a_Pen

முதற்பக்கம்

ஆனந்தசங்கரி

ஈ.பி.ஆர்.எல்.எப்

ஈ.பி.டி.பி

ஈரஅனல்

நெருப்பு

புளொட்

தூ

டெலோ நியூஸ் 

இலங்கைநெற் 

மீன்மகள்

 சூத்திரம்   

மகாவலி 

உண்மைகள்  

கவிமலர்

கிருத்தியம்

அலை    

 பூந்தளிர்    

 எங்கள்தேசம்

சலசலப்பு   

நோயல்நடேசன் 

வளர்பிறை  

எங்கள்பூமி 

தமிழ்யுகே   

புயல்  

புளொட்யுகே 

யாழமுஸ்லீம் 

புண்ணியாமீன் 

யவ்னா ருடே  

எஸ்.ஆர்.லெம்பட்

பஷீர்     

தமிழ்யூஎன்  

கவசங்களைதல் 

தூங்காத கண்கள்

யாழ்மண்

தமிழ்குரல்

துருவம்

தினசரி

இலங்கை முஸ்லீம்

ஆயுள்

ARRR

Asientribune

The lka academic

Tamil Week 

The Hindu

Daily News

Sunday Times

Daily Mirror

The island

The Sunday Leader

ColomboPage

Sunday Times

CNN

BBC

Newsnow

 

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.10                                                        05.02.2012

விடுபட்டுப் போன பொன்னான சந்தர்ப்பம்

- எம்.எஸ்.எம்.ஐயூப்

Balsingam premadasaநீண்ட காலமாக சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்காத காரணத்தினால் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, தமிழ் பேசும் அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட மூன்று அரசியல் கட்சிகளை சில தினங்களுக்கு முன் இரத்துச் செய்துள்ளார். இவற்றில் இரண்டு தமிழ் ஆயுதக் குழுக்களால் உருவாக்கப்பட்டவையாகும். தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினால் 1989ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விடுதலை புலிகள் மக்கள் முன்னணி மற்றும் பல தமிழ் இயக்கங்களின் மூத்த உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய ஈழம் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ஆகியனவே அவையாகும். மற்றையது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம் ஆஷ்ரப், அவரது இறுதிக் காலத்தில் உருவாக்கிய தேசிய ஐக்கிய முன்னணியே.
 புலிகள் அமைப்பின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கை முறைகளை யார் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும்; அவ் வியக்கம் தான் தமிழ் மக்களிடம் இருந்த மிகப் பலமான பேரம் பேசும் ஆயுதம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இப்போது தமிழ் மக்கள் அந்த ஆயுதத்தை இழந்து விட்டார்கள். இந்த நிலையில் கூடுதல் அதிகாரத்துடன் அதிகார பரவலாக்கலை வென்றெடுக்க கிடைத்து விடுபட்ட சந்தர்ப்பங்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. இப்போது மாகாண சபைகளுக்கு இருப்பதை விட கூடுதல் அதிகாரங்களுடன் விடுதலை புலிகள் மக்கள் முன்னணி வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்தில் பதவிக்கு வர 1989-90 ஆண்டுகளில் கிடைத்த சந்தர்ப்பமும் அவற்றில் ஒன்றாகும். விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி 1989 ஆம் ஆண்டு பிரேமதாச அரசாங்கத்திற்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு இருந்த காலத்திலேயே உருவாக்கப்பட்டது. தாம் உன்மையிலேயே ஜனநாயக அரசியலுக்கு வரப் போவதாக ஜனாதிபதி பிரேமதாசவை நம்ப வைப்பதற்காகவே புலிகள் அப்போது அக்கட்சியை உருவாக்கினார்கள் என்பது பின்னர் புலனாகியது.  ஆனால், அப்போது இருந்த சாதகமான நிலைமையை புலிகள் பாவித்து இருந்தால் பிற்காலத்தில் ஏற்பட்ட அழிவுகளை தவிர்க்கும் வகையில் அப்போதே பதவிக்கு வந்திருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது. (மேலும்) 06.02.12

_______________________________________________________________________________________________________________________________________

இலங்கைக்கு தப்ப முயன்ற 3 பேர் ராமேசுவரத்தில் கைது: பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

இலங்கைக்கு கள்ளத்தனமாக தப்பிச் செல்ல முயன்ற போது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் 3 பேர் ராமேசுவரத்தில் கைது செய்யப்பட்டனர். ராமேசுவரம் அந்தோணியார் கோவில் கடற்கரையில் `கிï' பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரையில் ஒரு படகில் பதுங்கியிருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சலாம் (54) சுசீந்த நிஷாந்தன் (43) முகமது காதர்(49) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அப்துல் சலாம், சுசீந்த நிஷாந்தன் ஆகியோர் கடந்த 2001-ம் ஆண்டு இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் 30 கிலோ ஹெராயின் கடத்தி வந்த போது கைது செய்யப்பட்டு சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்ற தகவல் கிடைத்தது. புழல் சிறையில் இருந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் தான் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் முகமது காதர் என்பவர் கடந்த 2003-ம் ஆண்டு இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து தங்கியிருந்து விமானம் மூலமாக பொருட்களை அனுப்பும் வேலைகளை செய்து வந்தார் எனபதும் தெரிய வந்தது. இந்தநிலையில் இவர்கள் 3 பேரும் மீண்டும் இலங்கைக்கு செல்ல முடிவு செய்து நாகர்கோவிலை சேர்ந்த படகு ஏஜெண்டு சித்திக் என்பவர் மூலமாக இலங்கைக்கு கள்ளத்தனமாக செல்ல முடிவு செய்தனர். இதற்காக படகு ஏஜெண்டு சித்திக்கிடம் தலா ரூ.40 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கியுள்ளனர். (மேலும்) 06.02.12

_______________________________________________________________________________________________________________________________________

'குடும்ப உறவுகளைப் பிரிந்து வாழும் எமது விடுதலைக்கு வழி செய்யுங்கள்'

 இறுதி யுத்தத்தில் களத்தில் நின்று யுத்தம் செய்தவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு விட்டனர். யுத்தத்தில் ஆணை பிறப்பித்தோர் சுகபோகம் அனுபவிக்கின்றனர். ஆனால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நாங்கள் பல வருடங்களாக குடும்ப உறவுகளைப் பிரிந்து சிறையில் வாடுகின்றோம். எமது விடுதலைக்கு வழி செய்யுங்கள். மகசின் சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்.சுமந்திரனிடம் நேற்று இவ்வாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தனர். கூட்டமைப்பு எம்.பி.என்.சுமந்திரன் நேற்று மாலை களுத்துறை சிறைச்சாலைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிட்டு அவர்களது குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். கைதிகளது வேண்டுகோள் குறித்து சுமந்திரன் எம்.பி கூறியதாவது, தமிழ் அரசியல் கைதிகள் குறித்து தாம் ஏற்கனவே அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். மூன்று வகையான கைதிகள் சிறையிலுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு எதுவித விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் முதற் பிரிவினர், நீதிமன்றங்களில் விசாரணை செய்யப்படும் வழக்குகளுடன் சம்பந்தப்பட்டோர் இரண்டாம் பிரிவினர் விசாரணை முடிவுற்று தண்டனையை அனுபவிப்பவர்கள் மூன்றாம் பிரிவினர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யும் படியும் தண்டனை அனுபவிப்பவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் படியும் அரசுடனான பேச்சுவார்த்தையின் போது நாம் வலியுறுத்தினோம். இக் கைதிகள் தொடர்பாக கூட்டமைப்பு மீண்டும் அரசுடன் பேசும். இதேவேளை களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகளை மீண்டும் மகசின் சிறைச்சாலைக்கு மாற்றும்படி சிறைச்சாலை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் சொன்னார்.

_______________________________________________________________________________________________________________________________________

சரத் பொன்சேகா விடுதலை எதிர்பார்ப்பு பொய்த்தது!

சுதந்திர தினமான நேற்று பொது மன்னிப்பின் கீழ் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் விடுவிக்கப்படவில்லை. நீதிக்கும் நேர்மைக்குமான அமைப்பு உட்பட பல அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த காலங்களில் நடத்தத் திட்டமிட்டிருந்த பொன்சேகாவை விடுவிக்கும் போராட்டங்கள் சுதந்திர தினத்தில் அவர் விடுவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் இடை நிறுத்தப்பட்டன. சரத் பொன்சேகாவை விடுவிக்கும் போராட்டங்களை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக இந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இலங்கையின் 64ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து 1450 கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனரமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி போகம்பரை சிறைச்சாலையிலிருந்து 177 பேரும், வெலிக்டைச் சிறைச்சாலையிலிருந்து 145 பேரும், மஹர சிறைச்சாலையிலிருந்து 115 பேரும், மட்டக்களப்பிலிருந்து 21 பேருமாக 1450 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, மதுபான விற்பனை, வீதி ஒழுங்குகளை மீறியமை போன்ற சிறு குற்றங்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டு தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்புச் சிறைச்சாலை அதிகாரி இ.மோகனராஜா தெரிவித்தார். பொத்துவில் முதல் வாழைச்சேனை வரையிலான பிரதேசங்களைச் சேர்ந்த கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். (தினசரி)

_______________________________________________________________________________________________________________________________________

பதின்மூன்றாம் திருத்தத்திலும் ஓட்டை நமது கட்சி எதிர்த்து வாக்களிக்கும் - மனோ

Mano ganesan  பதின்மூன்றாம் திருத்தத்திற்கு அப்பால் அதிகாரபரவலாக்கல் என இந்தியாவிற்கும், உலகிற்கும் கூறிவரும் அரசாங்கம், இன்று இருக்கின்ற பதின்மூன்றாம் திருத்தத்திலேயே ஓட்டை போட முயற்சி செய்கிறது. மாகாண சபைகளில் 'நாடு நகர திட்டமிடல் திருத்த சட்டம்' என்ற ஒரு மசோதாவை கொண்டு வந்து அவசரமாக சட்டமாக்குவதன் மூலம் இதை செய்ய அரசு முயல்கிறது. மாகாண சபைகளுக்கு இன்று சட்டப்படி பரவலாக்கப்பட்டுள்ள காணி அதிகார சட்டத்தில் ஓட்டை போட்டு அதிகாரங்களை களவாடுவதற்கு எத்தனிக்கும் இந்த முயற்சி திட்டவட்டமாக அதிகார பரவலாக்கலுக்கு எதிரானது. இதை ஜனநாயக மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளாது. விவாதத்திற்கு வரும் இந்த மசோதாவை எமது மேல்மாகாணசபை மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகிற்கு பதின்மூன்றிற்கு அப்பாலான அதிகாரபரவலாக்கலுக்கு நாம் தயார் என இந்த அரசாங்கம் கூறுகிறது. தற்போது இருக்கின்ற அதிகாரத்தையும் பறித்து எடுக்கிறது. அரசியலமைப்பின் பதின்மூன்றாம் திருத்தத்தை அகற்றினால் இன்றைய சர்வதேச சூழலில் அரசாங்கம் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டி வரலாம். இதனாலேயே பதின்மூன்றாம் திருத்தத்தை அகற்றாமலேயே, அதில் ஓட்டை போட்டு அதில் உள்ள அதிகாரங்களை பறிக்கின்றார்கள். கடைசியில் அரசியலமைப்பில் பதின்மூன்றாம் திருத்தம் என்ற பெயரில் வெறும் எலும்புக்கூடுதான் மிஞ்ச போகிறது. இது அதிகார பரவலாக்கலுக்கு எதிரான ரகசிய சதி வேலையாகும்.  (மேலும்) 06.02.12

_______________________________________________________________________________________________________________________________________

மிச்சம் பகுதியில் வொட்கா போத்திலைப் பயன்படுத்தி முரட்டுத்தனமாக வன்செயல் புரிந்த குண்டர்களுக்கு சிறைத் தண்டனை

      -  ஜெமி ஹென்டர்சன்

ArikaranSukumar

சித்திரவதை புரிந்து கிலியூட்டும் ஒரு ஸ்ரீலங்காவாசியும் அவரது செயலுக்கு உடந்தையாய் இருந்தவரும், ஒரு கடைக்காரரின் மனைவியை அவளது சிறுவயதுப் பிள்ளையின் முன்பாக  கொடூரமாகத் தாக்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஆறுமாதங்களுக்கு மேலாகவே ஸ்ரீலங்காவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த இரண்டு மனிதர்களும், லண்டன் மிச்சம், தேவாலய வீதியில் உள்ள தேவாலய மினி சந்தை உரிமையாளரிடமிருந்து தங்கள் இஷ்டம்போல பொருட்களை எடுத்து வந்துள்ளார்கள், மற்றும் அதைப்பற்றி காவல் துறையினரிடம் முறைப்பாடு செய்தால்  அவர்களை கொன்று விடுவதாக மிரட்டியும் வந்துள்ளார்கள். தம்மைத்தாமே குண்டர்கள் என விபரித்துக் கொள்ளும் இந்த நபர்கள்  மேற்கொண்ட இந்தத் தொடர் திருட்டுகள் 2011 ஜனவரி 15, சனிக்கிழமையன்று கடை உரிமையாளருக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எதிரான வன்முறைத் தாக்குதலாக உருவெடுத்தது. உரிமையாளரின் 46 வயதான அவரது மனைவி தனது பத்து வயது மகனுடன் கடையில் இருந்த போது இந்தக் குண்டர்களில் ஒருவன் 26 வயதான கடை உதவியாளர் ஒருவரது தலையில் வொட்கா போத்தல் ஒன்றினால் தாக்கி விட்டு உரிமையாளரின் மனைவியை அடித்து நிலத்தில் தள்ளிவிட்டு உதைத்திருக்கிறான். 31 வயதான அரிகரன் செந்திவேல் மற்றும் 37வயதான சுகுமார் சாந்தரட்னம் ஆகிய இருவருக்கும் கடந்த ஜனவரி 30 ந்திகதி திங்கட்கிழமை கிங்ஸ்டன் முடிக்குரிய நீதிமன்றத்தினால், துன்பம் உண்டாக்கும் உடற்காயங்களை விளைவித்தமை, உண்மையான உடற் தீங்கினை ஏற்படுத்தியமை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டமை போன்ற குற்றங்களுக்காக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. (மேலும்) 06.02.12

_______________________________________________________________________________________________________________________________________

பிரான்சிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இலங்கையின் 64 வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

பிரான்சிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இலங்கையின் 64 வது சுதந்திர தினக் கொண்டாட்டம் 04.02.2012 சனிக்கிழமையன்று நடைபெற்றது சர்வமத தலைவர்களின் சமய அனுஷ்டானங்களுடன் விழா காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி மும்மொழிகளிலும் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதமர் தி,மு.ஜயரட்ணவின் சுதந்திரதின வாழ்த்துச் செய்தியும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் வாழ்த்துச் செய்தியும் மும்மொழிகளிலும் வாசிக்கப்பட்டது. நாட்டின் இறையாண்மையை பேணிப் பாதுகாப்பதற்காக போரில் உயிர்நீத்த படைவீரர்களுக்கும் மக்களுக்குமாக இரு நிமிட மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது. பிரான்சுக்கான இலங்கைத் தூதுவர் திரு.தயான் ஜெயதிலக்காவினால் தேசியக்கொடியேற்றி  வைக்கப்பட்டதைத் தொடர்ந்து  ; அவர் தனது சுதந்திர தின உரையை ஆற்றினார். அவர் தனது உரையில்  இன்று நாம் 64 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் நமது நாடு கடந்த அரைவாசிக்காலத்திற்கும் மேலாக பயங்கரவாதத்தின் பிடிக்குள் இருந்தமையினால்  நாட்டின் அபிவிருத்தி பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது. தற்போது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நிலையில் அனைத்து இனங்களும் ஒரே இனமாக ஒன்றிணைந்து அபிவிருத்திப் பாதையில் நாட்டை இட்டுச் செல்வற்கு இந்த 64 வது சதந்திர தினத்தில்  திடசங்கற்பம் பூணவேண்டும். அதேவேளை இந்தப் பயங்கரவாதம் உருவாவதற்கு காரணமாக இருந்த நடவடிக்கைள் கண்டுணரப்பட்டு அவற்றுக்கு உரிய தீர்வுகளையும் காண்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். இந்த உரையும்  தமிழில் மொழி பெயர்த்து வழங்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் பாரம்பரிய இலங்கை சிற்றுண்டிகளுடனான விருந்துபசாரம் நடைபெற்று  விழா இனிதே நிறைவு பெற்றது. இந் நிகழ்வில்  பிரான்சுக்கான இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரிகள், பணியாளர்கள், மற்றும் பிரான்ஸ் வாழ் இலங்கையர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

_______________________________________________________________________________________________________________________________________

குடும்ப ஆதிக்கத்தால் நன்மையும் தீமையும்!

வாரிசுகளே அடுத்தடுத்து தலைமைப் பதவிக்கு வருவதால் இந்தியாவின் பெரும்பாலான தனியார் தொழில் நிறுவனங்கள் இந்திய வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு அளித்து வந்தாலும் குடும்பச் சண்டைகளும் பங்காளிக் காய்ச்சல்களும் அதே தொழில்துறையின் உற்பத்தி குறையவும் தேசத்தின் பொருளாதாரம் சீர்கெடவும் காரணமாகிவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவின் தொழில் நிறுவனங்களில் அப்பாவுக்குப் பிறகு மகன்கள் அல்லது மகள்கள் என்று தலைமை நிர்வாகியாகி நிறுவனங்களை மேலாண்மை செய்கின்றனர். தகப்பனாருடன் கூடவே இருந்து தொழிலைக் கற்றுக்கொள்வதுடன் உரிய கல்லூரிகளிலும் மேலாண்மை நிறுவனங்களிலும் படித்தும் பயிற்சி பெற்றும் நிர்வாகம் செய்கின்றனர். படிக்காதவர்கள் கூட தகப்பனாருக்கு உதவியவர்களை வைத்துக் கொண்டு நிர்வாகத்தைத் தொடர்கின்றனர். ஆனால் அறிவியல்பூர்வமான அணுகுமுறைகளை ஒரு சிலர் பின்பற்றுவதில்லை. அத்துடன் அண்ணன் தம்பிகளிடையேயோ குடும்ப உறுப்பினர்களிடையோ மூளும் சொத்துச் சண்டையால் நிறுவனங்களும் பாதிப்படைகின்றன. தொழில் நிறுவன நிர்வாகிகள் பதவிக்கு முறையான கல்வி அறிவும் பயிற்சியும் பெற்றவர்களை தனிப் பொறுப்போடு தேர்வு செய்து ஒப்படைக்கும் முறை இந்தியாவில் இல்லாததால் தொழில்நிறுவனங்கள் உரிய  காலத்தில் தங்களுடைய உற்பத்தியைப் பெருக்கவும் வெவ்வேறு துறைகளில் முதலீட்டைப் பெருக்கவும் நவீனமடையவும் தவறுகின்றன. இதனால் சந்தையில் ஏற்படும் போட்டிகளைச் சமாளிக்க முடியாமல் நொடித்துவிடுகின்றன. (மேலும்) 06.02.12

_______________________________________________________________________________________________________________________________________

பிரிட்டனில் இலங்கைப் பெண்ணை காணவில்லை: கைதான சந்தேகநபர் விடுதலை

Kokulavathani-Mayuranபிரிட்டனில், இலங்கைப் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 31 வயதான கோகுலவதனி மயூரன் எனும் பெண் கொனேஹில் பகுதியிலிருந்து  ஜனவரி 31 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்திவரும் பொலிஸார், கொலைச் சந்தேகத்தின் பேரில் குளோசெஸ்டர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை நேற்று கைது செய்திருந்தனர். எனினும் பின்னர் அவர் குற்றசாட்டு எதுவும் சுமத்தப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார்.' விசாரணைகளின் பின்னர் இது காணாமல் போன ஒருவர் தொடர்பான விடயம் என நாம் நம்பினோம். ஆதனால் கைது செய்யப்பட்ட குளோசெஸ்டஷயர் நபர் குற்றச்சாட்டின்றி விடுவிக்கப்பட்டார்'ன எ புலனாய்வு அத்தியடச்கர் சிமோன் எட்கின்ஸன் கூறியுள்ளர். 'கோகுலவதனியின் நலன் குறித்து நாம் தீவிரமாக கரிசனை கொண்டுள்ளோம். அவரை காணும் அல்லது அவரின் இருப்பிடம் தெரிந்த எவரையும் எம்முடன் தொடர்புகொள்ளுமாறு கோருகிறோம்' எனவும் அவர் தெரிவித்தார்.5 அடி 4 அங்குல உயரமான கோகுலவதனி திடகாத்திரமான உடலமைப்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில் காணாமல் போன இலங்கைப் பெண் ஒருவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் எதுவித குற்றச்சாட்டுக்களும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்த 31 வயதுடைய கோகுலவதனி மயூரன் என்ற பெண், கொனி ஹில் பகுதியில் வைத்து காணாமல் போனதாக கடந்த மாதம் 31ம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை அடுத்து குளோஸ்டர் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இந்த சம்பவமானது காணாமல் போனவர் குறித்த விசாரணை என பொலிஸ் அதிகாரியான சிமோன் அட்கின்சன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். காணாமல் போன பெண் குறித்து தாம் கவனம் செலுத்தி வருவதாகவும் கோகுலவதனி மயூரனை யாரும் கண்டால் உடன் அறிவிக்கும்படியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

_______________________________________________________________________________________________________________________________________

Sri Lanka 64 th Independence Day celebration in Toronto 04-02-2012

Sri Lanka’s Independence Day celebration was held in Don Bosco, Auditorium in Toronto, with the participation of huge Sri Lankan crowd, including over 300 Tamils and over 100 Muslims living in Toronto area. Toronto Tamil resident Ingenious Sellaiya Manoranjan was the master of the ceremony. Buddhist and Tamil Hindu and catholic priests blessed the crowd. In his speech Tamil Hindu priest request all Sri Lankan Tamils living in Toronto to take part in rebuilding Sri Lanka. Addressing the crowd Ajex Tamil Resident Mr. Chandrakumaran using Canadian Parliamentarian Joe Daniel quote and said none of the money collected by LTTE front organizations in Toronto reaches Sri Lanka.  Former Conservative Candidate Ms. Marlene Gallyot  and Canadian Parliamentarian Joe Daniel  present at the event. The ceremony was filled with Sri Lankan cultural dances including Baratha Natyam preformed by a Sri Lankan Tamil dancing group in Toronto. Participants were also treated with tasty Sinhala and Tamil foods at the end of the event. The ceremony was organized by Sri Lankan Consulate General’s office in Toronto.

_______________________________________________________________________________________________________________________________________

யாழ்.குடாநாட்டுக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் 100 பேர் வருகை

இலங்கையின் 64 ஆவது சுதந்திரதினத்துக்காக அனுராதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்த வெளிநாட்டு  இராஜதந்திரிகளில் சுமார் 100 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர் என வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இலங்கோவன் தெரிவித்தார். யாழ்.நூலகத்திற்கு வருகை தந்த வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினால் விசேட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்போது, வடமாகாணத்தின் அபிவிருத்திக் கட்டமைப்புக்கள் தொடர்பாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறிக்கும் இக்குழுவினருக்குமிடையிலான கலந்துரையாடலொன்று யாழ்.பொதுநூலகத்தில்  இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய வடாமகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி, "வடக்கின் வசந்தம்' அபிவிருத்தியில் வட மாகாணம் துரிதகதியில் அபிவிருத்தியடைந்து வருகிறது. கடந்த 30 வருடகாலத்திற்குப் பின்பு நீங்கள் யாழ்.மண்ணில் கால்வைக்கக் கூடிய வசதியை ஜனாதிபதி   ஏற்படுத்தியுள்ளார். வடமாகாணம் என்றுமில்லாதவாறு அபிவிருத்தியை நோக்கிய பாதையில் சென்றுகொண்டு இருகிறது. மக்களின் அமைதியான வாழ்வுக்கு அபிவிருத்தி முக்கிய பங்கு வகிக்கிறது" என குறிப்பிட்டார். இதேவேளை, மேற்படி குழுவினர் யாழ்.மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட இடங்களை நேரடியாகச் சென்று பார்வையிடவுள்ளனர். இச்சந்திப்பின்போது,  யாழ்.மாநாகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா,  வடமாகாண ஆளுநரின்  செயலாளர் எஸ்.இளங்கோ,  வடாமாகாண ஆளுநர் அலுவலக செயலாளர் திருமதி விஜயலச்சுமி ரமேஸ்  ஆகியோர் கலந்துகொண்டனர்

_______________________________________________________________________________________________________________________________________

பண மோசடி குற்றச்சாட்டில் இரு இலங்கையர் இந்தோனேஷியாவில் கைது

இந்தோனேஷியாவில் போலியான தன்னியக்கப் பணப்பரிமாற்று அட்டையைப் பயன்படுத்தி 100 மில்லியன் ரூப்பியா பண மோசடி செய்த  இரு இலங்கையர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த கே.பி. என்னும் முதற்பெயரை உடைய ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதாகவும் அப்போது இவர் 64 மில்லியன் ரூப்பியா பணத்தையும் 25 போலி தன்னியக்கப் பணப்பரிமாற்று அட்டைகளையும் உத்தியோகபூர்வ புகலிடம் கோருவோருக்கான அடையாள அட்டையையும் வைத்திருந்தாகவும் பொலிஸார் கூறினர். இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த எம்.கே. என்னும் முதற்பெயரை உடைய ஒருவர் மறுநாள் கைதுசெய்யப்பட்டதாகவும் இவர் இந்தோனேஷியாவின் போலி அடையாள அட்டையை வைத்திருந்ததாகவும் பொலிஸார் கூறினர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

_______________________________________________________________________________________________________________________________________

துரோகி - பூமாறங்

- யதீந்திரா

ஆல்பிரட்துரையப்பா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சபாரத்தினம், மாத்தையா, பத்மநாபா, நீலன்திருச்செல்வம், கருணா- இன்னும் நூற்றுக்கணக்கானோருடன் நீண்டு கிடக்கும் பிரபாகரனின் துரோகி பட்டியலில் இப்போது பல புலிகள்.  இறுதியில் அது பிரபாகரனையாவது விடடுவைக்குமா என்பது சந்தேகமே!

Mathaiahஈழ அரசியலைப்  பொறுத்தவரை இன்று யாரெல்லாம் துரோகியல்ல என்பதைக் கண்டுபிடிப்பது தான் கடினமானது. அந்தளவிற்கு துரோகிகள் மலிந்துகிடக்கும் தேசமிது. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நேற்றுவரை போராளிகளாக இருந்த பலர் துரோகிகளாக்கப் பட்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் துரோகிகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. யுத்தத்தின் தீர்மானகரமான முடிவின்போது. அரச படைகளிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகள் கூட நாளை துரோகப்பட்டியலில் இடம்பெறலாம். ஏலவே சிலர் சேர்க்கப்பட்டும் விட்டனர். இறுதியில் ‘துரோகி’ அது எவரையும் விட்டுவைக்காது போகலாம்.ஈழ அரசியலை பொறுத்தவரை எந்தப் பக்கம் திரும்பினாலும்- அவன் துராகி- அவங்கட ஆள்- எங்கட ஆள் இல்ல- இவ்வாறான கோஷசங்களைத்தாம் கேட்கமுடிகிறது. உண்மையில் துரோக வாதத்தின் ஊற்று எது? இதை தீர்மானிக்கும் அரசியல் எத்தகையது? இந்தக் கட்டுரை அரசியல்  அர்த்தத்தில துரோகி அல்லது துரோகம் என்னும் சொற்களை கட்டுடைக்க விளைகிறது. இதை விளங்கிக் கொள்வதற்குச் சற்று பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கிறது. ஈழ அரசியல், தமிழீழ அரசியலாக உருமாறுவதற்கு முற்பட்ட காலத்து மேடை அரசியல் கோஷங்களை இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டிருக்கிறது. ஈழத்து அரசியல் சூழலில் முதல்முதலாக துரோகி அல்லது துரோகம் என்ற சொற்களை அரசியலுக்கு அறிமுகம் செய்தவர்கள் மிதவாத தலைவர்களே தவிர ஆயத இயக்கங்களல்ல. இலங்கையில் முதலாவது தமிழ் அரசியல் கட்சியான ஜி;.ஜி.பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கூட்டத்தில்தான் எங்களது தீர்மானத்துக்கு எதிராக கைகைளை உயர்த்துவோர், கைகளை இழக்க வேண்டிவரும் என்ற எச்சரிக்கை குரல் ஒலித்தது  அகில இலங்கை தமிழ் காங்கிரசின் ஊடாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த, தந்தை செல்வா என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகம், காங்கிரசிலிருந்து வெளியேறித் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். இப்போது காங்கிரஸ் தரப்பினரை பொறுத்தவரையில் செல்வநாயகம் ஒரு துரோகி. இப்படித்தான் துரோகவாத அரசியல் கருக்கொண்டது.  (மேலும்) 05.02.12

_______________________________________________________________________________________________________________________________________

விடுதலைப்புலிகளுக்கு பொருள்கள் கடத்திய வழக்கில் ஆஜராகாததால் விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் சென்னையில் கைது

விடுதலைப்புலிகளுக்கு பொருள்கள் கடத்திய வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த 2007-ம் ஆண்டு சென்னை விமான நிலையம் அருகே, விடுதலைப் புலிகளுக்கு படகு உள்ளிட்ட தளவாடச்சாமான்கள் கடத்தியதாக 2 பேரை கிï பிரிவு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களுக்கு வன்னியரசு என்பவர் தளவாடச்சாமான்கள் அளித்ததாக கூறினார்கள். அதனைத் தொடர்ந்து, வன்னியரசுவை போலீசார் கைது செய்தனர். பின்னர், ஜாமீனில் அவர் வெளியே வந்தார். 2009-ம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வன்னியரசு விசாரணைக்கு அழைக்கப்பட்டார். ஆனால், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.அதன் பின்னர், 2010-ம் ஆண்டு ஜாமீனில் வெளிவர முடியாதபடி பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த நேரத்தில் வன்னியரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து வந்தார். போலீசார் அவரை கைது செய்யவில்லை. இந்த நிலையில், கடந்த மாதம் வன்னியரசு மீது புதிதாக பிரிவாரண்டு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று அமைந்தகரையில் வைத்து, கிï பிரிவு போலீசார் வன்னியரசுவை கைது செய்தனர். பின்னர், சைதாப்பேட்டை 23-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வன்னியரசு ஆஜர்படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

_______________________________________________________________________________________________________________________________________

ஏற்கனவே உள்ள பிரச்சினைகளை முதலில் ஏற்றுக்கொள்ளாமல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது

                                           -  கலாநிதி.ஜெகான் பெரேரா

blackjanuaryஅரசாங்கத்தின் கடப்பாடு பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியதே, தவிர அதற்கான தீர்வினை தள்ளிப்போடுவதோ, அல்லது அப்படியான பிரச்சனைகள் எதுவுமே இல்லை என்று ஒரேயடியாக மறுப்பதோ இல்லை. காலம் செல்லும்போது காயங்கள் தானே ஆறக்கூடிய வகையானதோ அல்லது பொருத்தமற்றதாக மாறக்கூடியனவாகவோ உள்ள சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. எப்படியாயினும் காணாமற் போனவர்கள் மற்றும் கொடூரமான சூழ்நிலையில் கொல்லப்பட்டவர்கள் போன்ற மக்களின் நினைவுகளோடு ஒன்றித்துவிட்ட பிரச்சினைகள் அநேகமாக ஒருபோதும் தானாகவே மறைந்து போய்விடும் என்பது நிச்சயமாக நடக்காது. பிரெஞ்சு அரசாங்கம், 1915ல் துருக்கியில் வைத்து ஒரு மில்லியன் ஆர்மேனியர்களை ஒரு இன ஓழிப்பு நடவடிக்கையாக குரூரமாக கொலை செய்ததை மறுப்பது சட்டவிரோத செயல் என சமீபத்தில் முடிவு செய்திருக்கும் செயல் ஸ்ரீலங்காவில் உள்ள நமக்கு பொருத்தமான ஒரு நினைவூட்டலாகும். தற்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கம  கடந்த காலத்தின் ஆற்ற முடியாத காயங்களாக தேங்கி நிற்கும் நினைவுகளை இப்போதிருந்து ஒரு நூறு வருடங்களுக்கு; மேலும் வளர்ச்சியடையவோ, அல்லது பல்கிப் பெருகி மற்றும் பாழடைய விட்டுவிடக் கூடாது.”

(ஸ்ரீலங்கா ஊடகவியலாளர்கள் மற்றும் உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோர், ஊடக அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் 25 ஜனவரி, 2012, புதன்கிழமை அரங்கேற்றிய கறுப்பு ஜனவரி என்கிற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிலையங்கள் என்பனவற்றை  கொலை செய்தது மற்றும் தாக்குதல் நடத்தியது போன்றவற்றுக்கு பொறுப்பானவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்;கள். அவர்களிடமிருந்த விளம்பர பதாகைகளில் காணாமற் போய் இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது, சுகிர்தராஜன் கொல்லப்பட்டு நான்கு வருடங்களாகி விட்டன, கொலையாளிகள் சுதந்திரமாகத் திரிகின்றனர். என்று எழுதப் பட்டிருந்தன)  (மேலும்) 05.02.12

_______________________________________________________________________________________________________________________________________

சீனாவின் வளர்ச்சி – ஒரு பார்வை (6)

நகர்ப்புற வளர்ச்சி

 – ஜி.விஸ்வநாதன்

shanghai-chinaசீனாவின் பொருளாதாரத் தலைநகரமாக இன்று விளங்கும் ஷாங்காய், பல ஆண்டுகளுக்கு முன்பே ஓரளவு வளர்ச்சி கண்டுதான் இருந்தது. அப்போது கிழக்கு நாடுகளின் பாரீஸ் என்று அது அழைக்கப்பட்டது. ஆனால், 1930-ல் ஜப்பானியர்கள் அந்தப் பகுதியைக் கைப்பற்றியபோது, அங்கு வியாபாரம் மந்தமாயிற்று. பிறகு மா சே துங் காலத்தில், மாநகரங்கள் உருவாவதை அன்றைய அரசு ஊக்குவிக்காததால், ஷாங்காய் மேலும் சரிவைச் சந்தித்தது. ஆனால், சீனாவில் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஷாங்காய் வேகமான வளர்ச்சியைக் கண்டது. தற்போது சீனாவுக்கு வரும் நேரடி அன்னிய முதலீட்டில் கால் பங்கு ஷாங்காய்க்கு வருகிறது. அந்நகரில்தான் சீனாவிலேயே பெரிய பங்குச் சந்தை அமைந்துள்ளது. சீன வர்த்தகத்தில் 87 சதவிகிதத்தை இந்த பங்குச் சந்தைதான் நிர்வகிக்கிறது. முதலீடுகளை ஈர்ப்பதில் மட்டுமின்றி, சீன அரசுக்கு வருவாய் தேடித் தருவதிலும் ஷாங்காய் பெரும் பங்கு வகிக்கிறது. வருடத்துக்கு 40 பில்லியன் டாலரை ஷாங்காய் மட்டும் அரசுக்கு ஈட்டித் தருகிறது. (1 பில்லியன் என்பது 5 ஆயிரம் கோடி ரூபாய்.). ஆனால், சீன அரசுக்குக் கிடைக்கும் இந்த வருவாயில் 10 சதவிகிதம் மட்டுமே, ஷாங்காயின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படுகிறது என்பதை அங்குள்ளவர்கள் ஒரு குறையாகக் கருதுகிறார்கள். தாராளமயமாக்கல் கொள்கை மட்டுமின்றி, உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சீனாவில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களும் சலுகைகளும் கூட, அங்கு நகர்ப்புறங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையான அம்சங்களாக உள்ளன. அதற்குச் சில உதாரணங்களையும் கூற முடியும். (மேலும்) 05.02.12

_______________________________________________________________________________________________________________________________________

யாழ். சிறையில் எட்டு  சிறைக் கைதிகள விடுதலை

யாழ்.சிறைச்சாலையில் கடந்த ஆறுமாதங்களாக தடுத்துவைக்கப்பட்ட சிறிய குற்றங்கள் செய்து தண்டப்பணம் கட்ட முடியாத எட்டுச் சிறைக் கைதிகள் இன்றைய தினம் இலங்கையின் 64 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்.சிறைச்சாலையிலிருந்து 4 பேரும் பலாலி விவசாயப் பண்ணையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 4 சிறைக் கைதிகளுமே இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகர் செனரத் பண்டார குறிப்பிட்டுள்ளார். குறித்த கைதிகள் சிறைச்சாலையிலிருந்து வெளியில் விட்டதும் சிறைச்சாலையை விட்டுப் போவதற்கு மனம் இல்லாமல் இருந்துள்ளதுள்னர். அவர்களிடம் வினாவிய போது விடு செல்வதற்கு பணம் இல்லை எனப் பதில் அளித்ததுடன் எங்கு செல்வது என்பது தெரியாமல் தவித்துக் கொண்டு நின்றனர். யாழ் சிறைச்சாலையில் விடுதலை செய்யப்பட்ட வெளிமாவட்டக் கைதிகள் இவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கு அதிகாரிகளினால் சிறைக்குள் வரவளைக்கப்பட்டு அவர்கள் வீடு செல்வதற்குரிய பணம் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

_______________________________________________________________________________________________________________________________________

செய்தி:

Rajagobalஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தோழர்களில் ஒருவரான தோழர்.எஸ்.ராஜகோபால் (வயது 60) இலங்கையிலுள்ள பண்டாரவளையில் மாரடைப்பால் காலமானார். தோழர் ராஜகோபால் அவர்கள் எம்.ஜி.ஆர்.நகரின் வளர்ச்சியிலும் அப்பகுதி மக்களின் மேம்பாட்டுக்கும் தொடர்ந்து உழைத்தவர். எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் பயணிகள் நிழற்குடைகள் முழுக்க முழுக்க ராஜாகோபால் அவர்களின் முயற்சியால் உருவானது. திருவள்ளுவர் பெயயரில் அச்சகம் நடத்தி பல பயனுள்ள வெளியீடுகளை வெளியிட்டுள்ளார். ஈழ விடுதலைப் போராட்டம் முனைப்படைந்த வேளைகளில் எமது இயக்க உறுப்பினர்களுடன் அரசியல் ரீதியான கலந்துரையாடல்களில் கலந்துக் கொண்டு பல பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டதுடன், ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.  2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் 130 வது வார்டில் வேட்பாளாராகப் போட்டியிட்ட தோழர் ராஜகோபால்,  இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகம் (ISCUF), இந்தியப் பெருங்கடல் அமைதிப் பேரியக்கம் (IMPIO), திருவள்ளுவர் நற்பணி மன்றம் போன்ற அமைப்புகளில் பொறுப்புத் தலைவர்களில் ஒருவராக செயல்பட்டவர். 2003 ஆம் ஆண்டு தன் மனைவி அன்பரசியின் சொந்த நாடான இலங்கைக்குப் புலம்பெயர்ந்து  இந்திய வம்சாவழித் தமிழர்கள் வாழுகின்ற  பண்டாரவளையில் வாழ்ந்து வந்ததுடன், இந்திய வம்சாவழித் தமிழர்களின் மேம்பாட்டிற்காக உழைத்தும் வந்தார். அங்கு இலங்கை தங்க நகைத் தொழிலாளர்கள் நல உரிமைச் சங்கத்தின் செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். தோழரின் மறைவிற்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறது.

இனிய தோழனே
உனது உழைப்பு உயர்ந்தது
உனது சிந்தனை சிறந்தது
உனது நியாயம் நிஜமானது
அதனால்...
உனது வாழ்க்கை தொடர்கதையானது !

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - சென்னை

_______________________________________________________________________________________________________________________________________

டோகோவில் இருந்து 28 பேர் இலங்கை திரும்புகின்றனர்: ஐ.ஓ.எம்.

கனடாவில் அகதிகளாக குடியேறுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பயணத்தின் வழியில் மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோவில் பிடிப்பட்டிருந்த இருநூறுக்கும் மேற்பட்ட இலங்கையரில் இரண்டாவது தொகுதியாக 28 பேர் இலங்கை திரும்புவதற்காக சனிக்கிழமையன்று டோகோவிலிருந்து கிளம்பியுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் முதல் டோகோ அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள 209 பேரில் 9 பேர் ஏற்கனவே அண்மையில் இலங்கை திரும்பிவிட்டிருந்தனர். டோகோவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையரில் தற்போதைய நிலையில் மொத்தம் 164 பேர் நாடு திரும்ப முன்வந்துள்ளனர் என்று அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்த சர்வதேச குடியேறிகள் உதவி அமைப்பான ஐ.ஓ.எம். தெரிவித்துள்ளது. இவர்களில் 67 பேர் சுயமாக நாடு திரும்ப விருப்பம் தெரிவிக்கும் படிவத்தில் கையெழுத்திட்டு அதற்குரிய மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆட்பட்டுள்ளனர் என்றும், 45 பேர் விருப்பப் படிவத்தில் கையெழுத்திட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக காத்திருக்கின்றனர் என்றும், 3 பேர் டோகோவிலேயே அரசியல் தஞ்சம் கோர முடிவெடுத்துள்ளதாகவும், வேறு 42 பேர் தஞ்சம் கோருவதா, இல்லை நாடு திரும்புவதா என்று இன்னும் தீர்மானிக்காமல் இருக்கிறார்கள் என்றும் ஐ.ஓ.எம். தகவல் வெளியிட்டுள்ளது. டோகோவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கையரில் நான்கு பேர் தற்போது அங்கிருந்து தப்பிவிட்டார்கள் என்றும் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. - B:B.C News

_______________________________________________________________________________________________________________________________________

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (34)

3jeyapalan4. மீண்டும் காந்தியின் பூவரசம் கொட்டன் விசாரணை!

புலிகள் என்னிடம் விசாரித்த நபர்களான சேரன், ஜெயபாலன், தர்மலிங்கம் மாஸ்டர் ஆகிய மூவரும் என்னுடன் நன்கு பழகியவர்கள்தான். இவர்களில் உ.சேரனும், வ.ஐ.ச. ஜெயபாலனும் யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர்கள் என்ற வகையிலும், கலை இலக்கிய மற்றும் அரசியல் ஈடுபாடுகள் உள்ளவர்கள் என்ற வகையிலும் என்னுடன் பல சந்தர்ப்பங்களில் கதைத்து பழகியிருக்கின்றனர். அதிலும் ஜெயபாலன் தன்னை ஒரு இடதுசாரியாகவும் இனம் காட்டிக் கொண்டவர். அவரது பெற்றோh நெடுந்தீவைச் சேர்ந்தவர்கள் என்ற வகையிலும் (நெடுந்தீவில் அந்தக் காலகட்டத்தில் எமக்கு நிறையத் தோழாகள் இருந்தனர்) அந்த வழியிலும் அவருடன் பரிச்சயம் இருந்தது. அவர் முதலில் தோழர் விசுவானந்ததேவனின் தங்கையான சாரதாதேவியைத் (சாரதாதேவி 2008 ஆண்டில் திடீரென்று இலண்டனில் காலமானார்) திருமணம் செய்திருந்தவர் என்ற வகையிலும் இன்னொரு வழித் தொடர்பும் இருந்தது. இரண்டொரு தடவை ஜெயபாலன்  எனது அறையில் வந்து தங்கி இரவிராகக் கதைத்ததும்  உண்டு. ஆனால் பிற்காலத்தில் சேரனும் ஜெயபாலனும் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதனாலும், தமிழ் தேசியவாத அரசியல் சேற்றில் அவர்கள் தம்மை அமிழ்த்திக் கொண்டதனாலும், அவர்களுடனான எனது தொடர்பு அற்றுப்போய்விட்டது. 2004ம் ஆண்டளவில் ஜெயபாலனை மட்டும் ஒருமுறை கொழும்பில் சந்தித்தேன். ‘ஈழநாதம்’ பத்திரிகை ஆசிரியர் ஜெயராஜின் மைத்துனர் தர்மலிங்கம் மாஸ்டரைப் பொறுத்த வரையில், அவர் ஜெயராஜின் மைத்துனர் என்ற வகையில் மட்டுமின்றி, நான் புத்தகக் கடை வைத்திருந்த யாழ்.பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் உள்ள ஆத்திசூடி வீதியில் அவரது வீடு இருந்ததின் காரணமாகவும் எனக்கு அவர் பழக்கமாக இருந்தார். ஆத்திசூடி வீதியில் அவர்கள் நடாத்தி வந்த சனசமூக நிலையத்துக்கு எனது கடையில்தான் பத்திரிகைகள் வாங்குவது வழக்கம். அநேகமாக அவரே தினசரி பத்திரிகை எடுக்க வருவதால், சிறிது நேரம் உரையாடிவிட்டுச் செல்வார். அவர் ஒரு சிறந்த நாடகத் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். திரைத்துறைத் தொடர்புகளும் இருந்தது. (மேலும்) 04.02.12

_______________________________________________________________________________________________________________________________________

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் சக்தி நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கே உண்டு: ஜனாதிபதி

mahinda_rajapaksaதேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் சக்தி நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு மாத்திரமே உண்டு. இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துகொண்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது அனைத்து கட்சிகளின் பாரிய பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். இலங்கையின் 64ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் அநுராதபுரத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி குறிப்பிட்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது:5ஆம் நூற்றாண்டில் முக்கியத்துவம் வாய்ந்த நகரில் (அநுராதபுரம்) நாம் இன்று 64ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றோம். நாட்டுக்காக உயிரிழந்த படையினர் மற்றும் பொதுமக்களுக்கு இவ்விடத்தில் நின்று என் கௌரவத்தை சமர்ப்பிக்கிறேன்.  சுதந்திரம் என்பது இன்று எமது முன்னுள்ள பாரிய பொறுப்பாகும். அதனைக் கட்டிக்காக்க வேண்டிய கடமை எம் அனைவருக்கும் உள்ளது. யுத்தத்தைக் காரணம் காட்டி சுதந்திரத்தை மறக்கடித்த நிலைமை அன்று இருந்தது. இன்று யுத்தத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்ட மண்ணிலிருந்து சுதந்திரத்தைக் கொண்டாடுமளவுக்கு நாம் வந்துள்ளோம். கிராமத்தைப் பாதுகாக்க பதுங்கு குழிகளையும் துப்பாக்கிகளையும் கேட்டிருந்த மக்கள் இன்று அபிவிருத்தி, சுதந்திரம் மற்றும் பரிசுத்தமான நாட்டை வேண்டி நிற்கின்றனர். நாம் இன்று நீண்டதூரம் பயணிக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம். எமது பாரிய அபிவிருத்திகளில் 80 சதவீதமானவை கிராமங்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன. கிராமங்களிலிருந்து தேசிய அபிவிருத்திக்கு இவற்றை இட்டுச் செல்ல வேண்டுமாயின் கல்வி, தொழில்நுட்பம், விஞ்ஞானம் என சகல துறைகளிலும் எமக்கு தோள் கொடுக்க வேண்டும். (மேலும்) 04.02.12

_______________________________________________________________________________________________________________________________________

கச்சத் தீவை மீட்கும்வரை ஓய மாட்டேன் -  முதல்வர் ஜெயலலிதா

சென்னை, பிப்.3: கச்சத் தீவை மீட்கும்வரை ஓய மாட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  உறுப்பினர் ஆறுமுகம் (வால்பாறை) வெள்ளிக்கிழமை பேசியது: ""தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் கச்சத் தீவை மீட்க முதல்வர் தலைமையில் அனைவரையும் திரட்ட வேண்டும். கச்சத் தீவை மீட்க மத்திய அரசு தடையாக இருந்தால் மக்கள் மத்தியில் அதை அம்பலப்படுத்த வேண்டும்'' என்றார். அதற்கு முதல்வர் அளித்த பதில்: ""இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்குவதைப் பற்றி உறுப்பினர் இங்கே குறிப்பிட்டார். இலங்கைக் கடற்படையினரால் எவ்வித இன்னலுக்கும் ஆளாகாமல், தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி இடங்களில் தொழிலை மேற்கொள்ளும் வகையில் அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். அதற்கான நிரந்தரத் தீர்வு, தாரைவார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்டெடுப்பதுதான். இதற்காக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற முறையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தேன். இந்த வழக்குக்கு மேலும் வலுவூட்டும் வகையில், ஆவணங்களைத் தன்னிடம் கொண்டுள்ள தமிழக அரசின் வருவாய்த் துறையும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதார உரிமையைக் கட்டிக்காக்க, கச்சத் தீவை மீட்கும்வரை நான் ஓயமாட்டேன் என தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார் முதல்வர் ஜெயலலிதா.

_______________________________________________________________________________________________________________________________________

புளொட் லண்டன் கிளையினர்-தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் சந்திப்பு-

புளொட் அமைப்பின் லண்டன் கிளையினருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று லண்டனில் நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் புளொட் லண்டன் கிளை சார்பில் திரு.சிவபாலன், திரு.தயா  ஆகியோர் உள்ளடங்கிய குழுவினருடன், கவுன்சிலர் போல் சத்தியநேசன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார். இந்த சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள், தென்பகுதி அரசியல் சக்திகளின் போக்குகள், இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அரசாங்கம் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அரசுக்குமிடையில் இடம்பெற்றுவந்த பேச்சுக்களின் நிலைமைகள், இடம்பெயர்ந்த மக்களின் அவலங்கள், அவர்களின் வாழ்வாதார நிலைமைகள், மீள்குடியேற்றம், மீள்குடியமர்ந்தோரின் அடிப்படைத் தேவைகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் சேவைகள், ஊக்குவிக்கப்பட்டு வரும் திட்டமிட்ட பெரும்பான்மையின குடியேற்றங்கள், காணி அபகரிப்புகள், இனப்பிரச்சினையில் இந்தியத் தரப்பின் நிலைப்பாடுகள், இனப்பிரச்சினைத் தீர்விற்கான அதிகாரப் பரவலாக்கலின் முக்கிய பகுதிகளான வடக்கு கிழக்கு இணைப்பு, காணி அதிகாரம், பொலீஸ் அதிகாரம், அரசாங்கம் தற்போது கூறிவருகின்ற தெரிவுக்குழு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

_______________________________________________________________________________________________________________________________________

kalmunaiகல்முனையில் கார் விபத்து:கைக்குழந்தை உட்பட ஐவர் அவசர சிகிச்சைப்பிரிவில்

 கல்முனை - பொலநறுவை வீதியில் பிள்ளையாரடி பகுதியில் இன்று மாலை 4.20 மணியளவில இடம்பெற்ற வீதி விபத்தில் கைக்குழந்தை உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். கொழும்பிலிருந்து நிந்தவூரை நோக்கி பயணித்த காரொன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பனைமரங்களில் மோதியதனாலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிள்ளையாரடி வீதி ஓரத்தில் பனங்கிழங்கு மற்றும் மீன் விற்பனை செய்து கொண்டிருந்த வியாபாரிகள் இருவரும் இதன்போது படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

_______________________________________________________________________________________________________________________________________

தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளுக்கு விடுதலை

நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தண்டப்பணம் செலுத்த முடியாது சிறைத் தண்டணை அனுபவித்து வரும் கைதிகள் இன்றைய தினம் விடுதலை செய்யப்படுகின்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு இவர்களை விடுதலை செய்வதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பி.டபிள்யூ.கொடிப்பிலி தெரிவித்தார். எனினும் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட 27 குற்றச் செயல்களை புரிந்ததன் நிமித்தம் தண்டனை பெறும் சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்த எந்தவித அறிவுறுத்தல்களும் இதுவரை தனக்கு கிடைக்கப் பெறவில்லை எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

_______________________________________________________________________________________________________________________________________

ஐரோப்பிய பின்னடைவு இந்தியாவையும் பாதிக்கும்: ஐ.எம்.எஃப்

வாஷிங்டன், பிப்.3: ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு மேலும் அதிகரித்தால் அது இந்தியாவையும் பாதிக்கும் என்று சர்வதேச செலாவணி நிதிய (ஐ.எம்.எஃப்) அதிகாரி தெரிவித்தார். இது குறித்து ஐ.எம்.எஃப் இயக்குநர் (ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியம்) அனூப் சிங் தெரிவித்ததாவது: ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு இந்தியாவில் மேற்கொள்ளப்படும் தனியார் முதலீட்டை ஏற்கெனவே பாதித்துள்ளது. இந்நிலையில் இது மேலும் அதிகரித்தால், இந்தியாவின் ஏற்றுமதியும் கண்டிப்பாக பாதிக்கப்படும். ஆசிய நிதிச் சூழ்நிலையில் ஐரோப்பிய பாதிப்பின் தாக்கம் கட்டுபாட்டுக்குள்தான் உள்ளது. ஐரோப்பிய வங்கிகள் சேவை செய்துவந்த இடத்தை ஆசிய வங்கிகள் நிரப்பிவருகின்றன. நிதித் திரட்டல் சமூகமாக தொடர்ந்தாலும் வட்டி அதிகரித்து வருகிறது. இந்த சூழல் இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் நிலவிவருகிறது. நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். குறைந்த அளவு நிதிப் பற்றாக்குறை அரசின் சேமிப்பை பாதித்துவிடும். இது தனியாருக்கான நிதிவழங்களை அதிகரிக்கும். அரசின் நிதிச் சீர்திருத்தத்தில் பற்றாக்குறையை குறைப்பது முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தனியார் முதலீட்டை அதிரிப்பதே அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இதற்காக உள்கட்டமைப்புத் துறையில் அதிக முதலீடு செய்யவேண்டியதும் அவசியமாகிறது. உறுதியான வளர்ச்சிக்கு இது ஒரு முக்கியப் பகுதியாகும். எனவே இந்தியாவில் நிதிச் சீர்திருத்தத்துக்கு திட்டமிடப்படுகிறது. இதன்மூலம் உள்கட்டமைப்புத் துறையில் முதலீட்டை அதிகரிக்க முடியும். குறிப்பாக எரிசக்தித் துறையில் அதிக முதலீட்டை ஈர்க்கமுடியும். இத்துறை இந்தியாவில் செய்யப்படும் ஏனைய முதலீடுகளை பரவலாக பாதித்துவிடுகிறது என்று தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரித்த ஐ.எம்.எஃப். (ஆசிய, பசிபிக் பிராந்தியம்) துணை இயக்குநர் மசாஹிகோ தகேடா, "தனியார் முதலீட்டில் சீர்திருத்தம் மேற்கொள்வதே இந்தியாவின் முன் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். இதுவே நடுத்தர வளர்ச்சியின் மூலாதாரமாக உள்ளது' என்றார்.

_______________________________________________________________________________________________________________________________________

லலித்குமார், முருகானந்தன் கடத்தல் வழக்கு: இராணுவத்தளபதி, பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபருக்கு அழைப்பாணை

யாழ்ப்பாணத்தில் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான வீரராஜா லலித்குமார் மறறும் கிட்னன் முருகானந்தம் ஆகியோரின் சார்பில் ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பாக இராணுவத் தளபதி லெப் ஜெனரல் ஜகத் சூரிய, அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தளபதி மேஜர்ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க,  பொலிஸ் மா அதிபர், அச்சுவேலிபொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சட்ட மா அதிபர்; ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று கட்டளை பிறப்பித்தது. நீதிபதிகள் ரஞ்சித் சில்வா, நளின் பெரேரா ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இந்த ஆட்கொணர்வு மனுக்களை லலித் குமாரவின் தாயாரும் முருகானந்தத்தின் மனைவி ஜனதாவும் தாக்கல் செய்தனர். இம்மனுக்களின்படி, காணாமல் போன இருவரும் ஜே.வி.பியிலிருந்து பிரிந்த மக்கள் போராட்ட அமைப்பின்  அங்கத்தவர்கள் ஆவர். லலித் குமார் டிசெம்பர் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வந்தார். இவரை  23.06.2011 ஆம் திகதி கிளிநொச்சியில் இராணுவம் கைது செய்து பின்னர் விடுவித்தது. நவம்பர் 14 ஆம் திகதி இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதனின் வீட்டில் தஞ்சம் புகுந்திருந்த வேளையில் காடையர்களால் தாக்கப்பட்டார்.  இத்தாக்குல் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என இவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். லலித் குமார் யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடாதென மிரட்டிய தொலைபேசி அழைப்புகளை அவரின் தாயார் பெற்றிருந்தார். கிட்னன் முருகானந்தம் 1998  ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர். லலித் குமார் நவம்பர் 9 ஆம் திகதி அச்சுவேலியிலிருந்ந்த கிட்னன் முருகானந்தத்தின் வீட்டுக்கு வந்தார். அன்று மாலை 5.00 மணிக்கு இருவரும் ஒன்றாக வீட்டைவிட்டு புறப்பட்டனர். லலித்குமாரை யாழ்ப்பாண பஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விடுவதற்கே முருகானந்தன் சென்றார். ஆனால் இவர்களை அதன்பின் யாரும் காணவில்லை எனவும் மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்ட அமைப்பின் அங்கத்தவர்களும் இன்று  நீதிமன்றுக்கு சமுகமளித்திருந்தனர். (TM)

_______________________________________________________________________________________________________________________________________

டான் யாழ். ஒளியில் பார்வைகள்

டான் யாழ்.ஒளியில் வெள்ளிக்கிழமை (03-02-2012) இடம்பெறும் பார்வைகள் நிகழ்ச்சியில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே இனப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்திருப்பது தொடர்பாகவும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தாம் அங்கம் வகிக்கப் போவதில்லை என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருப்பது தொடர்பாகவும் தமிழ் மக்கள் என்ன கருதுகின்றார்கள் என்பது குறித்து கருத்துக் கேட்கப்பட இருக்கின்றது. parvaigal எனும் skype முகவரிக்கு நேரடியாக அழைப்பதன் மூலமாகவோ அல்லது http://www.facebook.com/groups/parvaigal/ எனும் குழுமத்தில் இணைந்து உங்கள் கருத்துக்களை எழுத்துமூலம் பதிவதன் மூலமாகவோ நீங்களும் நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளலாம். நீங்கள் பதியும் கருத்துக்கள் நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ளப்படும். தொலைபேசியூடாக உங்கள் கருத்துக்களை பதிவுசெய்ய இலங்கை நேரம் இரவு 10.00 மணிமுதல் நீங்கள் அழைக்கலாம். (ஐரோப்பிய நேரம் 5.30 முதல் 7.30 வரை )இலங்கையில் நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி மீண்டும் ஐரோப்பிய நேரம் இரவு 10.00 மணிக்கு ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0094112667977.

_______________________________________________________________________________________________________________________________________

தமிழ் நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப அழைப்பு

REFUGEESதமிழ் நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாடு திரும்ப அராசங்கம் அழைப்பு விடுத்துள்ளது. மீள்குடியேற்ற அமைச்சில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே  மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் மற்றும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் இந்த அழைப்பினை விடுத்தனர். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் முரளிதரன், "இலங்கை வரும் குறித்த அகதிகளுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் மீள்குடியேற்ற அமைச்சு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றது. இந்நடவடிக்கையினை தொடர்ந்து மேற்கொள்வதுடன் 50,000 ரூபாய் நிதியையும் குறித்த மக்களுக்காக வங்கியில் வைப்பு செய்கின்றோம்" என்றார். இதேவேளை யுத்தம் முடிவடைந்து 3 வருடங்களில் சுமார் 99 சத வீதமான மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். "இன்னும் வவுனியா, செட்டிக்குளம் முகாமிலுள்ள 6,565 பேரும் திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் 1272 பேர் மாத்திரமே இன்னும் மீள்குடியேற்ற வேண்டியுள்ளனர். இவர்களில் 200 குடும்பத்தினர் எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி கோம்பாவில் பிரதேசத்தில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். கடந்த டிசெம்பர் 31ஆம் திகதி வரை வட மாகணத்தில் 144,389 குடும்பங்களை சேர்ந்த 468,612 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் 216,412 குடும்பங்களை சேர்ந்த 724,013 பேர் மீள்குடியேற்றப்பட்டள்ளனர். (மேலும்) 03.02.12

_______________________________________________________________________________________________________________________________________

இலங்கையின் 64ஆவது சுதந்திர தினத்தை கனடாவில் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு

இலங்கையின் 64ஆவது சுதந்திர தினத்தை கனடாவின் ரொறன்ரோ நகரில் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இந்நிகழ்வு 2012 பெப்ருவரி 4ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 முதல் 8.30 மணி வரை

Don Bosco Auditorium
2, Saint Andrews Boulevard, Etobicoke, Ontario, M9R 1V8

முகவரியில் நடைபெறவுள்ளது.

வைபவத்தில் பின்வரும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.   (விபரங்கட்கு

_______________________________________________________________________________________________________________________________________

தேசத்திற்கு மகுடம்: 42 முன்னாள் போராளிகள் விடுதலை

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 42 பேர் எதிர்வரும் 8ம் திகதி சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் - ஓயாமடுவ பகுதியில் இடம்பெறவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் வைத்து எதிர்வரும் 8ம் திகதி இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் 12 ஆயிரம் பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதில் 10,450 சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் விரைவில் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் கூறியுள்ளது.

_______________________________________________________________________________________________________________________________________

ஹிப்னாடிச விளக்கங்களும், செய்முறையும்.

வணக்கம் ,

இந்தச் சனிக்கிழமை(04.02.2012) அன்று   13:00 -14:30 வரை 1:30 மணித்தியாலத்திற்குட்பட்ட ஹிப்னாடிச விளக்கங்களும், செய்முறையும் காண்பிக்கப் படும் ,

 அனுமதி : இலவசம்
இடம் :  Veitvet senter , Veitvet veien 8 0596  Oslo

போரால் பாதிக்கப் பட்ட எமது மக்களுக்கு பல அதிர்ச்சிகளால்(Trauma) , பல விளைவுகள் வந்துள்ளன , அதே நேரத்தில் பல பிள்ளைகளுக்கு படிப்பில் நாட்டமின்மை , மறதி , குறைந்த பாடத்திட்டத்தை பயில்வித்தல் ,(Ekstra undervisning) போன்றன நடை பெறுகின்றது ..அதே நேரத்தில் சில பிள்ளைகள்  சிறப்பாக படிக்கிறார்கள் , சிலர் மன அழுத்தத்துடன் அவதிப் படுகிறார்கள் , பலருக்கு நித்திரைப் பிரச்சனையும் ஒன்றாக இருக்கிறது..சில பெற்றோர் குடி , புகைத்தல் பழக்கத்தால் தாங்களும் அவ்திக்குள்ளகி குடும்பத்தையும் அவதிக்குள்ளாக்குகிறார்கள் ..சிலபிள்ளைகளுக்கு படுக்கையில் சிறுநீர்களித்தல், திக்குவாய் , நிகம் கடித்தல் கை சூப்புதல் போன்றன பிரச்சனைகளாக உள்ளன இவற்றை  இலகுவாக ஹிப்னாடிசம் மூலம் சில மணித்தியாலங்களில் தீர்க்க முடியும் .எப்படித் தீர்க்கலாம் . எவ்வாறு தீர்க்கலாம் போன்ற விளக்கங்கள் உங்களுக்கு  தரப்படும்..( கடந்த வாரங்களி நண்பர்கள் வட்டத்தில் பேசப்பட்ட தீர்க்கப் பட்ட பிரச்சனைகள் ..திக்குவாய் பையனிற்கு ஒரு மணித்தியாலத்தில் , திக்குவாய் இல்லாமல் செய்தது , படுக்கையில் சிறுநீர்களித்த ஒருவருக்கு இல்லாமல் செய்தது , ஒரு பெண்ணுக்கு பல்வருடங்களாக இருந்த ஒற்றைத் தலி வலி இல்லாமல் செய்தது (Migrene) ) முன்பு இந்த வேலை செய்த பொழுது தீர்த்த பிரச்சனைகளில் சிலவற்றை www.manathu.wordpress.com இல் வாசிக்கலாம் .நான் திரும்பவும் இந்த வேலை தொடங்குகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் அறியத் தருகிறேன்..நீங்கள் வருவது மட்டும்  அல்லாமல் உங்கள்  நோர்வேயிய , வெளிநாட்டு நண்பர்களையும் அழைத்து வாருங்கள் கருத்தரங்கிற்கு.

நன்றியுடன்
ந. பத்மநாதன்..

Pathmanathan Nalliah
tlf 98 269 269

_______________________________________________________________________________________________________________________________________

போர் அத்துமீறல் பற்றிய அறிக்கை: ஐ.நா.வுக்கு அனுப்ப இலங்கை மறுப்பு

கொழும்பு, பிப். 2: உள்நாட்டுப் போரின் போது நடந்த அத்துமீறல்கள் பற்றிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பப் போவதில்லை என இலங்கை அரசு கூறியுள்ளது.  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என ஐ.நா.வின் அறிக்கை குற்றம்சாட்டியது.  போரில் ஈடுபட்ட இருதரப்பும் போர்க் குற்றங்கள் புரிந்ததற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளன. ஆனால், பொதுமக்களில் பெரும்பாலானோர் இலங்கை ராணுவத்தின் வான்வழி குண்டுவீச்சில்தான் இறந்துள்ளனர். இது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியது.  அப்போது, போர்க் கால அத்துமீறல்கள் குறித்து தாங்களே விசாரணை நடத்தப்போவதாக இலங்கை கூறியது. இதற்காக இலங்கை அரசு "போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையம்" ஒன்றை அமைத்தது. அதன் அறிக்கை கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியானது.  அந்த அறிக்கை குறித்து விவாதிக்க, இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச தலைமையில் வியாழக்கிழமை கூட்டம் நடைபெற்றது.  கூட்டம் முடிந்த பிறகு வெளிநாட்டுப் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் மனித உரிமை அமைச்சர் மகிந்த சமரசிங்க, ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்துக்கு இந்த அறிக்கையை அனுப்ப வேண்டாம் எனத் தாங்கள் முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். இது குறித்து கருத்துத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த சுரேஷ் பிரேமசந்திரன், இந்த அறிக்கை வெறும் கண்துடைப்பு என்றார்.  கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில், போர்க்காலத்தில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் பற்றி விவாதிப்பதாக இருந்தது. ஆனால், விவாதத்தை நடத்த விடாமல் இலங்கை அரசு வெற்றிகரமாகத் தடுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________________________________________________________________________

சர்வதேச சுயாதீன விசாரணை இலங்கை மீது அவசியம்

 இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றினூடாக சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தைப் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று வலியுறுத்தியுள்ளது. இது குறித்து பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து பிரித்தானியாவின் தமிழர்களுக்கான சர்வகட்சி பாராளுமன்றக் குழுவினால் பிரித்தானிய மக்கள் பிரதிநிதிகள் சபையில் கடந்த செவ்வாய்க்கிழமை கண்காட்சியொன்று நடத்தப்பட்டது. நிழல் வெளிநாட்டமைச்சர் டக்ளஸ் அலெக்ஸாண்டர் தென்கிழக்காசிய  தெற்காசிய மற்றும் தூர கிழக்கிற்கான நிழல் வெளிநாட்டமைச்சர் கெரி மக்கார்தி மற்றும் முன்னாள் பாதுகாப்பமைச்சர் லியாம் பொக்ஸ் ஆகியோர் உட்பட பிரித்தானியாவின் சகல கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரபுக்கள் சபை உறுப்பினர்கள் வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் மற்றும் பிரதான ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் என்று நூற்றுக்கும்அதிகமானவர்கள் இந்தக் கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்டனர். இதனையடுத்து கருத்துத் தெரிவித்த போதே பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். இலங்கையில் தமிழ் மக்களின் தற்போதைய நிலைமை பல தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை அரசாங்கங்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவினரால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி அமையப் பெற்றிருந்தது.

_______________________________________________________________________________________________________________________________________

6 இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கு ஆறு மில்லியன் டொலர் கப்பம் கோரும் கடற்கொள்ளையர்

 மூன்று மாதங்களுக்கு முன் காணாமல் போன 6 இலங்கை மீனவர்கள் சோமாலிய கடற் கொள்ளையர்கள் வசம் இருப்பதாகவும் இம் மீனவர்களை விடுதலை செய்ய கடற்கொள்ளையர்கள் 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை கப்பமாக கோருவதாகவும் மீனவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் தனது சகோதரருடன் சேர்ந்து 6 மீனவர்கள் நீர்கொழும்புக் கடலில் மீன்பிடிக்கச் சென்று ஒரு மாதத்தின் பின் அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக நிரோசன் அந்தோனி என்பவர் தெரிவித்துள்ளார். தனது சகோதரனான சாந்த செபஸ்ரியன் உள்ளிட்ட 6 மீனவர்களை விடுவிக்க சோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பம் கோருவதாகவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வழங்காவிட்டால் அவர்களைக் கொலை செய்வதாக அச்சுறுத்துவதாகவும் நிரோசன் அந்தோனி குறிப்பிட்டுள்ளார். மேலும் தொலைபேசியில் அவர்கள் உரையாடும்போது துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அடிப்படை வசதிகளற்ற தாங்கள் என்ன செய்வதென்பதை அறியாது இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மீனவர்கள் கடத்தப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள மீன் பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன மீனவர்களை காப்பாற்ற சோமாலிய அரசு உதவ முடியாது என தெரிவித்து விட்டதாகக் கூறியுள்ளார்.

_______________________________________________________________________________________________________________________________________

எகிப்து நாட்டில் கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் வன்முறை-தீ வைப்பு; 73 பேர் பலி. 1,000 பேர் காயம்

எகிப்து நாட்டில் போர்ட்செட் நகரில் உள்ள மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் பிரபல கால்பந்து அணியான அல் அஹ்லி அணியும், அல் மஸ்ரி அணியும் மோதின. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்த்த அல் அஹ்லி அணியினர் 1-3 என்ற கோல் கணக்கில் தோற்றார்கள். இதனால் ஆத்திரம் மூண்ட ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து வெற்றி பெற்ற அணியின் வீரர்களை விரட்டி, விரட்டி தாக்கினார்கள். சிறிது நேரத்தில் இது பெரிய கலவரமாக மாறியது. கற்கள், பாட்டில்களை வீசி தாக்கினர். மைதானத்தின் ஒரு பகுதி தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த மோதல்-வன்முறையில் 73 பேர் பலியானார்கள். கால்பந்து அணி வீரர்கள் உள்பட சுமார் 1,000 பேர் படுகாயம் அடைந்தனர். எகிப்து நாட்டில் விளையாட்டு போட்டியில் இது போன்ற பெரிய கலவரம் இதுவரையில் ஏற்பட்டதில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த எகிப்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பாராளுமன்றம் அவசரமாக கூடி இது பற்றி விவாதிக்கிறது.

_______________________________________________________________________________________________________________________________________

வாட்ச்க்காக இந்தியர் கொல்லப்பட்டது அம்பலம்

லண்டன்: இரண்டு அலைபேசி மற்றும் இரண்டு வாட்ச்க்காக லண்டனில் வசித்த இந்தியரும், அவரது பிரிட்டிஷ் மனைவியும் கடந்த மாதம் லித்துவேனியா நாட்டைச் சேர்ந்தவரால் கொல்லப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது. லண்டனில் உள்ள பிர்மிங்காமில் வசித்து வந்த இந்தியர் அவதார் சிங்கும், அவரது பிரிட்டிஷ் மனைவியும், கடந்த மாதம் 11ம் தேதி தங்கள் வீட்டில் சுத்தியால் அடித்து கொல்லப்பட்டு கிடந்தனர். இவர்களது மகன் போலீஸ் அதிகாரி என்பதால், இந்த கொலை வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டது. இது தொடர்பாக லித்துவேனியா நாட்டைச் சேர்ந்த ரிம்விடேஸ் லிக்கோரன்ஸ், 37 என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் லிக்கோரன்ஸ் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த குறிப்பில், இரண்டு அலைபேசி மற்றும் வாட்சுக்காக கொலை செய்ததாக கூறியுள்ளார்.

_______________________________________________________________________________________________________________________________________

இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை

தமிழ் மக்களுக்கு எல்லாத் துறைகளிலும் சம வாய்ப்பை அளிப்பதை அடிப்படையாகக் கொண்ட நிரந்தரத் தீர்வை, ராஜ பக்ஷவால் அளிக்க முடியாது என்றால், வேறு ஒருவராலும் அதை அளிக்க இயலாது

– பகவான் சிங்

Punniyamoorthyவடபகுதித் தமிழ் மக்கள் அரசியல் திருப்பங்களை விட, யதார்த்த அறிவை முன்னிறுத்தி தங்களது வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறார்கள். கிளிநொச்சியில் உள்ள ஹிந்து கல்லூரி ஆசிரியராகப் பணிபுரியும் புண்ணியமூர்த்தி ஜெகதீஸ்வரனையும், அவரது குடும்பத்தினரையும் அவரது வீட்டில் சந்தித்தேன். “கடந்த காலத்தின் கைதிகளாய் நின்றுவிடக் கூடாது. எங்கள் வாழ்வை, வீடுகளை, சமூகத்தை நாங்கள் திரும்ப கட்டமைத்தாக வேண்டும்” என்றார் புண்ணிய மூர்த்தி. அவரது இளைய சகோதரர் எல்.டி.டி.ஈ. உறுப்பினர். 1998-ஆம் ஆண்டு நடந்த போரில் கொல்லப்பட்டு விட்டார். இறுதிக்கட்டப் போர் நடந்த சமயத்தில் புண்ணியமூர்த்தி, ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் போரில் பின்வாங்கிச் சென்று கொண்டிருந்த விடுதலைப் புலிகளோடு சேர்ந்து பயணமாகி இருக்கிறார். “புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையில் நாங்கள் அகப்பட்டிருந்தோம். எங்களைச் சுற்றிலும் குண்டுகள் விழுந்து கொண்டிருந்தன. எனினும் அந்த பயங்கர யுத்தத்தில் உயிர் தப்பிப் பிழைத்து விட்டோம்” என்றார் புண்ணியமூர்த்தி. புண்ணியமூர்த்தியின் வீட்டிற்கு கதவுகளோ ஜன்னல்களோ இல்லை. பழைய புடவைகள் திரைச் சீலைகளாகத் தொங்கிக் கொண்டிருந்தன. போரின் போது ராணுவத் தாக்குதலில் இருந்து தப்பிக்க, வீட்டில் இருந்து வெளியேறிய போது மற்ற பொருட்களுடன், கதவுகளையும் ஜன்னல்களையும் பெயர்த்து, போகும் இடங்களுக்கெல்லாம் வண்டியில் கொண்டு சென்றிருக்கிறார். “முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டப் போரின்போது, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தப்பியோடினோம். அப்போது எங்களது உடமைகளின் பெரும் பகுதியை அப்படியே விட்டு விட்டு ஓடினோம். எனக்கு கொஞ்சம் பணம் வரும். அப்போது கதவுகளையும் ஜன்னல்களையும் வாங்கிக் கொள்வேன்” என்றார் புண்ணியமூர்த்தி. (மேலும்) 02.02.12

_______________________________________________________________________________________________________________________________________

சுய நிர்ணயமும் தேசமும்-4

- தி.ஸ்ரீதரன்

sritharan.Tதமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த இடைவெளியில் என்ன செய்ய வேண்டும் ?செய்வாhர்களா தெரியவில்லை.இலங்கையில் இனப்பிரச்சனைத் தீர்வில் அக்கறையுள்ள சிறுபான்மைச் சத்திகள் அத்தனையையும் ஜனநாயக வழியில் இணைத்துக் கொண்டு  சிங்கள மக்கள் மத்தியல் செல்லவேண்டும் இனப்பிரச்சனை தீர்வில் அக்கறையுள்ள இடைவெளியொன்றிருக்கிறது. அந்த இடைவெளயில் இறங்கத்தயாராக வேண்டும் எதிர்க்கட்சிகள் அரசியல் அதிகாரப்பகிர்வை ஆதரிப்போர் இடதுசாரிகள் , புத்திஜீவிகள்  என அனைத்து தரப்பினரிடமும் செல்லவேண்டும்.நாங்கள் நாட்டைப்பிரிப்பதற்கில்லை. சமத்துவமான வாழ்வுரிமையையே கோரி நிற்கிறோம். யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் உண்மையான சமூகப்புரிந்துணர்வு ஏற்பட இணைந்து செயற்பட வருமாறு அழைப்பு விடுக்க வேண்டும். எதையும் தட்டிக்கழிப்பதை விட ஏதோ ஒன்றை ஆக்க ப+ர்வமாக சாதிப்பதை இலக்காக கொள்ளவேண்டும். “நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ” என்ற பாரதியாரின் வார்த்தைகள் இங்கு பொருத்தமானவை இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக 50:50 ,பண்டா செல்வா ஒப்பந்தத்திலிருந்து இலங்கை இந்திய -ஒப்பந்தம் , சந்திரிகா அவர்களின் ஆட்சியில் பரிந்துரைக்கப்பட்ட கூட்டாட்சி  அரசியல் யாப்பு , பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்களின் தலைமையிலான அனைத்துகட்சி பிரதிநிதிகள் குழுவின் யோசனைகள் என பல விடயங்கள் இறைந்து கிடக்கின்றன. இவற்றிலிருந்து சில நல்ல மணிகளை நாம் பொறுக்கி எடுக்கமுடியும். முனைந்தால் முடியாததொன்றுமில்லை. இதனை செய்வதற்கு அழுக்காறு, அவா, வெகுளி இன்னாச் சொல் எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு சகல தரப்புக்களுமே பேச முன்வரவேண்டும். இன்றைய உலகில் பேச்சுவார்த்தை மேசை என்பதும் ஒரு மதிப்பு வாய்ந்த இடமாகும் ஊடகங்களும் அவ்வாறுதான். (மேலும்) 02.02.12

_______________________________________________________________________________________________________________________________________

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவையில்லை: முரளிதரன்

 மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் என்பது தேவையற்ற ஒன்றாகும். அதனைக் கேட்டுக்கொண்டிருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. அதேவேளை அரசியல் தீர்வுக்கு அடிப்படையாகக் காணப்படும் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் எதனை சேர்க்க வேண்டும் எதனை கழிக்க வேண்டும் என்பதனை பாராளுமன்ற தெரிவுக்குழுவே தீர்மானிக்க வேண்டும் என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். வடக்கில் இராணுவத்தினர் நிரந்தர முகாம்களை அமைப்பதற்காக காணிகளை பெற்றுக்கொண்டுள்ளனர். இதனால் காணிகளை இழக்கின்ற மக்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படுவதுடன் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும். நாட்டின் பாதுகாப்புக் கருதி முகாம்களை அமைக்க இராணுவத்தினர் காணிகளை பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. அது அரசியலமைப்பில் இடமளிக்கப்பட்டுள்ள விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். மீள்குடியேற்ற அமைச்சில் இன்று நடைபெற்ற விசே செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

_______________________________________________________________________________________________________________________________________

கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி சத்தியதேவி மனம் திறந்து பேசுகிறார்

பகுதி -2

  • கேள்வி:: நீங்கள் சூசையின் மனைவி என்பதை அவர்கள் அடையாளம்  கண்டு கொண்டார்களா?

Satyadeviபதில்: உடனடியாக இல்லை. எனது இரண்டு பிள்ளை களையும் சூசையின் சகோதரரின் மனைவியுடையது என்று கூறினேன.; எனது சொந்த விருப்பத்தின்படி தனிமையாக்கப்பட்ட நான், றூபனின் தூரத்து உறவினர் என அவர்களிடம் கூறினேன். நாங்கள் புறப்படும் முன்பே நாங்கள் கடற்படையினரிடம் அகப்பட நேர்ந்தால் இவ்வாறு பேசவேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டிருந்தோம். எப்படியாயினும் சூசையின் சகோதரரின் மனைவி தனது காலிலுள்ள காயமொன்றுக்கு மருந்து போட  என்னுடன் மருத்துவ நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் முதலாவது சோதனைச் சாவடியை நாங்கள் கடந்தபோது  கடற்படையினரிடம் சரணடைந்திருந்த எல்.ரீ.ரீ.ஈ  அங்கத்தவர் ஒருவர்  என்னைச் சுட்டிக்காட்டி நான் சூசையின் மனைவி என்பதை சொல்லிவிட்டார். உடனடியாகவே பெரும் எண்ணிக்கையிலான கடற்படை வீரர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர். இரண்டாவது தடவையாக நான் மற்றவர்களிடமிருந்து வேறாக்கப் பட்டேன். நான் ஏன் எல்.ரீ.ரீ.ஈ  பிரதேசத்தை விட்டு வெளியேறினேன் என்றும் நான் எங்கு போக எண்ணியிருந்தேன் என்றும் என்னிடம் வினாவினார்கள். கடற்படையினர் என்னை தடுக்காவிட்டால் நான் இந்தியாவுக்குச் செல்ல எண்ணியிருந்ததாக நான் அவர்களிடம் சொன்னேன். இந்தியாவை அடைந்ததும் அங்கிருந்து லண்டனில் உள்ள எனது சகோதரருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி ஏதாவது ஏற்பாடுகளைச் செய்திருப்பேன் என கடற்படையினரிடம் தெரிவித்தேன். (மேலும்) 02.02.12

_______________________________________________________________________________________________________________________________________

கோத்தபாய ராஜபக்ச குழுவினர் இந்தியா வருகை - கடலோரப் பாதுகாப்பு, ஏனையவை தொடர்பில் பேச்சு

இலங்கையின் பாதுகாப்புச் செயலளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் அவரது குழுவினர் இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அங்கு சென்றுள்ளதாக தெரியவருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுவரும் வழமையான பேச்சுவார்த்தை இதுவெனவும் தெரியவருகின்றது. கடலோரப் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் மற்றும் இந்து சமுத்திரத்தில் அனைத்துலக ஒத்துழைப்பு உள்ளிட்டவை தொடர்பாக இந்திய பாதுகாப்பு செயலர் சசிகாந்த் சர்மா தலைமையிலான குழுவினருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக தெரியவருகின்றது. இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சிகளை வழங்கல் தொடர்பாக்வும் பேசப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் மற்றும் இராணுவ ,கடற்படை, விமானப்படை அதிகாரிகளும் பங்கேற்பார்கள் எனவும் மேலும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரையும் கோத்தபாய ராஜபக்ச சந்திப்பார் என தெரியவருகின்றது.

_______________________________________________________________________________________________________________________________________

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 24 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 24 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த 24 பேரும் தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் இன்று (01) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் பின் அகதி முகாமில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றிற்கு அறிக்கை ஒன்றை சமர்பித்த இரகசிய பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் தடுப்புக் காவல் உத்தரவில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டதாக இரசிய பொலிஸார் குறிப்பிட்டனர். தடுப்புக் காவல் நிறைவடைந்துள்ளதால் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு இரகசிய பொலிஸார் நீதிமன்றை கேட்டுக் கொண்டனர். ந்த கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் இவோன் பெனாண்டோ, சந்தேகநபர்கள் 24 பேரையும் மார்ச் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

_______________________________________________________________________________________________________________________________________

3 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணி , தமீழிழ விடுதலை புலிகளினால் ஸ்தாபிக்கப்பட்ட விடுதலை புலிகள் மக்கள் முன்னணி மற்றும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல.எவ்) ஆகிய கட்சிகளின் பதிவுகளை தேர்தல் திணைக்களம் இன்று புதன்கிழமை இரத்து செய்துள்ளது. பதிவினை பாதுகாப்பதற்காக வருடாந்தம் பேணப்பட வேண்டிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமையினாலேயே தேர்தல் ஆணையாளர் குறித்த கட்சிகளின் பதிவினை நிராகரித்துள்ளார். புதிய சட்டத்திற்கிணங்க அனைத்து அரசியல் கட்சிகளும் வருடாந்த கணக்கறிக்கையினை தேர்தல் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலை புலிகள் மக்கள் முன்னணி 1989ஆம் ஆண்டு விடுதலை புலிகளின் அரசியல் பிரிவாக உருவாக்கப்பட்டது. விடுதலை புலிகளின் பிரதி தலைவரான மாத்தையா என்றழைக்கப்படும் கோபாலசுவாமி மகேந்திரராஜா இக்கட்சியின் தலைவராகவும் யோகரட்னம் யோகி பொதுச் செயலாளராகவும் செயற்பட்டனர். இக்கட்சியின் சின்னமாக புலி காணப்பட்டது. 1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற அனைத்து கட்சி மாநாட்டில் விடுதலை புலிகள் மக்கள் முன்னணி பார்வையாளராக மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவினால் அழைக்கப்பட்டது. (மேலும்) 02.02.12

_______________________________________________________________________________________________________________________________________

தமிழக சட்டசபையில் ஜெயலலிதா – விஜயகாந்த் கடும் வார்த்தை யுத்தம்

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவும் அவரின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான நடிகர் விஜயகாந்தும் தமிழக சட்டசபையில் இன்று கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். கடந்த வருடம் மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவும் கூட்டுச்சேர்ந்து போட்டியிட்டு வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது. இன்று புதன்கிழமை சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தின்போது, விலைவாசி உயர்வு முதலான விடயங்களில்  இரு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தனது கட்சியின் ஆதரவு இல்லாவிட்டால் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியாது என விஜயகாந்த் கூறினார். அவருக்கு பதிலளித்த அதிமுக தலைவியான முதலமைச்சர் ஜெயலலிதா, தான் ஒருபோதும் தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பதற்கு எண்ணியிருக்கவில்லை எனவும் கூட்டணி அமைப்பதற்கு தனது சகாக்கள் தன்னை நிர்ப்பந்தித்தாகவும்  அக்கூட்டணி அமைத்ததற்காக தான் கவலையடைவதாகவும் கூறினர். தேமுதிகவின் ஆதரவு இல்லாமலேயே தனது கட்சி வெற்றிபெற்றிருக்கும் எனவும் அவர்; கூறினார். சட்டசபைத் தேர்தலின்பின் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தேமுதிகவின் ஆதரவு இல்லாமல் அதிமுக பெரு வெற்றிபெற்றதாக அமைச்சர் செங்கோட்டையன் சுட்டிக்காட்டினார். அதேவேளை, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில்  தனித்துப் போட்டியிட்டு வென்றுகாட்டமாறு விஜயகாந்துக்கு ஜெயலலிதா சவால்விடுத்தார். இறுதியில், சபை நடவடிக்கைக்ளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறி, விஜயகாந்த் உட்பட தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகரால் வெளியேற்றப்பட்டனர்.

_______________________________________________________________________________________________________________________________________

இடையூறு செய்யாதீர்- இலங்கை ஜனாதிபதி

இலங்கையிலிருந்து தமிழ் நாட்டுக்கு செல்லும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு பாரபட்சமின்றி சலுகை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். இந்தியாவின் த ஹி;ந்து இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.  சர்வதேச ஊடகநிறுவனங்களின் செய்தியாளர்களை நேற்று அலரிமாளிகையில் நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இந்த கோரிக்கையை விடுத்திருந்தார். பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருகுமரன் நடேசன் அண்மையில் ராமேஸ்வரத்தி;ற்கு சென்றிருந்த போது, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தை செய்தியாளர் மத்தியில் அவர் நினைவு கூர்ந்தார். தமது உறவினர் என்ற அடிப்படையிலேயே, நடேசனுக்கு இவ்வாறான ஒரு சம்பவத்திற்கு முகம் கொடுக்க நேர்ந்ததா என்று சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார். திருகுமரன் நடேசன் வடக்கை சேர்ந்தவர் என்றும், அவருக்கு எதிராக நாம் தமிழர் அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அதேவேளை, தென்னிந்திய வர்த்தக நிலையங்களில் இலங்கையின் உற்பத்திப் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக வெளியான செய்தியையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், ஊடக செய்தியின் மூலமாக தமிழக முதல்வர் ஜயலலிதாவுக்கு அறியத்தருமாறு இலங்கை ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தாக த ஹிந்து இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

_______________________________________________________________________________________________________________________________________

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 24 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 24 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த 24 பேரும் தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் இன்று (01) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் பின் அகதி முகாமில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றிற்கு அறிக்கை ஒன்றை சமர்பித்த இரகசிய பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் தடுப்புக் காவல் உத்தரவில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டதாக இரசிய பொலிஸார் குறிப்பிட்டனர். தடுப்புக் காவல் நிறைவடைந்துள்ளதால் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு இரகசிய பொலிஸார் நீதிமன்றை கேட்டுக் கொண்டனர். இந்த கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் இவோன் பெனாண்டோ, சந்தேகநபர்கள் 24 பேரையும் மார்ச் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

_______________________________________________________________________________________________________________________________________

கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி சத்தியதேவி மனம் திறந்து பேசுகிறார்

பகுதி -1

                                                    - டி.பி.எஸ்.ஜெயராஜ்

SatyadeviSoosaiசூசை என்றழைக்கப்படுபவரான தில்லையம்பலம் சிவநேசன் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி மற்றும் கடற்புலிகள் என்றழைக்கப்படும் அதன் அதன் கடற்படைப் பிரிவின் விசேட தளபதி ஆகிய பதவிகளை வகித்து வந்தார் .வடமராட்சியில் உள்ள பொலிகண்டி என்கிற பிரதேசத்தை தன் சொந்த இடமாகக் கொண்டிருந்த இவர்,யுத்தத்தின் இறுதிவரை போரிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் என்கிற இடத்தில் 2009 மே 17 – 18 ல் மரணமடைந்தார். சூசை 1963 ஒக்டோபர் 16ல் பிறந்தவர், இவர் வட இந்தியாவில் பயிற்சி பெற்ற புலிகளின் முதல் தொகுதி ஆட்சேர்ப்பாளர்களில் ஒருவர். கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் வடமராட்சி பிரதேசத்தின் எல்.ரீ.ரீ.ஈ  யின் தலைவராக கிட்டு என்றழைக்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமாரின் கீழ் பணியாற்றி வந்தார்.சூசை 1991 முதலே கடற்புலிகள் பிரிவிற்கு பொறுப்பாக இருந்தார்,முதலில் ஒரு தளபதியாகவும் பின்னர் விசேட தளபதியாகப் பொறுப்பு வகித்தார் .தொடர்பாடல்களுக்காக பயன்படுத்தப்படும் சூசையின் சங்கேதக் குறியீடு “சீ ஒஸ்கார்” என்பதாகும்.சூசை படிப்படியாக கடற்புலிகள் பிரிவில் ஏறக்குறைய தனது ஆளுமையை நிலை நிறுத்திக் கொண்டார். கடற்புலிகளை, “நான் வளர்த்த புலிகள்” என்று சொல்லிக் கொள்வதில் சூசை அதிக விருப்பமுள்ளவராக இருந்தார். எல்.ரீ.ரீ.ஈயின் பழைய காலத்தவர்களில் ஒருவரான சூசை, யுத்தத்தின் இறுதிவரை போரிட்டு எல்.ரீ.ரீ.ஈ யின் வலிமைமிக்க கோபுரங்களில் ஒன்றாகத் தன்னை நிரூபித்துக் காட்டியவர். மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் கரையோர சமூகத்தவர்கள், அது ஒரு நுட்பமான தொழில் என்பதால் கடற்புலிகளுக்குள் நன்கு கலந்திருந்தனர். (மேலும்) 01.02.12

_______________________________________________________________________________________________________________________________________

கிளிநொச்சியில் இராணுவ வீரருக்கும் முன்னாள் பெண் போராளிக்கும் திருமணம்

கிளிநொச்சியில் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும் விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த ஈ.எம்.டி.சந்துருவன் என்ற இராணுவச் சிப்பாய்க்கும் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளியான சந்திரசேகரன் சர்மிளாவுக்கும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மலையாளபுரத்தைச் சேர்ந்த 18 வயதான சர்மிளா புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட்டவராவார். 20 வய தான சந்தருவன் கிளிநொச்சியில் நிலைகொண்டுள்ள 25 ஆவது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார். நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இந்தத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் நேற்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில், சர்மிளாவின் தந்தை சந்திரசேகரன் கல்கமுவ பிரதேசத்தில் சந்துருவனின் வீட்டுக்கு சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

_______________________________________________________________________________________________________________________________________

உணவுமுறைகளில் மாற்றம் வேண்டும்!

எஸ். ரவீந்திரன்

foodsநோயின்றி வாழத் தேவைப்படுவது இயற்கையான உணவு முறைதான். எந்தவித ரசாயனமும் கலக்காமல் தேவையான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மனிதர்களின் ஆயுள் நீடிக்கும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாகும். அந்தக் காலத்தில் வாழ்ந்தோரில் பெரும்பாலானோர் சராசரி ஆயுளைப் பெற்றிருந்தனர். ஆனால், அண்மைக்காலமாக இந்த விஷயத்தில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலையில் எழுந்தவுடன் நீராகாரம் அருந்திய கிராமவாசிகள் இன்று வேறு வகை பானங்களை அருந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.  இளநீர், பதநீர், தூய குடிநீர், பழங்கள், காய்கனிகள், கீரை வகைகள் என உணவில் தினசரி சேர்த்துக்கொண்டது அந்தக்காலம். இன்றோ நிலைமை தலைகீழாகிவிட்டது. மனிதர்களுடைய வாழ்க்கை முறை மாறிவிட்டது. இதனால் ஆயுளும் சுருங்கிவிட்டது. பட்டணத்தில் கிடைக்கும் அத்தனை பொருள்களுமே கிட்டத்தட்ட குக்கிராமத்திலும் கிடைக்கிறது. அந்த அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. அதே நேரத்தில் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  விலை கொடுத்து நோயை வாங்கும் நிலையைப் பெற்றுவிட்டோம். இயற்கை உணவுப் பொருள்கள் அத்தனையும் மீண்டும் கிட்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.காலை, மதியம், இரவு என்ற மூன்று வேளையும் அரிசி சாதம், இட்லி, தோசை, இடியாப்பம் போன்ற பாரம்பரிய உணவை உண்ட காலம் மலையேறிவிட்டது. கோதுமை, மைதா, மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் மாவு வகைகளை அதிகம் பயன்படுத்தப் பழகி விட்டோம். ஒருவகையில் இது பயனுள்ளதுதான். அதேவேளையில் பொருள்களின் தயாரிப்பு முறை, ரசாயன கலப்பு போன்றவற்றால் நாம் நோயில் விழ நேரிடுகிறது.  பீட்ஸப், சமோசா, பிரட், நூடுல்ஸ் உள்ளிட்ட பெயர்களில் தயாரிக்கப்படும் பண்டங்களை இன்றைய இளைஞர்கள் பெருமளவில் விரும்பிச் சாப்பிடுகின்றனர். இதனால் அஜீரணக் கோளாறு, உணவு விஷமாதல், ஒவ்வாமை, வாந்தி மயக்கம் போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன. (மேலும்) 01.02.12

_______________________________________________________________________________________________________________________________________

 கியூபாவின் உண்மைகள்

cubaபுரட்சிகர பூமியாம் சோசலிச கியூபாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள், வர்த்தகத் தடைகள் பற்றி நாம் அறிவோம். உலகெங்கிலும் உள்ள அமெரிக்க ஆதரவு முதலாளித் துவ ஊடகங்கள் கியூபாவிற்கு எதிராக நடைமுறைப்படுத்தி வரும் ஊடகத்தடை நாம் அதிகம் அறியாதது. சமீப நாட்களாக கியூபாவுக்கு எதிராக உலக ஊடகங்களில் ஒரு திட்டமிட்ட அவதூறுச் செய்தி உலா வந்துகொண்டிருக்கிறது. அந்தச் செய்தி கியூபாவை ஒரு பிசாசைப்போல வர்ணிக்கிறது. கியூபாவில் மனிதஉரிமை காலில்போட்டு நசுக்கப்படுவதாகக் கதைக்கிறது. கியூபாவில் சிறைக் கைதி ஒருவர் இறந்துபோனது குறித்தே இத்தகைய செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. கடந்த நான்காண்டுகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இறந்துபோனது உண்மைதான். தனது மனைவியை பொது இடத்தில் மிகக்கொடூரமான முறையில் தாக்கிக் காயப்படுத்திய குற்றத்திற்காகவும், அவரை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறையினர் மீது வன்முறைத் தாக்குதலை நடத்திய குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு, சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில், அவருக்கு ஏற்கெனவே இருந்த உடல்நலக் குறைபாடுகளின் தொடர்ச்சியாக மூச்சுக்குழலில் தொற்று ஏற்பட்டு அனைத்து உறுப்புகளும் செயலிழந்தன. உலகிற்கே மருத்துவச் சேவை அளிக்கும் கியூபா, தனது நாட்டிலுள்ள இயல்பான குடிமக்களைப் போலவே சிறைவாசிகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் அதிகபட்ச மருத்துவ சிகிச்சையை அவருக்கு அளித்தது. எனினும் சிகிச்சை பலனின்றி கியூபாவின் மிகப்பெரிய மருத்துவமனையான சாண்டியாகோ டி கியூபா மருத்துவமனையில் காலமானார். (மேலும்) 01.02.12

_______________________________________________________________________________________________________

அரசியல் நெருக்கடிக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு

-    கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

பேச்சுகளின்போது தீர்வை முன்வைக்கும் யோசனைகளும் சமிக்ஞைகளும் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை எனத் தெரிவிக்கும் கூட்டமைப்பு இந்த நிலையில் எப்படிப் பேசுவதென்று தெரியாமல் திணறுகிறது. ஆனால், எப்படியான நிலையிலும் பேச்சுகளிலிருந்து வெளியேற முடியாத நிர்ப்பதந்ததும் அதற்குண்டு. சர்வதேச அழுத்தம் உட்பட. பேச்சுகளை விட்டால் அதற்கு மாற்றுவழி என்ன என்ற கேள்வியை முன்வைத்தாலே இந்த நிலைமையை விளங்கிக் கொள்ள முடியும். தவிர, தான் உருவாக்க முயற்சிக்கும் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பும் பங்கெடுக்க வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது கூட்டமைப்புக்கு ஒரு நெருக்கடி நிலையே. பேச்சுகளைத் தொடருமாறும் தீர்வொன்றைக் காணுமாறும் வலியுறுத்தி வருகின்ற இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றன ஜனநாயக மயப்படுத்தப்பட்ட நிலையிலான பேச்சுகளையும் அணுகுமுறைகளையுமே ஆதரிக்கிறது. இதன்படி இலங்கை அரசின் தெரிவுக்குழு முறைமையை இவை நிராகரிக்காது. இந்த நிலையில் தெரிவுக்குழுவில் பங்கேற்கும்படியா ஒரு அழுத்தம் கூட்டமைப்புக்கு ஏற்படுகிறது. ஆனால், தெரிவிக்குழுவில் பங்கேற்பது காலத்தைக் கடத்தும் செயல் என்ற வரலாற்றனுபவங்களும் அதை நிபந்தனையாக்கும் பிறதரப்பின் அழுத்தங்களும் கூட்டமைப்பைத் தெரிவுக்குழுவுக்கு வெளியே நிறுத்துகின்றன. இது ஒரு நெருக்கடி நிலையே.  இதைத் தவிர்த்து, அரசாங்கம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையை அல்லது தீர்வை இழுத்தடிக்குமானால், அடுத்த கட்ட நிலை என்ன என்ற கேள்வியும் நெருக்கடியாக எழுகின்றது. அடுத்த நெருக்கடியானது, சர்வதேச சமூகத்தின் ஒரு அங்கத்தினராக விளங்கும் இலங்கை அரசியலில் தாக்கத்தை விளைவிக்கும் தரப்பினராகிய இந்தியா மற்றும் மேற்குலகம் ஆகியவை ஏற்படுத்தும் நெருக்கடி. (மேலும்) 01.02.12

_______________________________________________________________________________________________________

selvarajநடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்

சென்னை, ஜன. 31: குணச்சித்திர நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் (72) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானார்.  சென்னை நந்தனம் பகுதியில் குடும்பத்தாருடன் வசித்து வந்த இடிச்சபுளி செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை காலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், கே.பாக்யராஜ், அஜித் உள்பட பலருடன் சுமார் 120-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர, நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார் இடிச்சபுளி செல்வராஜ்.  எம்.ஜி.ஆரின் "இதயக்கனி', "உலகம் சுற்றும் வாலிபன்' உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.  மறைந்த இடிச்சபுளி செல்வராஜின் இறுதிச் சடங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. அவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், வசந்தி என்ற மகளும் உள்ளனர்.

_______________________________________________________________________________________________________

நீர்கொழும்பு நகரசபை உறுப்பினர் மீது வாள்வெட்டு

 நீர்கொழும்பு நகரசபை உறுப்பினரொருவர் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த சம்பவமொன்று இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நகரசபை உறுப்பினரான குறித்த நபர் தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் வைத்து அவரை வாளால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். இச்சம்பவத்தின்போது படுகாயமடைந்த நகரசபை உறுப்பினர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்