந்தார். இரு வேட்பளர்களும் சிங்களவர் மத்தியில் சரிக்கு சரியான போட்டியாளர்களாக களத்தில் இருந்தனர்.தமிழ் மக்களின் வாக்குகள்தான் வெற்றியை தீர்மானிக்கப்போவதாக கருதப்பட்டது. தமிழ் மக்களின் வாக்கு நிச்சயம் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தான் விழும் என்பது எந்தக் குழந்தைக்கும் தெரிந்திருந்தது. (மேலும்) 16.01.2010
______________________________________________________________________________________________________________
ஜனாதிபதி தேர்தல் எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?
- பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்) ஜனவரி 2010
அதிகாரப்பகிர்வுக்கு எதிராகவும், எமது அண்டைநாடான இந்தியாவுக்கு விரோதமாகவும் செயற்பட்டுவரும் ஜே.வி.பி எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பிரதான பங்குதாரர் என்பதையும் நாம் மனம் கொள்ள வேண்டியுள்ளது.. அத்துடன் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் பொன்சேகாவின் முதுகில் ஏறி தான் அதிகாரத்தைப் பிடிக்கும் எண்ணத்துடனேயே அவருக்கு ஆதரவளிக்கிறார். சரத் பொன்சேகாவுக்கு என்று ஒரு அரசியற் பின்னணியோ அல்லது ஒரு கட்சிப்பின்னணியோ இல்லாதிருக்கிறார். இந்நிலையில் பொன்சேகா அவர்கள் தமது வாக்குறுதிப்படி எவ்வளவு தூரம் செயல்படுவார் என்பதே எமது கேள்வி. இது ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி பின்னர் நீ யாரோ நான் யாரோ என அவர் ஆக்கி விடுவாரோ என்பதே எமது கவலை. இப்போது பலதும் பத்தும் கூறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களும் எல்லாம் பிழைத்ததன் பின்னர் எல்லா சிங்களத் தலைவர்களும் இப்படித்தான் என்று சுலபமாகக் கூறி தாம் மக்களை பிழையாக வழி நடத்தியதற்கான பொறுப்பைக் கை கழுவி விட்டு அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் எப்படி வெல்வது என்பதை நோக்கி மக்களுக்கு உணர்ச்சி ஊசி அடிக்கத் தொடங்கி விடுவார்கள். புலிகளை ஏக பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்டே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது அரசாங்கம்தான் அவர்களை ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியது. நாங்கள் அவ்வாறு கூறவில்லையென்று திரு.சம்பந்தன் அவர்கள் தெரிவிக்கின்றார். (மேலும்) 16.01.2010
______________________________________________________________________________________________________________
ஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும் (பாகம் மூன்று)
எஸ்.எம்.எம்.பஷீர்
அரசியல்வாதிகள் கட்சி மாறுவது என்பது மிகச்சாதாரணமான நிகழ்வு என்பது ஒருபுறம் இருக்க எதிரும் புதிருமான கொள்கை கொண்ட கட்சிகள் பல ஒரு நேர்கோட்டில் பயணிப்பது என்பது சாத்தியமானதல்ல என்பதை இப்போது இலங்கையில் ஒரே கூட்டணியில் இணைந்திருக்கின்ற அரசு எதிர்க் கூட்டணியின் முரண் கருத்துக்கள் முளைவிடத்தொடங்கிவிட்டன. இந்தக் கூட்டில் சில பிரிவினர் தமது வஞ்சத்தை தீர்த்துக்கொள்ள முற்படுகின்ற அடிப்படையில் மட்டுமே இணைந்திருக்கிறார்கள், இந்த சூழ்நிலையில்தான் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமது கட்சி முடிவு குறித்து தடுமாறி புலிகளின் காலாவதியான பகிஸ்கரிப்பு முடிவை மீளப் புதுப்பித்து அற்க்கையிட்டு சில தினங்களுக்குள் அவரின் கட்சி ‘யு டேன்" எடுத்துள்ளது. அகில இலங்கை தமிழ் காகிரசின் பேச்சாளர் அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி இலங்கையில் நாடாளுமன்ற மனித உரிமை சட்டத்தரணியாக பணிபுரிந்து நூற்றுக்கணக்கான இளைஞர்களை சிறை மீட்கும் பணியில் பெருமளவில் ஈடுபட்டவர். பிரித்தானிய அரசுக்கு அதன் நீதித்துறைக்கு புகலிடம் கோரும் தமிழர்களுக்கு இலங்கை அரசை மிலேச்சத்தனமான அரசாகக் காட்டி, அவ்வரசின் நாடாளுமன்ற அங்கத்தவர் என்ற ஊதியத்துடனும் , பாதுகாப்புடனும் , புலிகளின் மனித உரிமை மீறல்களை பொறுத்தவரை கபோதியாக இருந்து, ஒரு தலைப்பட்சமாக மனித உரிமையை புரிந்துகொண்டவர். இவர் சில வாரங்களுக்கு முன்னர் தேர்தலை புலிகள் செய்ததுபோல் அதே எதிர்பார்ப்புடன் தமது கட்சி தேர்தலை பகிஸ்கரிக்கும் என தீர்மானம் நிறைவேற்றி பகிரங்கப்படுத்தினர். சில தினங்களுக்குள் அவ்வாறு செய்தால் மீண்டும் மஹிந்த வருவதற்கு வழிசமைத்துவிடும் என்று அவர்கள் மீது விடுக்கப்பட்ட புலம் பெயர் அழுத்தங்கள் மூலம் நேரெதிர் முடிவினை எடுத்தவர்கள். (மேலும்) 16.01.2010
______________________________________________________________________________________________________________
“புதியபாதை சுந்தரம்” 28வது நினைவு தினம்
புதியபாதை ஆசிரியர் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்) யாழ்-சுழிபுரம்
புதியபாதை ஆசிரியரும் விடுதலையின் பெயரால் படுகொலை செய்யப்பட்ட முதலாவது பத்திரிகையாளருமான சதாசிவம் சிவசண்முகமூர்த்தி அவர்களின் 28வது நினைவு தினம் எதிர்வரும் ஜனவரி 2ம் திகதியாகும் இதனை முன்னிட்டு, ஜனவரி 16ம் திகதி கனடா ரொறன்ரோ நகரில் தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக “ஊடகங்களின் தவறான செய்திகள், ஆய்வுகள் உரிமை போராட்டத்தை எவ்வளவு தூரம் பின் நகர்த்தியுள்ளது” என்ற கருப்பொருளில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“புதியபாதை சுந்தரம் 28வது நினைவு தினம்” இடம்: 2401 டெனிசன் வீதி, மார்க்கம், ஒன்ராறியோ, கனடா காலம்: ஜனவரி 16ம் திகதி சனிக்கிழமை 2010ஆண்டு நேரம்: மாலை 4:00 மணி
மேலதிக தொடர்புகட்கு: 416-613 2771 -புதியபாதை ஏற்பாட்டுகுழு
______________________________________________________________________________________________________________
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனை: அதியுயர் பாதுகாப்பு வலயம் என்பது அரசியல் பிரச்சினையல்ல
அதி உயர்பாதுகாப்பு வலயம் என்பது நாட்டின் மிக முக்கிய கேந்திர நிலையங்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு செய்யப்பட்டுள்ளவை. எந்த நாட்டிலும் இவ்வாறான நடைமுறை இருக்கிறது. விமான நிலையம் ஒன்றை அண்டிய பகுதி எப்போதும் அதி உயர் பாதுகாப்பு வலயம்தான். எந்த நாட்டிலும் விமான நிலையத்துள் நுழைந்துவிட முடியாது. ஆனால் மக்களின் குடியிருப்புகள், விளைநிலங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை விபரம் என்ன என்று கூறமுடியுமா? இரா சம்பந்தன் தலைமையிலான குழுவினர் சில கோரிக்கைகளை முன் வைத்தார்கள். அதில் வடக்கு கிழக்கு இணைப்பு என்பதும் உள்ளடக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளேன். அதி உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்படுதல், வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் நீக்கப்படுதல் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. அதி உயர் பாதுகாப்பு பகுதியில் மீளக் குடியமர்த்தும் பணிகள் நடைபெறுகின்றன. திடுதிப்பென இதனை செய்வதும் ஊடாக மற்றுமொரு ஈராக், ஈரான் போன்று ஆகிவிட முடியாது. (மேலும்) 15.01.2010
______________________________________________________________________________________________________________
தமிழர்களை முட்டாள்களாக்கும் திருமாவளன்
- ஈழப்பிரியன்
புலிகள் மீதான அவரது பார்வையைத் தவிர்த்து பார்த்தால் திருமாவளவன் மீது மதிப்பு வைத்திருப்பவர்கள் அதிகம். அண்மைக்காலத்தில் மாத்திரம் மூன்று தடவை இலங்கை சென்று திரும்பியிருக்கிறார் அவர். அண்மையில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் பெ.சந்திரசேகரனின் மரணச்சடங்கில் கலந்துகொள்ள இலங்கை வந்திருந்த அவர் அடுத்த சில தினங்களிலேயே மீண்டும் வந்தார். பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் மரணச்சடங்கில் கலந்துகொள்ள வந்திருந்த அவர், வல்வெட்டித்துறை வரை சென்று இறுதிச்சடங்குகளில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையிலிருந்து தமிழகம் திரும்பியதும் ஜுனியர் விகடனுக்கு பேட்டியளித்த அவர், தமிழ் மக்களை எவ்வளவு முட்டாள்கள் என்று நினைத்தாரோ தெரியவில்லை.வேலுப்பிள்ளை அவர்களின் சடலம் வவுனியாவில் வைக்கப்பட்டிருந்தபோது அங்கு போய்ச் சேர்ந்திருக்கிறார் திருமா. அப்போது பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளும் அங்கே இருந்திருக்கிறார். இவர் அவரைச் சந்தித்தபோது அவருக்கு தமது கணவர் இறந்த செய்தி தெரியாதாம். அவர் சாமி கும்பிடப் போயிருப்பதாகவே அவரிடம் கூறப்பட்டிருந்ததாம். (மேலும்) 15.01.2010
______________________________________________________________________________________________________________
அரசியல் தீர்வுக்கும் அபிவிருத்திக்கும் மஹிந்தவை ஆதரிக்க வேண்டும்
- புலம்பெயர் தமிழர் அமைப்பின் பிரதிநிதி ரஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
அரசியல் தீர்வையும் அபிவிருத்தியையும் அடைவதற்குத் தமிழ் மக்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்க வேண்டுமென்று புலம்பெயர் தமிழர் அமைப்பின் பிரதிநிதியான எழுத்தாளர் திருமதி ரஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.மனித உரிமைகளுக்காகப் போராடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஓர் அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதுடன் அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுப்பார் என திருமதி பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியே தமிழர்களை முதன் முதலில் அகதியாக்கியது. தமிழ் மக்களுக்குத் தீர்வுகள் கிடைத்த போது அதனைச் சீர்குலைத்தது. தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைப்பதை இனவாதத்துடன் நோக்கிவரும் ஜே. வி. பி. யும் இம்முறை கூட்டணி சேர்ந்துள்ளது. எனவே, தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்தவையே ஆதரிக்க வேண்டும். மானமுள்ள எந்தத் தமிழனும் இதனை மறந்து செயற்பட மாட்டான் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
______________________________________________________________________________________________________________
Five Left parties in collective appeal warns: Defeat conspirators
M.P. Muttiah
Five Left parties in a collective appeal gave a signal warning to the people stressing the need to defeat, abort and destroy the impending political conspiracy decisively. They have emphasized the importance of taking into consideration the potential dangerous political trends and developments. The Lanka Sama Samaja Party, Communist Party of Sri Lanka, Democratic Left Front, People's Liberation of Tamil Eeelam and Eelam People's Revolutionary Liberation Front (Padmanaba) in a joint statement said they work in close co-operation in support of President Mahinda Rajapaksa at the forthcoming Presidential Election. They have called upon the people to observe the trends of militarization of politics and politicization of the military. (Read) 15.01.10
______________________________________________________________________________________________________________
பொலன்னறுவையில் இரு கட்சிகள் இடையே மோதல் : அரசு கண்டனம்
பொலன்னறுவையில் இரு கட்சிகளைச் சேர்ந்த ஆதரவாளர்களிடையே நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவத்தைக் கண்டித்திருக்கும் அரசாங்கம், அச்சம்பவம் தொடர்பிலும் சர்வதேச ஊடக நிறுவனத்தின்(பிபிசி) ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம்மிக்க தேர்தல் நடைபெறவுள்ள இத்தருணத்தில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. தங்கல்லையில் கடந்த ஜனவரி 12 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊடக மற்றும் ஏனைய தகவல்களுடன் ஒப்பிடும்போது தங்கல்லை சம்பவத்தில் மரணமான பெண் ஜனாதிபதி ஆதரவாளர் என்பது புலனாகியுள்ளது. அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்பட்ட சம்பவமா அல்லது உண்மையாக தேர்தலுடன் தொடர்புடையதா என்பது பற்றி ஆராயப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எந்தவொரு தேர்தல் பிரசாரத்துக்கும் கலந்துகொள்ளும் சுதந்திரம் உண்டு." இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
______________________________________________________________________________________________________________
ஜனாதிபதி தேர்தலும் திசைமாறிய த.தே.கூட்டமைப்பும்
சரத் பொன்சேகா முன்வைத்துள்ள வாக்குறுதிகள் சாத்தியமில்லாதவை என்று தெரிந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர் என்ற அரசியல் அவதானிகளின் குற்றச்சாட்டு நியாயமானதே
13.01.2010 தாயகக்குரல
வடக்கு கிழக்கு இணைப்பு, இனப்பிரச்சினைக்குத் தீர்வு, மீள்குடியேற்றம், புலிகளை விடுதலை செய்தல், அதிபாதுகாப்பு வலையங்களை அகற்றல்., மீன்பிடிதுறை உட்பட எட்டு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன்சேகாவை ஆதரிப்பதாகவே பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறைந்தது இனப்பிரச்சினை பற்றியாவது குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் அது கூட அங்கு குறிப்பிடப்படவில்லை. காரணம் சரத்பொன் சேகாவை ஆதரிக்கும் இரு பிரதான கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணிக்கும்(ஜே.வி.பி.) ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே இனப்பிரச்சினை தொடர்பாக நேர் எதிரான கருத்து முரண்பாடுகள்; இருப்பது தெரிந்ததே. 13வது அரசியலமைப்பு திருத்தத்தைக்கூட ஜே.வி..பி ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இனப்பிரச்சினை தொடர்பாக ஒரு திடமான நிலைப்பாடு கிடையாது. (மேலும்) 14.01.2010
______________________________________________________________________________________________________________
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் வடக்கு மீள்நிர்மாணத்திற்கு ரூபா 40 ஆயிரம் கோடி ஜனாதிபதி ராஜபக்ஷ அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் இரு வாரங்களே உள்ள நிலையில்,அதிகளவில் சுயாட்சிக் கோரிக்கையை முன்வைத்திருக்கும் தமிழர்களுக்குப் பல சலுகைகளை வழங்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்வந்திருக்கிறார். சிறுபான்மைத் தமிழ் சமூகமானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தீர்க்கமான பங்களிப்பைச் செலுத்தக்கூடிய நிலையில், அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளை முன்வைக்கப் போவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். சட்ட வாக்க சபையில் தீர்மானங்களை எடுப்பதற்கு தமிழர்களுக்கு அதிகளவுக்கு பாக்கியம் உள்ளதாகவும் நீண்டகால கோரிக்கையான அதிகாரப்பகிர்விற்கு தீர்வு காண்பதற்குமான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு நிருபர்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை குறிப்பிட்டது. யுத்தத்தின் முடிவானது நெருக்கடி முடிவடைந்துவிட்டதென அர்த்தப்படாது. தமிழர்களின் தேவைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணும் தேவை எனக்கு உள்ளது என்று அலரிமாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சந்திப்பின்போது ஜனாதிபதி கூறியுள்ளார். புதிய சட்டவாக்க ஏற்பாடுகளில் சிறுபான்மைத் தமிழருக்கு அதிகளவு பிரதிநிதித்துவம் வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.இவை எல்லாவற்றுக்கும் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அத்துடன், சர்வசன வாக்கெடுப்பு மூலம் மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. (மேலும்) 14.01.2010
______________________________________________________________________________________________________________
ததேகூ உறுப்பினர்கள் குழு இந்தியா இன்று பயணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று புதுடில்லியிலிருந்து கிடைத்த அழைப்பின் பேரில் இன்று இந்தியா சென்றுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய இக்குழுவில் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்போது கனடாவில் தங்கியிருப்பதால் இக்குழுவில் இடம்பெறவில்லை.. இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சென்றுள்ள இக்குழுவினர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் காலகட்டத்தில் இவர்களுடைய இந்த விஜயமானது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது
______________________________________________________________________________________________________________
The Canadian Tamils for Peace and Democracy supports President Mahinda Rajapakse and request fellow Sri Lankans Tamils to follow the same
Toronto – Canada
The Canadian Tamils for Peace and Democracy has declared its unanimous support for the re-election of President Mahinda Rajapakse. The Canadian Tamils for Peace and Democracy passed a resolution unanimously to support President Mahinda Rajapakse to be re-elected and as their only candidate for the Presidency. The most recent confirmation of support came from the Executive Committee of CatPad, during their extraordinary meeting held on January 12, 2010 and ratified its support to the strong leadership given by President Mahinda Rajapakse to eradicate terrorism and restore democracy in the North and East of Sri Lanka. The Canadian Tamils for Peace and Democracy also request the fellow Tamils in Sri Lanka to follow its path to strengthen the hands of President Mahinda Rajapakse to take forward the task of not only defeating terrorism in the North and East but also to strengthen the democracy by developing the province economically and socially which are interconnected with peace and political stability in the country. (Read) 14.01.10
______________________________________________________________________________________________________________
உள்நாட்டு, வெளிநாட்டு சதிகாரருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்
ஜனாதிபதி மஹிந்த
உள்நாட்டு, வெளிநாட்டு சதிகாரர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்காக ஒன்றுபடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் அழைப்பு விடுத்தார். எங்களது நாட்டை நாங்கள் பார்த்துக் கொள்ளுகின்றோம். இங்கு கையடிக்க வராதீர்கள் என்று சொல்லும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் அபேட்சகரான என்னை அமோக வெற்றிபெறச் செய்யுங்கள் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். ஐ. ம. சு. முன்னணியின் இரத்மலானை ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டம் இரத்மலானை ரயில்வே விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், நான் 2005ம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் போது நாடு துண்டாடப் பட்டிருந்தது. பயங்கரவாதம் அரசோச்சியது. பாரிய அர்ப்பணிப்புக்களைச் செய்து தான் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டினோம். நாட்டை மீண்டும் ஐக்கியப் படுத்தினோம். பிளவுபட்டிருந்த மக்களையும் ஒன்றுபடுத்தி னோம். இதன் பயனாக வெளிநாட்டு அழுத்தங்களை வெற்றிகரமாக எதிர்கொண் டோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் பயனாகவே யுத்த நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்ய முடிந்தது. (மேலும்) 14.01.2010
______________________________________________________________________________________________________________
இலங்கையில் தேர்தல் வன்முறை அதிகரிக்கிறது: கண்காணிப்பு அமைப்பு
B.B.C News
இலங்கையில் இம்மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரங்களில் கவலையளிக்கக்கூடிய வன்முறை இடம்பெற்று வருவதாக தேர்தலை கண்காணிக்கும் அமைப்புகள் தெரிவித்துள்ளன. தவிர அரசு இயந்திரம் முறைதவறி தேர்தல் பணிகளில் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த அமைப்புகள் கூறுகின்றன. தேர்தல் கண்காணிப்பாளர்கள் இதனை அறிவித்துக்கொண்டிருக்கும்போதேகூட, வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையே மத்திய இலங்கையில் மோதல்கள் நடந்துள்ளன. எதிர்கட்சியின் பெண் ஆதரவாளர் ஒருவர் செவ்வாயன்று சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். தேர்தல் வன்முறைகள் என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கஃப்பே கூறுகிறது. மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிராதான எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளரான சரத் ஃபொன்சேகா ஆகிய இருவர் தரப்பிலுமே அரச இயந்திரம் சட்டவிரோதமான வகையில் பயன்படுத்தப்படுகிறது என்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கூறுகின்றன. (மேலும்) 14.01.2010
______________________________________________________________________________________________________________
தன்னந்தனியே ஓங்கி ஒலித்த ஒருபெண்ணின் குரல்
-சி.சரத்சந்திரன்
இந்த ஆண்டு லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் நூற்றாண்டு விழா வர உள்ளது. அவர் மலையாள இலக்கியத்தில் ஒளிவீசித் திகழ்ந்த ஒரே பெண் ஆவார். மார்க்சிய மேதை இ.எம். எஸ். நம்பூதிரிபாட்டின் துணைவியாரான அவர் 1909ம் ஆண்டில் பிறந்தார். இருவருமே கேரளத்திலுள்ள நம்பூதிரி வகுப்பைச் சேர்ந்தவர்கள். இருவருக்குமே அவர்கள் பிறந்த வகுப்பில் ஒரு மாபெரும் சமூக மாற்றத்தை உருவாக்கிட வேண்டியதோர் பொறுப்பும் கடமையும் இருந்தன. மேலும் அவர்கள் இருவருக்கும் கேரள மாநிலம் முழுவதிலுமே ஒரு சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டிய பொறுப்பும் இருந்தது. 20ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் கேரளத்தின் விடுதலைப் போராட்டமானது நாட்டின் ஏனைய பகுதிகளைவிட மிகவும் வீறுகொண்டு விளங்கியது எனலாம். அந்தப் போராட்டமானது அரசியல், சமூக மாற்றம் மற்றும் இலக்கிய மறுமலர்ச்சி ஆகிய அம்சங் களை உள்ளடக்கியதாக விளங்கியது. இஎம் எஸ், கே.பி.கேசவமேனன், ஸ்வாதேசாபி மானி, ராமகிருஷ்ணபிள்ளை போன்றோர் எழுத்தாளர்களாகவும் பத்திரிகையாளர்களாக வும் தலைசிறந்த அறிவு ஜீவிகளாகவும் மின்னி மிளிர்ந்தனர். (மேலும்) 14.01.2010
______________________________________________________________________________________________________________
வலி.வடக்கு மீள்குடியேற்றம் ஆரம்பம். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசம்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இன்றையதினம் மீள்குடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் வலிகாமம் வடக்கு பிரதேசத்திற்குள் பிரவேசித்து தத்தமது வீடுகளைப் பார்வையிட்டனர். முன்னதாக இன்று காலை வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலக வளாகத்தில் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் திரண்டிருந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெல்லிப்பளை பிரதேச செயலாளர் முரளிதரன் ஆகியோர் உயர்மட்ட சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டனர். இச்சந்திப்பின்போது ஏற்கனவே ஜனாதிபதியினாலும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவினாலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மக்களை மீளக்குடியேற அனுமதிப்பது என முடிவுசெய்யப்பட்டது. (மேலும்) 14.01.2010
______________________________________________________________________________________________________________
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு மாவை அவசர கோரிக்கை
மிக நீண்டகாலமாக விசாரணையுமின்றி விடுதலையுமின்றி சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களை இனியாவது விடுதலை செய்ய அரசு முன்வரவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.மாவை சேனாதிராஜா அவசர கோரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதிலுமுள்ள சிறைகளில் 600 க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் கடந்த எட்டு நாட்களாக சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையிலேயே நீதி மற்றும் சட்டமறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொடவுடன் நேற்றுக் காலை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மாவை சேனாதிராஜா அவரிடம் மேற்க்ண்ட கோரிக்கையை விடுத்துள்ளார். இதற்குப் பதிலளித்த அமைச்சர், "அவர்களது விடுதலை அல்லது விசாரணை தொடர்பாக சட்டமா அதிபருடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறேன். அவர்களது தனிப்பட்ட கோவைகளை எனது பார்வைக்கு அனுப்புமாறும் கேட்டிருக்கிறேன். இதற்கு குறைந்தது ஒருவார கால அவகாசமாவது தேவைப்படும்" எனக் கூறியுள்ளார்.
______________________________________________________________________________________________________________
மிகச் சிறந்த வாழ்க்கை தரம் : இந்தியாவிற்கு 35வது இடம்
உலகில் மிகச்சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா 35வது இடத்தை பிடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், உலகில் உள்ள எந்த நாடு, மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளை கொண்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு, சிறந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நாடுகளின் பட்டியலை, சுற்றுலா இதழ் ஒன்று கடந்த 30 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. அதில், மிகச்சிறந்த 88 நாடுகளில் முன்னணி நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்தியா 35ம் இடத்தை பிடித்துள்ளது.உலகில் உள்ள 194 நாடுகளை, கலாசாரம் மற்றும் ஓய்வு நேரம், பொருளாதாரம், சுற்றுச் சூழல், கட்டமைப்பு, ஆரோகியம், வாழ்க்கை தரம், பாதுகாப்பு, சுதந்திரம், அபாயம், வானிலை ஆகியவைகளுக்கு ஏற்ப, ஒன்பது பிரிவுகளாக பிரிக்கப் பட்டது. இந்த பட்டியலில், ஐந்தாம் ஆண்டாக தொடர்ந்து பிரான்ஸ் முதல் இடத்தில் உள்ளது. அடுத்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகியவை முறையே இரண்டு, மூன்று, நான்கு இடங்களை வகிக்கின்றன. கடந்த ஆண்டு நான்காம் இடத்தில் இருந்த அமெரிக்கா இந்த ஆண்டு ஏழாம் இடத்திற்கு சென்று விட்டது. சுவீடன் நாடு அதிக செலவுமிக்க நகரமாக கருதப்படுகிறது. (மேலும்) 14.01.2010
______________________________________________________________________________________________________________
சாதாரண புலிகளுக்கு சயனைட், விசேசப் புலிகளுக்குச் சரண்!
- துக்ளக் ‘சோ’ கிண்டல்!!
தமிழகத்திலிருந்து வெளிவரும் ‘துக்ளக்’ வார இதழில், வாசகர் ஒருவர் கேட்ட கேள்வியும், அதற்கு அதன் ஆசிரியர் சோ அளித்த சிந்தனையைத் தூண்டும் பதிலும், தேனீ வாசகர்களுக்காக கீழே தரப்படுகின்றது. கேள்வி - ‘இலங்கையில் நடந்த இறுதிப் போரில் சரண் அடைந்த விடுதலைப் புலிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது சர்வதேச அளவில் பெரிய விடயம். இதை நாங்கள் சாதாரணமாக விடப் போவதில்லை’ – என்று ரணில் விக்கிரம சிங்கே கூறியிருப்பது பற்றி? பதில் - செய்யட்டும். நல்லதுதான். அப்படியே, ‘பிரபாகரன் உட்பட புலித் தலைவர்கள், சயனைட் சாப்பிடாமல் சரணடைய முன்வந்தது ஏன்? என்பதையும் பரிசீலித்துவிட்டு, விக்கிரம சிங்கே விளக்கச் செய்தால் நல்லது. ‘சாதாரண புலிக்கு சயனைட்; விசேசப் புலிகளுக்குச் சரண்’ என்பது புலிச் சட்டமா?’ என்ற சந்தேகம் தீர்த்து வைக்கப்படுவது நல்லதுதானே?
______________________________________________________________________________________________________________
இனப்பிரச்சினையைத் தீர்ப்பது கூட்டமைப்பின் நோக்கமல்ல
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாகாது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் இன்றைய நிலையில் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சி இத்திருத்தத்துடன் ஆரம்பிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. தமிழ்த் தலைவர்களின் தூர நோக்கற்ற செயற்பாடுகளின் விளைவாக இந்த நிலை உருவாகியிருக்கின்றதா அல்லது தங்கள் அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்தத் தலைவர்கள் அரசியல் தீர்வைத் திட்டமிட்டுத் தவிர்த்திருக்கின்றார்களா என்பது விவாதத்துக்குரிய விடயம். கடந்த சில தசாப்த கால நிகழ்வுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, அரசியல் தீர்வைத் தவிர்க்கும் நோக்கம் இவர்களுக்கு இருந்திருக்கின்றது என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது. தமிழரசுக் கட்சி முதல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நிலையான ஒரு கொள்கையைக் கொண்டிருக்கவில்லை. ஒவ் வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு கொள்கையை வலி யுறுத்தினார்கள். இனப் பிரச்சினைக்கான தீர்வைத் தவிர் ப்பதற்கு இது அவர்களுக்கு வசதியாக அமைந்தது. (மேலும்) 13.01.2010
______________________________________________________________________________________________________________
எது இங்கு நிகழ்ந்தாலும், நாம் தோற்றுப்போனவர்கள் அல்ல! எமது இன சமூகம் தோற்றுப்போன மக்கள் சமூகமும் அல்ல.
ஒரு காலம் இருந்தது. புலம்பெயர்ந்து போனவர்கள் யாவரும் நாடு துறந்து ஓடிப்போன துரோகிகள் என்று தூற்றப்பட்டார்கள். தனிநாடு கிடைத்தால் இங்கு நாட்டை விட்டு ஓடிப்போனவர்களுக்கு அனுமதி இல்லை என்று முற்கூட்டியே தீர்ப்பு எழுதப்பட்டது. ஆனாலும் யாரும் நினைத்தது போல் இங்கு எதுவும் நடந்திருக்கவில்லை. அதே புலம்பெயர்ந்து போன எமது உறவுகளிடம் இருந்து பெற்ற நிதிதான் ஆயுதப்போராட்டம் என்று புலிகளின் தலைமையால் சொல்லப்பட்ட அழிவு யுத்தத்திற்கு பயன்படுத்தப்பட்டது. அழிவு யுத்தம் என்பது இருந்தவைகள் எல்லாவற்றையும் எம்மிடம் இருந்து பிரித்துச்சென்று விட்டது. எமது மண்ணின் வளங்களை அழித்து சிதைத்து சென்று விட்டது. எமது மனித வளங்களை கொன்று பலியாக்கி சென்று விட்டது. ஏஞ்சியுள்ள மனித உயிர்களையும் யுத்தத்தின் நெரிசலுக்குள் இருந்து தப்பி பிழைத்திருக்கும் குறைந்த பட்ச உடைமைகளையும் தவிர இங்கு எதுவுமே மிச்சமில்லை. ஆனாலும் இருக்கின்றது என்று சொல்வதற்கு ஒன்றே ஒன்று மட்டும் தாராளமாக மிச்சமிருக்கின்றது. அது எமது நம்பிக்கை மட்டும்தான். அதற்கென காத்திருக்கும (மேலும்) 13.01.2010
______________________________________________________________________________________________________________
பிரபாகரனின் தாயார் இந்தியாவில் குடியேற தடையில்லை: மகிந்த ராஜபட்ச.
கொழும்பு, ஜன. 12: இலங்கை ராணுவம் நடத்திய போரின்போது உயிரிழந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி, மாமியார் எராம்பு ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேறி இந்தியாவில் நிரந்தரமாக குடியேற விரும்பினால் அதற்கு தடை ஏதும் இல்லை என்றார் மகிந்த ராஜபட்ச. கொழும்பில் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இந்தியா சென்று அங்கேயே நிரந்தரமாக தங்க விருப்பம் இருந்தால் பிரபாகரனின் தாயார், மாமியார் ஆகியோர் அப்படியே செய்யலாம். எனினும் இந்தியா இதற்கு அனுமதிக்கவேண்டும். பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை ராணுவ முகாமில் தங்கி இருந்தபோது அவருக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அவர் உயிரிழந்த பிறகும் உரிய மரியாதை தரப்பட்டது. வேலுப்பிள்ளை உடல் தகனம் செய்யப்பட்டபோது அரசு சார்பில் சில வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. வேலுப்பிள்ளையின் இறுதிச்சடங்கில் சுமார் 300 பேர் பங்கேற்றனர். பிரபாகரனின் தாயார் பார்வதி, மாமியாரும் கலந்து கொண்டனர் என என்னிடம் அதிகாரிகள் தெரிவித்தனர் என்றார் ராஜபட்ச. (மேலும்) 13.01.2010
______________________________________________________________________________________________________________
திருகோணமலையில் தலைமைத்துவத்துடன் புதிய அரசியல் கட்சி
(A.S.M. தானீஸ், M.J. அன்வர் அலி)
திருகோணமலையில் NGGF (National good governance front) தேசிய நல்லாட்சிக்கான முன்னனி எனும் பெயரில் அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் கருவிருத்திக் கூட்டம் அன்மையில் கந்தளாயில் இடம்;பெற்றது அதில் கந்தளாய், தோப்பூர், முள்ளிப்பொத்தானை, கிண்ணியா, மூதூர், திருகோணமலை, நிலாவெளி, புல்மோட்டை, இறக்கக்கண்டி, குச்சவெளி மற்றும் றொட்டவௌ பகுதிகளில் இருந்து தலா ஐந்தைந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன் ஆரம்ப கட்ட பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை எனினும் ஜனாதிபதித் தேர்தலி;ன் பிற்பாடு பதிவு செய்வதற்கான சகல நடிவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதன்போது கருத்துத் தெரிவித்த அதன் பிரதான ஏற்பாட்டாளர் தேசிய அரசியலைப் பிரதிநிதித்துவப் படுத்த எமது வாக்குகளைப் பயண்படுத்தியதன்; மூலம் நாம் பெற்றுக்கொண்ட பலாபலன் என்ன? எமது மாவட்ட மக்கள் எதனைப் பெற்றக்கொண்டார்கள் சாதாரணமாக கட்சிகள் பேரம் பேசிப் பெற்றுக்கொள்கின்ற தவிசாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள் என்று எதனைப் பெற்றுக்கொண்டார்கள். எமது மாவட்ட மக்கள். (மேலும்) 13.01.2010
______________________________________________________________________________________________________________
இலங்கை தேர்தல் வன்முறையில் பெண் சாவு
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிர் கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பேருந்தில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணி, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இம்மாதம் 26 ஆம் தேதி நடக்கவுள்ள இத்தேர்தல் தொடர்பாக நடைபெற்ற முதல் உயிரிழப்பு இதுதான். இலங்கையின் தென் பகுதியில் உள்ள ஹூங்கம்ம பகுதிதியில் நடைபெற்ற ஒரு தேர்தல் கூட்டத்துக்கு சென்ற 60 வயதுப் பெண் இவ்வாறு பலியாகியுள்ளார். தேர்தல் வன்முறையை கண்காணிக்கும் அமைப்பு, மோட்டர் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள், பேருந்தின் ஜன்னல் வழியாக சுட்டதில் இந்தப் பெண்மணி சம்பவ இடத்தில் பலியானதாகவும், மற்ற நால்வர் படுகாயமடைந்ததாகவும் பிபியிடம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் மூன்று வாரங்களுக்கு முன்பு துவங்கியபிறகு நூற்றுக்கும் மேற்பட்ட வன்சம்பவங்கள் நடைபெற்றிருந்தாலும், இதுதான் உயிர் இழப்பை ஏற்படுத்திய முதல் சம்பவம்.
______________________________________________________________________________________________________________
JHU signals it is for Devolution
Rohan Abeywardena
Jathika Hela Urumaya (JHU) heavyweight and Western Provincial Council (PC) Minister Udaya Gamanpila vows that, unlike the JVP, they are not against devolution. In an interview with The Nation early this week, he hinted at some surprises in the new manifesto agreed to by the UPFA members for President Rajapaksa’s second term. It will be made public next week. (Read) 13.01.10
______________________________________________________________________________________________________________
இரு முக்கியமான கருத்துக் கணிப்புகள், மகிந்தவின் அபரிமிதமான வெற்றியை கட்டியம் கூறுகின்றன!
ஆர்.சிவகுருநாதன் (கொழும்பு)
இலங்கையில் ஊடகத்துறையைப் பொறுத்தவரையில், மொழி வித்தியாசம் இன்றி சகல ஊடகங்களும், ஐக்கிய தேசியக்கட்சிக்கு சாதகமாகவே கடந்த 60 வருடங்களாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயம். எனவே வழமைபோலவே, இம்முறை ஜனாதிபதி தேர்தலிலும், அவை எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாகவே பெரும் எடுப்பில் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் கடந்த காலங்களைப் போலவே, தேர்தல் முடிவு வெளிவரும் போது, மக்கள் பெரும்பாலான ஊடகங்களின் கருத்துகளுக்கு எதிராக தீர்ப்பை வழங்கியிருப்பதைக் காணமுடியும். இந்த ஊடகங்கள் என்னதான் மக்களின் மனதை மாற்ற முனைந்தாலும், ஏகப்பெரும்பான்மையான மக்கள் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கே தமது ஆதரவை வழங்கி நிற்கிறாhகள் என்பதை, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு முக்கியமான கருத்துக் கணிப்புகள் எடுத்துக் காட்டி நிற்கின்றன. கடந்த வாரம், களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடம் நடாத்திய ஒரு கருத்துக் கணிப்பில், மகிந்த ராஜபக்சவுக்கு 62 வீதமான மக்களின் ஆதரவும், சரத் பொன்சேகாவுக்கு 28 வீதமான மக்களின் ஆதரவு(மட்டு)ம் இருப்பது தெரியவந்துள்ளது. இதை முன்னின்று நடாத்திய பேராசிரியர் கருணரத்ன கருத்துத் தெரிவிக்கையில், சரத் பொன்சேகாவுக்கு நகரப்புறங்களில் தான் ஓரளவு ஆதரவு இருப்பதாகவும்., கிராமப்புறங்களில் மகிந்த ராஜபக்சவுக்கு அமோக ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். (மேலும்) 12.01.2010
______________________________________________________________________________________________________________
அங்கிடுதத்தி அரசியலும் மேற்குலக ஊடகங்களும்!
லோகநாதன்
வெளிநாடுகளில் புலன் மங்கிப் போன சில தமிழரிடம் தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்கள், பத்திரிகைகள் என்று ஊடகங்கள் மாட்டிக்கொண்டு அவை தவிக்கும் தவிப்போ தவிப்பு! அரசியல் ஆலோசகர்கள், விமர்சகர்கள் தொல்லையோ சொல்லி மாளாது. படலைக் கொரு ஆய்வாளர் என்ற வீதம் புளுத்துக் கிடக்கிறார்கள். இவர்களில் 90 வீதமானவர்கள் வெடிச்சத்தம் கேட்க முதலே இலங்கையிலிருந்து இடம் பெயாந்தவர்கள். இதைவிட மக்கள் மத்தியில் இறங்கி சமூக, அரசியல் வேலைகளின் அனுபவம் துளிகூட இல்லாதவர்கள். மக்களிடமிருந்து அவர்கள் தேவையறிந்து அவர்களிடம் அறிந்ததை வைத்துக்கொண்டு அவர்களுக்கு செய்யவேண்டியதைத் திட்டமிடுவது தான் அரசியல். கப்பத்துக்கும் யுத்தத்துக்கும் மக்களைப் பாவித்த பாசிசக் கும்பலை இன்றும் ஆதரிக்கும் ஊடகங்களுக்கு அரசியலை மக்களோடு தொடர்வு படுத்தும் அடிப்படை தெரியாது. வெறும் சம்பவங்கள் தகவல்களை அரசியல் என்று வாய்கிழியக் கத்துவது ஒரு போதும் அரசியல் ஆய்வாகிவிடாது. அரசியலைப் பிறருக்குச் சொல்பவனுக்கு எப்பொழுதும் ஒரு தளம் வேண்டும்! இது இவர்களிடம் கிடையவே கிடையாது. பாராளுமன்ற அரசியலை மட்டுமல்ல காலத்துக்குக் காலம் மக்கள் நோக்கை விட்டு பக்கம் சாரும் அரசியல் விமர்சகர்கள், ஆய்வாளர்களையும் உள்ளடக்கி, „போக்கிரிகளின் கடைசிப் புகலிடம் அரசியல்!“ என்கிறார் பேர்னாட்சோ. (மேலும்) 12.01.2010
______________________________________________________________________________________________________________
நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்து அபிவிருத்தி பணியை முன்னெடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த
- அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுத்து நாட்டை அபிவிருத்தியில் இட்டுச் செல்பவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவரை வெற்றி கொள்ள வேறு எந்தத் தலைவராலும் முடியாதென அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். 83ம் ஆண்டு இடம் பெற்ற ஐ. தே. க. கால பேரழிவை மக்கள் இன் னும் மறந்திருக்க மாட்டார்கள். கொக்கட்டிச்சோலை படுகொலை, பல்கலைக்கழக படுகொலை என மேற்கொண்ட யுகம் மீண்டும் வர எவரும் விரும்பப் போவதில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று முன்தினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில், சரத் பொன்சேகாவோடு இணைந்து தமிழ் கூட்டமைப்பு மக்களுக்குப் பெரும் துரோகம் இழைத்துவிட்டது. அக்கட்சி எப்போதுமே எதிர்க்கட்சியில் தான் உள்ளது. அதற்கு விடிவு கிடையாது. அதன் தலைவர் சம்பந்தன் தமிழர்களை விலை பேசித் திரிகிறார். அந்த நிலைக்கு அந்தக் கட்சி தள்ளப்பட்டு விட்டது. தமிழ் மக்கள் ஒன்றை மறந்து விடக் கூடாது. இது வர்த்தக மயத்தேர்தல் அல்ல. நம் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தேர்தல். அதனால் நாம் மஹிந்தவின் ஆட்களாக விருந்து அவருக்கு ஆதரவு வழங்குகின்றோம். (மேலும்) 12.01.2010
______________________________________________________________________________________________________________
சரத் பொன்சேகாவை தோற்கடிக்கவேண்டும்: புலிகளின் முக்கிய பிரமுகர் கிருபாகரன் கருத்து
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பயனடையவேண்டுமானால் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தோல்வி அடையவேண்டும் என்று விடுதலைப் புலிகளின் மனிதஉரிமை அமைப்பின் பொதுச்செயலாளர் ச.வி. கிருபாகரன் தெரிவித்திருக்கிறார். பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் விடுதலைப் புலிகளின் மனித உரிமை அமைப்பான மனித உரிமைகளுக்கான தமிழர் நிலையத்தின் பொதுச் செயலாளராக இருந்து நீண்டகாலமாக பணியாற்றிவருபவர் இவர். ஜெனீவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமை மாநாடுகளில் புலிகள் சார்பில் கலந்துகொள்ளும் முக்கிய பிரமுகர் இவர். இவர் எழுதியுள்ள நீண்ட கட்டுரை ஒன்றிலேயே மகிந்த ராஜபக்சவையே தமிழ் மக்கள் ஆதரிக்கவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அந்த கட்டுரையில் பின்வருமாறு அவர் தெரிவித்திருக்கிறார். இரண்டு முன்னணி வேட்பளர்களும் முன்பு மிக நெருங்கிய நண்பர்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஆகையால், இவர்கள் மீண்டும் ஐக்கியப்படமாட்டர்கள் என்று நாம் எண்ணுவது தவறு. அரசியல்வாதிகளும், தம்மை ஜனநாயகவாதிகளென கூறும் ஒவ்வொருவரும,; கட்சிகளையும் கூட்டணிகளையும் மாற்றுவது நவீன நாகரீகங்களில் ஒன்றாகவுள்ளது. (மேலும்) 12.01.2010
______________________________________________________________________________________________________________
Revenge politics or ‘Second Operation’ for separatist politics?
Tamil National Alliance (TNA) couple of days ago decided to back Sarath Fonseka at the forthcoming presidential election. Although it was said that the decision was unanimous it seems that the three-way split of the TNA remains unrepaired. All Ceylon Tamil Congress wing of the TNA headed by Gajendrakumar Ponnambalam has asked Tamil voters to boycott the election on the basis that the Tamils have nothing do with the election of Sinhala leaders. So the usual politics of abstinence has been upheld. In a way, the ACTC decision appears to be much closer to the old position of the Liberation Tigers of Tamil Eelam (LTTE). On the other hand, Sivajilingam and his colleagues have accepted the first part of the ACTC position, but emphasised the importance of reentering independent democratic politics. In this sense, his candidacy signifies a qualitative shift in Tamil politics. Anyone who has been following Tamil politics vis-à-vis elections in the last 25 years can easily grasp the logic of these two positions. Sambandan wing of the TNA has refused to accept either of these positions and finally decided to support Sarath Fonseka and his candidacy at the forthcoming presidential election. It is interesting to note that Sambanthan has declared that the support of his wing of the TNA is unconditional and that General (Rtd) Fonseka has not promised anything substantial in relation to Tamil national question. If it is so, how do we explain this position? What led Sambanthan’s wing of the TNA to take a decision to support General (Rtd) Sarath Fonseka? How could this riddle be resolved? (Read) 12.01.10
______________________________________________________________________________________________________________
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருளாதார கொள்கை:தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு ஜனாதிபதி உரை
எனது ஆட்சிக் காலம் நான்கு ஆண்டுகளான போதிலும் அதில் 8 மாதம் தவிர்ந்த மீதிக் காலம் முழுவதும் உலகில் மிகவும் மோசமான பயங்கர வாதிகளுக்கு எதிராக முகங்கொடுக்க நேர்ந்தது. காலையில் விழித்தெழும் போதே தாய்நாட்டை ஒற்றுமைப்படுத் துவதற்கு எதிராக உள்ள தடைகளை எப்படி வெற்றிகொள்வது என்பதை நினைவில் இருந்திக் கொண்டுதான் எழுவேன். எனவே நாட்டின் சில முனைகளில் போரிடும் காலம் எனக்கு போதாமல் இருந்தது. எதிர்வரும் 27ஆம் திகதி முதல் எனது முழுக் காலமும் ஒரே நோக்கத்துக்காகவே செலவிடப்படும். ஊழல் இல்லாத செயல்மிகு நாட்டை கட்டியெழுப்புவது மற்றொரு பாரிய யுத்தம் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். ஊழல் செய்வோருடன் சேர்த்து கொண்டு கத்தினால் மட்டும் இந்த நாட்டில் இருந்து ஊழலை ஒழித்துவிட முடியாது. ஊழலை ஒழிக்க பிக்பாக்கட் காரனைப் போல் முடியாது பாதாள உலகினரை அழித்தது போல் புலி பயங்கரவாதத்தை ஒழித்தது போல் வேகமாக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இலங்கையின் சரித்திரத்தில் எவருமே நினைத்திராத வகையில் நாம் சிந்திக்கிறோம். இந்த நாட்டை பலம் மிகுந்த ஐந்து அம்சங்களின் கேந்திரமாக மாற்றியமைத்து ஆசியாவில் உன்னத நாடாக இலங்கையை மாற்றுவோம். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். (மேலும்) 12.01.2010
______________________________________________________________________________________________________________
ஜனாதிபதி தலைமையில் இனப் பிரச்சினைக்குத தீர்வு
தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்றை வழங்கப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் கூறியிருப்பது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம். தமிழ் பேசும் மக்கள் அனுபவித்தவையும் அனுபவிப்ப வையுமான பெரும்பாலான துன்பங்களுக்கு இனப் பிரச்சினையே அடிப்படையான காரணமாக இருப்பதாலும் அறுபது வருடங்களுக்கு மேலாக இப்பிரச்சினை தீர்வின்றி இழுபடுவதாலும் இனப் பிரச்சினையின் தீர்வில் தமிழ் பேசும் மக்கள் கூடுதலான கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளனர். சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இனப் பிரச்சினையை மாத்திரம் பேசுபொருளாகக் கொண்டு அரசியல் நடத்திய தமிழ் அரசியல் கட்சிகள் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலும் பார்க்கத் தங்கள் அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவதிலேயே அக்கறை செலுத்தியதனால் பிரச்சினையின் தீர்வு சாத்தியமாகவில்லை. பிரச்சினையைச் சிக்கலாக்கும் வகையில் பல சந்தர்ப்பங்களில் இவர்கள் செயற்பட்டிருக்கின்றார்கள். இப்போது தீர்வுத் திட்டம் எதுவும் இல்லாமல் கைவிரித்து நிற்கி ன்றார்கள். (மேலும்) 12.01.2010 ______________________________________________________________________________________________________________
தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று யாழ்ப்பாணத்தில் அறிவிப்பு
- சகல மாகாண சபைகளும் அங்கம் வகிக்கும் புதிய மேல் சபை
- வடக்கில் எஞ்சிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு விரைவில் தேர்தல்
- யாழ். பல்கலைக்கழகத்தில் பொறியியல், விவசாய பீடங்கள்
- யாழ் குடாநாட்டில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம்
தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். அதேநேரம் சகல மாகாண சபைகளும் அங்கம் வகிக்கக்கூடிய வகையில் புதிதாக மேல் சபையொன்றும் அமைக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார். யாழ். மாநகர சபைக்கும், வவுனியா நகர சபைக்கும் ஏற்கனவே தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கும் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இனிமேல் இந்த நாட்டில் அகதிகள் யுகம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. எவரும், எங்கும் அச்சம், பீதியின்றி சுதந்திரமாக சென்று வரலாம். இதில் எதுவிதமான கட்டுப்பாடுகளுமே இராது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பொறியியற் பீடம், விவசாயப் பீடம் என்பனவற்றை உள்ளடக்கிய முழுமையான பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். யாழ். குடாநாட்டில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார். (மேலும்) 11.01.2010
______________________________________________________________________________________________________________
ஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும் (பாகம் இரண்டு )
எஸ்.எம்.எம்.பஷீர்
"குடும்ப ஆட்சி" நடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு அல்லது விமர்சனம் பரவலாக இன்றைய முன் வைக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஜனாதிபதியின் சகோதரர் கோதபாய ராஜபக்ச ராணுவ ரீதியாகவும் பசில் ராஜபக்ச அபிவிருத்தி நடவடிக்கைககள் மூலமும் இந்த அரசில் மிக பிரதான பாத்திரம் வகிக்கிறார்கள், இவர்களது நடவடிக்கைகளினால் இந்த அரசு ஒரு குடும்ப ஆட்சியை நடத்துகிறது என்பதுதான் மிக அதிகளவில் சுட்டிக்காட்டப்படும் விஷயமாகும். ஆனால் குடும்ப ஆட்சி என்றதும் எனக்கு இன்னுமொரு ஜனாதிபதி ஆட்சியும் நினைவுக்கு வருகிறது, ஆனால் அன்று அந்த ஆட்சியினை யாரும் குடும்ப ஆட்சி என்று விமர்சனம் இந்த அளவில் பகிரங்கமாக செய்யவில்லை. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவாத்தனாவின் சகோதரர் , இராணி சட்டத்தரணி எச். டப்ளியூ ஜெயவர்த்தனா 1985 ம் ஆண்டு திம்பு பேச்சு வார்த்தைகளில் அரச தரப்பினரின் தலைவராக கலந்து கொண்டார். பின்னர் ஆயதப்போராட்டம் தீவிரமடைந்ததும் ஆயுத கொள்வனவிற்கும் எஸ்.டி எப். (விஷேட அதிரடிப்படை –Special Task Force ) எனும் கெட்ட பெயர்யெடுத்த ராணுவ அமைப்பினை தோற்றுவித்து அதன் தலைவராக செயற்பட்டவர் ஜனாதிபதி ஜே ஆரின் மகன் ரவி ஜெயவர்த்தனா. ரணில் விக்ரமசிங்கா கூட ஜே ஆரின் மருமகன் என்றும் முன்னாள் இளைஞர் விவகார வேலை வாய்ப்பு விளையாட்டுத்துறைகென ஒரு பிரிவு உருவாக்கப்பட்டு அதன் இயக்குனராகவிருந்த சரித்த ரத்வத்த இளைஞர்களை பல் துறைகளில் ஊக்குவிப்பது வலுவூட்டுவது மூலமாக ஐக்கிய தேசிய அரசியலுக்குள் உள்வாங்கும் திட்டமிட்ட செயற்பாட்டினை செய்தார். இவர் ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் உறவினர் என்று சொல்லப்பட்டது. (மேலும்) 11.01.2010
______________________________________________________________________________________________________________
To Whom to Vote in the President Election?
January 26th, 2010
We are the Sri Lankan Tamil Speaking People
1) This is the first election after the total defeat of the Fascist and Mafia Liberation Tigers of Tamil Eelam (LTTE) or the Tamil Tigers. It is very close to another criminal organization of “Kosovo Liberation Front” / KLF in its character and actions. (2) The present president Hon. Mahinda Rajapakse is contesting with the full support of the Democratic and progressive forces of Sri Lanka. (3) One of the other contestants against the president is Army Chief Mr.Sarath Fonseka. He is contesting the president election without any previous political experience or any party membership. But he is backed by the reactionary and the Rightist United National Party (UNP) and a racist Janathe Vimuthi Peramune (JVP) and both of them have lost the max. support of the people. (Read) 11.01.10
______________________________________________________________________________________________________________
30 வருடங்களின் பின் இம்முறை நத்தாரை மக்கள் சுதந்திரமாக கொண்டாட முடிந்தது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் யாழ். ஆயர் தெரிவிப்பு
30வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் வடக்கிலும் தெற்கிலும் மக்கள் நத்தாரை சுதந்திரமாக கொண்டாடினர். இப்போது மக்கள் கடலுக்கும் கரைக்கும் சுந்திரமாக சென்று தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது என்று யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று யாழ். ஆயர் தோமஸ் செளந்திரநாயகத்தின் வீட்குக்கு சென்றார். அப்போதே ஆயர் ஜனாதிபதியிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாண சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பரி. பவுல் கன்னியர் மடத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துமாறும் ஆயர் அச்சமயம் ஜனாதிபதியை கேட்டுக் கொண்டார். ஜனாதிபதி உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள் ளுமாறு பணிப்புரை விடுத்தார். (மேலும்) 11.01.2010
______________________________________________________________________________________________________________
President Mahinda Rajapaksa gave proper leadership to end war
The first is that he has the wish, desire, capacity and the public support necessary to grant maximum possible relief in regard to devolution of power to the Tamil people. During the period of the bitter 30-year war, the mood of the people in the South was such that the majority opposed even minor concessions given to the Tamil people. So, he knew it was a waste of time to talk of Tamil peoples’ rights during the period of the war. However, I know from personal knowledge that he was sympathetic to V. Anandasangaree’s proposal that Sri Lanka should adopt the Indian model of devolution of power with suitable adaptations. By 2006 although Anandasangaree and his family had suffered severely at the hands of the LTTE. But he preached peace and non-violence. The UNESCO Madanjeet Singh Prize for Promoting Tolerance and Non-violence was awarded to Anandasangaree in 2006. President Mahinda Rajapaksa sent his warm congratulations to him through me. (Read) 11.01.10
______________________________________________________________________________________________________________
சரணடைந்துள்ள விடுதலைப் புலிகளில் இதுவரையில் 1000 இக்கும் மேற்பட்டவர்கள் விடுதலை: புத்திரசிகாமணி
இறுதிக்கட்டப் போரின்போதும், போர் முடிவடைந்ததன் பின்னரும் படையினரிடம் சரணடைந்துள்ள 12 ஆயிரம் பேரளவிலான விடுதலைப் புலிகளில் இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை அரசாங்கம் விடுதலை செய்துள்ளதாகப் பிரதி அமைச்சர் வடிவேல் புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுடன் இணைந்திருந்த 745 பேர் சனியன்று வவுனியா செட்டிகுளம் மனிக்பாம் முகாமில் வைத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்த விடுதலை குறித்து கருத்து தெரிவித்தபோதே பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி இதனை தெரிவித்துள்ளார். விடுதலைப்புலி உறுப்பினர்கள் உட்பட, அவர்களுடன் இணைந்திருந்தவர்கள் என்ற அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஏற்கனவே 300க்கும் மேற்பட்டவர்கள் அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், செட்டிகுளம் மனிக்பாமில் வைத்து மேலும் 700க்கும் மேற்பட்டவர்கள் ஜனாதிபதியினால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ள விடுதலைப்புலிகளும் தொழிற்பயிற்சியுடன் கூடிய புனர்வாழ்வளிக்கப்பட்டு, தொழில் வாய்ப்புக்களுடன் படிப்படியாக விடுதலை செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் நீதி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.
______________________________________________________________________________________________________________
மட்டு.மேயர் சிவகீதா மீது சட்ட நடவடிக்கை ஆளும் கட்சி பொதுச் செயலாளர் அறிவிப்பு
மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் எதிர்க்கட்சிப் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நேற்று சனிக்கிழமை தெரிவித்தது. கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஆளும் கூட்டமைப்பின் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பான கேள்விக்குப் பதில் அளிக்கையில் ஐ.ம.சு. கூ.வின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த சிவகீதாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் கூறியதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாக பிளவுபட்டுள்ளது. ஒரு குழுவினர் சுயாதீனமாக செயற்படுகையில் மறு பிரிவினர் அரசின் வடக்கு வசந்தம், கிழக்கு உதயம் தொடர்பான அபிவிருத்தி தொடர்பில் இணைந்து செயற்பட்டு ஆதரவளிக்கின்றனர். பொதுத் தேர்தலில் போட்டியிட்டு புலிகள் சார்பில் வந்தவர்களே பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குகின்றனர். அவர்களில் சிறு பிரிவினரின் ஆதரவே பொது வேட்பாளருக்கு கிடைத்துள்ளது. இவர்கள் எம்முடன் நான்கு சுற்றுக்கு மேற்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். அதுபோல் பொதுவேட்பாளருடனும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். எம்முடனான பேச்சுவார்த்தையில் பண்டா செல்வா முதல் ஒஸ்லோ வரையான பேச்சுவார்த்தையை முன்வைத்து கதைத்த போது எக்காரணத்தைக் கொண்டும் பிரிவினை இடமில்லையென தெரிவித்தோம். பொதுமக்கள் படையினர் என 40 ஆயிரத்துக்கு மேல் பலியாகி பொருளாதாரத்துக்கு நஷ்டம் ஏற்பட்டு பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டுள்ளோம். ஒன்றை மட்டும் உறுதி செய்தோம். தமிழ் மக்கள் உரிமை தொடர்பில் பிரச்சினையில்லை. வடக்கு, கிழக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் ஏனைய சலுகைகளையும் வழங்குவோமென தெரிவித்தோம். இந்த நிலையில் அவர்கள் வடக்கு, கிழக்கு இணைப்பு, உயர் பாதுகாப்பு வலயம், இராணுவ முகாம் அகற்றல், சமஷ்டி தொடர்பில் நிபந்தனையாக முன்வைத்து உடன்படிக்கையை பொது வேட்பாளருடன் செய்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மேயராகியுள்ள சிவகீதா பிரபாகரன் பொது வேட்பாளரை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஐ.ம.சு.கூ. சட்டப்படியான நடவடிக்கையை அவருக்கு எதிராக எடுக்குமென்றார்.
______________________________________________________________________________________________________________
இந்தியாவில் இணையதளத்தில் செக்ஸ் படங்களுக்கு தடை
புதுடில்லி : வெளிநாடுகளில் பாலியல் சம்பந்தமான படங்கள், விஷயங்களைத் தேடித் தரும் இணையதளங்களின் தேடல் இயந்திரங்கள் (சர்ச் இன்ஜின்), இந்தியாவில் மட்டும் அதுபோன்ற காட்சிகளைத் தருவதில்லை. மாறாக அவ்வாறு தேடுவோருக்கு எச்சரிக்கை விடுக்கின்றன. தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டம் - 2000ல் சில திருத்தங்கள் சமீபத்தில் செய்யப்பட்டன. அதன்படி, செக்ஸ் தொடர்பான காட்சிகள், விஷயங்கள், இணையதளங்களில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டது.இச்சட்டம், 150 ஆண்டுகள் பழமையான இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 292வது பிரிவை அடிப்படையாகக் கொண்டது. அப்பிரிவில் ஆபாசம் அல்லது காமத்தைத் தூண்டும் விஷயம் என்பதற்கு விளக்கமாக, "பார்ப்பவர்கள் அல்லது படிப்பவர்கள் அல்லது கேட்பவர்களின் மனதில் காமத்தைத் தூண்டிவிட்டு ஒழுக்கத்தைச் சிதைக்கும் விஷயம்' என்று கூறப்பட்டுள்ளது. பல மத சம்பிரதாயங்கள் கோலேச்சிவரும் இந்தியாவில்தான் பிற நாடுகளை விட பாலியல் விஷயங்கள், இணையத்தில் தேடப்படுகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், புதிய சட்டத் திருத்தம், இணையதளங்களில் சில மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. இணையதளத்தில் பிரபல தேடல் இயந்திரங்களான யாஹூ, பிளிக்கர் போட்டோ போன்றவற்றில் பாலியல் தொடர்பான ஆபாசமான காட்சிகள், செய்திகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் கொரியாவிலும் இந்தக் காட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. (மேலும்) 11.01.2010
|