a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                          19.04.2010

அரசியலில் கூடுதல் அனுபவம், தகுதி உள்ளவர்களுக்கே அமைச்சர்கள் நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும் ஜனாதிபதி

rajapksha-7ுதிய அமைச்சரவையில்  35 முதல் 38 பேர் அமைச்சர்களாகப் பதவிவகிப்பர். நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப் பட்டுள்ளவர்களில் கூடுதல் தகுதி, அனுபவம்  மற்றும் திறமையுள்ளவர்களே அமைச் சர்களாகச் சேர்த்துக்கொள்ளப்படுவர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தக வலைத் தெரிவித்துள்ளார். "திவயின' சிங்கள நாளிதழுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இப்படிக் கூறியுள்ளார். சிரேஷ்ட மற்றும் தகுதியானவர்களுக்கே அமைச்சர் நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும். அமைச்சர்களை நியமிக்கு முன்னர் சிரேஷ்ட உயர் அரச அதிகாரி களின் கருத்துக்கள் கேட்கப்படும். அந்தக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டும் அமைச்சர் நியமனம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் விவகாரங்களில் தேர்ச்சி பெறுவது மிகவும் முதன்மையான  அவசியமான தேவை என்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார். அமைச்சர்கள் நியமனத்தின்போது அரசியலில் கூடுதல்  அனுபவம் உள்ளவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தைக் கேட்டு அதனடிப்படையில் சபாநாயகர் பதவிக்கு  வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார் என்றும் ஜனாதிபதி சொன்னார். புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி  நாளை ஞாயிற்றுக்கிமை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற அலுவல்களில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் புதிய எம்பிக்களுக்கு விளக்கவுரை நிகழ்த்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

____________________________________________________________________________________________

இலங்கையின் பல பகுதிகளில் பாதுகாப்பு நிலைவரம் முன்னேற்றம் அவுஸ்திரேலிய பிரதமர் கூறுகிறார்

kevinவழமையாக இருந்ததிலும் பார்க்க இலங்கையின் பல பகுதிகளும் ஆப்கானிஸ்தானும் அமைதியாக இருப்பதாகவும் புகலிடம் கோருவோரின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் போது இந்த விடயம் பரிசீலனைக்கு எடுக்கப்படும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட் கூறியுள்ளார். பாதுகாப்பு நிலைவரம் தொடர்ந்து மேம்பட்டு வரும் நிலையில் அதிகளவிலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் கெவின் ரூட் கூறியுள்ளார்.சிட்னியிலிருந்து சாரா என்பவர் விடுத்த தொலைபேசி அழைப்பிற்குப் பதிலளிக்கும் போதே கெவின் ரூட் இதனைத் தெரிவித்துள்ளார். தான் தமிழரெனவும் படிமுறையான அடக்குமுறையினால் இலங்கையை விட்டு நான் வெளியேறியதாகவும் சாரா கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த கெவின் ரூட், புகலிடம் கோருவோர் தொடர்பான கொள்கை முழுமையாக மாற்றப்பட்டிருக்கவில்லை எனவும் புகலிடம் கோருவோரின் விண்ணப்பங்கள் உண்மையற்றவையாயின் அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் ரூட் தெரிவித்திருக்கிறார். (மேலும்) 18.04.10

____________________________________________________________________________________________

கனடாவில் நாடு கடந்த அரசுக்கான தேர்தலில் ஈழவேந்தனும் போட்டி!

நாடு கடந்த அரசுக்கான கனேடியத் தேர்தலுக்காக மொத்தம் 43 பேர் வேட்புமனுக்க ளைத் தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவிக்கப் படுகின்றது. இவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வேட்பாளர்களின் விபரங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப் படுகின்றது. கனடாவின் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களில் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்த னும் அடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படு கின்றது. அத்துடன் தமிழர் தகவல் ஆசிரியர் மு.திருச்செல்வம், கலாநிதி சிறிஸ்கந்தராஜா, ஜோ.அன்ரனி, பொன் பால்ராஜன் உள்ளிட்ட வர்களும் போட்டியிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே ஐக்கிய ராஜ்ஜியத்துக்கான நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர் தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியும் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

____________________________________________________________________________________________

பிரிட்டிஷ் கட்சித் தலைவர்களின் விவாதம்

- பி.பி.சி செய்தி

British leadersபிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கின்ற நிலையில் இங்குள்ள மூன்று முக்கிய கட்சிகளின் தலைமை வேட்பாளர்கள் பங்குபற்றிய முதலாவது தொலைக்காட்சி விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. பொருளாதாரம், மற்றும் உள்நாட்டு விவகாரங்களான குடிவரவு, சுகாதார பராமரிப்பு சேவை, கல்வி போன்ற பல விடயங்கள் குறித்து தொழிற்கட்சியின் கோர்டன் பிரவுண், கன்சர்வேட்டிவ் கட்சியின் டேவிட் கமரோன் மற்றும் லிபரல் டெமொகிரடிக் கட்சியின் தலைவரான நிக் கிலக் ஆகியோர் இங்கு விவாதித்தனர். இந்த விவாதம் பிரிட்டிஷ் அரசியலில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இந்தக் கட்சிகள் இடையில் முரண்பாடுகள் அதிகம் என்றாலும் இந்த விவாதத்தின் முடிவில் எவரும் எதிர்பாராத அளவுக்கு ஒரு சுமுகமான நிலைமையே காணப்பட்டது. விவாதம் தொடங்கி சில நிமிடங்களிலேயே வரி மற்றும் செலவினம் குறித்து டேவிட் கமரோனுக்கும், கோர்டன் பிரவுனுக்கும் இடையே கடுமையான வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. (மேலும்) 18.04.10

____________________________________________________________________________________________

இடதுசாரி கட்சிகளில் மூவர் பாராளுமன்றத்துக்குத் தெரிவு

இம்முறை பொதுத் தேர்தலில் பதினொரு இடதுசாரி வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும் மூவரே வெற்றி பெற்றுள்ளனர்.மாத்தறை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கஜதீரவும் கேகாலை மாவட்டத்தில் சமசமாஜன் கட்சி சார்பில் போட்டியிட்ட பத்மசிறியும் வெற்றிபெற்றுள்ளனர்.கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஐவரும் லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த ஆறுபேரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தனர். இரத்தினபுரி மாவட்டத்தில் ஜனநாயக இடதுசாரி முன்னணி வேட்பாளரான வாசுதேவ நாணயக்கார ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

____________________________________________________________________________________________

 ஐஸ்லாந்து எரிமலை சீற்றம்: விமான நிறுவனங்களுக்கு ரூ. 4,227 கோடி நஷ்டம்

airlinesஐஸ்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள எரிமலை சீற்றத்தால் வெளியேறும்சாம்பல் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் 100 கோடி டாலரை (ரூ.4,227 கோடி) தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எரிமலை சாம்பல் வெளியேற்றம் காரணமாக பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 12-க்கும் அதிகமான விமான நிலையங்கள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. மேலும் மூன்று நாள்களுக்கு இந்நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு இயக்கப்படும் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 100 கோடி டாலரைத் தாண்டும் என இத்துறையைச் சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். (மேலும்) 18.04.10

____________________________________________________________________________________________

பிரபாகரனின் தாயார் பார்வதியை  திருப்பி அனுப்பியது சரியே: சுப்பிரமணியன் சுவாமி

சென்னை, ஏப்.17: மலேசியாவிலிருந்து சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியை மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பியது சரியான நடவடிக்கையே என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது அறிக்கையில், பார்வதியை இந்தியாவுக்குள் அனுமதிக்க மறுத்த இந்திய அரசின் நடவடிக்கை மிகவும் சரியானது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து, தங்கி செல்ல இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல. ராஜீவ் காந்தியை கொன்றதற்காக பார்வதி முதலில் கண்டனம் தெரிவிக்கட்டும். அதன்பிறகு அவரை இந்தியாவுக்குள் அனுமதிப்பது பற்றி பிறகு பரிசீலிக்கலாம் என்றார்.

____________________________________________________________________________________________

வவுனியாவில் மாத இறுதிக்குள் 1,500 குடும்பங்கள் மீள்குடியேற்றம் : அரச அதிபர்

 வவுனியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் இம்மாத இறுதிக்குள் 1,500 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவிருப்பதாக அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். பாலமோட்டை, மருதம்குளம், மருதமடு, பன்றிக்கேதகுளம், சேமமடு, ஆறுமுகத்தான் புதுக்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேயே மீள்குடியேற்றம் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான தகவல்கள் நிவாரணக் கிராமங்களில் திரட்டப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் இடம் பெயர்ந்தோரையும் மேற்படி ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் மீளக் குடியமர்த்தத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அரச அதிபர் சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.

____________________________________________________________________________________________

பிரபாகரனின் தாயாருக்கு அனுமதி மறுப்பு; எதுவும் தெரியாது - இந்தியத்தூதரகம்

பிரபாகரனின் தாயார் வெளியேற்றப்பட்டமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகம் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்துள்ளது. பார்வதி அம்மாளின் மருத்துவ சிகிச்சைக்காக இந்திய அரசாங்கம் ஆறு மாத கால விஸா வழங்கியிருந்தது.எனினும்,சென்னை விமான நிலையத்திலிருந்து உடனடியாக திருப்பி அனுப்பியது. இது தொடர்பாக தமிழ்மிரர் இணையதளம் இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகத்தின் உயர் அதிகாரியொருவருடன் தொடர்புகொண்டது. பத்திரிகையில் பிரசுரிக்கப்படும்வரை தமக்கு இது குறித்து எதுவும் தெரியாது என இந்திய தூதரக அதிகாரி  இணையதளத்திடம் தெரிவித்தார்.

____________________________________________________________________________________________

தமிழ் மக்கள் இன்னமும் அரசியலில் தெளிவுறவில்லை : கிழக்கு மாகாண முதலமைச்சர் 

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இன்னமும் அடைய முடியாத இலக்குகளை நோக்கிச் சிந்திப்பதாகவும் அல்லது அரசியலில் இன்னும் தெளிவுறவில்லை என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சந்திரகாந்தன் தெரிவித்தார். வீரகேசரி இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். "ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெரும்பான்மையான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆகையால் இந்தமுறை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் உறுதியான அரசாங்கம் அமையப் போகின்றது என்பது உண்மை. அந்தவகையில் இந்த வெற்றிகளுக்கெல்லாம் பொறுப்பாக இருந்தவர் எமது மதிப்புக்குரிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களே. வடக்கு கிழக்கு மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் வாக்களித்திருக்கிறார்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் வாக்களித்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நோக்குகின்ற பொழுது தமிழ் மக்கள் இன்னமும் அடையமுடியாத இலக்குகளை நோக்கிச் சிந்திப்பதாகவும் அல்லது அரசியலில் இன்னமும் தெளிவுறவில்லை என்ற ஒரு விடயத்தையும் எங்களால் காணக் கூடியதாக இருக்கின்றது. ஒருங்கிணைந்த இலங்கைக்குள் பிரச்சினையை முடித்துக்கொள்ளப் போகின்றோம் என்று சொன்னால், நாங்கள் அரசாங்கத்தோடு இணைந்து முரண்பாடில்லாமல் எங்களுடைய பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இருக்கிறது" என அவர் மேலும் தெரிவித்தார்.

____________________________________________________________________________________________

விமானத்தில் சென்னை வந்த பிரபாகரனின் தாயார்: அதே விமானத்தில் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்

paarvthiசென்னை விமான நிலையத்துக்கு, மலேசியாவில் இருந்து, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்றிரவு 10.45 மணி அளவில் வந்து தரையிறங்கியது. அந்த விமானத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இருப்பதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி விசாரணை நடத்தினார்கள். அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் வந்திருப்பது பிரபாகரனின் தாயார்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. தனக்கு பக்கவாத நோய் இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை பெறுவதற்காகவுமே சென்னை வந்ததாக அதிகாரிகளிடம் பார்வதிஅம்மாள் கூறினார். ஆனால், இந்தியாவுக்குள் நுழைவதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. எனவே, நீங்கள் திரும்பிச் சென்றே தீரவேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு, அந்த விமானத்திலேயே மலேசியாவுக்கு பார்வதிஅம்மாளும், அவருடன் வந்த பெண்ணும் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

_____________________________________________________________________________________________

இறுதித் தீர்வை நோக்கி நகரும் அணுகுமுறையே இன்றைய தேவை

புதிய பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் நாளை திருகோணமலையில் கூடுகின்றனர். எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முடிவு எடுப்பதற்காகவே இவர்கள் கூடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த கால செயற்பாடுகள் மூலம் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதே பொருத்தமானது. அப்போது தான் சரியான முடிவுக்கு வரமுடியும். இனப் பிரச்சினை தொடர்பாகத் தமிழ்த் தலைவர்கள் கடந்த காலங்களில் மேற்கொண்ட நிலைப்பாடுகளுள் பிரதான மானவை என இரண்டைக் குறிப்பிடலாம். முழுமையான அரசியல் தீர்வுக்குக் குறைவான எதையும் ஏற்பதில்லை என்பது ஒரு நிலைப்பாடு. தனிநாடு அமைக்க முடியும் என்பது மற்றைய நிலைப்பாடு. இவ்விரு நிலைப்பாடுகளும் நடைமுறைச் சாத்தியமற்றவை என்பது ஒருபுறமிருக்க, இவை தொடர்பாகத் தமிழ்த் தலைவர்கள் நிலையான கொள்கையைப் பின்பற்றவில்லை. ஈடாட்டத்தன்மையை வெளிப்படுத்தினார்கள். வட்டுக்கோட்டையில் தனிநாட்டுத் தீர்மானம் நிறைவேற்றியவர்கள் பின்னர், கிடைக்கும் அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டு மேலதிக அதிகாரங்களுக்காகத் தொடர்ந்து போராடுதல் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் மாவட்ட சபையை ஏற்றார்கள். அதன்பின், அதிகாரப்பகிர்வுக்காகத் தனிநாட்டுக் கொள்கையைக் கைவிட்டார்கள். மீண்டும் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்று ஆயுதப் போராட்டத்துக்குச் சார்பாகச் செயற்பட்டார்கள். (மேலும்)  17.04.10

_____________________________________________________________________________________________

காதல் காவியம் 'மாதா' கணனியிலிருந்து திருட்டு - ரூ. 4 கோடியில் தயாரிக்கப்பட்ட விவரணச் சித்திரம்

வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையைச் சித்திரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட விவரணத் திரைப்படம் கணனியின் ‘ஹார்ட் டிஸ்க்’ இல் இருந்து முழுமையாகக் களவாடப்பட்டுள் ளதாக மிரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வன்னியில் இடம்பெற்ற இறுதிநேர நடவடிக்கையின் போது இடம்பெற்றதாகச் சித்திரிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட அற்புதமானதொரு காதல் களவியமாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த விவரணச் சித்திரம் சர்வதேச விருதுக்கு போட்டியிடு வதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் சுமார் நான்கு கோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்டிருந்த ‘மாத்தா’ (மாதா) என்ற இந்தச் சிங்கள விவரணச் சித்திரம் மிகவும் நுட்பமான முறையில் கணனியின் ஹார்ட்டிஸ்க்கிலிருந்து முழுமையாகக் களவாடப்பட்டிருப்பதாக அதன் தயாரிப்பாளர் விஸ்வநாத் புத்திக்க கீர்த்திசேன தினகரனு க்குத் தெரிவித்தார். முழுக்க முழுக்க உள்ளூர்க் கலைஞர்களைக் கொண்டு இந்த விவரணச் சித்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். சில இடங்களில் இராணுவ வீரர்களும் நடித்துள்ளனர். (மேலும்)  17.04.10

_____________________________________________________________________________________________

த.தே.கூ. உடன் இணைந்து செயற்படுவோம்' - ரவூப் ஹக்கீம்

- பி.பி.சி

அரசியல் தீர்வு முயற்சிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டே இரு தரப்பு பிரதிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரவூப் ஹக்கீம் தமிழோசையிடம் கூறினார். தமிழ்,முஸ்லிம் மக்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுள்ள கட்சிகள் என்ற வகையில் இரண்டு கட்சிகளுக்கும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தார்மீக பொறுப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்கால அரசியல் களச்சூழ்நிலையை எதிர்கொள்வது, இனப்பிரச்சனைத் தீர்வுக்கான வழிமுறைகள் மற்றும் யாப்பு சீர்திருத்தத்தில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து உடன்பாடுகளை எட்டுவதற்காக கூட்டிணைந்து செயற்பட வேண்டுமென்பதை இரு தரப்பினருமே உணர்ந்துள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறினார். அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைகள் தொடர்பில் அலட்சியப் போக்கை முன்னெடுக்கக் கூடிய அபாயத்தை தடுப்பதற்கு இவ்வாறான இணைந்த அரசியல் நடவடிக்கை அவசியம் எனவும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார். தேர்தலுக்கு முன்னர் இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவதற்கு தேர்தல் முறைமைகளில் உள்ள சிக்கல்களே தடையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

_____________________________________________________________________________________________

Dutch priest accused of sex abuse in Sri  Lanka

By Robert Chesal

Created 16 April 2010 14:32

Dordrecht Bishop Ad van Luyn of Rotterdam has reported a Dutch priest  to the police for alleged sexual abuse in Sri Lanka.

Pending an investigation, the priest has been suspended with  immediate effect by the Rotterdam diocese, which contacted the police  following questions raised by Radio Netherlands Worldwide and  daily newspaper NRC Handelsblad. The priest, who until  today was pastor in the towns of Leidschendam and Voorburg on the  outskirts of The Hague, is a regular visitor to Sri Lanka where,  according to the diocese he is "active in the field of charity". A  spokesman for the diocese said it was informed in July 2009 about  "possible sexual abuse and possible financial misappropriations by this  priest while in Sri Lanka". In an email to RNW, the spokesman  stated that at that time the diocese ordered "a preliminary  investigation," but that "so far its results proved unable to  corroborate the accusations". (Read) 17.04.10

_____________________________________________________________________________________________

ஜெனரல் பொன்சேகா நாடாளுமன்றம் செல்வதைத் தடுக்க அரசு முயற்சி : ஜ.தே.

 நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்துக்கு செல்வதைத் தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்வதாக ஜனநாயக தேசிய முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க இக்குற்றச்சாட்டினை முன்வைத்தார். அங்கு உரையாற்றிய அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,"மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்வதற்கு முன்னாள் இராணுவத் தளபதிக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. எனினும் அவரை நாடாளுமன்றம் செல்லவிடாமல் தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்கிறது. இதுவரை அரசாங்கமோ அல்லது இராணுவமோ இந்த விடயம் தொடர்பில் தமது நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லை. எனவேதான், ஜெனரல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்றுக்குச் செல்ல அனுமதிக்குமாறு கோரி இராணுவத் தளபதிக்கும், நாடாளுமன்றச் செயலாளருக்கும் இன்று (16.04.2010) கடிதம் அனுப்பியுள்ளோம். (மேலும்)  17.04.10

_____________________________________________________________________________________________

Vadukoddai voters will be photographed

Our correspondent from Australia

Australians opposed to the so-called referendum held in New South Wales, Victoria and Canberra today and tomorrow (Saturday 17 and Sunday 18 ) have organized a covert operation to take pictures of those coming in to poll. They will be near the polling booths monitoring the movements of those who come to vote. They have selected vantage points from which to take videos and pictures. These monitors will carry out their operations from a distance as they do not want to have confrontations with the LTTE agents running the poll. A spokesperson against the Vadukoddai Resolution referendum said that they are following the example of the LTTE. One of the tactics of the LTTE agents all over the world was take videos and photos of Sinhalese and anti-LTTE demonstrations to be sent to Vanni. These pictures were monitored and relatives of those in Sri Lanka were threatened by the LTTE agents.  (Read) 17.04.10

_____________________________________________________________________________________________

பொறியில் சிக்கிக்கொண்ட சிறுத்தை

வன்னியில் பன்றிக்கு வைத்த பொறியில் சிறுத்தைப் புலி ஒன்று சிக்கி உயிரிழந்த தாக தெரிவிக்கப்படுகின்றது.பொறியில் சிக்கிய சிறுத்தைப் புலி தப்பிக்க முயன்றபோது கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது. இச் சிறுத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வளர்த்ததாக இருக்கலாம் என செய்தி ஊடகங்கள் தெரிவித்தன. வன்னியில் இடம் பெற்ற கடும் யுத்தத்தின் காரணமாக வன விலங் குகள் நடுக்காட்டுக்குள் சென்றதாகவும் அவை தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவித்தன. பொறியில் சிக்கிய சிறுத்தப் புலியை மீட்க வன விலங்கு அதிகாரிகள் வர தாமதமானதாலேயே அது உயிரிழந்ததாக கூறப்பட்டது.

_____________________________________________________________________________________________

தேசிய முக்கியத்துவ விடயங்களில் கட்சி அரசியல் வேண்டாம்

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கிடைக்கவில்லை. மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு நான்கு அல்லது ஐந்து ஆசனங்கள் குறைவாகக் கிடைக்கக்கூடிய நிலையே தென்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வீம்புக்காகக் கேட்கவில்லை. அத்தியாவசியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்வதற்காகவே மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை அளிக்கும்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கோரியது. கடந்த பாராளுமன்ற காலத்தில் இத் திருத்தங்களைச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள் ளப்பட்ட போதிலும் எதிரணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாததால் அவற்றைச் செய்ய முடியவில்லை. இரண்டு விடயங்களில் உடனடியாக அரசியலமைப்புத் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. ஒன்று விகிதாசா ரத் தேர்தல் முறை. இன்னொன்று இனப் பிரச்சினை க்கான தீர்வு. விகிதாசாரத் தேர்தல் முறை ஜனநாயகத்தைக் கேலிக் கூத்து ஆக்குகின்றது. விருப்பு வாக்குகள் தொடர்பாக வெளிவரும் சில தகவல்களைப் பார்க்கும்போது இக் கருத்து உறுதிப்படுகின்றது. விருப்பு வாக்குகளுக்காக ஒரே கட்சிக்குள்ளேயே மோதல்கள் இடம் பெற்றிருக் கின்றன. மேலும், வேட்பாளர்கள் பெருமளவு பணம் செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் ஏற்படுகின்றது. (மேலும்)  16.04.10

_____________________________________________________________________________________________

பயங்கரவாதத்தை முறியடிக்க இந்தியாவுக்கு ரூ.21 கோடி: அமெரிக்கா உதவி

வாஷிங்டன், ஏப்.15: பயங்கரவாதத்தை முறியடிக்க இந்தியாவுக்கு சுமார் ரூ.21.60 கோடியை அமெரிக்கா வழங்கவுள்ளது. மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக பல்வேறு உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்தியாவுக்குப் பொருள் உதவி, பயங்கரவாதிகளை ஒழிப்பதில் நவீன பயிற்சி உள்ளிட்ட உதவிகளை இந்தியாவுக்கு அமெரிக்கா அளித்து வருகிறது.  இதுகுறித்து பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்க நாடாளுமன்றக் குழு ஒருங்கிணைப்பாளர் டேனியல் பெஞ்சமின் புதன்கிழமை கூறியதாவது:பயங்கரவாதத்துக்கு எதிரான உதவி (ஏடிஏ) என்ற கொள்கையை அமெரிக்கா நீண்ட நாட்களாக கடைப்பிடித்து வருகிறது. உதவி கோரும் அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு தேவைப்படும்போதெல்லாம் அமெரிக்கா உதவி வருகிறது.  (மேலும்)  16.04.10

_____________________________________________________________________________________________

ஐரோப்பா முழுவதும் விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு; ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி

icelandலண்டன், ஏப். 15: ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து தீப் பிழம்புகளை கக்கி வருவதோடு, அதிலிருந்து பீச்சியடிக்கப்படும் சாம்பல் வான் மண்டலம் முழுவதும் பரவி உள்ளது. இதனால் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளிலிருந்து வந்து, செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு ஐரோப்பிய பகுதியில் விமானப் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து லண்டன் செல்லும் எல்லா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து புறப்படும் 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதுபோல் காட்விக் நகரிலிருந்து புறப்படும் 138 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மான்செஸ்டர், பர்மிங்ஹாம், அதுபோல் வட அயர்லாந்து பகுதியிலிந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. (மேலும்)  16.04.10

_____________________________________________________________________________________________

இந்தியத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த சிவாஜிலிங்கம் முடிவு

 இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்தியாவுக்குள் பிரவேசிப்பதற்கு தமக்கு அனுமதி மறுக்கப்பட்டமைக்கு எதிராகவே இவ் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டு சென்னை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், புதன்கிழமை இரவு பத்தரை மணியளவில் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை மாலை 3.05 மணியளவில் கிங் ஃபிஷர் எனப்படும் தனியாருக்குச் சொந்தமான விமானத்தில் கொழும்பிலிருந்து புறப்பட்ட தாம் 4.40 மணியளவில் சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தாகவும், சுமார் நான்கு மணித்தியாலங்கள் தமக்கு சென்னை விமான நிலையத்தில் தரித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "மாலை 5.00மணியளவில் சென்னை விமான நிலையத்தில் குடிவரவு,குடியகல்வு அதிகாரிகள் தம்மை இந்தியாவுக்குள் பிரவேசிக்க முடியாது எனக்கூறினர். அதற்குரிய காரணத்தை நான் வினவியபொழுது தமக்கு இடப்பட்ட உத்தரவு என்றும், தம்மால் எதுவும் கூற முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். (மேலும்)  15.04.10

_____________________________________________________________________________________________

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் கைதடி புனர்வாழ்வு முகாமிலிருந்து மாணவர்கள் உட்பட 31 பேர் விடுவிப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கைதடி புனர்வாழ்வு முகாமைச் சேர்ந்த 31 பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர். ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய யாழ்.மாவட்டப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் வழி காட்டலின் கீழ் நேற்று இந்த நிகழ்வு யாழ். முற்றவெளியில் பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க சம்பந்தப்பட்டவர்களை அவர்களின் பெற்றோர், உறவினரிடம் ஒப்படைத்தார். பல்கலைக்கழக மாணவர் இருவர், பாடசாலை மாணவர்கள் 12 பேர், அவயங்களை இழந்த 17 பேர் நேற்று விடுவிக்கப்பட்டவர்களில் அடங்கியுள்ளனர். 

_____________________________________________________________________________________________

கடும்போக்குத் தேசியவாதக் கட்சிகள் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளன

- அமெரிக்கப் பிரதி ராஜாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக்

robert_o_blake_நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் கடும் போக்குடைய தேசியவாதக் கட்சிகள் படுதோல்வியடைந்துள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. அதிகாரப் பகிர்வினை நிராகரித்த கட்சிகள் இந்தத் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. நீண்ட கால யுத்தத்திற்குப் பின்னர் நடை பெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளதாக அமெரிக்கப் பிரதி ராஜாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். தேர்தலில் கிடைக்கப் பெற்ற மக்கள் ஆணையைப் பயன்படுத்தி நாட்டை ஐக்கியப் படுத்த ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றி மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கட்சியை இந்தத் தேர்தலில் மக்கள் ஆதரித்துள்ளனர். அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடுதல் சாத்தியம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழர் பிரச்சினைக்கு மகிந்த ராஜபகஷ் அரசாங்கம் காத்திரமான தீர்வுத் திட்டம் ஒன்றை வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். (மேலும்)  15.04.10

_____________________________________________________________________________________________

இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட சிவாஜிலிங்கம் கொழும்பு வந்து சேர்ந்தார்

பி.எம்.முர்ஷிதீன்

இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பு வந்து சேர்ந்துள்ளார். தாம் இரவு பத்தரை மணியளவில் கொழும்பு விமானநிலையத்தை வந்தடைந்ததாக சிவாஜிலிங்கம் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார். செவ்வாய்கிழமை மாலை 3.05 மணியளவில் கிங் பிஸர் எனப்படும் தனியாருக்குச்சொந்தமான விமானத்தில் கொழும்பிலிருந்து புறப்பட்ட தாம் 4.40 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தாக சிவாஜிலிங்கம் எம்மிடம் கூறினார். சுமார் நான்கு மணித்தியாலங்கள் தமக்கு சென்னை விமான நிலையத்தில் தரித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். மாலை 5.மணியளவில் குடிவரவு,குடியகல்வு அதிகாரிகள் தம்மை இந்தியாவுக்குள் பிரவேசிக்க முடியாது எனக்கூறினர்.அதற்குரிய காரணத்தை தாம் வினவியபொழுது தமக்கு இடப்பட்ட உத்தரவு என்றும்,தம்மால் எதுவும் கூற முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். (மேலும்)  15.04.10

_____________________________________________________________________________________________

கிளிநொச்சியில் டீசல், ஆயுதங்கள் கைப்பற்றல்

கொழும்பு:இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் ராணுவத்தினர் நேற்று திடீர் சோதனை நடத்தி யதில் டீசல் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இலங்கையில், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியான புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் செயல்பட்டு வந்த ரகசிய இடங்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடங்களில், ராணுவத்தினர் சோதனை நடத்தினர். அப்போது, புதுக்குடியிருப்பில் 25 ஆயிரம் லிட்டர் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக் கப்பட் டது.அத்துடன்,வெடிகுண்டுகள்,கையெறிகுண்டு,மற்றும் பயங்கர ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப் பட்டன.அதுபோலவே, கிளிநொச்சி, ஆலங்குளம் மற்றும் விஸ்வமடு பகுதியில் ஏராளமான பதுங்குகுழிகளை கண்டு பிடித்து அழித்த ராணுவத்தினர், 48க்கும் மேற்பட்ட விசைப் படகுகளையும் கைப்பற்றினர்.

_____________________________________________________________________________________________

சீனாவில் கடும் நிலநடுக்கம்: 300 பேர் பலி

பெய்ஜிங், ஏப்.14: வடமேற்கு சீனாவின் குயிங்காய் மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 8000-த்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காலை 7.50 மணியளவில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது. யுஷு மாவட்டத்தைத் தாக்கிய இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 என பதிவானதாக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலநடுக்கத்துக்குப் பின்னர் அடுத்தடுத்து தொடர்ச்சியாக நிலஅதிர்வுகளும் ஏற்பட்டன. நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் மண்ணில் புதையுண்டதாக தகவல்கள் தெரிவித்தன. ஜைகு நகரத்தில் 85 சதவீதத்துக்கும் அதிகமான வீடுகள் மண்ணில் புதையுண்டன. நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நிலநடுக்கத்துக்குப் பின்னர் ஏற்பட்ட மூன்று நில அதிர்வுகள் திபெத் எல்லைப் பகுதியை வெகுவாக பாதித்ததாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. நிலநடுக்கத்தையடுத்து அருகிலுள்ள மாகாணங்களிலிருந்து மீட்புக் குழுக்கள் நிலநடுக்கம் பாதித்த குயிங்காய் மாகாணத்துக்கு விரைந்துள்ளன. கடந்த இரண்டு வருடங்களில் பெரிய அளவில் சீனாவைத் தாக்கும் இரண்டாவது நிலநடுக்கம் இது. 2008 ஆம் ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் 7.9 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 90,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

_____________________________________________________________________________________________

பொதுத்தேர்தல் முடிவிலிருந்து கற்றுக் கொண்டு, தமிழ் ஜனநாயகக் கட்சிகள், வட மாகாணசபையைக் கைப்பற்ற ஒன்றுபட வேண்டும்!

- வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)

tna_meeting_தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்ற போர்வையில், கடந்த 30வருடங்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் நடாத்திய எதேச்சாதிகார வெறியாட்டத்தை, தமிழ் பேசும் மக்கள் ஆதரிக்கவில்லை. கடந்த பொதுத்தேர்தலின் பின்னர், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 22பேர் பாராளுமன்றம் சென்ற போதிலும், அம்மக்களின் எந்தவொரு பிரச்சினை பற்றியும் வாய்திறக்காது,   புலிகளின் பினாமியாகச் செயல்பட்டு, புலிகள் செய்த அட்டூழியங்களுக்கெல்லாம் உடந்தையாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு, தமிழ் பேசும் மக்களில் பெரும்பான்மையானோர் இத்தேர்தலில் வாக்களிக்கவில்லை என்ற உண்மை தெளிவாகின்றது. இருப்பினும் அவர்கள் அதிக ஆசனங்களைப் பெற்றதற்குக் காரணம் விகிதாரத் தேர்தல் முறைமையும், தமிழ் ஜனநாயகக் கட்சிகளின் ஐக்கியமின்மையும் ஆகும். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டு, புலிகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, தீவிர தமிழ் தேசியவாதம் பேசிய அனைவரும் படுதோல்வியைத் தழுவியதின் மூலம், கடந்த 30 வருடங்களாக புலிகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் இருந்த அமோக ஆதரவு எனக் காட்டப்பட்ட பிம்பம் வெறும் போலியானது என்பதும், அத்தோற்றம் வெறுமனே ஆயுத முனையில் உருவாக்கப்பட்டது என்பதும் நிரூபணமாகியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது மட்டுமின்றி, பாராளுமன்ற ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய, ஏனைய முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மீதும், தமிழ் பேசும் மக்கள் இன்னமும் பூரண நம்பிக்கை வைக்கும் நிலையை, அக்கட்சிகள் இன்னமும் உருவாக்கவில்லை என்பதும், இத்தேர்தல் மூலம் புலனாகின்றது. .. (மேலும்)  14.04.10

_____________________________________________________________________________________________

சவால்களுடன் முகாம் வாசிகள்

-B.B.C

IDPcampஇலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மக்கள் மீள் குடியேற்றத்தின் மூலம் மறுவாழ்வு பெற்று வருகின்ற போதிலும் இன்னும் சவால்கள் எஞ்சியிருப்பதாகவே ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்திருக்கின்றது. மனிதாபிமான நிறுவனங்களுடன் இணைந்து அரசாங்கம் உண்மையாகவே இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வுக்காகக் கடுமையாக செயலாற்றி வருகின்ற போதிலும், மீளக்குடியமரும் மக்களுக்கான வீடுகள், தொழில்வாய்ப்புகள் என்பவற்றில் இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கின்றது என்றும் ஐநாவின் அகதிகளுக்கான ஆணையகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறியிருக்கின்றது. வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்திருந்த சுமார் 3 லட்சம் பேரில், ஒரு லட்சத்திற்கும் குறைவானவர்களே இப்போது எஞ்சியிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. ஏனையோர் மீள்குடியேற்றத்திற்காக அனுப்பப்பட்டு விட்டார்கள் என்றும் அரசாங்கம் கூறுகின்றது. யுத்தத்தினால் பல தடவைகள் இடம்பெயர நேர்ந்த மக்கள் இப்போது அரசாங்கத்தினாலும், ஐநாவின் அகதிகளுக்கான ஆணையகத்தினாலும் வழங்கப்படுகின்ற அடிப்படைத் தேவைகளுக்கான உதவிகளைத் தவிர வெறும் கையுடனேயே தமது கிராமங்களுக்குத் திரும்பிச் சென்றிருக்கின்றார்கள். (மேலும்)  14.04.10

_____________________________________________________________________________________________

போலந்து அதிபர் மனைவியை அடையாளம் காட்டிய மோதிரம்

மாஸ்கோ, ஏப்.13: ரஷியாவில் விமான விபத்தில் இறந்த போலந்து அதிபர் லெ கஸன்ஸ்கியின் மனைவி மரியாவின் உடல் திங்கள்கிழமை அடையாளம் காணப்பட்டது.  திருமணத்தின் போது மரியாவுக்கு கஸன்ஸ்கி அணிவித்த மோதிரம் விரலில் இருந்தது. அந்த மோதிரத்தில் கஸன்ஸ்கியின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இதை வைத்தே மரியாவின் உடல் அடையாளம் காணப்பட்டது என்று ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர்.  கஸன்ஸ்கியின் உடலைப்போலவே மரியாவின் உடலும் தனி விமானத்தில் போலந்து தலைநகர் வார்ஷாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.  போலந்து அதிபர் லெ கஸன்ஸ்கி, அவரது மனைவி மரியா உள்பட 97 பேருடன் விமானம் வெடித்துச் சிதறிய இடத்தில் இறந்தவர்களின் உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 7 பேரின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை போலந்து அதிபர் லெ கஸன்ஸ்கி, அவரது மனைவி உள்பட 45 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.  துண்டு துண்டாக சிதைந்தவர்களை டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு வருகிறது.  (மேலும்)  14.04.10

_____________________________________________________________________________________________

முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் இந்தியாவுக்குள் பிரவேசிக்கத்தடை

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்திய அரசாங்கத்தினால் நாடுகடத்தப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் வைத்து இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட சிவாஜிலிங்கம் இன்று நள்ளிரவு நாடுதிரும்பவுள்ளார். இத்தகவலை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீ காந்தா டெயிலிமிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார். தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறி புதிதாகக்கட்சியொன்றை ஆரம்பித்த சிவாஜிலிங்கம் கடந்த ஜனாதிபதிதேர்தலில் போட்டியிட்டார். கடந்த டிசம்பர் மாதத்திலும் இந்திய அரசாங்கம் சிவாஜிலிங்கத்தை திருப்பி அனுப்பியிருந்தது. இந்திய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை கடந்தகாலங்களில்  சிவாஜிலிங்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

_____________________________________________________________________________________________

பியசேன : இனவாதத்திற்கு அப்பாற்றட்ட தூய பௌத்த சிங்களவன்.

- புன்னியாமீன்

piyasenaநடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுலை தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சிங்கள வேட்பாளரான பி.எச்.பி. பியசேன 11,130 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். இம்முறை பாராளுமன்றத்துக்குத் தெரிவான தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுள் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், தமிழரசுக் கட்சி வரலாற்றில் முதற்தடவையாக சிங்களவர் ஒருவர் தெரிவாகியிருப்பதும் இதுவே முதற்தடவையாகும். தென்மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த தெவிநுவர எனுமிடத்தை பிறப்பிடமாகக் கொண்ட பொடிஅப்பு 1948ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் அக்கறைப் பற்று பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்து அக்கறைப்பற்று பிரதேசத்தின் சின்னம்மாள் எனும் யுவதியை திருமணம் செய்துகொண்டு இப்பிரதேசத்திலே வாழ்ந்து வந்ததுடன் 7 பிள்ளைகளுக்கு தந்தையானார். ஸ்ரீலங்கா பொலிஸில் சமயல் செய்பவராக தனது தொழிலை ஆரம்பித்த இவரது கடைசிப் பிள்ளைதான் இன்று அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ள பியசேன. அக்கறைப்பற்று சிங்கள வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற பியசேன் பின்பு அக்கறைப்பற்று ஆர்.கே. மகாவித்தியாலயத்தில் தமிழ்மொழியில் தனது தாயின் விருப்பத்திற்கிணங்க கல்வி பயின்றார். தமிழரின் கலாசாரத்திற்கிணங்க வாழ வேண்டும் என்றால் தமிழ்மொழியைக் கற்க வேண்டும் என்று பியசேனவின் பெற்றோர் விரும்பியதனாலேயே இவர் தமிழ்மொழியில் கல்வி பயின்றார். (மேலும்)  14.04.10

_____________________________________________________________________________________________

'அம்பாறையில் தொடரும் அச்ச நிலைமை'

- பி.பி. சி. செய்திகள்

Piyasenaஇலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து விட்டாலும் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பகுதிகளில் இன்னமும் அச்ச சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் உட்பட தமிழர்கள் வாழும் சில பகுதிகளில் அச்ச சூழல் நிலவுவதாக அம்மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் புதிதாக நாடாளுஅமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொடியப்பு பியசேன தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் ஆதரவாளர்களால் தான் உட்பட பலர் அங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் கூறுகிறார். நள்ளிரவு நேரங்களில் வீடுகள் தாக்கப்படுகின்றன எனவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். இதன் காரணமாக மக்கள் அச்சத்துடன் வாழ்வாதகவும் அவர் தெரிவிக்கிறார். தனக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் உதவி தேடி வரும் மக்களுக்கு தன்னால் உதவ முடியாத நிலையில் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டுள்ள பியசேன கூறுகிறார். மக்களால் தேர்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் தங்களது பாதுகாப்பு குறித்து அங்குள்ள மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். (மேலும்)  14.04.10

_____________________________________________________________________________________________

கே.பீயை மீள் விசாரிக்க அனுமதிக்குமாறு இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள்

விடுதலைப்புலிகளின் நிதி சேகரிப்பாளரான கே.பீ என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனை மீண்டும் விசாரிப்பதற்கு அனுமதிக்குமாறு   இந்தியா இலங்கையை கோரியுள்ளது. முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் இந்திய நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்திய புலனாய்வுத்துறையை பிரதிநிதித்துவ ப்படுத்தும் இந்நிறுவன அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. கே.பத்மநாதன் மற்றும் அவரதுடன் நெருக்கமானவர்கள் ஆகியோரது வங்கிக்கணக்குகள் குறித்து விவரங்கள் பெறவேண்டியுள்ளது என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

_____________________________________________________________________________________________

அரசியல் வாரிசுகளும் குடும்பக் கட்டுப்பாடும்: அழகிரி உணர்த்தும் காலங்கடந்த ஞானோதயம்

- மாயா

azhagiristalin-1அரசியலில் பெரிதாக வளர நினைக்கும் தலைவர்கள், இனி மேல் அரசாங்க அதிகாரத்தில் இருந்துகொண்டு மற்றவர்களுக்குப் போதிக்கும் குடும்பக் கட்டுப்பாட்டைத் தங்கள் குடும்பத்தில் முதலில் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. மூன்று மனைவிகள், நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் கொண்ட தி.மு.க. தலைவர், அரசியல் பாகப் பிரிவினைக்காகப் படும் பாட்டைப் பார்க்கும்போது ஒரே ஒரு மகன் அல்லது மகள் கொண்ட அரசியல் தலைவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பது புரிகிறது. நேருவின் குடும்பத்தைப் போல ஒரு வாரிசுக்குப் பிறகு ரிசர்வ் ஆட்டக்காரர்களாக இருக்கும் மற்றொரு வாரிசு களத்தில் இறங்கும் கட்டுப்பாடு இங்கு இல்லை. மகன், இன்னொரு மகன், மகள், பேரன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரைக் கருணாநிதி அரசியல் களத்தில் இறக்கியது, வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில் பெரிய தவறாகத் தெரிகிறது. தி.மு.க/வை தோற்றுவித்தபோது தலைவர்களின் தர வரிசையில் வெகு கீழே இருந்ததாகச் சொல்லப்படும் மு.க., அதன் தலைமைப் பொறுப்பிற்கு வந்து, 13 வருட அரசியல் வனவாசத்திலும் கட்டிக் காத்த இயக்கம் இன்று சொந்த மகன்களால் சிதறும் அச்சுறுத்தல் உருவாகி உள்ளது. உண்மையில் கருணாநிதி தனது குடும்பத்திலிருந்து அரசியலுக்குக் கொண்டு வர நினைத்தது ஒரே ஒரு வாரிசைத்தான். மு.க.ஸ்டாலின் மட்டுமே அவரது 54 வருட தீவிர அரசியல் வாழ்வின் கணிசமான காலகட்டங்களில் அவரது அரசியல் வாரிசாகத் திகழ்ந்தார். (மேலும்) 13.04.10

_____________________________________________________________________________________________

சகல தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட அழைக்கின்றார் சம்பந்தன்

தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம். வடக்குகிழக்கிலுள்ள சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரான இரா. சம்பந்தன் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தேர்தல் முடிவுகள் தொடர்பில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி வேண்டுகோளை விடுத்தார். மேலும் அவர் கூறுகையில், "வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளுடன் தேர்தலுக்கு முன்னர் பேச்சு நடத்தி எம்முடன் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தோம். ஆயினும் எமது முயற்சிகள் அனைத்துமே தோல்வி கண்டன. எமக்கு எதிராக பல்வேறு அரசியற்கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் களத்தில் குதித்திருந்தன. எனினும் எம்மால் வெற்றி பெற முடிந்தது. எனவே தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் நாங்கள் அவர்களுடன் சேர்ந்து செயற்படth தயங்க மாட்டோம் அந்த வகையில் அவர்களும் சிந்திக்க வேண்டும் என்று மிக வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன். (மேலும்) 13.04.10

_____________________________________________________________________________________________

புலித் தலைவர்களின் ஆவணங்களும் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணத்தில் மீசாலை பகுதியில் வெடிப் பொருட்களையூம் ஆயதங்களையூம் பாதுகாப்புப் படையினா; மீட்டுள்ளனர்.பாதுகாப்புப் படையினர் 4.5 கிலோ எடையூள்ள சி-4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள் 2 கிலோ எடையூள்ள கிளேமோர் குண்டு உட்பட உபகரணங்களை மீட்டெடுத்துள்ளனர். மீசாலை வடக்கு பிரதேசத்தில் இராணுவம்  நடத்திய தேடுதலின் போதே இவை கண்டு பிடிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். முல்லைத்தீவிலுள்ள அம்பலவான் பொக்கணையில் புலிகளின் வீடியோ நாடாக்கள்–04 மற்றும் புலித் தலைவர்கள் பலரது ஆவணங்களும் மீட்கப்பட்டன.

_____________________________________________________________________________________________

புலம்பெயர் புலிகளுக்குள் தொடரும் மோதல்கள்: கஸ்ரோ குழுவினர் மீது பாய்கிறது ஜீ.ரி.வி.

கஸ்றோ குழுவின் தொடரும் பொய் (வி)பிரச்சாரம் !

லண்டனை தலைமை மையமாக கொண்டு இயங்கும் GTV தொலைக்காட்சி மீது தொடர்ச்சியாக கஸ்றோ கும்பல் தாக்கி வருகின்றமை அனைவரும் அறிந்த உண்மை. தற்போது கஸ்றோ வழிவந்த முட்டாள்களின் இணைய பொய்பிரச்சார மடலான 'கறுப்பு" எனும் பதிவில் GTV குறித்து மீண்டும் ஒரு பொய் பிரச்சாரத்தை முடக்கிவிட்டுள்ளனர். லண்டனில் இடம்பெற்ற கருத்துக் கணிப்பு தொடர்பில் பிழையான செய்தியை வழங்கி விட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் கஸ்றோவின் வழிவந்த அறிவுக்கொளுந்துகளால் நடாத்தப்படுகின்ற ஊடகங்களில 99வீத தமிழ் மக்கள் தமிழீழத்துக்கு வாக்களித்துள்ளனர் என்றே செய்திகளை வெளியிட்டனர். உண்மையில் வாக்களித்தவர்களில் 99வீதமே ஒழிய வாக்கெடுப்பு நடந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் மக்களில் 99வீதமானவர்கள் அல்ல. (மேலும்) 13.04.10

_____________________________________________________________________________________________

இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையே நல்லெண்ணத்தை உருவாக்கல்: வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்த இராணுவம் ஏற்பாடு

jaffna-newyearஇடம்பெயர்ந்து வாழும் மற்றும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் நலனை கருத்திற் கொண்டு இராணுவம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் அந்தந்த பிரதேசங்களில் வாழும் பொதுமக்களினதும், அரச மற்றும் தனியார் வர்த்தக சமூகத்தினரது பூரண ஒத்துழைப்புடன் இராணுவம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பலவற்றை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு பல்வேறு சமய வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவின் வேண்டுகோளுக்கிணங்க மனிக்பாம் மற்றும் கதிர்காமர் நிவாரணக் கிராமங்களில் வாழும் இடம்பெயர்ந்த மக்களின் நலனை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. (மேலும்) 13.04.10

_____________________________________________________________________________________________

வாக்காளர்களுக்கு நன்றி – பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

எமது அன்புக்குரிய வாக்காளப் பெருமக்களே!

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சியின் சின்னமான மெழுகுதிரிக்கு வாக்களித்து எம்மை ஊக்கப்படுத்தியுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். அத்துடன் எமது கட்சிக்காக இத்தேர்தலில் கடுமையாக உழைத்த எமது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அனுதாபிகளுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தேர்தலில் நாம் பல கட்சிகளுடன் இணைந்து ஓரணியாக நின்று போட்டியிடவே விரும்பினோம். ஆனால் அதற்கான ஒத்துழைப்பைத் தருவதில் பல கட்சிகள் தயக்கம் காட்டின. ஒற்றுமைக்கான எமது முயற்சிகளையும் புறக்கணித்தன. இருப்பினும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் எமது கட்சியும் ஒற்றுமையாகச் செயல்படுவது என தீர்மானித்தோம். அதனடிப்படையில் எமது கட்சியின் பெயரில் நாம் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டோம். இதில் மூன்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரும் இணைந்து கொண்டனர். அதே நேரம் வன்னியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எமது தோழரொருவரையும் இணைத்துக்கொண்டு போட்டியிட்டது. மேலும் எமது கட்சி  திருகோணமலையிலும் போட்டியிட்டது.
(மேலும்) 13
.04.10

_____________________________________________________________________________________________

நாடாளுமன்ற தெரிவு காரணமாக கிழக்கு மாகாண சபைக்கு பல புதுமுகங்கள்

கிழக்கு மாகாண சபைக்கு புதிய உறுப்பினர்கள் பலர் தெரிவுசெய்யப்படவுள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பஷீர் சேகுதாவூத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, எம்.எஸ்.எம்.தெளபீக் மற்றும் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.இவர்களின் வெற்றிடத்திற்காக ஓட்டமாவடி புர்க்கான், கிண்ணியா லாபீர் மற்றும் புல்மோட்டை அன்வர் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர். எனினும், முன்னாள்  மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாவின் வெற்றிடத்திற்காக இதுவரை யாரும் தெரிவுசெய்யப்படவில்லை என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

_____________________________________________________________________________________________

வாக்களித்த அனைவருக்கும் ரிஷாட் பதியுதீன் நன்றி தெரிவிப்பு

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தமிழ்,முஸ்லிம் சிங்கள மக்கள் இனத்துவத்துவக்கு அப்பால் மனிதத்துவத்துக்கு முன்னுரிமையளித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த இரு பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்துள்ளமைக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளார் ரிஷாட் பதியுதீன். வன்னி மாவட்டத்தில் மூன்று சமூகத்தினதும் தேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும் என்றும் இதன் போது அவர் உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "வன்னி மாவட்ட மக்களது தேவைகள் எண்ணிலடங்கா. அவற்றை நிறைவு செய்து கொள்ள எதிர்க்கட்சி அரசியல் எவ்விதத்திலும் பொறுத்தமில்லை என்பதை தெளிவாக விளக்கப்படுத்தியிருந்தோம்.அவற்றை ஏற்றுக் கொண்ட,நியாயம் என்று கண்ட எமது வாக்காளர்கள்,வாக்களித்துள்ளனர். இவர்கள் அளித்த வாக்குகள் மூலம்,வன்னி மாவட்டத்தில் எமக்கு வாக்களிக்காதவர்களும் நன்மையடையப் போகின்றார்கள்.இது எம்மை வெற்றி பெறச் செய்த தமிழ்,முஸ்லிம்.சிங்கள வாக்காளர்களின் முன்மாதரியான செயற்பாடாகும். (மேலும்) 13.04.10

_____________________________________________________________________________________________

வடபகுதிகளில் யுத்த பாதுகாப்பு வலயங்கள் திறக்கப்பட்டமை நம்பிக்கையீனத்தை தளர்த்துவதாக அமைந்துள்ளது

பொதுமக்களிடையே ஏற்படும் தொடர்பாடல்கள் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் சிறுபான்மை தமிழ்மக்களுக்கும் இடையிலான மனப்புண்களை ஆற்றுவதற்கு வழிவகுக்கும் .யுத்தம் இவர்களை சேரவிடாது தடுத்துவைத்திருந்தது. பொதுமக்களிடையே தொடர்பாடல்கள் இருக்கவில்லை.

jaffna-2மே மாதம் 2009 இல் இந்தத் தீவில் தனிநாடு வேண்டிப் போராடிய விடுதலைப் போராளிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையில் நடைபெற்று முடிந்த போரில் ஆனையிறவு பிரதான பங்கை வகிக்கிறது. இந்த யாழ்ப்பாண குடாநாட்டை , நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் இக்குறுகிய நிலப்பகுதியே இரு நிலப்பரப்புகளுக்கும் இணைப்பை உண்டாக்கும் பகுதியாகும். யுத்த முரண்பாடுகள் இலங்கையின் ஏனைய பகுதிகளிலிருந்து வட பகுதியை முற்றுமுழுதாக யுத்தத்தின் கடைசிக்காலம் வரை பிரித்துவைத்திருந்தது யாழ்ப்பாணத்துடன் இணைப்பை உண்டாக்கும் ஏ9 பாதை பொதுமக்களுக்காகத் திறக்கப்பட 7 மாதங்கள் எடுத்தது. ஜனவரி மாதம் தொடக்கம் மக்கள் தொகை கட்டுப்படுத்த முடியாதளவிற்கு அதிகரித்திருந்தது. நாகதீப விகாரையின் பிரதமகுரு சாஸ்திரவெடி ஸ்ரீ விமலதேரோ கூறியதாவது ;வார இறுதியில் 200,000 பேர் வரை இங்கு வருவார்கள். நாகவிகாரை யாழ்ப்பாணத்திற்கப்பாலுள்ள தீவொன்றில் உள்ளது. இப்பகுதியை வந்தடைய 20 நிமிட வள்ளப் பயணம் செய்யவேண்டும்.அந்தக் குரு உணர்வதாவது; பொதுமக்களிடையே ஏற்படும் தொடர்பாடல்கள் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் சிறுபான்மை தமிழ்மக்களுக்கும் இடையிலான மனப்புண்களை ஆற்றுவதற்கு வழிவகுக்கும் .யுத்தம் இவர்களை சேரவிடாது தடுத்துவைத்திருந்தது. பொதுமக்களிடையே தொடர்பாடல்கள் இருக்கவில்லை. இதனை அவர் ஐ.பி.எஸ்.ஸிற்குக்கூறினார். (மேலும்) 12.04.10

_____________________________________________________________________________________________

ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழ்க் கூட்டமைப்புக்கு ஆளுங்கட்சி அழைப்பு "மீள்குடியேற்றம் பூர்த்தியடைந்தபின் வட மாகாணசபைத் தேர்தல்

தேர்தலில் வெற்றியீட்டியுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளதுடன், இதன்மூலம் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியுமென்றும் தெரிவித்துள்ளது. அத்துடன், கண்ணிவெடி அகற்றல் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியடைந்ததன் பின்னரே வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுமென்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. தேர்தல் வெற்றியை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன இங்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன பேசுகையில் எமக்கு வாக்களித்த மக்களுக்கும் இந்தத் தேர்தலை நடத்தி முடிக்க உதவிய தேர்தல்கள் ஆணையாளர் , பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸார், முப்படையினர், அரச அதிகாரிகள் என அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். (மேலும்) 12.04.10

_____________________________________________________________________________________________

'எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' புலம்பெயர்ந்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்

- எம். மகாதேவன்

இலங்கையில் அமைதி திரும்புவதையும், இனங்களுக்கிடையே சமாதான சகவாழ்வு மீளவும் வளருவதையும் விரும்பாத சக்திகளே வெளிநாடுகளில் மக்கள் பேரவை, மக்கள் புலிகள் கட்சி, நாடுகடந்த அரசு என்ற புதிய ‘சித்தாந்தத்தை’ ஆரம்பித்துள்ளனர். இதுவரை காலமும் ‘தமிbழ விடுதலைப் புலிகளது’ நடவடிக்கைகளைக் கூறி வெளிநாடுகளில் வயிறு வளர்த்தவர்களே இப்புதிய சித்தாந்தத்தையும் உருவாக்கியுள்ளார்கள்.

tamileelamஇலங்கை ஓர் அமைதி நிறைந்த நாடாக உருமாற்றம் பெறுவதை சில வெளிநாட்டுச் சக்திகள் மட்டுமல்ல உள்நாட்டு விஷமிகளும் விரும்பாதவர்களாகவே இருக்கின்றனர். எரிகின்ற வீட்டில் பிடுங்குவது லாபம் என இலங்கையில் கொளுந்துவிட்டெரிந்த உள்நாட்டுப் போரில் குளிர் காய்ந்தவர்கள் ஏராளம். எனவே இத்தகைய ‘பொல்லாத்தனமான’ சக்திகள் குறித்து புலம்பெயர்ந்தவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இலங்கையில் அமைதி திரும்புவதையும், இனங்களுக்கிடையே சமாதான சகவாழ்வு மீளவும் வளருவதையும் விரும்பாத சக்திகளே வெளிநாடுகளில் மக்கள் பேரவை, மக்கள் புலிகள் கட்சி, நாடுகடந்த அரசு என்ற புதிய ‘சித்தாந்தத்தை’ ஆரம்பித்துள்ளனர். இதுவரை காலமும் ‘தமிbழ விடுதலைப் புலிகளது’ நடவடிக்கைகளைக் கூறி வெளிநாடுகளில் வயிறு வளர்த்தவர்களே இப்புதிய சித்தாந்தத்தையும் உருவாக்கியுள்ளார்கள். இதன்மூலம் தமது நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதோடு, இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வெளிநாட்டுச் சக்திகளுக்கு அடிவருடிகளாக இருப்பதே இந்த விஷமக்காரக் கும்பலின் குறிக்கோளாகவும் இருக்கின்றது. எனவே இலங்கையில் ஏற்பட்டுள்ள சமாதான சக வாழ்வுக்கான காத்திரமான சூழலைக் குழப்பி மீளவும் அவல நிலைக்கு தமது மக்களைக் கொண்டு செல்ல, நன்கு சிந்திக்கத் தெரிந்த எந்தவொரு புலம்பெயர்ந்த தமிழ் மகனும் முன்வரமாட்டான் என்பது திண்ணம். (மேலும்) 12.04.10

_____________________________________________________________________________________________

இலங்கை பிரதமராக பசில் ராஜபட்சேவுக்கு வாய்ப்பு?

இலங்கை பிரதமராக பசில் ராஜபட்சே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபட்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், அதிபர் ராஜபட்சேவை சந்தித்துப் பேசிய கட்சியின் முக்கிய தலைவர்கள் புதிய பிரதமராக பசில் ராஜபட்சேவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மற்ற எம்.பி.,க்களை விட அதிக வாக்கு வித்தியாசங்களில் பசில் ராஜபட்சே வெற்றி பெற்றார். அவருக்கு பிரதமர் பதவி அல்லது வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

_____________________________________________________________________________________________

சுதந்திரத்திற்கு பின்பான தேர்தல்களில் மிகக்குறைந்த வாக்களிப்பு இம்முறையே - பிரித்தானிய த ரைம்ஸ் தகவல்

the timesஇலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலே குறைந்தளவிலான மக்கள் வாக்களித்த தேர்தல் என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த ரைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை அரசு நடந்து முடிந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு வரையிலும் ஆட்சி புரியும் அதிகாரத்தை அது பெற்றுள்ள போதும்,குறைந்தளவான மக்களே தேர்தலில் வாக்களித்துள்ளனர். லண்டன் சிற்றி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு 120 ஆசனங்களை பெற்றுள்ளது.  (மேலும்) 12.04.10

_____________________________________________________________________________________________

மஹிந்த சிந்தனை திட்டத்தை நிறைவேற்ற மக்களிடமிருந்து முழுமையான ஆணை: அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுமென ஐ. ம. சு. மு. தலைவர்கள் உறுதி

மஹிந்த சிந்தனை தொலைநோக்குத் திட்டத்தை நிறைவேற்றவும் அரசியல், சமூக ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்தவும் மக்கள் முழுமையான ஆணையை வழங்கியுள்ளனர். மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் நேற்றுத் தெரிவித்தனர். மஹிந்த சிந்தனையை முன்னெடுப்பதற்கு அரசியல் கட்சிகளும் ஏனைய தரப்பினரும் தமது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரினர். பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இடம்பெற்ற முதலாவது ஊடகவியலாளர் மாநாடு நேற்று (11) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன கூறியதாவது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெற வைத்த மக்கள் இம்முறை தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வாக்களித்து 2/3 பெரும்பான்மை பலத்தை தந்துள்ளனர். மஹிந்த சிந்தனை தொலைநோக்குத் திட்டத்தை முழுமையாக செயற்படுத்து வதற்காக மக்கள் தமது ஒத்துழைப்பை முழுமையாக வழங்கியுள்ளனர். மக்களின் அபிலாஷைகளை புதிய அரசாங்கம் நிறைவேற்றும். அதற்காக நாம் அர்ப்பணிப் புடன் செயற்படுவோம் என்றார்.  (மேலும்) 12.04.10

_____________________________________________________________________________________________

போலந்து அதிபர் பலியானதற்கு பைலட் காரணம் தகவல் தரும் கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு

poland-1போலந்து அதிபர் லெக் கெச்சின்சிகி விமான விபத்தில் பலியானதால், அந்நாட்டில் ஒரு வார காலம் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. விமான விபத்திற்கு பைலட் தவறே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், முக்கிய தகவல்களை உள்ளடக்கிய கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.இரண்டாம் உலகப் போரின் போது, ரஷ்யாவில் 22 ஆயிரம் போலந்து வீரர்கள் கொல்லப்பட்டனர். இவர்களின் 70வது நினைவு தினம், ரஷ்யாவின் கதின் நகரில் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக போலந்து அதிபர் லெக் கெச்சின்சிகி(60), தனது மனைவி மரியா மற்றும் ராணுவ தளபதி, மத்திய வங்கி தலைவர், போலந்து அரசின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோருடன் நேற்று முன்தினம் விமானத்தில் ரஷ்யா புறப்பட்டார். ரஷ்யாவின் ஸ்மோலென்ஸ்க் விமான நிலையத்தில், இந்த விமானம் தரை இறங்க முயற்சித்தது. அப்போது, விமானத்தின் பைலட்டை தொடர்பு கொண்ட விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள், 'ஸ்மோலென்ஸ்க் விமான நிலையத்தில் கடும் பனி மூட்டம் உள்ளது;  (மேலும்) 12.04.10

_____________________________________________________________________________________________

தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான் தலைமையில் புலிகள் சார்பான புதிய கட்சி தமிழ் நாட்டில் ஆரம்பம்

தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான் தலைமையில் விடுதலைப்  புலிகள் சார்பான புதிய கட்சியொன்று தமிழ் நாட்டில்  ஆரம்பிக்கப்படவுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட அந்த அமைப்பின் ஏனைய தலைவர்களின் ஓராண்டு நினைவை முன்னிட்டு தமிழ் நாட்டில் இந்தக் கட்சி  ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி இந்தக் கட்சி ஆரம்பிக்கப்படவிருப்பதாக இந்திய திரைப்பட இயக்குனர் சீமான் தெரிவித்தார். தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான் கடந்தகாலங்களில் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களிலும் கலந்துகொண்டிருந்தார்.

_____________________________________________________________________________________________

அரசாங்கத்துக்கு த.தே.கூ ஆதரவா? :''இனப்பிரச்சனைத் தீர்வில் சாதகமான அணுகுமுறையை த.தே.கூ பரிசீலிக்கும்''

சிறுபான்மையினர் பலமும் முஸ்லிம்களும்

- பி.பி.சி செய்தி

இலங்கையில் ஆளும் சுதந்திர முன்னணி அரசாங்கம், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் பெறும் நோக்கில் த.தே. கூட்டமைப்பின் ஆதரவை நாடுவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஊகங்களில் உண்மை இருக்கலாம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பில் இனப்பிரச்சினை தொடர்பாகப் பேசுவதற்கு ஜனாதிபதி முன்வருவாராக இருந்தால், நிச்சயம் அவருடன் பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தயாராக இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் கூறினார். இனப் பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வு வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்புகிறது என்பது அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், அவ்வகையான தீர்வை ஜனாதிபதி முன்னெடுத்தாலும் சரி, அல்லது வேறு வகையான தீர்வை முன்மொழிந்தாலும் சரி, அவ்விவகாரத்தை தமது கட்சி பரிசீலிக்கும் என்று கூறினார். (மேலும்) 12.04.10

_____________________________________________________________________________________________

நிவாரண கிராமங்களில் சீரான குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என பொய்யான தகவல் -வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ்

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியு ள்ள செட்டிகுளம் நிவாரண கிராமங்களில் குடிநீர் விநியோகம் சரியான முறையில் நடைபெறுகின்றது. அதில் எந்தவித குறைபாடுகளும் இல்லை என வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி. எம். எஸ். சாள்ஸ் தெரிவித்தார். தனது அதிகாரிகளை அனுப்பி நிவாரண கிராமங்களுடைய தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக ஆராய்ந்தபோது குடிநீருக்குத் தட்டுப்பாடு இல்லை என அறிக்கை வந்துள்ளது என கூறினார்.பொதுத் தேர்தலின் பின்னர் இங்கு குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என வெளியான தகவல்கள் முற்றுமுழுதாக பொய்யானது என குறிப்பிட்ட அரச அதிபர், செட்டிகுளம் நிவாரண கிராம ங்களில் இன்னமும் சுமார் 70 ஆயிரம் மக்கள் தங்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப் பட்டுள்ளன. அடுத்த சில வாரங்களிலும் மேலும் பெரும்பாலான மக்கள் தங்களுடைய பழைய இடங்களுக்கு திரும்புவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

_____________________________________________________________________________________________

தோல்வியடைந்தவர்களுக்கு தேசிய பட்டியலில் இடமில்லை- டலஸ் அலஹப்பெரும

தேர்தலில் போட்டியிட்டுத் தோல்விய டைந்த முன்னாள் அமைச்சர்களோ எம்.பி.களோ எக்காரணம் கொண்டும் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்பட மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் டலஸ் அலஹப்பெரும நேற்றுத் தெரிவித்தார். தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவாக அறிவித்துள்ளார். தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களே எம்.பிக்களாக நியமிக்கப்படுவர். ஐ. ம. சு. முன்னணிக்கு எத்தனை தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர் என்பது 21ம் திகதி தெரியவரும். அதன் பின்னர் ஐ. ம. சு. முன்னணி சார்பாக நியமிக்கப்படுபவர்களின் விபரம் ஆணையாளருக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

_____________________________________________________________________________________________

தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் நளை வர்த்தமானி மூலம் அறிவிப்பு

 நடைப்பெற்று முடிந்த பொது தேர்தலில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் நாளை வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதுவரை 20 மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் 180 பெயர்கள் இதில் அறிக்கப்பட உள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக தெரிவு செய்யப்பட்ட 117 உறுப்பினர்களினதும், ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் தெரிவு செய்யப்பட்ட 46 உறுப்பினர்களினதும், இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட 12 உறுப்பினர்களினதும், மற்றும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பில் சார்பில் தெரிவாகியுள்ள 05 உறுப்பினர்களினதும் பெயர்கள் நாளை உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. எதர்வரும் 20 ஆம் திகதி தேர்தல் நடைப்பபெற்று முடிந்த பின்னர் திருகோணமலை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய தேர்தல் தொகுதிகளின் உறுப்பினர்களின் பெயர்கள் உத்தியோக பூர்வமாக அறிவிக்ப்படும் எனவும், இதேவேளை தேசியபட்டியல் உறுப்பினர்களின் பெயர்களும் அறிவிக்கபடும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

_____________________________________________________________________________________________

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் கொடுத்துள்ள வெற்றி அல்லது ஆணை என்பது கடும்போக்கு அரசியல் செய்வதற்கான ஆணை அல்ல

 

அரசுக்கு ஆதரவான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும் தமிழ் கட்சிகள் ஒரு புறத்திலும், தேசியம், சுயநிர்ணயம் போன்ற கொள்கைகளை தொடர்ந்து கூறி வரும் கட்சிகள் இன்னொரு புறமும் இருக்க, இந்த இரண்டுக்கும் இடையே ‘மிதவாத போக்குடன்’ போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே இம்முறை வெற்றி கிடைத்துள்ளது என்று கூறுகிறார் பத்திரிகையாளர் டி பி எஸ் ஜெயராஜ்.

TNA-1வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ் கட்சிகளுக்கு இடையேயான ஒரு பலப்பரீட்சையாக இந்த தேர்தல் அமைந்துள்ளதாகவும் ஜெயராஜ் கூறுகிறார்.  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் கொடுத்துள்ள வெற்றி அல்லது ஆணை என்பது கடும்போக்கு அரசியல் செய்வதற்கான ஆணை அல்ல அந்தத் தேர்தல் முடிவடையும் வரை எல்லாக் கட்சிகளுமே தங்களுடைய தற்போதைய நிலைப்பாடுகளை கைவிடப் போவதில்லை என்றும் கூறும் அவர், அதற்கு பிறகே அரசியல் ரீதியான முன்னேற்றங்கள் ஏற்படும் என தான் கருதுவதாகவும் கூறுகிறார். நாடாளுமன்றத் தேர்தல் சூடு இன்னமும் ஆறாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சரி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் சரி தங்களது நிலைப்பாடிலிருந்து இறங்கி வருவது உடனடியாக சாத்தியமாகாது என்பதும் டி பி எஸ் ஜெயராஜின் வாதமாக இருக்கிறது.  (மேலும்) 11.04.10

_____________________________________________________________________________________________

நான் ஏற்றியது மாகாண சபைக் கொடியையே தவிர ஈழக் கொடியை அல்ல

varatharajar-1முன்னாள் வட - கிழக்கு மாகாண சபை முதல்வர் வரதராஜப்பெருமாள் மனந்திறக்கிறார்

அந்த வடகிழக்கு மாகாண சபை தொடர்ந்திருந்தால், ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசாவும் அடுத்து வந்த ஜனாதிபதிகளும் வடகிழக்கு மாகாண சபையை வலுவுறச் செய்திருந்தால் என்றைக்கோ புலிகள் இயக்கம் இல்லாமல் போயிருந்திருக்கும். 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் செத்திருக்க வேண்டிய அவசியமில்லை. 60ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 40ஆயிரம் சிங்கள இளைஞர்கள் போரில் செத்திருக்க வேண்டிய அவசியமில்லை. 1990ம் ஆண்டுக்குப் பின்னர் மட்டும் 4 இலட்சம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட சொத்துக்களை நாடு இழந்திருக்கிறது. இவையெல்லாம் என்னத்தை காட்டுகிறது என்றால் தேசிய பிரச்சினையைத் தீர்க்க ஒரு சந்தர்ப்பம் வந்தபோது பெருந்தொகையான அரசியல் தலைவர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதைத்தான். எனவே இனியும் அவ்வாறானதொரு தவறை தமிழ்த் தலைவர்களும் சரி சிங்களத் தலைவர்களும் சரி செய்துவிடக் கூடாது. நான் ஏற்றிய கொடி வடகிழக்கு மாகாண சபை கொடியே தவிர ஈழக்கொடி அல்ல. வட கிழக்கு மாகாண சபைக்காக அன்று நான் ஏற்றிய கொடி இன்றைக்கும் வடமாகாணத்தின் கொடியாக அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் போராட்ட வரலாற்றிலேயே ஒரு தமிழ்த் தலைவர் இலங்கையின் சிங்கக் கொடியை சுதந்திர தினத்தன்று ஏற்றினார் என்றால் அது நானாகத்தான் இருக்க முடியும். அதை எவரும் சிங்கள மக்கள் மத்தியில் சொல்லவில்லை. (மேலும்) 11.04.10

_____________________________________________________________________________________________

போலந்து நாட்டு விமானம் விழுந்து நொறுங்கியது; அந்நாட்டு அதிபர் - மனைவி பலி

polenமாஸ்கோ, ஏப்.10 (டிஎன்எஸ்) ரஷ்யாவில் விமானம் தீபிடித்து நொறுங்கி விழுந்தது. இதில் போலந்து நாட்டு அதிபர் லெக்ஸ் மற்றும் அவரது மனைவி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோ ர் கருகி இறந்து விட்டனர். இது குறித்து அந்நாட்டு அரசு வெளியுறவு துறை அமைச்சகம் விமானத்தில் அதிபர் சென்றார் என்று உறுதிப்படுத்தியுள்ளது. ரஷியாவில் உள்ள ஸ்மொலென்ஸ்க் நகரில் கத்யன் படுகொலை சம்பவத்தின் 70-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக வாசா நகரில் இருந்து போலந்து நாட்டு ஜனாதிபதி லெக்கசின்ஸ்கி விமானத்தில் சென்றார். அவரது விமானம் மோலென்ஸ்க் நகர விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது 1 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் பனிமூட்டம் காரணமாக நடுவானில் பழுதடைந்தது. இதனால் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் இருந்த பயணிகள் அனைவரும் கருகி உயிரிழந்து விட்டனர் என ரஷ்ய அரசு உறுதி செய்தது.

_____________________________________________________________________________________________

தமிழகத்தில் 'பவரை' பிடிக்க, 'பவர்கட்' போராட்டம்:ஜெ., வியூகம்

Jeyalalitha-1பென்னாகரத்தில் டிபாசிட்டை இழந்ததால், ஏற்பட்டுள்ள தொய்வை போக்கி, கட்சியை தூக்கி நிமிர்த்தும் வகையில், மின்வெட்டு போராட்டத்தில் ஜெ., நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். இதே பாணியில், ஜெ., பொதுமக்களிடம் நெருங்கி வந்தால், கட்சியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று அ.தி.மு.க., தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பென்னாகரம் இடைத்தேர்தலில், இரண்டாம் இடத்தை பெறுவதில் எவ்வித சிரமமும் இருக்காது என அலட்சியத்தில் இருந்த அ.தி.மு.க., அங்கு டிபாசிட்டை இழந்தது. தேர்தல் முடிவில், அ.தி.மு.க.,விற்கு டிபாசிட் பறிபோன விவகாரமே, பெரிய அளவில் பேசப்பட்டதால், அக்கட்சியின், 'இமேஜ்' வீழ்ச்சியடைந்தது. இந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல், அக்கட்சியின் தொண்டர்கள் தவித்தனர். அ.தி.மு.க., டிபாசிட் இழந்ததற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், கட்சித்தலைமைக்கும், தொண்டர்களுக்குமிடையே அதிகரித்திருக்கும் இடைவெளியும், தொய்வடைந்த தேர்தல் பணியுமே முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. தோல்வி சோகத்தின் உச்சத்திற்கே சென்ற ஈரோடு தங்கவேலு மற்றும் வேலூர் குமார் என்ற இரு தொண்டர்கள் தீக்குளித்தனர். ஈரோட்டில்  தீவிர சிகிச்சையில் இருந்த தங்கவேலுவை, ஜெ., நேரடியாக சென்று ஆறுதல் கூறினார். சிகிச்சை பலனளிக்காமல், அவர் இறந்தாலும், ஜெயலலலிதாவின் இந்த பயணம் ஈரோடு தங்கவேலுவுக்கு  மட்டுமல்லாமல், அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் ஆறுதலாக அமைந்தது. (மேலும்)  11.04.10

_____________________________________________________________________________________________

பிரிட்டனில் பணியEmployment-application-formாற்றலாம்; குடியேற முடியாது

britishலண்டன்:'கம்பெனி மூலம் இடமாற்றம் பெற்று, பணியாளர்கள் பிரிட்டனில் பணியாற்றலாம்; ஆனால், அங்கேயே குடியேற முடியாது' என, பிரிட்டன் அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய விசா விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில், இந்தியர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் உயர்ந்துள்ளது. 34 ஆயிரம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். மற்ற நாடுகளை விட, இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. படித்து, வேலையையும் தேடிக் கொண்டு, அங்கேயே வீடு வாங்கி, 'செட்டில்' ஆகுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தடுக்க, வெளிநாட்டினருக்கான விசா வழங்குவதில் பிரிட்டன் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய விசா விதிமுறைகளின் படி, ஒருவர் வேலை செய்யும் கம்பெனி மூலம் இடமாற்றம் பெற்று, பிரிட்டனில் பணியாற்றலாம்; ஆனால், அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட முடியாது. இவர்கள், மூன்று ஆண்டுகளுக்கு பதிலாக, இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான விசா மட்டுமே வழங்கப்படும். இந்த புதிய விசா விதிமுறையால், வெளிநாட்டினர், பிரிட்டனில் புதிதாக வேலை தேடி செல்ல முடியாத நிலை ஏற்படும். (மேலும்)  11.04.10

_____________________________________________________________________________________________

ஜே.வி.பி தலைவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

somavansaஎனது ஆழ்ந்த அனுதாபங்கள். இப்படித் தோல்வி கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் மக்கள் எதிர்பார்த்தார்கள். உங்கள் பாராளுமன்ற அரசியல் ஒரு உறுப்பினருடன் ஆரம்பித்தது. பின்னர் 10 ஆகவும் அதன் பின் 16 ஆகவும் வளர்ந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு 39 பேரைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டு வந்தீர்கள். இப்போது இப்படி ஒரு நிலை வந்திருப்பதையிட்டு நிதானமாகச் சிந்திப்பீர்களேயானால் உங்கள் தவறு உங்களுக்குப் புரியும். மேதின ஊர்வலங்களில் கார்ள் மாக்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றோரின் உருவப் படங்களை உயரத் தூக்கிச் செல்வீர்கள். உங்கள் ஊர்வலங்களில் சிவப்புக் கொடி படபடத்துப் பறக்கும். இவற்றையெல்லாம் பார்த்து, இலங்கையில் புதிய இடதுசாரி அலையொன்று வீசப் போகின்றது என்று நான் ஒரு காலத்தில் நினைத்ததுண்டு. கொஞ்சக் காலம் சென்ற பின்னர்தான் மாக்சிஸ மூலவர்களின் படங்களும் சிவப்புக் கொடிகளும் வெறும் ‘புலுடா’ என்பது விளங்கியது.சிறுபான்மையின மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை மாக்சியத்தைப் போல வேறெந்த அரசியல் கோட்பாடும் உத்தரவாதப் படுத்தவில்லை. ஆனால் நீங்கள் மாக்சிஸ்டுகள் என்று கூறிக் கொண்டு அந்த உரிமைகளை மதிக்க மறுக்கின்aர்கள். அதிகாரப் பகிர்வை எதிர்க்கின்aர்கள். பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதைக் கூட எதிர்க்கின்aர்கள். (மேலும்)  11.04.10

_____________________________________________________________________________________________

கொழும்பு மாவட்டத்தில் விமல், ரணிலுக்கு அதிகூடிய வாக்குகள்:போகொல்லாகம, மிலிந்த, இராதாகிருஷ்ணன் தோல்வி; பெளஸி, லொக்குகே தெரிவு

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 07 உறுப்பினர்களும் தெரிவாகியுள்ளனர். அதேநேரம், ஜனநாயக தேசிய கூட்டணியின் சார்பில் இரண்டு உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பட்டியலில் போட்டியிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மிகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். அவர் 2,80,672 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்திற்குப் புதிய முகமாக துமிந்த சில்வா 146,336 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமைச்சர்கள் ஏ. எச். எம். பெளஸி, காமினி லொக்குகே ஆகியோர் தோல்வியடைந்து விட்டதாக நேற்றைய தினம் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாயிருந்தன. எனினும், அமைச்சர் பெளஸி 51,641 விருப்பு வாக்குகளைப் பெற்று எட்டாவது இடத்துக்குத் தெரிவாகியுள்ளார். அமைச்சர் காமினி லொக்குகே 49,750 விருப்பு வாக்குகளைப் பெற்று பத்தாவது இடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  (மேலும்)  11.04.10

_____________________________________________________________________________________________

மகிந்த சிந்தனைக்கு மக்கள் மீண்டும் வழங்கிய அங்கீகாரம்; ஜனாதிபதி

rajapaksha-4பாராளுமன்றத் தேர்தலில் மக்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கியிருப்பதாக நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இலங்கை சிறுவர் பராயத்தினருக்காக சிறப்பானதொரு தேசத்தைக் கட்டியெழுப்புவதே இந்த வெற்றியின் மூலம் பாராளுமன்றத்துக்குத் தெரிவான உறுப்பினர்களின் முன்னுரிமைக்குரிய பொறுப்பாக இருக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். நடைபெற்றுமுடிந்த பாராளுமன்றத் தேர்தலின் பெறுபேறுகள் தொடர்பாக ஜனாதிபதி ராஜபக்ஷ விடுத்திருக்கும் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; "தாய் நாட்டுக்கு எதிரான எந்தவொரு சக்திக்கும் முகம் கொடுக்கக் கூடிய பலமிக்க பாராளுமன்றம் ஒன்றயே இலங்கை வாழ் மக்களான உங்களிடம் நான் கேட்டிருந்தேன். அதற்கமைய 3 தசாப்தகால விகிதாசார தேர்தல் முறைமை வரலாற்றில் சிறப்புமிக்க பெறுபேற்றை இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வழங்கியுள்ளீர்கள். கிடைத்திருக்கும் இந்த விசேட வெற்றியை "மகிந்த சிந்தனை வேலைத் திட்டத்துக்கு மக்கள் மீண்டும் வழங்கியிருக்கும் அங்கீகாரமாகவே நான் கருதுகிறேன். (மேலும்)  10.04.10

_____________________________________________________________________________________________

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி இலங்கையர் இனிமேல் விண்ணப்பிக்க முடியாது

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்களின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியிருப்பதாக அவுஸ்திரேலியா நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறது. இந்த இரு நாடுகளிலும் மாற்றமடைந்து வரும் சூழ்நிலைகளின் அடிப்படையில் இந்தத்தீர்மானத்தை எடுத்திருப்பதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் தெரிவித்திருக்கிறார்.இந்த நடவடிக்கையானது ஆட்களை கடத்திவருவோருக்கான வலுவான செய்தியாகும் என்று அவர் மேலும் கூறியுள்ளார். படகுகளில் வருவோர் எண்ணிக்கை அண்மைக்காலங்களில் அதிகரித்திருப்பதால் அவுஸ்திரேலிய அரசுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தமே இந்த நடவடிக்கைக்கு காரணமெனக் கருதப்படுகிறது.இலங்கை,ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தோரே அவுஸ்திரேலியாவில் அண்மைக்காலமாக அதிகளவுக்கு புகலிடம் கோருகின்றனர். (மேலும்)  10.04.10

_____________________________________________________________________________________________

தமிழ்க் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி வேறு கட்சிகளில் போட்டியிட்ட சகலரும் படுதோல்வி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று வேறு கட்சிகளில் போட்டியிட்ட எம்.பி.க்கள் அனைவரும் இம்முறை தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளனர். கடந்த பொதுத் தேர்தலில் (2004) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 22 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. ஆனால், இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகிய எம்.பி.க்கள் யாழ்.மாவட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டனர். எனினும், மிகக் குறைந்தளவு வாக்குகளையே பெற்று படுதோல்வியடைந்தனர். இதேபோல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.க்களான எம். கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் இடதுசாரி முன்னணியின் குடைச் சின்னத்தில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்ட போதும் மிகக் குறைந்தளவு வாக்குகளையே பெற்று படுதோல்வியடைந்தனர். (மேலும்)  10.04.10

_____________________________________________________________________________________________

A decisive mandate in Sri Lanka

THE HINDU

The results of post-conflict Sri Lanka's first parliamentary elections are on expected lines. President Mahinda Rajapaksa's ruling United Progressive Freedom Alliance, led by the Sri Lanka Freedom Party, has scored a decisive victory on the strength of a vote share that may exceed 60 per cent. After President Rajapaksa's big victory in the January 26 presidential election, there was never really any doubt about the outcome of Thursday's general election. Perhaps this was one reason for the low turnout of voters. This is way and ahead the best performance by a political party or coalition in a general election since 1977. Indeed, a two-thirds majority in the 225-seat House, always a difficult target in a system of proportional representation, seems to be within the UPFA's grasp, assuming there will be a repeat of the defections that followed the 2004 elections. The United National Party, which has won only one parliamentary election in two decades, can take some comfort from the fact that its vote-base has not eroded significantly in this period. But the kingmaker of elections past, the Janatha Vimukthi Peramuna, has suffered a rout, its opportunistic decision to back former Sri Lanka army commander, Sarath Fonseka, who is under detention and facing court martial proceedings, doing nothing to shore up its fortunes. The third force, the Democratic National Alliance, has failed to take off. (Read)  10.04.10

_____________________________________________________________________________________________

தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு பாரிய பின்னடைவு

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை தமிழரசுக் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்தனர். அதேநேரம் இத் தேர்தலில் அகில இலங்கை தமிழரசுக்கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் மூலம் 22பாராளுமன்ற ஆசனங்களை தமிழரசுக் கட்சி தனதாக்கிக் கொண்டிருந்தது. இருப்பினும் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் 15ஆசனங்களுக்கும் குறைவான எம்.பி.க்களையே தமிழரசுக் கட்சியால் வெற்றிபெற முடிந்திருக்கின்றது. தமிழரசுக்கட்சி இத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் மூன்று ஆசனங்களையும், வன்னி மாவட்டத்தில் இரு ஆசனங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு ஆசனங்களையும் இழந்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

_____________________________________________________________________________________________

ஐ.ம.சு.முன்னணிக்கு அறுதிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி

rajapaksha-2ஏழாவது பாராளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடந்த பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளின் படி) அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களிலும் வியாழனன்று தேர்தல் நடத்தப்பட்டது. ஆயினும் நேற்று இரவு வரை 20மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகளே வெளியிடப்பட்டன. திருகோணமலை, நாவலப்பிட்டி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. வன்முறைகளும், மோசடிகளும் இடம்பெற்றதாக ஊர்ஜிதமானதையடுத்து தேர்தல்கள் ஆணையாளர் அந்தத் தொகுதிகளிலுள்ள 35 வாக்களிப்பு நிலையங்களில் மீள்வாக்குப் பதிவு செய்வதற்கு தீர்மானித்துள்ளார். இதற்கான திகதி இன்று வெளியிடப்படவுள்ளது. இதனாலேயே மேற்படி இரு தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆயினும், அறிவிக்கப்பட்ட 20மாவட்டங்களிலும் 117க்கும் அதிகமான ஆசனங்களை ஐ.ம.சு.மு பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது. (மேலும்)  10.04.10

_____________________________________________________________________________________________

கண்டி, திருமலை மாவட்டங்களில் 35 வாக்களிப்பு நிலையங்களுக்கு மீள்வாக்குப் பதிவு

கண்டி மற்றும் திருமலை மாவட்டங்களிலுள்ள 35வாக்களிப்பு நிலை யங்களுக்கு மீண்டும் வாக்கு பதிவு நடாத்தப்படவிருக்கின்றது. இந்த 35வாக்களிப்பு நிலையங்க ளுக்கும் எதிர்வரும் 16ம் திகதிக்கும் 22ம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் தேர்தல் நடாத்தப்படும் என்று தேர்தல் செயலக அதிகாரி யொருவர் நேற்றுத் தெரிவித்தார். இந்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்கு மோசடி இடம்பெற்றது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவ்வாக்களிப்பு நிலையங்களின் வாக்களிப்பை தேர்தல் ஆணையாளர் ரத்து செய்ததுடன் அவற்றுக்கு மீண்டும் வாக்குப்பதிவு நடாத்துவதற்கும் அவர் முடிவு செய்துள்ளார். கண்டி மாவட்டத்திலுள்ள நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியிலுள்ள 34 வாக்களிப்பு நிலையங்களுக்கும், திருமலை மாவட்டத்திலுள்ள கும்புறுப்பிட்டி வாக்களிப்பு நிலையத் திற்கும் மீண்டும் வாக்குப் பதிவு நடாத்தப்படவிருக்கின்றது. இந்த 35வாக்களிப்பு நிலையங்களுக்கும் மீண்டும் வாக்குப் பதிவு நடாத்தப்பட்டு அவற்றின் முடிவுகள் வெளியிடப்படும் வரையும் இவ்விரு மாவட்டங்களுக்குமான இறுதி முடிவு அறிவிக்கப்படமாட்டாது என்றும் தேர்தல் செயலக அதிகாரி கூறியதுடன் நாடளாவிய ரீதியிலான முடிவும் வெளியிடப்படாது என்றும் குறிப்பிட்டார்.

_____________________________________________________________________________________________

தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு

http://www.srilankanelections.com/results/results-main.shtml

வடக்கு கிழக்குக்கான தேர்தல் முடிவுகள்

முழு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்

_____________________________________________________________________________________________

 யாழ் மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடம்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவனந்தா அவர்கள் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகப்படியான 28585 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடம். சில்வெஸ்த்திரி அலென்ரின் உதயன் - 13128 முருகேசு சந்திரகுமார் - 8105

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

மாவை சேனாதிராஜா - 20501 சுரேஸ் பிரேமச்சந்திரன் - 16425 விநாயகமூர்த்தி - 15311 சரவணபவன் - 14961 சிறிதரன் - 10051

ஐக்கிய தேசியக் கட்சி
விஜயகலா - 7160

_____________________________________________________________________________________________

தேனீயில்   07.04.2010 அன்று வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து........

யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒரே அணியாக இணைந்து போட்டியிட்டிருக்க வேண்டிய ஈ.பி.டி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழர் விடுதலைக்கூட்டணி, சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்பன பல்வேறு அணிகளாகப் பிரிந்து போட்டியிடுவதின் மூலம், அவாகள் பிற்போக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள சந்தர்ப்பத்தை, தேர்தலின் பின்னர் அவர்களால் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். அதன் பின்னராவது அவர்கள் தமது தவறையும், நிலைமையையும் உணர்ந்து, வரப்போகும் மாகாணசபைத் தேர்தலையாவது ஒன்றிணைந்து எதிர்நோக்க தயாராவது அவசியம். ஏனெனில் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், பாராளுமன்றத் தேர்தலை விட மாகாணசபைத் தேர்தல் மிக மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதபடி அரசின் உதவியுடன் செயல்பட வேண்டிய மாகாணசபை, அரச விரோத, பிற்போக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கைகளில் போனால், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிராசையாகிவிடும் சூழலே ஏற்படும். எனவே அவ்வாறு போகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

_____________________________________________________________________________________________

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தெரிவுசெய்யப்பட்டவர்கள

நடைபெற்று முடிந்த இலங்கைப் பாராளுமன்ற  தேர்தலில் யாழ் மாவட்டத்தில் இருந்து தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மாவை சேனாதிராசா, சுரேஷ் பிறேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஈ.சரவணபவன், சிவஞானம் சிறீதரன் ஆகியோயோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி ஆணையாளர் கே.கணேஷ் தெரிவித்துள்ளார். வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்த்தி ஆனந்தன், வினோனோதராதலிங்கம் ஆகியோரும் அம்பாறையில் சந்திரநேரு சந்திரகாந்தனும், மட்டக்களப்பில் பொன்செல்வராசா, யோகேஸ்வரன், அரியநேந்திரன் ஆகியோரும், திருகோணமலை மாவட்டத்தில் ஆர் சம்பந்தனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்._

Home / Page-1 / Page-2 / Page-3 / Page-4 / Page-5 /Page-6 / Page-7

wanni

பொதுத்தேர்தல் முடிவிலிருந்து கற்றுக் கொண்டு, தமிழ் ஜனநாயகக் கட்சிகள், வட மாகாணசபையைக் கைப்பற்ற ஒன்றுபட வேண்டும்!

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகī