a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                           09.04.2010

தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவு: ஊர்வலங்கள், பேரணிகளுக்கு 7 தினங்களுக்கு தடை

2010 பொதுத் தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் நாளை 5ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு பெறுகின்றன. இன்று 4ஆம் திகதி நள்ளிரவு முதல் தேர்தல் பிரசாரங்களுக்கென பயன் படுத்தப்பட்டுவரும் பெனர்கள், கட்அவுட்டுகள், போஸ்டர்கள், கொடிகளை அகற்றும் நடவடிக் கைகளை கடுமையாகச் செயற்படுத்துமாறு பொலிஸாருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் தேர்தல் முடிவடைந்து ஏழு நாட்களுக்கு ஊர்வலங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் தடைசெய்யப் பட்டுள்ளதாக தேர்தல்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார். நாளை நள்ளிரவு முதல் பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணி ப்புப் பணிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள 2584 நடமாடும் பாது காப்பு பிரிவுகளும் செயற்பட ஆரம்பிக்கவுள்ளன. இதேவேளை தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தும் இதுவரை வாக்களிக்காதவர்கள் இருப்பின் தவறாது உடனடியாக வாக்களிக்குமாறும், எதிர்வரும் எட்டாம் திகதி மாலை 4.00 மணி க்கு வாக்குச் சீட்டுகள் யாவும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். (மேலும்)  04.04.10

_____________________________________________________________________________________________

அமைச்சர் பதியுதீனின் அலுவலகம்மீது தாக்குதல் : மன்னாரில் பதற்ற நிலை

 மன்னார் உப்புக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அலுவலகம் நேற்று மாலை 6.45 மணியளவில் நூர்தீன் மசூரின் ஆதரவாளர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மன்னார் உப்புக்குளம் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்றிரவு மன்னாரில் அச்ச நிலை தோன்றியிருந்தது. உப்புக்குளம் பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டனர். அப்பகுதியில் றிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற போது, பொலிசார் அவர்களைக் களைந்து போகுமாறு பணித்தனர். அச்சமயம் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை உடன் கைது செய்யுமாறு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் நூர்தீனின் ஆதரவாளர்கள் மன்னார் தாராபுரம் பகுதியில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட போது, அவர்களின் வாகனங்களும் கடுமையாகத் தாக்கப்பட்டதையடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

_____________________________________________________________________________________________

மனோ கணேசனுக்கு...

கொழும்பு மாவட்டத்தை விட்டு இப்போது கண்டிக்குப் போயிருக்கிaர்கள். அபார துணிச்சல்தான். துணிச்சல் என்பதிலும் பார்க்கத் தந்திரோபாயம் என்பது பொருத்தமான பதம் என்று சிலர் சொல்கிறார்கள். தம்பியையும் பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்கான தந்திரோபாயமாம். கண்டியில் தோற்றாலும் தேசியப் பட்டியலில் இடம்பெறுவதற்கான உறுதிமொழியை ரணிலிடம் பெற்றுக்கொண்டுதான் கண்டிக்குப் போனீர்கள் என்று பேச்சு அடிபடுகின்றது. அது எப்படியோ, விஷயத்துக்கு வருவோம். கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்காக நீங்கள் ஆக்ரோஷத்தோடு குரல் கொடுத்தீர்கள். தமிழ் மக்களின் தலைவனாக உங்களை இனங்காட்டும் பாணியில் பேசினீர்கள். இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கைத் திட்டமொன்றை முன்வைத்துப் போராட்டம் நடத்துவீர்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஏமாந்ததுதான் மிச்சம். உங்கள் வீராவேசப் பேச்சுகள் எல்லாம் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவே என்று இப்போது மக்கள் சொல்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியுடன் நீங்கள் சங்கமம் ஆகிவிட்டதாலேயே மக்கள் இப்படிச் சொல்கிறார்கள். (மேலும்)  04.04.10

_____________________________________________________________________________________________

யாழ்ப்பாணத்தில் தேர்தல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு

 யாழ்ப்பாணத்தில் தேர்தல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகாரித்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.  மூன்று நாட்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூடு மற்றும் பயமுறுத்தலுடன் ஆரம்பமான வன்முறைகள் தற்போது நாளாந்தம் இடம்பெறும் ஒரு தொடர் நடவடிக்கையாக மாறியுள்ளமை, யாழ். மாவட்ட வாக்காளர்களிடையே விரக்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்திள்ளன.  கடந்த வாரம் ஊர்காவற்துறைப் பகுதிக்கு பிரசார நடவடிக்கைகளுக்காச் சென்ற பெண் வெட்பாளர் ஒருவர் குறிப்பிட்ட சிலரினால் பயமுறுத்தப்பட்டுள்ளார். அதேபோன்று, சுயேச்சை வேட்பாளர்களும் கூட, இத்தகைய பயமுறுத்தல்களுக்கு ஊர்காவற்துறைப் பகுதியில் உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்டோர் தெரிவிக்கின்றனர். இத்தகைய சம்பவங்கள் காரைநகர் உட்பட பல இடங்களிலும் தொடர்வதால், வேட்பாளர்கள், வாக்காளர் மத்தியில், விரக்தி நிலை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

_____________________________________________________________________________________________

ஜீவ ஜீவ மரத்தின் நிழலில் வளர்ந்தவர்

- எஸ்.ஏ.பெருமாள்

தோழர் மாஜினி 28-3-2010 அன்று தனது 90 வயதில் காலமானார். இந்த முது பெரும் கம்யூனிஸ்ட் தனது வாழ்நாள் முழுவதும் எழுதுவதற்கும், மொழிபெயர்ப்பதற்கும் அர்ப்பணித்தவர். கூர்மையான விமர்சகர். திண்டுக்கல்லில் பிறந்த இவர், தென்மாவட்டங்களில் வெளியான ஆதித்தனார் அவர்களின் “தந்தி” (பின்புதான் தினத்தந்தியானது) பத்திரிகையின் பொறுப்பாசிரியராய் பணியாற்றினார். அந்தக்காலத்தில் இவர் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளராக இருந்தார். மதுரையில் காங்கிரஸ் கட்சியின் நகர செயற்குழு உறுப்பினராக (1942-47 ஆண்டுகளில்) இருந்தார். தந்தி பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்த போது அதில் கம்யூனிஸ்ட்டுகள் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். “மாஸ்கோவில் மழைபெய்தால் மதுரையில் குடைபிடிப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்” என்னும் அர்த்தமற்ற கோஷம் இவரது பேனா முனையிலிருந்துதான் வந்தது. மாரி, மணவாளன், தில்லைவனம் போன்றவர்கள் அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்களின் கொலை வெறித் தாக்குதலுக்குப் பலியாயின (மேலும்)  04.04.10

_____________________________________________________________________________________________

செக்ஸ் தொல்லைக்கு பயந்து 6 ஆயிரம் மரங்கள் வெட்டி சாய்ப்பு

லண்டன்:அடர்ந்த காட்டு பகுதியில் இளம் ஜோடியினர் செக்ஸ் வைத்து கொள்வதை தடுக்க, பிரிட்டன் நாட்டு வனத்துறையினர் ஆறாயிரம் மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். பிரிட்டனில் லங்காஷயர் மற்றும் டார்வென் பகுதிகளையொட்டிய காட்டு பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் உள்ளன. சுற்றுலாவுக்காக வரும் இளம் ஜோடிகள் இந்த காட்டு வழிபாதையில் மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒதுங்கி தங்கள் சல்லாபங்களை அரங்கேற்றி வந்தனர். இதனால், குழந்தைகளை அழைத்து வரும் மற்ற சுற்றுலாப் பயணிகள் சங்கடத் துக்கு உள்ளாயினர்.'மற்றவர்களை சங்கடத்துக்குள்ளாக்கும் வகையில் உங்கள் அந்தரங்க நடவடிக்கை அமையக்கூடாது' என்ற வகையில், இந்த பகுதியில் அறிவிப்பு பலகைகள் வைக்கப் பட்டிருந்தன.இருப்பினும், இளம் ஜோடிகள் எதை பற்றியும் கவலைப்படாமல் மரத்தின் பின்புறத்தில் படுத்து கொண்டு சில்மிஷங் களை செய்து வந்தனர். சல்லாபகாரர்களுக்கு வழி வகுக்கும் இந்த மரங்களை போலீசார் உதவியுடன் இப்பகுதி நிர்வாகம் வெட்டி தள்ளியது. ஆறாயிரம் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு அந்த பகுதி வெட்டவெளியாகி விட்டது. இதனால், உள்ளூர் நிர்வாகம் திருப்திப் பட்டாலும், பசுமை ஆர்வலர்களுக்கு வருத்தம் தான்.'நூற்றாண்டு பழமைமிக்க மரங்களை, ஒரே நாளில் எப்படி வெட்டி சாய்க்கலாம்? இதுகுறித்து, முன்னறிவிப்பு வெளியிட் டிருக்க வேண்டும்' என பசுமை ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.'இந்த பசுமையான பகுதி சிவப்பு விளக்கு பகுதியாக மாறிவிடக்கூடாது, என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் மரங்களை வெட்டுவதற்கு ஒப்பு கொண்டோம்' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

_____________________________________________________________________________________________

திருகோணமலை தேர்தல் திருவிழா: தேர்தல் சுவரொட்டியில் சம்பந்தருக்கு அருகில் எம்ஜிஆருக்கும் இடம்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் திருவிழா திருகோணமலையிலும் சூடுபிடித்துள்ளது.

- பி.பி.சி.செய்தி

bbcமுன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அலங்கார ஊர்வலங்கள், இசை நிகழ்ச்சிகள் என வாக்காளர்களைக் கவருவதற்காக வேட்பாளர்கள் கலக்கிக்கொண்டிருப்பதாக எமது நிருபர் கூறுகிறார். இரு தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ந்த இலங்கையின் உள்நாட்டுப் போரின் உக்கிரங்கள் பாதித்த மிகவும் முக்கியமான பகுதிகளில் ஒன்றான திருகோணமலையில், போர் ஓய்ந்தபின்னர் நடக்கின்ற முதலாவது நாடாளுமன்ற தேர்தல் இதுவாகும். அதுமாத்திரமன்றி இலங்கையின் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் கணிசமாக கலந்து வாழும் பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையில் போட்டியென்பது கட்சிகளுக்கும், சுயேச்சைக்குழுக்களுக்கும் இடையில் மாத்திரந்தான் என்று இல்லாமல், அதிக விருப்ப வாக்குகளைப் பெறும் நோக்கில் உட்கட்சி சலசலப்புகளும் அதிகமாக காணப்படுவதாகவும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள். இந்த மாவட்டத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4. இவர்களை தேர்வு செய்ய பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 244 133. 16 அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயேச்சைக்குழுக்கள் இந்தத்தடவை நாடாளுமன்ற தேர்தலில் இந்த மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 217. (மேலும்)  03.04.10

_____________________________________________________________________________________________

இன்னும் பிரபாகரனின் பிழைத்துப்போன ராஜதந்திர நகர்வுகளைப்?  புற்றி எழுதும் ஆய்வாளர்களுக்கு

நிதர்சனன்

தலைவர் இக்கட்டான  சூழலில் இருந்ததினை இவர் அறியாது எழுதுகின்றார் என்று நீங்கள் நினைக்கலாம்.  இறுதி நேரத்தில் அற்புதம் ஏதாவது நிகழாதா என்று தலைவர் காத்திருந்தது எமக்கு புரியும். வடமராட்சியினை படையினர் சுற்றி வழைத்த போது இந்திய படையினர் மிராஜ் யுத்த விமானத்தின் துணையுடன் வந்து சாப்பாட்டு பொதிகளை வீசி , ஜே. ஆரை பயமுறுத்தி அன்று புலிகளை காப்பாற்றி இருந்தார்கள். முல்லைதீவுக்குள் இந்திய படையினர் தலைவரை சுற்றி வழைத்து நின்ற போது, இந்திய படையே வெளியேறு என்று பிரேமாதாசா காப்பாற்றி இருந்தார். அமைதி உடன்படிக்கையினை கைசாத்திட்டு சந்திரிகா ஆட்சி காலத்தில் பிரபாரகரனை ரணில் காப்பாற்றி இருந்தார். இப்படியானதொரு சூழலை புலம் பெயர்ந்த புலி தலைவர்கள் நிகழ்த்துவார்கள் என்று தலைவர் காத்திருந்தார்.  தமிழகத்தில் இருக்கும் புலிகளின் பெயர்களை சொல்லி பொருளீட்டும் காகித புலிகளும், புலம் பெயர்ந்த புலிகளும் சர்வதேச அழுத்தங்களின் ஊடாக யுத்தநிறுத்தத்தினை கொண்டு வருவார்கள் என்று தலைவர் நம்பி இருந்தார்.  வை.கோ வேறு தன்பங்கிற்கு அம்மாவிற்கு 40 ஆசனம் கிடைக்கும் அதை வைத்துக் கொண்டு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து யுத்த நிறுத்தத்தினை ஏற்படுத்துவேன் என்று உத்தரவாதம் கொடுத்திருந்தார்.  மற்றும் நோர்வே நாட்டு அரச சார்பற்ற நிறுவனம் , தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்  இலங்கை அரசுடன் திரைமறைவில் பேசிய பேச்சுக்கள் எல்லாம் தன்னை காப்பாற்றும் என்று பிரபாகரன் நம்பி இருந்தார். ஆனால் இலங்கை அரசின் சகோதரர்கள் தாமே ராஜதந்திரிகள் என்பதினை முல்லிவாய்க்காலில் முடித்து காட்டினார்கள். (மேலும்)  03.04.10

_____________________________________________________________________________________________

சிகை ஒப்பனையாளர் சங்கத்தின் உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும் தோழர் அ. வரதராஜப்பெருமாள் சந்தித்தார்

varatharajaperumalயாழ் மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கத்தின் கூட்டம் இன்று (01) யாழ் பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் அல்பிரெட் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ் பிராந்திய செயலாளர் தோழர் மோகன் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். பெருமளவு அங்கத்தவர்களை கொண்ட இது போன்ற சங்கங்கள் தொடர்ந்து செயற்படுவது சாதனையாகும். நான் அரசியல் கட்சி ஒன்றை சார்ந்தவனாக இருந்த போதும் இந்த சங்கத்திற்குள் எமது அரசியல் கருத்துக்களை திணிப்பது எங்கள் நோக்கமில்லை. இந்த சங்கத்தின் உறுப்பினர்களான தொழிலாளர்கள், அது சார்ந்த சமூகத்தின் நலன்களை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்காகவும் நாமும் பங்களிக்க வேண்டும் என்ற எமது கட்சியின் நோக்கத்தை ஈடுசெய்யும் வகையிலேயே இந்த சங்க கூட்டத்தில் கலந்துகொண் டிருப்பதாகவும் தெரிவித்தார். பொது அமைப்புக்களுக்குள் கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகள் காணப்படுவது இயல்பானது. ஆனால், சங்கத்தின் நலன் கருதியும், சங்கம் சார்ந்த சமூகத்தின் நலன் கருதியும் அவற்றை சுமுகமான முறையில் தீர்த்து கூட்டாக செயற்படுவது சங்கத்தின் வளர்ச்சிக்கு அவசியமானதாகும் எனவும் குறிப்பிட்டார். (மேலும்)  03.04.10

_____________________________________________________________________________________________

என்ன செய்யப் போகின்றார்கள் என்பதே முக்கியம்

TNA-1தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படுவதை அனுமதிக்க வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புத் தலைவர்கள் இப்போது அடிக்கடி வேண்டுகோள் விடுக்கின்றார்கள். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாங்களே என்று இதுவரை உரிமை கோரியவர்கள் இப்போது இந்த வேண்டுகோளை விடுக்கும் நிலைக்கு வந்திருக்கின்றார்கள். இந்த வேண்டுகோளின் அர்த்தம் தங்களைத் தவிர மற்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்பதாகும். கூட்டமைப்புக்கு மாறான நிலைப்பாட் டைக் கொண்டுள்ள கட்சிகளுக்கு வாக்களிக்கும் மனோ நிலை தமிழ் மக்கள் மத்தியில் வளர்ந்து வருவதை உணர்ந்ததாலேயே இந்த வேண்டுகோளை விடுக்கின்றார்கள் என்பதைக் கூற வேண்டியதில்லை. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஒரேயொரு 'தகை மையை' மாத்திரம் கூற முடியும். அறுபது வருடங்களு க்கு மேலாகத் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் என்ற 'தகைமையை' மட்டுமே அவர்களால் கூற முடியும். (மேலும்)  03.04.10

_____________________________________________________________________________________________

புளொட் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிதம்பரபுரம் பகுதிக்கு விஜயம்-

வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், புளொட் அமைப்பின் ஜேர்மன்கிளை முக்கியஸ்தர் ஜெகநாதன் மற்றும் புளொட் முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் இன்றுபிற்பகல் சிதம்பரபுரம் பிரதேச மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது அப்பகுதி மக்களால் பொதுக்கூட்டம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இங்கு உரையாற்றிய கிராமப் பெரியோர்கள், மாதர்சங்கம், கிராமிய அபிவிருத்தி சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், புளொட் அமைப்பினர் கடந்த காலங்களில் இப்பகுதிகளில் மேற்கொண்டிருந்த வேலைத்திட்டங்களை சிலாகித்துப் பேசியதுடன், கடந்த பத்து வருடகாலமாக புளொட் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இல்லாததன் காரணத்தினால் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்பகுதிகளில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும், எவ்வித அபிவிருத்தியும் செய்யப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர். அத்துடன் இம்முறை பொதுத் தேர்தலின்போது நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படுவதன் மூலமே இப்பகுதியின் அபிவிருத்திப் பணிகளையும், இடம்பெயர்ந்த மக்களின் அவலங்களையும் போக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளனர். (மேலும்)  03.04.10

_____________________________________________________________________________________________

இலங்கை தேர்தல் களத்தில் எம்.ஜி.ஆர்., பாடல்கள்

mgrராமநாதபுரம் : இலங்கை பொதுத் தேர்தலுக்காக வாக்காளர்களை கவரும் விதமாக எம்.ஜி.ஆர்., பாடல் களை பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. அவரது மறைவுக்கு பின், அவரது பெயர், படத்தை வைத்து இன்று வரை அரசியல் நடந்து வருகிறது. தற்போது, இலங்கை பொதுத் தேர்தலிலும் எம்.ஜி.ஆர்., படங்கள், பாடங்கள் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. அங்குள்ள தமிழர்களின் ஓட்டுகளை பெற, அரசியல் கட்சியினர் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக எம்.ஜி.ஆரின் துடிப்புள்ள பாடல்கள் மூலம், தங்கள் வேட்பாளர்களை வாக்காளர்கள் மத்தியில் அடையாளம் காட்டுவதில், முக்கிய கட்சிகள் தீவிரமாக உள்ளன. 'நான் ஆணையிட்டால், உழைக்கும் கைகளே, நான் உங்கள் வீட்டு பிள்ளை, ஒன்றே குலமென்று பாடுவோம்' என, எம்.ஜி.ஆரின் சினிமா பாடல்கள் தான், தற்போது இலங்கை தேர்தல் களத்தில் ஒலிக்கிறது. அந்நாட்டிலிருந்து ஒலிபரப்பாகும் அனைத்து எப்.எம்.,களிலும், கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரமாகவும் இப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழர்களை கவர்ந்திழுக்க எம்.ஜி.ஆர்., தான் சரியான தேர்வு என்பதில், தமிழகத்தையே மிஞ்சிவிட்டது இலங்கை அரசியல்.

_____________________________________________________________________________________________

மொழியும் தேசிய இனமும்

- பிரகாஷ் காரத்

முதலாளித்துவம் இப்போது சிறிய மாநிலங்களை விரும்புகிறது. ஏனெனில் சிறிய மாநிலங்கள் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் பலவீனமாக இருந்திடும் என்பதாலும், அவற்றைத் தாம் எளிதில் வாங்கிட முடியும் என்றும் முதலாளித்துவம் கருதுகிறது. உதாரணமாக, ஜார்கண்ட் மாநிலத்தைச் சொல்லலாம். அங்கே ஆட்சியில் இருந்தவர்களால் மாநிலமே பங்கு போட்டு விற்கப்பட்டதைப் பார்த்தோம். கனிம வளங்கள் விற்கப்பட்டன, காட்டு வளங்கள் விற்கப்பட்டன, ஆற்று நீர் தனியாருக்கு விற்கப்பட்டதையெல்லாம் கண்டோம். எனவேதான் பெருமுதலாளிகள் சிறு மாநிலங்களை விரும்புகிறார்கள். சிறிய மாநிலங்களாக இருந்தால் அங்கு ஆட்சிக்கு வருபவர்களைத் தாங்கள் எளிதாக வசப்படுத்தி வாங்கிவிட முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள். சிறு மாநிலங்கள் தாங்களாக எதையும் செய்திட முடியாது. அவை ஒவ்வொன்றுக்கும் மத்திய அரசைச் சார்ந்துதான் இருக்க வேண் டியிருக்கும். இன்றைக்கும் கூட வடகிழக்கில் உள்ள அரசாங்கங்கள் மிகவும் பலவீனமாக இருப்பதையும், அவை மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ - அது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாக இருந்தாலும் சரி அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமாக இருந்தாலும் சரி - அவர்களுக்கு ஆதரவாக மாறுவதைப் பார்க்க முடியும். ஏனெனில் பல சிறிய மாநில அரசுகள், தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கே திணறக்கூடிய நிலையில் இருக்கின்றன. (மேலும்)  03.04.10

_____________________________________________________________________________________________

கொழும்பில் ஐ.தே.க வேட்பாளர் கைது

- B.B.C News

susil இலங்கையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் பெண்ணொருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார். சுசில் கிந்தல்பிட்டிய என்ற இந்த வேட்பாளர், தன்னுடனான தொடர்பை பகிரங்கப்படுத்த வேண்டாம் என பெண்ணொருவரை அச்சுறுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இரண்டு வருடகாலம் இவருடன் தொடர்பு வைத்திருந்தார் எனக்கூறிய பெண்ணே அவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறுகிறார்.  ''தேர்தல் காலமாக இருந்தாலும், தேர்தல் வேட்பாளராக இருந்தாலும் சட்டத்துக்கு முரணாக செயற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்’’  (மேலும்)  03.04.10

_____________________________________________________________________________________________

இந்தியாவில் 6 - 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய ஆரம்பக்கல்வி  கல்வி உரிமைச் சட்டம் அமல்

சுதந்திர இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வி உரி மைச்சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வியை உறுதி செய்யும் சட்டம் ஏப்ரல் 1 வியாழக் கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், அனைவருக்கும் கல்வி அளிப்பதை நோக்கிய பயணத்தில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். கல்வி பெறுவதை அடிப்படை உரிமை என்பதை அரசு உணர்ந்துள் ளது என்றும், அதைச் செயல்படுத்த உறுதியாக பணியாற்றும் என்றும் குறிப்பிட்ட பிரதமர், இச்சட்டத்தை அமல்படுத்துவதில் நிதிப்பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் இடையூறாக இருக்காது என்று நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார். கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு அச்சாணி என்று குறிப்பிட்ட மன் மோகன் சிங், மாநில அரசுகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பி னரும் இச்சட்டத்தின் நோக்கங்களை உணர்ந்து, உண்மையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார. (மேலும்)  03.04.10

_____________________________________________________________________________________________

மாயாவதியின் மதிப்பை இனி எண்ணிப் பார்க்கலாம்

உயிருள்ள போதே சிலையாக வைக்கப்பட்டு தினந்தோறும் ரூபா நோட்டு மாலையினால் அர்ச்சிக்கப்படும் பாக்கியம் ஒரு அரசியல்வாதிக்கு கிடைத்திருக்கிறது.  உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதிதான் அந்த பாக்கியசாலி. இந்த பாக்கியத்தை பெற்ற மாயாவதி அண்மைக்காலத்தில் ஒரு சர்ச்சைக்குரிய பெண்ணாகவும் மாறியிருக்கிறார். முதலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல இடங்களில் இவருக்கு சிலை வைத்தார்கள். இந்த சிலைகள் அகற்றப்படவேண்டும் என எதிர்க் கட்சிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தன. வழக்குகளும் போடப்பட்டன. ஆனால் ஒரு சிலையாவது அகற்றப்பட்டதாக தெரியவில்லை. வைத்த சிலைகள் வைத்த இடத்திலேயே இருந்தன. அடுத்து வந்தது மாயாவதியின் பிறந்த நாள். பிறந்த நாளை கொண்டாடுபவருக்கு ரோஜா மாலை அணிவிப்பதுதான் வழக்கம். ஆனால் மாயாவதிக்கு அணிவிக்கப்பட்டதோ ரூபா மாலை 2 1/2 கோடி ரூபா நோட்டுக்களை தாங்கிய நோட்டு மூடையே மாலையாகியது.  (மேலும்)  03.04.10

_____________________________________________________________________________________________

கூட்டமைப்பு வேட்பாளர்குறித்து கருத்துக்கேட்கும் டான் தமிழ்ஒளி

கொழும்பிலிருந்து ஒளி-ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒளி தொலைக்காட்சியில் இடம்பெறும் பார்வைகள் நிகழ்ச்சி  இன்று இலங்கை நேரம் இரவு 10.00 மணிக்கு (ஐரோப்பிய நேரம் மாலை 5.30) இடம்பெறவிருக்கின்றது. இன்றைய பார்வைகள் நிகழ்ச்சியில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக நிறுத்தியிருக்கும் ஒருவர், பல வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நிதி நிறுவனம் ஒன்றை நடாத்தியவர் என்பதும் இந்த நிதி நிறுவனம் தமிழ் மக்களின் பலகோடி ரூபா பணத்தை திரும்பச் செலுத்தாது மோசடிக் குற்றச்சாட்டுக்கு ஆளானது என்பதும் பலரும் அறிந்ததே. பல தமிழ் மக்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளான ஒருவரை தமது வேட்பாளராக கூட்டமைப்பு நிறுத்தியிருப்பது குறித்து நேயர்கள் என்ன கருதுகின்றார்கள் என்பதையே இன்றைய பார்வைகள் நிகழ்ச்சியில் பதிவுசெய்ய இருக்கின்றது டான் தமிழ்ஒளி.

_____________________________________________________________________________________________

இலங்கை வடக்குப் பகுதி மறுவாழ்வுப் பணிகளில் இந்தியா தீவிரம்

கொழும்பு, ஏப். 1:   இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதில் இந்தியா தீவிரமாகப் பங்காற்றி வருகிறது என, இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே. கந்தா தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.   இலங்கையின் வடக்குப் பகுதியில் போரால் சேதமடைந்த வீடுகளைச் சீரமைப்பதற்காக இந்தியா அனுப்பியுள்ள சிமெண்ட் மூட்டைகளை இலங்கையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கொழும்பில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியத் தூதர் அசோக் கந்தா மேலும் பேசியது:   இலங்கை அரசு முன்வைக்கும் தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் அடிப்படையில் இந்த உதவிகளை இந்தியா அளிக்கிறது.   இலங்கையின் வடக்குப் பகுதியில் மறுகட்டமைப்புப் பணிகள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதால், இந்தியா தனது உதவிகளை விரைவுபடுத்தி வருகிறது என்றார் அவர். (மேலும்)  02.04.10

_____________________________________________________________________________________________

முன்னாள் விடுதலைப் புலிகள் விடுவிப்பு

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் உள்ளிட்டோரை இலங்கை ஜனாதிபதி விடுவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை அடுத்து இதுவரைகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்த, காயமடைந்து ஊனமுற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 1175 பேர், சிறார் போராளிகள் 175 பேர், பல்கலைக்கழக மாணவர்கள் 178 பேர் என மொத்தத்தில் 1528 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் வைபவரீதியாக விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா பம்பைமடு முகாமில் இவர்களை விடுவிக்கும் வைபவம் நடந்துள்ளது. இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் எதிர்வரும் 3ஆம் தேதி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

_____________________________________________________________________________________________

தமிழ் மக்கள் இழந்த அனைத்தையும் விரைவில் மீளப் பெற்றுக் கொடுப்போம்

- யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

    o வடக்கை வளமாக்கும் திட்டம்
    o மகாவலி கங்கை வடக்கிற்கு திரும்பும்
    o ஆசியாவில் உன்னத நாடாக இலங்கையை கட்டியெழுப்ப பங்காளராகுங்கள்

rajapksha-7தமிழ் மக்கள் கடந்த 30 வருடகாலங்களில் இழந்த அனைத்தையும் நாம் விரைவாக மீளப்பெற்றுக்கொடுப்போமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற் றிய ஜனாதிபதி; வடக்கை வளமாக்கும் திட்டம் எம்மிடமுண்டு. பயம், சந்தேகம், அடக்குமுறையற்ற நாட்டைக் கட்டியெழுப்ப நாம் இன, மத, குல, பிரதேச பேதமின்றி இணைந்து செயற்படுவோமெனவும் தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்து எனது வெற்றிக்குப் பங்களிப்புச் செய்தவர்களுக்கும், வேறு எந்தக் கட்சிக்கு வாக்களித்தாயினும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்று ஜனநாயகத்தை நிலை நிறுத்தியமைக்காகவும் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். (மேலும்)  02.04.10

_____________________________________________________________________________________________

ஆயுதக்குழுக்களால் மக்களுக்கேற்படும் அச்சுறு்த்தல்.

- வீ. ஆனந்தசங்கரி

நம்மத்தியில் செயற்படும் ஆயுதக்குழுக்களிடம் உள்ள ஆயுதங்களைக் களையுமாறும் அவர்கள் விரும்பினால் அரச பாதுகாப்பினை வழங்களாலாம் எனவும் தங்களுக்குப் பலதடவை கோரியிருந்தேன். என்னால் பல தடவைகளும் பொதுமக்களால் இதிலும் கூடிய தடவைகள் கோரிக்கைகள் விடப்பட்டபோதிலும் அதைச் செய்வதில் அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது என எனக்கு விளங்கவில்லை. ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுத்திருப்பின் பல உயிரும் அரசின் நற்பெயரும் காப்பாற்றப்பட்டிருக்கும். இரு வாரங்களுக்கு முன் கப்பம் கேட்டு கடத்தப்பட்ட 17 வயது மாணவன் ஒருவன் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்hட்டுள்ளார். சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டும் சிலர் தேடப்பட்டும் வருகின்றனர். எனது கவலை போதிய சாட்சியின்றி முன்பு குற்றவாளிகள் தப்பியது போல இந்த விடயங்களில் தப்பவிடக்கூடாதென்யதே. தயவு செய்து முறைதவறி ஆயுதம் வைத்திருப்போரின் ஆயுதங்களை உடனடியாக களைவீர்களேயானால் எவ்விதபயமின்றி சாட்சிகள் முன்வந்து சாட்சியளிக்க உதவும். முரண்படுபவர்களுடன் மோதவோ பயப்படவோ வேண்டியதில்லை. (மேலும்)  02.04.10

_____________________________________________________________________________________________

இதுவரை 219 தேர்தல் வன்முறைகள் பதிவு

எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெறவுள்ள பொது தேர்தலின் நிமித்தம் இன்றுவரை தேர்தல் வன்முறைகள் மொத்தமாக 219 கிடைத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்தபாலசூரிய தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி வெளியானது அன்றிலிருந்து இன்றுவரை தேர்தல் குறித்த வன்முறைகள் மொத்தமாக 219 கிடைத்துள்ளதாகவும், இவற்றுள் அதிகமான முறைப்பாடுகள் மட்டக்களப்பில் 24 முறைப்பாடுகளும் கண்டியில் 20 முறைப்பாடுகளும் மாத்தளையில் 13 முறைப்பாடுகளும் கந்தளாயில் 12 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

_____________________________________________________________________________________________

யாழ் நகரமுதல்வர் மீது துப்பாக்கிச் சூடு !
முதலவரும் அவரது கணவரும் மயிரிழையில் உயிர் தப்பினர் !!
இச்செய்தியை திரித்துவெளியிட்ட யாழ். தினக் குரலின் திட்டம் அம்பலம் !!!

- யாழ்ப்பாணம், 1 ஏப்ரல்

யாழ் நகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள் மீது இன்று அதிகாலை 1.30 மணியளவில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலிருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இன்று யாழ்ப்பாணம் வருவதாக ஏற்பாடாகியிருந்தபடியினால்,  ஜனாதிபதி கலந்துகொள்ளவிருக்கும் பொதுக்கூட்டம் ஒன்றிற்கு யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக மண்டப ஏற்பாடுகளை மேற்பார்வை  செய்து திரும்பும் வழியிலேயே திருமதி பற்குணராஜா மீது மேற்படி தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இச் சம்பவத்தை யாழிலிருந்து வெளிவரும் ‘தினக்குரல்’ பத்திரிகை திரித்து வெளியிட்டுள்ளது. இன்று மாலை யாழ் மாநகர சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் திருமதி பற்குணராஜா அவர்களும் மேற்படி சம்பவத்தில் நேரடி சாட்சிகளாயிருந்த அவரது கணவர் மற்றும் மாநகரசபை ஊழியர்கள் இருவரும் தெரிவித்திருந்த சாட்சியங்களிலிருந்து அறியவருவதாவது: (மேலும்)  02.04.10

_____________________________________________________________________________________________

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 22 பேர் சென்றார்கள் – தமிழர்களின் அவலங்கள் தீர்ந்தனவா?

-அபிமன்யு

தமிழ்மக்களின் தேவைகள் உரிமைகள் சம்பந்தமாக ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமை சிறார்கள் பலவந்தமாக புலிகளால் யுத்தமுனைக்கு அனுப்பப்பட்ட போதும் யுத்தமுனையில் புலிகள் தமது பாதுகாப்புக்காக பொதுமக்களை மனிதக் கேடயகங்களாக வைத்திருப்பதற்கு எதிராக ஓங்கிக் குரல் எழுப்பாது அதற்கு பவ்வியமாகத் துணைபோய் அரசாங்கத்தை மட்டும் திட்டிக் கொண்ட காலம் கழித்தமை ஆகியவும் இதற்கு காரணங்களாகும். சில நாடுகளில் சில கல்நெஞ்சக்காரர்கள் இருக்கிறார்கள்.–இவர்களின் தொழில் சமூகத்தின் அடித்தளத்தின் சிலரை ஆசைவார்த்தைகள் கூறி தங்களுடன் கூட்டிச் சென்று அவர்களின் அவயவங்கள் சிலவற்றை தாங்களாகவோ அல்லது மனிதாபிமானமற்ற வேறு சிலர் மூலமாகவோ சிதைப்பார்கள். அப்பாவிகளாக ஓடியாடி உற்றார் உறவினருடன் வாழ்ந்த வாழ்வைச் சீரழித்து அவர்களை அவலங்களுக்கு உள்ளாக்குவர். பின்னர் அவர்களைத் தெருவில் நிறுத்தி அவர்களது அவய குறைபாடுகளையும் அவலங்களையும் போவோர் வருவோரிடம் காட்டி வருவாய் ஈட்டி சுகபோகங்கள் சுகிப்பர்! அவ்வப்போது அந்த ஏதலிகளுக்கு ஏதாவது கிடைக்கும். ஆனால் அவர்களது வாழ்வோ தொடர்ந்தும் பஞ்சமும் இன்னல்களும் அவலங்களுந்தான்! உண்மையில் அந் நிலைமை தொடரவே அந்தக் கல்நெஞ்சக்காரர்கள் விரும்புவார்கள். ஏனென்றால் அவர்களது பிழைப்புக்கு சுகபோக வாழ்விற்கு அதுதான் மூலதனம்!– அதற்கு சமுதாயத்தின் சில புல்லுருவிகள் துணை போவார்கள்!  (மேலும்) 01.04.10

_____________________________________________________________________________________________

பிரிட்டிஷ் அமைச்சரின் அறிக்கையை அடுத்து பிரிட்டன் செயற்பாடுகளில் இலங்கை சந்தேகம்

  நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் இவ்வேளையில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் இலங்கை பற்றி விசேட அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளதால் பிரிட்டனின் செயற்பாடு குறித்து இலங்கைக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் அமைச்சர் நேற்று முன்தினம் வெளியிட்ட இந்த விசேட வீடியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை நிராகரித்த அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து ஈட்டிக்கொண்ட வெற்றியை பிரிட்டன் புறக்கணிக்க முயற்சி செய்வதாக தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் ரம்புக்வெல்ல இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது: "பிரிட்டன் பாரபட்சம் காண்பிக்கிறது. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட காலநேரம் பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது. பரிட்டன் மிக நீண்ட காலமாக இலங்கையின் மனித உரிமை பேணல் பற்றி மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருக்கிறது. (மேலும்)  01.04.10

_____________________________________________________________________________________________

இந்தியாவில் தேடப்பட்டுவரும் சுவாமி நித்தியானந்தா இலங்கையில் தஞ்சம்!

 இந்தியாவில் பொலிசாரால் தேடப்பட்டுவரும் சுவாமி நித்தியானந்தா இலங்கைக் காடுகளில் மறைந்திருப்பதாக இரகசியத் தகவல் ஒன்று கசிந்திருக்கின்றது. இவருக்கு இங்குப் புகலிடம் கொடுத்திருப்பவர் ஒரு 'பெரும் புள்ளி' என்றும் கூறப்படுகின்றது. இவரைக் காண்பவர்கள் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் தரலாம்.

_____________________________________________________________________________________________

மாணவன் கபிலநாத் படுகொலை தொடர்பாக பிடியாணை விதிக்கப்பட்டுத் தேடப்படும் ஜீவன் சாவகச்சேரி ஈ.பி.டி.பி. முகாமில் இயங்கியவர்!

- பொலிஸ் அத்தயாட்சகரின் கடிதத்திற்கு உதயன் பதில

நேற்று முன்தினம் யாழ்ப்பாணப்பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் அஜித் சமரக்கோன் பெயரில் ஒப்பமிட்டு றப்பர் ஸ்டாம்ப் பொறிக்கப்பட்டு கடிதம் ஒன்று "உதயன்" ஆசிரியருக்கு முகவரியிடப்பட்டு "உதயன்" யாழ்.அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. "2010.03.29 ஆம் திகதி "உதயன்' பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட தவறான செய்தி தொடர்பான விடயம்" என அதற்குத் தலைப்பிடப்பட்டிருந்தது. அத்தோடு அதில் "மேற்படி குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரோ அல்லது கைது செய்யப்படவுள்ள சந்தேக நபரோ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) தொடர்புள்ளவர்கள் என்றோ அன்றி அக் கட்சியின் பிரதிநிதிகள் என்றோ இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் இருந்து தெரியவரவில்லை. எனவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஈ.பி.டி.பி. உறுப்பினர் என்ற வகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதைப் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன். எனவே அச் செய்தியின் பிழையை சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்''  என்று அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்தோடு அதன் பிரதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கடிதம் தொடர்பில் பின்வரும் விடயங்களையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்: அ) ஈ.பி.டி.பியைக் காப்பாற்றுவதற்காக இத்தகைய உண்மைக்கு முரணான விடயம் அடங்கிய கடிதத்தை "உதயன்" அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டிய தேவை பொலிஸ் அத்தியட்சகருக்கு இல்லை. அத்தோடு இவ்வாறு மறுப்பு பிரசுரிக்கும்படி கோரும் அதிகாரமும் அவருக்கு கிடையாது. (மேலும்) 01.04.10

_____________________________________________________________________________________________

மாணவர் கபிலநாத் கொலை வழக்கு விசாரணை தேடப்படும் ஜீவனின் தாயும் சகோதரியும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்

சாவகச்சேரி, பெரிய அரசடிப் பகுதியில்  கடந்த 14ஆம் திகதி கடத்தப்பட்டுப் பின்னர் கடந்த 27ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட மாணவனும் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகனுமான திருச்செல்வம் கபிலநாத்(வயது 16) கொலை வழக்கின் பூர்வாங்க விசாரணை நேற்று சாவகக்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் சுமார் 5 1/2 மணி நேரம் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது இந்தக் கொலை தொடர்பான முதலாவது சந்தேக நபராகத் தேடப்பட்டு வரும் குமாரசிங்கம் கேசவன் அல்லது ஜீவன் என்பவரது தாயாரான குமாரசிங்கம் திருப்பதி அம்மா, சகோதரியான குமாரசிங்கம் சுகன்ஜா ஆகி யோரை, சாவகச்சேரிப் பொலீஸார் கைது  செய்து மன்றில் ஆஜர் செய்தனர். இவர்களை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் ரி.ஜே. பிரபாகரன் முன்னிலையில் நேற்றுக்காலை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கொலை செய்யப்பட்ட மாணவனின் தந்தையாரான எஸ்.திருச்செல்வம் சகோ தரிகளான தி.தனுசியா, தி.கௌசிகா ஆகி யோர் நீதிமன்றுக்கு சமுகமளித்திருந்தனர். (மேலும்)  01.04.10

_____________________________________________________________________________________________

தமிழ் மக்களின் இருப்பை நிலைநிறுத்தி பேரம் பேசும் சக்தியாக தமிழ் மக்கள் வரக்கூடிய வகையில்  தேர்தல் அமையப்போகிறது.

- தாயகக்குரல்

இலங்கையின் தலைவிதியையும் தமிழ்மக்களின் தலைவிதியையும் நிர்ணயிக்கப்போகும் பொதுத் தேர்தலுக்கு இன்னும் சிலதினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் யதார்த்தத்திற்கு அப்பால் நின்று வாக்குறுதிகளை அள்ளி விசுகின்றன. இலங்கை அந்நியரின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றபின்னர் நாட்டில் இனங்களுக்கிடையே முரண்பாடுகள் கூர்மையடையத் தொடங்கின. இந்த இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காணப்போவதாக கடந்த 60வருடங்களுக்கு மேலாக  ஒவ்வொரு இனங்களுக்கும் தலைமை தாங்கியவர்கள் வாக்குறுதி அளித்து பாராளுமன்றத்தை பிரதிநித்துவப் படுத்தி வந்தனர். ஆனால் இவர்களின் காலத்தில் இனங்களுக்கிடையேயான முரண்பாடுகள் வளர்ந்ததே அன்றி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. நடைபெறவிருக்கும் இந்த தேர்தல்மூலம் அமையப்போகும் புதிய ஆட்சியை தாங்கள்; பிடித்தால் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்ச்pனைக்கு தீர்வு காணுவோம் என ஒவ்வொரு கட்சியினரும் வாக்குறுதியளிக்கின்றனர். தமது வெற்றியை உறுதி செய்துகொண்டுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசியலமைப்பை மாற்றி தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்காகத்தான் போராடுகிறோம் என தெரிவிக்கிறது.  (மேலும்)  01..04.10

_____________________________________________________________________________________________

தோழர் வரதராஜப்பெருமாள் யாழ் பிராந்திய அலுவலகத்தில் சந்திப்பு

eprlf jaffnaயாழ்ப்பாணம் வந்துள்ள வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் தோழர் வரதராஜப்பெருமாள் அவர்கள் இன்று பத்மநாபா ஈபிஆர்எல்எவ் யாழ் பிராந்திய தலைமை அலுவலகத்தில் தோழர்களையும், ஆதரவாளர்களையும், கட்சியின் நலன் விரும்பிகளையும் சந்தித்தார்.  அவர்கள் மத்தியில் உரையாற்றிய தோழர் வரதராஜப்பெருமாள் அவர்கள் கட்சி கடந்தகாலத்தி;ல் சாதித்தவை குறித்தும் இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்திலும் எம்மால் சாதிக்க முடியும் எனவும் அதற்கு பக்கபலமாக உங்கள் ஒத்துழைப்பும் மக்கள் ஆதரவும் வேண்டும் எனவும் தெரிவித்தார். கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான தோழர் துரைரட்ணம், கட்சியின் யாழ் பிராந்திய செயலாளரும், வேட்பாளருமான தோழர் மோகன், மற்றும் வேட்பாளர்களான அரியரட்ணம், மகாலிங்கம் (மகாமினி) ஆகியோரும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர். இறுதியில் கலந்துரையாடலில் கலந்துகொண்ட தோழர்களும், ஆதரவாளர்களும் கட்சியை பலப்படுத்துவதறகு கட்சியின் கடந்த காலவரலாறு இளந்தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு எடுத்துக் கூறி விளங்கவைக்க வேண்டியது அவசியம் என கருத்துத் தெரிவித்தனர்.

_____________________________________________________________________________________________

புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் தலைமையிலான வேட்பாளர்கள்; மற்றும் புளொட் பிரதிநிதிகள் அருணாசலம் நிவாரணக் கிராமம், மற்றும் பெரியார்குளம் மக்களுடன் சந்திப்பு-

வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்), புளொட் சிரேஸ்ட உறுப்பினர் பசுபதி பரசோதிலிங்கம் (நந்தன்) மற்றும் புளொட் முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் இன்றுமுற்பகல் செட்டிகுளம், அருணாசலம் நிவாரணக் கிராம மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். அங்கு கட்சியின் வேலைத்திட்டங்கள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் உள்ளிட்ட இடம்பெயர்ந்தோர் நலன்சார்ந்த விடயங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் என்பன தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்திய புளொட் தலைவர் உள்ளிட்ட புளொட் வேட்பாளர்கள், பொதுத் தேர்தலின்போது நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களுக்கு மக்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். இதேவேளை புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன், புளொட் நோர்வே கிளையின் பொறுப்பாளர் ராஜன் ஆகியோர் இன்றுமாலை பெரியார்குளம் பிரதேசத்திற்கு விஜயம் செய்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது பெரியார்குளத்தில் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டமொன்றிலும் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன், புளொட் அமைப்பின் நோர்வே பொறுப்பாளர் ராஜன் ஆகியோர் உரையாற்றினர். இதன்போது கட்சியின் கடந்தகால நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய பணிகள் தொடர்பில் எடுத்து விளக்கியதுடன், கட்சியின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு மக்களின் பூரண ஆதரவு தேவையென்றும், இதற்காக நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களுக்கு மக்கள் பூரண ஆதரவு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.

_____________________________________________________________________________________________

அரசாங்கம் அமைப்பதற்கே மக்களின் வாக்குகள்

பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் நாளுக்குநாள் சூடு பிடிக்கின்றது. மூன்று பிரதான அணிகள் களத்தில் நிற்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒரு அணி. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அணி மற்றையது. மூன்றாவது அணி முன்னாள் இராணுவத் தளபதியின் தலைமையில் மக்கள் விடுதலை முன்னணி அமைத்த ஜனநாயக தேசிய முன்னணி. பாராளுமன்ற தேர்தலின் பிரதான நோக்கம் நாட்டை நிர்வகிப்பதற்காக ஒரு அரசாங்கத்தைத் தெரிவு செய்வதாகும். இப்போது களத்தில் நிற்கும் மூன்று அணிகளுள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாத்திரம் ஆட்சி அமைக்கக்கூடிய நிலையில் உள்ளது. ஆட்சிக்கு வருவது உறுதியான நிலையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறும் முயற்சியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈடுபட்டிருக்கின்றது. தங்களால் ஆட்சி அமைக்க முடியாது என்பதை மற்றைய இரண்டு அணிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஜனநாயக தேசிய முன்னணியுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் கூட் டுச் சேர்ந்து ஆட்சி அமைக்கப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது. (மேலும்)  01..04.10

_____________________________________________________________________________________________

இலங்கை தேர்தலில் 7,620 வேட்பாளர்கள்

கொழும்பு:இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் 36 கட்சிகளை சேர்ந்த 7,620 பேர் போட்டியிடுகின்றனர்.இலங்கை பார்லிமென்ட் தேர்தல் வரும் 8ம் தேதி நடக்கிறது. அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவை எதிர்த்து போட்டியிட்ட ராணுவ தளபதி பொன்சேகா, எதிர்க்கட்சி தரப்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.இந்த தேர்தலில் 36 கட்சிகளை சேர்ந்த 7,620 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 306 பேர் சுயேச்சைகள். தேர்தலில் வன்முறைகள் நடக்காதவாறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.இது குறித்து ஐ.ஜி.பி., மகிந்தா பாலசூரியா கூறியதாவது:தேர்தல் பாதுகாப்புக் காக ஒன்பது மாகாணங்களில் 78 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களில் 58 ஆயிரத்து 700 பேர் போலீசார். 19 ஆயிரத்து 500 பேர் ஆயுதப்படையை சேர்ந்தவர்கள். வரும் 5ம் தேதி நள்ளிரவு முதல் கட்சிகளின் தேர்தல் பிரசார பேனர்களும், விளம்பர பலகைகளும் அகற்றப்படும். ஓட்டுச் சாவடியிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் கட்சிகள், தேர்தல் அலுவலகங்களை அமைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அன்று 2,584 போலீஸ் வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும்.இவ்வாறு பாலசூரியா கூறினார்.தேர்தல் வன்முறை காரணமாக இதுவரை 219 புகார்கள் பதிவாகியுள்ளதாகவும், 174 பேர் கைது செய்யப்பட் டுள்ளதாகவும், டி.ஐ.ஜி., இலங்காகூன் தெரிவித்துள்ளார்.

_____________________________________________________________________________________________

யாழ். - பூநகரி இடையே படகுச் சேவை அடுத்த மாதம் ஆரம்பம் : வ.மா. ஆளுநர்

 யாழ்ப்பாணத்துக்கும் பூநகரிக்குமிடையில் படகுச் சேவை ஒன்று அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி தெரிவித்தார் என அரச இணையத் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரச ஊழியர்கள் சிரமமின்றி யாழ்ப்பாணம் சென்று வர முடியும். யாழ்ப்பாணத்திலிருந்து தரை மார்க்கமாக பூநகரிக்கு வந்து சேர குறைந்தது இரண்டரை மணி நேரம் செல்கின்றது. இப்பயணத்தில் ஆனையிரவு, பரந்தன், ஜயபுரம் ஆகிய இடங்களைத் தாண்டி வருவதலேயே இந்தக் காலதாமதம் ஏற்படுகிறது. எனினும் யாழ். பூநகரி படகுச் சேவை மூலம் நேரத்தை மீதப்படுத்த முடிவதோடு, வீண் சிரமங்களையும் குறைக்க முடியும் எனவும் வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார். ஆசிரியர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள், மாகாண சபை அதிகாரிகள், போன்றோர் இந்தப் படகுச் சேவை மூலம் நன்மையடைவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ். மற்றும் பூநகரி மீனவர் சங்கங்களின் ஒத்துழைப்புடன் படகுகள் இச்சேவையில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகிறது. _

_____________________________________________________________________________________________

உதயன் பத்திரிகைச் செய்தி தொடர்பில் யாழ் பொலிஸ் அத்தியட்சகர் விளக்கம்!

கடத்தப்பட்ட மாணவனின் படுகொலை ஈ.பி.டி.பி. உறுப்பினருக்குப் பிடியானை எனும் தலைப்பின் கீழ் உதயன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகரின் விளக்கம். விபரங்கட்கு

_____________________________________________________________________________________________

தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் தயார் நிலையில் 

 எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் செயலகம் அறிவித்துள்ளது. வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதுடன், அச்சிடப்பட்ட 22 மாவட்டங்களுக்குமான வாக்குச்சீட்டுகளும் தேர்தல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணி கடந்த 4 ஆம் திகதி அரசாங்க அச்சகத்தில் ஆரம்பமாகின. 29 ஆம் திகதி அச்சிடும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இம்முறை தேர்தலில் கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதில் சற்று நெருக்கடி ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

_____________________________________________________________________________________________

புலனாய்வுச் செயற்பாடுகள் விஸ்தரிப்பு; நாடுகடந்த தமிழீழ அரசு உடையும் - அமைச்சர் றோகித தெரிவிப்பு

“நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆரம்பித்துள்ள புதிய அச்சுறுத்தலை நாம் நன் றாக அறிவோம். அந்த கட்டமைப்பை நாங்கள் நிச்சயம் உடைப போம்” என்று வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் சமூகமே அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு களுக்கு உயிர் கொடுத்து சர்வதேச சமூகத்தை முனைப்பாக் குவதில் செயற்பட்டு வருகிறது.புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கைக்கு பெரும் அச் சுறுத்தலாக இருந்து வருவது எமக்கு நன்றாகவே தெரியும். நாடு கடந்த தமிழீழ அரசு என்ற கட்டமைப்பை உருவாக்கி தற்போது இலங்கை அரசுக்கு புதிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி யுள்ளார்கள். இந்த கட்டமைப்புக்களை நாம் நிச்சயம் உடைப்போம் அதற்கு உள் நாட்டிலும் வெளிநாட்டி லும் புலனாய்வு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம். . (மேலும்)  31..03.10

_____________________________________________________________________________________________

39 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்கள் அல்கொய்தா உதவியுடன் தான் நடத்தப்பட்டது

ரஷியா அறிவிப்பு

ரஷியாவில் மாஸ்கோ நகர சுரங்க ரெயில் நிலையங்களில் மனித வெடிகுண்டுகளாக வந்த 2 பெண் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 39 பேர் பலியானார்கள். இந்த தாக்குதல்கள் அல்கொய்தா தீவிரவாதிகளின் உதவியுடன் தான் நடத்தப்பட்டது என்று ரஷியா அறிவித்து உள்ளது. ரஷியாவில் தலைநகர் மாஸ்கோவில் உள்ள சுரங்க ரெயில்களில் குண்டுகள் வெடித்தன. லூபியாங்கா ரெயில் நிலையத்திலும், பார்க் கல்சுரி சுரங்க ரெயில் நிலையத்திலும் ரெயில்கள் நின்றபோது அந்த ரெயில்களில் குண்டுகள் வெடித்தன. 2 பெண் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டுகளாக வந்து இந்த தாக்குதல்களை நடத்தினார்கள். இதில் 39 பேர் பலியானார்கள். 71 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு செசன்யா தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்று உள்ளனர். செசன்யா தீவிரவாதிகள் ரஷியாவில் உள்ள செசன்யா மாநிலத்தை தனி நாடாக அறிவிக்க கோரி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். (மேலும்)  31..03.10

_____________________________________________________________________________________________

யுத்தத்தால் ஏற்படும் பேரழிவைத் தடுக்கவே பிரபாகரனுக்கு கடிதம் எழுதினேன்

வீ.ஆனந்தசங்கரி.

என் அன்புக்கினிய தமிழ் மக்களே!

Veerasingham-Anandasangareeன்னைப் பற்றி விடுதலைப் புலிகளிடம் தவறான கருத்துக்களை விதைத்தவர்கள் அதன் மூலம் என்  அரசியல் ஆளுமையை ஒரங்கட்டி தங்கள் அரசியல் சூழ்ச்சிகளை அரங்கேற்ற நினைத்தவர் கள் இப்போது எங்கே நிற்கிறார்கள் என்பதை ஒருகணம் சிந்தியுங்கள்.விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு நான் எழுதிய அர்த்தமுடைய கடிதங்களை மீளவும் ஒரு கணம் உங்கள் சிந்தனைக்காகத் தருகின்றேன்.என்னை ஓரங்கட்டி விட்டு தாம் நல்லவர்கள் போல் நடித்து ஒன்றுபட்டவர்கள் விடுதலைப் புலிகள் போரில்  தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்றவுடன் குத்துப்பட்டு குதறிக்கொண்டு பிரிந்து போனார்கள். எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? இவர்களா உங்கள் பிரதிநிதிகள்? என் அன்புக்கினிய தமிழ் மக்களே! உங்கள் வாக்குகளை உங்கள் இதயம் நிறைந்த உதய சூரியனுக்குப் போடுங்கள். நாடாளுமன்றில் துணிவுடன் பேசுவேன். தமிழர் உரிமையைத் தாருங்கள் என முழங்குவோம். உலகம் என் குரலுக்கு நிச்சயம் செவி சாய்க்கும். இது உறுதி. இதோ நான் விடுதலைப் புலிகளின் தலைவர்  வே.பிரபாகரனுக்கு எழுதிய யதார்த்தமான கடிதங்கள்.  (மேலும்)  31..03.10

_____________________________________________________________________________________________

எங்கள் தோழர்களின் ஆத்மா சாந்திக்காக...

kanthankarunaiகந்தன் கருணைபடுகொலை  எங்கள் கண்மணிகளை கருக்கிய படுகொலை. காட்டு மிராண்டித்தனமான படுகொலை கருணை இல்லாத பாசிச புலிகளால் கண்ணீர்சிந்தவைத்த படுகொலை

காவிய நாயகர்களின் கைகளை கட்டிவிட்டு புலிகள் கர்வம் காட்டிய படுகொலை கண்ணில்  இருந்து மறையுமா இந்த காலச் சுவடுகள் பாசிச தலைவா??  காலங்கள் உங்களுக்கு மட்டும்சொந்தமல்ல கனிவான எங்கள் அரசியலை கண்சிமிட்டாமல் சிறிது வேளை கனிவுடன் உற்று நோக்கு கண்ணீர் சிந்தும் மக்கள் யார் பக்கம் கடவுள் பெயராலே அன்று கண்ணீர் சிந்த வைத்தவர்கள் இன்று கட்டிய கோமணமும் இழந்த நிலையில் கடவுள் தீர்ப்பை பாத்தீரோ கந்தன் கருணை யார் பக்கம் கந்தன் கருணை யார் பக்கம் கவிய நாயகர்கள் எங்கள் தோழர்களுக்காக கண்ணீர்வடித்து நெஞ்சம் சுமக்கும் சுமையுடன் புரட்சிவேட்கை

தோழமையுடன் பாவரசன்-

_____________________________________________________________________________________________

ஐ.ம.சு.மு 65% வாக்குகளால் வெற்றியீட்டும்; களனி பல்கலை கருத்துக்கணிப்பில் தகவல்

karuthuகளனி பல்கலைக்கழக தொடர்பாடல் ஆய்வுப் பிரிவு, நாடளாவிய ரீதியில் நடத்திய கருத்துக்கணிப்பின் பிரகாரம், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 65 வீத வாக்குகளையும் ஐக்கிய தேசிய முன்னணி 28 வீத வாக்குகளையும் பெறும் என அறிவிக்கப்படுகிறது. கருத்துக்கணிப்பின் பிரகாரம் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டமைப்பு எந்தவித ஆசனங்களையும் பெறாது என களனி பல்கலைக்கழக தொடர்பாடல் ஆய்வுப் பிரிவு கலாநிதி ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, வடக்கு, கிழக்கு உட்பட சகல தேர்தல் தொகுதிகளிலும் நடத்திய சுயாதீனமான கருத்துக் கணிப்பில் பல்வேறு வயது மட்டங்களைச் சேர்ந்த 16 ஆயிரம் பேர் உட்படுத்தப்பட்டனர். நாடு முகம் கொடுக்கும் பிரதான பிரச்சினை வெற்றிபெறும் கட்சி எது என்பது உட்பட 12 கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டன.  (மேலும்)  31..03.10

_____________________________________________________________________________________________

ஒர் தமிழனின் புலம்பல்

தமிழ் ஈழ மாயையில்

சிக்கியதால்….

தமிழர்;
மதியிழந்தனர்..
அறமிழந்தனர்..
கல்வியிழந்தனர்…
தனமிழந்தனர்…
தரமிழந்தனர்..

(மேலும்)  31..03.10

_____________________________________________________________________________________________

புலிகளிடமிருந்து எடுக்கப்பட்ட தங்கம் வங்கிகளில் டெபாசிட் - இலங்கை அரசு

கொழும்பு, மார்ச் 30: விடுதலைப் புலிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பெருமளவு தங்கம் மற்றும் பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், அவர்களிடமிருந்து கிலோ கணக்கில் தங்கம் மற்றும் ஏராளமான பணத்தை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அது தற்போது வங்கிகளில் உரிய கணக்குகளோடு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று அதிபரின் மூத்த ஆலோசகர் பாசில் ராஜபட்ச தெரிவித்தார். விடுதலைப் புலிகளிடமிருந்து அபகரிக்கப்பட்ட தங்கம் மற்றும் பணத்தை இலங்கை அரசு கணக்கில் கொண்டு வரவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதற்கு பாசில் ராஜபட்ச விளக்கம் அளித்துள்ளார். விடுதலைப் புலிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட எல்லாவற்றையும் பாதுகாப்பு படையினர் எங்களிடம் ஒப்படைத்தனர். அதை நாங்கள் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளோம் என்றார் அவர். இந்தப் பிரச்னையை எதிர்க்கட்சி தலைமை கொறடா ஜோசப் மைக்கேல் பெரேரா இலங்கை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். விடுதலைப் புலிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் பெருமளவு பணத்தின் கதி என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார். (மேலும்)  31..03.10

_____________________________________________________________________________________________

இன, மத, குல, அரசியல் பேதங்களை மறந்து வலுவான பாராளுமன்றத்தை அமைக்க அனைவரும் கைகோர்ப்போம்

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி அழைப்பு

rajapaksha-1இன, மத, குல, அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு நாட்டைத் துரிதமாக அபிவிருத்தி செய்வதற்காக வலுவான பாராளுமன்றத்தை அமைப்பதற்குக் கைகோர்க்க முன்வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். அம்பலன்தோட்டையில் நேற்று 30ம் திகதி நடைபெற்ற, மக்கள் சந்திப்பில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாம் இன, மத, குல பேதங்களுக்கு அப்பால் இலங்கையர் என்ற அடையாளத்துடன் எழுந்து நிற்க வேண்டும். அதற்காகப் பேதங்களை மறந்து இலங்கையர் என்ற அடையாளத்துடன் முன்னேறுவது மிகவும் அவசியம். இதுவே உங்களதும், உங்களது எதிர்கால சந்ததியினரதும் வளமானதும், சுபீட்சமானதுமான எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும். இதனை சகலரும் உணர்ந்துகொண்டு பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் கைகோர்ப்பது அவசியம்.  (மேலும்)  31..03.10

_____________________________________________________________________________________________

தேர்தல் பாதுகாப்பில் பொலிஸ், முப்படை: 6ம் திகதி முதல் 78,000பேர் கடமையில்

    * 58,700 பொலிஸ்

    * 19,500 முப்படைகள் + அதிரடிப்படை

    * 7584 நடமாடும் பாதுகாப்புப் பிரிவு

    * 5ம் திகதி நள்ளிரவுடன் பிரசாரம் நிறைவு

பொதுத் தேர்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு உட்பட நாடுமுழுவதும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், மற்றும் முப்படையைச் சேர்ந்த 78,200 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தலா 5பேர் கொண்ட 7584 நடமாடும் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவும் இயங்கும் என பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார். எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலை முன்னிட்டு சகல பிரசார நடவடிக்கைகளும் 5ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக கட்அவுட்டுகள், பெனர்கள், போஸ்டர்களை அகற்றும் நடவடிக்கைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும். வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் தாமாகவே முன்வந்து தமது கட்அவுட்டுகள், பெனர்கள், போஸ்டர்களை அகற்றிக்கொள்ள வேண்டும் இல்லையேல் பொலிஸார் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். (மேலும்)  31..03.10

_____________________________________________________________________________________________

நாளை மன்னாரில் தந்தை செல்வா நினைவு தின நிகழ்வுகள்

தமிழ் இனத்தின் தலைவரும் ஈழத்து காந்தி என அழைக்கப்படுபவருமான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 112 ஆவது வருட ஞாபகார்த்த தின நிகழ்வு நாளை மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.எம்.அந்தோனி மார்க் தலைமையில் மன்னார் பஸார் பகுதியில் இடம்பெறவுள்ளது. பஸார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய சொற்பொழிவுகளை ஆற்ற பலர் வருகை தர இருக்கின்றனர். அதேவேளை, வவுனியா மாவட்டத்திலும் நாளை புதன் கிழமை தந்தை செல்வாவின் நினைவுதின நிகழ்வுகள் இடம் பெற இருக்கின்றன. வவுனியா காளி வேப்பங்குள்ம் அந்தோனியார் ஆலயம், வேப்பங்குளம் சூசையப்பர் ஆலயம் ஆகிய திருத்தலங்களில் தந்தை செல்வாவுக்காக இரங்கல் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.

_____________________________________________________________________________________________

தி.மு.க , 12வது சுற்றில் 30ஆயிரம் ஓட்டுக்கள் முன்னிலை; பா.ம.க., வுக்கு 2 வது இடம்; பின் தங்கியது அ.தி.மு.க., சீனில் வராமல் ‌போன தே.மு.தி.க.,

தர்மபுரி : பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவுகள் சுற்று வாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. 12 வது சுற்றின்படி தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரன்  தற்போது பா.ம.க., வேட்பாளரை விட 30  ஆயிரத்து 372  ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.  12 வது சுற்றின் படி தி.முக., வேட்பாளர் இன்பசேகரன் 53 ஆயிரத்து 608  ஓட்டுக்களும், அடுத்தப்படியாக பா.ம.க., வேட்பாளர் தமிழ்க்குமரன் 23  ஆயிரத்து 236 ஓட்டுக்களும் , அ.தி.மு.,க வேட்பாளர் 17  ஆயிரத்து 789 ஓட்டுக்களும் , தே.மு..தி.க., வேட்பாளர் காவேரி வர்மன் 7  ஆயிரத்து 316 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.

_____________________________________________________________________________________________

விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட இலங்கை அகதி முகாமை சேர்ந்த பெண் தீக்குளித்து தற்கொலை பாலியல் பலாத்காரம் நடந்ததாக போலீசார் மீது புகார்

விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கை அகதி முகாமை சேர்ந்த பெண், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பாலியல் பலாத்காரம் நடந்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் மீது புகார் கூறப்பட்டு உள்ளது.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, கரூர் அருகே 2 குழந்தைகள் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முரளி (வயது 28), குமார் (29), பாண்டி (24) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் குமார், பாண்டி இருவரும் கரூர் அருகே உள்ள ராயனூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த குமாரின் மனைவி பத்மாதேவியை (வயது28) பசுபதி பாளையம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் கடந்த 7-ந் தேதி அன்று அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பத்மாதேவியை போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு வந்த பத்மாதேவி அன்று இரவு சுமார் 7 மணி அளவில் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த பத்மாதேவியை மற்ற அகதிகள் மீட்டு கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். (மேலும்)  30..03.10

_____________________________________________________________________________________________

யாழ் மாவட்ட பெருமக்களே ! உங்களிடம்  எமது அன்பான வேண்டுகோள் !

எமதினிய பாசமிகு யாழ் மாவட்ட பெருமக்களே!  உங்களிடம் எமது அன்பான வேண்டுகோள்!

1sritharan poster970களின் நடுப்பகுதியிலிருந்தே அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்தத் தொடங்கிய சிறிதரன் அவர்கள்  ஈழ மாணவர் குரல் என்னும் எழுச்சிப் பத்திரிகையை வெளிக்கொணர்ந்தார். மேலும் ஈழமுழக்கம், செந்தளம் மற்றும் செந்தணல் ஆகிய வெளியீடுகளுக்கும் வழிகாட்டியாக இருந்தார். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கண்ணோட்டம் பத்திகையின் ஆசிரியராகவும் அரசியல் எழுத்துப் பணியாற்றி வருகிறார். அவர் அயராத அபாரமான எழுத்தாளர். கட்சித் தோழர்கள் மத்தியில் உதாரண புருஷனாகவும் ஆற்றல் மிக்க ஆசானாகவும் எப்போதும் இருந்து வந்திருக்கிறார். மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் கட்சியை வழி நடத்தும் ஒரு புரட்சிகரத் தலைவனாக அவர் செயற்பட்டு வருகிறார். ஈழத் தமிழர்கள் சுயாட்சி கொண்ட அதிகாரப் பகிர்வைப் பெறவும் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும், தமிழ்க்கட்சிகளுக்கிடையில் ஜனநாயக ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்தவும் அனைத்து தளங்களிலும் அயராது அஞ்சாது உழைத்து வருபவர். அரசியல் உரிமைக்கான போராட்டமும் சமூகத்தில் நிலவும் சாதிகள் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை இல்லாதொழிப்பதற்கான போராட்டமும் பெண்களின் உரிமைகளுக்கான போராட்டமும் சமாந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் தீர்க்கமான பற்றுறிதி கொண்டு செயற்பட்டு வருபவர். 1980களில் தட்டுகளில் உணவும் சிரட்டைகளில் தேனீரும் வேண்டாம் என்ற கோஷங்களுடன் நடைபெற்ற சாதி ஒழிப்புப் போராட்டங்களில் ஒரு முக்கிய செயற்பாட்டாளாராக விளங்கியவர்.  (மேலும்) 30..03.10  பிரதியெடுக்க

_____________________________________________________________________________________________

நளினி விடுதலை இல்லை ஏன்?: அரசாணை முழு விவரம்

சென்னை,​​ மார்ச் 29:​ நளினியை முன் கூட்டியே விடுதலை செய்யாதது ஏன் என்பதற்கான காரணங்களை விளக்கி உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த அரசாணையின் முழு விவரம்: நளினியை விடுதலை செய்வது தொடர்பாக சிறை ஆலோசனைக் குழு வேலூர் சிறையில் ஜனவரி 20-ம் தேதி கூடி பரிசீலித்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் 18 பேர் கொலையுண்ட சம்பவத்தில்,​​ கொலையாளிகளுடன் நளினியும் இணைந்து சதியில் ஈடுபட்டுள்ளார். ராஜீவ் கொலை தொடர்பாக அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும்,​​ கொலையாளிகளுடன் முழுமையாக ஒத்துழைத்துள்ளார்.​ இதன் மூலம் அவர் கொடூரமான குற்றத்தைப் புரிந்துள்ளார். சிறையில் அவர் பட்ட மேற்படிப்பும்,​​ பட்டயப் படிப்பும் பெற்றுள்ளார்.​ இதன் மூலம் அவரது மனப்போக்கு ​ மாறியுள்ளதாகக் கருதமுடியாது.​ இதுவரை அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.​ தனது செயல்களுக்காக வருத்தமும் தெரிவிக்கவில்லை. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டால்,​​ அவரை தன்னுடைய பாதுகாப்பில் வைத்துக் கொள்வதாக நளினியின் தாயார் உத்தரவாதம் அளித்துள்ளார்.​ ஆனால்,​​ இதுதொடர்பான வழக்கில் நளினியின் தாயாரும்,​​ சகோதரரும் கூட சிறையில் அடைக்கப்பட்டு,​​ பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். (மேலும்)  30..03.10

_____________________________________________________________________________________________

தேனிசை பாயும் மட்டு வாவியின் மைந்தன்: சுவாமி விபுலானந்தர் ( ஞாபகார்த்த கவிதை)

எஸ்.எம்.எம்.பஷீர்

தமிழ் முஸ்லிம் இன ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்த விபுலானந்தர் மருதமுனை புலவர்மணி ஆ.கா. சரிப்புடீன் போன்றோருடன் நெருங்கிய நட்பும் கொண்டிருந்தவர். விபுலானந்தர் போன்ற சிறந்த மனிதர்களின் பண்பியல்புகளை  நினைவு கூறுவது இன்றைய இன ஐக்கியம் பேணவிழையும்  சமூகங்களின் பார்வைக்கும் பயிற்சிக்கும் தேவையாகவுள்ளது. இக்கவிதையினை அவரின் 118 வது  பிறந்ததினத்தை (27 பங்குனி) முன்னிட்டு அவர் பற்றி நான் எழுதிய கவிதையொன்றினை இங்கு மீள்பதிவு செய்கிறேன்.  (மேலும்)  30..03.10  

_____________________________________________________________________________________________

யாழ்குடாவில் இராணுவம் நிர்மாணித்த 437 வீடுகள் புத்தாண்டுக்கு முன் கையளிப்பு: இடம்பெயர்ந்த மக்கள் சொந்தக் காணிகளில் மீளக்குடியேற்றம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக இராணுவத்தினரால் நிர்மாணிக்க ப்பட்டுள்ள 437 வீடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் கையளிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவின் வழிகாட்டலில் 680 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இவற்றில் 437 வீடுகளே முதற் கட்டமாக கையளிக்கப்பட வுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த அரசாங்கம் முன்னெடுத்துவரும் திட்டத்திற்கு உதவியாகவே இராணுவம் இந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. யாழ். அரசாங்க அதிபர் கே. கணேஷ், உதவி அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பூரண ஒத்துழைப்புடன் இராணுவத்தின் 51வது 52வது, 55வது படைப் பிரிவுகளும் இராணுவத்தின் ஏழாவது செயலணியினரும் இந்த வீடமைப்பு திட்டத்தை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.  (மேலும்)  30..03.10  

_____________________________________________________________________________________________

உதயன் சுடரொளி ஆகிய ஊடகங்கள் திட்டமிட்டு எம் மீது சுமத்துவது மிக மோசமான அவதூறு பிரச்சாரம்

- ஈ.பி.டி.பி.

உதயன் சுடரொளி ஆகிய ஊடகங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது சுமத்தி இருப்பது திட்டமிட்ட அவதூறு பிரச்சாரங்களே அன்றி இதில் உண்மைத்தன்மை எதுவும் இல்லை. கடந்த காலங்களிலும் தேர்தல் நெருங்கும் தருணம் பார்த்து குறித்த இரு பத்திரிகைகளும் ஈ.பி.டி.பி மீது மிக மோசமான அவதூறு பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டிருந்த நிகழ்வுகளையும் மக்கள் நன்கு அறிவார்கள். மக்கள் மத்தியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு இருக்கும் ஆதரவுத் தளத்தை கண்டு அஞ்சும் சில சக்திகள் எதிர்வரும் தேர்தலிலும் ஈ.பி.டி.பி. பேராதரவு பெற்று வெற்றி பெறப் போகின்றது என்ற காழ்ப்புணர்ச்சியினால் சாவகச்சேரி மாணவன் கபில்நாத்  அவர்களின் படுகொலை  தொடர்பான தகவல்களை திட்டமிட்ட வகையில் திரிபுபடுத்தி செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. இதற்குக் காரணம் உதயன் சுடரொளி ஆகிய இரு பத்திரிகைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு குழுவினருடன் இணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான திரு.சரவணபவான் அவர்களுக்குச் சொந்தமானவை ஆகும். (மேலும்)  30..03.10  

_____________________________________________________________________________________________

பிரிட்டன் மாணவர்களை மிஞ்சும் இந்திய மாணவர்கள்

லண்டன்,​​ மார்ச் 29:​ பிரிட்டன் மாணவர்களைக் காட்டிலும் இந்திய மாணவர்கள் சிறப்பாக படிப்பதாக தெரியவந்துள்ளது.​ இங்குள்ள பள்ளிகளில் பிரிட்டன் மாணவர்களைக் காட்டிலும் ஆங்கிலத்தில் இந்திய மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.​ இங்குள்ள பள்ளிகளில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. இந்திய மாணவர்கள் மற்றும் சீன மாணவர்கள் முதலிரண்டு இடங்களைப் பெறுவதாகவும்,​​ பிரிட்டன் மாணவர்கள் மூன்றாமிடம் பெறுவதாகவும் தெரியவந்துள்ளது.​ இங்குள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 55 சதவீத இந்திய மாணவர்களும்,​​ 31 சதவீத சீன மாணவர்களும் கடந்த ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர்.​ ஆனால் பிரிட்டன் மாணவர்களின் தேர்ச்சி அளவு 16 சதவீதம் மட்டுமே.​ ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கருப்பர் இனத்தவர்கள் 14 சதவீதமும்,​​ பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 13 சதவீதமும்,​​ கரீபிய மாணவர்கள் 8 சதவீதமும் பள்ளிப்படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர்.​ ​(மேலும்)  30..03.10  

_____________________________________________________________________________________________

கடத்தப்பட்ட மாணவனின் படுகொலை; ஈ.பி.டி.பி. உறுப்பினருக்குப் பிடியாணை நாட்டைவிட்டு வெளியேறத் தடை உத்தரவு

யாழ்ப்பாணம், மார்ச் 29

குடாநாட்டில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் கபிலநாத்தின் படுகொலை தொடர்பாக  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.யின்) நுணாவில் முகாமில் செயற்பட்டுவந்தவர் எனத் தெரிவிக்கப்படும் ஜீவன் என்ற இளைஞனைத் தேடிக் கண்டுபிடித்துக் கைதுசெய்யுமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது. அவர் நாட்டை வீட்டு வெளியே தப்பிச்செல்ல இயலாதவகையில் விமானநிலையம், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், சுங்கத்திணைக்களம் ஆகியவற்றுக்கும் பிடிவிறாந்தை அனுப்புமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் ரி.ஜே.பிரபாகரன் நேற்று முன்தினம் பணிப்புரை விடுத்துள்ளார்.   ஜீவன் என்பவர் கடந்த எட்டு வருடங்களாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நுணாவில் முகாமில் செயற்பட்டு வந்தவர் எனக் கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறுபேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி இந்தக் கடத்தல், படுகொலைச் சம்பவத்தின் சூத்திரதாரிகளாக பிரதானமாக இருவர் இருந்துள்ளனர் என்பது தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. (மேலும்)  29..03.10  

_____________________________________________________________________________________________

மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையங்களில் குண்டுவெடிப்பு: 37 பேர் பலி

மாஸ்கோ மார்ச 29: ரஷியத் தலைநகர் மாஸ்கோவிலுள்ள மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் குறைந்தது 25 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் 10 பேர் காயமடைந்திருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குண்டுவெடிப்பு நடந்த சிறிது நேரத்தில் மாஸ்கோவிலுள்ள இன்னொரு மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது இதில் 12 பேர் பலியாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இவ்விரண்டும் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களாக இருக்கலாம் என ரஷிய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

_____________________________________________________________________________________________

மூன்றில் இரண்டு பெரும்பான்மை நிச்சயம் ஆளும் தரப்பினர் அபார நம்பிக்கை

rajapaksha-2ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறப் போகும் நாடாளுமன்றத்தேர்தல் தொடர்பாக இடம்பெற்றுவரும் கட்சிகளின் பிரசார நடவடிக்கைகள்  ஏற்படுத்தியுள்ள ஒரே ஒரு அரசியல் அலை என்னவென்றால் சகல கட்சி களிலிருந்தும் போட்டியிடுகின்ற கோஷ்டிகளுக்கிடையில் வாக்காளர்களின் விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக நடைபெற்றுவரும் மோதல்களைத்தான் சுட்டிக்காட்ட வேண்டும். பொது மக்கள் தேர்தல் பிரசாரங்களில் அதிக அக்கறை காட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் வெளிப்படையானது. ஜனவரி 26 ஆம் திகதிய ஜனாதிபதித்தேர்தலில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏறத்தாழ 1.8மில்லியன் வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றியீட்டியமை காரணமாகவே இந்த அக்கறையின்மை தோன்றியிருக்கின்றது எனலாம். வாக்களிப்பில் மோசடிகள் இடம்பெற்றதாக வெளியான உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக்களைத் தவிர வேறொன்றுமில்லை. எம்பிலிப்பிட்டிய தொகுதியில் ஜெனரல் பொன்சேகாவுக்குச் சார்பாக அளிக்கப்பட்டிருந்த வாக்குச் சீட்டுக்கள் சில எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப் பட்டிருந்தமை மட்டுமே எதிர்க்கட்சி யினரால் முன்வைக்கப் பட்டிருந்த ஒரு ஆதாரமாகும்.இது பற்றி குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தினால் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுத் தேர்தலின் முடிவு தொடர்பான பெரும்பாலான மக்களின் கணிப்பு முடிந்து போன ஒன்றாகவே தென்படுகிறது. அதாவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வெற்றி நிச்சயம் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய முன்னணி வெல்லக் கூடிய ஆசனங்கள் தொடர்பாகவும் கேள்விகள் எழுந்துள்ளன. (மேலும்)  28..03.10  

_____________________________________________________________________________________________

சாவகச்சேரி மாணவன் மீதான படுகொலை என்பது வன்முறை கலாச்சாரத்தை நோக்கி யாழ்.குடாநாட்டை மீண்டும் திசைதிருப்பும் செயலாகும்

- ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

epdpயாழ். குடாநாடு இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் தருணம் பார்த்து மிகக் கொடுமையான முறையில் நடத்தப்பட்டிருக்கும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனான திருச்செல்வம் கபில்நாத் என்பவர் மீதான படுகொலை என்பது யாழ்.குடாநட்டை மறுபடியும் வன்முறைக் கலாசாரத்தை நோக்கி திசைதிரும்பிவிடும் செயலாகும்  என்றும் இப் படுகொலைச் சம்பவமானது தேர்தல் கால வன்முறைச் சம்பவங்களோடு தொடர்புபட்ட ஒரு நிகழ்வாகவே தெரியவந்துள்ளது எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்நிலையில் மாற்றங்களை உருவாக்குவதற்காக நடத்தப்படும் தேர்தலில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் தீயசக்திகளும் போட்டியிடும் செயலானது சமூக விரோத சக்திகளுக்கு வேட்பாளர்கள் என்ற அந்தஸ்தை கொடுக்கும் ஆபத்து நிறைந்த செயலாகும் என்றும் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவனின் மீது கொலை வெறியாட்டம் நடத்தியவர்கள் வெளிநாடொன்றிலிருந்து வந்தவர் தலைமையில் யாழ். தேர்தல்களத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுவொன்றின் வேட்பாளர்களே என்றும் விசாரணைகளின் போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. . (மேலும்)  28..03.10  

_____________________________________________________________________________________________

சாவகச்சேரி மாணவன் கடத்திப் படுகொலை:ஒருவர் கைது; மற்றொருவரை தேடி வலைவிரிப்பு

kabilnathசாவகச்சேரியில் மாணவரொருவன் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதனுடன் தொடர்புடைய இன்னுமொரு சூத்திரதாரியை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி நேற்றுத் தெரிவித்தார். ஒருகோடி ரூபா கப்பம் கோரி கடத்தப்பட்ட பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீசாலையைச் சேர்ந்த க.பொ.த. சாதாரணதர மாணவனான அருள்விநாயகம் கபில்நாத் என்பவரே இவ்வாறு கடத்தி கொலை செய்யப்பட்டவராவார். கப்பம் கோரி குறித்த மாணவன் இனந்தெரியாத குழுவினரால் இருவாரங் களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டார். தனது மகனை காப்பாற்றுவதற்காக தந்தை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தவேளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.  (மேலும்)  28..03.10  

_____________________________________________________________________________________________

இரணைமடு ஓடுதளத்தை விமானத்துறை மையமாக செயல்படுத்த நடவடிக்கை

 தமிழீழ விடுதலைப் புலிகளினால் விமான ஓடுபாதையாக நிர்மாணிக்கப்பட்டிருந்த வடக்கு வனப்பகுதியின் இரணைமடு ஓடுதளம் விமானத்துறை மையமாக செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. யுத்தத்துக்கப் பின்னரான வடபகுதி அபிவித்தித் திட்டத்தின் கீழ் இந்த விமான ஓடுபாதையை உள்ளடக்கி விமான சேவைக் கட்டத் தொகுதி ஒன்று அமைக்கப்படவுள்ளது. இந்த கட்டடத் தொகுதியில் விமன சேவை பயிற்சி நிலையம் ஒன்றுடன் ஆய்வு நிறுவனம் ஒன்றும் அடங்கும் வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்ததாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

_____________________________________________________________________________________________

வரலாற்றுக்கடமையை புரிந்து கொண்டு செயல்படவும்

நடேசன்

 அவுஸ்திரேலியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற ஒரு பெண்மணியிடம் அங்கே பணியிலிருந்த இராணுவ காவலர் ஒருவர் “ உங்களுக்கு நல்ல தலைவர்கள் இல்லை” என்று பரிதாபப்பட்டாராம.;.  நான் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கையில் நின்றபோது அந்த இராணுவக் காவலர்அந்தப்பெண்மணியிடம் சொன்ன அதே கருத்தையே சில படித்த சிங்கள அன்பர்கள் என்னிடமும் சொன்னார்கள். அக்கருத்தை நான் ஆமோதிப்பேன் இல்லையெனில் சிரித்து சமாளிப்பேன். ஆனால்; மனதிற்கு அது கசப்பான உணர்வைத் தந்தது ஆனாலும்  உண்மைதான்.  எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் தமிழ்ப்பிரதேசங்களில் 24 அணிகள் போட்டி இடுவதாக எனது நண்பர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து கூறினார் . இதேவேளையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் குதித்திருப்பதாக பத்திரிகையில்  பார்த்தேன்  தமிழ்ப் பகுதிகள்; கடந்த 30 வருடங்களாக ஜனநாயக உரிமை மறுக்கப்பட்ட பிரதேசங்களாக இருந்ததால் தற்பொழுது சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டு ஏராளமானவர்கள் பதவிக்குப் போட்டி இடுகிறார்கள். பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் விரிவுரையாளர்கள் டொக்டர்கள்  ஏன் சிட்னியில் இருபது வருடங்களாக வசித்து வந்த நண்பர்  செல்வராஜாகூட இத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்;. இவர்களைவிட விடுதலைப்;புலி எதிர்பபாளர்கள்  பலரும் இந்த தேர்தலில் பல அணிகளின் சார்பில் போட்டி இடுகிறார்கள். (மேலும்)  28..03.10  

_____________________________________________________________________________________________

தேர்தல் காலத்து உளறல்கள்.

- தேசாபிமானி

என்ன வாக்குறுதிகளை கொடுத்தாவது, மற்றவர்கள் மேல் எந்த குற்றசாட்டுகளை சுமத்தியாவது பாராளுமன்றக் கதிரையை பிடிக்கவேண்டும் என்பது அரசியல்வாதிகளின் நோக்கமாக இருக்கலாம். ஆனால் பொது அமைப்புகள், மதத் தலைவர்கள், அரச அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துக்களே மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதாக உள்ளன. யுத்தத்தின் காரணமாக வெளியேறி முகாம்களில் தங்கி தற்போது அப்பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி மூட்டை முடிச்சுக்களுடன் மரங்களின் கீழும் இடிந்த நிலையில் உள்ள வீடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் இவர்களுக்கு பொது நிறுவனங்கள் உதவி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்காததால் அவர்கள் துன்பதுயரங்களுடன் நிம்மதியாக வாழமுடியாமல் திண்டாடுவதாகவும் யாழ் ஆயர் வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்குவதற்கு சுமார் 15 அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு பிரதேச செயலகப் பிரிவுகளில் 100 கோடி ரூபா செலவில் 2700 வீடுகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா தெரிவித்துள்ளார.  (மேலும்)  28..03.10  

_____________________________________________________________________________________________

'தமிழ் மக்களின் எதிர்காலமும் காலத்துக்கேற்ற அணுகுமுறையும்'

புலம்பெயர் தமிழர்கள் ஏதாவது செய்வதென்றால் நல்லதைச் செய்யட்டும். பணத்தைக் கொடுத்துக் கட்டளை போடக்கூடாது.

60 வருடகாலமாகப் போராடியும் தமிழினத்தின் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை. சேர் பொன். இராமநாதன், ஜீ. ஜீ. பொன்னம்பலம், எஸ். ஜே. வி. செல்வநாயகம், பிரபாகரன் மற்றும் சில குழுக்கள் எல்லோரும் போராடினார்கள். நானும் தரப்படுத்தலால் பாதிக்கப்பட்டவன்தான். தயவுசெய்து என்னைப் புலம்பெயர்ந்த தமிழரின் பிரதிநிதியாகக் கருதி விடாதீர்கள். ஏனென்றால் புலம்பெயர் தமிழர்களுள் மூன்று ஜாதியினர் உள்ளனர். ஜாதி என்றதும் வேறு மாதிரி எண்ணிவிடாதீர்கள். ஒன்று- தமிழர்களுக்கு அநியாயம் நடக்கிறதென்று ஆர்ப்பாட்டம் நடத்தும் ஜாதி. இரண்டு- அவர்களும் பிழை இவர்களும் பிழை என்ன செய்வது என்ற ஜாதி. ஒன்று- எமக்கென்ன பிழைக்க வந்துள்ளோம். யார் இப்போ எம். பியாக இருக்கிறார். ராஜபக்ஷவாம். என்ன, என்று அவரின் பெயரின் முதற் பகுதியையும் மறந்து எதிலுமே அக்கறை இல்லாத ஜாதி. இதில் நான் எந்த ஜாதி என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள். புலம்பெயர் தமிழர்கள் ஏதாவது செய்வதென்றால் நல்லதைச் செய்யட்டும். பணத்தைக் கொடுத்துக் கட்டளை போடக்கூடாது. இங்கு ஜனநாயகம் தழைக்கிறது. வடக்கு, கிழக்கில் 320 பேர் போட்டியிடுகின்றார்கள். ஏன் என்று தெரியவில்லை. எல்லோரும் தலைவர்களாக வருவது நல்லதுதான். ஆனால், ஒன்றுகூடிப் போட்டியிட்டிருந்தால் இன்னும் சிறப்பு, எமது அடுத்த ஆயுதம் இராஜதந்திரம், அரசியல் சாணக்கியத்தை மறக்கக் கூடாது. நாம் ஓர் அமைப்புக்குள்ளிருந்து போராட வேண்டும். அமைப்புக்கு எதிராகப் போராடக் கூடாது”  (மேலும்)  27..03.10  

_____________________________________________________________________________________________

இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிக்க அமெரிக்கா மறுப்பு

கொழும்பு, மார்ச் 27- இலங்கை ராணுவத்துக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க அமெரிக்கா மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ராணுவ அகாடமிகளில் சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக இலங்கை ராணுவம் அனுப்பி வைத்த மூன்று பட்டியல்களை அமெரிக்க உயர் அதிகாரிகள் நிராகரித்துவிட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், இத்தகைய முடிவை அமெரிக்க அரசு எடுத்துள்ளதாகவும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினர் அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி பெறுவதில் எந்தத் தடைகளும் விதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

_____________________________________________________________________________________________

மூன்று தமிழ் வேட்பாளர்கள் ஐ.ம.சு.மு.வில் இணைவு

திகாமடுல்ல மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் மூன்று தமிழ் வேட்பாளர்கள் ஐ.ம.சு.மு வில் இணைந்துள் ளனர். ரீ.எம்.வி.பி. வேட்பாளர்களான காத்தமுத்து கணேஸ், ஜெயரட்ணம் நேசராசா மற்றும் ஈரோஸ் வேட்பாளரான த. இராசலிங்கம் ஆகியோரே அரசுடன் இணைந்து கொண்டவர்களாவர். ஐ.ம.சு.மு. தமிழ் வேட்பாளர் கு. இனியபாரதிக்கு ஆதரவு தெரிவித்தே இவர்கள் இணைந்து கொண்டனர். இதேவேளை, தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் எஸ். பன்னீர்செல்வமும் ஆளும் கட்சி வேட்பாளர் இனியபாரதியுடன் இணைந்துகொண்டுள்ளார்.

_____________________________________________________________________________________________

இடம்பெயர்ந்தோர் நிதியுதவி இடைநிறுத்தம்: மோசமான நிதிப்பற்றாக்குறையே காரணம்

- ஐநாவின் அகதிகளுக்கான தூதரகம்

IDPஇலங்கையில் யுத்தம் காரணமாக உள்ளுரில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீள்குடியேறும்போது, அவர்களுக்கு கொடையாக வழங்கப்பட்டு வந்த ஆரம்ப நிதியுதவி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக ஐநாவின் அகதிகளுக்கான தூதரகம் தெரிவித்துள்ளது. மோதல்களால் அனைத்தையும் இழந்த நிலையில் சொந்த இடங்களுக்கு திரும்பும் குடும்பங்கள் தமக்குரிய இருப்பிட வசதியை ஏற்படுத்திக் கொள்வதற்காக 25 ஆயிரம் ரூபா ரொக்கப்பணம் ஆரம்ப நிதியுதவியாக வழங்கப்பட்டுவந்தது. “தற்போது ஏற்பட்டுள்ள மோசமான நிதிப் பற்றாக்குறை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது” என்று கொழும்பில் உள்ள ஐநாவின் அகதிகளுக்கான தூதரகத்தின் அதிகாரியாகிய சுலக்ஷனி பெரேரா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். “ஏற்கனவே தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்கள் பலவற்றிற்கு இந்த நிதியுதவி வழங்கப்பட வேண்டியுள்ளது. இதற்கென மார்ச் மாதம் இறுதிவரையில் வழங்குவதற்காக 3 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் எங்களுக்கு அவசரமாகத் தேவைப்படுகின்றது. இதனை பெறுவதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம்” என அவர் கூறினார். (மேலும்)  27..03.10  

_____________________________________________________________________________________________

தேசியம், சுயநிர்ணயம், மரபுவழித் தாயகம் இவையெல்லாம் உளுத்துப்போன சுலோகங்கள். எந்தத் தமிழனும் இதற்கு மாறானவன் அல்ல. இருப்பினும் கூட்டமைப்பினர் இந்தச் சுலோகங்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் வாக்குகளை வேட்டையாடுகின்றனர்.

- வீ.ஆனந்தசங்கரி உதயனுக்கு வழங்கிய செவ்வி

Veerasingham-Anandasangareeநாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. ஒரு காலத்தில் நாடாளுமன்றில் கௌரவமான கனவான்கள் அங்கத்துவம் வகித்தார்கள். அத்தகையவர்களோடு சேர்ந்திருந்தது பெருமையாக இருந்தது. ஆனால் இன்று அப்பிடியல்ல சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள்; கொலைகளுடன் தொடர்புடையவர்கள், தூள் ("குடு")  வியாபாரிகள் போன்ற சமூக விரோதிகள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கிறார்கள். நான் பல தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். ஆனால் பண உதவியோ, மதுபானங்களோ, யாருக்கும் கொடுத்தது கிடையாது. எனது சொந்தப்பணத்திலே தேர்தல் பிரசாரங்களினை மேற்கொண்டேன். ஆனால் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்தவர்கள் தோற்றுப் போன வரலாறும் இருக்கிறது. தேர்தல் காலமென்றபடியால் லொறிகளில் சைக்கிள்களை ஏற்றி வந்து மக்களுக்கு அன்பளிப்புச் செய்கிறார்கள். தைப்பதற்குக் கிழிந்த கந்தையைத் தவிர எதுவுமில்லாதவர்களுக்கு "தையல் மெஷின்' கொடுக்கிறார்கள். இந்நிலையில் மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் நம்மத்தியில் உள்ளார்கள். இன்றைய சூழ்நிலையில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளைப்பற்றி தைரியமாகப் பேசுபவர்கள் எவருமில்லை. பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு தமிழ் மக்களின் நேர்மையான பிரதிநிதியொருவர் தெரிவு செய்யப்படவேண்டும்.அந்தத்தகுதி எனக்கிருக்கிறது. ஆதலால் தான் தேர்தலில் போட்டியிடுகிறேன். (மேலும்)  27..03.10   _

Home / Page-2 / Page-3 / Page-4 / Page-5

wanni

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!